Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

குட் லக் சுந்தரி

குட் லக் சுந்தரி…..15

குட் லக் சுந்தரி…..15

“சுந்தரிஇஇஇஇ….என் பென்டிரைவ் எங்க…..”என்று கத்தியவனின் குரல் பக்கத்து வீடு வரை கேட்டிருக்க வேண்டும்.தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஷூவை அணிந்து கொண்டிருந்த விக்ரமின் முகத்தின் முன் பென்டிரைவை நீட்டினாள் சுந்தரி.

“ஓ கிடைச்சிடுச்சா…..”என்றவனை கொலை வெறியுடன் அவள் முறைத்துக் கொண்டிருக்க,அவனோ அதை அசட்டை செய்தவன் போல,

“ப்ச்…..பாரேன்…..நீ தேடுனா கிடைக்குது நான் தேடுனா கிடைக்க மாட்டேங்குது….”



Advertisement

“அதுக்கு முதல்ல தேடனும்…..”என்றாள் சுந்தரி பல்லை கடித்துக் கொண்டு.

“ஓ ஆமாம்ல…..அதை மறந்துட்டேன்…..ஓகே அடுத்து…..”

“நிப்பாட்டு…..இந்தா உன் பேக்,கார் சாவி…..”என்று இரண்டையும் அவனின் முகத்தின் முன்னே இடிப்பதை போல நீட்ட,

Advertisement

“நான் எப்படா கிளம்புவேன்னு வெயிட்டிங்கல இருக்க போல…..”என்று இரண்டையும் வாங்கி கொண்டு கேட்க,சுந்தரி சுதாரித்துவிட்டாள்,

Advertisement

“இல்ல அப்படி இல்ல….”என்று அவள் கைகளை பிசைந்தபடி நிற்க,அவளை நெருங்கி இடைவளைத்து அவளை தன்னுடன் இறுக்கியவன்,

“நீ இப்படி தடுமாறி நிக்கறதை பார்க்கும் போது நல்லா இருக்குடீ….”என்றவனின் முகம் மிக நெருக்கத்தில் இருக்க,சுந்தரிக்கு அவஸ்தையாகி போனது.அவள் தன் மூச்சை இழுத்துபிடித்தபடி நின்று கொண்டிருந்தாள்.மணமொத்து மணந்திருந்தாலோ இல்லை காதலித்து மணந்திருந்தாலோ இதுபோன்ற தருணங்கள் இருவருக்குமே ரசிக்கும் படியாக இருந்திருக்கும்,ஆனால் இங்கு இருவருக்குள்ளும் எதுவும் இல்லை என்பதால் அவளால் அவனுடன் இயல்பாக ஒன்ற முடியவில்லை.விக்ரம் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் அவனிற்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பது தான் உண்மை.

“எவ்வளவு நேரம் மூச்சை இழுத்துபிடிச்சிட்டு நிப்ப….”என்றவனின் பேசி இடையில் இசைந்து ஒலியெழுப்பியது.

Advertisement

“பாரு உன்னை இன்னும் வம்பிழிக்கனும் போல தான் இருக்கு….ஆனா இன்னைக்கு அதுக்கு நேரம் இல்ல…..வரேன்……”என்று வெளியில் செல்ல,சுந்தரிக்கு அப்போது தான் மூச்சே வந்தது.

“ப்பா….”என்றுவிட்டு உள்ளே செல்ல பார்க்க,

“ஓய்…..”என்று வேகமாக அவளை பின் புறமாக இறுகணைக்க,

“ஆஆஆ……”

“அடியே நான் தான்…..”

“என்ன தான் வேணும் உங்களுக்கு….”என்று கடுப்புடன் சுந்தரி கேட்டாள்.எப்போதாடா போவான் என்னும் நிலை அவளுடையது.

“எனக்கு நீ குட் லக் சொல்லவேயில்ல….அதான் வந்தேன்…..”என்று அவளை தன் புறம் திருப்ப,சுந்தரி அவனை முறைத்தபடி நின்றிருந்தாள்.

“ப்ச்….இப்போ டையம் இல்லடீ….சீக்கிரம் சொல்லு…..”என்று கேட்க,

“குட் லக்…..”என்று அவள் கூற,

“அதை கொஞ்சம் சிரிச்சுக்கிட்டு தான் சொல்லேன்டீ….இன்னைக்கு எனக்கு ரொம்ப முக்கியமான நாள்னு உனக்கு தெரியும் தான….மறந்துட்டியா….நைட்….”

“அச்சோ…..வேண்டாம் எனக்கு எல்லாம் நியாபகம் இருக்கு….”

“அப்படியா சொல்லு….இன்னைக்கு என்ன நாள்….”

“உங்களுக்கு நேரம் ஆகுது….”

“இன்னும் ஆப்னவர் இருக்கு சொல்லு….”என்றவன் அவளை இழுத்துக் கொண்டு சோபாவில் தொப் என்று அமர்ந்துவிட்டான்.சுந்தரிக்கு தான் அழுகையே வந்துவிடும் போல் இருந்தது.லண்டன் வந்து ஒரு வாரமாகிவிட்டது.வந்திறங்கியதே விக்ரம் தனியாகி இருக்கும் வில்லாவிற்கு தான்.ரவிகுமார் மகனை தன் வீட்டிற்கு அழைக்க,

“ஐ நீட் ப்ரைவெசி டாட்…..”என்றுவிட்டான்.

விக்ரம் அவளை அடித்து துன்புறுத்தவெல்லாம் இல்லை நல்லபடியாக வைத்துக் கொண்டான்.காலை இருவருக்குமான தேநீரில் தயாரிப்பதிலிருந்து இரவு உணவு வரை அனைத்தும் சுந்தரி தான் பக்கா இல்லதரசியாகவே மாறிவிட்டாள்.முன்பும் இதெல்லாம் செய்வாள் தான் ஆனால் இத்தனை எல்லாம் செய்தது இல்லை.வசந்தி பாதி வேலைகள் செய்துவிடுவார் இப்போது அனைத்தும் இவள் செய்வது சற்று சிரம்மாக இருந்தது.அதைக் கூட சுந்தரியால் சமாளிக்க முடிந்தது ஆனால் விக்ரம் அவனை தான் அவளை சமாளிக்க முடியவில்லை.வீட்டில் இருந்தால் அவளை இது போல் அதை எடு இதை எடு என்று படுத்திக் கொண்டே இருப்பது எப்போதும் அவளின் பின்னே சுற்றிக் கொண்டே இருப்பது என்று அவனின் செயல்கள் அனைத்தும் சுந்தரிக்கு ஒரு அவஸ்தையாகி போனது.

“சுந்தரிஇஇஇஇ…..”என்று காதில் கத்த,

“ஆஆ….ஏன் கத்துறீங்க….”

“நீ தான் டீர்ம்ஸ்க்கு போயிட்டேயே……”

“அச்சோ இல்ல…..உனக்கு டைம்…..”என்றவளின் கழுத்தில் குறுகுறுப்பை உண்டாக்க,சுந்தரி அவஸ்தை தான் கூடியது.அதற்குள் மீண்டும் அழைப்பு வர,

“வரன்டா….”என்று கடுப்புடன் கத்தியவன் சுந்தரியை எழுப்பி நிறுத்திவிட்டு,

“வரேன்டீ…..வேலையிருக்கு….டேவிட் வேற போன் போட்டு படுத்துறான்…..பை டீ…..”என்று அவளின் கன்னம் தட்டி சென்றுவிட,வேகமாக வீட்டின் கதவை மூடிவிட்டு வந்தபின் தான் சுந்தரிக்கு உயிரே வந்தது.

“ப்பா கடவுளே….இவனோட தொல்லை தாங்க முடியல…..இவன் பன்ற அலபறைக்கு அளவே இல்லாம போச்சு……இதுக்கு இவன் என்னை அடிச்சு துன்புறுத்துதே தேவலாம் போல….என்னை படுத்தி  எடுக்குறான்…..ஒருவேலை இப்படி கூட துன்புறத்தலாம்னு எதாவது புக் படிச்சிருப்பானோ…..இவன் கிட்ட நான் சிக்கிட்டு படாதபடுறேன் போல….”என்று புலம்பிக் கொண்டிருக்க,சுந்தரியின் கைபேசி இசைந்தது.

“ம்மீ…..மீ….”என்று சுந்தரி அழாத குறையாக திரையை பார்க்க,அங்கு வசந்தியும்,அவரின் பக்கத்தில் லட்சுமியும் அமர்ந்திருந்தனர்.

“என்னத்துக்குடீ கண்ணை கசக்கிட்டு உட்கார்ந்திருக்க…..எங்கடீ என் பேரன்….”என்று திரையை ஆசையாக நோட்டம் விட்டபடி கேட்டார் லட்சுமி.பின்னே பேரன் தனியாக பிளாட் வாங்கி சுந்தரியை வைத்திருக்கிறான் என்று ரவியின் மூலம் தெரிந்ததிலிருந்து அத்தனை சந்தோஷம்.மருமகளின் குணம் அறிந்தவர் தானே லட்சுமி எங்கே மகனின் வாழ்வு போல பேரனின் வாழ்வும் வீணாகிவிடுமோ என்று கலங்கி கொண்டிருந்தவருக்கு இந்த செய்தி நற்செய்தி தான்.

“உன் பேரன் இல்ல லச்சு….சரியான இம்சை….”என்று வேறு சத்தமாக முணகிட,

“அடியே யாரைடீ இம்சைனு சொல்லுற…..ஏன்டீ சொல்லமாட்ட உன்னை ராணி மாதிரி வச்சிருக்கான்ல அந்த திமிரு தான்….உன் தாத்தாரோட வளர்ப்பு தான நீ அப்படி தான இருப்ப….”என்று அவளிடம் எப்போதும் போல வம்பு வளர்க்க தொடங்கிவிட்டார் லட்சுமி.

“அச்சோ ஆரம்பிச்சிட்டீங்கிளா….கொடுங்க இப்படி நான் பேசுறேன்…..”என்று லட்சுமியின் கையிலிருந்து போனை வசந்தி பிடுங்கி கொள்ள,லட்சுமி பாவமாக பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

“ம்மா….இப்படி மூஞ்சியை வச்சுக்காதீங்க….நல்லா இல்ல….”என்று அவரிடம் ஒரு அதட்டல் போட்டவர்,மகளிடம் திரும்ப அங்கு பிங்க நிற பனியனில் முடியை குண்டையிட்ட படி இவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள் சுந்தரி.

“எப்படிடா இருக்க….”என்று மகளை ஆராய்ந்தபடியே கேட்டார் வசந்தி.

“நான் நல்லா இருக்கேன்மா….”என்றவளின் முகத்தில் முன்பு இருந்த சுணக்கம் இல்லை.

“என்ன உன் வீட்டுக்காரர் வேலைக்கு போயிட்டாரா…..”

“ம்ம் இப்ப தான்….”என்றவளின் குரலில் இப்போதும் மீண்டும் அதே சுணக்கம்.

“என்னடா கஷ்டமா இருக்கா?….”

“ம்ம்….என்னவோ இங்க எனக்கு புல்பில் பீலிங் வரமாட்டேங்குது மீ…..அங்க நம்ம வீட்ல லச்சு கிட்ட சண்டை போட்டுக்கிட்டு கடைக்கு போயிட்டு வந்துட்டுனு எனக்குனு ஏதோ ஒன்னு இருந்த மாதிரி இருந்துச்சு….இங்க…..”என்றவளின் பதில் அப்படியே நின்றுவிட,வசந்தி மகளை அமைதியாக பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

“அப்படி பார்க்காத மீ…..”என்றவளுக்கு தாயின் பார்வையின் அர்த்தம் புரிந்தது.அப்போதும் வசந்தி எதுவும் பேசவில்லை.சுந்தரிக்கு தான் வருத்தமாகிவிட்டது அவள் எப்போதும் தவறு செய்தாலோ இல்லை இது போல சோர்ந்து அமர்ந்தாளோ அவளுக்கு வழிகாட்ட நேசனும்,வசந்தியும் இருந்தனர்.இப்போது நேசன் இன்றளவும் அவளுடன் பேசவில்லை,வசந்தியும் இப்படி அவள் தடுமாறும் சமயங்களில் அமைதியாகிவிட அவளுக்கு இந்த வாழ்வை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்று தெரியவில்லை.மகளின் நிலை உணர்ந்த வசந்திக்கு அதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியவில்லை.

“சுந்தரி….இது நீ தேர்ந்தெடுத்த ஒரு வாழ்க்கை…..அதுவும் விருப்பத்தோடு இதுக்குள்ள நீ போகல….அது தான் இப்ப உன்னோட பிரச்சனை….அந்த எண்ணத்தை நீ மாத்திக்கிட்டா தான் உனக்கு நல்லது…..சரியோ தப்போ இதுக்குள்ள நீ நுழைஞ்சிட்ட அதை எப்படி கொண்டு போகனும்னு நீ தான் முடிவு பண்ணனும்…..எல்லாமே உடனே மாறிடாது அதை நீ மாத்த முயற்சி பண்ணு இல்ல நீ அதுக்கு தகுந்த மாதிரி மாறிக்கோ……”என்றவர் அதற்கு மேல் மகளிடம் எப்படி கூற என்று நிறுத்திக் கொண்டார்.அதுவரை சுந்தரியின் முகத்தில் இருந்த குழப்ப ரேகைகள் குறைந்து ஒரு தெளிவு பிறந்தது.

“தேங்க் யூ மீ…..”என்றவளின் குரலே மீண்டும் பழைய நிலைக்கு மீண்டிருந்தது.

“இங்க கொடு…..”என்று லட்சுமி வசந்தியிடமிருந்து பேசியை பறித்து கொள்ள,

“லச்சு….எங்க என் தாத்தாவை காணும்….நான் இல்லாம அவரை படுத்திக்கிட்டு இருக்கியா…..”என்று சுந்தரி லட்சுமியிடம் கேட்க,

“ஆமா…..ஆமா….நான் தான் படுத்திக்கிட்டு இருக்கேன்…..அட போடீ இவளே…..”என்று முகத்தை திருப்பிக் கொண்டார் அவர்.

“அது அந்த பயமிருக்கட்டும்…..நான் பேசறதில்லைனு….ஏதாவது என் தாத்தாவை படுத்தின உன்னை பிச்சு பிச்சு…..ஆனாலும் தாத்தாவுக்கு கோபம் ஜாஸ்தி தான் வருது பாரேன்…..என்னை இதுவரை தேடவேயில்ல….”என்று குறைபட்டு கொள்ள,

“ஆமா தேடாம தான் மனுஷன் நீ பேசி முடிக்கிற வரை இங்க உட்கார்ந்துட்டு இருக்காறாரு….”என்றவர் பேசியின் திரையில் உள்ள கேமிராவை திருப்ப அங்கு சோபாவில் அமர்ந்து பேப்பரை வாசித்துக் கொண்டிருந்தார் நேசன்.

“படிச்ச பேப்பரையே எத்தனை தடவ தான் படிப்பாரோ தெரியல….”என்று லட்சுமி கணவனை பார்த்துக் கொண்டு சுந்தரியிடம் கூற,சுந்தரி சத்தமாக சிரித்துவிட்டாள்.

“ஹா…..ஹா…தாத்தா என்கிட்ட பேசமாட்ட அப்படி தான…..”என்று நேசனிடம் சுந்தரி பேச்சை வளர்க்க,

“வசந்திமா என்கிட்ட யாரும் பேச வேண்டாம்னு சொல்லு…..”என்றவரின் கண்களும் பேத்தியை ஆதரவாக வருடிய படி தான் இருந்தது.விக்ரம் அவளை நல்ல முறையில் வைத்திருப்பானா என்பது சந்தேகம் தான் அவளும் தங்களிடம் அனைத்தையும் கூறமாட்டாளே என்ற கவலை அவருக்கு.

“சரி பேசல பேசல போ….நீ டுக்கானா…..நானும் டுக்கா….”என்று கட்டை விரலை காட்ட,இங்கு நேசன் உள்ளுக்குள் உடைந்து கொண்டிருந்தார்.குழந்தையிலிருந்து தங்களுடன் இருந்தவள் இன்று தங்களுடன் இல்லை என்பது ஒருவித வருத்தம் என்றால் அவளின் வாழ்வு இப்படியாகிவிட்டதே என்ற மன அழுத்தம் ஒரு புறம் என்று நேசன் மிகவும் தளர தொடங்கியிருந்தார்.

“சரி சரி…..போதும் கொடுங்க…..”என்று வசந்தி நேசனின் நிலை கருதி பேசியை வாங்கி கொண்டு வெளியில் வந்துவிட்டார்.

“சரிடி போனை வைக்குறேன்…..”என்று அவர் வைக்க பார்க்க,

“மீ….தாத்தாவை பார்த்துக்கோ…..எனக்கு எந்த பிரச்சனையும் வராது….நான் என்னை பார்த்துப்பேன்…..”என்று கூற,

“சரி…..”என்று முடித்துக் கொண்டு வைத்துவிட்டார் வசந்தி.தன் வாழ்வு தான் சரியில்லாமல் போயிவிட்டதே மகளின் எதிர்காலமாவது நல்லதாக இருக்க வேண்டும் என்று வேண்டுதலுடன் இருந்தார் ஆனால் அவளுக்கு எதிர்காலமே இல்லாத வாழ்வை கடவுள் கொடுத்துவிட்டாரே என்று அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

விக்ரம் சுந்தரியை எதுவும் கொடுமை படுத்தவில்லை என்று தெரிந்தது  ஒரு விதத்தில் மனதை நிம்மதி படுத்தினாலும்,தாயாக அவளின் வாழ்வு சிறக்க வேண்டும் என்ற கவலை மனதை அரிக்க தொடங்கியது.இதை மகளிடம் பகிரவும் முடியாமல் அவர் தவிக்க அவரின் கண்ணீர் கடவுளின் பாதம் நினைத்ததோ என்னவோ சுந்தரியின் வாழ்வு தன் போல் அடுத்த கட்டத்திற்கு நகர துவங்கியது அதுவும் அனைத்து வித சுவராஸ்யங்களுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!