Skip to content
Post Views: 42
சீதா கல்யாண வைபோகமே..
அத்தியாயம் -3
Advertisement
Advertisement
பகதூர் சிங் குடும்பம் ரெடியாகி கோயிலுக்கு செல்ல காத்திருக்க, சீதாவை பார்த்த சின்மய்..
Advertisement
“என்ன சீதா நீ வந்து இருக்க கண்ணன் வரலையா”? என்று கேட்க..
Advertisement
“அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல ஆன்ட்டி,, வெளியூர் போயிருக்காரு”?.. என்று கூற..
“சரி சரி நீயாவது வந்தியே, வா,வந்து காரை எடு” என்று சொல்ல..
அந்த பெரிய ட்டிராவலர் காரில் பகதூர் குடும்பம் உறுப்பினர் அனைவரும் ஏறி கொள்ள..
பகதூர் கடைசியாகத்தான் வந்தார்..
சீதா பகதூரை பார்த்து “வாழ்த்துக்கள் சார்”என்று சொல்ல..
“தாங்யூ மா, கண்ணன் எப்படி இருக்கார்,, நேற்று உடம்பு சரியில்லை ஒரு மாதிரி இருக்குன்னு சொல்லி வேகமாக வீட்டுக்கு கிளம்பிட்டாரு, இப்ப பரவாயில்லையா”?.. என்று கேட்க
“அப்பா வெளியூர் போயிருக்காரு சார் உடம்பு கொஞ்சம் பரவாயில்லை” என்றாள்….
“சரி மா வடபழனி கோவிலுக்கு போ” என்று அவர் சொல்ல..
சீதா வடபழனி கோயில் வாசல் முன் அவர்களை இறக்கி விட்டவள்..
“நீங்க பூஜை முடித்து வெளியே வந்து இந்த இடத்துல நின்னு கால் பண்ணுங்க ஆண்ட்டி, நான் வர்ரேன் இங்கே கார் பார்க் பண்ண இடமில்லை” என்று சொல்லி விட்டு வடபழனி கோவில் பின் வாசல் பார்க்கிங் பக்கத்தில் வந்து காரை பார்க் பண்ணி விட்டு காத்திருந்தவளுக்கு..
மனம் பாரமாக இருந்தது சொல்லி அழக் கூட யாருமில்லை.. இந்த கஷ்டம் எப்பா தான் தீருமோ,, தாயும் இல்லை, தந்தையும் இல்லை, சொல்லிக்கொள்ள உறவுகள் என்று யாருமில்லை, தனக்கு இப்போது தம்பி மட்டுமே, அவனுக்காக நான் வாழ வேண்டும், அவனுக்கு எந்த துன்பமும் வரகூடாது,, இறைவா நல் வழி காட்டு என்று வட பழனி முருகனை வேண்டிய படியே கண்மூடி காரில் அமர்ந்திருந்தாள் சீதா,,..
பகதூர் சிங் குடும்பம் சிறப்பு பூஜை முடித்து வெளியில் வந்தவர்கள்.., இவளுக்கு போன் பண்ணி வரவழைத்து காரில் ஏறிக்கொண்டவர்கள்,, பின்பு ஹோட்டலுக்கு சென்று காலை உணவை முடித்து,, பாண்டிச்சேரியில் உள்ள ரெசார்ட்க்கு சென்று, அன்று முழுவதும் சந்தோஷமாக அவர்கள் குடும்பம் சுற்றிக்கொண்டு இருந்தனர் சீதாவால் வண்டி ஓட்ட கூட முடியவில்லை முகத்தை தண்ணீரை ஊற்றி கழுவிக்கொண்டே காரை ஓட்டிக்கொண்டு இரவு வீடு வந்து சேர்ந்தாள்….
எப்படி வந்து படுத்தால் என்று தெரியவில்லை. வீட்டினுள் வந்து பாய் கூட விரிக்கவில்லை திறந்ததும் அப்படியே வந்து படுத்தவள் தான் விடிந்த பின் தான் எழுந்தாள்..
அவள் எழுந்ததும்,அவள் போன் விடாமல் அடித்துக் கொண்டே இருக்க போனை எடுத்துப் பார்த்தாள்.. சோனாலிதான் கால் பண்ணி இருந்தாள்.
சீதா போனை எடுத்தவுடன் கண்ட படி அவளை திட்ட,,
அவள் திட்டியதை கேட்டு அமைதியாக இருந்தாள் சீதா..
அவள் திட்டி முடித்ததும் “சொல்லுங்க மேம்” என்றதும்..
” கிளம்பி வா” என்று அவள் சத்தமாக கத்த.
சீதாவால் எழுந்து கொள்ள கூட முடியவில்லை உடல் முழுக்க வலி. நேற்று முழுவதும் எதுவும் சாப்பிடாமல் வண்டி ஓட்டியதால் வந்த விளைவு,,..
இன்னைக்கும் சாப்பிடவில்லை என்றால் மயக்கம் போட்டு, கீழே தான் வீழ வேண்டும் என்று நினைத்தவள்..
அரை டம்ளர் அரிசி எடுத்து அதை மிக்ஸியில் போட்டு உடைத்து,, அதை குக்கரில் கஞ்சி வைத்தவள் வேகமாக சென்று குளித்து வந்தாள்.
அவள் குளித்து வருவதற்க்குள் கஞ்சி ரெடியாகி இருக்க,, . காய்ச்சியா கஞ்சியை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி ஆற வைத்து உடைமாற்றி வந்தவள் அந்த கஞ்சி ஒரு டம்ளர் குடித்தவள்..
இன்னொரு டம்புளர் கஞ்சியை எடுத்து பேக் செய்து கொண்டு கிளம்பினாள்..
அவளால் உணவு சாப்பிட முடியாது என்று அவளுக்கே தெரிந்து விட்டது அதனால் கஞ்சியை எடுத்துக்கொண்டு சென்றாள்..
சோனாலி சீதாவை முறைத்தபடியே நின்றிருந்தாள்,, “நீ வர்ற வரைக்கும் நான் காத்திருக்கணுமா”?.. என்றவள்..
அவள் உடையை பார்க்க சாதாரணமாக ஒரு காட்டன் சுடிதாரில் குளித்து முடித்துவிட்டு ஒரு மேக்கப் இல்லாமல் அழகோவியமாக தன் முன் வந்தவளை பார்த்து பொறாமை பட்டவள்,,
” இது என்ன டிரஸ் போட்டு வந்திருக்க? போ போய் பேண்ட் ஷர்ட் போட்டு வா அப்படியே முகத்துக்கு மாஸ் போட்டு முடியை தூக்கி கட்டு” என்று அவள் கூற.
“சரி” என்று தலையாட்டிய சீதா..
உடனே சென்று உடை மாற்றி, முகத்திற்கு மாஸ்க் அணிந்து முடியை கொண்டை போல தூக்கி கட்டி தலையில் ஒரு கேப் அணிந்து ஒரு பையன் போல கிளம்பி வர.
“போ, போய் காரெடு” என்று அவளை மிரட்டிய படியே,, கார் பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள்..
சீதா காரை கிளப்ப,, அப்பாட என்று மூச்சை இழுத்து விட்டவள், இன்று அவள் ஒரு படத்திற்கு மேக்கப் டெஸ்ட்டுக்கா சொல்கிறாள்,, பெரிய சரித்திர படம் புதிய இயக்குனர் சிரஞ்சீவி இயக்கும் படம். வளர்ந்து வரும் புதிய ஹீரோ சிவா இதில் ஹீரோவாக நடிக்க..
இவளை அந்த படத்திற்கு ஹீரோயின் கேரக்டருக்காக ,மேக்கப் ஃபோட்டோ ஷூட்டுக்காக சோனாலியை வர சொல்லி இருந்தார்கள், இதில் அவள் மட்டும் செலக்ட் ஆகிவிட்டாள்,, அடுத்த நான்கு வருடம் இவளை யாரும் அசைக்க முடியாத இடத்திற்கு சென்று விடுவாள்,, எப்படியாவது இந்த இந்திரசேனா படத்திற்கு நடிக்க செலக்ட் ஆகிவிட வேண்டும்,, கண்டிப்பாக நான் தான் செலக்ட் ஆகிவிடுவேன், அது தான் நேற்று இரவே ரவி தேஜாவை சந்தித்து பேசிவிட்டு இரவு அவனோடு சல்லாபம் பண்ணிவிட்டு வந்திருந்தாளே..
அவனும் “கண்டிப்பாக உனக்கு தான் இந்த வாய்ப்பு, நான் இயக்குனர் கிட்ட பேசுறேன், நீ கவலை படமால் போ என்று சொல்ல….
கண்டிப்பாக நான் தான் இந்த படத்தின் கதாநாயகியாக செலக்ட் ஆகிவிடுவேன் என்று சந்தோஷமாக சென்று கொண்டிருந்தாள்..
சொனாலி சொன்ன இடத்தில் சீதா அவளை இறக்கி விட..
“காரை விட்டு கீழே இறங்க கூடாது சீதா,, யார் பேசினாலும் பேசக்கூடாது”.. என்று சொல்ல..
” சரிங்க மேடம் ” என்று சொல்லி விட்டு காரை கார் பார்க்கில் விட்டவள், அப்படியே ஏசியை ஆன் பண்ணி தூங்கி விட்டாள், நிம்மதியான தூக்கம் மதியத்துக்கு மேல் தான் போன் செய்து அழைத்தாள் சோனாலி..
அவள் அழைத்ததும் வேகமாக சென்று அவள் இருக்கும் இடத்தில் அவளை ஏற்றிக் கொண்டு வர..
சோனாலி முகமே சரியில்லை கடுகடுவென இருந்தாள்..
சீதாவை பார்த்து “ஏண்டி இவ்வளவு நேரம்,, ஏசி போட்டுட்டு தூங்கிட்டியா?,, உனக்கு தூங்க என் 50 லட்ச ரூபாய் ஏசி கார் கேட்குதா? காரை எடு. என்று அவளை திட்டியபடியே பின் சீட்டில் ஏறி அமர்ந்தவளுக்கு இன்னும் கோபம் தீரவில்லை,,..
சீதாவுக்கு புரிந்தது சோனாலி நினைத்த காரியம் நடக்கவில்லை போல, அது தான் கோபமாக இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டவள் அமைதியாக கார் ஓட்டிக்கொண்டே வர.. சின்மய் மகளுக்கு போன் செய்திருந்தார்..
“ப்பேட்டி போன காரியம் என்ன ஆச்சு ப்பேட்டி படத்தின் செலக்ட் ஆகிட்டீயா”? என்று கேட்க..
“மம்மி, மம்மி….” என்று ஓவென்று அழுந்திருந்தாள் சோனாலி,,
“என்னாச்சு பேபி,, ஏன் அழுகுற படம் ஓகே ஆகவில்லையா”என்றதும்…
” இல்ல மம்மி அந்த இயக்குனர் எனக்கு மேக்கப் டெஸ்ட் போட்டு பார்த்து விட்டு, சில காட்சிகளை என்னை நடிக்க சொன்னான், நானும் நடிச்சேன்,,, அதை பார்த்த அந்த இயக்குனர் எனக்கு இந்த படத்தில் ஹீரோயின்னா நடிக்க வாய்ப்பு கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டான்,, அது மட்டும் இல்ல எனக்கு நடிக்கவே வரலன்னு சொல்லுறான்,, இயல்பா நடிக்க தெரியலன்னு திட்டி அனுப்பி விட்டான்” என்று சொல்ல…..
சத்தியமாக சீரஞ்சிவி அப்படி எல்லாம் சொல்லவெல்லாம் இல்லை, அவனுக்கு ஏற்கனவே சோனாலியை தெரியும், தன் படத்திற்கு அவள் செட்டாக மாட்டாள் என்று தெரியும் ,, ப்பிரோடிசர் ரவி தேஷா சொன்னாதால் தான் இவளை மேக்கப் டெஸ்ட்க்கு அழைத்திருந்தான்,, மெக்கப் டெஸ்ட் எடுத்த பார்த்தவனும் அவ்வளவு திருப்தி இல்லை, இருந்தாலும் அவளை நடிக்க சொல்லி பார்க்க,, அவளுக்கோ நடிக்கவே தெரியவில்லை, சும்மா இரண்டு சீன், நாலு டூயட் பாட்டு, ஹீரோவோட ரோமான்ஸ் சீன் மட்டும் நடித்தவளுக்கு, சிரஞ்சீவி சொல்லு கதாபாத்திரத்தின் கேரக்டரை உள்வாங்க முடியவில்லை,, படக்கதையை முழுதாக சொல்லி ஒரே ஒரு சீன் தான் சிரஞ்சீவி அவளை நடிக்க சொன்னான்,, அவளால் அவன் சொன்ன சீனை நடிக்க முடியவில்லை,,, அதனால் வந்த கோபம்,, சோனாலிக்கு சிரஞ்சீவி திட்டி கொண்டு இருக்கிறாள்…
“ஏன் பேபி உன்னை விட எந்த பொண்ணு வேணுமாம் அந்த புது இயக்குனருக்கு” என்று சின்மய் திட்ட.
“மீ அந்த புது இயக்குனர் சிரஞ்சீவி ரொம்ப ஓவரா பேசுறான்,, எனக்காக ரவி சார் எவ்வளவு எடுத்து சொல்லியும் இவன் கேட்கல ரவி சார் எவ்வளவு பெரிய ப்பிரோடிசர் இந்த படத்துக்கு எவ்வளவு கோடி பணம் இன்வெஸ்ட் பண்ணுறாரு தெரியுமா? ஆனால் இந்த சிரஞ்சீவி! ரவி தேஜா சார் பேச்சை கேட்க மாட்டேங்கிறான்.. என் படத்துக்கு ஹீரோயின் இவங்க இல்ல சார்” என்று சொல்லிட்டான்….
“ஏன் ப்பேட்டி அது ரொம்ப நல்ல படமா நீ ஏன் இவ்வளவு பீல் பண்ணுற?.. என்று சின்மய் கேட்க..
“அது ரொம்ப நல்ல சரித்திர படம் மீ நல்ல கேரக்டர் அதுல ஹீரோயின் கேரக்டர் தான் மெயின் கேரக்டர் அதுக்காக தான் நான் நடிக்க இவ்வளவு மெனக்கெட்டு போனேன் ஆனா எல்லாம் இந்த இயக்குனரால வீணா போச்சு, என்னால எதார்த்தமா நடிக்க முடியாதாம்,, என் கண்ணுல உயிர்பே இல்லையாம்,, எக்ஸ்பிரஷன் பத்தலையாம்,, அப்புறம் இந்த படத்துல மேக்கப்பே கிடையாதாம்.. 300 கோடி ரூபாய் பட்ஜெட் பெரிய படம் எல்லாம் போச்சு” என்று புலம்பி கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்…
அந்த சோகத்தில் சோனாலி இரண்டு நாள் அவள் எந்த சூட்டிங்கும் போக வில்லை….
error: Content is protected !!