Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

குட் லக் சுந்தரி

குட் லக் சுந்தரி….9

குட் லக் சுந்தரி……9

வசந்தி அழுதழுது ஓய்ந்து போயிருந்தார்.அவரின் பக்கத்தில் அமர்ந்திருந்த லட்சுமி அவரை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருக்க,

“இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி அழுதுகிட்டு இருக்க வசந்தி??” என்று சற்று கோபமாகவே கேட்டார் நேசன்.

“என்னங்க நீங்க அவளே மனசொடிஞ்சி போயிருக்கா…அவ கிட்ட எதுக்கு கத்துரீங்க….”என்று லட்சுமி கூற,



Advertisement

“ஏன் மனசொடியனும் தான் நான் கேட்குறேன்….எவனோ ஒருத்தன் நம்ம பொண்ணை வேண்டாம்னு சொல்லிட்டான்னா….நாம ஒடிஞ்சு போய் உட்காரனுமா….”என்று ஆவேசமாகவே அவர் கேட்க,வசந்தி பயந்து விட்டார் நேசனைக் கண்டு.எப்போதும் தன்மையுடன் பேசும் தன் நேசனப்பா இன்று கோபத்தோட பேச மேலும் அழுகை தான் கூடியது வசந்திக்கு.

“போதும் நீங்க வாங்க நாம கிளம்புவோம்…..சுந்தரி இருக்கா அவ பார்த்துப்பா….”என்று லட்சுமி கணவனின் கோபம் கண்டு அழைத்து செல்லபார்க்க,

“நீ விடு என்னை….”என்றவரின் கோபம் லட்சுமிக்குமே புதிதாக இருந்தது.

Advertisement

“என்ன சொல்லிட்டான் அந்த தரகர் மாப்பிள்ளைக்கு ஏதோ பிடிக்கலை சொல்லிட்டாரு சொன்னான்….அதுக்கு இவ அழுது வடிஞ்சா ஆச்சா….பிடிக்காத பய கிட்ட நம்ம பொண்ணு போய் எப்படி இருப்பா அதெல்லாம் யோசிக்கமாட்டாளா இவ….”என்று நேசன் கூற,கணவன் கூறுவதில் உண்மை இருந்தாலும் அதை இப்போது ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் வசந்தி இல்லை என்று லட்சுமிக்கு புரிய அவர் பாவமாக சுந்தரியை பார்த்தார்.’எப்படியாவது காப்பாத்து’ என்பது போல் அவரின் பார்வையிருக்க,சுந்தரி அவருக்கு ஒழுங்கு காட்டிவிட்டு,

Advertisement

“தாத்தா….நீங்க வாங்க நான் அம்மா கிட்ட பேசிக்கிறேன்…..”என்று அவரை கைபிடித்து அழைத்துக் கொண்டு வெளியில் சென்றுவிட்டாள்.

“நீ ஒண்ணும் தப்பா நினைச்சுக்காதமா….அவருக்கு ஏதோ கிறுக்கு பிடிச்சிருச்சு நினைக்கிறேன்…அதான் இப்படி எல்லார் கிட்டேயும் எரிஞ்சு விழுறாரு….”என்றார் லட்சுமி வசந்தியை சமாதனம் படுத்தும் நோக்கோடு.

“ம்ம் புரியுதுமா…ஆனா இரண்டு நாள் முன்னாடி வரை வரேன் சொல்லிக்கிட்டு இருந்தவங்க இப்ப திடீர்னு வரலை சொன்னதும் என்னால தாங்க முடியல….அப்படி என்ன என் பொண்ணு கிட்ட குறை கண்டாங்கனு கேட்டா பதிலே சொல்லலையாம் அந்த பையன்….அது தான்மா எனக்கு என்னவோ போல இருக்கு…..”என்று தன் மனதில் இருந்ததை கூற லட்சுமிக்கு புரிந்தது வசந்தியின் நிலை,

Advertisement

“விடுமா அவனுக்கு கொடுத்து வைக்கலை….அவ்வளவு தான்….”என்று லட்சுமி கூற,வசந்தி அமைதியாக இருந்தாரே தவிர எதுவும் பேசவில்லை.

“ம்மா எந்திரிங்க….”என்ற படி உள்ளே வந்தாள் சுந்தரி.

“அம்மாவ பார்த்துக்கடீ….”என்று அவர் எழுந்து கொள்ள,

“ம்ம் சரி லச்சு….”

“உனக்கு கொழுப்பு கூடி போச்சுடீ….”என்று அவளின் கன்னத்தில் இடித்துவிட்டு அவர் செல்ல,சுந்தரியின் முகத்தில் அழகான புன்னகை.அதையே பார்த்துக் கொண்டிருந்த வசந்திக்கு மனமெல்லாம் வலித்தது.தான் இவளை தத்தெடுத்து அதனால் இவளின் எதிர்காலம் பாழாகிவிட்டதோ என்று பயம் வந்ததது.

“ம்மா உன்னை எந்திரிங்கனு சொன்னேன்….”என்று அவரின் கையை சுந்தரி பிடிக்க,

“என்னால தான் எல்லாம் கெடுதோ சுந்தரி….”

“ப்ச்….ஆரம்பிச்சிட்டீங்களா….ம்மா இதெல்லாம் ஒரு விஷயமா….கல்யாணம் மட்டும் தான் வாழ்க்கையா…..”

“துணை இல்லாம வாழறது கஷ்டம் சுந்தரி…”என்ற வசந்தியின் முகத்திலும்,குரலிலும் தான் அத்தனை வலி.

“ம்மா….நாம என்ன தான் அழுதாலும் என்ன நடக்கனுமோ அது தான் நடக்கும்….அதனால இப்படி அழுது உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க…..”என்றபடி அவரை பிடித்து எழுப்பி அமர வைத்து அவருக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

“இங்க பாருங்கம்மா….எனக்கு கல்யாணம் நடக்கனும் இருந்தா அது கண்டிப்பா நடக்கும்….இல்லைனா இல்லை…..இது தான் நிஜம்….அதை ஏதுக்க பழகிக்குங்க….இதை எனக்கு சொல்லிக்கொடுத்ததே நீங்க தான்….”என்று அவரின் கை பற்றி கூற,வசந்திக்கு அந்த வார்த்தைகள் வலி தந்தத போதும் மகள் கூறுவதில் இருக்கும் உண்மையும் புரிந்தது.

“ம்ம்…மன்னிச்சுக்கடா….நான் ரொம்ப எமோஷனல் ஆகிட்டேன்….”என்று அவரும் மகளின் கையை இறுக்கமாக பிடிக்க,

“மை ஸ்வீட் மீமீ…..”என்று அவரின் நெற்றி முட்டி சிரித்தவளின் கள்ளம் கபடமில்லாத சிரிப்பு வசந்தியையும் தொற்றிக் கொண்டது.

&&&&&&&&&&&&&&&&&&&&&

ஒரு மாதம் கழித்து,

லண்டன் லம்பத் நகரில் தன் வில்லாவில் ப்ரெஞ்ச் விண்டோ வழியாக வெளியில் விழும் பனித்திவலைகளை பார்த்தபடி தன் தேநீரை அருந்திக் கொண்டிருந்தான் விக்ரம்.முகத்தில் தீவிர யோசனை அதைக் கண்ட டேவிட்,

“வாட் ப்ரோ…..அவ்ட்ர் யூ கேம் பேக் இந்தியா…..யூ டோட்டலி சேஞ்ச்….”என்று கூற திரும்பி அவனை முறைத்துவிட்டு தன் தேநீரை பருக தொடங்கினான் விக்ரம்.

தன் தாய்நாட்டிற்கு திரும்பிவிட்டான் அதுவும் தான் நினைத்தை சாதித்துவிட்ட திருப்தியுடன் திரும்பியிருந்தான்.முதலில் அவன் நினைத்தது போல் தான் அனைத்தும் நடந்திருந்தது,ஆனால் நேற்று அவளின் உற்சாக குரலை கேட்டதிலிருந்து மண்டையில் ஏதோ வண்டு குடைவது போல் ஒரு பிரம்மை.

விக்ரம் இங்கு வந்ததலிருந்து அவ்வபோது லட்சுமியிடம் பேசிக் கொண்டிருக்கிறான்.அது லட்சுமியின் நலனை அறிவதற்காக அல்ல சுந்தரி பற்றிய தகவலை கேட்பதற்காக.போன மாதம் வரை அவன் நினைத்தபடி தான் தகவல்கள் வந்திருந்தது.அவளிற்கு இன்னும் வரன் சரியாக அமையவில்லை அதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு கவலையாக இருக்கிறது என்று வருத்தமாக பேரனிடம் லட்சுமி பகிர்ந்திருக்க கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு உள்ளுக்குள் அத்தனை மகிழ்ச்சி.ஆனால் அதை வெளிக்காட்டாமல் அவனும் வருத்தப்படுவது போலவே பேசி வைத்திருந்தான்.

சரி இனி இது தான் அவள் வாழ்க்கை என்னிடம் மோதியதற்கு வாழ்நாள் முழுவதும் கஷ்டபட்டும் என்று ஒரு குரூர புத்தி அவனிடத்தில்.ஆனால் அந்த சந்தோஷம் நேற்று லட்சுமி கூறியதை கேட்ட பின் காணாமல் போயிருந்தது.சுந்தரிக்கு நல்ல இடத்தில் திருமணம் முடிவாகிவிட்ட செய்தியை தான் பகிர்ந்திருந்தார்.அப்போது தான் ஏதோ கேட்க வந்த சுந்தரியின் உற்சாக குரலும் விக்ரமின் காதிற்குள் விழ அப்போதிலிருந்து அந்த குரல் அவனை ஏதோ செய்து கொண்டிருந்தது.

“ப்ரோ….”மீண்டும் டேவிட்டின் குரல் அவனின் கவனத்தை நிகழ்வுக்கு கொண்டுவர,

“ப்ச்….டோன்ட் இரிட்டேட் மீ….”என்றான் விக்ரம்.முகத்தில் இன்னும் யோசனை ரேகை கூடியிருந்தது.

“ஐ ஜஸ்ட் கால்டு யூ…..வாட் கேபன் டூ யூ….அகைன் தட் கேர்ள்…..வாட் கர் நேம்….”என்று டேவிட் தலையை தட்டி யோசித்துக் கொண்டிருக்க,

“சுந்தரி…..”என்ற விக்ரமின் முகத்தில் சிறிய ஒளி.

“யா…..”என்றவன் தோழனின் முகத்தை ஊன்று கவனிக்க,டேவிட் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த விக்ரமிற்கு கோபம் தலைக்கேறியது பக்கத்தில் இருந்த குஷனை எடுத்து அவன் மீது எறிந்து,

“வாட்????”என்று அடி தொண்டையில் கத்தினான்.

“சி…சம்திங் கேபன் டூ யூ…வென்யவர் ஐ டேக் கர் நேம்….யூ சிலிப்பிங்….ஐ திங் யூர் ன் லவ்….”என்று டேவிட் கூற,

“நோ….நெவர்…..”என்று தன்னை மீறி கத்திய விக்ரம் மீண்டும் சன்னல் பக்கம் திரும்பிக் கொள்ள,டேவிட்டும் விடுவதாக இல்லை போல,

“தென் வாட்….”

“ப்ச் டேவிட் ஐ ம் டயர்ட்….வி டாக் லேட்ர்…..”என்று கூறிவிட

“ஆர் யூ….”என்று மேலும் ஏதோ கேட்க வந்தவனை கேட்கவிடாமல் செய்தது விக்ரமின் இறுக்கம் பதிந்த முகம்.இனி இவனிடம் கேட்டாலும் பதில் வராது என்று டேவிட்டும் தோளைக் குலுக்கிக் கொண்டு சென்றுவிட்டான்.

டேவிட் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட விக்ரம்,

“டிட் ஐ???”என்று கண்ணாடி முன்பு தன்னை பார்த்தே கேட்டுக்கொண்டே ஏளனமாக சிரித்துவிட்டு பின்,

“எனக்கு அவ எல்லாம் ஒரு ஆளா…என் பக்கத்துல நிக்குறதுக்கு கூட ஒரு தகுதி இருக்கு….”என்று கர்வமாக கூறிக் கொள்ள அவனின் முகத்திலும் அதன் வெளிபாடு சற்று அதிகமாகவே வெளிப்பட்டது.

“ஆனாலும் நீ சிரிச்சிருக்க கூடாது…தப்பாச்சே…”என்று வில்லத்தனமாக கூறிவிட்டு யாருக்கோ அழைத்து சிலவற்றை கூறிவிட்டு வைக்க அதுவரை இருந்த அவனில் குடி கொண்டிருந்த இறுக்கம் விடைபெற்றது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இரு மாதங்கள் கழித்து,

“சாமி…என்னை இப்ப யாரு பார்க்க வந்தாலும் அய்யா இப்ப வேலையா இருக்காங்கனு சொல்லு….வாச கேட்டை சாத்து….நான் சொல்லாம யாரும் வெளில போகக்கூடாது….புரியுதா…..”என்று கோபமாக உரைத்துவிட்டு தோட்டத்திற்குள் நுழைந்தார்.சாமிக்கு நேசனின் இந்த கோபம் புதிது அல்ல தான் ஆனால் இன்று அவரின் முகத்தில் இருந்த இறுக்கம் எதையோ உணர்த்த தோட்டத்தின் வாயிற் கதவை இழுத்து சாத்திவிட்டார் சாமி என்கிற சாமியப்பன்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அந்த தோட்டத்தில் வேலை செய்யும் வேலு என்பவன் அவரின் முன் நடுங்கியபடி நின்று கொண்டிருந்தான்.

“ய்யா….என்னய்யா ஆச்சு….”என்று வேலுவின் மனைவி மரகதம் கேட்க,

“அதை உன் புருஷன் கிட்டேயே கேளு சொல்லுவான்….”என்றவரின் முகத்தில் அத்தனை ரௌத்திரம் குடி கொண்டிருந்தது.

“அய்யா….மன்னிச்சுடுங்க…காசுக்கு ஆசபட்டு இப்படி பண்ணிட்டேங்க…..”என்று வேலு கூற,அடிக்க கையை ஓங்கிவிட்டார் நேசன்.வேலுவிற்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.அவனின் மனைவியும் இங்கு தான் வேலை செய்கிறாள்.அவளின் முன்பு கை நீட்ட கூடாது அதோடு இதில் சுந்தரியின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்ற காரணத்திற்காகவே தன்னை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தார் நேசன்.

“என்னய்யா என்ன செஞ்ச???”என்று மரகதம் கேட்க,அடுத்த நிமிடம் நேசனின் கால்களை பிடித்திருந்தான் அவன்,

“ஐய்யா மன்னிச்சிடுங்கய்யா….தெரியாம பண்ணிட்டேன்…..”என்று கெஞ்ச,

“ச்சீ….என்னை தொடாத….சாமீ…..”என்று அவர் கத்திய கத்தலில்,

“ஐயா…”என்று பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தார் சாமியப்பன்.

“இவன் கணக்கை முடிச்சு அனுப்பிடு….”என்றுவிட,

“அய்யோ…..”என்று மரகதம் தலையில் அடித்துக் கொண்டு அழ,

“நீ எதுக்கு அழுதுகிட்டு இருக்க….உன் பிள்ளைக படிப்புக்கு நான் எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன்….நீ நம்ம ராமசாமி தோட்டத்துல வேலை பாரு….நான் அவன் கிட்ட பேசிட்டேன்…”என்றவர் வேலு வை காட்டி,

“இவன என் கண்முன்னாடி காட்டாத…இழுத்துட்டு போ….அவன் என்ன தப்பு பண்ணான்னு உன் வீட்டல போய் கேட்டுக்க….இங்க எதுவும் பேசக்கூடாது….கிளம்பு…”என்றுவிட்டார்.அன்று தோட்டத்தில் நான்கு,ஐந்து பேர் மட்டுமே இருந்தனர்.அவர்களிடமும் இங்கு நடந்ததை வெளியில் கூற வேண்டாம் என்று கூறிவிட,

“காரணமில்லாம நீங்க எதையும் செய்யமாட்டீங்கனு தெரியும்யா….”என்றுவிட்டனர் அவர்களும்.நேசனிற்கு பொய்,திருட்டு இரண்டும் ஆகாவே ஆகாத ஒன்று தன்னிடம் வேலை பார்பவர்களிடம் அவர் அதைக் கூறவும் செய்வார்.

“என்கிட்ட வேலை பார்க்கருவங்க எல்லாரும் என் குடும்பம் மாதிரி தான்  உங்களுக்கு என்ன தேவையோ அதை என்கிட்ட தயங்காம கேளுங்க….ஆனா பொய்யும்,திருட்டும் மட்டும் பண்ணாதிங்க….”என்று கூறியவர் அதை கடைபிடிக்கவும் செய்யதார்.அதனால் அங்கு இருந்தவர்களுக்கு வேலு எதும் திருடி விட்டான் என்று தான் நினைத்தனர்.

இங்கு ஒரு காப்பி ஷாப்பில்,

“நீ என்ன சொல்லுற???”என்று சுந்தரி கேட்க,

“எனக்கு ஒரு கால் வந்துச்சு….”என்று எதிரில் இருந்தவன் கூற,

“நம்பர் என்ன???”

“இல்ல அது பிரைவேட் நம்பர்…..பேசினது ஒரு ஆம்பள தான்….”என்றான் தீபக்.

“ம்ம்…சரி…அண்ட் தேங்க்ஸ்…..”என்றுவிட்டு எழ,

“எங்க அம்மாக்கு இன்னும் தெரியாது…..நான் கேட்டுட்டு ரொம்ப ஷாக் அகிட்டேன்…அதை உன கிட்ட சொல்லனும் தோணுச்சு சொல்லிட்டேன்….”என்று கூற,

“சரி….”என்றுவிட்டு சுந்தரி அந்த ஷாப்பிலிருந்து வெளியில் சென்றுவிட்டாள்.

“டேய் உனக்கே இது ஓவரா இல்ல…..நீ பெரிய உண்மை விளம்பி மாதிரி பேசிக்கிட்டு இருக்க…”என்று அவனின் நண்பன் பின்னிருந்து அவனை குத்த,

“டேய் சும்மா இருடா….அவகிட்ட இருக்குற கடையே இப்ப பத்து லட்சத்துக்கு மேல போகும்….அதோட….”என்று அவன் ஏதோ கூறிக் கொண்டிருக்க,

“டேய்….டேய்….”என்று வாயை மூடினான் அவனின் நண்பன்.

“என்னடா???”என்றவனை பின் பக்கம் பார்க்கும் படி கண்ணை காட்ட,அவர்களின் பின் இரு கைகளையும் கட்டியபடி நின்றிருந்தாள் சுந்தரி.

“உன்கிட்டேந்து இதை தான எதிர்பார்க்க முடியும் தீபக்…….”என்று நிதானமாக கூறியவள் தான் விட்டு சென்றிருந்த கை பையை எடுத்துக் கொண்டு,மீண்டும் தீபக்கிடம்

“ தேங்க்ஸ்….”என்றுவிட்டு சென்றுவிட,

“அச்சோ சொதப்பிடுச்சுடா…..”என்று கூறி தலையில் அடித்துக் கொண்டான் தீபக்.

“டேய் அவளுக்கு என்ன நம்ம காலேஜ்க்கே தெரியும்…நீ எப்படினு……” என்று அவனையே வாரிவிட்டான்.

“அட ஏன்டா நீ வேற…எனக்கே இப்ப தான் கல்யாணம்னு சொல்லிட்டு ஒரு பொண்ணு போட்டோவை கொடுத்தாங்க….திறந்து பார்த்தா இவ….இவளை காலேஜ்ல எனக்கு ஆகாவே ஆகாது தான் ஆனா…இப்ப அவ நல்லபடியா இருக்கா….இவளை கட்டிக்கிட்டா நாமளும் செட்டிலாகிடலாம்னு யோசிச்சேன்….ஆனா சொதிப்பிடுச்சு…”

“டேய்…அந்த ஆளு அவ கிட்டேயே நெருங்கூடாது அப்படிங்குற மாதிரி பேசினான்டா….யாரா இருக்கும்…..இவ பின்னாடியெல்லாம் ஒருத்தன் சுத்துரானா….”என்று தீபக் கேட்க,

“உனக்கு எதுக்குடா அதெல்லாம்….வா நாம போகலாம்….”என்றவன் தீபக்கை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.சுந்தரி தீபக் கூறியதையே யோசித்தபடி வீட்டிற்கு வர அங்கு நேசனோ யாரிடமும் எதுவும் சொல்லாமல் லண்டன் புறப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!