நேசன் நெற்றியில் தன் மூக்கு கண்ணாடி கொண்டு தட்டிக் கொண்டிருந்தார்.அவரின் பக்கத்தில் வசந்தி யோசனையுடன் அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க,
“என்னய்யா யோசனை?….இது முன்ன மாதிரி இல்லங்க…நல்ல வரன்…மாப்பிள்ளைக்கு அம்மா இல்ல….அதனால தனக்கு வர பொண்ணு என்னை அம்மா போல பார்த்தக்கனும் அவ்வளவு தான் என்னோட ஆசை….மத்தபடி அவங்களோட குடும்ப பின்னனி எல்லாம் எனக்கு வேண்டாம்னு அவரே சொல்லிட்டாரு…..”என்று செல்வம் கூற,வசந்திக்கு சற்று நம்பிக்கை பிறந்தது,அவர் நேசனை பார்க்க,
“ம்ம்….சரி நானும் ஒருமுறை விசாரிச்சிட்டு உனக்கு கூப்பிடுறேன்….அதுவரைக்கும் நீ எதுவும் அவங்க கிட்ட சொல்ல வேண்டாம் புரியுதா….”என்று கூற,செல்வத்துக்கு பொடு பொடுவென்று வந்த போதும் அமைதியாக தலையை ஆட்டிவிட்டு சென்றார்.
Advertisement
“என்னம்மா நான் சொன்னதுல உனக்கு எதுவும் வருத்தம் இல்லையே….”என்று வசந்தியிடம் கேட்க,
“ப்பா என்னதிது….நீங்க எது செஞ்சாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும்….”என்று கூற அவரின் தலை தடவியவர்,
“அவன் சொன்ன வரைக்கும் எனக்கும் திருப்தி தான்….ஆனா நாமளும் ஒருமுறை விசாரிச்சிட்டா மனசு நிம்மதியா இருக்கும் பாரு….”என்று கூற வசந்தியும் சரி என்பதாய் தலையாட்டிவிட்டு சென்றார்.இந்த பேச்சுகள் நிகழும் போது விக்ரம் அங்கு இல்லாதவாரு பார்த்துக் கொண்டார் நேசன்.ஏனோ அவனின் பார்வை சுந்திரியின் மீது வஞ்சமாக விழுகிறது என்று புரிந்து கொண்டார் மனிதர் அதனாலே அவனையும்,லட்சுமியையும் நேத்திக் கடன் என்று கோவிலுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
Advertisement
“பாட்டி கிளம்பலாமா….”என்று தன் முகத்தில் வழிந்த வேர்வையை துடைத்துக் கொண்டே கேட்டான் விக்ரம்.
Advertisement
“இருடா கண்ணா….இதோ இரண்டு நிமிஷம் சாமிய தரிசிச்சிட்டு கிளம்பலாம்….”என்று கூறிக் கொண்டே லட்சுமி விளக்கை ஏற்றிக் கொண்டிருக்க,விக்ரமிற்கு எரிச்சலாக இருந்தது.
“ச்ச…இரிட்டேடிங்….எல்லாம் அவளாள வரது…..அவளுக்கு இருக்கு….”என்று சுந்தரியை தன் மனதில் எவ்வளவு திட்ட முடியுமோ அவ்வளவு திட்டிக் கொண்டிருந்தான்.
“அச்சோ பாட்டி நீங்க என்னை சாமியாராவே மாத்திடுவீங்க போல….”என்று அவன் கத்த,
“பேஷ் பேஷ்…..சாமியாரா ஆகுறதுக்கு உன்டான பத்து பொருத்தமும் உங்ககிட்ட இருக்கு….சபாஷ் லச்சு இப்ப தான் உன் பேரனுக்கு சரியான கெட்டப் போட்டிருக்கிற…”என்றபடி சுந்தரி அங்கு வர,
“அச்சோ கண்ணா என்ன பன்ற நீ….”என்று பதறி பேரனை பற்றிய லட்சுமி,
“நீ எதுக்குடீ இங்க வந்த….”என்று கோபத்துடன் கேட்க,
“மீ தான் என்னை விளக்கேத்திட்டு வர சொன்னுச்சு….அதான் வந்தேன்….”என்று சிலுப்பிக் கொண்டு சுந்தரி கூற,
“அப்ப வந்த வேலையை பாரு….”என்றுவிட்டு விக்ரமை தன் கையோடு அழைத்து சென்றுவிட்டார் லட்சுமி.
“விடு பாட்டி என்னை….அவளை இன்னைக்கு கொன்னுடுறேன்….”என்று ஆத்திரத்தில் அவன் கத்த,வருவோர் போவோர் எல்லாரும் அவனை ஒருமாதிரியாக பார்த்துவிட்டு செல்ல லட்சுமிக்கு தான் ஒருமாதிரியாகி போனது.
“கண்ணா சத்தம் போடத…எல்லாரும் நம்மளை தான் பாக்குறாங்க பாரு….”என்று கூறியும்விட தன்னை முயன்று நிதானித்தவன் சுற்றியிருந்தவர்களை பார்த்துவிட்டு வேகமாக வெளியில் சென்றுவிட்டான்.காரில் ஏறி அமர்ந்தவனின் முகம் முழுவதும் ரௌத்திரம் ஏறியிருந்தது.இதுவரை அவளை ஏதாவது சிறிதாக செய்து மன்னித்துவிடலாம் என்றிருந்தவனை இன்று இன்னும் சீண்டியிருந்தாள் சுந்தரி அது அவனின் மூர்க்க குணத்தை விசிறிவிட்டிருக்க,
“இனி உன்னை சிரிக்கவிடாம நான் பண்ணலை என் பேர் விக்ரம் இல்லடீ….”என்று மனதுக்குள் சூளுரைத்துக் கொண்டான் விக்ரம்.
சுந்தரி வீட்டிற்கு வந்தலிருந்து வசந்தி என்னவோ போல இருக்க,
“என்னமா???உடம்புக்கு ஏதாவது பண்ணுதா….”என்று அவரின் முகம்,கழுத்தை தொட்டு பார்த்தாள்.
“எனக்கு ஒண்ணுமில்ல…..நான் நல்லா தான் இருக்கேன்….”என்றவர் அவளின் கையை தட்டிவிட,
“பார்த்தியா நல்லா பொண்ணா இருந்தாலும் நீ தான் என்னை கெட்ட பொண்ணா மாத்துற….”என்று சுந்தரி முறுக்கிக் கொண்டு செல்ல போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த வசந்திக்கு மனதில் வேதனை கூடியது.தான் நலமுடன் இருக்கும் போதே தன் மகளிற்கு திருமணத்தை நல்ல முறையில் நடத்திவிட வேண்டும் என்று வேண்டுதலை மீண்டும் கடவுளின் பாதத்தில் வைத்தார் அவர்.இன்று தரகர் வந்து சென்றதலிருந்து இதை தான் செய்து கொண்டிருக்கிறார்.மனதின் எண்ணவோட்டங்கள் முகத்திலும் பரதிபலிக்க அதை மகள் சரியாக கண்டு கொண்டாள்.
லட்சுமியுடன் கோவிலுக்கு சென்றுவிட்ட வந்த விக்ரமின் முகம் கோபத்தில் இருக்க,அவனையே கவனித்துக் கொண்டிருந்த நேசன்,
“இப்ப என்ன பிரச்சனையை இழுத்துட்டு வந்திருக்க….”என்று கேட்டார்.
“உங்களுக்கு என்னை பார்த்தா தேர்ட் கிளாஸ் பாய் மாதிரி இருக்கா…..எப்ப பார்த்தாலும் ஏதோ என்னை சொல்லிக்கிட்டே இருக்கீங்க…..”
“உன்னோட நடத்தை வச்சு தான் கேட்குறேன்…..”என்று நேசனும் அசராமல் பதில் கூற,
“அப்படி என்ன என்னை விட அவ உங்களுக்கு முக்கியமா போயிட்டா….”என்று நேரிடையாகவே அவன் கேட்க,அவனை ஆழ்ந்து பார்த்தவர் நீண்ட மூச்சொன்றை இழுத்துவிட்டு,
“இந்த தாத்தாவுக்கு எல்லாமுமா இருந்தவ….நான் கஷ்படும் போது என்கூட நின்னவங்க அவங்க தான்….இதெல்லாம் உனக்கு சொன்னாலும் புரியாது….நீயா உணரும் போது புரியும்….”
“அப்படி என்ன நீங்க என்ன கஷ்டபட்டீங்க….உங்களுக்கு தான் எல்லா வசதியும் இருக்கே…..அதோட டாட் தான் உங்களை லண்டன் கூப்பிட்டாங்க நீங்க தான் வரலை சொல்லிட்டீங்க….அது உங்களோட மிஸ்டேக்….”என்று விக்ரம் ஆதங்கமாக பேச,அவனை பார்த்து மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு,
“காசு இருந்தா மட்டும் போதுமா…..தனக்கான உறவுகள் இல்லாம தனியா இருக்குறது எவ்வளவு கொடுமை தெரியுமா….”என்றவரை முகம் சுழிக்க பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம்.அவனே ஒரு தனி காட்டு ராஜா அவனிடம் பாசம்,உறவு என்று கூறிக் கொண்டிருந்தவரை ஏதோ வேற்று கிரக வாசி போல் அவன் பார்த்துக் கொண்டிருக்க,
“உன்னை வளர்த்தவனுக்கே இது புரியலை உனக்கு எங்க இதெல்லாம் புரிய போகுது….”என்றுவிட்டு அவர் சென்றுவிட,
“ப்ச் வேஸ்டாவ் டைம்….”என்று தன் இயர் போனை காதில் மாட்டிக் கொண்டு பாடலை கேட்க தொடங்கிவிட்டான்.
அடுத்த நாள் காலை நேசன் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருக்க லட்சுமி அவரை முறைத்தபடி அனைத்தும் செய்து கொண்டிருந்தார்.காலை தன் ஓட்டத்தை முடித்துக் கொண்டு வந்த விக்ரம்,
“ஹாய் பாட்….என்னோட லெமன் ஜூஸ் ரெடியா….”என்றுவிட்டு தன் அறைக்குள் நுழைய,
“இவளை என்ன சொன்னாலும் திருந்தமாட்டா….”என்று திட்டிக் கொண்டே தன் சாப்பாடை முடித்தவர் மனைவி வருகிறாளா என்று பார்க்க அவரோ இவரை கண்டு கொள்ளாமல் பேரனுடன் ஐக்கியம் ஆகிவிட்டார்.இனி இவளுக்காக காத்திட்டு இருந்தா சரியா வராது என்று நினைத்த நேசன்,
“லட்சுமி…..”என்று இரண்டு முறை கத்தி அழைத்தும் பொறுமையாக பேரனுடன் பேசியபடி வெளியில் வர,கோபத்தில் பல்லை கடித்தவர்,
“லட்சுமி நான் இங்க உன்னை கூப்பிட்டுட்டு இருக்கேன்….உனக்கு கேட்குதா இல்லையா….”என்று கத்த,
“ச்சு…ஏன் இப்படி கத்துறீங்க….”என்று திட்டியபடி அவரிடம் வர,
“நான் வெளியில போயிட்டு வர லேட்டாகும்….சொன்னதெல்லாம் நியாபகம் இருக்குள்ள….ஒழுங்கா இரு…..அவனை கவனிக்குறேன்னு நீ சாப்பிடாம இருந்திடாத….மாத்திரை எல்லாம் உன்னோட ட்ரெயில எடுத்து வச்சிருக்கேன்….”என்று கூற லட்சுமி அனைத்துக்கும் தலையாட்டிக் கொண்டிருந்தார்.விக்ரம் இதையெல்லாம் தூரத்தில் ஒரு பார்வையாளர் போல் பார்த்துக் கொண்டிருந்தான்.அவன் முகத்தில் எந்தவித உணர்வுகளும் இல்லை விவரம் தெரிந்ததலிருந்து தனியாகவே இருக்க பழக்கப்பட்டவனுக்கு இதெல்லாம் புதிதாகவும் சற்று எரிச்சலாகவும் தான் இருந்தது.
விக்ரம் பிறந்ததிலிருந்தே தாய்,தந்தை என்று அதிக ஒட்டுதல் அவனிற்கு இருந்ததில்லை.தாயும் சரி தந்தையும் சரி அதை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை.ஆனால் லட்சுமிக்கும்,நேசனுக்கும் அவனின் நடவடிக்கையை ஆரம்பத்திலேயே கண்டு ரவியிடம் கூறியிருக்க,
“நான் என்னமா பண்ண…..அவன் அப்படி தான் என்கிட்டேயும் ரொம்ப ஒட்டமாட்டேங்குறான்….எனக்கு இருக்குற வேலையில இவனை பார்க்கவும் முடியலை….”என்று கூற,
“என்னடா இப்படி சொல்லுற….அவன் உன் பையன்டா…அவனை நீயும் உன் பொண்டாட்டியும் தான் பார்த்துக்கனும்…..அவனை அவன் போக்குலேயே விட்டா நல்லா இருக்காது ரவி….”என்று லட்சுமி எடுத்துக் கூற,
“அப்படி என்ன பணம் பணம்னு அது பின்னாடி ஓடுறீங்க…..நம்ம கிட்ட இல்லாத பணமா….பிள்ளையவிட பணம் முக்கியமில்ல….”என்று நேசன் ஆதங்கமாகவே கூற,
“இவ்வளவு சொல்லுற நீங்க பார்த்துக்க வேண்டியது தான….”என்று ரவி கோபமாகவே கேட்க,
“என்ன தான் நாங்க பார்த்துக்கிட்டாலும் அம்மா அப்பா மாதிரி வராது…..நாங்க சொல்லறது சொல்லிட்டோம் அதுக்கு அப்புறம் உன் இஷ்டம்…..”என்று லட்சுமி கூறிவிட,ரவிக்கு தன் தவறு சற்று புரிய நான் செய்தது அதற்கு அடுத்து அவர் நின்றது என்னவோ மனைவியிடம் தான்,
“வாட்….ஆர் யூ மேட் ரவி????”
“நிரோ….நான் சொல்லுறதை கொஞ்சம் கேளு….விக்ரம் அவன் நம்ம குழந்தைமா நாம தான பார்த்துக்கனும்….அதனால தான் சொல்லுறேன் நீ வீட்டுல இரு…..”என்று கூற,
“வொய் ஐ கவ் டூ லீவ் மை ஜாப்….யூ லீவ் அண்ட் டெக் கேர் யூர் சைல்ட்….ஐ அல்ரெடி டோல்டு யூ திஸ் சில்ரன்,கேர் டேக்கிங் தட் நாட் இன் திஸ் கன்ட்ரீ…..”என்று திட்டிவிட்டு சென்றுவிட.ரவிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.இதெல்லாம் அவர் அறிந்த ஒன்று தான் ஆனால் அவர் தமிழ்நாட்டில் வளர்ந்து மேல் நாட்டில் குடியேறியதால் சிலவற்றை மாற்ற முடியவில்லை.ஒருகட்டத்தில் லட்சுமி மற்றும் நேசனின் திட்டுகள் தாங்காமல் அவனிற்கு என்றே ஒரு கேர் டேக்கரை வீட்டோடு வைத்துவிட்டார்.
“விக்ரம்….”என்று லட்சுமி அழைக்க தன் நினைவிலிருந்து வெளிவந்தவன்,
“என்ன கண்ணா திடீர்னு ஏதோ போல ஆகிட்ட…..”என்று வாஞ்சையுடன் கேட்க,அவரின் பாசத்தை புறக்கணித்தவன் அவரிடமிருந்து தள்ளி அமர்ந்து கொண்டு,
“ம்ம் அதெல்லாம் ஒண்ணுமில்ல….எனக்கு பசிக்குது பாட்…ஏதாவது கொடு….நான் ஒரு போன் பேசிட்டு வந்துடுறேன்….”என்று கூறிவிட்டு வீட்டிற்கு வெளியில் வந்துவிட்டான்.சட்டென்று வரும் அன்பை அவனால் ஏற்க முடியவில்லை ஏன் என்று இதுவரை அலசி ஆராய்ந்ததும் இல்லை அவன்.
“சீக்கிரமா இங்கிருந்து கிளம்பிடனும்….இல்லை என்னையும் இவங்களை மாதிரி செண்டி மெண்டல் பூல் ஆக்கி உட்கார வச்சிடுவாங்க….”என்று தனக்குள் சொல்லிக் கொண்டவனுக்கு சுந்தரி எல்லாம் இரண்டாம் பட்சமாகி போனாள்.உடனே தன் டிக்கெட்டை புக் செய்துவிட்டவனுக்கு அப்போது தான் மூச்சே வந்தது.
“இந்த பைத்தியத்தை பழிவாங்குறேன்னு வந்து எனக்கு தான் பைத்தியம் புடிச்சிடும் போல இருக்கு….”என்று தனக்குள் கூறிக் கொண்டே மேலே பார்க்க,அப்போது தான் சுந்தரி இறங்கிக் கொண்டிருந்தாள்.
“சரி….மீ….”என்று கூறிக் கொண்டே வர அவளை பார்த்ததும் துடுக்குத் தனம் தலை தூக்கியது விக்ரமிற்கு,
“ஆமா இவ பெரிய உலக அழகி இவளை யாராவது தூக்கிட்டு போயிட போறாங்க….”என்று நக்கலாக கூற,
“அச்சோ ரொம்ப புகழாதீங்க விக்ரம்….”என்று அவனை பார்த்து அழகு சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு அவள் சென்றுவிட,
“எது சொன்னாலும் அசர மாட்டேங்குறா….நான் ஊருக்கு கிளம்பறதுக்குள்ள இவளை ஏதாவது செஞ்சிட்டு தான் போகனும்….என்ன பண்ணலாம்….”என்று மனதிற்குள் கூறிக் கொண்டிருக்க,
“கண்ணா….சாப்பிட வாப்பா….”என்று லட்சுமி கூப்பிட,
“யா கம்மிங் பாட்….”
“வாப்பா….உட்காரு….”என்று அவனிற்கு பரிமாற,
“இதெல்லாம் நான் பார்த்துப்பேன்….”என்று கூறி தனக்கு வேண்டியதை தானே எடுத்துக் கொண்டு அமர்ந்தான் விக்ரம்.லட்சுமி அவனின் முகம் பார்ப்பதும் பின் குனிவதுமாக இருக்க,
“என்ன பாட் என்கிட்ட ஏதாவது சொல்லனுமா….”என்று கேட்க,
“அதனால…..”என்றவனின் பார்வை மேலும் கூர்மையடைந்ததை லட்சுமி உணரவில்லை.
“அதில்லைப்பா….நீ சும்மா தான் அவளை சீண்டுற அவளும் உன்கிட்ட சும்மா தான் கிண்டல் பண்ணிட்டு போறா….ஆனா பார்க்குறவங்க அப்படி நினைக்கமாட்டாங்க….”
“ஓஓ…எப்படி நினைப்பாங்க….”என்று நல்லபிள்ளை போல கேட்க,
“தப்பா பேசுவாங்கப்பா….அது உனக்கும் நல்லது இல்லை அவளும் நல்லதில்லை….அதனால தான் சொல்லுறேன்….”என்று பேரனிற்கு பாடம் நடத்த விக்ரமிற்கு தேவையான விஷயம் கிடைத்தவுடன்,
“சரி சரி பாட்….நான் இனி ஒழுங்கா இருக்கேன்….ஓகே…”என்றுவிட்டு எழுந்துவிட்டான்.
இங்கு நேசனோ வசந்தியிடம்,
“வசந்திம்மா….நான் விசாரிச்ச வரைக்கும் மாப்பிள்ளை வீடு நல்லமாதிரி தான்….எனக்கு ஓகே தான்….நீ என்னமா சொல்லுற….”என்று கேட்டுக் கொண்டிருக்க,
“நீங்க பார்த்தா சரியா தான் இருக்கும்பா….”என்றவர் லட்சுமியிடம் கூற சொல்ல,
“பின்ன என்னமா….அவன் பார்வையே சுந்தரி மேல ஏதோ தீராத விரோதி போல இருக்கு அவன் கிட்ட இதை பத்தி மூச்சே விடக்கூடாது சொல்லிட்டு தான் வந்திருக்கேன்…..சரிமா நான் மீதியை வந்து பேசுறேன் வைக்குறேன்……”என்று கூறி வைத்துவிட வசந்திக்கு தான் இப்போது தலை சுற்றியது. நேசன் சுந்தரியின் திருமணம் பற்றி அவனிடம் கூறக்கூடாது என்று லட்சுமியிடம் கூறியிருக்க அவரோ,
“அது எப்படி என் பேரனை பத்தி நீங்க தப்பா நினைக்கலாம்….”என்று நினைத்தவர் தன் பேரனிற்கு புத்தி கூறி அவனை திருத்திவிடலாம் என்று தப்பு கணக்கு போட்டு வேறு மாதிரி கூறவிட விக்ரமனோ அதை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டான்.விளைவு நேசன் பயந்தது போல் அனைத்தும் அலங்கோலமாகிவிட்டது. தன் மனதில் நினைத்ததை சாதித்துவிட்டு நாட்டிற்கு திரும்பியிருந்த விக்ரமின் முகத்தில் கர்வம் இன்னும் கூடி போயிருந்தது.