Skip to content
Post Views: 1,657

பள்ளி முடிந்து வழக்கம் போல வெளியில் வந்து வண்டியை எடுத்தாள்.. அப்போது எதையோ பார்த்து அந்த இடம் சென்றாள்….. அங்கு ஒரு குழந்தை மட்டும் தனியாக நின்று இருந்தது…. அந்த குழந்தையிடம் சென்றவள் அதனிடம் நீங்க மட்டும் ஏன் தனியா இருக்கீங்க அம்மா வரலயா என்று சைகையில் கேட்டாள்….
அதற்கு அந்த குழந்தையோ இல்லை என தலையசைத்தது….. அந்த குழந்தையின் தாய் வருகைக்காக அவளும் அங்கேயே நின்று விட்டாள்…. ஒரு அரைமணி நேரம் ஆகியும் அந்த குழந்தையின் தாய் வரவில்லை….
Advertisement
அப்போது ஒரு கருப்பு நிற கார் வேகமாக வந்து வானதியை இழுத்து காருக்குள் போட்டுக்கொண்டு சென்றுவிட்டது….
Advertisement
மறைவில் நின்று இருந்த அந்த குழந்தையை பார்க்காமல் அவளை கடத்தி சென்று இருந்தனர் …. அந்த குழந்தையோ பயந்து நின்றுவிட்டது… அந்த குழந்தைக்கு ஒரு பதிமூன்று வயது இருக்கும்…..
Advertisement
அந்த சிறுமிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை…. அப்டியே அழுது கொண்டே நின்றுவிட்டது… அடுத்த பத்து நிமிடத்தில் அந்த குழந்தையின் பெற்றோர் இருவரும் வேகமாக பள்ளிக்கு வந்தனர்….
Advertisement
முக்கிய சொந்தத்தில் ஒருவரை மருத்துவமனையில் பார்க்க சென்று வர நேரம் ஆகி இருந்தது….
அழுது கொண்டு இருந்த சிறுமியை பார்த்து பதட்டம் அடைந்து அழுக கூடாது என கண்ணை துடைத்து விட்டு கூறினர்….
அந்த சிறுமியோ தன் பெற்றோரிடம் சைகையில் நடந்ததை அனைத்தும் சைகையில் கூறியது… அதை கேட்டு அதிர்ந்தவர்கள் அந்த பள்ளியின் தலைமையாசிரியருக்கு அழைத்து அனைத்தும் கூறி இருந்தனர்…
அவரும் அவசரமாக பள்ளிக்கு கிளம்பி வந்து சிசிடிவியில் என்ன நடந்தது என்று பார்த்து அருளின் போனிற்கு அழைத்தார்… அவன் ஏற்கனவே அவளை காணாமல் பள்ளிக்கு தான் வந்து கொண்டு இருந்தான்….
அவன் கடையில் இருந்த போது அதை. பார்த்தவன் பதறி அடித்து கொண்டு தான் பள்ளிக்கு கிளம்பினான்… அதில் வானதியின் போனில் இருந்து அவசரக்கால செய்தி(SOS emergency message)வந்து இருந்தது….
அவள் போனில் இருந்து அவள் யாருக்கோ உதவிக்கு அழைக்க முயலா நேரத்தில் பவர் பட்டனை மூன்று முறை வேகமாக அழுத்தினால் அவள் போனில் இருந்து அவள் ஏற்கனவே சேவ் செய்து வைத்து இருக்கும் எமெர்ஜென்சி நம்பருக்கு அழைப்பும் மெசேஜூம் செல்லும்…
அது மட்டும் இல்லாமல் 112 என்ற எண்ணிற்கும் அழைப்பு செல்லும் அருகில் இருக்கும் காவல் ஆய்வாளருக்கு தகவல் சொல்லி போலீஸ்சும் அந்த எண்ணை கண்காணித்து அவர்களை மீட்கும்….
அதே போல் வானதியும் பவர் பட்டனை அழுத்தியதால் அருள் மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் போய் இருந்தது…. அருள் வேகமாக பள்ளிக்கு சென்று தலைமையாசியரிடம் விசாரித்தான்…
அவரும் குழந்தை சொல்லியது முதல் தற்போது அவர் போலிசிடம் கம்பளைண்ட் குடுத்தது வரை அனைத்தும் கூறி இருந்தார்….
அவரை அழைத்து கொண்டு அவன் காவல் நிலையத்திற்கு சென்றான்… அந்த சிறுமியின் பெற்றோரும் அவர்களுடன் சென்றனர்….
மீண்டும் ஒருமுறை அருள் தனக்கு வந்த மெசேஜ்யை காட்டி கம்பளைண்ட் செய்தான்… போலீஸ் ஒரு பக்கம் தேட அருள் வேலுவுக்கும் மற்ற நண்பர்களுக்கும் தகவல் சொல்லி அவர்களுடன் ஒரு பக்கம் தேட ஆரம்பித்தான்….
போன் சிக்னலும் ஒரு இடத்தில் கட் ஆகி இருந்தது…. அதுவரை இருந்த நம்பிக்கை அனைத்தும் அதன்பிறகு அருளிற்கு போய் இருந்தது… இடிந்து போய் நின்றுவிட்டான்…
வேலு தான் அவனை தேற்றி தேட அழைத்து சென்றான்… இரவாகியும் கிடைக்கவே இல்லை… சிசிடிவியை வைத்து பல மணி நேர தேடலுக்கு பின்பு அந்த கடத்திய காரை கண்டுபிடித்து இருந்தனர்….
மேட்டுரை தாண்டி பத்து கிலோமீட்டர் தள்ளி உள்ள ஒரு சிறிய கிராமத்தில் அடைத்து வைத்து இருப்பதை கண்டுபிடித்து இருந்தனர்…
அருள் மற்றும் மற்றவர்களும் அந்த இடத்திற்கு சென்றனர்… அங்கு அருள் வானதியின் நிலமையை பார்த்து துடித்து போய் விட்டான்…
அங்கு வானதி கன்னம் எல்லாம் தடித்து போய் உதட்டில் இருந்து ரத்தம் வடிந்து தலை எல்லாம் கலைந்து போய் படுத்து இருந்தாள்…
ஆனால் ஒருவன் அவளின் டிரசை கலைக்க முன்னேறி கொண்டு இருந்தான்… அதை பார்த்து அருள் கோவமடைந்து ஓங்கி அவனை உதைத்து இருந்தான்…
போலீஸும் அங்கு வந்து அவனை பிடித்து இருந்தனர்…
அவனை பிடித்து கொண்டு போலீஸ் காவல் நிலையத்திற்கு சென்று இருக்க அருள் வானதியின் அருகில் சென்று அவனை கட்டிப்பிடித்து கொண்டான்….
வானதி மயக்கத்தில் இருந்தாள்… அவளை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு அவளுடன் வேலுவை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு அருள் மற்றும் மற்ற இரு நண்பர்களும் காவல் நிலையத்திற்கு சென்றனர்…
அங்கு இன்ஸ்பெக்டர் அவனிடம் விசாரணை நடத்தி கொண்டு இருந்தார்…. அருள் வந்த நேரம் ஏன் வானதியை கடத்தினான் என்று கூற ஆரம்பித்து இருந்தான்…
“என் பேரு கண்ணன்… நான் இங்க பக்கத்துல இருக்க ஊருல தான் இருக்கேன்… அப்போ தான் என்னை தேவிகா பத்தி தெரிஞ்சது… அவளை பார்த்ததும் பிடிச்சது…. நான் எல்லா வேலையும் செய்வேன்…
திருட்டு வேலை…. வழிப்பறி அடிதடி எல்லாம் பண்ணுவேன்… அப்போ தான் அவ என்கிட்ட வந்து பேசுனா… நானும் நல்லவன் மாதிரி நடிச்சேன்… அவளுக்கு என்னை கொஞ்சம் கொஞ்சமா பிடிக்க ஆரம்பிச்சது….
நானும் பணக்காரன் மாதிரி நடிச்சேன்… அவளும் என்னை கல்யாணம் பண்ண சம்மதிச்சா…. ஆனா என்கிட்ட ஒன்னு கேட்டா… இப்போ நான் கடத்தின பொண்ணு போட்டோ காட்டி இவளை கடத்தி கொல்லனும்னு சொன்னா… நான் ரவுடி வேலை பாப்பேன் தான் ஆனா கொலை பண்ற அளவுக்கு எல்லாம் பண்ண மாட்டேன்…
ஆனா அவளுக்காக சம்மதிச்சேன்… பிளான் போட்டு அந்த பொண்ணை கடத்துனோம்… எனக்கு அவளை பார்த்ததும் பிடிச்சு போச்சு… அவ எனக்கு வேணும்னு தோணிச்சு… அது தான் அவளை அனுபவிச்சிட்டு அவளை கொலை பண்ணலாம்னு பிளான் பண்ணி இங்க கொண்டு வந்தோம்…
தேவிகாவும் இங்க வந்தா இந்த பொண்ணை போட்டு நல்லா அடிச்சு மயக்கம் போட வெச்சுட்டு என்கிட்ட கொன்னுடுங்கனு சொல்லிட்டு போச்சு…
நானும் அந்த பொண்ணுகிட்ட நெருங்குற அப்ப நீங்க வந்துட்டீங்க… இதுக்கு தேவிகாவோட அம்மாவுக்கும் பங்கு இருக்கு….” என்று நீளமாக கூறி முடித்தான்…
அருளிற்கு இதை கேட்டு பயங்கர கோவம் வந்து இருந்தது… அவனை அடித்து உதைத்து விட்டான்… அவனை அடக்கவே முடியவில்லை…
பின் அங்கிருக்கும் இன்ஸ்பெக்டர் தான் அவனை சமாதானம் படுத்தி அந்த கண்ணனை லாக் அப்பில் எப்ஐஆர்(fir) போட்டு அடைத்து இருந்தார்…
அருளை சமாதானம் படுத்தி அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்… அருள் மருத்துவமனை வரும் போது வானதி கண் முழித்து இருந்தாள்….
ஆனால் வேலுவிடம் ஒரு வார்த்தை பேசவில்லை எதையோ வெறித்து கொண்டு இருந்தாள்….
அருள் ஓடி வந்து அவளை அணைத்து கொண்டு அழுதுவிட்டான்… ஆனால் வானதி எந்த முக மாற்றமும் காட்டவில்லை….
பயத்தில் அவ்வாறு உள்ளாள் என நினைத்து அவளை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து சென்றனர்… நேராக அவன் அவனுடைய வீட்டிற்கு தான் அழைத்து சென்றாள்…
அவன் கையை பிடித்து கொண்டு பொம்மையை போல் நடந்து சென்றாள்…. அவளை பார்த்து பெண்கள் அனைவரும் அணைத்து கொண்டு அழுத்துவிட்டனர்…
தேவா பாரதியை அழைக்க சேலம் சென்று இருந்தான்… விஷயம் கேள்விப்பட்டு வேகமாக மேலூர் வந்து இருந்தான்…
அனைவருக்கும் மன வருத்தத்துடன் தூங்கி இருந்தனர்… அடுத்த நாள் காலை தேவிகாவும் நாயகியும் வானதி தேவிகாவின் காதலனை ஏம்மாற்றி தேவிகாவிடம் பிரித்துவிட்டாள்… அவனிடம் தப்பாக நடந்து கொண்டாள் என சில போட்டோ கண்ணனுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை காட்டி பஞ்சாயத்து கூட்டி இருந்தனர்….
error: Content is protected !!