Skip to content
Post Views: 1,196
சித்திரமே மொழி தொலைத்தாயோ?? – 3
பவன் ஜீப்பில் ஏறி கட்சி அலுவலுகத்துக்கு வந்தான்.. மணியை வாட்சில் பார்த்தவன்,
“என்னடா இது? எப்போவுமே லேட்டா தானே வருவோம்? இன்னைக்கு பத்து நிமிஷம் முன்னாடியே வந்துட்டோமே? ” என்று விரலை வாயில் வைத்து யோசித்தான்..
Advertisement
சூசை: “பாஸ் வேணும்னா, மறுபடியும் வீட்டுக்கு போயிட்டு வருவோமா? ஒரு டீ குடிச்சுட்டு வருவோம்.”
Advertisement
பவன் அவனை பார்த்து,
Advertisement
“நீ ஒரு நல்ல தொண்டனா இருந்தா என்ன சொல்லி இருக்கணும்? இன்னைக்கு ஒரு நாளாச்சும் சீக்கிரம் போய் அப்பாகிட்டே நல்ல பேரை வாங்கலாம்னு சொல்லிருக்கனும். ஆனா நீ எப்போவுமே என்னை முன்னேற விடாம கெடுக்கிறதுலேயே தான் இருக்க? அப்பா உன்ன திட்டுறதுல தப்பே இல்ல. வாங்க உள்ளே போவோம்..”
Advertisement
உள்ளே அப்பா அருகில் சென்று அமர்ந்தவன் அவரிடம்,
“என்ன டாடி இன்னைக்கு நம்புறீங்களா எனக்கு பொறுப்பு வந்துருச்சுனு?”
சக்கரைப்பாணி அவனை மேலிருந்து கீழ் பார்த்து,
“பொறுப்பு முழுசா வந்து இருந்தா, இப்படியா ஒரு சட்டையை போட்டு வருவ? வெள்ளை வெள்ளைனு தும்பை பூ மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு வரணும்னு தெரியாதா?”
அவன்: “டாடி இங்கே உட்கார்ந்து இருக்கிறவங்க எல்லோரும் ஒரே whiteஆ இருக்கீங்க.. ஆனா நான் மட்டும் தனியா uniqueஆ தெரியறேன் பார்த்தீங்களா? எல்லார் கண்ணும் என் மேல தான் இருக்கும்.” என்றான் காலரை தூக்கி விட்டபடி..
அவர் அவனை முறைப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை..
சற்று நேரத்தில் சக்கரைப்பாணியின் கட்சி ஆட்கள் எல்லோரும் அங்கே வந்துவிட, சக்கரைப்பாணி பேச தொடங்கினார்..
“எல்லோரும் வந்ததுக்கு ரொம்ப நன்றி.. உங்க ஆதரவால் தான் நான் இப்போ மினிஸ்டர்டா இருக்கேன்.. எனக்கு தந்த அதே ஆதரவை என் பையனுக்கும் நீங்க கொடுக்கணும்.. அவனை mpஆ நிக்க வைக்கலாம்னு இருக்கேன்.. அது சம்மந்தமா தான் இன்னைக்கு பேச போறோம்.”
வழக்கம் போல முதல் 15 நிமிடத்துக்கு பிறகு பவனுக்கு எதுவும் பிடிக்கவில்லை. அதனால் வெளியே வந்து ஜீப்பில் ஏறி வாகாக அமர்ந்து கொண்டான்..
சூசை அவனிடம் மசால் கடலையை நீட்ட, வாயில் போட்டு கொண்டே,
“அந்த கடையில போய் டீ வாங்கிட்டு வாடா” என்றான்..
சூடான டீ, வடை எல்லாத்தையும் காலி செய்தவன் போனில் கேம் விளையாட ஆரம்பித்த நேரம், ஒரு குரல்..
இங்கே பார்த்து வாங்க.. ரோட் சிக்னல் பார்த்தீங்களா? என்ற அரட்டலில் தலையை தூக்கி அந்த பக்கம் பார்த்தான்..
30-35 குழந்தைகளை வரிசையாக நிற்க வைத்து,
“பார்த்து வாங்க.. அந்த பக்கம் போகாதீங்க.. இங்கே ஓரமா வாங்க.” என்று ஓயாமல் சொல்லிக் கொண்டே நடந்து சென்றாள் அவள்..
அந்த பிள்ளைகள் ஒவ்வொருவரின் கைகளில் ஒரு கயறு கட்டப்பட்டு இருந்தது..
அதை பார்த்து புருவத்தை சுளித்தவன்,
“இது என்னடா பட்டப்பகல்ல இப்படி சின்ன பிள்ளைங்களை கயத்தை கட்டி இழுத்து கொடுமை படுத்துறா?” என்று எண்ணியவன் அவர்களையே பார்த்தான்..
அங்கு இருந்த பார்க் ஒன்றிற்கு வந்து இருந்தார்கள் போல.
பார்க் ரீச் ஆனதும் அவர்களிடம்,
“ஓகே.. இனி ரோப் தேவையில்லை. எடுத்திடுங்க.” என்றாள்..
எல்லா பிள்ளைகளும் கைகளை அதிலிருந்து எடுத்து கொள்ள, இவன் புருவம் மேலே ஏறியது.. ஓ அப்போ இவள் கயிறால் கட்டிப் போடவில்லை போல.. லூசாக தான் இருந்து இருக்கு..
அவள்: “எல்லோரும் வந்தாச்சா? சரி இனி போகும் போது இந்த கயிறை கட்டிக்கலாம்.. இப்போ அவங்க அவங்க பார்ட்னரோட போய் விளையாடுங்க.. அப்பப்போ பார்ட்னர் இருக்காங்களானு நீங்க தான் செக் பண்ணிக்கணும்..”
எல்லா பிள்ளைகளும் விளையாட போக, இவள் கூட வந்து இருந்த சக டீச்சர்ஸிடம் ஏதோ பேசினாள்.. பின்பு அவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு விரிப்பை அங்கே விரித்தனர்.. நிறைய பொருட்களை எடுத்து வைத்தனர்.. ஸ்னாக்ஸ் போல..
சூசையிடம்,
“ஏன் சூசை, இப்ப எல்லாம் இந்த மாதிரி யாரும் பசங்கள பிக்னிக் எல்லாம் விடுறது இல்லைல? எல்லாம் ஒரே படிப்பு படிப்புனு விளையாட்டு பக்கம் கூட போக விடாம கொடுமைப்படுத்துறாங்க.. இந்த ஸ்கூல் நல்லா இருக்கும் போலயே..” என்றான்.
சற்று நேரம் அவர்களையே பார்த்து கொண்டிருந்தவன் கண்கள் அவளை மட்டும் கொஞ்சம் கூர்மையாக பார்த்தது.. என்ன இருந்தது அவளிடம்? முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது கடினப்பாறை தன்மை அவனை கவர்ந்ததா? அல்லது அவளின் சிம்பிளான உடையா? இல்லை இன்னும் ஏதோ ஒன்று?
விளையாடி கொண்டிருந்த பிள்ளைகளை அழைத்த அவள் அவர்களுக்கு சின்ன சின்ன விளையாட்டு வைத்தாள்.. பின்பு சாப்பிட பழங்கள், சுண்டலை தந்தாள்..
ஒன்றரை மணி நேரத்தில் மீண்டும் எல்லாத்தையும் அடுக்கி வைத்தனர்.. அதே கயிறை எல்லோருக்கும் மாட்டிவிட்டாள்.. அப்படியே மெதுவாக அவர்களை வழிநடத்தி சென்றாள்..
போகும் போது டிராபிக் சிக்னல் பற்றி சொல்லி கொடுத்து கொண்டே சென்றாள்..
சூசை பவனின் கவனம் அங்கே போவதை பார்த்து,
“பாஸ்..நான் வேணும்னா யார்னு விசாரிச்சுட்டு வரட்டுமா?”
பவன் வேகமாக, “ச்சே ச்சே நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல.. அதெல்லாம் வேணாம். நான் எல்லாம் அவ்வளவு ஈஸியா எந்த வலையிலயும் விழ மாட்டேனாக்கும். ஏதோ ஒரு பெண்ணுக்காக நாம ஏன் தெருவெல்லாம் தேடி அலையனும்?” என்று சொல்லியவன் மீண்டும் மொபைலில் விளையாட தொடங்கினான்..
ஆனால் பவனே அடுத்த மாதத்தில் ஒரு நாள் அவள் முன்பு போய் நிற்க வேண்டிய சூழ்நிலை ஒன்று வந்தது..
வழக்கம் போல தூங்க போகும் முன் அண்ணன் சரவணன் அறைக்கு சென்று பேசினான்..
சரவணன் எதுவும் பேசவில்லை.. அவன் சுயநிலையில் தான் இருக்கிறானா என்றே பல நேரம் யாருக்கும் தெரியாது..
ஆனால் பவன் விடாமல் அவனிடம் எல்லாத்தையும் அண்ணனிடம் ஷேர் செய்வான்..
அன்றும் அதே போல்,
“அண்ணா நீ எப்போ என்கூட நல்லா பேசுவ? ஏதோ அப்பா மேல தான் உனக்கு கோவம்னு சொன்ன? நான் என்ன செஞ்சேன்? இப்போ எல்லாம் என் கூடயும் சரியா பேசமாட்ற?”
சரவணன்: “நீ அரசியல்ல இருக்காத பவன்” என்றான்.
பவன்: “அதையே தான் சொல்ற? ஆனா ஏன், எதுக்குனு சொல்ல மாட்றீயே? அண்ணா எனக்கு அரசியல் பிடிச்சு இருக்கு. “
சரவணன் அதற்கு பிறகு பேசவில்லை..
பவன்: “சரி அண்ணா நீ தூங்கு.. நான் நாளைக்கு வரேன்.” என்று கூறி சரவணனை படுக்க வைத்துவிட்டு கிளம்பினான்..
அறைக்கு செல்ல போனவனை அப்பா சக்கரைப்பாணி அழைத்தார்.
“எஸ் டாடி..”
அவர்: “கொஞ்சம் பேசணும். என் ஆஃபீஸ் ரூமுக்கு வா.”
இருவரும் அங்கே சென்றனர்..
அவர்: “நம்ம கட்சி அலுவலுகத்தை பெரிசு பண்ணிடலாம்னு பாக்குறேன்.”
அவன்: “ஆமா டாடி ரொம்ப சின்னதா இருக்கு.. எல்லோரும் உட்கார இடம் போத மாட்டிங்குது.”
அவர் தலையை அசைத்தார்..
“ஆனா விரிவு பண்ணனும்னா, ஒரு சின்ன பிரச்சனை இருக்கு. நம்ம கட்சி அலுவலுகத்துக்கு பின்னாடி ஒரு ஸ்கூல் இருக்கு. அவங்கள அப்புறப்படுத்தனும்.”
பவன் புருவத்தை சுருக்கி,
“ஆனா ஸ்கூல்லை எப்படிப்பா நாம அப்புறப்படுத்த முடியும்? அது பெரிய process ஆச்சே?”
அவர்: “நீ நினைக்கிற மாதிரி அது ஒண்ணும் பெரிய ஸ்கூல் இல்ல.. குருவி கூடு மாதிரி சின்னது.. பெருசா பிள்ளைங்க எல்லாம் படிக்கல. பத்து நாள்ல அந்த ஸ்கூல்காரங்க கிட்டே நல்ல டீல் ஒண்ணு பேசி அவங்கள காலி பண்ணிடு.” என்று கூற..
பவன்: “ஓகே டாடி பண்ணிடுறேன். குட் நைட்.” என்று கூறி கிளம்பினான்..
அடுத்த நாள் அந்த ஸ்கூலை போய் பார்த்தவன் சூசையிடம்,
“ஆமா சூசை டாடி சொன்னது சரி தான்.. ரொம்ப சின்னதா தான் இருக்கு.. இதை காலி பண்ண 10 நாள் கூட ஆகாது. ஈஸி வேலை. நான் போய் இந்த ஸ்கூல் incharge ஆட்களை பார்த்து பேசிட்டு வந்துடுறேன்.” என்று அந்த ஸ்கூலுக்குள் காலடி எடுத்து வைத்தான்..
அந்த நொடி முதல் அவன் வாழ்க்கை பா
தையும், உத்ராவின் விதியும் மாற தொடங்கியது..
தொடரும்..
ஒரு நாள் விட்டுவிட்டு ud வரும் சகோஸ்.. கமெண்ட் பண்ணுங்க ப்ளீஸ்..
error: Content is protected !!