Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

குட் லக் சுந்தரி

குட் லக் சுந்தரி….7

குட் லக் சுந்தரி….7

“என்னடீ பண்ண…..எதுக்கு அந்த பையன் உன்கிட்ட சண்டைக்கு நிக்குது…..”என்று வசந்தி வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து சுந்தரியிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.ஆனால் சுந்தரியோ எதையோ திவீரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.தான் கேள்வி கேட்டும் பதில் சொல்லாமல் ஏதோ யோசனையில் இருக்கும் மகளின் தலையில் கொட்ட,

“ஆஆ…..மீ……எதுக்கு என்னை கொட்டிக்கிட்டே இருக்க…..நானே முக்கியமான ஒரு விஷயத்தை யோசிக்கிட்டு இருக்கேன்….”

“அப்படி என்னடீ யோசிக்கிட்டே இருக்க…..”



Advertisement

“மீ….எனக்கு ஒரு டவுட்டு….”

“என்னடீ??”

“மீ ரவி அங்கிள் வெளிநாட்டுகாரியை தான கல்யாணம் பண்ணிக்கிட்டாரு …”

Advertisement

“ஆமா….”

Advertisement

“ரவி அங்கிளும் கலரு தான் அப்படி இருக்கும் போது இந்த லண்டன் குரங்கு மட்டும் எப்படிமா கலர் கம்மியா இருக்கான்…..”

“ஆஆஆஆ…….மீமீ…..அடிக்காத அடிக்காத…..”

“ஏன்டீ…..இது தான் உன்னோட டவுட்டா….எருமை எருமை….எனக்குனு வந்து வாச்சிருக்க பாரு….அம்மாக்கு மட்டும் தெரிஞ்சுது உன் தோளை உரிச்சு உப்பு கண்டம் போட்டுருவாங்க….போ போய் வேலையை பாரு….”

Advertisement

“ம்க்கும் போம்மா….நான் உன் கூட டுக்கா….”என்றுவிட்டு அவள் எழ,அவளின் கையை பிடித்த வசந்தி,

“சுந்தரி….அந்த பையன் கிட்ட எதுவும் வச்சிக்காத….அம்மாவும்,அப்பாவும் இப்ப சந்தோஷமா இருக்காங்க….உன்னால அது கெட கூடாது புரியுதா….”என்று அழுத்தமாக கூற,

“மீ….நீ சொல்லிட்டல்ல இனி அவன் பக்கமே திரும்ப மாட்டேன்….”என்றுவிட்டு சென்றுவிட்டாள்.ஆனால் அவன் விட வேண்டுமே.

“யாரு பாட்டி அது….என்னையவே திட்டிட்டா….அவளை நான் சும்மா விடமாட்டேன்…..”என்று உணவு மேஜையில் உட்கார்ந்து கத்திக் கொண்டிருந்தான் விக்ரம்.லட்சுமியோ கைகளை பிசைந்தபடி கணவரை பார்க்க அவரோ மனைவியை ஆதங்கமாக பார்த்துக் கொண்டு இருந்தார்.அவர் மனைவியிடம் விக்ரம் பேசுவது சரியில்லை அவனை கண்டித்து வை அது தான் நமக்கு நல்லது என்று கூறிவிட்டார்.ஆனால் லட்சுமிக்கு வெகு வருடங்கள் கழித்து வந்து நிற்கும் பேரனிடம் எதுவும் கூற முடியவில்லை.

“பாட்டீடீடீ…..”என்று அவன் கத்த,

“ஆங்….சொல்லு கண்ணா…..”

“நீ அப்பப்ப எங்காவது போயிடுற….எனக்கு சாம்பார் வேணும்னு சொல்லியிருந்தேனே…..”என்று தட்டில் இட்லிக்கு சட்னியை கண்டு முகத்தை சுழித்தபடி கேட்க,

“இதோ எடுத்துட்டு வரேன் கண்ணா….மறந்தே போயிட்டேன்…..”என்று அவர் சமையலறை உள்ளே ஓட,

“ஏன்பா அவளுக்கு உடம்பு முடியலைனு தான நீ வந்திருக்க….அவளையே இப்படி வேலை வாங்குற….என்ன இருக்கோ அதை சாப்பிட்டா ஆகாதா…..”என்று நேசன் ஆதங்கமாக கேட்க,

“எனக்கு சாப்பாடே வேண்டாம்…..”என்று எழுந்துவிட்டான் விக்ரம்.

“என்ன கண்ணா ஏன் எழுந்துட்ட…..”என்றபடி லட்சுமி வர,

“நான் உன்னை வேலை வாங்குறேனாம்….எனக்கு சாப்பாடு வேண்டாம்….இதை நீயே சாப்பிட்டுக்கோ…”

“அச்சோ என்ன கண்ணா நீ….இப்படி பேசுற….எனக்கு என்ன வேலை உன்னை கவனிக்கிறத விட….இவரு எதாவது சொன்னாரா….அவரை நீ கண்டுக்காத….நீ வாடா…..வா….சாப்பிடவா…..”என்று அவனை கெஞ்சி கொஞ்சி தான் சாப்பிட வைத்தார் லட்சுமி.இதையெல்லாம் நேசன் கோபத்துடன் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்.பேரனை சாப்பிட வைத்து அவனை ரூமிற்கு அனுப்பிவிட்டு வந்த லட்சுமி,

“உங்களுக்கு என்னதாங்க பிரச்சனை இத்தனை வருஷம் கழிச்சு பிள்ளை வந்திருக்கு….அவன் கிட்ட போய் இப்படி பேசியிருக்கீங்க….”

“உனக்கு தான் தலை கால் புரியலை…..உனக்கு உடம்புக்கு முடியலை வந்திலிருந்து நீ எப்படி இருக்கனு ஒரு வார்த்தை கேட்டிருப்பானா அவன்…..வந்தலிருந்து சுந்தரியை தான் திட்டிக்கிட்டு இருக்கான்…..சொல்லி வை ஏதாவது என் பேத்திக்கிட்ட வம்பு வளர்த்தான் நான் சும்மா இருக்கமாட்டேன்…..”என்று எச்சரித்துவிட்டு நேசன் சென்றுவிட,அனைத்தையும் ரூமிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த விக்ரமிற்கு,

“ஓஓ….அவ்வளவு முக்கியமானவாள அவ….அவளுக்கு இருக்கு…..இந்த விக்ரம் யாருனு காட்டுறேன்…..”என்று மனதிற்குள் கருவிக் கொண்டான்.ஏன் எதற்கு என்றே தெரியாத கோபம் அவளின் மீது அன்று அவள் திட்டியவுடனே தன் தந்தையிடம் பேசி யார் இவள் என்று தெரிந்து கொண்டு தான் இங்கு வந்திருந்தான்.விக்ரம் யாரின் கட்டுப்பாடும் இன்றி வளர்ந்தவன் அவனை இதுவரை யாரும் கண்டித்தது இல்லை.நேசன் கண்டிக்க ஆரம்பிக்கும் போதே லட்சுமி தடுத்துவிடுவார் அதனால் சுதந்திர பறவை போல் தான் பறந்து கொண்டிருப்பான்.அப்படி பட்டவனை ஒருவள் வரை முறையில்லாம் திட்டிவிட அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை யாரவள் அவளை ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேகம் அவனிடம் இருக்க கிளம்பி வந்துவிட்டான்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

அன்று கடையில் நல்லகூட்டம் அடுத்த மாதம் தீபாவளி வரவிருக்கிறது அதனால் பிளவுஸ் தைக்க கொடுக்க என்று மட்டுமே பத்து பேர் நின்றிருந்தனர்.எங்க சுந்தரியை காணும் என்று அனைவரும் கேட்டுக் கொண்டிருக்க,

“இதோ வந்துட்டேன்….”என்று கூறிக் கொண்டே கடையின் முன் தன் வண்டியை நிறுத்தினாள் சுந்தரி.

“ம்க்கும் கடைக்கு நீ தான் முதலாளி நீயே இப்படி வந்தா…..உன்கிட்ட வேலை பார்க்குறவங்க எல்லாம் எப்படி இருப்பாங்க….”என்று ஒரு பெண்மணி நொடித்துக் கொள்ள,

“அவங்க என்னைவிட நல்லவே வேலை செய்வாங்க….நீங்க கவலைபடமா இருங்க….”என்றுவிட்டு தன் இருக்கையில் போய் அவள் அமர ஒரு ஒருவராக வர தொடங்கினர் அதில் அந்த பெண்மணியும் அடங்குவார்.கடையில் மேலும் இரு பெண்கள் தைப்பதற்கு என்று இருந்தாலும் அளவு எடுப்பது அதை நறுக்கிக் கொடுப்பது என்று முக்கிய பணிகளை செய்வது சுந்தரி தான் அதனால் அவள் வந்தவுடன் அதை தொடங்கிவிட்டாள்.வந்தவர்கள் அனைவருமே ஆரி வொர்க் வைத்த தையல் என்பதால் அதை மொத்தமாக பார்ப்பது சுந்தரி தான் என்பதால் அவளுக்கு தான் வேலை அதிகமாக இருந்தது.அனைவரையும் சரி பார்த்து அனுப்பிவிட்டு அவள் அமரும் நேரம் கடைக்குள் வந்தார் வசந்தி.

“என்னடீ இன்னைக்கு கூட்டம் அதிகமா….”என்று கேட்டவாரே உள்ளே வர,

“ம்ம்…அமா மீ….ஆரி வொர்க் தான் அதிகம்…..நான் ஏற்கனவே பாதி முடிச்சு வச்சிருந்ததை பினிஷ் பண்ணிட்டு வரேன் நீ……இது எல்லாத்தையும் கட் பண்ணி வை மீ…..” என்றுவிட்டு சுந்தரி கடையின் உள்ளே சென்றுவிட்டாள்.தாயும் மகளும் சேர்ந்தே நடத்தும் கடை என்பதால் இருவருக்கும் வேலை சரிசமமாக இருக்கும்.சுந்தரியும் பேஷன் டிசைனிங் படித்திருப்பதால் ஒரளவிற்கு கடை நன்றாகவே சென்றது.

மாலை தனது வண்டியை எடுத்துக் கொண்டு சுந்தரி தன் வீட்டிருக்கும் சந்தில் திரும்பும் போது அவளை மறித்தார் போல நின்றான் விக்ரம்.

“ஏய்….உனக்கு விழ என் வண்டி தான் கிடைச்சுதா….”என்று சுந்தரி சத்தம் போட,

“ஆமா இது பெரிய ராணியம்மா வண்டி இதுல விழுந்து உன்னை தரிசிக்கிறாங்க…..”என்றவனின் நக்கல் பேச்சு கேட்டு அவள் கடுப்பாவாள் என்று எதிர்பார்க்க,அவளோ

“அச்சோ அவ்வளவு அழகாகவா நான் இருக்கேன்….தேங்க்ஸ்…..இதை அப்படியே என் மீ கிட்டேயும் சொல்லிடு…..அவங்களுக்கு தான் என் அருமை தெரியலை…..பாரு எங்கிருந்தோ வந்த உனக்கு என்னை பத்தி தெரியுது…..”என்றுவிட்டு அவள் அவனை கடந்து சென்றுவிட,

“இவளை நாம கலாய்ச்சா…..இவ நம்மளை கலாய்ச்சிட்டு போறா…..”என்று தாடியை தேய்த்து கொண்டு நின்றான்.அவனை கடந்து சென்ற சுந்தரியோ,

“யாருக்கிட்ட இந்த சுந்தரி கிட்டேவா……” என்று இல்லாத காலரை துக்கிவிட்டு கொண்டே அவள் மாடி ஏற,

“ஏய் நில்லு….”என்று கத்தியபடி வந்தான் விக்ரம்.

“அய்யோ இவன் விடவேமாட்டான் போலவே….”என்ற ரீதியில் அவள் திரும்பி நிற்க,

“என்ன கலாய்ச்சிட்டு வரியா….”

“அதுவே இப்ப தான் உங்களுக்கு புரியுதா….”என்றவளின் சிரிப்பை பார்த்தவனுக்கு இன்னும் வெறி ஏறியது,

“ஏய் என்கிட்ட வச்சிக்காத உனக்கு நல்லதுக்கு இல்லை….அவ்வளவு தான் சொல்லிட்டேன்….ஒழுங்கா என்கிட்ட பேசினதுக்கு சாரி கேளு போனா போகுதுனு உன்னை விடுறேன்…..”

“என்ன சாரி கேட்கனுமா….அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்ல…..நான் என்ன தப்பு செஞ்சேன் சாரி கேட்க….அன்னைக்கு நான் பேசினது அத்தனையும் கரெட் தான்…..பெத்தவங்களை பார்க்காத பிள்ளைக இருந்தா என்ன இல்லைனா என்ன….”

“ஏய்…..”என்று அவன் சுந்தரியின் கழுத்தை பிடிப்பது போல் நெருங்கிவிட,அவளோ எந்தவித அதிர்வு காட்டாமல் அந்த கையை பிடித்துக் கொண்டவள்,

“சும்மா ஏய் ஏய்னு….கத்திக்கிட்டு இருக்காம….போ….போய் ஏதாவது உருப்படியான வேலை இருந்தா பாரு….”என்றுவிட்டு அவனை ஒற்றை கையால் தள்ளிவிட்டு சென்றுவிட்டாள்.

“என்னை எதிர்க்குற யாரா இருந்தாலும் அவங்களுக்கு சரியான பாடம் கத்துக் கொடுக்காம நான் விட்டதே இல்லை….உனக்கு இருக்குடீ…..”என்று மனதிற்குள் கருவிக் கொண்டே வீட்டிற்குள் நுழைய போக வாசலிலேயே தடுத்தார் நேசன்.

“நீ எப்ப கிளம்புற விக்ரம்….”என்று கேட்க,

“இப்போதைக்கு இல்ல…”என்றுவிட்டு அவன் வீட்டின் உள்ளே செல்ல,

“எதுக்காக நீ இங்க தங்கனும்….அதான் பாட்டியை பார்த்துட்ட தான….அவ நல்லா தான் இருக்கா….நீ கிளம்பலாம்….”என்று நேசன் கூற,

“என்னங்க ஏன் இப்படி பேசுறீங்க….அவன் உங்களை என்ன பண்ணான்….உங்களுக்கு பிடிக்கலைனா சொல்லுங்க நானும் என் பேரனும் தோட்டத்து வீட்டுக்கு போயிடுறோம்…..”என்று லட்சுமி அழதுவிட,

“அச்சோ பாட்டி…காரியத்தையே கெடுத்த போ….நாம ஏன் போகனும் அவரை போக சொல்லு….”என்று லட்சுமியின் கண்களை துடைத்துவிட்ட விக்ரம் நேசனை பார்த்து தன் காலரை தூக்கிவிட,

“நீ செய்யறது சரியில்ல லட்சுமி….இவன் ஏதோ பிளானோட தான் இங்க இருக்கான்….இவனுக்கு அப்படி ஒண்ணும் நம்ம மேல பாசம் எல்லாம் இல்லை….”

“உங்களுக்கு தான் தெரியலை….அவனை ஏதாவது கரிச்சிக்கிட்டே இருக்கீங்க….ஏதோ என் பிள்ளை உங்க கிட்ட பேசிட்டா அதை பெரிசு படுத்தி அந்த கோபத்தை என் பேரன்கிட்ட காட்டிக்கிட்டு இருக்கீங்க….”என்றார் லட்சுமி.அவரை பார்த்து கசப்பான சிரிப்பொன்றை உதிர்த்தவர்,

“உன்னால சுந்தரிக்கு ஏதாவது பிரச்சனை வந்துச்சு நான் சும்மா இருக்க மாட்டேன்….”என்று விக்ரமிடம் மிரட்டல் போலவே சொல்லிவிட்டு தான் சென்றார் நேசன்.

“அவரு கிடக்குறாரு கண்ணா…..நீ இதை எல்லாம் கண்டுக்காத….குளிச்சிட்டு வா உனக்கு பிடிச்ச சிக்கன் பிரை பண்ணிருக்கேன்….”என்ற லட்சுமி கூற,

“என் செல்ல பாட்டி….”என்று அவரின் கன்னம் கிள்ளிவிட்டு செல்ல லட்சுமியின் முகத்தில் வெகு நாட்களுக்கு பிறகு மனம் நிறைந்த புன்னகை.

தன் அறைக்குள் நுழைந்த விக்ரம் தன் நெருங்கிய தோழனான ஸ்டீபனிற்கு அழைத்தான்.இருவரும் பள்ளி காலத்திலிருந்தே தோழர்கள்.ஸ்டீபனின் குடும்பமும் விக்ரம் குடும்பத்தை போல் தான் தந்தை வெளிநாட்டவர்,தாய் தமிழ்நாட்டை சேர்ந்தவர்.இருகுடும்பமும் நெருங்கிய நண்பர்களும் கூட.விக்ரமும்,ஸ்டீபனும் சேர்ந்து தான் தனியாக வர்த்தக மென் பொருள் கம்பெனி ஒன்றை நடத்தி வருகின்றனர்.இருவரும் உலகம் சுத்தும் வாலிபர்கள் தங்களை அடக்க யாரும் இல்லை என்ற ஒரே கோட்பாடுடையவர்கள்.

“ஹலோ…விக்கி….வந்துட்டியா….”என்று எடுத்தவுடன் கேட்டான் ஸ்டீபன்.

“இல்லடா….”

“என்ன இன்னும் கிளம்பலையா….என்ன மேன் என்னாச்சு….எனி பிராபளம்….”

“ம்ம் பிராபளம் தான்…..நான் கொஞ்ச நாளைக்கு இங்க தான் இருப்பேன்….நீ கொஞ்சம் பார்த்துக்கோ….”என்று விக்ரம் கூற அந்த பக்கம் மௌனம் மட்டும் பதிலாக வந்தது.

“ஹலோ….ஹலோ….டேய் ஸ்டீபன்…..இருக்கியா….”என்று விக்ரம் கத்த,

“என்னடா சொன்ன….”

“உனக்கு கேட்டிருக்கும்…..”

“என்ன மேன் நடக்குது அங்க ஆளு அவ்வளவு அழகா விழுந்துட்டியா….நான் வரவா அங்க….”என்று கேட்க,

“நோ….”என்று தெரித்து விழுந்தது வார்த்தை,

“என்னடா புதுசா கோப்படுற….”

“ப்ச் நீ நினைக்கிற அளவுக்கு எல்லாம் இங்க ஒண்ணுமில்ல….இது வேற….”என்ற விக்ரமின் குரலில் இருந்தது என்னவோ அவனே அறியான்.

“அப்புறம் எதுக்கு அங்க தங்குறியாம்….சும்மா தாத்தா,பாட்டிக்காகனு சொன்னா கொன்னுடுவேன்….”

“டேய் அதான் சொல்லுறேன் இல்ல….இது வேற….இப்போதைக்கு இது தான் சொல்ல முடியும்….நீ நாளைக்கு கிளைண்ட் மீட்டிங்கு ரெடியாகிட்டியா….”என்று பேச்சை மாற்றி விட்டான்.ஸ்டீபனுக்கு அது புரிந்து போனது இனி கேட்டாலும் பதில் வராது என்று அதனால் அவனும் வேலையை பற்றி பேச தொடங்கிவிட்டான்.

%%%%%%%%%%%%%%%%%

“ஹலோ வசந்திமா…நான் கல்யாண புரோக்கர் செல்வம் பேசுறேன்…..”

“என்ன விஷயமா போன் பண்ணீங்க….”என்ற வசந்தியின் சூடான பதிலை பொருட்படுத்தாதவர்.

“சுந்தரிக்கு நல்ல வரன் ஒண்ணு வந்திருக்கு….”

“நீங்க சுந்தரி கல்யாணம் விஷயம் எல்லாம் நேசன் அப்பாகிட்ட நேர்ல பேசலாம்…இப்படி போன்ல வேண்டாம்….வைக்கிறேன்….”

“வச்சிடாதீங்கமா….நான் ஐயா கிட்டேயும் பேசிட்டேன் நாளைக்கு காலையில நான் நேர்ல வரேன்….இது நீங்க நினைக்கிற மாதிரி இல்ல நல்ல வரன்….குடும்பமும் நல்ல குடும்பம்….உங்க கிட்டேயும் நான் வரதை சொல்லனும் தான் போன் பண்ணேன்…..வச்சிடுறேன்….”என்று கூறிவிட்டு செல்வம் வைக்க,அடுத்த ஐந்து நிமிடத்தில் நேசன் அழைத்துவிட்டார் வசந்திக்கு,அவரும் செல்வம் தன்னிடம் பேசியதை கூறியவர்,

“நீ ஒண்ணும் கவலைபடாதமா….வரட்டும் பார்த்துக்கலாம்…”என்று தைரியம் கூறி வைத்துவிட.வசந்தியும் இந்த வரனாவது நல்லபடியாக நிலைக்க வேண்டும் என்று கடவுளுக்கு வேண்டுதல் வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!