Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

குளிர் 7

குளிர் 7

 

வண்ணமயமான தோட்டத்தின் மத்தியில் ஆருஷும் ஆலியாவும் விளையாண்டு கொண்டிருக்க.. அவர்களை சற்று தூரத்திலிருந்து புன்னகை சுமந்த விழிகளுடன் பார்த்துகொண்டிருந்தாள்.. தேஜஸ்வினி..

 



Advertisement

அப்பொழுது அங்கு வந்த கேர்டேக்கர் பிள்ளைகளுக்கு சிற்றுண்டி கொண்டு வர.. தான் ஊட்டுவதாய் கூறி… அதனை வாங்கிக்கொண்டவள்.. பிள்ளைகளை நோக்கி சென்றாள்..

 

பப்பு ஆலியா இங்க வாங்க.. சாப்பிட்டு விளையாடலாம்.. என்று அழைத்து இருவருக்கும் பழகலவைகளை ஊட்ட.. இருவரும் சமத்தாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.. ஆனால் ஆலியா மட்டும் அடிக்கடி தேஜுவின் முகத்தை கூர்ந்து பார்க்க.. அதில் தன்னவனைக் கண்ட தேஜு ” என்னடா பட்டு எதுக்கு இப்படி பார்க்குறீங்க.. என மெல்லிய சிரிப்புடன் கேட்க..

Advertisement

 

Advertisement

அதற்கு பதில் கூறாது.. ஆலியா கேட்ட மறுக்கேள்வி தேஜுவின் முகத்தினில் இருந்த சிரிப்பை மறைத்தது..

 

நீங்க ரொம்ப கெட்டவங்களா தேஜும்மா.. உங்களுக்காகத்தான் பப்பா எங்கள இங்க இருந்து அனுப்பிட்டாரா.. என இடுப்பில் இருகரத்தையும் வைத்து கோபமுகத்துடன் கேட்ட ஆலியாவின் சொற்கள் தேஜுவின் மனதை வாள் கொண்டு அறுத்தது…

Advertisement

 

இத்தனை நாட்கள் அவள் மனதில் வைத்து மறுகிக்கொண்டிருந்தவையை ஆலியா வார்த்தை கொண்டு கேட்டுவிட.. மனதால் மரித்து போனாள்.. தேஜஸ்வினி..

 

அச்சிறு பிஞ்சின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல்.. விழிகளிலிருந்து வழியும் நீரை துடைக்க கூட மனமின்றி அவள் ஸ்தம்பித்து நின்றிருக்கும் வேளை.. அவளை காக்கவென அங்கு வந்தான் சூர்யதேவ்..

 

தேஜுவின் அருகே வந்த சூர்யதேவ் அவளை ஒரு கரத்தில் பிடித்துக்கொண்டு மறுகரத்தில் தன் மகளின் பிஞ்சு கையைப் பற்றி ” பேபி உன்கிட்ட யாருடா இப்படியெல்லாம் சொன்னது.. என மெல்லிய குரலில் விசாரித்தான்..

 

தாதி தான் பப்பா சொன்னாங்க.. இவங்க ரொம்ப கெட்டவங்களாம்.. ஆலிக்குட்டிய அதிபாங்களாம்.. அதனால நான் இவங்க கூட சேரக்கூடாதாம்.. என தன் கண்களை விரித்து ஆலியா கூற.. சூர்யதேவ் தன் கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் பிரயணத்தப்பட்டான்..

 

சிறுகுழந்தைக்கு இல்லாததையும் பொல்லாததையும் கூறி கெடுத்த தன் அத்தை மேல் கோபம் பெருகினாலும்.. முதலில் ஆலியாவின் மனதில் பதியவைத்ததை கலையவேண்டும் என்று நினைத்தவன்.. ” பேபி தேஜும்மா கூட யார் அதிகம் இருக்கா.. நீயா இல்லை உன் தாதியா..? ”

 

” அச்சோ தாதி இங்க வரமாட்டாங்க பப்பா.. நான்தான் அவங்களுக்கு தெரியாம ஓடிவந்துடுவேன்.. என குண்டு கண்களை மலர்த்த.. அதில் அங்குள்ள இருவரின் மனமும் சற்று சமன்பட்டது..

 

அப்போ நீ தேஜும்மா கூட தான் அதிகம் இருக்க.. அவங்க உன்ன அடிச்சாங்களா இல்லை.. உன்ன பத்திரமா பார்த்துக்கிட்டாங்களா.. என கேள்வி கேட்டான்..

 

அதற்கு கன்னத்தில் விரல் கொண்டு தட்டி யோசித்த ஆலியா….. ” நோ பப்பா.. தேஜும்மா எங்க கூட விளையாடுவாங்க.. சாப்பாடு ஊத்தி விதுவாங்க.. பாட்டு பாதுவாங்க.. ஆ.. ஆ நான் அன்னிக்கி பப்புவ பிடிக்க ஓடும் போது விழுந்துட்டேனா அப்போ தேஜும்மா தான் என்னை தூக்கி விட்டு மருந்து போட்டாங்க.. ”

 

பாரேன் நீயே சொல்ற.. தேஜும்மா உன்ன ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்கன்னு.. இப்போ சொல்லு இவங்க உன்னை அடிப்பாங்களா என கேட்க.. அதற்கு மறுப்பாய் தலையசைத்த ஆலியா ” நோ பப்பா தேஜும்மா என்ன நல்லா பார்த்துப்பாங்க.. ரொம்ப நல்லவங்க.. என்றவள் தேஜுவின் காலை கட்டிக்கொண்டு சாரி சொல்ல.. அவளை அள்ளியணைத்து முத்தமிட ஆரம்பித்தாள்.. தேஜு.

 

இத்தனை நேரம் அவள் மனதில் கொண்டிருந்த போராட்டமனைத்தும் கண்ணீராய் வெளியேறியது.. ஆலியாவை வைத்துக்கொண்டே தன்னவனை நன்றியாய் பார்க்க.. அவனோ தன் மகனோடு அவர்களிருவரையும் சேர்த்து அணைத்துக்கொண்டான்..

 

அந்த இறுகிய அனைப்பே சொன்னது.. அவனைத்தாண்டி தான் எதுவும் அவர்களை நெருங்குமென்று..

 

****************

 

வெளிநாட்டு படப்பிடிப்பிற்க்கு செல்வதற்கான ஆயத்தங்களை பெண்ணவள் செய்துகொண்டிருக்க.. அதை மறுபடியும் கலைத்துக் கொண்டிருந்தனர் மக்கள் இருவரும்..

 

ப்ச் உங்க ரெண்டு பேருக்கும் இப்போ அடி வேணுமா.. என செல்லமாக மிரட்ட.. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு… மம்மா போ நாணாம்.. இங்க இது.. என பப்பு சொல்ல.. ஆலியாவும் அதனை வழிமுறைந்தாள்..

 

பப்பு.. ம்மா வழக்கமா போற ட்ரிப் தாண்டா.. நான் வரும்வரை நீங்க பப்பா கூட இருங்க.. என சமாதானம் செய்தாள்..

 

ஆனால் அவர்களோ அவளை விட மறுக்க.. தேஜு இங்கு நடக்கும் கலவரத்தை கண்டுகொள்ளாமல்.. அங்கிருந்த ஒற்றை சோபாவில் எந்த கவலையுமின்றி தேமேயென்று வேலைப் பார்த்துக்கொண்டிருந்த கணவனைக் கண்டு.. கோபம் கொண்டாள்..

 

இங்க இவங்க ரெண்டு பேரும் என்னை பேக்கிங் பண்ண விடாம தொல்லை பன்றாங்க.. நீங்க என்னென்ன சும்மா உட்கார்ந்து இருக்கீங்க.. என்னன்னு கேளுங்க தேவ்.. என அவன் லேப்டாப்பினை கோபமாய் மூட.. தேவ் தன்னவளை இமைக்காது பார்த்தான்..

 

அதில் சற்று ஜெர்க்கான தேஜு ” அச்சுச்சோ ரொம்ப முக்கியமான வேலைல இருந்திருப்பாரோ.. இப்படி முறைக்கிறாரு… என மனதிற்குள் புலம்பியவள்.. வெளியில் அப்பாவியாய் முகத்தை வைத்திருந்தாள்..

 

தேவ் மெல்ல அவளை நோக்கி அடியெடுத்து வைக்க வைக்க.. பெண்ணவளின் வெண்பிஞ்சு பாதங்கள் தானாய் பின்னோக்கி சென்றது..

 

தேவ்வின் பார்வை பல மார்க்கமாய் இருக்க அதுவேறு பெண்ணவளுக்கு வயிற்றில் குறுகுறுப்பை ஏற்படுத்த.. அதன் வீச்சு தாங்காது.. ” தேவ் வேண்டாம் பசங்க இருக்காங்க.. ” என மெல்லிய குரலில் முனுமுனுத்தாள்.. ஆடவன் கேட்டும் கேட்காதது போல் முன்னேறிக்கொண்டே இருந்தான்.. இறுதியில் பெண்ணவள் கால் இடரி மெத்தையில் விழ.. அவனும் அவள் மேலே விழுவது போல் செல்ல.. பெண்ணவள் விழிகள் மயக்கத்தில் மூடியது..

 

ஆனால் முழுதாய் இரு நிமிடம் எதுவுமே நிகழாதால் தேஜு விழி திறக்க.. அங்கு மாயகண்ணனின் குறும்பு பார்வையுடனும்.. விஷமச்சிரிப்புடனும் நின்றுகொண்டிருந்தான் அவளவன்..

 

அதில் பெண்ணவள் முகம் லட்ஜையுற்றது.. இருந்தாலும் அதனை மறைத்து கோபமாய் அவனைப் பார்க்க.. அவனோ அவள் பேக் செய்த அணைத்து துணிகளையும் பெட்டியோடு அவள் மீது கவிழ்த்த.. ஆருஷும் ஆலியாவும் கைத்தட்டி குதிக்க ஆரம்பித்தனர்…

 

மொத்த முடியும் முகத்தின் மேல் படிந்து.. பேய் போல் காட்சியளித்த தேஜு.. உங்கள என்ன பண்றேன் பாருங்க என கஷ்டப்பட்டு எழுந்து மூவரையும் துரத்த ஆரம்பிக்க.. ஆராவார கூச்சலுடன் மூவரும் ஓட ஆரம்பித்தனர்… தேவ் ஆருஷை தோளில் சாய்த்து பிடித்திருக்க.. ஆலியா அவன் முதுகு பக்கம் கழுத்தோடு கட்டிக்கொண்டிருந்தாள்..

 

சின்ன பிள்ளைங்கள சமாதானம் செய்வீங்கன்னு பார்த்தா நீங்களும் அவங்க கூட சேர்ந்து சேட்டையா பண்றிங்க.. ஒருமணிநேரமா பேக் செஞ்சேன் எல்லாம் போச்சு.. என விடாமல் துரத்தியவள்.. ஒருக்கட்டத்தில் அவர்கள் மேல் விழ.. நால்வரும் மெத்தையில் மூச்சு வாங்க விழுந்தனர்..

 

குழந்தைகள் இருவரும் வெளியே ஓடிவிட.. தேவ் தேஜு இருவர் மட்டுமே அங்கு இருந்தனர்… ஓடியதன் விளைவால் பென்னவளின் முன்னழகு அங்கம் ஏறியிறங்க.. அதனை தன் விழிகளால் களவாடினான் அவள் கள்வன்..

 

மாயவனின் பார்வை போக்கு பென்னவளின் தேகத்தை கிளர்ச்சியுறச் செய்ய.. அவள் உடல் மெலிதாக நடுங்கியது.. அதனை உணர்ந்தவன் தன் வலுமையான கரத்தால் அவளை தனக்குள் அடக்கினான்.. விழி கலந்து விரல் கலந்து இருவரும் ஒருவரில் மூழ்கியிருக்க.. ஆடவனின் விழிகள் மட்டும் அவளின் தேனூரும் இதழை வண்டாய் வட்டமடித்து… அதனைப் பருக துடித்தது..

 

மெல்ல மெல்ல ஈர்ப்பு விசையின் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவாறு அவன் இதழ் அவள் அதரத்தில் தஞ்சம் புகுந்தது.. நீண்ட இரண்டரை வருடங்களுக்கு பிறகு சந்தித்த இணைகள் பிரியும் எண்ணமின்றி சங்கமித்துக் கொண்டிருந்தன..

 

பஞ்சத்திற்கு அடிப்பட்டவன் கண் முன் அறுசுவை உணவை வைத்தால்.. அவன் மனநிலை என்ன வென்று சொல்லி தெரிவதில்லை.. அப்படிப்பட்ட நிலையில் தான் தேவ் இருந்தான்..

 

தன் நாவெனும் கூர் ஆயுதம் கொண்டு.. அவள் வாயோடு சண்டையிட்டு.. அவளிதழில் சுரந்த மொத்த அமிர்தத்தையும் ஒரு துளியும் மிச்சமின்றி குடிக்க ஆரம்பித்து.. தன்னவளுக்கும் புகட்ட ஆரம்பித்தான்… மேலும் அவன் கரங்கள் தன் பென்னவளின் மென்மை பொக்கிஷங்களை தன் கைவசப்படுத்தியிருக்க.. பென்னவளின் உடல்.. சுகத்தில் துடிக்க ஆரம்பித்தது.. அவன் மேலும் மேலும் முன்னேறும் தருணம்.. அவனின் மக்கட் செல்வங்கள் பெரும் ஆராவாரதோடு உள்ளே நுழைய.. வேகமாய் பிரிந்தனர்.. இன்னும் இருவரின் மயக்கமும் தெளியாத நிலையில் பிள்ளைகளின் கேள்விகளுக்கு வெறுமனே தலையை மட்டும் இருவரும் ஆட்ட.. ஆலியா தேவ் கன்னத்தில் சப்பென்று ஒன்று கொடுக்க.. அனைத்தும் மறந்து அவன் தன் மகளை பாவமாய் பார்த்தான்..

 

அவளோ ” ப்பா தாத்தா உன்ன கீழ வர சொன்னாங்கன்னு சொன்னா.. நீ என்னப்பா லூசு மாறி தலைய மட்டும் ஆட்டிட்டு இருக்க.. (Diazepam) இரு கரத்தையும் இடுப்பில் வைத்து கோபமாய் கேட்க.. அவன் திருதிருவென விழித்தான்… தேஜுவிற்கு தேவ்வின் நிலை சிரிப்பை தர.. அவன் என்ன சொல்லி சமாளிப்பான் என நினைத்து அவனை குறும்பாய் பார்த்தாள்..

 

அது.. அது.. ஹம் உங்களுக்கு பப்பா ஒரு சர்ப்ரைஸ் வச்சுருக்கேனே.. என பேச்சை மாற்ற.. சர்ப்ரைஸ் என்ற ஒற்றை வார்த்தையில் அவர்களும் முதலில் கேட்டவையை மறக்க.. தேவ் எப்படி என்பது போல் கெத்தாய் புருவத்தை உயர்த்தி.. தன்னவளைக் காண.. அவள் வக்கனை காட்டினாள்..

 

ப்பா… சொல்லுங்க என்ன சர்ப்ரைஸ்.. என ஆவலாய் கேட்டாள் ஆலியா..

 

ஹும்.. நாமளும் மம்மாகூட சேர்ந்து ட்ரிப் போக போறோம் என அவன் சொன்னதும் தான் தாமதம்.. ஹேய்.. ஜாலி என்ற கூச்சலோடு இருவரும் அவர்களின் கழுத்தை கட்டிக்கொண்டு குதித்தனர்..

 

தேஜு முகம் மலர்ந்த சிரிப்புடன் உண்மையா என்பது போல் தன்னவனைப் பார்க்க.. அவனும் சிரிப்புடன் ஆமோதித்தான்.. ஆனால் அடுத்த கனமே அவள் முகம் ஆலியாவைப் பார்த்து வாடியது.. தங்களுடன் செல்வதற்கு லோஷினியும் வசந்தாவும் சம்மதிப்பார்களா என்பது போல் மீண்டும் அவனைப் பார்க்க.. இப்பொழுதும் ஒற்றை சிரிப்பில் அவளை சமாதானம் செய்தவன் ” குட்டீஸ் நீங்க மம்மாக்கு ஹெல்ப் பண்ணுங்க.. பப்பா எல்லார்கிட்டயும் நாம ட்ரிப் போறத பத்தி சொல்லிட்டு வந்துடுறேன்.. என கீழே சென்றான்..

 

************

 

இந்த கொடுமையை கேட்க யாருமே இல்லையா.. முதல்ல என் பொண்ணோட வாழ்க்கைய பறிச்சா.. இப்போ அவ மகள அவகிட்ட இருந்து பிரிக்க பார்க்குறா.. இத இந்த வீட்டு பெரியவங்க வேடிக்கை பார்க்குறிங்க.. என வசந்தா தன் ஒப்பாரியை வைக்க.. மனிஷா ஒன்றும் புரியாது தன் மகளைப் பார்த்தாள்..

 

நிஷா தாயின் பார்வை பொருள் புரிந்து.. ” ம்மா ஆலியா இனிமே அங்க வரமாட்டாளாம்… அவன் கூடத்தான் இனி ஆலியா இருக்கப்போறதா கேர்டேக்கர்கிட்ட சொல்லி விட்ருக்கான்.. ”

 

” நீங்க யாரும் ஏன் அவனை எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்க.. அம்மாவையும் பொன்னையும் பிரிக்க பார்க்குறான் தாத்தா.. எனக்கென்னமோ அவதான் சொத்து பிடிஞ்சிட கூடாதுங்கிறதுக்காக ஆலியாவ லோஷினிக்கிட்டயிருந்து பிரிக்குறா.. என கோபமாய் சொல்லிக் கொண்டிருந்தவள்.. தேவ் வருவதைக் கண்டு வாயை மூட.. வசந்தா ஆரம்பித்தார்..

 

தேவ் என் பொண்ணு உனக்கு என்னப்பா பாவம் செஞ்சா.. ஏன் அவளை போட்டு இப்படி வதைக்குற.. உன் அக்காக்காரி சொன்ன மாதிரி சொத்துக்காக என் பேத்திய எங்ககிட்டயிருந்து பிரிக்க பார்க்குறாளா உன் ரெண்டாவது பொண்டாட்டி.. என ரெண்டாவதில் அழுத்தம் கொடுத்து கேட்டார்..

 

தேவ் அதனை கண்டுகொள்ளாமல் நிஷாவினை ஓர் பார்வை பார்க்க… அவளோ தாயின் பின் மறைந்தாள்..

 

தேவ்.. உங்க அத்தை என்னென்னமோ சொல்றா என்னப்பா..

 

ஹம் ஆமா தாத்தா.. அவங்க சொன்னது உண்மை தான்.. இனி ஆலியா என் கூடத்தான் இருப்பா..

 

பார்த்தீங்களா.. பார்த்தீங்களா.. உங்க முன்னாடியே எப்படி பேசுறான் பாருங்க..

 

ப்ச்.. கொஞ்சம் உங்க ட்ராமாவ நிறுத்துங்க… உங்க கூட இருந்தா என் பொண்ணு மனசு முழுக்க வஞ்சத்தோடு தான் வளருவா.. அது அவ மனநிலைக்கு நல்லதில்லை.. சின்ன குழந்தைக்கிட்ட என்ன சொல்றதுன்னு கூட தெரியாதா உங்களுக்கு.. என அழுத்தமாய் அவன் கேட்க.. அவர் விழித்தார்..

 

தாத்தா உங்க பொண்ணு என்ன பண்ணாங்க தெரியுமா.. என் மகள எனக்கெதிரா திருப்பி விடுறாங்க.. என்றவன் வசந்தா ஆலியாவிடம் சொல்லியதை சொல்ல.. தயாளன் தன் மகளை முறைத்தார்..

 

என்ன வசந்தா.. இது சூர்யா சொல்றது உண்மையா..

 

அது.. அப்பா.. என முதலில் திணறியவர்.. பின் சரி ப்பா நான் இனி அப்படி பேசல.. முதல்ல என் பேத்திய தர சொல்லுங்க.. இனி என் பொண்ணோட பிடிப்பு அவ மட்டும்தான்.. விழிகளில் கட்டிய கண்ணீருடன் கூறவும் அனைவரும் தேவ்வைப் பார்த்தனர்..

 

லோஷினியால என் பொண்ணை சரியா வளர்க்க முடியாது.. அது அவளுக்கே சில நாள்ல புரிஞ்சதால.. ஆலியாவ வளர்க்கிற பொறுப்பை என்கிட்ட கொடுத்துட்டா.. என அவன் கூறியதும்.. அனைவரும் அவன் சொன்னதை நம்ப முடியாது பார்த்தனர்..

 

அப்பொழுது ரோஷனும் அவன் தந்தையும் வர வசந்தா மீண்டும் தன் ஒப்பாரியை வைத்தார்.. ஆனால் யாரும் எதிர்பாராவிதம் வசந்தாவின் கன்னத்தை பதம் பார்த்தார்.. லோஷினியின் தந்தை..

 

மாப்பிளை.. மச்சான் என தயாளனும் சிபியும் அதிர.. அவரோ அதை பொருட்படுத்தாது.. ” இன்னும் என் பொண்ணு வாழ்க்கைய என்னதான் பண்ணனும்ன்னு நினைக்கிறடி.. படிச்சுக்கிட்டு இருந்தவள உன் பிடிவாதத்துக்கு கல்யாணம் பண்ணி வைச்சு அவ வாழ்க்கையவே சீரழிச்சுட்ட.. இனி ஏதாவது பேசு.. அப்புறம் இருக்கு உனக்கு.. என கோபமாய் கத்த.. வசந்தா கீழே குனிந்து கண்ணீர் விட்டார்.. எப்படி மறுக்க முடியும்.. இன்று லோஷினி இந்நிலையில் இருக்க அவரும் மிகப்பெரிய காரணம் அல்லவா..

 

மாமா.. லோஷினிக்கு நாங்க புதுசா ஒரு வாழ்க்கைய ஏற்படுத்தி கொடுக்கலாம்ன்னு நினைக்கிறோம்.. எத்தனை நாள் என் மக தனியா இருக்கிறது.. உங்களுக்கே தெரியும் லோஷினிக்கும் ஆலியாக்கும் இடையில அப்படி ஒன்னும் பிணைப்பு கிடையாது.. அதான் ஆலியா இனி தேவ் கூடவே இருக்கட்டும்..

 

லோஷினிய கொஞ்ச நாள் வெளியூர் அனுப்பலாம்ன்னு இருக்கோம்.. அவ மனசு மாறி வந்தவுடனே ரோஷனோட பிரெண்டுக்கும் அவளுக்கும் கல்யாணம் செய்றதா முடிவெடுத்துருக்கேன்.. என உறுதியாய் கூறிச்செல்ல.. வசந்தா சத்தமின்றி அவரை பின்தொடர்ந்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!