Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலே சாரலாய்

சாரல் – 12.1

தர்ஷி காலையில் எழுந்தது முதல் அவந்தியின் முகத்தையே அவ்வப்போது பார்த்துக்கொண்டே இருக்க,

“என்னடி.. என் மூஞ்சில என்ன இருக்குனு பாத்துட்டே இருக்க…” என்று வீட்டின் கதவை பூட்டிக் கொண்டே கேட்க,

“இல்லை டி வந்தி.. நீ நைட் முழுக்க பத்ரகாளி மாறி உன் மூஞ்சியை  வச்சிருந்தியே இப்போ சாந்தமா மாறிருக்கான்னு பாக்குறேன்..”

“வந்தி சொல்லாத எரும… சரி ஆகிட்டேன்… போதுமா…”



Advertisement

“அப்பறம் என்ன யோசனை.. நேத்து அம்மாவை வேற திட்டுன.. அதை  பத்தியா?..”

“அவங்கள பத்தி பேசாத தர்ஷி.. நான் இந்த வைஸ் பிரின்சிபால் கிட்ட கொஞ்சம் பாத்து இருக்கணும்னு யோசிக்கிறேன்..”

“ஏண்டி அம்மா என்ன பண்ணாங்க..”

Advertisement

“விடு தர்ஷி.. இன்னைக்கு டே முடியட்டும்.. இப்போ வா வண்டியில போயிட்டே பேசலாம்..”

Advertisement

“கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான்..”

“என்னடி கஷ்டம்..”

“அதுவா.. உங்கிட்ட கத்தி கத்தில பேசணும் வண்டியில போகும் போது.. உன் ஹெல்மெட் தாண்டி, அப்பறம் தானே உன் காதுகுள்ளப் போகும் நான் பேசுறது… அப்பறம் நீ பேசுறத கேக்க உன் மண்டைக்கிட வந்து என் காதை வைக்கணும்.”

Advertisement

“அவனவனுக்கு என்னமோ கஷ்டம் வருது.. உன்னோட..”

“நீ அப்படி ஒரு நாள் உக்காந்து பேசி பாருடி.. அப்போ தெரியும் உனக்கு..”

“உன் பின்னாடி கண்டிப்பா இந்த ஜென்மத்துல நடக்காது.. அதுனால இப்போ வந்து வண்டியில ஏறு..”

“போலாம் போலாம்.. ரைட்..”

“நீ காலேஜ்ல இனிமே என்கிட்டே கொஞ்சம் தள்ளியே இரு.. என் மேல உள்ள காண்ட உன்கிட்ட காட்டப் போறாங்க.. கொஞ்சம் நீயும் பாத்து இருந்துக்கோ தர்ஷி..”

“என்னடி இப்படிலாம் பேசுற.. கொஞ்சம் பயமா இருக்கு நீ பேசுறது..”

“உண்மையைத்தான் தர்ஷி சொல்லுறேன்.. அந்த அம்மா ரொம்ப தீவிரமா சொன்னது போல தான் இருக்கு.. ஏற்கனவே அதுக்கு போன செமஸ்டர் காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல என்னைய பைனல்ல ஸ்டேஜ்ல ஆடுற டான்ஸ் மட்டும் செலக்ட் பண்ணி தர சொன்னாங்கள்ல, அப்போவே அந்த அம்மாக்கு மனத்தாங்கல் வேற.. இவ வந்து ஒரு வருஷம் தான் அதுக்குள்ளவே இவளுக்கு இந்த இதுவான்னு.. இப்போ நான் வேற பசங்களுக்கு முன்னாடி வேற பேசிட்டேனா.. அதனால இன்னும் காண்டோட சுத்தும்..”

“டி.. நீ தான் ஆட்டக்காரி ஆச்சே.. அதனால தானே உன்னைய பண்ணச்  சொன்னாங்க.. அந்த அம்மாக்கும் தெரியுமே இது.. நீ தான் ஒரு தடவை இங்க கெஸ்ட் ரோல் பண்ணிருக்கியே.. அப்பறம் என்ன..”

“அடியேய்.. இதுக்கு உனக்கு இருக்கு.. மேடம் சீனியர் டீச்சர் இல்லையா..”

“ஓஹ் ஹோ.. இப்படி வேற ஒன்னு இருக்கோ..”

“ஆமா.. நீ பாத்து இருந்துக்கோ.. வா.. இப்போ போவோம் கல்லூரிக்குள்ள..”

“சரி அவந்தி.. சாயிந்தரம் பாக்கலாம்..”

– – — –

பதினோரு மணியளவில் சேகரின் தொலைபேசி அடிக்க, “ஏங்க.. உங்க போன் அடிக்குது என்று வாசலில் தனது வண்டியை கழுவிக் கொண்டிருந்த கணவனிற்கு சொல்ல,

“யாருன்னு பாரு பானு..”

“தெரியலைங்க.. நம்பர் வருது..”

“சரி.. இங்க எடுத்து வா.. பேசுறேன்..”

“இந்தாங்க..” என்று அவரிடம் நீட்டிவிட்டு, யாரென்று பார்க்க அவரின் அருகில் நின்றார்.

ஹலோ.. சொல்லுங்க.. சந்திரசேகர் பேசுறேன்.. நீங்க?..”

“வணக்கம் சார்.. நான் நந்தகுமார் பேசுறேன்.. நல்லா இருக்கிறீங்களா?..”

“வணக்கம்.. நந்தகுமாரா.. யாருனு சட்டுனு ஞாபகம் வரலையே..” அதற்குள் பானு கணவனின் கையை சுரண்ட,

அவரை என்ன என்பது போல் பார்க்க, அவர் அவந்திக்கு பார்த்த மாப்பிள்ளை என்று கூற,

“அதற்குள் இங்க நந்தவோ.. என்னடா நந்தா உனக்கு வந்த சோதனை..” என்று நினைத்துக் கொண்டு, நான் என்று ஆரம்பிக்க,

இங்கு சேகரோ.. சொல்லுங்க தம்பி.. சௌக்கியங்களா?

“ஹப்பாடா.. பல்பு எறிஞ்சிட்டு நம்ம மாமனாருக்கு.. என்று மனதில் பேசிக்கொண்டே, நல்லா இருக்கேன் சார்.. இப்போ நீங்க எதுவும் வேலையா இருக்கிங்களா?.. பேசலாமா சார்..?”

சேகர் சிந்தித்துக் கொண்டே, “சொல்லுங்க தம்பி.. பேசலாம்..”

“இல்ல சார்.. மாப்பிள்ளை பத்தி நீங்க தெரிஞ்சாகணும்னு நினைப்பீங்கள்ல.. அது தான் நானே நேர பேசிடலாம்னு கூப்பிட்டேன்.”

“நல்லதுங்க தம்பி.. சொல்லுங்க..

நான் என்று ஆரம்பித்து அவனின் படிப்பு, வேலைப் பற்றிக் கூற, சேகரோ அதை கேட்டுக்கொண்டு வேறு சில கேள்விகள் கேட்க என்று சிறிது நேர உரையாடலுக்கு பிறகு,

“நாங்க இன்னும் பொண்ணு கிட்ட உங்களப் பத்தி பேசல தம்பி. ஜாதகம் முதல்ல பாத்துட்டு அப்பறம் பேசலாம்னு இருந்தோம். நேத்திக்கு தான் பொருத்தம் பாத்துட்டு வந்தோம்.. அதனால இன்னைக்கு பேசிட்டு உங்களுக்கு சொல்றோம்.”

“இன்னும் சொல்லவே இல்லையா…” என்று அதிர்ச்சியாக மனதில் நினைத்து, வெளியில் பரவால்லைங்க அங்கிள். “நான் திங்கட் கிழமை வேலைக்கு போய்டுவேன் அங்கிள்.. நேர்ல அவங்க பாத்து பேச விருப்பட்டாக் கூட பேசலாம் அங்கிள்.”

“நீங்க அப்படி சொல்லுறிங்களா தம்பி.. இன்னைக்கு என் பொண்ணுகிட்ட பேசிட்டு உங்களுக்கு பேசுறேன் தம்பி..”

“சரிங்க அங்கிள்.. பாக்கலாம்”

போனை வைத்தவுடன், என்னங்க பையன் என்ன சொல்லுறான் என்றார் பானு  ஆர்வமாக.. அவர் சிரித்துக் கொண்டே, பையனுக்கு நம்ம பொண்ணை பிடிச்சிட்டு போல, நேராப்பார்த்து பேசணும் பிரியப்படுறார். அதுக்கு தான் இந்த போனெல்லாம் என்றார்.

“அப்படியா செய்தி.. அப்போ இன்னைக்கு அவந்திட்ட நீங்க பேசுங்க..”

“பேசலாம்.. அவ இன்னைக்கு கல்லூரி முடிச்சி வந்ததும், பிரீ ஆஹ் இருக்கும் போது பேசலாம்.. நீ அவசர குடுக்கை மாறி பேசி அவளை டென்ஷன் பண்ணாத..”

“உங்க பொண்ணு நேத்து எப்படி என்கிட்ட பேசுனா.. அதை ஒன்னும் அவளைக் கேக்காதீங்க.. என்னைய மட்டும் இப்படி சொல்லுங்க” என்றார் கோவமாக.

“பானு.. போன எடுத்ததும் அவள்ட என்னனு கூட கேக்காத, நீ என்ன சொல்லணுமோ அதை மட்டும் பேசுற, அவ என்ன நிலமைல இருக்கானு உனக்கு தெரியணும் முதல்ல.. நீ காலைல பேசும் போதே நான் சொன்னேன்.. திரும்பி மாலையும் இப்படியே பேசிருக்க நீ.. உன்னைய என்ன சொல்றது நான்..”

“என்னையே சொல்லுங்க எப்பவும்.. நம்ம பொண்ணுக்கு கல்யாணம் கூடி வருதுன்னு ஒரு ஆர்வத்துல கூட பேசக்கூடாத..?”

“அது தான் அவசரக் குடுக்கைனு சொன்னேன்.. பொண்ணு கல்யாணம் பானு, நிதானம் வேணும்.. எப்பவும் நாம சொல்றத முதல்ல சொல்லிடணும்னு சொல்லாத மத்தவங்க என்ன நிலைல இருக்கங்கானு பாக்கணும்.. உனக்கு நான் இதை நிறைத்த தடவை சொல்லிட்டேன்..”

“சரிங்க..” என்றார் அமைதியாக.

“இப்போ இப்படி சொல்லுவா.. கொஞ்ச நேரம் கழிச்சி அதை அப்படியே மறந்துடுவா..” என்று பேசிக் கொண்டே சென்றார்..

– – – –

தான் பேசுவதை பார்த்தபடி நின்ற மாமவைப் பார்த்து கண்ணடிக்க,

என்ன நேக்கா பேசுனேன் நினைப்பா உனக்கு?..”

“இல்லையா பின்ன..”

“அவரு அப்பாக்கே நீ வழிஞ்சி பேசுனது புரிஞ்சிருக்கும்..”

“என் மாமனார் தானே இருந்துட்டு போகட்டும்.. “

“ஆமா ஆமா.. முதல சார், கொஞ்ச நேரத்துல அங்கிள் ஆஹ் மாறிச்சு அடுத்து இன்னும் கொஞ்சம் நேரம் பேசிருந்தா மாமா வா மாறிருக்கும்..”

“ஹா ஹா.. போதும் போதும் இடத்தை காலி பண்ணுங்க.. போயிட்டு வேலையை பாருங்க..”

——-

ஏழு மணியளவில் தந்தையின் நம்பரிலிருந்து அழைப்பு வர, சொல்லுங்கப்பா..என்றாள்.

“அவந்தி எப்படி டா இருக்க, வேலையெல்லாம் நல்லா போகுதா..”

“எல்லாம் ஓகே தான்.. என்ன விஷயம் ப்பா.. சொல்லுங்க..”

தான் பேசுவதை வைத்து கணித்த மகளை எண்ணி பெருமைக்கு கொண்டே, “உனக்கு ஒரு வரன் வந்திருக்கு மா அவந்தி..”

“இதுதான், அம்மா நான் கோவமா இருந்தேன் கூட தெரியாம என்கிட்ட சொல்ல வந்தாங்க ப்பா..”

“ஆமா டா..  உன் அம்மாவை பத்தி தெரியும்ல.. அவ நினைக்கிறத முதல்ல சொல்லிடனும் இருப்பா.. விடு டா..”

“நல்ல ஒத்து ஊதுறீங்க ப்பா நீங்க அம்மாக்கு.. நல்ல கணவன் நீங்க..”

“ஹா ஹா.. அம்மாகிட்ட நான் பேசிட்டேன் டா இதைப்பத்தி.. அப்படி உனக்கும் அமையும் டா அவந்தி.. அந்த பையனுக்கு உன்னைய பிடிச்சிருக்கு போல.. அவரோட பேரு நந்தகுமார்.. அவரே பேசுனார் என்கிட்ட.. அங்க கோவை மருத்துவமனையில தான் வேலைப் பார்க்கிறார்..” என்று அவனை பற்றி தகவல்களை பகிர்ந்தார்.

“ஹ்ம் சரிப்பா.. என்ன பண்ணனும் நான்..”

“உனக்கு நான் அவரோட தொலைபேசி எண் அனுப்புறேன். எப்ப உனக்கு ஓய்வோ, அப்போ அவர்கிட்டயும் கேட்டுக்கோ.. நேர்ல பாத்து பேசினாலும் பரவால்லை. அவர் உன்னை பார்த்து பேசணும்னு பிரியப் படுறார் போல. நீயும் பேசிட்டு சொல்லு.. உனக்கு பிடிச்சிருந்தா அடுத்து மேற்கொண்டு பேசலாம் என்றார்.

“ம்ம்.. சரிப்பா.. உங்களுக்கு எப்படின்னு சொல்லலையே..”

“உனக்கு பிடிக்கணும் டா.. அது தான் முதல்ல..எனக்கு பிடிச்சி நான் என்ன பண்றது சொல்லு.. உங்க அம்மா அப்பறம் சண்டைக்கு வருவா..”

“ப்பா..” என்று சிரிக்க, எங்க அந்த மதியே இல்லாத மதி என்று வார,

“என்னடி.. ரொம்ப பேசுற.. எனக்கு மதி இல்லையா?”

“நான் வேற சொல்லனுமா.. அது தான் அப்பப்போ வேலை செய்யிறது இல்லையே..”

“போடி.. எனக்கு அந்த பையன பிடிச்சிருக்கு அவந்தி.. நீ தான் சொல்லணும்..”

“அது தான் நீங்க டாக்டர்னு சொல்லற விதத்துலயே தெரிஞ்சிதே..”

“ஆமாடி.. நீ தான் டாக்டர் ஆகல, இப்போ நீ டாக்டரம்மாவாது ஆகுவல்ல..”

“ம்மாஆ.. முடியல உங்களோட ..”

“அவசரத்துக்கு நாம டாக்டர் கிட்ட போக வேண்டாம்ல.. அதான் நம்மக்கிட்டயே இருக்காருல்ல..”

“ம்மா.. நான் பேசிட்டு சொல்லுறேன்.. வெயிட் பண்ணுங்க..”

“சரி அவந்தி..ஓகே ஓகே..”

“எனக்கு அவங்க நம்பர் அனுப்பி வைங்க..”

“சரி அவந்தி அப்பாவ அனுப்ப சொல்றேன்.. நான் போனை வைக்கிறேன்.. பாத்துக்கோ..”

இங்கே அவனின் பெயரையும் நம்பரையும் அவள் பார்த்தபடி இருக்க, தர்ஷி அவளையே சுத்தி சுத்தி வர,

“என்னடி தர்ஷ்”

“அப்பறம் எப்போ அந்த நந்தகுமாரனை சந்திக்க போறீங்க மேடம்..”

“ஹ்ம் ஹ்ம்.. எப்போ போலாம்..”

“என்னடி என்கிட்ட கேக்குற..”

“இல்ல.. அப்பாகிட்ட பேசுற வரைக்கும் தெரியல.. சரினு சொல்லிட்டேன்.. இப்போ நேர்ல பார்த்து பேசணும்னா.. கொஞ்சம் ஒரு மாறிய பீல் ஆகுது.. அதான் உன்னையும் கூப்பிடுறேன்..”

அடியேய்.. அவந்தியா இப்படி பேசுறது..”

“போடி..” என்று எழுந்திரிக்க,

“அதுலாம் அப்படி தான் இருக்கும் மேடம்.. இதுக்கே இப்படியா..”

“நீ ஒன்னும் வர வேணாம்.. நானே பாத்துக்குறேன்..”

சரி சரி.. நீ பேசிட்டு வர வரைக்கும் நானும் அங்க காத்திருக்கிறேன்..”

மண்டே ஈவினிங் பாக்கலாம்னு.. டெக்ஸ்ட் பண்றேன்..”

“ஹா ஹா..  இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு.. என்று பாட,

“போடி.. நான் தூங்கப் போறேன்..”

ஹலோ.. நான் அவந்திகா.. மண்டே ஈவினிங் சந்திப்போம்..” என்ற குறுஞ் செய்தியை திரும்ப திரும்ப பார்த்து அவளை காணக் காத்திருந்தான்.

                       “சந்திப்போமா.. இருவரும் சந்திப்போமா..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!