Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மகரந்தம் தாங்கும் மலரவள்

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 33

அத்தியாயம்-33

கட்டிடத்தின் வேலைப்பாடுகளை ஆராய்ந்தவர்கள் இன்னும் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு கிளம்பும் போது,

 

நளன் “ஓகே கைஸ், நான் ஒரு முக்கியமான கிளையின்ட மீட் பண்ணப் போறேன். சோ என் கூட யாராவது வாங்க” என்று விட்டு நேத்ராவை ஒரக் கண்களால் நோட்டமிட்டான்.



Advertisement

 

நேத்ராவோ நளனைக் கண்டு கொண்டவள் “ஏன் வாயைத் துறந்து நீ வா ஹனின்னு கூப்பிட மாட்டாரோ, நான் போக மாட்டேன்” என்று முறுக்கிக் கொண்டு நின்றாள் நேத்ரா.

 

Advertisement

நளனின் அருகில் வந்த அருணோ “சார் நாங்க எல்லாரும் இன்னிக்கு படத்துக்கு புக் பண்ணியிருக்கோம் அதுனால…” என்றவன் தலையை சொரியவும்,

Advertisement

 

சுளித்த புருவங்களுடன் நேத்ராவை நேராகப் பார்த்த நளனின் பார்வை உணர்ந்து “ஆ சார் நேத்ரா எங்க கூட மூவிக்கு வரலை நீங்க அவங்களை கூட்டிட்டு போங்க” என்றான் அருண்.

 

Advertisement

புருவங்களை நேராக்கியவன் “ஓகே நேத்ராவைத் தவிர எல்லாரும் கிளம்புங்க, நேத்ரா கம்” என்றுவிட்டு அவன் காரருகே சென்றான்.

 

நேத்ராவை அழைத்துக் கொண்டு ஒரு பிரம்மாண்டமான நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றவன் அங்கே ஏற்கனவே புக் செய்திருந்த டேபிளுக்குச் சென்றான். அங்கே இருவரும் எதுவும் பேசாமல் எதிரெதிரே அமர்ந்தனர்.

 

தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த நேத்ரா, “என்ன ரொம்ப அமைதியா இருக்காங்க” என்று நிமிர்ந்து பார்க்க, அங்கே அவர்கள் அருகிருந்த டேபிளில் இரண்டு வயது நிரம்பிய ஒரு அழகான ஆண் குழந்தை அதன் தந்தையுடன் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது.

 

தந்தை ஏதோ கூறி அந்த பிஞ்சு மழலைக்கு கிச்சு மூட்ட, அது தன் பொக்கை வாய் திறந்து களங்கமில்லா சிரிப்பை சிதறவிட்டுக் கொண்டிருந்தது.

 

அந்தக் காட்சியில் திளைத்து லேசாகக் கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்தான் நளன்.

 

நளனையும் அவன் பார்வையில் தெரிந்த ஏக்கத்தையும் கண்ட நேத்ராவுக்கு அழுகை முட்டிக் கொண்டு வர எழுந்து வேகமாக பாத்ரூம் நோக்கிச் சென்றாள் நேத்ரா.

 

பாத்ரூமில் அவள் அம்முவிடம் தலையில் அடித்து மன்னிப்பு வேண்டியவள் முகத்தைக் கழுவிக்கொண்டு அவர்கள் மேஜைக்கு வந்தாள். அவள் செல்லும்போது தனியாக அமர்ந்திருந்த நளனின் முன்னே இப்போது இருவர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

 

அவர்கள் முன்னே சென்றவள் நளனை ஏறிடவும், நேத்ரா வந்ததை உணர்ந்த நளன் எதிரே அமர்ந்திருந்தவர்களிடம் “ஷி இஸ் நேத்ரா, ப்ராஜெக்ட் லீட்” என்று அறிமுகப்படுத்தவும் நிமிர்ந்து அவர்களின் முகம் கண்டாள் நேத்ரா.

 

பார்த்தவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க எதுவும் பேசாமல் நின்றிருந்தாள். நேத்ராவின் இந்த செயலுக்குக் காரணம் அங்கே நளனின் முன்பு அமர்ந்திருந்தது காண்டீபனும், மற்றொருவரும்.

 

நேத்ராவைப் பற்றி தெரியாதவனா நளன் அவள் முகத்தில் வந்து போகும் மாற்றங்களை மனதில் குறித்துக் கொண்டவன், நேத்ராவிடம் “சிட்…” என்று அவன் அருகில் உள்ள நாற்காலியைக் காண்பித்தான்.

 

நேத்ரா அமர்ந்தவுடன் அவர்கள் ப்ராஜெக்ட் சம்மந்தமாக பேச ஆரம்பித்தவர்களின் உரையை அவள் கொண்டுவந்திருந்த நோட் பேடில் குறித்துக் கொண்டாள். கலந்துரையாடல் முடியவும், அனைவரும் பப்பே முறையில் அங்கிருந்த உணவை எடுக்கச் சென்றனர்.

 

முன்னே உணவு எடுத்துக் கொண்டிருந்த நேத்ராவிடம் நெருங்கி நின்ற காண்டீபன் “ஹாய் நேத்ரா எப்படி இருக்க, நான் உன்னை இவ்வளவு சீக்கிரம் பாப்பேன்னு நினைக்கவே இல்லை, நளனை மாதிரி ஒரு ஆளை புடிக்கத்தான் என் கிட்ட முடியாதுன்னு சொன்னியா? இந்தக் காலத்துல பொண்ணுங்கல்லாம் பொழைக்க தெரிஞ்சவங்களா இருக்காங்க… ஹம்” என்று

 

பின்னே நின்று பேசிய காண்டீபனை திட்டுவதற்கு கடுங்கோபத்துடன் திரும்பி நின்றவள் வாய் திறக்க, காண்டீபன் பின்னே நின்றிருந்தவனைக் கண்டு வாய்மூடி மீண்டும் முன்னே திரும்பினாள்.

 

உணவு எடுப்பதற்காக காண்டீபன் வேகமாக நேத்ராவின் பின்னே செல்வதைக் கண்ட நளன், காண்டீபன் பின்னே வந்து நின்றவன் அவன் நேத்ராவிடம் பேசியது அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான். பின்னே திரும்பிப் பார்த்தவள் கண்டது நளனின் பொங்கி வரும் கோபத்தைத் தான்.

 

உணவு எடுத்துக் கொண்டிருந்த பிளேட்டை உரிமையாக நேத்ராவின் கைகளில் கொடுத்தவன், “மிஸ்டர் காண்டீபன் கொஞ்சம் வாரீங்களா உங்க கிட்ட பேசணும்” என்றவன் காண்டீபன் அனுமதி கொடுக்காமலேயே அவரது பிளேட்டை வாங்கி அங்கேயே வைத்துவிட்டு அவர் தோள் மேல் கைபோட்டு மென்ஸ் வாஷ் ரூம் அழைத்துச் சென்றான்.

 

உள்ளே அழைத்துச் சென்றவன் யூரினலில் நின்று சிறுநீர் கழித்துக் கொண்டே “ஏன் சார் நேத்ரா கிட்ட அந்த மாதிரி பேசுனீங்க?” என்றான்.

 

தலையை குனிந்தவர் பின் நிமிர்ந்து “சார் உங்களுக்கும் கேட்ருச்சா, அது ஒன்னும் இல்ல சார் நேத்ரா உங்க கிட்ட வேலைக்கு சேர்றதுக்கு முன்னாடி என் கிட்ட தான் வேலை செஞ்சா, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ண சொன்னேன், அதுக்கு உடனே ரிசைன் பண்ணீட்டு போயிட்டா, ஆனா சும்மா சொல்லக் கூடாது பொண்ணு செம்ம கட்ட நீங்க வேணா ட்ரை பண்ணிப் பாருங்களேன் ” என்றான் கூலாக.

 

யூரினலை பிளஷ் செய்தவன் காண்டீபன் புறம் திரும்பி நின்று சட்டையை மடக்கி விட்டவன் கை விரல்களை மடக்கி அவர் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். அவன் விட்ட குத்தில் யூரினலில் விழுந்து அது உடைபட கீழே விழுந்து கிடந்தவரின் சட்டைக் காலரைப் பிடித்துத் தூக்கினான்.

 

பாதி எழும்போதே மூக்கிலிருந்து வழியும் ரத்தத்தை தொட்டுப் பார்த்த காண்டீபன் “சார் எதுக்கு இப்போ அடிக்கிறீங்க, ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க? இதெல்லாம் இங்க சகஜம் சார், நான் என்ன உங்க பொண்டாட்டியவா கூப்பிட்டேன்” என்று ஏகத்துக்கும் எகிற,

 

காண்டீபனின் சட்டைக் கலரை பிடித்து நிறுத்தியவன் “ஆமாண்டா தெரு பொறுக்கி நாயே என் பொண்டாட்டியைத் தான் கூப்பிட்ட, நேத்ரா நான் மனசார விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்ட என்னோட பொண்டாட்டி” என்றவன் காண்டீபனை வெளுத்து வாங்கினான்.

 

மடக்கிவிட்ட சட்டையின் கைகளை இறக்கி விட்ட படி வாஷ்ரூமிலிருந்து வெளியில் வந்தவன் நேராக நேத்ரா அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தான்.

 

கண்களில் கோபத்தீ பறக்க பற்களைக் கடித்த படி வந்தவனைக் கண்டு எழுந்து நின்றவளின் கை பிடித்தவன், அவளை இழுத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

 

எதிர்ப்பட்ட அந்த ஓட்டல் மேனேஜரிடம் ஒரு கத்தை பணத்தை நீட்டியவன், மென்ஸ் வாஷ்ரூம்ல யூரினல் ரெண்டு உடைஞ்சிருக்கு பிக்ஸ் பண்ணிக்கோங்க என்று அவர் முகத்தைக் கூடப் பார்க்காமல் கைகளில் திணித்தவன், நேத்ராவை இழுத்துக் கொண்டு அவன் காரை நோக்கி சென்றான்.

 

நளனின் முகமோ கட்டுக்கடங்கா கோபத்தில் செவ்வானமாய் சிவந்திருக்க, நளன் தன் மேல் கொண்ட காதலில் நாணம் கொண்டு செவ்வானமாய் சிவந்திருந்தாள் நேத்ரா.

 

இப்படியே இரண்டு மாதங்கள் கழிந்திருந்த வேளை, ஹோலி பண்டிகை வந்தது. அதற்கு பார்ட்டி செலிப்ரேட் செய்ய வேண்டும் என்று ஊழியர்கள் அனைவரும் விரும்பவும் வினோத்தும் அதற்கு ஒத்துக் கொண்டான்.

 

வனிதாவோ “சார் இங்க வேண்டாம் வெளிய எதாவது பெரிய லான் மாதிரி ஏற்பாடு பண்ணலாம், அப்போ தான் ஹோலி செலிப்ரேட் பண்ண வசதியா இருக்கும்” என்றாள் கலர் பொடி மற்றும் கலர் தண்ணீர்களை கருத்தில் கொண்டு,

 

“ம்ம்… என்று யோசித்த வினோத், ஓகே வி வில் பிக்ஸ் தட், பட் ஐ நீட் எவரிபடி டு டான்ஸ்” என்றான் வனிதாவைப் பார்த்துக் கொண்டே, நளனோ யாருக்கு வந்த விருந்தோ என்று அமர்ந்திருந்தான்.

 

“சுயர், சார் நேத்ரா சூப்பரா ஆடுவா இந்த தடவை நானும் நேத்ராவும், சேந்தே ஆடப் போறோம்” என்றாள் வனிதா எழுந்து நின்று.

 

வனிதா அருகில் அமர்ந்திருந்த நேத்ரா “ஹே சும்மா இரு வனிதா நான் எல்லாம் ஆட மாட்டேன்” என்று அவள் கையைப் பிடித்து அமர வைத்தாள்.

 

“கண்டிப்பா எல்லாரும் கலந்துக்கணும், ஓகே கைஸ் சீ யூ” என்ற வினோத் நளனுடன் நகர்ந்தான்.

 

“ஹே நேத்ரா இந்த டிரஸ் எனக்கு எப்படி இருக்கு, கரெக்ட்டா இருக்கா” என்று தான் அணிந்திருந்த வெள்ளை வண்ண சுடிதாரைப் பற்றிக் கேட்டுக் கொண்டே அவள் அறையில் இருந்து வெளி வந்தாள் வனிதா.

 

அருகில் வந்து வனிதாவை அங்கும் இங்கும் திருப்பிப் பார்த்த நேத்ரா, “ம்ம் பெர்பெக்ட்…” எனவும்

“சரி நீயும் உன்னோட ட்ரெஸ்ஸ போடு நேத்ரா நேரம் ஆகுது, கிளம்பணும்ல” என்றாள் வனிதா. நேத்ரா வனிதாவின் வீட்டில் இருந்தாள் அவர்களின் ஹோலி செலிப்ரேஷனுக்காக கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்.

 

“அக்கா, நானும் வர்றேன்க்கா, என்னையும் கூட்டீட்டு போயேன்” என்று வனிதாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள், நிவேதா வனிதாவின் தங்கை. பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவி.

 

“நிவி நீ சும்மா இரு, உன்னையெல்லாம் கூட்டீட்டு போக முடியாது” என்று பொரிந்தாள் வனிதா.

 

“ஹே ஏண்டி அவளை திட்டுற? பாவம்” என்ற நேத்ரா “இல்லை டா நிவி, அங்க புள்ளா எங்க ஆபீசுல வேளை செய்யிறவங்களா இருப்பாங்க, அதுனால நீ வேண்டாம்” என்று   எடுத்துரைக்கவும் சரி என்று ஏற்றுக் கொண்டாள் நிவேதா.

 

வெளியே நந்தன் அவன் பைக்குடன் வரவும் “ஹே வனிதா அண்ணா வந்துட்டான், நீ வீட்டுக்கு வந்துடு நான் கிளம்பி இருக்கேன்” என்றுவிட்டு நந்தனுடன் அவள் வீட்டிற்குச் சென்றவள் அழகிய வெள்ளை வண்ண குர்தாவில் தயாரானாள்.

 

Link👉வஞ்சித்தாய் வஞ்சிக்கொடியே

Link👉மகரந்தம் தாங்கும் மலரவள்(முழுநாவல்)

Link 👉நாணலே நங்கையானால்?(முழுநாவல்)

Link – முற்றும் முதல் நீ எனக்கு (முழுநாவல்)

Link 👉நிலவே நின்னை சரண் அடைந்தேன் (முழுநாவல்)

Link 👉கடைவிழியின் காதலில் (முழுநாவல்)

Link 👉Amazon Kindle

Kamali Maduraiveeran நாவல்களை ஆடியோ வடிவில் கேட்க விரும்புவோருக்காக👇👇👇

https://www.youtube.com/channel/UCrluBa9P6MrjZOAjoVkoJhQ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!