Skip to content
Post Views: 1,737
அத்தியாயம்-4
“வேண்டாம்.. வேண்டாம்..” என்று மனம் எவ்வளவோ கதறியும் கேட்காமல் அவன் ஆடையை முகத்திற்கு அருகில் எடுத்துப்போய் ஆழ்ந்து முகர்ந்தாள்..
பர்ஃபியூம், வேர்வையோடு சேர்ந்து அவனுக்கே அவனுக்கான பிரத்தியேகமான ஒரு மணம் அவள் நாசியை நிறைக்க, உடல்முழுவதும் சில்லென்ற ஒரு பரவசம் ஓடியது. ஏனோ அவனது அந்தரங்கத்தில் அவளுக்கு அவன் இடமளித்தது போல தோன்றியது. இருவருக்கும் இடையில் இடைவெளி குறைந்தது போன்ற மாயபிம்பத்தை மனம் கட்டி எழுப்பியது.
இது என்னவாக வேண்டுமானால் இருக்கட்டும் இந்த உணர்வுக்கு பெயர் எதுவாகவேண்டுமானால் இருந்துவிட்டு போகட்டும்..அதிதிக்கு ஒரு விஷயம் மட்டும் நிச்சயமாகத் தெரியும், இல்லை இல்லை இரண்டு விஷயம்.
Advertisement
ஒன்று இந்த அங்கியை அவள் ஜென்மத்திற்கும் திருப்பிக் கொடுக்கப்போவதில்லை.
இரண்டு
இதை அவள் ஒருநாளும் துவைக்க போவதும் இல்லை.
Advertisement
அதிதி அந்த மேலங்கியை பொக்கிஷம் போல பாதுகாத்தாள், அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் எடுத்து போட்டுப்பார்ப்பது, கையால் மென்மையாக வருடுவது,பிறகு அதை அழகாக மடித்து தன் பெட்டிக்குள் பத்திரப்படுத்திவைப்பது என்று அவள் வயதிற்கே உரிய எல்லா பைத்தியக்காரத் தனத்தையும் செய்தாள்.
Advertisement
அன்றைய காஃபி சந்திப்பின் பின் இருவரது உறவின் பரிணாமம் சற்று மாறியது.
தினசரி பார்க்கும்போது வெறும் காலைவணக்கத்தோடு போகாமல் சற்று நின்று இவளுடன் சிறிது உரையாடிவிட்டு போனான்.
மேலும் அவ்வப்போது எதிர்படும் போதும் தானாகவே இவளிடம் வந்து ஹாய் சொல்லி சிரித்துவிட்டு போனான்.
Advertisement
ஒரு நாள் அவனாகவே இவளது இன்ஸ்டா ஐடி வாங்கி அவளை ஃபாலோ செய்தான். இப்படியாக இருவருக்குள்ளும் ஒரு தோழமை வளர்ந்திருந்ததாக அதிதி உணர்ந்தாள்.
ஒருநாள் அதிதியும் வர்ஷினியும் கம்பியூட்டர் லேபில் இருந்து வெளியே வரும் போது எதிரில் வந்த வசீகரன்,இவளைப் பார்த்து சிரித்து கையாட்டிவிட்டு போக,வர்ஷினியின் புருவம் உச்சிமேட்டுக்கே உயர்ந்தது..
“என்னடி நடக்குது இங்க??” என்று ஆச்சரியமும் குறுகுறுப்புமாக வினவ,
பதிலில்லாமல் தவித்து போனாள் அதிதி..இதற்கு மேலும் அவளிடம் மறைக்க முடியாது என்று அறிந்து,
“அப்புறம் சொல்றேன்டி..இங்க வேண்டாம்..” என்று சொல்லி சிறிது அவகாசம் பெற்றாள்.
ஆனால் வர்ஷினியோ எப்போது எப்போது என்று காத்திருந்தது போல் விடுதி திரும்பியதும் இவளை விடாப்பிடியாக மடக்கி விவரம் கேட்டாள்.
இனி சொல்லாமல் தப்பிக்கமுடியாது என்று தெரிந்து,வசீகரனை முதன் முதலில் பார்த்ததிலிருந்து அன்றுவரை நடந்த அனைத்தையும்,அவன் மீது அவளுக்கு இருந்த ஈர்ப்பைப் பற்றியும் முழுதாக சொன்னாள்
கடைசிவரை குறுக்கிடாமல் கேட்டுவிட்டு,
“இவ்ளோ நடந்திருக்கு என்கிட்ட மூச்சுகூட காட்டாம இருந்திருக்க.. அவ்ளோதானா நான் உனக்கு..?”என்று அடிபட்ட குரலில் கேட்கவும், பதறிப்போய்,
“ஹேய் அப்படிலாம் இல்லடி, எப்படி நான் சொல்றது..நானே குழப்பத்துல இருந்தேன் வர்ஷ், வெறும் கிரஷ்ஷா எனக்குள்ள மட்டும் இருக்கற வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்ல, அது சும்மா என்னோட கற்பனைல மட்டும் இருக்கும், ஆனா அவன் என்னோட கிரஷ்ன்னு வெளிய சொல்லிட்டா அது அந்த கற்பனைக்கு ஒரு உருவம் கொடுத்து அதை அஃபிஷியலா(official) அனவுன்ஸ் பண்ற மாதிரி ஆகிடாதா..எப்படி இருந்தாலும் இந்த கிரஷ்க்கு ஆயுசு கம்மி,இதுல உன்கிட்ட வேற சொல்லி அவமானப்படனுமான்னு நெனைச்சி சொல்லல…”
“என்கிட்ட கூட கௌரவம் பாக்கிறியா? அப்படிதான் நாம பழகி இருக்கோமா அதி?”
“இது அப்படி இல்ல வர்ஷ், உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கறது..அவன் டோட்டலா வேற லீக்ல இருக்கான், நான் அவனுக்கு கொஞ்சமும் தகுதி இல்லைன்னு நானே இன்செக்கியூரிட்டில இருக்கேன், இதுல நான் எப்படி உன்கிட்ட சொல்றது?
எனக்கு எம்பாரஸிங்கா (embarrassing) இருந்தது..”
“இப்ப எதுக்கு நீ லூசு மாதிரி தகுதி இல்ல அது இல்லன்னுலாம் பேசுற?? அப்படி உனக்கு என்ன தகுதி இல்லாமபோச்சி..?
அவன லவ் பண்ண என்ன வானத்துல இருந்து குதிச்சி வரணுமா?இல்ல யுனிவர்சிட்டில எதாவதுகோர்ஸ் பண்ணிட்டு வரணுமா?”
“சும்மா எதாவது சொல்லனும்னு சொல்லாத வர்ஷ்.. நீயே அவன பார்த்தல்ல? எப்படி இருக்கான் பாத்தியா? அப்படி ஒருத்தன் என்னை மாதிரி ஒருத்திய எப்படி லவ் பண்ணுவான்..?
“இல்ல எனக்கு புரியல.. உன்னை மாதிரி ஒருத்தின்னா? இப்ப உனக்கு என்ன குறைச்சல்? உன்னை மாதிரி கியூட்டா இங்க யாரு இருக்கா?மொதல்ல உன்ன நீயே குறைச்சி பேசுறத நிறுத்து..யூ ஆர் பர்ஃபெக்ட் த வே யூ ஆர்..”
“நான் உன்னோட ஃப்ரெண்டுன்றதால இப்படி சொல்ற.. பட் லெட்ஸ் பீ பிராக்டிகல் வர்ஷ்.. ஐ அம் நாட் ஹிஸ் டைப்..”
“அண்ட் ஹவ் டு யூ நோ தட்? அவன் உன்கிட்ட சொன்னானா? நீ அவன் டைப் இல்லைன்னு..”
“சொல்ல வேற செய்யனுமா? எனக்கு தெரியாதா?”
“அடுத்தவங்க மனசுல என்ன இருக்குன்னு யாருக்குமே தெரியாது அத்து..முயற்சி பண்ணாமலே கிவ் அப் பண்ணாத அதி..”
“என்னை கன்ஃபியூஸ் பண்ணாத வர்ஷ்..”
“இங்க பாரு நான் லாஜிக்கலாவே பேசுறேன்.. உன்ன பிடிக்காமதான் அவன் உன்கிட்ட பேசுறானா??”
“அது சும்மா ஃப்ரெண்ட்லியா பேசுறது அதையெல்லாம் அஃபெக்ஷன்னு எடுத்துக்க முடியாது..”
“ஏன் இப்படி நெகட்டிவாவே யோசிக்கற? ஹி மே லைக் யூ..”
“டோண்ட் புட் தாட்ஸ் இன் மை மைண்ட் வர்ஷ், இப்படி ஒன்சைட் கிரஷ்ஷா இருக்கறதே எனக்கு போதும், அதுக்கு மேலே எதையும் எதிர்பார்த்து ஏமாற நான் தயாரில்லை..” என்று திட்டவட்டமாக கூறிமுடித்தாள்.
ஆனால் வர்ஷினியும் விடாமல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதிதியின் மனதை மாற்ற முயன்றுகொண்டேதான் இருந்தாள்.
“நடக்காதுன்னு நீயே ஏன் முடிவு பண்ற? நடக்கும்ன்னு மானிஃபெஸ்ட்(manifest) பண்ணு இந்த யுனிவர்ஸ் அதை நடத்தி வைக்கும்…
நீயே உன்னை அண்டர் எஸ்டிமேட் பண்ணிக்காத..யு ஆர் ய ஸ்வீட் கேர்ள், நீ கிடைக்க அவன் கொடுத்துவச்சிருக்கனும்.”
“போதும் வர்ஷ், என்னை சேல்ஸ் பண்ண போறியா என்ன? எதுக்கு இப்போ என் மண்டைய கழுவுற, நான் இப்பவே ஹேப்பியா தான் இருக்கேன், இதுவே எனக்கு போதும்.” என்று விடாப்பிடியாக மறுத்துப்பேசுவாள்.
இப்படியே நாட்கள் செல்ல ஒரு நாள்,
“ஹே பிக் நியூஸ் .. சீனியர்ஸ்லாம் எதோ கல்ச்சுரல் ஃபெஸ்ட்(cultural fest) கொண்டாடுறாங்களாம் ஆனா நாம ஃபர்ஸ்ட் இயர்ஸ் மட்டும் அலவுட்(allowed) இல்லையாம்..” என்று குறைகூறிக்கொண்டே வந்து அமர்ந்தான் விஷால்.
விஷால்,சஞ்சய்,ஷிவாங்கி, அதிதி,வர்ஷினி ஐவரும் முதன்முதலில் ஒரு குரூப் பிராஜெக்ட்டில் ஒன்றாக பணியாற்றத்தொடங்கி, அதிலிருந்து நெருங்கிய நட்பாக மாறியிருந்தனர்.
சிருஷ்டியை பொறுத்தவரை சீனியர் ஜுனியர் படி நிலை(hierarchy) என்பது காலங்காலமாக மிகவும் கண்டிப்பாக பின்பற்றபட்டுவருவது. அங்கே கடைசி வருட மாணவர்கள் தான் படிநிலையில் மேல் இருப்பவர்கள் அதன் கீழ் மூன்றாம் இரண்டாம் வருடம் என்று முதல் வருட மாணவர்கள் கடை நிலையில் இருப்பர்.
அதனால் பெரும்பாலும் நான்காம் வருட மாணவர்கள் வைப்பதே சட்டமாக இருக்கும்.
மோசமான ராகிங் அச்சுறுத்தல்,பாகுபாடு காட்டுதல் போன்று எதுவும் இல்லை என்றாலும் காண்டீனில் முதலில் சாப்பிடுவது, சீனியரை பார்த்தால் எழுந்து இடம் தருவது, அவர்கள் சொல்லும் சிறு வேலைகளை செய்வது போன்றவை எழுதப்படாத விதியாகவே இருந்தது.
ஒவ்வொரு வருடமும் இந்தப் படிநிலைகளைப் பொறுமையாகக் கடந்து, கடைசிவருடம் வரும் போது இந்த சலுகைகளை முழுமையாக அனுபவிக்கலாம் என்ற எண்ணத்தோடே ஒவ்வொருவரும் இருப்பர்.
இப்படி முதல் வருட மாணவர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதும் வழக்கமே, அந்த வழக்கத்தை தான் நியாமற்றது என்று நம் ஐவர் குழு நினைத்தனர்.
“திஸ் ஈஸ் நாட் ஃபேர், நம்ம சீனியர்ஸ் நம்மல எதுக்குமே சேர்த்துக்கறது இல்ல, ஒரு ஸ்போர்ட்ஸ் இவண்ட், குரூப் பார்டிஸிபேஷன்,கல்ச்சுரல் பார்டிஸிபேஷன்னு எதுலயும் நம்ம விடுறதில்லை, இப்போ ஃபெஸ்ட்ட(fest) சும்மா வேடிக்கை பார்க்க கூட விடலன்னா..ஈட்ஸ் டூ மச்?” என்று பொரிந்தாள் வர்ஷினி.
“நாம எப்படியாவது போயே ஆகணும்..”என்று அனைவரும் முடிவெடுக்க..
“மாட்டிகிட்டா எதாவது வம்பாகிடபோகுது..”என்று மெதுவாக சொல்லி பார்த்தாள் அதிதி..
“நாம என்ன கலந்துக்கவா போறோம்.. சும்மா வேடிக்கை பார்க்கதானே போறோம்..அதெல்லாம் மாட்ட மாட்டோம்.. அவ்ளோ கூட்டத்துல நம்மல யாரும் கண்டுக்க கூட மாட்டாங்க.”என்று சமாதானம் கூறினான் விஷால்.
“ஓகே கைஸ்.. லெட்ஸ் டூ திஸ்..”என்று உறுதியேற்றனர்.
கலை நிகழ்ச்சியன்று மாலை நம் ஐவர் அணி அழகாக எத்னிக் வேரில்(ethnic wear) தயாராகி கிளம்பினர்.
“இங்க பாருங்க.. இப்ப நாம ஃபர்ஸ்ட் இயர்ஸ் இல்ல, யாரு கேட்டாலும் செகண்ட் இயர்ன்னு சொல்றோம் ஓகேவா? நாம பொய் சொல்றது பெருசில்ல..ஆனா அதை எவ்ளோ தூரம் நம்புற மாதிரி சொல்றோம்ங்கறதுதான் முக்கியம்..
கேடித்தனம் பண்ணாலும் அதை கேர்ஃபுல்லா பண்ணனும்..சோ கான்ஃபிடெண்டா வாங்க..” என்று பெப் டாக் கொடுத்து அழைத்துப்போனான் விஷால்.
நிகழ்ச்சி நடக்கும் ஆடிட்டோரியத்தின் நுழைவாயிலில் எல்லோரையும் ஐடி கார்ட் செக் செய்து உள்ளேவிட இவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
இருந்தாலும் பதறாமல் வர்ஷினி, “கம் ஆன் கைஸ் இவ்ளோ தூரம் வந்துட்டு வெறுமனே திரும்பி போகக்கூடாது, தோத்தாலும் சண்டை செஞ்சி தோக்கணும்.” என்று நம்பிக்கையூட்டிவிட்டு முன்னே சென்றாள்.
அங்கே வாயிலில் அடையாள அட்டையை கேட்ட பெண்ணிடம்..
“சாரி இந்த ட்ரெஸுக்கு மேச்சிங்கா இல்லைன்னு ஐடி கார்ட் போடல.. வீ ஆர் செகண்ட் இயர் ஐடி(IT) டிபார்ட்மெண்ட்..”என்று சிறு பிசிறும் இல்லாமல் திடமான குரலில் கூறினாள்.
சற்று நேரம் இவர்களை உற்று பார்த்துவிட்டு “சரி போங்க..” என்று அந்தப் பெண் கூறவும்தான் இவர்கள் நிம்மதிப்பெருமூச்சுவிட்டனர்.
“வர்ஷினி ஈஸ் சம்திங் எல்ஸ் டா..” என்று பிரம்மிப்புடன் சஞ்ஜயின் காதில் கிசுகிசுத்தான் விஷால்.
இவர்களுக்கான ஒளிரும் மணிக்கட்டு வளையத்தை(neon wrist band) வாங்க அடுத்த டேபிளுக்கு செல்லுமாறு அந்த பெண் பக்கத்து டேபிளை காட்ட இவர்கள் ஒவ்வொருவராக சென்று மணிக்கட்டு பட்டையை வாங்கிக்கொண்டு உள்ளே செல்ல..கடைசியாக அதிதியும் வர்ஷினியும் நுழையும் சமயம்..
“ஹே.. ஃபர்ஸ்ட் இயர்லாம் ஏண்டா உள்ள விடுறீங்க..?என்று கேட்டுக்கொண்டே அவர்கள் முன்னால் வந்து நின்றான் கேசவ்.
அவனைப்பார்த்ததும் அதிதிக்கு தூக்கிவாரி போட்டது..
“ஹல்லோ.. ஃபர்ஸ்ட் இயர்க்கு அனுமதி இல்லைன்னு தெரியாதா?” என்று நேராக அதிதியைப் பார்த்து கேட்டான்.
“தெரியாது..” என்று அதிதி சமாளிக்கப்பார்க்க..
அதற்குள் பக்கத்து டேபிளில் இருந்தப்பெண் இவர்கள் அருகில் வந்து,
“செகண்ட் இயர்ன்னு சொன்னாங்க சீனியர்.. அதான் அலவ் பண்ணேன்..”
“ஐடி செக் பண்ணக்கூட தெரியாதா? யாரு வந்து என்ன சொன்னாலும் நம்பிடவேண்டியது?” என்று எரிந்து விழுந்தான்.
“இவனுக்கு எப்படிடீ நாம ஃபர்ஸ்ட் இயர்ன்னு தெரியும்?” என்று அதிதியின் காதோடு வினவினாள் வர்ஷினி.
“இவன்தான் டீ என்ன முதல் நாள் ராகிங் பண்ணவன்..”
“ஓ அவனா? எப்படிடீ.. நீ சரியா இவன் கண்ணுலயே சிக்குற?” என்று வியந்தாள் வர்ஷினி.
அதற்குள் அருகில் இருப்போர் எல்லாம் சுற்றி கூடிவிட அதிதி திகைத்து தடுமாறிப்போனாள்.
வர்ஷினியிடம் கிசுகிசுப்பான குரலில்
“வர்ஷ்.. நாம போயிடலாம் வா..” என்றுவிட்டு அவளது கையைப் பிடித்து இழுக்கும் போதே..
“வாட்ஸ் கோயிங் ஆன் ஹியர்..?“ என்று கேட்டுக்கொண்டே வந்தான் வசீகரன்.
“வாங்க செகரெட்டரி சார், இங்க பாருங்க ஃபர்ஸ்ட் இயர்ஸ் நாட் அலவுட்ன்னு சொல்லியும் கேட்காம செகண்ட் இயர்ன்னு பொய் சொல்லிட்டு வந்திருக்காங்க..” என்று ஏளனம் செய்தான் கேசவ்,
வசீகரன் முன்பு இப்படி குற்றவாளி போல் நிற்கும்படி ஆகிவிட்டதே என்று அவமானம் மேலும் பிடுங்கி தின்ன தலை நிமிர்ந்து கூட பார்க்காமல் முகம் சிவந்து நின்றாள்.
ஆனால் வர்ஷினி அப்படியெல்லாம் லேசில் விடுகிறவள் இல்லையே..
அவள் நேராக அவனை நிமிர்ந்து பார்த்து..
“ஏன் நாங்க வரக்கூடாது? நாங்களும் இந்த காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் தானே? ஏன் எங்கள மட்டும் ஒதுக்கிவைக்கிறீங்க?
என்று எதிர்த்து வாதாடினாள்.
“உங்கள யாரும் ஒதுக்கி வைக்கல, இது இந்த காலேஜோட பழக்கம், எங்க சீனியர்ஸ் நாங்க ஃபர்ஸ்ட் இயர் படிக்கும் போது எங்களையும் இந்த இவெண்ட்ல சேத்துக்கல, அதே மாதிரிதான் எல்லாவருஷமும் ஃபர்ஸ்ட் இயர்ஸ்க்கு அனுமதி இல்ல, இது தான் இங்க ட்ரெடிஷன்..” என்று பொறுமையாக விளக்கினான் வசீகரன்.
“நாங்க ஒன்னும் பார்ட்டிசிபேட் பண்ண கேக்கலையே.. சும்மா வேடிக்கைதானே பார்க்க போறோம், நமக்கு முன்னாடி இருந்தவங்க இப்படி செஞ்சாங்கன்னா நாமலும் அதையே செய்யனுன்னு கட்டாயம் இல்லையே, பழக்க வழக்கங்களை நீங்க கொஞ்சம் மாத்தலாமே.”
“அதெல்லாம் ஒன்னும் மாத்தமுடியாது கிளம்புங்க..” என்று குறுக்கே பாய்ந்தான் கேசவ்
“சரி பாத்துட்டு போகட்டும் விடுடா..ரெண்டு பேர் தானே.” என்றான் வசீகரன்.
“வசீ.. நீ ரொம்ப இடம் கொடுக்கற டா.. அப்படி என்ன அந்த பொண்ணு மேல உனக்கு சாஃப்ட் கார்னர்?” என்று ஒருமாதிரி குரலில் கேட்கவும், வசீகரன் முகம் சட்டென்று கடுமை காட்டியது.
“இங்க நீ..கல்ச்சுரல் செகரெட்டரியா இல்ல நானா? ஐ செட் லெட் தெம் கோ இன்சைட்.” என்று நேராக பார்த்து தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து அழுத்தமான குரலில் கூறவும். அவன் இருவரையும் பார்த்து முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றான். அவன் சென்றதும் முகத்தின் கடுமை சட்டென்று மாறி
“ஹேய் கிட்டி.. நீ ப்ரோகிராம் பார்க்கனும்னு சொல்லியிருந்தா நானே வெளிய தெரியாம அரேஞ்ச் பண்ணியிருப்பேன்ல.. இப்படி கிராண்ட் என்டரி குடுத்திருக்க வேண்டாமே..” என்று கிண்டலாக ஒற்றைப்புருவம் உயர்த்தி கேட்டான்.
சட்டென்று சிவந்த முகத்தை பல்லைக்கடித்து அடக்கினாள்.
“சாரி உங்களுக்கும் உங்க ஃப்ரண்டுக்கும் எங்களால சண்டைவந்துடுச்சு..”
“அவன் கெடக்குறான், நான் பாத்துக்கறேன்.. இங்க பாதி விஷயம் ஏன் பண்றோம் எதுக்கு பண்றோம்ன்னே தெரியாம தான் ஃபாலோ பண்ணிட்டு இருக்கோம்..அதுல இந்த ட்ரெடிஷன்னும் ஒன்னு,
ஆனா நாங்க ஃபஸ்ர்ட் இயர் படிக்கும் போது எங்க சீனியர்ஸ கேள்வி கேக்க எங்களுக்கு தைரியம் இருந்தது இல்லை, அட்லீஸ்ட் உங்களுக்காவது அந்த துணிச்சல் இருக்கே.. ஆனா நீங்க சீனியர் ஆகும் போது உங்க ஜூனியர்ஸுக்கு இதைப் பண்ணாதீங்க, அப்போதான் மாற்றம் வரும்..” என்று நீளமாக பேசிவிட்டு, வர்ஷினியைக்காட்டி
“இது யாரு உன் ஃப்ரண்டா? ஷி சீம்ஸ் போல்ட்.” என்றுவிட்டு அவளைப் பார்த்து புன்னகைத்தான்.
அதிதிக்கு அடிவயிறு கலங்கியது.. ‘என்ன இது என்னோட கெட்ட கனவு எல்லாம் நிஜமாகப்போகுதா? வர்ஷினியை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்? இத்தனை வருஷம் எவ்வளவு அனுபவிச்சி இருப்பேன் இன்னுமா நான் திருந்தலை…?!!’
என்று ஏதேதோ எதிர்மறை எண்ணங்களில் அவள் தனக்குள்ளேயே அமிழ்ந்துபோக,
“ஓய் கிட்டி கேட்(kitty cat)..” என்று அவள் முகத்திற்கு நேரே கையசைத்தான்.
அவள் திடுக்கிட்டு பார்க்கவும்.
“உள்ள போ, என்ஜாய் த ஷோ” என்று புன்னகைத்து விட்டு சென்றான்.
அவள் அசையாமல் நிற்பதைப் பார்த்து அவள் கையைப்பிடித்து இழுத்து உள்ளே கூட்டிப்போனாள் வர்ஷினி.
அங்கே ஏற்கனவே உள்ளே சென்ற அவர்களின் நண்பர்களோடு சேர்ந்து அமர்ந்த பின் வர்ஷினி அதிதியை பார்த்து.
“ஹே அதி, கண்டிப்பா சம்திங் சம்திங் இருக்கு டீ.. அவன் உன்கிட்ட பேசுறதுலயே தெரியுது,ஐ அம் டாம் ஃசுயர்.” என்று உற்சாகமாக கூறினாள்.
“அவனோட ரேஞ்ச்க்கெல்லாம் நான் சரியா வரமாட்டேன் டீ..நீ இந்த பேச்சவிடு..” மறுத்து பேசினாள் அதிதி.
“அத நீ முடிவு பண்ணாத, அவன் சொல்லட்டும்..”
“ஏன் நான் போய் ப்ரபோஸ் பண்ணி, அவன் என்னை ரிஜெக்ட் செஞ்சிதான் நான் அதை தெரிஞ்சிக்கனுமா?”
“நீயேன் டீ எப்பவுமே நெகட்டிவாவே பேசுற?”
“நான் ரியாலிடிய பேசுறேன் அவ்ளோதான்..”
இவர்களின் பேச்சுக்கிடையே கலை நிகழ்ச்சிகள் தொடங்கி அரங்கம் அதிர பாடல் இசைத்துக்கொண்டிருந்தது, அப்போது அழகான லெஹெங்கா உடை அணிந்து தேவதைப்போல் நான்கு பெண்கள் ஒரு ஹிந்தி பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தனர்.
“வசீகரன் மாதிரி பையன்லாம் அதோ அங்க ஸ்டேஜ்ல செண்டரா ஆடுறாளே அந்த ரெட் லெஹெங்கா..அவளை மாதிரி அழகான பொண்ணுங்க, இல்ல உன்னை மாதிரி எக்ஸ்ட்ரார்டினரியான (extraordinary) பொண்ணுகூட தான் செட் ஆவான், நான்லாம் செட்டே ஆகமாட்டேன்…” என்றாள் விரக்தியாக..
“இங்க பாரு.. நீ யார பத்தி வேணா என்ன வேணாலும் சொல்லிக்கோ ஆனா நான் ஒரு நாளும் நம்ம ஃப்ரண்ட்ஷிப்க்கு துரோகம் பண்ணமாட்டேன்..” என்று சாதாரணமாக கூறுவது போல் தோன்றினாலும் அவள் குரலில் இருந்த தீவிரம் எதோ சத்தியப்பிரமாணம் போல் ஒலித்தது.
“நான் உன்னை சந்தேகப்படலை வர்ஷ்..”
“எனக்கு தெரியும், இருந்தாலும் உன்னோட ஃபீலிங்க்ஸ்சை என்னால புரிஞ்சிக்கமுடியுது. நான் ஒருநாளும் உங்க ரெண்டுபேருக்கு நடுவுல வர மாட்டேன் அதி, ஐ பிராமிஸ்.” என்று அவள் கண்களை நேராக பார்த்து உரைத்தாள்.
“ஐ நோ..”என்று கண்களில் நீர்த்திரையிட அவளைக்கட்டிக்கொண்டாள் அதிதி.
“இப்போ நம்ம கல்ச்சுரல் செகரெட்டரி நமக்காக ஒரு சோலோ பர்ஃபாமன்ஸ் பண்ணப்போறார்..லெட்ஸ் வெல்கம் அவர் ஒன் அண்ட் ஒன்லி காலேஜ் பிரின்ஸ் வசீ….”
என்று அறிவிப்பாளர் அறிவிக்கவும் அரங்கம் அதிர்ந்து விசில் பறந்தது.
அதிதி கண்ணிமைக்காமல் மேடையையே பார்த்துக்கொண்டிருக்க
அங்கே கை விரல்கள் கிடார் கம்பிகளில் நடனமாட தன் ஆழ்ந்த குரலில் பாடினான் வசீகரன்.
“நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை..”
தொடரும்
error: Content is protected !!