Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மௌனமாய் ஒரு காதல் செய்வோம்

காதல் ❤️ 23

மாலை வரவேற்பு சந்தோசமாக தொடங்கியது…. ஒரு சிலர் உண்மையான சந்தோஷத்துடன் வந்தனர்… ஆனால் ஒரு சிலர் வயித்தெரிச்சலுடன் தான் வந்தனர்… ஆனால் யாரும் அவர்களை தான் கண்டுகொள்ளவில்லை….

காலையில் இருந்தது போல் இப்போதும் அருளின் குடும்பத்தினர் அனைவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து இருந்தனர்….



Advertisement

வரவேற்பில் நிறைய பேர் வந்து இருந்தனர்…. கம்மி நாட்கள் இருந்தாலும் அனைத்தையும் அழகாக ஏற்பாடு செய்து இருந்தனர்….அதை ஆச்சர்யமாய் பார்த்து சென்றனர்…

Advertisement

இரவு ஆகியது… வந்து இருந்த பாதி பேர் சாப்பிட்டு விட்டு சென்று இருக்க பாதி பேர் அங்கு தான் இருந்தனர்…. ஒரு சில பாடகர்கள் பாடல்கள் பாடி கொண்டு இருந்தனர்….

Advertisement

அருள் வேலுவிடம் எதோ சொல்ல அவனும் அதை அப்படியே செய்தான்…. வேலு அவர்களிடம் இருந்து ஒரு மைக் வாங்கி வானதியை நடுவில் நிற்க வைத்து பாட ஆரம்பித்தான்….

Advertisement

கண்ணுக்குள்ளே உன்னை

வைத்தேன் கண்ணம்மா நான்

கண்கள் மூட மாட்டேனடி

செல்லம்மா நான் கண்கள் மூட

மாட்டேனடி செல்லம்மா

அடி நீதான் என்

சந்தோசம் பூவெல்லாம்

உன் வாசம் நீ பேசும்

பேச்செல்லாம் நான்

கேட்கும் சங்கீதம் உன்

புன்னகை நான் சேமிக்கின்ற

செல்வமடி நீ இல்லையென்றால்

நானும் இங்கே ஏழையடி

என்ற பாடலை பாடி முடித்தான்….

அனைவரும் சந்தோசமாக கை தட்ட வானதி அவனை காதலுடன் பார்த்து கொண்டு இருந்தாள்…. பின் வனத்திக்காக இரண்டு மூன்று பாடல்கள் அவன் பாட வானதி அவனை ஆசையாகவும் காதலோடும் பார்த்து கொண்டு இருந்தாள்….

வரவேற்பு நிகழ்ச்சி சந்தோஷத்துடன் முடிய மீதி இருந்த ஆட்கள் அனைவரும் சென்று இருக்க முதல் காரியமாக பாட்டி அனைவரையும் அமர வைத்து திருஷ்டி சுத்தி போட்டார்…

பின் தேவா பாரதி யுகேன் மூவரும் வேலுவின் பெற்றோருடன் அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவிட்டனர்…. மற்றவர்கள் எல்லாம் அருளின் வீட்டிற்கு சென்றனர்…

வானதியை பத்மினியின் அறையில் தயாராக கூறிவிட்டு அருளை ரஞ்சியின் அறையில் தயாராக அனுப்பினர்….

முதலில் அருளை வேலு அவன் அறையில் விட்டுவிட்டு அவனை அணைத்து “இனிமே எந்த பிரச்சனை இல்ல மச்சான்…. சந்தோசமா வாழ்க்கைய ஆரம்பிங்க….” என்று கூறி அவனிடம் இருந்து விடைபெற்றான்….

அதே போல் ரஞ்சியும் அவளை தயார் செய்து விட்டு “எதை பத்தியும் யோசிக்காதிங்க… இப்பயே எல்லாம் ஆரம்பிக்கணும்னு இல்ல… உங்களுக்கு எப்போ தோணுதோ அப்ப ஆரம்பிங்க… ஆனா பாட்டி அம்மா எல்லாம் ரொம்ப ஆசையா இருக்காங்க அதுனால சீக்கிரம் ஆரம்பிச்சிடுங்க… நாங்க எல்லாம் எங்க வீட்டுக்கு போறோம்….” கதவை பூட்டிட்டு நீ ரூம் போ என்று பால் சொம்பை கையில் குடுத்துவிட்டு வெளியில் சென்றாள்….

வெளியில் பாட்டிகள் இருவரிடமும் பத்மினியிடமும் ஆசீர்வாதம் வாங்கினாள் வானதி… பின் அனைவரும் அவளிடம் சொல்லிவிட்டு வேலுவின் வீட்டிற்கு புறப்பட்டனர்….

கதவை பூட்டி விட்டு மேலே செல்லாமல் ஹாலிலேயே சிறிது நேரம் அமர்ந்துவிட்டாள்…. பின் தன்னை ஆசுவாசம் படுத்தி கொண்டு மேலே அருளின் அறைக்கு சென்றாள்….

அங்கு அவனோ சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தவன் அவள் வராமல் செய்யப்பட்டு இருந்த அலங்காரத்தை பார்த்து கொண்டு இருந்தான்…. சிரிப்பாக இருந்தது அவனுக்கு…. பார்த்து கொண்டு இருக்கும் போதே வானதியும் வந்து இருந்தாள்…

அதுவரை அலங்காரத்தை பார்த்து கொண்டு இருத்தவன் இவள் வந்தவுடன் இவளையே பார்க்க ஆரம்பித்துவிட்டான்… அவன் பார்வையை அவளால் தாங்க முடியவில்லை….

பால் சொம்பை அவனிடம் குடுத்துவிட்டு அவன் காலில் விழ போனவளை தடுத்து “ஏய் குட்டிமா என்ன பண்ற….” என்று கேட்டு அவளை தன்னுடன் அணைத்து கொண்டான்….

இருவருக்கும் மனதினுள் கொள்ளை ஆசை இருந்தாலும் வெளியே காட்டிகொள்ளாமல் சாதாரணமாக பேசிக்கொண்டு இருந்தனர்….

இரவு ஒரு மணி வரை பேசிக்கொண்டு இருந்தவர்கள் அருள் மணியை பார்த்து விட்டு “தூங்கலாமா” என்று வானதியை பார்த்து கேட்டான்….

அவளோ அவனை ஒரு மாதிரியாக பார்த்து வைத்தாள்… “குட்டிமா அப்படி எல்லாம் பாக்காதடி என்னால முடியாது.. நானே உன்னை ஹர்ட் பண்ணிடுவேன்னு அமைதியா இருக்கேன்….” என்று கூறினான்….

அவளோ அதே பார்வையோடு தான் பார்த்து கொண்டு இருந்தாள்… அதற்கு மேல் தாங்காமல் அவள் மேல் விழுந்து இருந்தான்… அவளை முத்தமிடுவதற்கு முன் “உனக்கு ஓகேவா குட்டிமா” என்று கேட்டான்..  அவளோ அவளின் சம்மதத்தை அவனின் நெற்றியில் முத்தமிட்டு கூறி இருந்தான்….

அதன் பின் ஒருவரில் ஒருவர் தொலைந்து இருந்தனர்…

அதுக்கு மேல நமக்கு அங்க எந்த வேலையும் இல்ல ப்பா…

அடுத்த நாள் வேலுவின் வீட்டில் அனைவரும் தாமதமாக தான் எழுந்தனர்… பொறுமையாக எழுந்து காலை கடன்கள் எல்லாம் முடித்து விட்டு பதினொன்று மணிக்கு மேல் தான் காலை உணவை உண்டு முடித்தனர்… தேவா மட்டும் காலை எழுந்து ஜாகிங் சென்று விட்டு உடற்பயிற்சி செய்ய மாடிக்கு சென்று விட்டான்… உடற்பயிற்சி செய்துவிட்டு வேலுவின் அப்பாவுடன் வயலுக்கு சென்றுவிட்டான்…. வேலுவும் அருளின் சூப்பர் மார்க்கெடடுக்கு சென்றுவிட்டான்…. மற்ற இரண்டு வானரங்கள் இன்னும் எழுந்துகொள்ளவில்லை….  இரண்டு பாட்டிகளும் தங்கள் பேர பிள்ளைகளை திட்டிக்கொண்டு இருந்தனர்… பின் ரஞ்சி தான் “அவங்க தூங்கட்டும் அமைதியா உங்க கொள்ளு பேத்தியை பாத்துக்கோங்க” என்று கூறி குழந்தையை குடுத்துவிட்டு சென்றுவிட்டாள்… பதினொன்றை மணிக்கு தான் பாரதி எழுந்து குளித்து விட்டு வந்தாள்….

இரண்டு பாட்டியும் அவளிடம் வம்புக்கு இழுக்க அவளும் அவர்களிடம் சண்டைக்கு சென்றாள்… ஆனால் ரஞ்சி தான் அவளை தன்னுடன் இழுத்து சென்று அவளுக்கு காலை உணவை வைத்தாள்….” தேங்க்ஸ் அண்ணி” என்று கூறி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்… அப்போது சரியாக தேவா உள்ளே நுழைந்தான்…. ரஞ்சி கவனிக்கவில்லை… ஆனால் பாரதி கவனித்துவிட்டாள்….

தேவா அவனின் கன்னத்தை காட்டி எனக்கு ஒன்னு வேண்டும் என சைகையில் கேட்டாள்…. அவளோ அவனை கோவமாக முறைத்து விட்டு சாப்பிட அமர்ந்தாள்….

அவளின் பார்வை வேறு எங்கோ செல்கிறது என்று கவனித்த ரஞ்சி அப்போது தான் தேவாவை பார்த்தாள்…. உடனே பாரதியின் காதை பிடித்து திருகி “ஏய் எனக்கு குடுத்த முத்தம் எனக்கா இல்ல அவனுக்கா” என்று கேட்டாள்….

“ஐயோ அண்ணி சத்தியமா பாட்டிங்க கிட்ட இருந்து கூட்டிட்டு வந்து டிபன் தந்ததுக்கு தான் கிஸ் தந்தேன்… நான் வேற யாருக்கும் தரல….” என்று பாவமாக கூறினாள்….

“சரி சரி சாப்பிடு” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்…. அவள் உள்ளே சென்ற அடுத்த நிமிடம் தேவா பாரதியிடம் வந்து அமர்ந்தான்….

“ஹே ரதி என்ன முறைக்குற” என்று கேட்டான்…. அவளோ கடமையே கண்ணாக சாப்பிட்டு கொண்டு இருந்தாள்…. அவன் கடுப்பாகி தட்டை தன் பக்கம் இழுத்து கொண்டான்….

அவள் “அண்ணி” என்று கத்த ஆரம்பித்துவிட்டாள்…. அவளின் சத்தத்தில் உள்ளே சென்ற ரஞ்சி அடித்து பிடித்து அவர்கள் இருக்கு இடம் வந்தாள்…. “ஏய் என்ன ஆச்சு… எதுக்கு கத்துன…”  என்று கேட்டாள்…

அவள் எதுவும் பேசாமல் தேவாவிடம் இருக்கும் தட்டை காட்டினாள்… “டேய் அவளே இப்ப தான் சாப்பிடுற… சாப்பிடுற பிள்ளை கிட்ட இருந்து தட்டை ஏன் பிடிங்கி வெச்சு இருக்க குடு டா அவகிட்ட….” என்று கூறினாள்…

“அக்கா அவளை என்கிட்ட பேச சொல்லு… வந்ததுல இருந்து பாக்குறேன்…. என்னை கவனிக்கவே இல்ல… சாப்பிட்டு மட்டும் இருக்கா… அது தான் தட்டை வாங்கினேன்….”  என்று சிறு பிள்ளையாக கூறினான் தேவா….

ரஞ்சி அவளை பார்த்து “ஏன்டி அவன்கிட்ட பேச மாட்டிங்குற…”  என்று  பாரதியிடம் கேட்டாள்….

அவள் அமைதியாக இருந்தாள்… மீண்டும் ரஞ்சியே “என்னனு சொல்லு என்ன பண்ணான் அவன்” என்று கேட்டாள்….

“நான் இங்க ஊருக்கு வந்து எத்தனை நாள் ஆகுது” என்று சம்பந்தம் இல்லாமல் கேட்டாள் பாரதி….

இருந்தும் ரஞ்சி “மூனு நாள் ஆகுது… அதுக்கும் இவன் கூட பேசாம இருக்குறதுக்கும் என்னடி சம்பந்தம்….” என்று கேட்டாள்..

“நான் வந்து இன்னிக்கு மூணாவது நாள்…  ஆனா அதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை கூட பேசல… நான் மட்டும் ஏன் இப்ப பேசனும்” என்று கேட்டாள்….

இருவருக்குமான சண்டையில் தலையிடமால் “என்னமோ பண்ணுங்க… ஆனா பேசிடுங்க” என்று கூறி ரஞ்சி சென்றுவிட்டாள்….

ரஞ்சி சென்றதும் இருவரும் அமைதியாகவே இருந்தனர்…. பின் தேவா அவள் பக்கம் சென்று அமர்ந்து அவள் உண்டு கொண்டு இருந்த தட்டை வாங்கி அவளுக்கு ஊட்டி விட ஆரம்பித்தான்…

“சாரி ரதி நிஜமா வேலை… அது தான் பேச முடியல… உன்னை வேணும்னு அவாய்டு பண்ணல…. தௌசண்ட் டைம் சாரி….” என்று கூறினான்….

அவளும் சிறு பிள்ளை போல் உதட்டை பிதுக்கி கொண்டு “நீ ரெண்டு நாளா பேசாம எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா” என்று கேட்டாள்…

“சாரி ரதிமா…” என்று கூறினான்… அதே சமயம் அவளுக்கு முழுவதையும் ஊட்டி முடித்து இருந்தான்… அப்போது நிமிர்ந்த பாரதி தன்னை முறைத்து கொண்டு இருந்தவரை பார்த்து அதிர்ந்துவிட்டாள்… தேவாவும் அந்த நபரை பார்த்து அதிர்ந்து விட்டான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!