Skip to content
Post Views: 1,978

ரஞ்சி வளைகாப்பு முடிந்து ஒரு மாதம் கழித்து அருளும் வானதிக்கும் நிச்சயம் முடிவு செய்து இருந்தனர்…. திருமணம் ரஞ்சிக்கு குழந்தை பிறந்த பின் வைத்து கொள்ளலாம் என முடிவு செய்து வைத்து இருந்தனர்….
Advertisement
அருளும் வானதியும் அனைத்தும் குழந்தை பிறந்த பின் வைக்கலாம் என கூறினர்…. ஆனால் மற்றவர்கள் யாரும் கேட்கவில்லை…..
Advertisement
Advertisement
இரண்டு நாட்களில் நிச்சயம் இருக்க ஒரு வாரமாக வானதியை பார்க்க விடவில்லை பாட்டிகள் இருவரும்… அவனும் என்ன என்னமோ பண்ணி பார்த்து விட்டான்….அவர்கள் பிடிவாதமாக பார்க்க விடவேயில்லை….
Advertisement
பள்ளிக்கு அரையாண்டு விடுமுறை காரணமாக அவள் பள்ளிக்கு செல்ல வெளியவும் வரவில்லை…. அதனால் அவளை அப்போதும் பார்க்க முடியவில்லை…
வானதி உள்ளே இருந்து அவனை பார்த்து கொண்டு தான் இருந்தாள்…. அவளுக்கு அவனை நினைத்து பாவமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அவனை நினைத்து சிரிப்பு தான் வந்தது….
அவனால் போனில் கூட பேச முடிவதில்லை…. அவள் போனை கூட தாயம்மா பாட்டி வாங்கி வைத்து கொண்டார்…. அவன் அழைத்தால் போனை ஆன் செய்து “ஹெலோஓ… யாரு ப்பா பேசுறது….” என்று கேட்டார்… அவன் பாவமாக முகத்தை வைத்து கொண்டு தான் திரிந்து கொண்டு இருந்தான்….
அவனை நினைத்து வீட்டினர் அனைவருக்கும் சிரிப்பு தான் வந்தது…. ஆனால் அவனுக்கு உதவ யாரும் முன் வரவில்லை… பின் எப்படியோ பாட்டிகளிடம் கெஞ்சி அவர்களுக்கு வெற்றிலை வாங்கி குடுத்து ஐஸ் வைத்து வீட்டினுள் சென்றுவிட்டான்….
உள்ளே சென்று பார்த்தால் அவனவள் வேண்டுமென்றே அவன் உள்ளே வரும் போது கால் கொலுசு சலசலக்க அறைக்குள் சென்று கதவை மூடி இருந்தாள்….
அவள் வேண்டுமென்றே கதவை அடைத்ததை பார்த்து “இவளும் சதி பண்றாளே” என்று வாய் விட்டே புலம்பி கொண்டு கதவுக்கு முன்பு வந்து நின்றான்…. அவனின் புலம்பலை கேட்டு தனக்குள்ளே சிரித்து கொண்டு கதவில் சாய்ந்து என்ன பேச போகிறான் என்று ஆர்வமுடன் கேட்க தயாராக இருந்தாள்…..
‘அடியே குல்பி நீயும் ஏன்டி பழி வாங்குற…. கதவை திறடி.. உன்னை பார்த்து ஒரு வாரம் ஆச்சு” என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு பாவ குரலில் கூறினான்…
அவளோ “வருஷ கணக்கா பாக்காம இருந்த மனுசனுக்கு ஒரு வாரம் பாக்காம இருக்க முடியலயோ… இன்னும் ரெண்டு நாள் தானு இருக்கு… அப்போ பாத்துக்கோங்க என் கருவா மாமா….” என்று டைப் செய்து அனுப்பினாள்….
செய்தி வந்த சத்தத்தில் போனை எடுத்து பார்த்தவன் அவள் அனுப்பிய செய்தியில் “அடியே குட்டிமா பழிவாங்காத….. அதுவும் இதுவும் ஒன்னா…. அது நீ சொல்லி தான் போனேன்… இப்போ பக்கத்துல உன்னை வெச்சிட்டு பாக்க கூடாதுனு சொன்னா…. என்னால முடியாது… கதவை திற” என்று அழுகாத குறையாக கெஞ்சி கொண்டு இருந்தான்….
அவள் “போயா போ” என்று அனுப்பி வைத்தாள்.. அதை பார்த்து விட்டு “குட்டிமா ஏன்டி இம்சை பண்ற…..” என்று கேட்டுவிட்டு “போடி நான் ரெண்டு நாள் கழிச்சே பாத்துக்கிறேன்…” என்று கூறிவிட்டு வாசலை நோக்கி நடந்தான்…
விளையாட்டு போதும் என நினைத்து விட்டு கதவை திறந்து கொண்டு ஓடி போய் அவனை பின் இருந்து அணைத்து கொண்டாள்…. அவன் முகத்தில் ஒரு மந்திர புன்னகை உதயம் ஆகியது… அதை அவனுக்கு எதிரில் இருந்த கண்ணாடியில் பார்த்துவிட்டு வானதி மேலும் அவனுடன் ஒன்றி இருந்தாள்…
அவளை தன் முன்னால் இழுத்து அவள் தலையில் செல்லமாக கொட்டி விட்டு “சேட்டை…. அவ்வளவும் சேட்டை…” என்று கூறி அவளை மீண்டும் அணைத்து கொண்டான்…
“போன் உன்கிட்ட தானு இருக்கு… ஆனா நான் கால் பண்றப்ப மட்டும் அந்த கிழவி ஏன் எடுக்குது…. ” என்று கேட்டான் அருள்
அவனின் தலையில் ஓங்கி ஒன்று கொட்டு வைத்து போனில் “என்ன பாட்டியை மரியாதை இல்லாம பேசுற மாமா… ஒன்னு அப்பத்தா கூப்பிடு.. இல்லனா பாட்டி கூப்பிடு அது என்ன கிழவி” என்று டைப் செய்து காட்டினாள்
அவளின் கோவத்தை பார்த்து சிரித்து விட்டு “சரிங்க மகாராணி.. உங்க உத்தரவு படியே மரியாதையா கூப்பிடுறேன்” என்று பணிவாக உடம்பை வளைத்து கையை வாய் அருகில் வைத்து கூறினான்….
அவளும் ஆசீர்வாதம் செய்வது போல் கையை அவன் தலை மீது வைத்தாள்…. அதை பார்த்து “அடிங்” என்று கூறி அவளை துரத்தினான்…. அவளும் அவனுக்கு பழிப்பு காட்டி விட்டு அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்…. அவனும் சிரித்து கொண்டே “பாத்துக்குறேன் குட்டிமா” என்று கூறிவிட்டு “லவ் யூ டி குல்பி” என்று சத்தமாக கூறிவிட்டு வெளியே சென்றான்…
அவன் வெளியே செல்வதற்குள் “லவ் யூ மாமா” என்று அவளும் அனுப்பி இருந்தாள்… அவனும் சிரித்து கொண்டே வெளியே வந்தான்…. அவன் தனியாக சிரித்து கொண்டு வருவதை பார்த்து பாட்டிகள் இருவரும் தங்களுக்குள்ளே சிரித்து கொண்டனர்… அப்போது அங்கு வந்த வேலு அருளை பார்த்து “மாப்பிள… கொஞ்சம் சட்டையை எல்லாம் துடைச்சிட்டு வரணும்…. சின்ன பையன் இது எல்லாம் தெரிஞ்சிக்க வேண்டாமா…” என்று கூறினான்…
குனிந்து சட்டையை பார்த்தவன் வெக்கப்பட்டு விட்டு “போடா மச்சான்…” என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக வீட்டுக்கு சென்றான்….
வீட்டிற்கு சென்றவன் சட்டையை கழட்டி பார்த்தவன் முன்பக்கம் பின்பக்கம் இரண்டு பக்கமும் குங்குமம் ஒட்டி இருந்ததை பார்த்து வெக்க பட்டு விட்டு கட்டிலில் சாய்ந்தான்….
அடுத்த இரண்டு நாளும் காற்றாய் பறக்க நிச்சய நாளும் வந்து இருந்தது… குடும்பத்தினர் அனைவரும் சந்தோசமாக கிளம்பி கொண்டு இருக்க தேவாவிற்கு மட்டும் நேற்றில் இருந்து பயங்கர காய்ச்சல்…. அவனுக்கு சீக்கிரம் காய்ச்சல் வராது வந்து விட்டால் சரியாக ஒரு வாரமாகும்….
உடம்பு சரி இல்லாமல் போனாலும் தன் வானு ம்மா நிச்சயத்தில் வேலை செய்து கொண்டு தான் இருந்தான்…. நிச்சயம் நல்லபடியாக முடிந்து இருக்க சொந்தங்கள் பாதி வீட்டிற்கு சென்று இருக்க பாதி பேர் இன்னும் மண்டபத்தில் தான் இருந்தனர்….
தேவா வானதியின் தோளில் சாய்ந்து உறங்கி இருந்தான்…. அவனுக்கு அவளே ஊட்டி விட்டு மாத்திரை போட வைத்து தூங்க வைத்து இருந்தாள்….
மாலை ஆகி இருந்தது….அப்போது பாட்டி வந்து “வானு ம்மா கொஞ்சம் வரியா… கோவிலுக்கு போய் விளக்கேத்திட்டு வரலாம்….” என்று அழைத்தார்… அவளோ சைகையில் “பாட்டி தூங்குறான்….” என்று தேவாவை காட்டி கூறினாள்…
அவனை “உள்ள போய் தூங்க சொல்லிக்கலாம் எவளோ நேரம் இங்கயே தூங்குவான்… கழுத்து வலிக்கும” என்று கூறி யுகேனை அழைத்து “டேய் இவனை ரூம்ல தூங்க வை…. கூடவே இரு…” என்று கூறி அனுப்பி வைத்தார்….
அவனும் அழைத்து சென்று கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அவன் கூடவே இருந்தான்…. ரஞ்சி அவனை அழைத்து எதோ எடுத்து வருமாறு கூறிவிட்டு அவள் மெதுவாக வேறு ஒரு அறைக்கு சென்று விட்டாள்….
அவன் சென்ற அடுத்த நொடி உள்ளே நுழைந்த பாரதி அவன் அருகில் சென்று அவனை தொட்டு பார்த்தாள்… காய்ச்சல் நெருப்பாக கொதித்தது…. குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டு நிமிர முயன்ற போது “ரதி ம்மா”என்று அழைத்து அவள் கையை பிடித்து கொண்டான்…. எங்கே விழித்து விட்டானா என்று பயந்து நிமிர்ந்து பார்க்க அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்…. தூக்கத்திலும் தன்னை கண்டுகொண்ட அவனை நினைத்து சிரிப்பு தான் எழுந்தது அவளுக்கு…. அவனிடம் இருந்து தூக்கம் கலையாமல் கையை பிரித்து கொண்டு சிரித்து கொண்டே வெளியேறினாள்…..
இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடிக்கும்… இருவரும் சொல்லிக்கொள்ளவில்லை…. யாருக்கும் தெரியவும் இல்லை… ஆனால் இருவரையும் குழந்தையாய் எண்ணி பார்க்கும் வானதிக்கு தெரியாதா…. அவளுக்கு தெரிந்தும் இருவராய் சொல்லும் வரை எதுவும் கேட்கவேண்டாம் என விட்டு விட்டாள்……
அவள் சென்று ஐந்து நிமிடம் கழித்து உள்ளே வந்த யுகேன் அவனை பார்த்து விட்டு பாத்ரூம் சென்று இருந்தான்…. அவன் சென்று ஐந்து நிமிடத்தில் ஒரு பெண் மெதுவாக யாருக்கும் தெரியாமல் உள்ளே நுழைந்து தேவாவை அனைத்தவாரு படுத்து கொண்டாள்…. தூக்கத்திலும் வேறு யாரோ தன் அருகில் படுத்ததை உணர்ந்து தள்ளி படுத்தான்….
அவளுக்கு யுகேன் வெளியில் சென்றது மட்டும் பார்த்த அந்த பெண் உள்ளே வந்ததை பார்க்காமல் உள்ளே நுழைந்து இருந்தாள்…
அவள் உள்ளே வந்ததும் வெளியே யாரோ கதவை அடைத்து அனைவரையும் அழைத்து “இங்க யாரோ ஒரு பையனும் பொண்ணும் தனியா போய் இருக்காங்க…. என்ன பசங்களோ…. கட்டி பிடிச்சு படுத்து இருக்குங்க…” என்று முகத்தை சுழித்து கூறினர்….
பாரதியும் ரஞ்சியும் எதுவும் புரியாமல் நின்று இருந்தனர்…. ஏனென்றால் அவர்களுக்கு தான் தெரியுமே உள்ளே தேவா உள்ளான் என…. தேவா தூக்கத்திலும் தன்னை வேறு யாரோ அணைப்பதை உணர்ந்து கஷ்டப்பட்டு எழுந்து இருந்தான்…
தன்பக்கம் வேறு யாரோ பெண் அணைத்து கொண்டு இருப்பதை பார்த்து “ஹலோ யாரு நீங்க…. இங்க வந்து ஏன் இருக்கீங்க…” என்று கேட்டான்….
அவளோ அவள் அணிந்து இருந்த தாவணி கலைத்து விட்டு அவள் தலையை கலைத்து கொண்டு அவனை அணைக்க முயன்று கொண்டு இருக்கும் போது வெளியே சத்தம் போட்டு கொண்டு இருந்த பெண்மணி கதவை திறந்தார்…
அப்போது அந்த பெண்ணை தவிர்க்க பின்னே சென்று கொண்டு இருந்த தேவா கால் தடுக்கி கட்டிலில் விழுந்து இருக்க அந்த பெண்ணோ அவன் மேல் விழுந்து இருந்தாள்… இந்த காட்சியை தான் பார்த்தனர் அனைவரும்…
இதை பார்த்து கோவம் அடைந்த அருள் தேவாவை அறைந்து இருந்தான்…. அவன் அறைந்ததை பார்த்து அனைவரும் அதிர்ந்து இருக்க அப்போது உள்ளே வந்த வானதி இதை பார்த்து கோவமாக அருள் முன் நின்று இருந்தாள்….
அவளை பார்த்தவுடன் “நகரு வானதி… அவன் என்ன வேல பண்ணி இருக்கான் தெரியுமா…. இவன் எல்லாம் என் தம்பியானு சந்தேகமா இருக்கு… எப்படி ஒரு பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்க பாப்பான்….” என்று அவனை அடிக்க செல்லும் போது யுகேன் பாத்ரூமில் இருந்து வெளியே வந்து இருந்தான்… இதுவரை நடந்ததை வீடியோ எடுத்து இருந்தான்…
“அண்ணா என்ன நடந்ததுனு தெரியாம நீ தேவாவை அடிச்சது தப்பு” என்று கூறி அந்த வீடியோவை ஓட விட்டான்…. அதில் தேவா தூங்கி கொண்டு இருக்கும் போதே அந்த பெண் உள்ளே நுழைந்ததில் இருந்து பதிவு ஆகி இருந்தது… அவளே ஏறி படுத்தது…. பின் தேவா தள்ளி படுப்பது… பின் அவன் யாரோ அணைப்பதை உணர்ந்து அவன் எழுந்தது…. பின் அவன் கேட்டது… அந்த பெண் தாவணி மற்றும் தலையை கலைப்பது…. பின் கட்டி பிடிக்க செல்வது தேவா அதை தவிர்த்து கால் தடுக்கி கீழே விழுவது அந்த பெண் வேண்டுமென்றே அவன் மேலே விழுவது அனைவரும் வரும் போது அணைத்து கொண்டது, என்று அனைத்தும் பதிவு ஆகி இருந்தது…..
அதை பார்த்து கோவமாக வானதி அருளை முறைத்து விட்டு பாட்டியிடம் கண்ணை காட்டினாள்…. பாட்டி அந்த பெண்ணை கன்னத்தில் அறைந்து “யாருடி நீ… ஏன் இப்படி எல்லாம் பண்ணுற… யார் முதல்ல நீ… நீ அந்த கீழ் தெருவுல இருக்குற சாந்தா மக தானு…. எங்க குடி கெடுக்க யார்டி சொன்னா” என்று கோவமாக கேட்டார்…..
அவளோ அமைதியாக நின்று இருக்க அவளளின் அம்மாவோ அவளை அடித்து “ஏன்டி இப்படி பண்ண… உன்னை அப்படியா வளர்த்தேன்….” என்று அவளை போட்டு அடித்தார்…..
அவ்ளோ “எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும் ம்மா…. நான் போய் லவ் பண்றேன்னு சொன்னேன்… இவர் முடியாதுனு சொல்லிட்டார்… எனக்கு என்ன பண்றதுனு தெரியல…. அது தான் இப்படி பண்ணேன்…” என்று அழுகையுடன் கூறினாள்…..
“ஐயோ உன் வாழ்க்கைல நீயே மண் அள்ளி போட்டுக்கிட்டியே… உன்னை இனிமே யார்டி கல்யாணம் பண்ணிப்பா…” என்று நீலி கண்ணீர் வடித்தார்….
அந்த உள்ளே வைத்து கதவை அடைத்த பெண்மணி “உன் பொண்ணு தான் இந்த பையனை பிடிச்சு இருக்குனு சொன்னால…. இவனே கட்டிக்கட்டும்..” என்று கூறினர்…
“பத்மினி இந்த பொண்ணு உன் பையனுக்காக என்ன என்ன பண்ணி இருக்கா… இவளையே ரெண்டாவது மருமகளா கொண்டு வந்துரு” என்று கூறினர்…
பத்மினி தாயம்மா அருள் வானதி முகத்தை தான் பார்த்தார்…… பாரதி அழுகையுடன் தேவாவை மட்டும் தான் பார்த்தாள்…. அவனும் அவளை மட்டும் தான் பார்த்தான்….
வானதி இருவரையும்பார்த்துவிட்டு கோவமாக அந்த பெண்ணின் முன் நின்று அவளை வேகமாக அறைந்தாள்…. பின் தாயம்மாவை பார்த்தாள்…. அவளின் பார்வையில் இந்த பெண் பொய் சொல்கிறாள் என்று உணர்ந்து “ஒழுங்கா உண்மையை சொல்லு” என்று கேட்டார்….அவள் “நான் சொல்றது தான் உண்மை நான் இவரை லவ் ” என்று கூறி கொண்டு இருக்கும் போதே இரண்டு மூன்று முறை வேகமாக அடித்தாள்…..
அவள் அடியை தாங்க முடியாமல் “இல்ல இல்ல நான் இவரை லவ் பண்ணல…. உங்க பொண்ணும் அவங்க பொண்ணும் தான் இப்படி பண்ண சொன்னாங்க…. வேற எதுவும் தெரியாது… நான் என் அம்மா… அப்பறம் இப்போ பேசுனாங்களே அவங்க… நாங்க மூனு பேருமே அவங்க சொன்னதை தான் பேசுனோம் எங்களுக்கு தெரியாது….” என்று அழுதவாறே கூறினாள்….
அவள் கூறியவுடன் அருளை கோவமாக ஒரு வெட்டும் பார்வை பார்த்துவிட்டு தேவாவை அழைத்து கொண்டு வீட்டை நோக்கி சென்று விட்டாள்…. அவள் பின்னே ரஞ்சி பாரதி வேலு யுகேன் நால்வரும் சென்று விட்டனர்…..
தாயம்மா கோவத்துடன் அவர்களை திட்டிவிட்டு “இந்த பொழப்புக்கு தூக்கு மாட்டி சாகலாம்” என்று அவரும் வெளியேறிவிட்டார்…
அருள் தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்துவிட்டான்… காலையில் எவ்வளவு சந்தோசமாக ஆரம்பித்த நாள் தற்பொழுது இப்படி ஆகியதே என்று சோர்ந்து விட்டான்….
error: Content is protected !!