“அடியே கேள்வி கேட்டு கொல்லாத….முதல்ல குளிச்சிட்டு வா…சொல்லுறேன்….ஆஆ…அப்பறம் இன்னைக்கு புடவை கட்டிக்கோ…..”என்றுவிட்டு அவர் சென்றுவிட,
Advertisement
“என்னடா நடக்குது இங்க…..”என்று தனக்குள் புலம்பியவள் வசந்தி கூறியதை போல் குளித்துவிட்டு அரக்கு வண்ணத்தில் மயில் பாடர் இட்ட புடவையை அழகாக உடுத்திக் கொண்டு கீழே வர,நேசன் யாருடனோ பேசியில் பேசிக் கொண்டிருந்தார்.
“இல்ல இன்னைக்கு நான் வர நேரமாகும் நீ பார்த்துக்க சாமி…..”என்றுவிட்டு திரும்ப அங்கு சுந்தரி வருவதைக் கண்டு புன்னகைத்தவர்,
“வாடா….”என்று அவளின் தலை தொட,
Advertisement
“ம்ம்….இன்னைக்கு தான் பொண்ணு மாதிரி இருக்க…..”என்றபடி வந்த லட்சுமி,
“இந்தா இந்த பூவை வச்சுக்க….”என்றுவிட்டு அவளின் தலையில் சூடிவிட்டார்.
“ஆமா என்ன விஷேஷம் இன்னைக்கு….”என்று கேட்க,
“ஒண்ணும் பெருசா இல்லடா….உனக்கு இன்னும் நல்ல வரன் எதுவும் வரலைனு வசந்தி சொல்லிக்கிட்டு இருந்துச்சு….அதோட லட்சுமிக்கும் மனசு என்னவோ போல இருக்குனு சொன்னா…..ஒரு கணபதி கோமம் பண்ணா நல்லது நடக்கும்னு நம்ம கோவில் ஐயர் சொல்லவும் இன்னைக்கு ஏற்பாடு பண்ணியாச்சு….”என்று நேசன் கூற,
“மீ என்கிட்ட நீ சொல்லவே இல்ல….”என்று வசந்தியிடம் குறைபட,
“ஆமா நான் சொல்லுறத நீங்க எங்க கேட்ட….இரண்டு நாளா வேலை வேலைனு ஓடிக்கிட்டு இருந்த நேத்து நைட் சொல்லலாம் வந்தா ஏதோ மந்திரிச்சுவிட்ட மாதிரி வந்த நான் என்ன பண்ணட்டும்….”என்று வசந்தி கூற,அதுவரை சிரித்தபடி இருந்த சுந்தரியின் முகம் நேற்று என்று கூறியவுடன் மாறியதை மற்ற இருவரும் கவனிக்கவில்லை ஆனால் நேசன் கவனித்துவிட்டார்.
“சரி சரி நீங்க இரண்டு பேரும் போய் மத்த வேலைகளை பாரு…இப்ப ஐயர் வந்துடுவார்….”என்று அனுப்பி வைத்தவர்,
“என்னடா ஏன் ஒருமாதிரி ஆகிட்ட….எதாவது பிரச்சனையா….”என்று சுந்தரியிடம் கேட்க,
“இல்ல தாத்தா….ஏன் கேட்குற….”என்றவளின் தடுமாற்றம் அவருக்கு ஏதோ உறுத்தலாகவே இருந்தது.சரி பூஜை முடியட்டும் பின் கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தவர்,
“சரி…வா உள்ள போகலாம்….”என்று அழைத்து விட்டு செல்ல,அவர் சென்றவுடன் தான் சுந்தரிக்கு மூச்சே வந்தது போல் இருந்தது.நேசன் கவனிக்காமல் இருந்திருந்தால் கூட சுந்தரியாக கூறியிருப்பாளோ என்னவோ அவர் கேட்கவும் பயம் தான் வந்தது.ஏற்கனவே தன்னால் தான் இந்த குடும்பத்தில் பிரச்சனை என்று மனம் அடித்து கொண்டிருக்க இதில் நேற்று நடந்தவற்றை கூறி மீண்டும் பிரச்சனை வேண்டாம் என்று நினைத்துவிட்டாள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
“ஹலோ சார்….இன்னைக்கு ஏதோ பங்ஷன் போல சார்….கடை திறக்கலை….”
“அது ஏதோ கோமம் போல….உங்க தாத்தா வெளில வந்து பேசிக்கிட்டு இருந்தாரு அப்ப ஒட்டு கேட்டேன்….”
“ஹம் குட்….அப்போ இந்த பங்ஷனுக்கு எல்லாரும் வருவாங்க இல்ல…..”
“எஸ் சார்….”
“நீ அங்க தான இருக்க….”
“எஸ் சார்….”
“ஓகே அங்கேயே இருந்து எனக்கு அப்டேட் பண்ணிட்டு இரு….எனக்கு ஒரு முக்கிய வேலை இருக்கு அதை முடிச்சிட்டு வரேன்…..”என்று பேசியை அனைத்து வைத்தவனின் முகத்தில் யோசனை,
“இது சரி வருமா விக்ரம்….”என்று தனக்கு தானே கேட்க,அதற்கு பதில் தான் இல்லை.
“அப்ப சரி அவளை விட்டுடு….”என்று மனது கூறவும்,
“நோ….நோ…..”என்று தன்னையும் மீறி கத்திவிட்டு,பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு,
“இவ்வளவு தூரம் வந்துட்டு இனி யோசிக்க எதுவும் இல்ல….”என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் தான் தங்கியிருந்த அறையை காலி செய்து கிளம்பினான்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
“ம்மா….மனசுல இருக்குற கஷ்டத்தை பகிர்ந்துகிட்டு அது உங்களை விட்டு போகனும்னு நல்ல வேண்டிக்கோங்கோ….”என்று ஐயர் கூறிக் கொண்டிருந்தார்.
“கடவுளே என் பொண்ணுக்கு நல்ல வரன் அமையனும்….”என்று வசந்தியும்,
“என் பேரனுக்கு நல்ல புத்திய கொடு….அவன் நல்லபடியா இருக்கனும்…..”என்று லட்சுமியும்,
“எல்லாரும் நல்லா இருக்கனும்….”என்று நேசனும் வேண்டி கொண்டிருக்க,சுந்தரி மட்டும் மனதில்,
“அய்யோ கடவுளே நான் என்னத்த வேண்டன்னே தெரியலை….முதல்ல அந்த லண்டன் குரங்கை ஊருக்கு பேக் பண்ணி அனுப்பிவிடுங்க….அது தான் எனக்கு செய்ற பெரிய உபகாரம்…..அதுக்கு அப்பறம்…..அச்சோ மறந்து போச்சே….”என்று கண்களை மூடி கடவுளை குழப்பிவிட,அவரோ மற்றவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவளுடயதை டீலில் விட்டுவிட்டார்.
விக்ரம் வீட்டில் நுழையும் நேரம் அனைவரும் கண்களை மூடி பிரத்தணை செய்தபடி இருக்க அவனது கண்களோ சுந்தரியை தான் தேடியது.கோம குண்டத்தின் பக்கவாட்டில் ஒரு தூணின் பின் நின்று கொண்டிருந்தாள்.பார்த்த நொடி அவனின் கண்கள் அவளை விட்டு நகர மறுத்தன முதல் முறை புடவையில் பார்க்கின்றான் ஏனோ இன்று புதிதாக தெரிந்தாள்.இரண்டு நொடி அவளின் மீது பார்வையை படரவிட்டவன்,
“ம்ம் இன்னைக்கு ஏத்தது போல தான் இருக்கா குட்….”என்று கூறிக் கொண்டு மெதுவாக நெருங்க,அதற்குள் அங்கு வந்திருந்த அக்கம்பக்கத்தினர் அவனைக் கண்டு குரல் கொடுக்க போக வேண்டாம் என்பது போல செய்கை செய்து,
“சர்ப்ரைஸ்…..”என்று வாயசைத்துவிட்டு சுந்தரி இருக்கும் தூணின் பின் செல்ல,அனைவரும் ஏதோ விளையாடுகிறான் என்று நினைத்து கொண்டிருக்க,அவனோ தன் சட்டை பையில் இருந்த பொன் தாலியை எடுத்து சுந்தரியின் கழுத்தில் அனுவித்திருந்தான்.
தன் கழுத்தில் ஏதோ விழவும் விழித்த சுந்தரி என்னவென்று பார்க்கவும்,
“ஏய் என்னப்பா இது இப்படி பண்ணிட்ட….”என்று அந்த கூட்டத்தில் ஒருவர் கத்தவும் சரியாக இருந்தது.
“ஹாப்பி மேரிட் லைப் சுந்தரிஇஇஇஇ…..இனி உனக்கு எல்லாமே குட் லக் தான்…..”என்று அவளின் கன்னம் கிள்ள சுந்தரிக்கு அப்போதும் ஒன்றும் புரியவில்லை.விக்ரமை தன் அருகில் பார்த்தவுடன்,
“அச்சோ லண்டன் குரங்கு…..”என்று அவளின் மனது அலற,
“டேய்…..”என்ற நேசனின் ஆக்ரோஷ குரலில் நிகழ்வுக்கு வந்த சுந்தரி தன்னை சுற்றி பார்க்க,
“சுந்தரி….”என்ற வசந்தி கண்களில் நீர் வடிய நின்று கொண்டிருந்தார் என்றால் லட்சுமியோ என்ன நடந்தது என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.நேசனோ விக்ரமை அடிக்க கையை ஓங்கி கொண்டு போக அங்கிருந்தவர்கள் அவரை தடுத்துக் கொண்டிருந்தனர்.
“என்ன தம்பி நீங்க இப்படி பண்ணிட்டீங்க….”என்று ஒருவர் கேட்க,
“என்னை விடுங்க என் வீட்டுக்கே வந்து என்ன காரியம் பண்ணியிருக்கான்….அவனைஐஐஐஐ….”என்று நேசன் விட்டால் விக்ரமை அடித்து துவசம் பண்ணியிருப்பார்.வசந்தி வேகமாக சுந்தரியின் அருகில் வந்து அவளை தன்னுடன் இழுத்துக் கொண்டவர்,
“நீ செஞ்சது சரியில்லப்பா….”என்று தன் ஆதங்கத்தை கொட்டினார்.
“நான் என்ன செஞ்சேன் ஆன்டி….நான் உங்க பொண்ணை லவ் பண்ணேன்….கல்யாணம் பண்ணிக்கிட்டேன்….”என்று சர்வ சாதாரணமாக கூற,
“எதே கல்யாணம் பண்ணிட்டியா….”என்று அலறிக் கொண்டே சுந்தரி தன் கழுத்தில் கிடந்த செயினை பார்க்க அதில் திருமாங்கல்யம் கோர்த்திருந்தது.
“ஸ்…பேபி….நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு….”என்றவன் சுந்தரியை தன் பக்கம் இழுத்து தன் கை வளைவிற்குள் வைத்துக் கொண்டு,
“இனி இவ எனக்கு தான் சொந்தம்….”என்று வசந்தியிடம் கூற அவரோ வெலவெலத்து போனார்.
“டேய் உன்னை கொல்லாம விடமாட்டேன்…..”என்று நேசன் இன்னும் தான் ஆவேசமானார்.
“என்ன தம்பி இப்படி பண்ணிட்டிங்க….பெரிய இடத்து புள்ள நீங்க இப்படி பண்ணலாமா….”என்று கூட்டத்தில் அனைவரும் ஒரு போல கேட்க,
“என்ன என்ன பண்ணீட்டாங்க….நான் இவளை லவ் பண்ணேன்….என் வீட்ல பொண்ணு கேட்க சொன்னேன் மாட்டேன் சொல்லிட்டாங்க…அதான் நானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்….”என்று விக்ரம் கூற சுந்தரி அதிர்ந்து அவனின் முகம் பார்க்க,
“என்ன பேபி அப்படி பார்க்குற….நான் சொல்லுறது சரி தான…..”என்றவனின் குரலிலும்,சரி முகத்திலும் சரி ஏதோ ஒரு மாறுதல் இருந்தது.அதை சுந்தரி மட்டுமே உணரபடியாக அவன் பார்த்துக்கொள்ள,
“டேய் என்ன பொய் சொல்லிக்கிட்டு இருக்க….”என்ற நேசன் அனைவரின் பிடியையும் தள்ளிவிட்டு அவனின் அருகே வந்துவிட,
“ஆங்….என் மேல கை பட்டுச்சு….நல்லது இல்ல பார்த்துக்கோங்க…..”என்றவனின் குரலில் அத்தனை ரௌத்திரம்.அதோட அவன் சுந்தரியை பிடித்திருந்த பிடி இறுக அது அவளின் முகத்தில் தெரிந்தது.
“ப்பா வேண்டாம் ப்பா….எதுவும் வேண்டாம்…..”என்ற வசந்தியின் நிலை தான் அங்கு காண சகிக்கவில்லை.
“என்னங்க கொஞ்சம் பொறுமையா இருங்க…..”என்ற லட்சுமி,கூட்டத்தில் இருந்த தன் வீட்டில் வேலை செய்பவரிடம் கண்ணை காட்ட,
“அட இது அவங்க வீட்டு பிரச்சனைப்பா….அவங்க பார்த்துப்பாங்க….. கிளம்புங்க….”என்று கூறவிட்டு,அனைவரையும் அனுப்பி வைத்தார்.அனைவரும் ஏதோ தங்களுக்குள் முணுமுணுப்புடன் தான் சென்றனர்.
“சுந்தரிமா நீ இங்க வா….”என்று நேசன் கூற,விக்ரமின் கைகளோ அவளின் ஒற்றை கரத்தை வலுவாக பிடித்திருந்தது.
“விக்ரம் அவ கைய விடு……”என்றவர் அவளை தன் புறமாக இழுக்க,
“வேஸ்டா என்கிட்ட மோதிக்கிட்டு இருக்காத தாத்தா…..தோத்து தான் போவ….”என்றவனை வெறித்து பார்த்தனர் நால்வரும்.நேசனுக்கு அவனை கொன்று குவிக்கும் வேகம் தான் ஆனால் அவனின் கைகளில் சுந்தரி நின்று கொண்டிருக்க தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றார்.
“என்னடா தாத்தாவையே மிரட்டுற…..நீ பண்ண காரியத்துக்கு உன்னை கொன்னு தான் போட்டிருக்கனும்…..அவர் பொறுத்துக்கிட்டு இருக்காரு…..ஒழுங்கா அவளை விடு…..”என்ற லட்சுமி சுந்தரியை விக்ரமின் கைகளில் இருந்து பிரித்தெடுத்தார்.
“உங்களால என்ன பண்ணமுடியுமோ பண்ணிக்கோங்க….ஆனா இனி இவ என்னோட வைப்….அப்படி தான் இந்த ஊர் பார்க்கும்….பார்க்க வைப்பேன்…”என்றவன் சுந்தரியிடம் நெருங்கி,
“என்கிட்டேந்து இனி உனக்கு விடிவே கிடையாது…..சோ பிரப்பார் யுவர் செல்ப்……பை சுந்தரி…..”என்று அவளின் கன்னம் தட்டிவிட்டு சென்றுவிட,வீடே ஏதோ பேரலையின் சீற்றத்தில் அடிப்பட்டது போல் அலைக்கழிந்து கிடந்தது.
வசந்தி அழுதழுது ஓய்ந்து போயிருந்தார்.அவரின் மடியில் கிடந்த சுந்தரிக்கு கழுத்தில் தொங்கி கொண்டிருந்த மாங்கல்யம் ஏதோ தூக்கு கயிறு போலவே கழுத்தை இறுக்க தொடங்கயிருந்தது.நேசனும்,லட்சுமியும் செய்வதறியாமல் அமர்ந்துவிட்டனர்.