Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Saaralaai Theendinaai Anbae

சாரலாய் தீண்டினாய் அன்பே – 7.2

சந்தியா அலுவலகத்துக்கு ஆட்டோவில் செல்வதை அசவுகரியமாக எண்ணியவள் அந்த வாரமே பெரியப்பாவுக்கு போன் செய்து அவளது ஸ்கூட்டியை அனுப்பி வைக்க சொல்லிவிட்டாள். அவளுக்கும் சென்னையில் ஆங்காங்கே சுமித்ராவுடன் சென்று வழித்தடங்கள் ஓரளவுக்கு மனதில் பதிந்துவிட்டதால் தயக்கமின்றி தினமும் ஸ்கூட்டியிலேயே செல்ல தொடங்கிவிட்டாள்.

 

அவள் வேலையில் சேர்ந்து முதல் மாதம் சம்பளம் வாங்கிவிட்டதை  குடும்பத்தினருடன் சந்தோசமாக பகிர்ந்து கொண்டவள் வழக்கம் போல அம்மாவின் “நல்லா படிக்கணும்; சூரியா கிட்ட தானே வேலை பார்க்கிறோம்னு வேலையில கவனக்குறைவா இருக்க கூடாது” என்பதோடு இன்னும் சில அறிவுரைகளையும் வெகுமதியாய் வாங்கிவிட்டு மனமகிழ்ச்சியோடு அன்று அலுவலகத்தை அடைந்தாள் அவள்.

 



Advertisement

எப்போதும் அலுவலகத்தில் நுழைந்ததும் அவள் செய்யும் முதல் வேலை சூரியாவின் அலுவலக அறைக்கு சென்று அங்கே அவனது அன்றைய நாளுக்கு பார்வையிட வேண்டிய கோப்புகளை எடுத்து வைப்பது தான். அதன் பின் தான் அவளது கேபினுக்கு செல்வாள். அப்படி அவனது அறைக்குள் கதவை தட்டிவிட்டு நுழைந்தவள் அன்று அங்கே சூரியாவை காணாது திகைத்தாள்.

 

ஏதேனும் முக்கியமான வேலையாக வெளியே சென்று விட்டானோ என்று யோசித்தவள் அடுத்த கணமே அப்படி அவனுக்கு முக்கியமான வேலை இருந்தது என்றால் அது கட்டாயம் தனக்கு தெரியாமல் போக வாய்ப்பே இல்லை என்று பலவித எண்ணங்களுடன் தனது அறையை அடைந்தாள் அவள்.

Advertisement

 

Advertisement

அதன் பின் அவன் அன்று செல்ல வேண்டிய முக்கியமான மீட்டிங் பற்றி சொல்லி அவனை சீக்கிரமாக அலுவலகம் வருமாறு அழைக்க போன் செய்தால் சூரியா போனை எடுக்கவே இல்லை. இவனுக்கு என்னவாயிற்று என்ற குழப்பத்துடன் அன்று அவன் கேட்டிருந்த முக்கியமான ரிப்போர்ட் ஒன்றை அக்கவுண்ட்ஸ் டிப்பார்ட்மெண்டில் இருந்து பெற்றுக் கொண்டவள் ஆரியாவிடம் விசாரிக்கலாம் என்று அவனது அலுவலக அறையை நோக்கி சென்றாள்.

 

கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவள் “சார் சூரியா ஏன் இன்னைக்கு வரலை? அவர் ஒரு இம்ப்பார்டெண்ட் மீட்டிங் அட்டெண்ட் பண்ண வேண்டியதா இருக்கு. எனி பிராப்ளம்?” என்று படபடத்த குரலில் ஆரியாவிடம் வினவ

Advertisement

 

அவன் மனதிற்குள் “வாங்க மேடம்! சார் வரலைனதும் மேடம்கு டென்சன் ஓவர் ஆயிடுச்சு போல. கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஜீன், டி.என்.ஏனு எனக்கு சயின்ஸ் கிளாஸ் எடுத்தல்ல. இன்னைக்கு நான் பண்ணுற பெர்ஃபார்மன்ஸ்ல இனிமே நீ என்னோட அண்ணன் கிட்ட லிமிட் மெயிண்டெயின் பண்ணு சூரியானு சொல்லவே கூடாது” என்று சூளுரைத்தபடி அவள் என்ன தான் சொல்கிறாள் என்று கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க

 

சந்தியா அவனது தோரணையில் எரிச்சலாகி “என்ன சார் நான் டென்சன்ல பேசிட்டிருக்கேன், நீங்க புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி உக்காந்திருந்தா என்ன அர்த்தம்?” என்று வெடிக்க அவன் அமைதியாக தனது மேஜையில் கண்ணாடி தம்ளரில் மூடி போட்டு வைத்திருந்த தண்ணீரை அவள் பக்கம் நகர்த்திவிட்டு குடித்துவிட்டு பேசுமாறு சைகை காட்டினான்.

 

சந்தியா “எனக்கு தண்ணி வேண்டாம் சார். சூரியா ஏன் வரலைனு காரணம் தான் வேணும்” என்றாள் பிடிவாதமாக.

 

அவன் பொய்யாய் ஒரு பெருமூச்சை வெளியிட்டுவிட்டு “என்ன சொல்லுறதுனே தெரியலை தியா, இந்த ஒன் மன்த்தா அவனுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். அதோட பாதிப்பு உடம்பை தாக்கி நேத்து நைட்ல இருந்து அவனுக்கு ஃபீவர். இந்த நேரம் பார்த்து டாட் வீட்டுல இல்லை. மாம் சிட்னியில பெரியம்மா வீட்டுக்கு போயிட்டாங்க. லெட்சுமிம்மாவும் அவங்க பொண்ணை பார்க்கிறதுக்கு கிராமத்துக்கு போயிட்டாங்க” என்று கோர்வையாய் இயம்ப

[the_ad id=”6605″]

சந்தியா “வாட்? ஃபீவர்ல இருக்கிறவனை தனியாவா விட்டுட்டு வந்திருக்கிங்க, அவனுக்கு ஹெல்ப் பண்ணுறதை விட உங்களுக்கு என்ன பெரிய வேலை?” என்று பதறிப் போய் கேட்க

 

ஆரியா “ஏன் சொல்ல மாட்ட நீ? அம்மா தாயே! அவனுக்கு காய்ச்சல்னு நான் அவனுக்கு பணிவிடை பண்ணிட்டிருந்தா ரொட்டீன் ஒர்க்கை யாரு பார்க்கிறது? சரி விடு! அவன் தலையெழுத்து தனியா கிடந்து கஷ்டப்படணும்னு இருக்கு. இவ்ளோ வசதி இருந்தும் காய்ச்சல் நேரத்துல அன்பா கவனிச்சுக்க கூட யாரும் இல்லையேங்கிறதை நினைச்சா மனசு லைட்டா வலிக்குது” என்று கூறிவிட்டு ஓரக்கண்ணால் சந்தியாவின் முகத்தில் தோன்றும் உணர்ச்சிக்கலவையை நோட்டம் விட்டான்.

 

சந்தியாவுக்கு அவன் கூறுவதை கேட்டதும் மனதில் பாரம் கூடிவிட்டது. அவனது அன்னை அவனை கவனிக்க மாட்டார் என்பது அவளுக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயம் தான். ஆனால் லெட்சுமியும் ஊருக்கு சென்று விட்டார் என்றால் அவன் நோய்வாய்ப்பட்ட நிலையில் அங்கே எப்படி இருப்பான் என்ற எண்ணம் மூளையை வண்டாய் குடைய அவளது மனசாட்சி “என்ன இருந்தாலும் சூரியா உன்னோட ஃப்ரெண்ட். அவன் காய்ச்சல்ல கஷ்டப்படுறான்; இப்போ கூட உன்னால அவனுக்கு ஹெல்ப் பண்ண முடியாதா?” என்று அவளை கேள்வி கேட்டது.

 

சந்தியா சிறிது நேரம் புருவம் சுருக்கி யோசித்தவள் “ஓகே! நான் போய் சூரியாவை பார்த்துக்கிறேன். எதுவும் முக்கியமான விஷயம்னா எனக்கு கால் பண்ணுங்க சார். நான் இன்னும் சில ரிப்போர்ட்ஸ் கேட்டிருந்தேன். இஃப் யூ டோண்ட் மைண்ட், அதை சூரியாவுக்கு பதிலா நீங்க படிச்சு பார்த்து சைன் பண்ணிடுறிங்களா?” என்று கேட்க

 

ஆரியா “ஆஹா! இதை தான் நான் எதிர்பார்த்தேன்” என்று மனதிற்குள் சந்தோசப்பட்டுக் கொண்டவன் “அதை நான் பார்த்துக்கிறேன் தியா. நீ ஏன் டைம் வேஸ்ட் பண்ணிட்டிருக்க? நீ வேஸ்ட் பண்ணுற ஒவ்வொரு செகண்டும் என் பிரதர் அங்க தனியா ஃபீவர்ல கஷ்டப்பட்டுட்டிருப்பான்” என்று அவளை அனுப்பி வைப்பதிலேயே குறியாய் இருக்க சந்தியாவும் வேக வேகமாக அவனது அறையிலிருந்து வெளியேறினாள்.

 

அடுத்த ஐந்து நிமிடத்தில் ஹேண்ட்பேக், மொபைல் சகிதம் தனது ஸ்கூட்டியில் கிளம்பினாள். அரைமணி நேர ஸ்கூட்டி பயணத்துக்குப் பின் சூரியாவின் வீட்டின் முன்னே நின்றவள் காவலாளியிடம் “நான் சூரியா சாரோட செகரட்டரி. இந்த ஃபைலை அவர் கிட்ட குடுக்கணும்” என்று ஹேண்ட்பேக்கிலிருந்து ஒரு கோப்பை எடுத்து காட்ட அவர் உள்ளே அனுப்ப தயங்கவே ஆரியாவுக்கு போன் செய்து அவரிடம் நீட்டினாள்.

 

அவர் வாங்கிப் பேசிவிட்டு அவளிடம் போனை திருப்பியளித்தவர் “நீங்க உள்ளே போங்கம்மா” என்று அனுமதிக்க அவளும் ஸ்கூட்டியை அவர் கைகாட்டிய இடத்தில் நிறுத்திவிட்டு தனக்கு எதிரே பரந்து விரிந்த தோட்டத்தின் நடுவில் கம்பீரமாக நின்ற பெரிய வீட்டை பார்த்து மலைத்து நின்றாள்.

 

பச்சைப்போர்வை விரித்தாற்போன்ற புல்வெளிக்கு நடுவே சாம்பல் நிறத்தில் நெளிந்து சென்ற சிமெண்ட் நடைபாதையில் கால் பதித்து நடந்தவள் வீட்டை சுற்றி இருந்த மரங்களையும் அழகுக்காக வளர்க்கப்பட்டிருந்த மலர்ச்செடிகளையும் ரசித்தபடி வீட்டினுள் காலடி எடுத்து வைத்தாள். அவ்வளவு பெரிய வீட்டில் ஆங்காங்கு தென்பட்ட வேலையாட்கள் தவிர வீட்டின் உரிமையாளர்களின் பிரசன்னமே இல்லை அங்கே.

 

சீருடை அணிந்த ஒரு பணியாளரை அழைத்து தான் வந்த விபரத்தை கூறியவள் சூரியாவின் அறை எங்கே என்று கேட்க அவர் அவளை மாடியை நோக்கி அழைத்துச் சென்றார். வீட்டின் உள் அலங்காரத்தை ரசித்தபடியே மாடியில் நடந்தவள் அவர் காட்டிய அறையை தட்ட உள்ளே இருந்து பதில் வராமல் போக கதவில் கை வைத்துத் தள்ள கதவு திறந்து கொண்டது.

[the_ad id=”6605″]

உள்ளே நுழைந்தவளுக்கு அங்கே யாரும் இல்லாததை கண்டு ஆச்சரியம். அவள் நின்ற இடத்தில் சோஃபாக்களுடன் ஒரு டீபாய் இருக்க அந்த அறை இன்னும் நீளும் போல என்ற எண்ணத்தில் முன்னேறி இன்னும் உள்ளே செல்ல அங்கே தெரிந்த கட்டிலில் படுத்திருந்த உருவத்தை அவள் பார்த்துவிட்டாள்.

 

“சூரியா” என்ற அழைப்புடன் அவள் உள்ளே வர படுத்திருந்தவன் திடுக்கிட்டு எழுந்தான். பதறிப் போய் விழித்தவனை ஒரு முறை ஏற இறங்க பார்த்தாள் சந்தியா. காய்ச்சலின் சோர்வு முகத்தில் அப்பட்டமாக தெரிய, தலைமுடி கலைந்து பார்க்கவே பரிதாபமான தோற்றத்தில் இருந்தவனின் அருகில் சென்றாள் அவள்.

 

அவன் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தபடி “நீ நிஜமாவே வந்துட்டியா பிரவுனி?” என்று கேட்க

 

சந்தியா நக்கலாக “நான் வரலைடா! என்னோட ஆவி வந்திருக்கு” என்று கலாய்த்தடி ஹேண்ட்பேகை அங்கிருந்த மேஜையின் மீது வைத்துவிட்டு ஒரு மோடாவை இழுத்து போட்டு அவன் படுத்திருந்த மெத்தைக்கு அருகில் அமர்ந்தாள்.

 

அமர்ந்தவள் நெற்றியில் கை வைத்து  பார்த்துவிட்டு “சூடு அவ்ளோவா இல்ல! பட் இன்னும் முகம் தெளிவா இல்லையே, டேப்ளட் போட்டியா நீ?” என்று அக்கறையுடன் வினவ

 

அவன் சந்தியாவின் அக்கறையில் மனம் நெகிழ்ந்தாலும் அவளது முந்தைய பேச்சு இன்னும் அவன் மனதை வருத்திக் கொண்டிருப்பதால் “ம்ம்..நீங்க ஏன் இவ்ளோ தூரம் வந்திங்க சந்தியா தேவராஜ்?” என்று கேட்க

 

சந்தியா “ஆரியா சார் தான் சொன்னாரு, உனக்கு உடம்பு சரியில்லைனு. அதான் உன்னை பார்க்கலாம்னு…” என்று அவள் பேசும் போது இடை மறித்தான் அவன்.

 

“நீங்க என்னோட ஸ்டாஃப் தானே..எனக்கு உடம்பு நல்லா இருந்தாலும், இல்ல சரியில்லாம போனாலும் உங்களுக்கு என்ன? கரெக்ட் டைமுக்கு உங்களுக்கு தான் சேலரி வந்துடுமே” என்று விட்டேற்றியாக பதிலளிக்க சந்தியா வாயடைத்து போனாள்.

 

“இப்போ நீங்க இங்க வந்ததுக்கு மட்டும் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்களா மேடம்? நீங்க வர்றப்போ குறைஞ்சது ஒரு நாலு சர்வெண்ட் கண்ணுலயாச்சும் நீங்க பட்டிருப்பிங்க. அவங்க நம்ம பத்தி என்ன நினைப்பாங்கனு நீங்க யோசிக்கலையா?” என்று புருவம் உயர்த்தி வினவ

 

சந்தியா “ஓ! நீங்க பாயிண்டா பேசுறிங்களோ? இங்க பாரு மார்ஸ்மாலோ! அது ஆபிஸ், அங்க நீ என்னோட எம்ப்ளாயர்; நான் உன்னோட ஸ்டாஃப். அங்கே நீ எனக்கு ஓவரா ஃபேவர் பண்ணுனா அது பார்க்கிறவங்களுக்கு தப்பா தெரியும். பட் இப்போ இங்கே நான் வந்தது ஒரு ஃப்ரெண்டா தான். சோ இப்போ என்னை யாரும் கேள்வி கேக்க முடியாது. அப்பிடி கேட்டாலும் நான் அதை பத்தி கவலைப்பட மாட்டேன்” என்று தெளிவாக கூற

 

சூரியா “நீ ரொம்ப தெளிவா தான் இருக்க. நான் தான் குழம்பியிருக்கேன்” என்று என்னவென்று புரியாத உணர்வை குரலில் விரவி பேச சந்தியாவுக்கு அதற்கு என்ன பதிலளிக்க என்று புரியவில்லை.

 

சந்தியா “சரி அதெல்லாம் விடு! நீ டேப்ளட் போட்டியா?” என்று கேட்க அவன் இல்லையென்று தோளை அலட்சியமாக குலுக்க அவள் தலையிலடித்துக் கொண்டாள்.

 

“மெடிசின்ஸ் எங்கே இருக்கு?” என்று சந்தியா வினவ

“அந்த டேபிள்ல” என பெருவிரலால் மேஜையை சுட்டிக்காட்டினான் சூரியா.

மேஜையிலிருந்து மாத்திரையை எடுத்தவள் அவன் கையில் திணிக்க சூரியா “நான் இன்னும் சாப்பிடலை” என்று சாக்கு கூறி மாத்திரை போட மறுக்க

 

அவள் திகைத்தவளாய் “இன்னுமா சாப்பிடலை நீ? இவ்ளோ உயரமா வளர்ந்திருக்க; ஒரு காய்ச்சல் வந்தா கூட உன்னால மேனேஜ் பண்ண முடியல” என்று புலம்பியபடி தலையிலடித்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

 

அவள் சென்று விட்டாளா என்று பார்த்துவிட்டு முகம் மலர்ந்தவன் “தேங்யூ சோ மச் கடவுளே! காய்ச்சல் வந்தது கூட நல்லதுக்கு தான்., இல்லனா நானும் பிரவுனியும் ஒருத்தரை ஒருத்தர் முறைச்சிட்டே இருந்திருப்போம். என் பிரவுனிக்கு தான் என் மேல எவ்ளோ அக்கறை! ஆனா என்ன அப்பப்போ அவ பிரெயின் கரெப்ட் ஆயிடுது” என்று கூறிவிட்டு தலையணையில் சவுகரியமாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டபடி சென்றவள் திரும்பி வருவதற்காக காத்திருந்தான்.

 

அவனுக்கு சந்தியாவின் முகத்தைக் கண்டதுமே காய்ச்சல் பாதி சரியான உணர்வு. மீதி காய்ச்சலும் அவள் நெற்றியை தொட்டு அக்கறையாய் விசாரித்ததில் பறந்துவிட அவன் மனம் தெளிவாகிவிட்டது.

 

சந்தியா சில நிமிடங்களில் கையில் ஒரு கிண்ணம் மற்றும் கரண்டியுடன் திரும்பினாள். மோடாவில் அமர்ந்தவள் அவனிடம் கிண்ணத்தை நீட்டி “இந்த கஞ்சியை சாப்பிட்டிட்டு டேப்ளட்டை போடு” என்று கட்டளையிட அவன் சொல் பேச்சு மீறாதவனாக முழு கிண்ணத்தையும் காலி செய்துவிட்டு அவளிடம் நீட்டினான்.

 

தண்ணீர் தம்ளரை அவனிடம் கொடுத்துவிட்டு “கொஞ்சநேரம் ஆகட்டும். அப்புறமா மாத்திரை போட்டுக்கலாம்” என்று கூறிவிட்டு அந்த மோடாவில் அமர்ந்துவிட்டாள்.

 

அதன் பின் இத்தனை நாட்கள் பேசாத அனைத்தையும் இருவரும் பேசித் தீர்க்க சந்தியா “ஓகே மார்ஸ்மாலோ! இப்போ மாத்திரை போடு பார்ப்போம்” என்று மாத்திரையை அவன் கைகளில் திணிக்க

 

சூரியா “பிரவுனி என் காய்ச்சல் எப்போவோ சரியா போச்சு. இப்போ டெம்பரேச்சர் கூட குறைஞ்சு போச்சு பாரேன்” என்று அவள் கையைப் பற்றி தனது நெற்றியில் வைக்க

 

சந்தியா கையை உருவிக் கொண்டபடி “இந்த டகால்டி வேலையெல்லாம் நீ என் கிட்ட காட்ட டிரை பண்ணாதே மார்ஸ்மாலோ! ஏன்னா அதுல நான் எக்ஸ்பெர்ட். ஒழுங்கு மரியாதையா சாக்குபோக்கு சொல்லாம டேப்ளட்டை போடு” என்று மிரட்ட

 

அதைப் பார்த்து அவன் முகம் சுழித்தவாறு பேசத் தொடங்கவும் சந்தியா சட்டென்று மாத்திரையை அவன் வாயில் திணித்து தண்ணீரை புகட்ட வேறு வழியின்றி விழுங்கி வைத்தான்.

 

விழுங்கி விட்டு தலையை உலுக்கி கொண்டவன் “பிரவுனி நீ சரியான சேடிஸ்ட்! இப்பிடியா மனுசன் பேசிட்டிருக்கப்போவே வாயில்ல டேப்ளட்டை திணிப்ப?” என்று மாத்திரையின் கசப்பை நாவில் உணர்ந்தபடி முகச்சுளிப்புடன் கேட்க

 

சந்தியா “சொன்னா கேக்குற ஆளா நீ? டேப்ளட் சாக்லேட் மாதிரி தித்திப்பா இருந்துச்சா மார்ஸ்மாலோ?” என்று கேலி செய்ய

 

அவன் “ரொம்ப கிண்டல் பண்ணாதே பிரவுனி. உனக்கும் ஒரு நாள் காய்ச்சல் வரும். அப்போ பார்த்துக்கிறேன்” என்று சூளுரைக்க

 

சந்தியா “எனக்கு காய்ச்சல் வரும்னு சாபமா குடுக்கிற நீ?” என்று வெகுண்டெழுந்து அவன் பக்கத்திலிருக்கும் தலையணையால் தர்ம அடி கொடுக்க சூரியாவுக்கு பழைய சந்தியா திரும்பி வந்த மாயம்.

 

அவளது அடி எந்த வலியையும் ஏற்படுத்தாமல் முகத்தில் புன்னகையை வரவழைக்க சந்தியாவிடம் “பிரவுனி! நீ இப்பிடியே இரு; யாருக்காகவும் எதுக்காகவும் நீ சேன்ஜ் ஆகாதே,. பிளீஸ்” என்று வேண்ட சந்தியா வெறுமெனே தலையாட்டினாள்.

 

ஆனால் அலுவலகத்தை பொறுத்தவரை தன்னை ஒரு சக ஊழியராக நடத்தும்படி அவளும் தனது தரப்பு நியாயத்தை அவனிடம் விளக்க அவனுக்கும் ஒரு சராசரி பெண்ணுக்கு இருக்க வேண்டிய எண்ணம் தான் சந்தியாவுக்கும் என்று புரிபட்டது.

 

அன்று மாலை வரை அவனுடனே இருந்து அலுவலக விஷயம், பொதுவான சில விஷயங்களை பேசிவிட்டு சந்தியா கிளம்ப சூரியாவுக்கும் அலுவலகத்தை பொறுத்தவரைக்கும் அவளின் நிலைப்பாடு சரி தான் என்று புரிந்து கொண்டான். அதே போல சந்தியாவும் ஒரு நண்பன் என்ற முறையில் சூரியாவை என்றுமே தனது வார்த்தைகளால் வருத்திவிடக் கூடாது என்று எண்ணியபடியே வீட்டை நோக்கி பயணித்தாள்.

 

சாரல் வீசும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!