Skip to content
Post Views: 3,207

அருள் பிறந்த பிறகு சாமியப்பனுக்கு கடையில் வியாபாரம் இன்னும் அதிகம் ஆகியது…. லாபம் கூடியது….. அதனால் கடையை இன்னும் நன்றாக விரிவு செய்தனர்…. பக்கத்து ஊரில் கூட ஒரு சிறிய கடையை ஆரம்பித்தனர்….
Advertisement
அருள் அனைவருடைய நேரத்தையும் தன்னிடம் திருப்பி இருந்தான்… அவனை தூக்கிவிட்டால் இறக்கிவிட யாருக்கும் மனதே வராது… அருள் பிறந்தவுடன் திலகா அடிக்கடி வீட்டுக்கு வந்துவிட்டு செல்வார்….
Advertisement
Advertisement
அருளும் திலகாவிடம் நன்றாக ஒட்டிக்கொண்டான்… அருள் பிறந்து ஐந்து மாதம் ஆகி இருந்தது.. தாயாம்மாளே பத்மினியிடம் “மருமகளே உன் அண்ணனுக்கு கல்யாணம் பண்ற எண்ணமே இல்லையா உனக்கு…. அவனுக்கும் வயசு ஆகிடிச்சுல ” என்று கேட்டார்…
Advertisement
“அத்த நானும் அண்ணன் கிட்ட கேட்டுட்டே இருக்கேன் ஆனா பிடியே குடுக்க மாட்டிங்குறாரு… நீங்களாச்சும் பேசி பாருங்க” என்று கவலையாக கூறினார்….
” உன் அண்ணன் கிட்ட கல்யாணம் பண்ணிக்கோனு கேட்குறதை விட்டுட்டு இது தான் பொண்ணு சொல்லு… ” என்று கூறினார்
“ஆனா பொண்ணு பாக்கணுமே அத்த… நீங்களே ஒரு நல்ல பொண்ணா பாருங்க” என்று கூறினாள்…
“நான் ஒரு பொண்ணை நினச்சேன்… உனக்கு பிடிச்சி இருந்தா அவங்க வீட்டுல பேசலாம்” என்று கூறினார்….
“நீங்க நல்ல பொண்ணா தான் அத்த பாத்து இருப்பிங்க… எனக்கு சம்மதம்” என்று கூறினார் பத்மினி..
தாயம்மாள் பத்மினியிடம் “பொண்ணு வேற யாருமில்ல திலகா தான்…. அவங்க வீட்டுல நாளைக்கே பேசலாமா…. நாளைக்கு நல்ல நாள் தான்” என்று கேட்டார்…
“எனக்கு பரிபூரண சம்மதம் அத்த…. அண்ணன் கிட்ட நான் பேசுக்கிறேன் நீங்க அவங்க வீட்டுல பேசுங்க ” என்று கூறினார்…
அதன்பிறகு கந்தனிடம் பேசி திலகா வீட்டில் பேசி இரு குடும்பமும் சம்மதம் கூறி திருமண வேலை சிறப்பாக நடைபெற்றது…
அடுத்த இரண்டு மாதத்தில் திருமணமும் நல்ல விதமாக நடைபெற்றது…. இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக பழகி இல்வாழக்கையில் இணைந்தனர்…
அடுத்த நான்கு வருடத்தில் பத்மினி மீண்டும் கர்ப்பம் தரித்தார்…. அவர் மீண்டும் கர்ப்பம் ஆனதும் திலகாவை அனைவரும் கேட்டனர்… அவரோ எனக்கு அருள் இருக்கான் என்று கூறிவிடுவார்…
ஆனால் அடுத்த இரண்டு மாதத்தில் திலகாவும் கர்ப்பமாகினார்…. அருள் எப்போதும் திலகா அருகில் “என் பாப்பா என் பாப்பா… எனக்கு மட்டும் தான்” என்று கூறுவான்…. திலகாவும் எப்போதும் அவனிடம் “பாப்பா உனக்கு தான் மொழி… நீ தான் பாப்பாவை பத்திரமா பாத்துக்கோ” என்று கூறுவார்….
முதலில் பத்மினிக்கு ரஞ்சனி பிறக்க இரண்டு மாதத்தில் அடுத்து திலகாவுக்கு வானதி தேவி பிறந்தாள்… ஆம் வானதி பத்மினிக்கு அண்ணன் மகள் தான்…..
இதற்கிடையில் நாயகிக்கு தேவிகா பிறந்து இருந்தாள்… ஆனால் தாயம்மாளுக்கு தெரிந்தும் நாயகியை காண செல்லவே இல்லை…. அதனால் நாயகி இன்னும் வன்மத்தை வளர்த்து கொண்டார்…
ரஞ்சனி தன் ஒரு வயதில் பேச ஆரம்பித்து இருந்தாள்… ஆனால் வானதி பேசவே இல்லை… சரி இரண்டு வயது வரை பாக்கலாம் என இருந்தனர்… ஆனால் வானதி பேசவே இல்லை… பயந்து மருத்துமனையில் காட்டினர்… மருத்துவரும் அனைத்து ஸ்கேன் எடுத்து பார்த்துவிட்டு “ஐ ஆம் சாரி… உங்க பொண்ணால பேச முடியாது… ” என்று கூறிவிட்டார்…
கந்தனுக்கும் திலகாவுக்கும் இடி விழுந்தது போல் ஆகியது…. பத்மினி தான் தேற்றினார்…. முன்பு பார்த்ததை விட இன்னும் வானதியை நன்றாக பார்த்து கொண்டனர்…
அடுத்த இரண்டு வருடத்தில் தேவதரண் பிறந்தான் சாமியப்பன் பத்மினி தம்பதியருக்கு…. மீண்டும் யுகேந்திரன் கடைக்குட்டியாக அடுத்த இரு வருடத்தில் பிறந்தான்….
வருடங்கள் யாருக்கும் காத்திராமல் சென்றது… அருள் வானதியின் காதலும் மரமாக வளர்ந்தது… ஆனால் அந்த நேசம் யாருக்கும் தெரியாது… சிறியவர்களுக்கு அனைவருக்கும் தெரியும்…. அதே போல் ரஞ்சனி வேலன் (சாமியப்பனின் நண்பன் மகன்) காதலும் வளர்ந்தது…..
இவர்களின் வளர்ச்சியை பிடிக்காமல் நாயகி தான் கோவத்தில் இருந்தார்… அதை அணையவிடாமல் கண்ணப்பன் எரிய விட்டுக்கொண்டே இருந்தார்…. அவரும் அதற்கான ஏற்பாட்டை செய்து கொண்டு இருந்தார்….
அருளும் வேலவனும் கல்லூரியின் கடைசி வருடம் படித்து கொண்டு இருக்கும் போது அந்த துயர சம்பவம் நடந்தது…. அன்று சாமியப்பன் மட்டும் கடையில் இருக்க கடையை எரிக்க வந்த கண்ணப்பன் சாமியப்பன் உள்ளே இருப்பது தெரியாமல் அவரோடு சேர்த்து கடையை எரித்து இருந்தார்…
சாமியப்பன் துடி துடித்து சம்பவ இடத்துலேயே இறந்து இருந்தார்…. கந்தன் திலகா இருவரும் விஷயம் அறிந்து வேறு ஊருக்கு சென்று இருந்தவர்கள் வேகமாக வர எதிரே வந்த லாரி மோதி இருவரும் அங்கேயே இறந்து இருந்தனர்….
மூவரின் இறப்பில் குடும்பமே சோகத்தில் மூழ்கிவிட்டனர்…. பத்மினி தான் மிகவும் துவண்டு போனார்… கணவனின் இறப்பில் துயரில் இருந்தவருக்கு தன்னை தந்தையை போல் சீராட்டி வளர்த்த அண்ணன் இறந்ததில் மயங்கி கீழே விழுந்துவிட்டார்….
மூவருக்கும் அருளே இறுதி காரியமும் செய்தான்…. மூவரும் இறந்து இருபது நாட்கள் சென்று இருக்க சாமியப்பன் அதிக கடன் வாங்கியுள்ளார்… அதனை கட்டுங்கள்…. இல்லை என்றால் வீட்டை எங்களுக்கு எழுதி வைத்தாக வேண்டும் என்று கண்டிப்பாக கூறிவிட்டனர்….
சாமியப்பனின் நண்பன் (வேலுவின் தந்தை ) அவர்களிடம் “அவன் தான் கடன் வாங்கினான்னு சொல்றதுக்கு உங்க கிட்ட என்ன ஆதாரம் இருக்கு” என்று கேட்டார்…
“ஆதாரம் தானு அவரு கடன் வாங்கினதுக்கு பத்திரத்துல கை எழுத்து போட்டு குடுத்து இருக்காரு பாருங்க” என்று சாமியப்பன் கை எழுத்து போட்ட பாத்திரத்தை எடுத்து காட்டினார்கள்….
ஆனால் சாமியப்பன் கடன் வாங்கினேன் என்று பத்மினியிடமும் கூறவில்லை… வேலுவின் அப்பாவிடமும் கூறவில்லை… அதனால் அவர்களுக்கு சந்தேகம் வந்தது…. ஆனால் அது அவரின் கையெழுத்து தான்…. என்ன செய்வதேன்றே தெரியாத நிலை…. அந்த ஒரு செமஸ்டரை எழுதாமல் வேலைக்கு செல்கிறேன் என்று கூறிய அருளை வானதி தான் சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள்…
கடன் குடுத்தவர்கள் மீண்டும் மீண்டும் கேட்க ஆரம்பித்ததால் வேறு வழி இன்றி அவர்கள் இருந்த பெரிய வீடு அது மட்டும் இல்லாமல் இரண்டு மூன்று வீடு அவர் வாங்கிய பத்து ஏக்கர் நிலம் அனைத்தையும் தந்துவிட்டனர் கடனுக்கு இடாக…
அனைத்து சொத்தையும் கடன் தந்தவர்களுக்கு தந்துவிட்டு இவர்கள் ஒரு சிறிய வீட்டில் தங்கிகொண்டனர்… அதாவது பத்மினி திருமணத்திற்கு முன் இருந்த வீடு….
வானதியும் இவர்களுடன் தான் இருந்தாள்…. சாமியப்பன் இறப்பிற்கு பின் தாயம்மாள் மிகவும் ஒடிந்து போய் விட்டார்…. பத்மினியும் மிகவும் சோகத்தில் இருந்தார்…
அதை பயன்படுத்தி கொண்டு நாயகி கொஞ்சம் கொஞ்சமாக வீட்டிற்குள் வர ஆரம்பித்தார்…. அவர் முதலில் வந்து முதலில் செய்தது வானதியை வீட்டை விட்டு அனுப்பியது தான்… பத்மினி உணர்வதற்குள் வானதி மீது தப்பான எண்ணத்தை உருவாக்கி அவரை வைத்தே அனுப்பி வைத்துவிட்டார்…. தாயம்மாள் முதல் யுகேந்திரன் வரை யார் கூறியும் பத்மினி கேட்கவில்லை…. அந்த அளவிற்கு பத்மினியை மாற்றி இருந்தார்….
வானதி தனியாக இருப்பதால் தாயம்மாள் அவளுடன் சென்று தங்கிகொண்டார்… பத்மினி ஒன்றை கவனிக்க மறந்துவிட்டார்…. நாயகியும் அவர் குடும்பமும் தற்போது சாமியப்பன் கடனுக்கு இடாக குடுத்த வீட்டில் தான் இருக்கின்றனர்….
முதலில் சாமியப்பன் கடன் வாங்கவே இல்லை… அதை போலியாக உருவாக்கியவர் கண்ணப்பன்… பத்மினி இதை கவனிக்கவில்லை… மற்றவர்கள் கவனித்துவிட்டனர்… பத்மினி யார் சொல்வதையும் கேட்கவில்லை….
அருள் இதை எதிர்த்து கோர்ட்டில் கேஸ் போட்டான்….. முதலில் போலீஸ் அதை ஏற்க மறுத்தவர்கள் பின் அவனின் உறுதியிலும் கண்ணப்பன் மேல் ஏற்பட்ட சந்தேகத்தால் ஏற்றுக்கொண்டனர்….. ஆனால் அவருக்கு எதிரான ஆதாரம் கிடைக்கவே இல்லை…..
அருள் கல்லூரியும் முடித்து இருந்தான்… அவனுக்கு துபாய்க்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது….. ஆனால் பணம் தான் இல்லை…. என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்கும் போது பத்மினி அவனிடம் “மாமா கிட்ட கேளு டா… அவர் தருவாரு” …. என்று கூறினார்..
அருள் அவரிடம் எதுவும் பேசவில்லை…. அருள் அவர்கள் ஊரில் இருக்கும் பெரிய மரத்தடியில் உட்கார்ந்து யோசித்து கொண்டு இருக்க வானதி யாரோ இருக்கிறார்களா என்று பார்த்து கொண்டே அவன் முன் வந்து நின்றாள்….
அவளை பார்த்தவுடன் முயன்று புன்னகையை வர வைத்து கொண்டு “என்ன தேவிமா இங்க வந்து இருக்க… கையில என்ன வெச்சு இருக்க… நீ மட்டும் ஏன் தனியா வந்து இருக்க…” என்று கேள்வி கேட்டுக்கொண்டே போனான்…
அவனின் வாயை தன் கையால் பொற்றி அமைதியாக இருக்குமாறு சைகையில் கூறிவிட்டு அவனிடம் தான் கொண்டு வந்த பையை நீட்டினாள்…. அவன் சோகமாக இருக்கும் போது மட்டும் தான் அவளை தேவிமா அல்லது குட்டிமா என்று அழைப்பான்… மற்ற நேரத்தில் டாம் அன்ட் ஜெர்ரி போல் தான் இருவரும் இருப்பர்… பார்ப்பவர்கள் யாரும் இவர்களை காதலர்கள் என்று சொல்ல மாட்டார்கள்…..
அவள் நீட்டிய பையை பார்த்து அதிர்ந்து “குட்டிமா என்ன இது… நகை ஏன் எடுத்துட்டு வந்த… இது உனக்காக அத்த மாமா சேர்த்து வெச்சது… இப்போ இதை ஏன் என்கிட்ட தர… ” என்று கேட்டான்….
அவளோ அவனின் சட்டைப்பையில் இருந்து அவனின் அலைபேசியை எடுத்து தான் சொல்ல வேண்டியதை தட்டச்சு செய்ய ஆரம்பித்தாள்….
” மாமா அந்த நகையை வித்து இல்லனா அடகு வெச்சு துபாய் போ…. ரெண்டு வருஷம் நல்லா சம்பாதி…. அதுக்கு அப்பறம் எனக்கு நகை வாங்கி குடு…. எனக்காக சேர்த்து வெச்சாலும் அது உனக்கு தானு வர போகுது.. நீ தானு என்னை கல்யாணம் பண்ண போற… நீ முதல்ல துபாய் போ… அதுக்கு அப்பறம் எதுவா இருந்தாலும் பேசிக்கலாம் ” என்று தட்டச்சுசெய்து அவனிடம் காட்டினாள்…
படித்தவுடன் அவளின் மாமன் உருகிவிட்டான்…. அவளை தன்னுடன் சேர்த்து அணைத்து கொண்டு உச்சி முத்தமிட்டான்…. “எனக்கு தப்புனு தெரியுது குட்டிமா… நீயும் சின்ன பொண்ணு தான்… ஆனா சத்தியமா என்னால முடியல…. சீக்கிரம் முடிடா உன் ட்வெல்த் எக்ஸாமை… என்ன காலேஜ் படிக்கணும்னு தோணுதோ நீ படி டா… நீ எப்படிடா என்னை இப்படி லவ் பண்ற.. நீ பண்ற அளவுக்கு என்னால பண்ண முடியுமா தெரியலடா…. ” என்று கூறி மீண்டும் அணைத்து கொண்டான்..
அதை இரண்டு ஜோடி கண்கள் பார்த்தது.. ஒரு ஜோடி கண்கள் சந்தோஷத்தில் பார்த்தால் மற்றோரு ஜோடி கண் கோவமாய் பார்த்தது…
அதை கோவமாய் பார்த்த கண்கள் நாயகி தான்… அருள் அந்த நகையை வைத்து பணம் ஏற்பாடு செய்து துபாய் செல்வதற்காக ஏற்பாடு செய்துவிட்டான்…. அவன் இன்னும் இரண்டு நாட்களில் கிளம்ப வேண்டும் துபாய்க்கு….
அவன் செய்த ஒரே தவறு நகை தேவி தந்தது என கூறிவிட்டான்… நாயகி அதை தேவிகா தந்தது என நம்ப வைத்துவிட்டார்….
இரண்டு நாட்களில் துபாயும் சென்று விட்டான்….. நான்கு வருட காண்டாரக்ட்டில் சென்று இருந்தான் வேலைக்கு… நான்கு வருடம் சம்பாதித்த நகையில் தேவிக்கு வாங்கி குடு ம்மா என்று பத்மினிக்கு அனுப்பினால் அவர் தேவிகாவுக்கு வாங்கி குவித்தார்… நான்கு வருடத்தில் நாயகியின் குடும்பம் சொல்வது தான் நடக்கும் என்ற அளவுக்கு மாறிவிட்டது….
இந்த நான்கு வருடமும் தாயம்மாள் இங்கு வீட்டுக்கு வரவே இல்லை வானதியுடனே தங்கிக்கொண்டார்…. ரஞ்சனி வானதி இருவரும் கல்லூரி முடித்தவுடன் அருள் வராமலே அவனின் சம்மதத்துடன் ரஞ்சனி வீரவேலன் கல்யாணம் நடைபெற்றது…..
நான்கு வருட காண்டாரக்ட் முடிந்தவுடன் அவன் இந்தியா வரும் அடுத்த நாள் அவனின் சம்மதம் இல்லாமலே கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டது… அவனுக்கு இந்தியா வருவதற்கு முதல் நாள் உனக்கு தேவியுடன் திருமணம் என்று மட்டும் பத்மினியால் கூறப்பட்டது…..
error: Content is protected !!