Skip to content
Post Views: 2,136
நயம் – 4
தேனியில் மேகமலை அருகே மலை முகட்டினை தொட்டு விடும் தூரத்தில் அழகே உருவாக கம்பீரமாக அமைந்த இரு வீடுகள் அருகருகே இருந்தன. இரு தளங்களை கொண்டு அமைந்த இல்லத்தின் நடுவே பாலம் . வெளி வாசலுக்கு செல்லாமல் ஒன்றிலிருந்தே மற்றொரு வீட்டிற்கு சென்று விடலாம்.
ஒன்றில் அச்சுதன் பிரமிளா அவன் பெற்றோருடன் வசித்தனர். மற்றதில் கணேஷ் பிரியா பெற்றோருடன் இவ்விரு குடும்பமும் இரு தலைமுறையாக நட்பாய் வாழ்கின்றனர்.
பிரமிளாவிற்கு அரவிந்த் மட்டுமே ,. பிரியாவிற்கு பவித்ரா பிறந்து, தற்போது வயிற்றில் மற்றொரு மகவை சுமந்து கொண்டுள்ளார். அரவிந்த் எப்போதும் பிரியாவுடனே சுற்றிக்கொண்டு இருப்பான். சேட்டைகள் அதிகம். மூன்று வயது தான் ஆகிறது. ஆனால் அவ்வளவு வாய். ஓடிக் கொண்டே இருப்பான். LKG தான் படிக்கின்றான். அதற்கே அவ்வளவு அலப்பறை செய்வான். கேப்பிடல் ஸ்மால் லெட்டர் எழுத வேண்டும் என்றால் கடுப்பாய் நிற்பான். A எழுத சொன்னால் துணி மாட்டும் கிளிப்பை கொண்டு வந்து இது தான் A என்பான். B என்றால் அதன் நடுவில் உள்ள இரும்பு கம்பினை வளைத்து காட்டுவான். C என்றால் அதன் நடுமுனையை ஒரு புறம் மறைப்பான். D என்றால் எதிர்புறம் காட்டுவான். E என்றால் என்ன என சொல்ல முடியாது முழிப்பவனை தான் தாஜா செய்து எழுத வைக்க வேண்டும். அத்தையின் வயிற்று பாப்பா அவனுக்கு தான் என்பான். அவன் மட்டுமே தான் முத்தமிட வேண்டும். சாப்பிட வைக்க வேண்டும் என்று பிறக்கும் முன்பே பட்டா எழுதி வைத்து விட்டான்.
Advertisement
அவன் ஆசைக்கேற்ப அழகான பெண் குழந்தை தான் பிறந்தது. அபிநயா என பெயர் வைத்ததும் அவனே . உறங்கும் நேரம் மட்டுமே தன் வீட்டில் இருப்பான். அப்போதும் சில இரவுகளில் தூக்கத்தில் எழுந்து வந்து அபி அபி என்று கதவை தட்டிக் கொண்டு நிற்பான்.
ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. அவனின் அபி இப்போது கொழுகொழு கன்னங்களோடு, கொஞ்சும் கண்கள் அபிநயம் புரிய அவனுடன் விளையாடும் குட்டி தோழி. அவன் அன்புக்கு அவளும் சளைத்தவள் அல்ல. க்ரிஷ் க்ரிஷ் என்றே வாய் மூடாது பேசுவாள். ஊஞ்சல் விளையாடுவது என்றால் இருவருக்கும் உயிர் . சாப்பிடுவது, படிப்பது, விளையாடுவது எல்லாமே அதில் தான்.
இப்படியான மகிழ்ச்சியான பொழுதுகளில் அவர்களின் ஏற்றுமதி தொழில் விரிவடைந்து வெளிநாட்டிலும் கிளை பரப்பி நின்றது. அவ்வப்போது சென்று பார்த்து கொண்டு இருந்தாலும் ஒரு கட்டத்தில் யாரேனும் ஒருவர் அங்கே இருக்க வேண்டியே கட்டாயம். ஆதலால் அரவிந்த் குடும்பம் லண்டன் சென்றது.
Advertisement
குடும்பம் பிரிய நேர்ந்ததை விட இவர்களின் அழுகையை தான் யாராலும் அடக்க முடியவில்லை. விடாத காய்ச்சலில் மருத்துவமனை சேர்க்க வேண்டிய சூழல். என்ன செய்வது என்று பிரியா தவித்துவிட்டார். நல்ல வேலையாக அவன் பேச்சுக்கள், பாடல்கள் என சிலவற்றை ரெக்கார்டு செய்து வைத்து இருந்தார். அவை தான் அவர்களுக்கு கைகொடுத்தது. மகளை மடியில் அமர்த்தி அவற்றை கேட்க வைத்து கொஞ்சம் நாளில் வந்து விடுவான். அழக்கூடாது என அனுதினமும் அவளிடம் மன்றாடி, பல்வேறு வேடிக்கைகள் , பார்க் முதலிய குழந்தைகள் விளையாடும் இடங்களுக்கு சென்று அவளை சிறிது சிறிதாக மாற்றினார். அரவிந்த் பற்றிய பேச்சை இவள் முன் எடுத்தால் அழுவாள் என அவள் உறங்கிய பிறகே வீட்டினர் அவனிடம் பேசுவது வாடிக்கையானது.
Advertisement
அவன் கொஞ்சம் பெரிய பையன் என்பதால் முதலில் முரண்டு பிடித்தாலும் பின்பு தன்னை மாற்றிக் கொண்டான். இதோ காலப் போக்கில் இருவரையும் விதி பிரித்து சதி செய்து வருடங்கள் ஓடிவிட்டன.
அரவிந்த் MBA HR முடித்து லண்டனில் உள்ள தொழில்களை பார்த்து கொள்கிறான். இந்திய பண்பாடு பழக்க வழக்கத்தை கடைப்பிடித்து கட்டிளம் காளையாக நிற்கிறான். பல தோழர்கள் இருந்தாலும் யாரிடமும் நெருங்கி பழகமாட்டான். தாமரை இலை நீர் போல தான் அவன் நட்பு.
எந்த பெண்ணும் அவனை கவர்ந்ததில்லை. அரைகுறை ஆடைகளோடு குமரி பெண்கள் சுற்றி வந்தாலும் கண்கள் அவர்களை தீண்டாது. இன்னும் அவன் சுவாசம் எங்கிலும் அபியே . அவனிடம் பேச விடுவதில்லை என்றாலும் அவள் பற்றிய அனைத்து விஷயங்களும் இவன் விரல் நுனியில் இருக்கும். அவளின் படிப்பு, எல்லாமே இவன் சொன்னபடி தான் நடக்கும். பிரியாவின் ஏக மருமகனாய் எல்லாமே அவனிடம் கேட்டுத்தான் செய்வார்.
Advertisement
பவித்ரா திருமணம் நிகழ்ந்த போது கூட அவனால் வர இயலவில்லை. செமஸ்டர் நடந்து கொண்டு இருந்ததால் அவனை விடுத்து மற்றோரே வந்தனர். குடும்பத்தோடு ஒட்டி உரையாடுபவன் மனம் கொண்டவளிடம் மட்டும் பேச மாட்டான். அவன் மனதில் எடுத்த தீர்க்கமான முடிவு அது தான். அவளை சந்திக்கும் தருணம் தன் இல்லாள் ஆக மனம் முடித்து, கூட்டி வரவேண்டும். அவளை பிரியும் நிலையை இனியும் அவனால் தாங்க முடியாது. ஆதலால் மனதில் மெருகேற்றி கொண்ட விஷயமாய் கணவனாய் தான் அவர் முன் நிற்க வேண்டும் என முடிவெடுத்து அதனை வீட்டினரிடம் கூறி சம்மதம் பெற்று விட்டான்.
பொன்னயே நிகர்த்த மேனி, நின்னையே நிகர்த்த சாயல்!..
பின்னையே,, நித்ய கன்னியே! அபிம்மா!…..
மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ!
கண் பாராயோ! வந்து சேராயோ!… அபிம்மா! ……
யாவுமே சுகமினிகோர் ஈசனாம் எனக்கும் தோற்றம்!
மேவுமே!, இங்கு யாவுமே அபிம்மா…..
நின்னயே ரதி என்று நினைகிறேனடி அபிம்மா!
தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் !… அபிம்மா!….
பாரதியின் கவிதைகள் அவனுக்கு மிகவும் பிடிக்கும் . ஏற்ற இறக்கத்துடன் அதனை பாடலாகவும் பாடுவான். வார்த்தை ஜாலத்துடன் எழுதுவதில் அவரை மிஞ்ச ஆள் யார் உள்ளனர் இங்கு. அவரும் காணாமல் கண்ணம்மாவை கொஞ்சும் கவியன்றோ அவனை போல, ஆதலால் ரசித்து பாடுவான்.
தன் காதலியை எண்ணி கவி பாடுகையில் மட்டும் கண்ணம்மா அவனின் அபிம்மாவாக மாறி விடுவாள்.
அவன் இங்கே ஊருக்கு வரும் போது நிச்சயம் மட்டுமே முடித்து விட்டு சென்று விட்டு, பின் அடுத்த மாதம் தான் திருமணம் என வீட்டினர் முடிவு செய்து இருந்தனர். அவளை காணும் வரை அவனும் அந்த முடிவில் தான் இருந்தான். எப்போது அவள் தன் வாய்மொழி வாயிலாக கிருஷ்யை தான் திருமணம் முடிப்பேன் என கூறினாலோ அன்றே அவளும் தன்னை காதலிக்கின்றாள் என்பதை உணர்ந்து கொண்டான்.
தன் பெற்றோரோடு கலந்துரையாடி உடனே திருமணம் என்பதையும் முடிவெடுத்து விட்டான். இரவு முழுவதும் கடந்த கால நினைவுகளில் உலன்றவன் காலையில் பேசி சம்மதம் வாங்கி விட்டான். அதனால் தான் காலையில் பவியின் கணவனோடு இணைந்து தங்கள் திருமண மண்டபம் எந்த முகூர்த்த நாளில் பிரீயாக உள்ளது என்பதையும் அறிந்து கொண்டு தன் அத்தையை காண வந்து விட்டான்.
நாளை என்ன செய்ய காத்துள்ளனர் என்பதை அடுத்த பதிவில் காண்போம்.
*************
“என் ரசனையின்
தொடக்க புள்ளியும்
முற்றுப்புள்ளியும்
அவள்தான் என்பது
அவளுக்கே தெரியாத போது
ரசிக்கும் என்னையா
ரசிக்க போகின்றாள்.”
error: Content is protected !!