Skip to content
Post Views: 827
குட் லக் சுந்தரி 1
லட்சுமி விலாஸ் என்ற பெயர் பலகையுடன் கொண்ட வீடு கீழே பழமையான வீடாக காணப்பட்டாலும் அதை கொஞ்சம் மாற்றி புதுமையும் புகுத்தியிருதனர்.அந்த வீட்டின் மாடியில் ஒரு அறையுடன் கூடிய வீடும் இருக்க அங்கு சமையலறையில் ஒரு புறம் குக்கரும்,ஒரு புறம் இட்லியும் சேர்ந்தே கருகி கொண்டிருந்தது.அதை கவனிக்க வேண்டியவளோ,
“Monica Bellucci எறங்கி வந்தாச்சி
கடலே கொந்தளிக்கும் சுனாமியே உண்டாச்சு
Monica Bellucci ஏத்திட்டா energy
தலையே சுத்தவைக்கும் சூறாவளி பொண்ணாச்சு
பட்டுனு பாத்தாலே pulse ஏத்தும் body
கொடுவா மீனெல்லாம் கூத்தாடுமே
இரவ colour ஆக்கும் jalebi lady
Salt’ம் நான் தொட்டா sweet ஆகுமே……” தொலைகாட்சியில் தனக்கு பிடித்தமான பாடலுக்கு குதித்து கொண்டிருந்தாள் (ஆடிக் கொண்டிருந்தாள்).
Advertisement
“மோனிகா மோனிகா…..”என்று அவளின் குரல் வீட்டில் அலறலாக எதிரொலிக்க,
“யாருடா அது பாட சொன்னா கர்ண கொடூரமா கத்துறது…”
Advertisement
“அது நீ தான் எரும…..”என்று அவளை அடிக்க தொடங்கினார் வசந்தி.
Advertisement
“ஆஆஅம்மா….எதுக்குமா என்னை அடிக்கிற….”என்று முதுகை தேய்த்தபடி அவள் வீட்டை விட்டு வெளியில் ஓட,
“அப்படியே எங்காயாவது போயிடு எரும மாடு….வீட்டுக்குள்ள வந்த காலை உடைச்சிருவேன்….”என்று உச்ச ஸ்தாயிலில் கத்த,
“எதுக்கு வசந்தி இப்ப கத்துற….பாடுறது ஒரு குத்தமா….”என்று அன்னையிடம் மேலும் இரண்டு அடிகளை வாங்கியவள்,
Advertisement
“என்னை அடிச்சிட்டல்ல நான் இனி வரவேமாட்டேன்….போ நான் போறேன்….”என்றுவிட்டு செல்ல,
“சொல்லாத அதை செய் முதல்ல….”என்று அவர் கத்திவிட்டு செல்ல,
“கொஞ்சம் கூட மரியாதையே இல்லை இந்த வீட்ல…..”என்று அழுவது போல் பாசாங்கு செய்து கொண்டே மாடியிலிருந்து இறங்கியவள் கீழே இருக்கும் வீட்டுக்குள் நுழைந்துவிட்டாள்.
“தாத்தா….இந்த வசந்தி….”என்று ஆரம்பிக்கும் முன்னே,
“இந்தா வந்துட்டாள்ல….இவளுக்கும் வேற வேலையில்லை இவ அம்மாக்கும் வேற வேலையில்ல….இவங்களை இந்த வீட்டை விட்டு அனுப்புங்கனு நானும் எவ்வளவோ சொல்லிட்டேன் நீங்க தான் கேட்க மாட்டேங்குறீங்க….காலையில நிம்மதியா இருக்க முடியுதா இந்த வீட்டுல….”என்று லட்சுமி பாட்டி திட்டிக் கொண்டிருக்க,அவரின் கணவர் சிவநேசனோ இது எதையும் காதில் வாங்காமல் சாப்பாட்டில் கவனமாக இருந்தார்.இதை அனைத்தையும் காதில் வாங்கியபடி வந்த சுந்தரி,
“என்ன சாப்பாடு தாத்தா….”என்று கேட்டவாரே ஒரு தட்டை எடுத்துக் கொண்டு அமர,
“இட்லியும்,சாம்பாரும்….”என்றுவிட்டு அவளுக்கும் தட்டில் பரிமாற,
“ஏங்க உங்க கிட்ட நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன்….நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க…..”என்று லட்சுமி கேட்க,
“ச்சு லட்சுமி சும்மா தொணதொணக்காம இட்லி எடுத்துட்டு வா….”என்றவர் சுந்தரியின் தட்டில் இன்னும் இரண்டு இட்லிகளை வைத்தார்.
“ஆமா லச்சு…..எனக்கு பயங்கர பசி…அதனால ஒரு தோசையும் போட்டு எடுத்துட்டு வா…”என்றவளின் முன் ஒரு டம்பளர் பறந்து வந்து விழ,
“ஆத்தி என்ன தாத்தா லச்சு ரொம்ப கோபமா இருக்கு….”என்ற சுந்தரிக்கு எதிரே இருக்கும் ஒரு கிப்ட் பார்சலை காமித்தார் சிவநேசன்.அதை பார்த்தவள்,
“பெரிய கிப்டா இருக்கு….யாருக்கு உனக்கா இல்லை லச்சுக்கா….”என்று கேட்டபடி அதனை தொட போக,அடுத்த டம்பளர் அவளின் கையை பதம் பார்க்க,
“ஆஆஆ…..கை போச்சே….லச்சு வர வர நீ ரொம்ப வைலென்டா பிகேவ் பண்ணுற…..”என்று கூறிக் கொண்டே மீண்டும் சாப்பிட தொடங்க,
“அதை தொட்ட உன்னை கொன்னுடுவேன் பார்த்துக்கோ….இந்தா நீ கேட்ட தோசை சாப்பிட்டு கிளம்பு….”என்றவர் கணவரை முடிந்த மட்டும் முறைத்துவிட்டு சென்றுவிட,
“ஆகா தாத்தா இன்னைக்கு இடியும் மழையும் கெவியா இருக்கும் போலவே எதுக்கும் நீயும் சீக்கிரம் கிளம்பிடு…..இல்லை தக்காளி சட்னி தான் வரும்…..”என்றுவிட்டு லட்சுமி கொடுத்த தோசையை வாயில் திணிக்க,
“இது எப்போதும் நடக்குறது தான….எனக்கு இதெல்லாம் பழகிடுச்சுடா……அம்மாவை ஏன் நீ படுத்துற…..அவளே முடியாதவ…..”
“ம்ம் இப்படி சொல்லி சொல்லியே என் வாயை அடைச்சுடு….ஆனா பாரு என் மீ எனக்கு சாப்பாடு கொடுக்கமாட்டேன்னு சொல்லி என்னை வெளில அனுப்பிட்டு…..”என்று கூறியவரே மீதம் இருந்த சாம்பாரை வழித்து வாயில் வைக்கும் போது,அவளின் முதுகில் தொடர் அடிகள் விழ,
“ஆஆஆ…ம்மீ…..அடிக்காத…..”என்று சுந்தரி கத்த,
“அடிக்காத வசந்திமா…..”என்றாரபடி சிவநேசன் குறுக்கே கைகளை கொண்டுவந்தார்.
“நல்லா கேளு தாத்தா சாப்பிட்டு இருக்குற பிள்ளையை அடிக்கிறாங்க….பாரு இவங்க அடிச்சதுல திரும்பியும் பசிக்குது…..லச்சு இன்னும் ஒரு தோசை….”என்று சமையல் அறையை நோக்கி கத்த,கையில் கத்தியுடன் லட்சுமி என்ன என்று கேட்டபடி வெளியில் வந்தார்.அவரையும் அவர் கையில் இருக்கும் கத்தியையும் பார்த்தவள்,
“இல்ல வேண்டாம் வயிறு புல்…..”என்றுவிட்டு எழ இன்னும் இரண்டு மொத்து மொத்தினார் வசந்தி,
“வசந்திமா விடுமா….. பிள்ளையை அடிக்காதனு உன்கிட்ட பல தடவை சொல்லிட்டேன்…….”என்றார் கோபாமாக,
“நீங்க குறுக்க வராதீங்கப்பா….எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம் தான் இவ இப்படி இருக்கா….ஏன்டீ அங்க என் சாப்பாட்டையும் சேர்த்து நாசம் பண்ணிட்டு…..இங்க வந்துட்டியா….உன்னை….”என்று அவர் மேலும் அடிக்க வர,
“பேட் லக் சுந்தரி உனக்கு….ஓடிடு….”என்றுவிட்டு அந்த இடத்தை விட்டு அவள் சிட்டாக பறந்துவிட,அவளின் பின்னே செல்ல இருந்த வசந்தியின் கைகளை பிடித்து அமர வைத்த சிவநேசன்,
“வசந்தி உட்காரு….”என்று அழுத்தமாக கூற,
“ப்பா….”என்று ஏதோ கூற வந்தவரை தடுத்தவர் சாப்பாட்டு தட்டை எடுத்து வைத்து அதில் மூன்று இட்லியை எடுத்து வைத்துவிட்டு,
“முதல்ல சாப்பிடு அப்புறம் பேசலாம்….”என்று கூறிவிட அவரின் குரலில் இருந்தே அவரின் கோபத்தை கண்டு கொண்டவர் பின் எதுவும் பேசவில்லை,
“லட்சுமி அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க வா நீயும் வந்து உட்காரு…..”என்று அதட்டல் போட,
“இதுக்கெல்லாம் அவ பயப்படுவா நான் பயப்பட மாட்டேன்….”என்றவரின் குரல் சமையல் அறையிலிருந்தே வர,
“சரி நீ வரவேண்டாம்…..”என்றுவிட்டு அவர் எழ,
“ப்பா….”என்று வசந்தி பரிதவித்து பார்க்க,
“வந்துட்டேன் உட்காருங்க……”என்று லட்சுமி அவரின் அருகில் அமர,
“உட்கார்ந்தா ஆச்சா சாப்பிடு….”என்று அவருக்கு இட்லி எடுத்து வைக்க,
“எல்லாம் உங்க இஷ்டம் தான் இல்ல….”என்றவரின் குரல் கரகரப்பாக ஒலிக்க,சிவநேசன் எதுவும் பேசவில்லை அமைதியாக மனைவிக்கு பரிமாறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.அவரையே பார்த்துக் கொண்டிருந்தவரின் கண்களிலிருந்து கண்ணீர் உகுந்துவிட,
“ம்மா….”என்று வசந்தி அவரின் கைகளை பிடிக்க,
“ச்சு போடீ….என்னால முடியலை…இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி தனியா நாங்க கஷ்படுறது….ஏன் இந்த மனுஷனுக்கு புரிய மாட்டேங்குது….அப்படி என்ன பிள்ளையைவிட இந்த வீடும் அந்த தோப்பும் பெருசா போச்சா….”அவர் தன் ஆதங்கத்தை கொட்ட,
“ஆமா பெருசு தான்….நான் உருவாக்கின இடம் இது அதை தூக்கி கொடுத்துட்டு ஏதுவும் தெரியாத நாட்டுக்கு போய் உட்கார்ந்து இருக்க சொல்லுறாளா இவ…..இன்னைக்கு இவளுக்கு பிறந்தநாளு ஒரு போன் கூட பேசலை அவன்….அவன் கிட்ட அஞ்சுக்கும்,பத்துக்கும் என்னை கைகட்டி நிக்க சொல்லுறா இவ…..”
“அதான் என் பிள்ளை எனக்கு பரிசு அனுப்பியிருக்கானே…..அது போதாது….”என்று அவர் தன் மகனுக்கு பரிந்து கொண்டு வர,
“ஆமா இந்த பரிசை அவன் முன்னவே புக் பண்ணிருக்கான்…..கரட்டா இந்த தேதில உனக்கு கிடைக்கிற மாதிரி செஞ்சிருக்கான்….அவனே அதை என்கிட்ட சொன்னான்….”என்று கூற,
“என்ன ரவி உங்ககிட்ட பேசினானா…..”என்று லட்சுமி கண்களில் ஒலியுடன் கேட்க,
“ஆமா ஆமா பேசினான் போன மாசம் பேசினான்….அம்மாவுக்கு பார்சல் போட்டிருக்கேன்….அவங்க பிறந்தநாளைக்கு வரும்னு சொன்னான்….”
“பார்த்தீங்களா என் பிள்ளை என்னை மறக்கலை நீங்க தான் அவன் மேல கோபத்துல திட்டுறீங்க….”என்று லட்சுமி கண்களை துடைத்துக் கொள்ள,
“ஆமா எனக்கு கோபம் தான்…..இது ஒன்னும் அவனா செய்யலை போன தடவை நீ கேட்டதொட்டு இந்த தடவை போட்டிருக்கான்….இல்லைனா அவனுக்கு நாம எல்லாம் நியாபகத்துல கூட இருக்க மாட்டோம்…..சும்மா எதாவது பேசி என்னை இன்னும் கோபடுத்தாம இரு லட்சுமி……”என்றவிட்டு அவர் வெளியில் சென்றுவிட்டார்.
“விடுங்க ம்மா….அப்பா ஏதோ கோபத்துல பேசிட்டு போறாரு….”என்று வசந்தி லட்சுமியை தேற்ற,
“இல்லம்மா இந்த தடவை ரொம்ப பேசிட்டார்….நேத்து வந்த பார்சலை பிரிக்கக்கூடாதுனு சொல்லிட்டார்…..அதை பிரிச்சா அவர் என்கூட பேசவே மாட்டாராம்…..”என்று விட்டால் அழுதுவிடுபவர் போல் லட்சுமி கூற,வசந்திக்கு அத்தனை வருத்தமாகி போனது அந்த பிரிக்கபடாத பார்சலை பார்த்தவருக்கு சிவநேசனின் கோபமும் புரிய தான் செய்தது.
வார்த்தையால் பகிரப்படும் வாழ்த்துக்குள் இருக்கும் அன்பையும்,நேசத்தையும் இந்த பரிசு பொருள் கொடுத்துவிடாதே….இத்தனை செய்பவர் ஒரு முறை அன்னைக்கு அழைத்து தன் வாழ்த்தையும் தெரிவித்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும் என்று மனதில் நினைத்ததை லட்சுமியிடம் பகிரவில்லை பகிர்ந்தாலும் அதை அவர் ஏற்றுக் கொள்ளப்போவதும் இல்லை அதனால் அமைதியாக அவர் தன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
தன் வீட்டிற்குள் நுழையும் போதே சாம்பார் வைக்கும் வாசனை நாசியில் தீண்ட,சமையல் அறை பக்கம் சென்றார்.சுந்தரி தான் சாம்பாரை தாளித்துக் கொண்டிருந்தாள்.
“பருப்பு தான் கருகி போச்சேடீ…..”என்று அவர் பாத்திரத்தை ஆராய,
“முழுசா கருகல மேலால எடுத்து வச்சிட்டேன்….இட்லி பாத்திரம் குக்கர் எல்லாம் ஊற வச்சிருக்கேன்….நான் மதியம் வந்து விளக்கிறேன்…..நீ எதுவும் செய்யாத புரியுதா….”என்று மிரட்ட,
“நீ செஞ்ச வேலைக்கு நான் கஷ்டப்படுனுமா நீயே சொன்னாலும் நான் எதுவும் செய்யமாட்டேன்….நீயே வந்து விளக்கி போடு….”என்றுவிட்டு அவர் சென்றுவிட,
“ஒரு பேச்சுக்கு சொன்னா மீக்கு கொழுப்பை பாரு….அது சரி சுந்தரியோட அம்மான்னா சும்மாவா…”என்று கூறிக் கொண்டவள் குளிக்க சென்றுவிட்டாள்.அவள் திரும்பி வரும் போது வசந்தி ஜாக்கெட்டிற்கு கூக்கு தைத்துக் கொண்டிருந்தார்.
“மீ….நான் கிளம்புறேன்….நீ இன்னைக்கு கடைக்கு வர வேண்டாம்…..பெருசா எதுவும் வேலையில்ல….”என்று கூற,
“ம்ம் சரி….எனக்கும் வீட்ல வேலை இருக்கு….நீ இன்னைக்கு சாய்ந்திரம் சீக்கிரம் வந்திடு கோவிலுக்கு போகனும்….”என்று கூற,
“சரி சரி….வரேன்…..”என்றுவிட்டு சுந்தரி கீழே இறங்கிவிட்டாள்.
கீழே தன் ஸ்கூட்டியை எடுக்கும் முன் லட்சுமி என்ன செய்கிறார் என்று பார்க்க அவரோ அந்த பரிசை தடவி பார்த்துக் கொண்டிருந்தார்,
“ஏய் அதை தொட்ட நீ செத்த…..”என்று பேச்சு குரல் கேட்க,திடுக்கிட்டு அதிலிருந்து கையெடுத்துவிட்டு,
“நா….நான் தொடலையே…..”என்று அவர் வாயிலை பார்க்க,சுந்தரி தான் ஒரு கையில் சாவியை சுழற்றியபடி மற்றொரு கையில் போனை வைத்துக் கொண்டு நின்றாள்.
“என்ன லச்சு பயந்திட்டுயா….நான் தான்….”என்று கூற,லட்சுமி எதை கொண்டு அவளை அடிக்கலாம் என்று சுற்றி முற்றி பார்த்துக் கொண்டிருக்க,
“சரி சரி என்னை அடிக்க பொருளை தேடி எடுத்து வை சாய்ந்திரம் வந்து உன்கிட்ட அடி வாங்கிக்கிறேன்….இப்ப நான் கிளம்புறேன் பை லச்சு….”என்றுவிட்டு அவள் தன் ஸ்கூட்டியில் ஏறி பயணிக்க தொடங்கியவளுக்கு லட்சுமி பாட்டியின் மீது கோபம் தான் வந்தது.பரிசு பெருசா இருந்து என்ன பிரயோஜனம் அது இவர்களின் தனிமையை போக்காது என்பது எப்போது இவருக்கு புரியும் என்று மனதிற்குள் லட்சுமியை திட்டிக் கொண்டு தான் சென்றாள் சுந்தரி.
error: Content is protected !!