Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலே சாரலாய்

சாரல் – 11 .1

அவர் சென்றதும், “ம்மா.. வாங்க எல்லாரும் சாப்பிடலாம்.. என்று அழைக்க,

“ஹப்பாடா.. தப்பிச்சேன்” என்று செல்லப் பார்க்க,

“இருடா.. உங்க அப்பா எங்க டா நந்தா” என்று கேட்டுக் கொண்டே வர,

“அப்பா கிளம்பிட்டாங்க..”



Advertisement

“என் புருஷனுக்கு சாப்பிட்டு காபி தரவே இல்ல டா.. எப்படி டா காபி குடிக்காம  கிளம்புனாங்க..”

“என்ன ஒரு கரிசனம் புருஷன் மேல, அப்போ இவ்வளோ நேரம் ஏன் வெளில வரலை..”

“அதுவா உள்ள இவன்கூட பேசிட்டு இருந்ததுல மறந்துட்டேன் போல..” என்று சமையலறையிலிருந்து வெளியே வந்த சுரேஷை கைகாமிக்க,

Advertisement

“சரி.. நம்பிட்டேன் ம்மா.. வாங்க சாப்பிடலாம்..”

Advertisement

ராஜா மேலிருந்து இறங்கி வர,

“அண்ணா.. இவ்வளோ நேரம் என்னடா பண்ணுன” என்று ராஜாவிடம் கேட்க,

அவன் பதில் சொல்வதற்குள்,

Advertisement

“அண்ணா…” என்று அழைத்துக் கொண்டே வந்தமர்ந்த்தான் சுரேஷ்.

“சொல்லு டா.. எப்போ எக்ஸாம்.. ப்ரீபரேஷன் எல்லாம் எப்படி போகுது..”

“ண்ணா.. அதுலாம் அப்பறம் கேளு.. நீ என்னைய இன்னைக்கு கடைக்கு கூட்டிட்டு போற.. வைஷுக்கு மட்டும் டிரஸ் வாங்கி தந்தல்ல.. எனக்கும் வேணும்..”

காவியா, “வைஷுவும் இருந்தா நல்லாருந்திருக்கும்..”

நந்தா, “சரி.. அப்போ எல்லாரும் சாயிந்தரம் கடைக்கு போலாம்..”

“அவளும் இருந்தா பஞ்சாயத்து தான் அப்பறம் பொழுதன்னைக்கும்..” என்றார் அன்னை… சரி டா போலாம்..

சுரேஷ், “இருங்க.. நான் அவகிட்ட சொல்லுறேன்.. நீ வந்தாலே வீட்ல பஞ்சாயத்து தான் நடக்கும் அம்மா சொல்றங்கனு..”

ராஜா,” ஒழுங்கா சாப்பிடு முதல்ல..”

“போடா அண்ணா.. வர வர நீ, அடுத்த அப்பா வா மாறிட்டு வர” என்றான்.

நந்தா, “டேய் சாப்பிடு டா..” பெரியனே, நீ வேலை இருக்குனு கடைசில சொல்லாத.. உங்க அப்பா கிட்ட முன்னவே சொல்லிடு

“அத்தை.. பொண்ணு பத்தி பேசல, நந்தா கிட்ட”  என்று மெதுவாக காவியா முணுமுணுக்க,

“ம்ம்.. ஒரு ஐடியா இருக்கு..அப்படி சொல்றேன்..”

ராஜா, “என்ன காவியா.. எங்கம்மா காதை கடிக்குற..”

“அதுவா.. சீக்ரெட்..”

சுரேஷ், “என்னனு எனக்கும் சொல்லுங்க அண்ணி..”

கோமதி, “என்னடா நீ ஏதும் கேக்கல.. அவகிட்ட..”

“எப்படியும் சொல்ல தான போறீங்க.. அப்பறம் எதுக்கு கேக்கணும்.. நீங்களே சொல்ல மாட்டீங்க..”

அதான.. தெரியாம உங்கிட்ட கேட்டுட்டேன்.. சரி.. அத்தை வீட்டுக்கு போயிட்டு அப்படியே கடைக்கு போலாம்..

நந்தா,”எதுக்கு தீடீருன்னு அத்தை வீட்டுக்கு..”

சுரேஷ், “எந்த அத்தை வீட்டுக்கு..”

“நீ என்ன கேள்வி டா கேக்க போற ராஜா..” கோமதி.

“எதோ ஒரு முக்கியமா விஷயம் இருக்குனு மட்டும் தெரியுது.. அப்பாவும் வாராங்களா? ம்மா..”:

“இவன் காரியத்தையே கெடுத்துவான் போல..”என்று நினைத்து.. இல்ல டா..உங்க புவனா அத்தை அன்னைக்கு வீட்டுக்கு வந்தாங்க.. அதுனால ஓரெட்டு போயிட்டு பாத்துட்டு வரலாம்னு தான்.. வேற ஒன்னும் இல்லை…”

“சரி.. அப்போ கொஞ்சம் சீக்கரம் கிளம்பி கடைக்கு போயிட்டு அங்க போலாம்.. உங்க புருஷன்கிட்ட பெர்மிஸ்ஸென் வாங்கிக்கோங்க… நான் போயிட்டு டிவி பாக்க போறேன்..நீங்க?…” என்று அண்ணன் மற்றும் தம்பியை பார்த்து கேட்க,

“அதுலாம் அவங்க தங்கச்சி வீட்டுக்கு-ன்னா உங்க அப்பா ஒன்னும் சொல்ல மாட்டார்.”

சுரேஷ், “நான் வரேன் ண்ணா..”

ராஜா, “நான் ஒரு ரவுண்டு வயலுக்கு இப்போவே போயிட்டு வந்திருறேன்..” என்று எழுந்து சென்றான்.

“சரி அப்போ.. நான் அத்தாச்சி போன் பண்ணி சொல்லிடுறேன்..”

“சரி வாடா தம்பி..நாம போவோம்..”

சுரேஷ், “மாநாடு நிறைவுற்றது.. எல்லாம் போய் வேலையப் பாருங்க..”

– – – – –

அவந்தி மேம்.. “அஃபிடேர்நூன் ( afternoon ) உங்களுக்கு கிளாஸ் இல்லையா?” என்று சக ஆசிரியர் ஒருவர் கேட்க,

“இல்ல மேம்.. லஞ்ச் முடிஞ்சி, எனக்கு த்ரீ ஹவர்ஸ் லேப் இருக்கு.. லாஸ்ட் பீரியட் தான் லஷ்சர்” (leisure ) என்றாள்.

“அப்படியா மேம்.. போன செமஸ்டர் நீங்க எடுத்த சப்ஜெக்ட் தான் இப்போ எனக்கு குடுத்துருக்காங்க.. அதனால கொஞ்சம் டவுட் கேட்கலாம்னு கேட்டேன்..”

“ஓஹ்.. அப்போ லாஸ்ட் ஹவர் முடிஞ்சா சொல்றேன்.. இல்லனா நாளைக்கு ஓகே வா உங்களுக்கு.. இல்ல ஏதும் அர்ஜென்ட் ஆஹ் மேம்..”

“ஒன்னும் ப்ரோப்லேம் இல்ல மேம்.. நாளைக்கே கேட்டுக்குறேன்..”

“அப்போ ஓகே மேம்..”

லஞ்ச் முடித்துவிட்டு இவள் கிளாசில் நுழைந்துவிட்டு, குட் அஃபிடேர்நூன்.. லஞ்ச் எல்லாம் முடிச்சாச்சுள, இப்போ லேப் ஸ்டார்ட் பண்ணலாமா? என்று கேட்க,

“எஸ் மேம்” என்று கோரஸ் வந்தது, மாணவர்களிடமிருந்து..

போன வீக் கிளாஸ்ல பண்ணுன கால்குலேஷன்ஸ் எல்லாம் முடிச்சிட்டு வர சொன்னேன்ல.. அந்த ரெகார்ட் நோட்டை இந்த பெஞ்ச்ல எடுத்து வந்து சப்மிட் பண்ணுங்க. நெக்ஸ்ட் உங்க குரூப்க்கு எந்த எக்ஸ்பெரிமெண்ட் அப்படினு போன வீக் சொல்லிருந்தானோ அங்க பிளேஸ்ல வெயிட் பண்ணுங்க.. ‘ஐ வில் கம் இந்த ஆர்டர். கம் ஆன் பாஸ்ட்..’ என்று அவர்களுக்கு அறிவுறுத்த,

மாணவ மாணவியர் தங்களது நோட்டை எடுத்து வந்து சப்மிட் செய்ய, அதனை பார்வையிட்டாள்.

இரண்டு மாணவர்கள், லேப் கோட் போட்டு வராமல் ஒரு ஓரத்தில் நிற்க, அவர்களை நோக்கி சென்றாள். இப்போ தான் முதல் தடவை நீங்க கோட் போடாம வந்திருக்கிங்களா என்று விசாரிக்க, இருவரும் ஒன்றும் கூறாமல் அவளை பார்க்க,

“ஆன்சர் வரணும்” என்றாள் அழுத்தமாக..

“இல்ல மேம்” என்று கூற,

உங்களுக்கு அப்போ தெரியும் லேப்க்கு கோட் வேணும்னு, இருந்தும் எடுத்து வரல இல்லையா?

மேம் அது வந்து என்று ஒருவன் பதில் கூற வர,

“டோன்ட் செ ரீசன்ஸ் எனிமோர்.. லேப் இருக்குனு தெரிஞ்சும், மத்த கிளாஸ் ஸ்டுடென்ட்ஸ் கிட்ட கேட்டு கடன் வாங்கி கூட உங்களுக்கு போட்டுட்டு வரணும் தோணல.. சோ யு மே ஸ்டாண்ட் ஹியர் இட்ஸெல்ப்.. அப்போ தான் நெக்ஸ்ட் டைம் ஞாபகம் வரும்.. நீங்க பர்ஸ்ட் டைம் கூட பண்ணல, உங்களுக்கு நான் வார்ன் பண்ணி அனுப்ப.. ரெகார்ட் முடிச்சீங்களா அதுவும் இல்லையா..?”

‘நோ மேம்’ என்று கீழே பார்த்து கூறினார்.

“வெரி குட்.. ஸ்டாண்ட் ஹியர்..”

“வேற யாரு இன்னும் போன வீக் வரைக்கும் ரெகார்ட் கம்ப்ளீட் பண்ணலையோ அவங்க எல்லாம் இங்க வந்து நில்லுங்க…” என்று கூறிவிட்டு அன்றைய தின ப்ராக்டிகல் எக்ஸ்பெரிமெண்ட் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள்.

ஒரு பேட்ச் முடித்து விட்டு, மற்ற மாணவர்களிடம் மீண்டும் விசாரிக்க, லாஸ்ட் ஒன் எக்ஸ்பெரிமெண்ட் கம்ப்ளீட் பண்ணாதவங்களுக்கு  மட்டும் இன்னைக்கு எக்ஸ்க்யூஸ் பண்றேன். அவங்க மட்டும் உங்க பேட்ச் கூட ஜாயின் பண்ணிக்கோங்க. மீதி எல்லாரும் இன்னைக்கு உங்க எக்ஸ்பெரிமெண்ட் பண்ண முடியாது. ஓகே.. காட் இட் ?

“மேம்.. ப்ளீஸ் மேம்…” என்று குரல்கள் வர,

“இது முதல் தடவை இல்லையே.. சோ டோன்ட் செ ப்ளீஸ்.. நெக்ஸ்ட் டைம் முடிஞ்சிட்டு வாங்க பாத்துக்கலாம்” என்று கூறி விட்டு அவள் வகுப்பெடுக்க,

இங்கு  நின்ற மாணவர்கள் சலசலக்க, இவள், “இப்படி சத்தம் போட்டு பேசிட்டே இருந்திங்கனா, நீங்க எல்லாம் அடுத்து கிளாஸ்க்கு வெளில போயிட்டு நிக்க வேண்டி இருக்கும்.. புரிஞ்சிதா..?”

“அடுத்து அவர்கள் சத்தம் கொஞ்சம் அடங்கியது..”

இவர்கள் லேப்யை கடந்து சென்ற வைஸ் பிரின்சிபால், மாணவர்கள் நிற்பதை பார்த்து விட்டு உள்ளே வர, அவந்தி அவருக்கு விஷ் செய்து விட்டு அவள் வேலையை கவனிக்க, அந்த வைஸ் ப்ரின்ஸிபலோ.. “என்ன மேம் எதுக்கு ஸ்டுடென்ட்ஸ் தனியா நிக்குறாங்க” என்று கேட்க,

“அவங்க ஒர்க் கம்ப்ளீட் பண்ணல மேம்.. அது தான் நிக்க வச்சிருக்கேன்,.”

“சரி.. நான் சொல்றேன்.. எக்ஸ்க்யூஸ் பண்ணுங்க” என்றார் கொஞ்சம் திமிராக,

“சாரி மேம்.. நிறைய டைம் அப்படி பண்ணிட்டேன்.. பட் அவங்க முடிக்கல.. அது தான் நிக்க வச்சிருக்கேன் இன்னைக்கு..”

“ஓகே.. இருக்கட்டும்.. நான் இப்போ சொல்றேன்.. நீங்க அவங்கள விடுங்க..” என்றார் ஆர்டர் ஆக,

“எஸ் மேம்.. ஐ வில் டூ.. பட் ரிசல்ட் கம்மி ஆகுனா.. உங்கள தான் சொல்லுவேன் மேம்..”

“என்ன அவந்தி மேம்.. நான் வைஸ் பிரின்சிபால் இங்க..”

“ஐ நோ மேம்.. நீங்க சொன்னிங்கனு நான் விட்டா, அப்போ திரும்ப அடுத்த டைம்மும் இவங்க இதே தான் பண்ணுவாங்க. அப்போ நான் எவ்வளோ டைம் இப்படி இவங்களை எக்ஸ்க்யூஸ் பண்றது மேம்” என்றாள் நிதானமாக.

மாணவர்கள் இவர்கள் சம்பாஷனையே பார்க்க, அவர் ஒன்றும் கூறாமல் கிளாசில் இருந்து வெளியே சென்றார்.

இவள் மறுபடி வகுப்பெடுக்க, ஒரு சில மாணவர்கள் மேம்.. “நீங்க செம போல்ட் மேம்…” என்று பாராட்ட,

அவர்களை முறைத்து விட்டு, இங்க லிசென் பண்ணுங்க என்று அவளின் பாடத்தை தொடர்ந்தாள்.

ஒரு செட் முடித்துவிட்டு வந்து ரெகார்ட் நோட்டை திருத்த, இடையில் வரும் சந்தேங்களுக்கு விளக்கம் அளித்து, அவளின் வேலையை பார்த்தாள்.

ஒரு வழியாக அந்த கிளாசை முடித்து விட்டு வந்து அவளின் இருக்கையில் அமர, ஹச். ஓ. டி -இடமிருந்து அழைப்பு வந்தது. எதெற்கென்று ஒரு யூகம் இருந்ததால் அவரை பார்க்க சென்றார்.

அவர் இவளை பார்த்து விட்டு, இன்றைய நிகழ்வை விசாரிக்க, அவள் அதற்க்கு பதில் கூற, என்று சில நிமிடங்கள் சென்றது.

“ஓகே அவந்திகா.. ஐயம் டோடல்லி அக்ரீ வித் யு. இருந்தாலும் ஸ்டுடென்ட்ஸ் முன்னாடி இப்படி இனிமே பேசாம பாத்துக்கோங்க..”

“சார்.. அவங்க ஆர்டரிங் பண்ணுனதால தான்.. நானும் அப்படி பேசிட்டேன்.. எனிவெ என் மேலயும் மிஸ்டேக் இருக்கு. அவங்களுக்கு இல்லனாலும் அவங்க பதவிக்கு ரெஸ்பெக்ட் பண்ணல தான்.. ஐயம் சாரி சார்..”

“இட்ஸ் ஓகே அவந்திகா.. பாத்துக்கோங்க..”

“தேங்க்யூ சார்..” என்று வெளியேறினாள்.

அப்போது காலேஜ் மணியடிக்க ‘ஹப்பா..’ இன்னைக்கு டே முடிஞ்சிதுடா சாமி.. என்று எண்ணிக் கொண்டே தன்னுடைய இருக்கைக்கு சென்று பேகை எடுக்க,

என்ன அவந்தி மேம் எதுக்கு சார் கூப்பிட்டாங்க..?

“ஒன்னும் இல்ல மேம்.. ஒரு புக் கேட்டுருந்தேன் சார் கிட்ட.. அதுக்கு தான். ஓகே மேம்.. பாக்கலாம்.. இவங்க எப்படி தான் தெரியாத மாறியே கேக்குறாங்களோ..” என்று நினைத்துக் கொண்டே அறையிலிருந்து வெளியே வர,

அங்கு பிரபாகர் இவளை மேம் என்று அழைக்க, இவள் அவரை என்ன என்பது போல் பார்க்க,

பிரபாகரோ,”இல்ல இல்ல மேம்.. அது.. அது வைஸ் பிரின்சிபால் உங்கள ரூம்க்கு வர சொல்ல சொன்னாங்க என்கிட்ட அது தான் மேம்.. வேற ஏதும் இல்லை..”

“அடுத்து இதுவா.. இந்த நேரம் தான் கூப்பிடணுமா என்று கடுப்பாகி, ஓகே சார்..” என்று கூறிவிட்டு வைஸ் பிரின்சிபால் அறையை நோக்கி சென்றாள்.

அங்கே கதவை தட்டிவிட்டு இவள் அங்குள்ள ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்தாள்.

அடுத்த பத்து நிமிடம் சென்று, தர்ஷியிடம் இருந்து போன் வர, இவள் எடுத்து வெயிட் பண்ணு தர்ஷி.. நான் வந்து பேசுறேன் என்று எதுவும் கூறாமல் வைத்துவிட்டாள்.

“என்ன ஆச்சு.. கடுப்பா பேசுற போல இருக்கே” என்று நினைத்துக் கொண்டே வண்டியில் சாய்ந்து நின்றாள். அவ்வழியே கிராஸ் செய்த பிரபாகர், அவந்தி மேம், வைஸ் பிரின்சிபால் பார்த்துட்டு வருவாங்க என்று அவளை பார்த்து கூறிக்கொண்டே சென்றான்.

“இவன் இன்னும் அடங்களையா..” இவனுக்கு எப்படி தெரியுமென்று யோசித்து நின்றாள். இவள் பத்து நிமிடம் இங்கு நின்று பார்த்து விட்டு, கான்டீன் சென்று அமர்ந்துவிட்டாள். வந்ததும் போய்க்கலாம் என்று.

அவந்தி அங்கு கடுப்புடன் காத்திருக்க, கடைசியாக ஒரு மணி நேரம் கழித்து அவள் வைஸ் ப்ரின்சிபாலின் அறையின் உள்ளே சென்றாள்.

அவருக்கு மரியாதை நிமித்தமாக விஷ் செய்து விட்டு, ஒன்றும் கூறாமல் அவரையே பார்க்க,

“சொல்லுங்க அவந்திகா, ஒன்னும் சொல்ல மாற்றிங்க..”

“நீங்க கூப்பிட்டதா சொன்னாங்க மேம்.. அதுதான் என்னனு கேக்க வந்தேன்”என்றாள்.

“ஹ்ம்.. நிறைய திமிரு இருக்கும் போலயே..” என்று பேச,

இவள் அதிருப்தியான பார்வையுடன் அவரை பார்க்க,

“என்ன ஒன்னும் பேச மாட்டறிங்க.. நிறைய பெரிய இடத்து சப்போர்ட் இருக்குனு திமிரா” என்று வேறு கேட்க,

“மேம்.. என்ன கேக்கணுமோ அதை மட்டும் தான் பேசணும்..” என்றாள் நிதானமாக,

“என்ன கோவம் வர மாறி இருக்கு..”

“எஸ் மேம்.. கண்டிப்பா வரும்.. நீங்க இப்படியே பேசுனா…”

“எதுக்கு கூப்பிட்டீங்கனு சொன்னிங்கன்னா கேட்டுட்டு நான் கிளம்புவேன்.. எனக்கு லேட் ஆகிட்டு..”

“என்னையே எழுத்து பேசுவியா..” என்றார் அதிகாரமாக,

“மேம்.. நீங்க எப்படி பேசுவீங்களோ அதுக்கு தகுந்த போல தான் நான் பதில் சொல்ல முடியும்..”

“அப்போ இன்னைக்கு நீ ஸ்டுடென்ட்ஸ் முன்னாடி எப்படி பேசுன?..”

“நீங்க ஆர்டர் பண்ணுணிங்க.. அது என்னோட கிளாஸ், நீங்க எப்படி ஆர்டர் பண்ண முடியும்.. என்கிட்ட நீங்க சொல்லலாம் அவ்வளோ தான்.. நீங்க ரொம்ப அதிகாரம் பண்ணி பேசுனீங்க.. அதுக்கு தான் நான் பதில் கொடுத்தேன். நான் பண்ணதுல எனக்கு எந்த தப்பும் தெரியல…”

 “நீங்க பொலைட் ஆஹ்  கூப்பிட்டு கேட்ருந்தா உங்களுக்கு இல்லனாலும் உங்க பதவிக்காக சாரி சொல்லிருப்பேன். பட் நீங்க என்னையே வேஸ்ட் ஆஹ், இவ்வளோ நேரம் வெயிட் பண்ண வச்சிருக்கிங்க.. இப்போ கூட உங்க பொசிஷன் என்னனு உங்களுக்கு தெரியல.. பட் இட்ஸ் ஓகே.. சாரி போர் தட் மேம்..” என்று முடித்தாள்.

“என்ன போனாப்போகுதுனு கேக்குறியா.. நான் உன்னை என்ன பண்றேன் பார்..”

“நீங்க அப்படி எடுத்துக்கிட்டா நான் ஒன்னும் சொல்ல முடியாது மேம்.. இப்பவும் சொல்றேன், என் மேல எந்த தப்பும் இல்லை. நீங்க வேற மாறி இந்த இஸ்யு வை கொண்டு போனாலும், நான் ரெடி மேம்..” என்றாள்.

“என்ன அவ்வளோ பெரிய ஆளா நீ?”

“வேற எதுவும் சொல்லனுமா மேம்.. இல்லைனா நான் கிளம்பலாமா?”

“எனக்குன்னு ஒரு நேரம் வரும்.. அப்போ பாத்துக்குறேன் உன்னை.. இப்போ நீ கிளம்பு..” என்றார் குரூரமாக,.

“வந்தா பாத்துக்கலாம் மேம்.. நானும் சும்மா பாத்துட்டு இருக்க மாட்டேன்.. தேங்க்யூ மேம்.. என்று மொழிந்து விட்டு வெளியே வந்தாள்.

இவள் வருவதை பார்த்த இரு கண்கள், வைஸ் பிரின்சிபால் அறைக்கு சென்று அவரிடம் பேசிவிட்டு, ஒரு திட்டத்துடன் வெளிவந்தது.

தர்ஷி எங்க இருக்க என்று போனில் கேட்டுக் கொண்டே, வண்டி நிற்கும் இடத்திற்கு செல்ல,

கான்டீன் வரியா என்று தர்ஷி கேட்க,

“நீ வா கிளம்பலாம்..”

“சரி.. அஞ்சு நிமிஷம்..”

இவள் கோவமாக வண்டியை ஓட்ட, அவளிடம் ஒன்றும் கேட்காமல் அமைதியாக வந்தாள்.

வீட்டிற்கு சென்றவுடன், அவளின் ரூமிற்க்கு நேராகச் செல்ல, தர்ஷியோ.. ரொம்ப கோவமா இருக்கா என்று சிந்தித்து கொண்டே அவள் வெளியே வரக் காத்திருந்தாள்.

கட்டிலில் பொத்தென்று அமர்ந்துக் கொண்டு, முகத்தை கைகளால் தேய்த்துக் கொண்டே, பேரு மூச்சை வெளியேற்றி தன் கோவத்தை குறைக்க, அப்பொழுது அவளின் அம்மா போன் செய்ய,

அவந்தி வந்ததும் போன் பேச சொன்னேன்ல, அப்போது தான் அம்மா சொன்னது ஞாபகத்துக்கு வர, என்னம்மா என்றாள் கடுப்பாக.

“அதுவா.. உனக்கு டாக்டர் மாப்பிள்ளை” என்று ஆரம்பிக்கவும்,

“ம்மா.. டாக்டர் மாப்பிள்ளைலாம் ஒன்னும்வேண்டாம்.. நீங்க போனை வைங்க.. நான் அப்பறம் பேசுறேன்” என்று வைத்துவிட்டாள்.

“இப்போ இந்த டாக்டர் மாப்பிள்ளை ஒன்னு தான் குறைச்சல்.. அவனவன் இருக்குற நிலைமை புரியாம.. எந்த மூட்ல பேசுறேன்னு கூட தெரியுல இவங்களுக்கு.. இவங்களுக்கு  அந்த டாக்டர்ல என்னதான் இருக்கோ..” என்று இங்கு அவரை திட்ட,

அங்கு அவளின் அம்மாவோ.. “நான் என்ன சொல்லவரேன்னு கூட உங்க பொண்ணு கேக்கலைங்க.. அப்படி என்ன அவளுக்கு.. இந்த டாக்டர் மாப்பிள்ளை தான் அவளுக்கு சொல்லிட்டேன்” என்று தன் கணவரிடம் சூளுரைக்க,

“அவந்தி விருப்பம் முக்கியம் பானு..”

“அடப்போங்க.. அவ தான் நாம சொல்ற பையன தான கட்டிக்குறேன்னு சொன்னா.. அப்பறம் என்ன..”

“நாம சொல்லற பையன இருந்தாலும் அவளுக்கு விருப்பம் இருக்கனும்.. நீ அவந்திகிட்ட இந்த விசயத்துல கம்பெல் பண்ணக்கூடாது” என்றார் கண்டிப்பாக.

“சரி…” என்று முணுமுணுத்து.. அவ நல்ல மூட்ல இருக்கும் போது நான் மறுபடியும் பேசுவேன் என்றார் தீர்மானமாக.

“பேச மட்டும் தான் செய்யணும்.. இப்போவே உனக்கு திரும்ப சொல்லுறேன்.”

“ஏன் அந்த பையனை உங்களுக்கு பிடிக்கலையா?”

“எனக்கு பிடிக்குறது முக்கியம் இல்லை பானு.. அவந்திக்கு பிடிக்கணும்..”

“அவளுக்கு பிடிச்சு உங்களுக்கு பிடிக்கலை அப்படினா..”

“பொண்ணுக்கு பிடிச்சா எனக்கும் பிடிக்கும்..”

“அப்ப சரி.. பேசிக்கலாம்.. அதுக்குள்ள அவங்க வீட்ல பிடிக்கலைனு போன் பண்ணி சொல்லிடாதீங்க..”

“நான் ஏதும் சொல்லல..போதுமா..”

“போதும்..போதும்..”

– – – –

இங்கு நந்தவோ அடுத்து ஒரு பெரிய முடிவை எடுத்திருந்தான். தன் அத்தையின் பதிலை கேட்டு.. என்னவாக இருக்கும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!