Skip to content
Post Views: 5,819
சாரல் – 21
“ஒரு பெப்பர் சிக்கன், ஒரு பெப்பர் மட்டன் சுக்கா, அப்பறம் கடாய் பன்னீர், அடுத்து ஒரு பன்னீர் மசாலா தோசை, கார பொடி தோசை, அப்பறம் என்று மெனு கார்டை பார்த்துவிட்டு, இல்ல முதல்ல இதுயெல்லாம் எடுத்துட்டு வாங்க நீங்க, அப்பறம் வேற என்னனு சொல்லுறேன்… ஹ்ம், நீங்க உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க..”
தர்ஷி, “ண்ணா… இவ்வளவும் உங்களுக்கு மட்டுமா?… கொஞ்சம் ஷேர் கொடுப்பீங்களா?…”
“இவன் கூட ஒரு நாள் நாங்க சாப்பிட போனோம்… அன்னைக்கு உங்களை பார்த்துட்டு சாப்புடாம கூட்டிட்டு வந்துட்டான்… தெரியுமா?… அதுக்கு தான் இன்னைக்கு வந்ததும் நான் பர்ஸ்ட் ஆர்டர் பண்ணிட்டேன்…”
Advertisement
அவந்தியோ யோசனையுடன், “எங்களை எப்போ பாத்தீங்க?…”
இவனை என்று பல்கலைக் கடித்துவிட்டு, அவன் பதில் கூற வருவதுக்குள்.. நந்தா முந்திக்கொண்டு, “அதான் நாம மீட் பண்ணுனோம்ல… அன்னைக்கு சொல்லுறான்…” என்றான் சமாளிப்பாக,
“அன்னைக்கா ண்ணா சொல்லுறீங்க, நீங்க ?”
Advertisement
“அய்யயோ… இவன் வேற முறைக்குறானே, ஒளறிட்டேனே…” என்று முழித்துக் கொண்டு, ஆமா தங்கச்சி, நந்தா உன்னை பாத்த அன்னைக்கு தான்…”
Advertisement
“அதி, அப்பறம் பேசிக்கலாம்… ஆர்டர் பண்ணு … வெயிட் பன்றாங்க பாரு…” என்று திசை திருப்பினான்.
ஒரு வழியாக சாப்பாடு வந்ததும், இப்போ சொல்லு தங்கச்சி, காலேஜ்ல என்ன நடந்துச்சின்னு?…” வாயில் உணவை சாப்பிட்டுக் கொண்டே கேட்க,
அவந்தி, “ண்ணா… இவங்க சொல்லலலையா உங்ககிட்ட?”
Advertisement
“அவன் என்ன சொன்னான்… எல்லாம் முடிஞ்சிட்டு மட்டும் சொல்லிட்டு விட்டுட்டான்… இப்போ கூட இவனோட தொத்திக்கிட்டு தான் வந்திருக்கேன்… கல்நெஞ்சக்காரன்…”
“அதன் சொல்லிட்டேன்ல, அப்பறம் என்னடா?… உன்னைய எதுக்கு நான் கூட்டிட்டு வரணும்…”
“அதி, இது டேஸ்ட் நல்லா இருக்கானு பாரு…” என்று ஊட்ட வர,
“நந்து… என்ன பண்றீங்க?…” என்று அதிர்ச்சி கலந்த முறைப்புடன்,
“அடேய்… நாங்களும் இருக்கோம் டா…”
“அதுக்கு நான் என்ன பண்ணுறது… உன்னைய யாரு வர சொன்னா?”
தர்ஷி, “ண்ணா… நல்லவேளை நீங்க எப்படியோ எனக்கு கம்பெனி கொடுக்க வந்திங்க… இல்லனா என் நிலைமை என்ன ஆகியிருக்கும் கொஞ்சம் யோசிச்சி பாருங்க…”
நந்தா, “பெருசா என்ன ஆகியிருக்கும், நீயே வேற டேபிள்க்கு ஓடிருப்ப..”
“நந்து… கொஞ்சம் அமைதியா இருங்களேன்…”
” நீ அப்போ ஊட்டிவிடு… நான் அமைதியா சாப்புடுறேன்…” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி கூறிவிட்டு அவளை பார்த்துக் கண்ணடிக்க,
அவள் விழிகளை விரிக்க…
“என்னடி அண்ணனையே பாக்குற… என்ன சொன்னாங்க அப்படி?”
“ஹான்… ஒண்ணுமே சொல்லலையே…” என்று சமாளித்துவிட்டு அவனை முறைக்க,
அப்போதும் அவளை பார்த்து அவன் கண்களை சிமிட்ட,
“கிழிஞ்சதுப்போ…. அரவிந்த் ண்ணா… நாம வேற டேபிள்க்கு மாத்தி உக்காந்துக்கலாமா?”
“இதை முடிச்சிட்டு அடுத்தது அங்க போக்கலாம்…”
“அதுலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல, நானே செர்வ் பண்றவங்க கிட்ட சொல்லி உங்க டேபிள்ல வைக்க சொல்லுறேன்…”
“இவரை வச்சிக்கிட்டு…” என்று மனதில் நினைத்து, அவனை திரும்பி பார்க்காமல், “ண்ணா… நவீன் அண்ணா வரல?” என்று பேச்சை மாற்றினாள்.
நந்தா, “ம்க்கும்… ம்க்கும்…”
“அவன் கிடக்கான்… நான் உனக்கு பதில் சொல்லுறேன் தங்கச்சி…”
“சொல்லுங்க ண்ணா…”
“அந்த ஆந்தைகாரனுக்கு நைட் ஷிஃப்ட்… அதான் வரல…”
“இதுலையே பாவப்பட்ட ஜீவன் இந்த அண்ணன் மட்டும் தான் தங்கச்சி… இவனும் மிங்கில் ஆகிட்டான்… அவனும் ஒரு நர்ஸ் பொண்ணை கரெக்ட் பண்ணிட்டான்… நான் மட்டும் தான் சிங்கள்…”
தர்ஷி, “உன் கதையை விடுண்ணா… உனக்கு இப்போ காலேஜ்ல என்ன நடந்துச்சின்னு தெரிய வேணாமா?… சாப்டுட்டே பேசலாம்னு சொன்ன… இங்க சாப்பாடே முடிய போகுது…”
“சரி சரி… நீ சொல்லு… நான் கேக்குறேன்… அடுத்த டேபிள் வேணும்னா போய்டலாமா?”
அவந்தி,” என்ன ண்ணா…, நந்து நீக்க சொல்லுங்க அண்ணாகிட்ட…”
“நீ அவனை சொல்ல சொல்லுற, அவனைப் பாரு, நீ பிச்சி வச்ச தோசையை எடுத்து சாப்டுட்டு இருக்கான்…”
“நந்து…”
“நீ தானே, பேசாம சாப்புடுடா சொன்ன… அது தான் பண்ணுறேன்…”
“அரவிந்த் அண்ணா.. நீயேன் அவங்களை கவனிக்கிற, நான் சொல்லுறேன் நீ கேளு.. அந்த வைஸ் ப்ரின்ஸி மூஞ்சி எப்படி இருந்துச்சி தெரியுமா… என்னால வீடியோ எடுக்கமுடியாத போயிடுச்சி… “
“என்னை நீயேன்டா கவனிக்கிற… தர்ஷி சொல்றத கேட்டுட்டு, உன் தட்டை பார்த்து சாப்புடு… நீ சொல்லுமா தர்ஷி…”
அவனை முறைத்து விட்டு, “நீ சொல்லு மா…”
தர்ஷி, நிகழ்வை தொடர்ந்தாள்…
அவந்தி மற்றும் தர்ஷி, வண்டியை நிறுத்திவிட்டு, கல்லூரியின் நுழைவு வாயிலில் தனது பேக்வுடன் உள்ளே செல்ல, அங்கு இவர்களுக்கு முன்னே ப்ரீத்தி நின்றிருந்தாள்.
அவளை அங்கேயிருந்த பார்த்த தர்ஷி, “இங்க பாரு அவந்தி, அங்க வந்து நான் பண்றதை பார்த்து நீ சிரிச்சிட்டேன்னு வை, உனக்கு அப்பறம் இருக்கு…”
“எதுக்கு உனக்கு இந்த இல்லாத வேலையெல்லாம்… அவங்கள வெறுப்பேத்தி நீயும் அவங்க பண்றத தான் பண்ண போற…”
“நீ வேணும்னா ரொம்ப நல்லவளா இருந்துக்கோ, என்னால முடியாது…”
“நான் இப்போ நல்லவன்னு சொன்னேன் ஆஹ் உங்கிட்ட…”
“அடப்பாவி… நீ என்னடி சொல்லுற… நீ என்ன பண்ண போற?”
“பார்த்து தெரிஞ்சிக்கோ…”
“அப்படி போடு… இவ ஒரு காள் பண்ணிக்கூட கேக்கல தானே…”
“ஒருவேளை பண்ணி மாட்டிடுவேன்னு, நினைச்சிருப்பா… அம்மாக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லித் தானே ஊருக்கு போயிருக்கா… போன் பாக்க கூட நேரமிருந்தருக்காது…”
“கண்டிப்பா கண்டிப்பா… ஓகே… பக்கத்துல போய்ட்டோம், நான் மூஞ்சியை சோகமா வச்சிக்குறேன்…”
“அப்பறம் எதுக்குடி இப்படி மேக்கப் போட்டுட்டு வந்த?”
“இப்படித்தான் பண்ணாதன்னு உன்னைய சொல்லி கூட்டிட்டு வந்தேன்…” என்று அவளிடம் பல்லைக்கடித்து விட்டு, ப்ரீத்தியை நெருங்க,
நம்மளை எதுக்கு அவரசரமா வந்தே ஆகணும்னு சொல்லிருக்காங்க. என்னவாயிருக்கும், இந்த வைஸ் பிரின்சிபால் கிட்ட கேட்டா, அதுக்கு எதுக்குன்னு தெரியலன்னு சொல்லுது… கண்டுபிடிக்குறதுக்கு வாய்ப்பே இல்ல… நாம தான் அவனையும் மிரட்டி வச்சிருக்கோம்… சொல்லறத்துக்கு வாய்ப்பே இல்ல… அப்பறம் எதுக்கா இருக்கும்? என்று தன் போக்கில் சிந்தனையுடன் அமர்ந்திருக்க, அரவமுணர்ந்து அவள் நிமிர்ந்துப் பார்க்க,
அங்கே தர்ஷி கையில் பேகுடன் சோகமாக அவளின் இருக்கைக்கு இரண்டு இருக்கை தள்ளி அமர, அவளோ இவளை பார்க்காமல் அவந்தி இன்னைக்கு தான் நமக்கு இந்த காலேஜ்ல லாஸ்ட் டே இல்ல… நம்மளையே உண்மையாவே அனுப்பிடுவாங்களா?”
“கொஞ்சம் கம்மியா நடிடி… உன்னைய பாத்தா சோகமா இருக்குற மாறி கூட தெரியல…”
“என்னைய ஒரு பெர்பாமன்ஸ் பண்ண விடேன்டி…”
“எனக்கு ஒரு டவுட்… இப்போ கேக்கவா?”
“உனக்கு இப்போ என்னடி தெரியணும்… ஒரு பெர்பாமன்ஸ் பண்ண விடுறியா?… உன்கிட்ட சொல்லிட்டு தானே வந்தேன்… “
“இது ஒன்னு மட்டும் சொல்லிடுங்க தர்ஷினி மேடம்…”
இவர்களை பாத்தப்படி இருந்த ப்ரீத்தியோ, என்ன அப்படி பேசுறாங்க ரெண்டு பேரும்… கைல பேக் வேற வச்சிருக்கா, என்று பார்த்துவிட்டு, இன்னும் கொஞ்ச நேரம் கழித்து சும்மா விசாரிச்சிப்போம் என்ற முடிவிற்கு வந்தாள்.
“அந்த ப்ரீத்தி இப்போ நம்மளையே பாத்தா தர்ஷி…”
“அவளே வந்து பேசட்டும்… உன் டவுட் என்னனு கேளு…”
“இந்த பேக் ஐடியா, நேத்து எங்க அம்மா பேசும் போது உனக்கு சொன்னாங்களா?”
“சரியா… சொல்லிட அவந்தி… எப்படி செம ஐடியா இல்ல… பானும்மா சீரியல்-ஓட எபக்ட் (effect )… அதான் நானும் யூஸ் பண்ணிக்கிட்டேன்…”
“அவங்களோட சேர்ந்துட்டு நீயும் மொக்க பண்ற தர்ஷி…”
“போடி… இருந்துட்டு போட்டும்… மணி ஆகிட்டு இன்னும், யாரும் நம்மள கூப்பிடல?…”
“பொறுமை… பொறுமை…”
“ஆமா, எருமை தான்… வைஸ் பிரின்சிபலை பார்த்துட்டு வருவோமா?
“மேடமே வருங்காங்க… நீ வெயிட் பண்ணு…”
“இல்ல இந்த பேகை காமிச்சிட்டு வரலாம்னு தான்…”
“தர்ஷி, நீ எங்க அம்மாக்கு மேல இருக்கடி…”
சற்று பொறுத்து, “ஹலோ மேம்… ” என்று இருவரையும் பொதுவாக பார்த்துக் கூற,
அவந்தி,”ஓஹ்… ஹாய் மேம்… நீங்க எப்போ வந்திங்க, அம்மாக்கு சரியாகிட்ட…”
“என்னடா இவ நார்மலா நம்மளை கேக்குற… இந்த வைஸ் பிரின்சிபால் என்னமோ, அவளை இன்னைக்கு வேலைய விட்டு தூக்கிடுவாங்கனு சொன்னுச்சி…” என்று ஒன்றும் கூறாமல் அவளை பார்த்தபடி நிற்க,
“மேம்..” என்று அவளின் முன் கையை ஆட்ட,
“ஹான்… நல்லாருக்காங்க மேம்… நான் கொஞ்ச முன்னதான் ஹாஸ்டல் விஷயம் கேள்விப்பட்டேன் மேம்… சாரி மேம்… நான் உங்களுக்காக பேசுறேன் மேம் கண்டிப்பா…”
“ஓஹ்… தேங்க் யு மேம்… அதுக்கு தான் வந்திங்களா?”
“ஆஹ்…..ஹ… ஆமாம்… மேம்…” என்று கூறிவிட்டு, மனதினுள் எதுக்குமே தெரியலே என்று நினைத்து, அவ்விடம் விட்டு அகன்றாள்..
அரைமணி நேரம் சென்று, எல்லோரையும் உள்ளே அழைப்பதாக தகவல் வர, இவங்க கூட எதுக்கு நம்மளையும் கூப்பிடுறாங்க என்று யோசித்து நிற்க,
“ப்ரீத்தி மேம், நீங்க முதல்ல போங்க…”, தர்ஷி.
அவள் யோசனையுடன் உள்ளே செல்ல,
இவர்கள் உள்ளே நுழைய போகும் நேரம், வைஸ் பிரின்சிபால் வர, அவர்களையும், கையில் இருந்த பேகையும் பார்த்து விட்டு, நக்கலாக சிரித்துக் கொண்டே, “என்ன பைலை எடுத்து வராம, பேகை எடுத்து வந்திருக்க… இதுக்கு தான் ஒரு வரம் கேட்டியா?…”
“ஆமாம் மேம்… நீங்க ஹாப்பி ஆஹ் இருங்க…” என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள்.
அனைவரும் இருக்கையில் அமர்ந்த பிறகு, முதல்வர் பொதுவாக பார்த்துவிட்டு,
“வைஸ் பிரின்சிபால் மேடம், திரும்ப ஏதாவது சொல்லனுமா?”
“நான் முன்னவே சொன்னது தான்… வேற மாற்று கருத்தே எனக்கு இல்ல சார்…”
“மிஸ் ப்ரீத்தி, நீங்க தானே செகண்ட் இயர் ஹாஸ்டல் ஸ்டூடெண்ட்ஸை மேனேஜ் பண்ணுறீங்க… இங்க நடந்துக்கு, உங்க சைடுல இருந்து எந்த ரெஸ்பான்ஸ்யும் வரலையே… இதுல உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லனு எடுத்துக்கலாமா?”
“சார்… நோ சார்… எனக்கு லேட் ஆஹ் தான் இன்பார்மேஷன் கிடைச்சுது…”
“எனிஹொவ், கிடைச்சதுக்கு அப்பறமும்… நீங்க ஒன்னும் பண்ணலையே…”
“இல்ல… இல்ல… கேட்டேன் சார்…” என்று பதட்டமானாள்.
“ஒய் ஆர் யு நெர்வோஸ்?”
“நோ நோ சார்… ஐயம் ஒகே…” என்று மூச்சை இழுத்துக் கொண்டே கூற,
“சரி… அப்போ சொல்லுங்க… என்ன கேட்டீங்க?… யார்கிட்ட கேட்டீங்க?…”
“சார்… சார்… அது…என்று ஒரு முறை எல்லாரையும் பார்த்து விட்டு, வைஸ் பிரின்சிபால் மேம் கிட்ட பேசினேன் சார்…”
“ஒகே குட்…எப்போ காள் பண்ணி பேசுனீங்க?”
“சார்…ர்ர்ர் அது வந்து… ஹான்… அந்த இன்சிடென்ட் நடந்த அன்னிக்கு நைட் பேசுனேன் சார்… மேம் கூட, ஹாஸ்டல் கிளம்பிட்டு இருக்கேன் சொன்னாங்க… அப்பறம் மறுநாள் மேம் ஹாஸ்பிடல் இருந்த போது கூட பேசுனேன் சார்… டெய்லி அப்டேட்ஸ் மேம் கிட்ட கேட்டுட்டு தான் சார் இருந்தேன்…” என்று பொய்யை சரளமாக கூறினாள்.
இதை கேட்ட அவந்தி மற்றும் தர்ஷி ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு, திரும்பி நடப்பதை கவனித்தனர்.
“ஒகே.. அப்போ நீங்க ரொம்ப போகஸ்ட் ஆஹ் இருந்திருக்கிங்க அப்படி தானே…”
“எஸ் சார்… எஸ் சார்… நீங்க வேணும்னா வைஸ் பிரின்சிபால் கிட்ட கேட்டு பாருங்க சார்…”
“ஒகே குட்…”
“எப்படியோ தப்பிச்சிட்டோம்…” என்று நினைத்து சற்று ஆசுவாசமானாள்.
“வைஸ் பிரின்சிபால் மேம்… உங்க கிட்ட ப்ரீத்தி, அன்னைக்கு நைட் பேசுனாங்களா?”
அவரோ, எதோ ஒன்றை யோசித்தவராக, “நோ சார்… அன்னைக்கு என் கைல அடிபட்டதுனால, நான் யாரிடமும் தொடர்பு கொள்ளவில்லை சார்… ‘பெயின் கில்லர்’ போட்டுட்டு படுத்துட்டேன்…”
“என்ன மிஸ் ப்ரீத்தி, வைஸ் பிரின்சிபால் இப்படி சொல்லறாங்க…”
“நோ சார்… அவங்க பொய் சொல்லுறாங்க… நான் புரூப் காமிக்குறேன் என்றுவிட்டு, தன்னுடைய போனில் அவரிடம், அன்றைய இரவு பேசுனதை எடுத்து காமித்தாள்.”
“இதுக்கு என்ன பதில் சொல்றிங்க மேம்?”
அவருக்கோ அந்த நேரத்தில் ப்ரீத்தியை பற்றிக்கூட யோசிக்க செய்யாது, “பேயறைந்தது போல் முதல்வரை பார்க்க…”
இங்கு தர்ஷியோ, ஐயோ என்னால நல்லா சிரிக்க முடியலையே… ஹா ஹா ஹா என்று மனதில் சிரிக்க,
“அவந்திகா, நீங்க வைஸ் பிரின்சிபலை ரீச் பண்ண முடியலை சொன்னிங்க… இவங்க மட்டும் பேசிருக்காங்க?”
“எஸ் சார்…அவங்க போன் எடுக்கல… புரூப் உங்க கிட்ட சப்மிட் பண்ணிருக்கேன்…”
“என்ன புரூப்லாம் சப்மிட் பண்ணிருக்கலா…” என்று இன்னும் முகத்தில் பீதியாகி, வேர்க்க ஆரம்பிக்க,
முதல்வர், “ஓகே.. அது எல்லாம் நாங்க பாத்துட்டோம்…”
வைஸ் பிரின்சிபால், “சார்… ரெஸ்ட்லெஸ் ஆஹ் இருக்குற மாறி இருக்கு, கொஞ்சம் வெளில போயிட்டு வரலாமா?”
“ஒகே… நீங்க கிளம்பிடலாம்…காலேஜை விட்டு…”
“சூப்பரு… நெத்தியடி…” என்று சற்று சத்தமாக தர்ஷி கூறி விட, “அடங்குடி” என்றாள் அவந்தி.
“சார்.. சா…ர்ர்ர்… என்…ன… ஏ… ஏன்… சா… சார்…”
“இங்கு ப்ரீத்தியோ, அடுத்து ஒருவேளை நமக்கோ, என்று மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் உச்சகட்ட பீதியுடன் அமர்ந்திருக்க,
“வெள்… டூ யு நீட் ரீசன்?… பட் இந்நேரம் உங்களுக்கே தெரிஞ்சிருக்குமே… பிகாஸ் உங்க அடிபட்ட கையை, இப்போ நீங்க என்ன பொசிஷன்ல வச்சிருக்கீங்கனு பாருங்க..”
தர்ஷியோ, வாந்தியை பார்த்து வெற்றிக்குறி போட, அவளோ முறைத்து வைத்தாள்.
“ஹா…..ஆன்” என்று அதிர்ச்சி அடைந்தவராக தன்னிலை மறந்த செயலை எண்ணி, என்ன செய்வது என்று புரியாமல், சார்…ர்ர்ர் என்று பூசி மொழுகப் பார்க்க,
“கையை காட்டி, பேசாமல் இருக்குமாறு, சைகை புரிய…”
ஒன்றும் செய்ய இயலாதவராய், அடுத்த கட்டமாக..அவரை பரிதாபமாக பார்க்க..
“மேடம், யு மே ஹாவ் எ சீட்… நான் இன்னும் முடிக்கல.. மொத்தமா தெரிஞ்சிட்டு போங்க… ஒன்னும் அவசரம் இல்ல…”
அவரோ, தன்னை இழுத்து விட்ட ப்ரீத்தியை, கொலை வெறிக்க கொண்டு பார்த்துட்டே இருக்கையில் அமர்ந்தார்.
ப்ரீத்தியோ, “நம்மளை ஏதும் சொல்லலப்பா… அந்த அம்மா பொய் தொலையட்டும்…” என்று மிதப்பாய் கவனித்தாள்.
“ஒகே மேடம்… இந்த போட்டோஸ் பாருங்க” என்று காமிக்க,
அதில் அவர் கைகளை கட்டிய படி போஸ் குடுத்துருக்க, எப்படி மேடம், அடிப்பற்றுக்க அப்போ, இப்படி கை கட்ட முடியுது உங்களால?”
“சார்… சார்…நான் உண்மையை ஒதுக்குறேன் சார்… எனக்கு கைலாம் அடிபடல சார்… இந்த ப்ரீத்தி தான் அவந்திகாவை, இந்த காலேஜை விட்டு தூக்குறதுக்கு , இப்படி பண்ண சொன்னா சார்… நானும் எதோ புத்திகெட்டு போயிட்டு அவளோட சேந்து பண்ணிட்டேன் சார்… ப்ளீஸ் சார்… இனிமே இப்படி பண்ணமாட்டேன் சார்… இவ தான் சார், எல்லாத்துக்கும் காரணம்…” என்று மூச்சி வாங்கி கொண்டு பேசினார்.
“இந்த அம்மாக்கு மூச்சு வாங்குது, ஒரேடியா போய்டுமா…” என்று தர்ஷி யோசித்து பார்க்க,
“ஐயோ சார்… இந்த மேம் என்ன சார், திடீருன்னு என் மேல பழி போடுறாங்க… இவங்க தப்பிக்க வேணும்னே என் மேல பழி போடுறாங்க சார்..”
“ஏய்.. என்னடி, நான் பழிபோடுறேனா?… நீ தானேடி வந்து என்கிட்ட ஐடியா சொல்லிட்டு இப்படி பண்ணலாம்னு கேட்ட…”
“நீயும் தானே அவ என்ன அவமரியாதை பண்ணிருக்கா, அவளை ஏதாவது பண்ணனும்னு சொன்ன…”
“நான் சொல்ல மட்டும் தானேடி பண்ணுனேன்.. நீ தானே எதோ ஒரு பையனை வச்சி இப்படி பண்ணுன…”
“நீயும் தானே அதுக்கு ஒத்துக்கிட்ட…”
எங்கு இருக்கோம் என்று தெரியாமல், இவர்கள் இருவரும் குழாயடி சண்டை போட, இங்கு தர்ஷியோ குஷியாக பார்க்க, அவந்தியோ இருவரையும் அருவருப்பாக பார்க்க,
முதல்வரோ, “ஜட்ஜ் போல மேஜையை தட்ட… அப்போது தான் உறைத்தது இருவரும் தாங்களே எல்லாத்தையும் உளறியதை…” இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் அதிர்ந்து முதல்வரை பாக்க,
“வெரி குட், நீங்களே ரொம்ப புத்திசாலித்தனமா உண்மையை இப்படி ஓத்துக்கிட்டு, என்னோட நேரத்தை மிச்சம் பண்ணிருக்கீங்க… ரொம்ப நல்லது.. அப்பறம் அவந்திகா, இப்படி இவங்க பன்னுவாங்கனு தெரிஞ்சிருந்தா நீங்க ஒரு வரம் வரைக்கும் கூட வெயிட் பனி இப்படி புரூப் சப்மிட்லாம் பண்ணிருக்க வேணாம்..”
“நீங்க நேத்து ரெக்குவஸ்ட் பண்ணதை, நான் மேலிடத்துல பேசிட்டேன்.. அவங்களும் அப்படியே ப்ரொசீட் பண்ணலாம்னு சொல்லிட்டாங்க..”
“ஓஹ்… தேங்க் யு சோ மச் சார்… ஐயம் வெரி ஹாப்பி…”
“என்னத்த போயிட்டு பேசிட்டு வந்தா?…” என்று தர்ஷி, அவந்தியை பார்க்க,
“ஒகே…உங்க ரெண்டு பேரையும் காலேஜ்ல இருந்து டிஸ்மிஸ் பண்ணுறேன்… அப்பறம் உங்களுக்கு எக்ஸ்பிரின்ஸ் செர்டிபிகேட், காலேஜ் ப்ரொவைட் பண்ணாது, அடுத்து இந்த காலேஜ்-ஓட வெப்சைட்ல, ஒரு ஸ்டோரி மாறி கிரியேட் பண்ணி உங்கள பத்தின அவேர்னெஸ் போட போறோம்…எப்போவுமே அது வெப்சைட்ல இருக்கும்…
நீங்க இனிமே எந்த காலேஜ்லயும் ஜோஇன் பண்ண முடியாத அளவுக்கு, உங்கள பத்தி அண்ணா யூனிவெர்சிட்டில கம்ப்லைன் கொடுத்துருக்கோம்.. உங்களுக்கு கூடிய சீக்கரம் அதோட தபால் வீட்டுக்கு வரும்… இதுக்கு மேலயாச்சும் திருந்த ட்ரை பண்ணுங்க… உங்களுக்கு இப்படி பண்ணலாம்னு சஜஸ்ட் பண்ணது அவந்திகா தான்.. நீங்க கிளம்புலாம்… ஹச். ஆர் வில் கைட் யு…”
“அவந்திகா, நீங்க ஏதாவது இவன்கிட்ட சொல்லனும்னா பேசலாம்…”
“நோ நோ சார்… இவங்க கிட்ட பேச என்ன, நான் பார்க்க கூட விரும்பல சார்… ரொம்ப அருவருப்பை தருது இவங்க கூட நிக்குறதே… நாங்க கிளம்பலாமா சார்…”
“ஒகே தென்..”
அங்கு இருந்த இரு அதிபுத்திசாலிகளும் முகம் செத்து போய், என்ன சொல்வதென்றே தெரியாமல், முதல்வர் அறையிலிருந்து வெளியே வர, சொடக்கிட்டு அவர்களை அழைத்தாள், அவந்திகா.
இருவரும் அவளை பார்க்க, “உன்னோட பொறாமை குணத்துக்கு, ஒரு பையனை யூஸ் பண்ணி மிரட்டி வச்சிருந்தல்ல… அவன் என்ன ஆனானு உனக்கு தெரிய வேணாம்… எப்படி எப்படி, நீ என்ன வேணும்னாலும் பண்ணு, மார்பிங் கூட பண்ணி போடு… நான் பாத்துக்குறேன்னு சொல்லி அவனை தூண்டி விட்ருக்க… உனக்கு வெக்கமா இல்ல… நீயெல்லாம் பொண்ணானே எனக்கு தெரியல…
அவனே வந்து மாட்டுனான்னு தான் பாத்தேன்… ஆனா, அவனே நான் எல்லாத்தையும் உங்க கிட்ட சொல்றதுக்காக வந்தேன்னு சொல்லி எல்லாத்தையும் சொல்லிட்டான்… ச்சி… அரியர் நிறைய வச்சிருக்கதை பயன்படுத்தி அவனை நீ எண்ணலாம் பண்ணிருக்கேன் சொன்னான்… கேக்க கூட முடியாத அளவுக்கு பண்ணிருக்க… அவனை போயிட்டு மேல் ஸ்டாப்க்கு தூது விட்ருக்க… ச்சீ… எனக்கு சொல்லவே வாய் கூசுது…
இவகூட சேந்து நீங்களும் மாட்டிடீங்க போல.. ஆழ்த்த அனுதாபங்கள்.. இனிமேலாச்சும் திருந்துங்க அப்படிலாம் சொல்ல மாட்டேன்..
“இன்னும் கிரிமினல் ஆஹ் யோசிக்குறேன்னு எதையாவது பண்ணிடாத.. உன்னால பண்ணவும் முடியாது… முன்னெச்சிரிக்கையா உங்க மேல, காலேஜ் நேம் வச்சி, எஸ்.பி கிட்ட கம்ப்லைன் கொடுத்துட்டேன்.. உண்மையானு யோசிக்காத, இந்தாங்க காப்பிய வச்சிக்கோங்க ரெண்டு பேரும்… இனிமே இந்த பக்கம் வந்துடாதீங்க… வரேன்…”
“தர்ஷி, நீ ஏதும் சொல்லனுமா?”
“நீ இந்த தண்ணிய குடி… ரொம்ப பேசிட்ட… ஒரு நிமிஷம் என்று பேகை திறந்து அதிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து காமித்து, இதுக்கு இருக்க அளவுக்கு கூட உங்களுக்கு மரியாதை இல்ல இனிமேல்.. ஏன்னா, அதை கிழிக்க வாது யூஸ் பண்ணுவாங்க… நீங்க அது கூட இல்ல… பை…” என்று பேகுடன் அவந்தியுடன் சென்றாள்.
– – – –
தர்ஷி, “இவ்வளோ தான் அண்ணா நடந்துச்சு…”
“நல்லா வேளை பாத்துருக்கீங்க ரெண்டு பேரும்.. விசில் போடு… அந்த பையன் ஆஃப்ரொவர் ஆகிட்டான் அப்போ..”
“இவ அவனையும் விடல ண்ணா… இனிமே காலேஜ் வரக்கூடாது… சஸ்பென்ஷன் … எக்ஸாம் மட்டும் வந்து எழுதிக்கலாம்…”
“அட்ராசக்கை… இதுக்கே இன்னொரு முறை சாப்புடலாம் போல..”
“நீ சாப்பிடு… நாங்க நடையை கட்டுறோம்…” என்று எழுந்து சென்றான் ..
“அடேய்ய்…..?
சாரல் வருடும்…
error: Content is protected !!