Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கொற்றவனின் கொற்றவை

கொற்றவனின் கொற்றவை 

அத்தியாயம் 1

அமெரிக்காவின் பாஸ்டன் நகரம். பகலின் பெருமளவு நேரம் கடந்திருந்தது. அதாவது மாலை மதி மயங்கும் நேரம். நகரத்தை மக்னேலியா, செர்ரி மற்றும் ட்யுலிப் பூக்கள் மலர்ந்து வண்ண ஓவியங்களாக மாற்றியிருந்தது. ஏனென்றால் அங்கு அப்பொழுது வசந்த காலம் தொடங்கியிருந்தது.

 

அருகிலுள்ள கேம்பிரிட்ஜின் ஹார்வர்ட் யூனிவர்சிட்டியில் இருந்து ரெட் கலர் செவேரோலெட் கார்வேட் c8 காரில் ஒரு அழகு புயல் கிளம்பியது. அந்த புயலை ஒத்த பூவையின் பெயர் கொற்றவை.



Advertisement

 

ஆம் கொற்றவை ஒரு தமிழ் பெண். அவளின் தாத்தா சிவப்பிரகாசம் காலத்திலேயே அமெரிக்காவிற்கு வந்து விட்டனர். அதாவது கொற்றவையின் அப்பா ரகுராம் ஆறு வயது சிறுவனாக இருக்கும் போதே வந்து விட்டனர்.

 

Advertisement

கொற்றவை இங்கேயே பிறந்து வளர்ந்த அதி நாகரீகமான பெண். அவளின் அந்த நாகரீகம் அடுத்தவரை எள்ளளவும் காய படுத்தாது. ஆனால் மிகவும் ஸ்ட்ரயிட் பார்வேர்ட் பெண். எதையும் முகத்திற்கு நேராக வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுபவள். அவளின் அந்த குணம் நிறைய பேரை காயப்படுத்திவிடும்.

Advertisement

 

ஆனால் அவளுக்கு மிகவும் அழகையும் நிமிர்வையும் கம்பீரத்தையும் கொடுப்பதும் அந்த குணமே. மனதில் எந்த கசடும் கள்ளமும் இல்லாமல் இருப்பதே அவளின் அழகு.

 

Advertisement

வெளிதோற்றத்தை எடுத்து கொண்டால் பசும்பொன்னின் நிறம். அதற்கு போட்டியாக தோள் வரை இருந்த அவள் சுருள் கூந்தலை கோல்டன் பிரவுனில் கலர் செய்திருந்தாள். தற்போது அந்த கூந்தலையும் தலை உச்சியில் கொண்டையாக போட்டிருந்தாள்.

 

முகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முடி சிலும்பி கிடந்தது. வெறும் நெற்றி. அடர்த்தியான புருவத்தின் கீழ் அகன்ற நீள் விழிகள். அந்த விழிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அவள் பழகும் வட்டாரத்தில் உண்டு. சிறிய மூக்கு. லிப் கிளாஸ் தடவிய சதை பற்றான உதடுகள். அதற்கு மேல் கவர்ச்சியான உடல் வாகு. அபாயகரமான நெளிவு சுழிவுகள். மென்மையான சருமம் கொண்டவள். மொத்தத்தில் பெண்களில் பத்மினி வகையை சேர்ந்தவள்.

 

எப்பொழுதும் புயல் போல வேகமாக இருக்கும் கொற்றவை அன்று சுற்றியிருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தென்றலாக அமைதியாக ஏகாந்த மனநிலையில் காரை ஒட்டி கொண்டு இருந்தாள். ஏனென்றால் அவள் ஒருவன் மீது காதல் வயப்பட்டிருந்தாள்.

 

அந்த காதலின் நினைவில் காரை மெதுவாக ஒட்டி கொண்டிருந்தாள். பிளாக் கலரில் டைட் ஆங்கிள் லென்த் ஜீன்ஸ். அந்த ஜீனிலும் அங்கு அங்கு கிழிசல் இருந்தது. காரணம் வறுமை கிடையாது. டிஸ்ட்ரெஸ்டு ஜீனாம். அதே பிளாக்கில் கிராப் டி ஷர்ட்டும் அணிந்திருந்தாள். வேறு எந்த அணிகலனும் கிடையாது.

 

நேராக பாஸ்டன் சிட்டியில் உள்ள தேவி மல்டி கசின் ரெஸ்டாரண்டிற்கு வந்து காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று அங்கு காலியாக இருந்த இடத்தில் அமர்ந்து மொபைலை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

 

சிறிது நேரம் கழித்து பார்வையை சுழல விட்டவள் கண்களில் விழுந்தான் அவன். பரபரப்பாக டேபிள்களில் போய் மெனு நோட் பண்ணி கொண்டிருந்தான்.

 

அந்த பெரிய உணவைகத்தில் நிறைய சர்வர்கள் இருந்தாலும் அனைவரும், முக்கியமாக பெண்கள் அவன் ஒருவனைத்தான் அருகில் அழைத்து மெனு சொல்லும் சாக்கில் வழிந்து கொண்டிருந்தனர். இதில் வெள்ளயின பெண்கள் கருப்பின பெண்கள் இந்திய பெண்கள் என்று அனைவரும் அடக்கம். அவனும் அனைவரிடமும் ஆளுக்கு தக்கவாறு பேசிக்கொண்டும்,  சிரித்து கொண்டும் வேலை செய்து கொண்டிருதான்.

 

அதுதான் அவனது ஸ்பெஷல். அவனுக்கு கோபமே வராது அல்லது மனதில் கோபம் இருந்து வெளியில் காட்ட மாட்டானோ என்னவோ அவனை படைத்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.

 

அதேபோல் குறிப்பறிந்து நடந்து கொள்ளும் கன்ன குழியழகன். ஆறு அடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றம் உடைவன். மாநிறத்தில் நெற்றியில் அடர்த்தியான முடி பிரள கன்ன குழியோடு ப்ளாக் பேன்ட் வெள்ளை சட்டையை டக் இன் செய்து சிரித்து கொண்டிருந்தவனை பார்த்து கொண்டிருந்த கொற்றவையின் இதயம் முரசு கொட்டியது.

 

இது கொற்றவை அவனை பார்த்த நாளில் இருந்து நடப்பதுதான். எதை பற்றியும் கவலை படாமல் யாரையும் பற்றியும் சிந்திக்காமல் சுற்றி கொண்டிருந்தவளை நிதானிக்க வைத்தவன். அவன் விக்ரம பாண்டியன். நண்பர்களுக்கு விக்ரம்.

 

கொற்றவை விக்ரமையே பார்த்து கொண்டிருந்தது உறுத்தியதாலோ என்னவோ அவளை திரும்பி பார்த்தான். அவளை பார்த்ததும் அவனது அக்மார்க் புன்னகையுடன் அவள் அருகில் வந்து

 

“என்ன கொற்றவை மேடம், இங்க உக்காந்துருக்கீங்க.  எம் டி ரூம்க்கு போகலையா” என்றான்.

 

ஆம். இது கொற்றவையுடைய  ரெஸ்டாரண்ட் தான். இதே போல் ஏகப்பட்ட பிரான்ச் அவள் தந்தைக்கு உண்டு. அவளுடைய தாத்தா பார்த்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அவர் மனைவி தேவியின் பெயரில் சின்னதாக ஆரம்பித்த ஃபுட் ஸ்டால் இன்று பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. அனைத்திற்கும் ஒரே வாரிசு கொற்றவை தேவி.

 

பாட்டியின் பெயரையும் அவர்கள் குலதெய்வத்தின் பெயரையும் இணைத்துதான் கொற்றவைக்கு பெயர் வைத்திருந்தனர்.

அவள் தந்தை ரகுராமிற்கு கொற்றவை என்றால் உயிர்.

 

சிறுவயதிலேயே மனைவியை இழந்தவர் சிறிது காலத்திலேயே தந்தையையும் இழந்து தொழிலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும் அவளுக்கு எந்த குறையையும் வைத்ததில்லை அவர். அவரை பொறுத்தவரை மகள் ஒரு இளவரசி.

 

அவள் முகம் வாட பொறுக்க மாட்டார். பாட்டியின் பொறுப்பில் வளர்ந்ததால் தமிழ் மொழி முதல் கலாச்சாரம் வரை கொற்றவைக்கு அத்துபடி. தமிழ் நன்றாக எழுத படிக்க தெரியும். வாய் பாட்டு முதல் பரத நாட்டியம் வரை காற்றிருக்கிறாள்.

 

ஆனால் அதற்காக பாட்டி சொன்ன அனைத்தையும் செய்பவள் கிடையாது. அவள் மனதிற்கு சரி என்று படுவதைத்தான் செய்வாள். இன்றும் உடை விஷயம் முதல் தலைமுடி கலரிங் வரை அவள் பாட்டிக்கும் அவளுக்கும் ஏழாம் பொருத்தம் தான்.

 

கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் தேவி. என்னதான் அமெரிக்கா வந்து பல வருடங்கள் ஆகி விட்டாலும் பேத்தி அணியும் கவர்ச்சி உடைகளை பாட்டி விரும்புவதில்லை.

 

நல்ல வேளையாக பார்ட்டி பப் என்று போனாலும் ஆல்கஹால் உடம்புக்கு கெடுதல் என்ற அறிவு கொற்றவைக்கு இருப்பதால் மது அருந்துவதில்லை. ரெட் வைன் மட்டும் எடுத்து கொள்வாள்.

 

அதேபோல் நிறைய ஆண் நண்பர்கள் இருந்தாலும் டேட்டிங்கிலும் விருப்பம் இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் இதுவரை அதுபோல் எந்த ஆண்மகனையும் அவள் பொருட்டாக கருதியதில்லை. அதனால் தான் தேவி பாட்டி கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறார். ஆனால் சமீப காலமாக விக்ரம் கொற்றவையின் மன உறுதியை அசைத்து பார்த்து விட்டான்.

 

தற்பொழுது அவளை பார்த்து கேள்வியாக நின்றவனிடம், “எவ்ளோ டைம் சொல்லிருக்கேன் மேன் என்ன மேடம்னு கூப்பிடாதன்னு” என்றவளுக்கு அவன் ட்ரேட்மார்க் புன்னகையுடன் “என்ன மேடம் பண்றது, நீங்க முதலாளி பொண்ணு . அதுக்ககேத்த மரியாதைய நா குடுத்து தான ஆகணும்” என்றவனை ஆராய்ச்சி கண்ணுடன் பார்த்தவள்

 

“என்ன மேன். வஞ்ச புகழ்ச்சி அணி மாதிரி தெரியுது நீ பேசுறது” என்று கேட்டவளை ஆச்சரியமாக பார்த்தவன்

 

“பரவாயில்லையே, நீங்க தமிழ் பேசுறதே ஆச்சர்யம். இதுல உங்களுக்கு இந்த அளவு தமிழ் தெரியமா”

 

“நீ பேச்ச மாத்தாத மேன். உனக்கு எத்தனை தடவ சொல்றது இது தமிழ்நாடு இல்ல அமெரிக்கா. கால் மீ கொற்றவை. மேடம் னு சொல்லாத” என்று அவள் பெரிய விழிகளை உருட்டி சொன்னவளை பார்த்து சிரித்து கொண்டே

 

“உங்களுக்கு சரியாதான் கொற்றவைனு பேர் வச்சிருக்காங்க. எப்பா எவ்ளோ பெரிய கண்ணு” என்று விளையாட்டாக பயந்த மாதிரி பேசி கொண்டிருக்கும்போதே அவர்கள் அருகில் தயக்கத்துடன் ஒரு பெண் வந்தாள்.

 

அவளும் தமிழ் பெண்ணே. அங்கு சர்வராக வேலை செய்கிறாள். பெயர் சங்கவி.

 

இதில் குறிப்பிட தகுந்த விஷயம் என்னவென்றால் கொற்றவை விக்ரம் சங்கவி மூவருமே ஹார்வர்ட் யூனிவர்சிட்டியின் மாணவர்கள்.

 

விக்ரம் பி ஹெச் டி ஸ்காலர். கொற்றவையும் சங்கவியும் எம் பி எ ஸ்டுடென்ட். சங்கவி கொஞ்சம் பயந்த, நிறைய தயக்கம் நிறைந்த பெண். ஆனால் அழகானவள். மிடில் கிளாஸ் குடும்பம். நன்றாக படிப்பவள் என்பதால் அமெரிக்கா வரை வந்திருக்கிறாள்.

 

கொற்றவையின் வகுப்பு என்பதால் அவள் பார்ட் டைம் ஜாப் தேடி கொண்டிருப்பது தெரிந்து கொற்றவை தான் தன் தந்தையிடம் சொல்லி இங்கு  சேர்த்து விட்டாள். அவள் வேலைக்கு சேர்ந்தும் மூன்று மாதம் ஆக போகிறது. இப்போதும் தயங்கி கொண்டே இருப்பவளை பார்த்து கொற்றவைக்கு ஆச்சர்யம் தான். சில சமயம் கோபம் கூட வரும்.

 

பக்கத்தில் வந்த சங்கவியிடம் “என்ன சங்கவி, என்ன விஷயம்” என்றான் விக்ரம்.

 

அதற்கு அவள் “அது வந்து விக்கி… விக்ரம்” என்று பதட்டமானாள்.

 

“ஹே கூல் பொறுமை என்னனு சொல்லு”

 

“இல்ல அந்த லேடி நம்ம ஊர் டிபன் வேணுன்னு கேட்டாங்க. நா இட்லி குடுத்தேன். சாப்ட்டு பாத்துட்டு புட் நல்லால்ல. காரமா இருக்கு பே பண்ண மாட்டேன்னு சொல்றாங்க. என்ன பண்றது” என்றவளிடம்

 

“இவ்ளோதான வா நா பாத்துக்கிறேன்” என்று அவளை கையோடு அழைத்து கொண்டு கிளம்பினான் விக்ரம், கொற்றவையிடம் சின்ன தலையசைப்போடு. அவர்களை ஆச்சர்யமாக பார்த்து கொண்டிருந்தாள் கொற்றவை.

 

விக்ரம் அங்கு ஆல் இன் ஆல் போல அனைத்து வேலைகளையும் பார்ப்பான். அவன் இங்கு சேர்ந்து ஆறு மாதத்தில் டேபிள் துடைப்பதில் ஆரம்பித்து சில சமையல் வேலைகள் வரைக்கும் கூட பழகி வைத்திருக்கிறான்.

 

விக்ரம் அப்படித்தான். எந்த வேலை என்றாலும் நுனி புல் மேய்வது போல் செய்ய பிடிக்காது. அடி வரை இறங்கி அலசி விடுவான். அதனால்தான் பார்ட் டைமாக சர்வர் வேளையில் சேர்ந்தவனை சூப்பர்வைசிங் லெவெலுக்கு உயர்தியிருந்தார்  கொற்றவையின் அப்பா ரகுராம்.

 

ஆனால் அவன் பெரும்பாலும் டேபிள் சர்வீசில் தான் இருப்பான். அவனுக்கு இருக்கும் ரசிகைகள் கூட்டம் அப்படி.

 

இவ்வளவு துடிப்பாக இருக்கும் இளைஞனை யாருக்குதான் பிடிக்காது. கொற்றவையின் தந்தைக்கு அவன் மீது மிக பிரியம்.  அதனால் அவனுக்கு நிறைய சலுகைகள் கொடுத்து வைத்திருந்தார் ரகுராம். ஆனால் அவருக்கு தெரியாதது தனக்கு போலவே தனது உயிர் மகளுக்கும் அவனை பிடிக்க ஆரம்பித்து விட்டது என்பது.

 

பிரச்சனையை முடித்து விட்டு திரும்பவும் கொற்றவையிடம் வந்தான் விக்ரம்.

 

அவனிடம் “என்ன மேன் பண்ண அந்த லேடிய?” என்றாள் கொற்றவை.

 

“அவங்க திருப்தியா சாப்டுட்டு பில் பே பண்ணிட்டாங்க கொற்றவை மேடம். உங்க ரெஸ்டாரண்ட்க்கு நஷ்டம் வர விட்ருவனா”

 

“ஓ எப்படி பண்ண ?”

 

“அவங்கட்ட, சாரி மேம். நீங்க பே பண்ண வேண்டாம். ஆனா காரம் இல்லாத நீங்க எப்பொழுதும் இளமையா அழகா இருக்க மாதிரியான ஒரு ஃ புட் இருக்கு. அத சாப்டுட்டுத்தான் போகணும்னு சொன்னவுடனே, மறுக்காம சாப்டுட்டு எல்லா ஃபுட்டுக்கும் சேர்த்து பே பண்ணிட்டு போய்ட்டாங்க”

 

“ஓ ரியல்லி. அப்படி ஒரு ஃ புட் இருக்கா என்ன” என்று கேட்டவுடன் அவளை பார்த்து நமட்டு சிரிப்புடன்

 

“ம் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஃபுட் தான் அது. இன்ஃபேக்ட் உங்கள இப்ப பாத்ததாலதான் எனக்கு அந்த ஃபுட் நியாபகம் வந்துச்சி”

 

“ஹே ரொம்ப பில்ட் அப் பண்ணாத மேன். அது என்ன ஃபுட்ன்னு சொல்லு”

 

“இடியாப்பம் தேங்காய் பால் மேடம். என்ன உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் தான” என்றவனை ஆச்சரியமாக பார்த்தவள்

 

“ஹே உனக்கு எப்படி  எனக்கு இடியாப்பம் பிடிக்கும்ன்னு தெரியும் மேன். அதை விட உண்மையிலேயே இடியாப்பம் சாப்பிட்டா அழகாய்டுவாங்களா”

 

“ஹா ஹா மேடம். இடியாப்பம் எப்படின்னு தெரியாது. ஆனா தேங்காய், தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் எல்லாம் நம்ம உடம்புக்கு முடிக்கு ரொம்ப நல்லது. எவ்ளோ கிரீம்ல யூஸ் பண்றாங்க. அத விடுங்க மேடம். இடியாப்பம் சாப்பிட்டு நீங்க எவ்ளோ அழகா இருக்கீங்க. அப்ப இந்த டவுட் உங்களுக்கு வரலாமா”

 

“என்ன மேன். இப்படி உருகி வழியிற. என்னையும் இந்த ரெஸ்டாரண்டக்கு வர உன்னோட பேன்ஸ்ன்னு நினைச்சு பேசிட்ருக்கியா” என்றவளை பார்த்து

 

“ஹா ஹா கண்டிப்பா கிடையாது கொற்றவை மேடம். நீங்க வேற. அவங்க வேற” என்று அவளை பார்த்து சீரியஸாக சொன்னவனின் கண்களை நேருக்கு நேராக பார்த்தாள் கொற்றவை.

 

அவனும் அவன் பார்வையை மாற்றி கொள்ளாமல் அவள் கண்களை பார்த்தான்.

 

“ஓகே ஓகே ஐ டிரஸ்ட் யூ. ஆனா எனக்கு இடியாப்பம் பிடிக்கும்னு எங்க அப்பா சொன்னாரா”

 

“இல்ல மேடம்” என்று சிரித்தவனை பார்த்து

 

“வேற நா நம்ம ரெஸ்டாரண்ட்ல கூட அத சாப்பிட மாட்டேனே. எங்க பாட்டி செய்ற இடியாப்பம் தான் எனக்கு பிடிக்கும். ஆனா அது உனக்கு எப்படி தெரியும். ஒரு வேல உங்க ஊர்ல மந்திரம்லாம் பண்ணி தெரிஞ்சுப்பாங்களாம். என் பாட்டி சொல்லிருக்காங்க. அத மாதிரி ஏதும் உனக்கு தெரியுமா” என்றவளை பார்த்து சத்தம் போட்டு சிரித்தவன்

 

“மேம் ரொம்ப யோசிக்காதீங்க. உங்க அப்பா ரூம் வால்ல சில ஃபுட் ஃபோட்டோஸ் இருக்கும். அதுல இடியாப்பத்து மேல ஐ லவ் யூ வெரி மச்ன்னு போட்டு நிறைய ஹார்ட் வரைஞ்சு வச்சது நீங்கதான. அத வச்சிதான் சொன்னேன் மேடம்” என்று சொல்லிவிட்டு கன்னம் குழிவிழ சிரித்து கொண்டிருந்தவனையே பார்த்த கொற்றவை

 

“ஐ லவ் யூ  சோ மச் மேன். பக்கத்துல நிறைய நிறைய ஹார்ட் போட்டுக்கோ” என்றதும் சிரிப்பை நிறுத்திவிட்டு அதிர்ச்சியாகி நின்றான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!