Skip to content
Post Views: 2,955
அத்தியாயம் 14
சொர்க்கம் கூட எந்தன்
காலடியில் வந்து சேரும்
உன்னைச் சேர்க்கையில்!!!
Advertisement
என்ன அவனிடம் இருந்து சத்தமே வரவில்லை என்று எண்ணி அவன் நிமிரும் போது அவனும் தன் பார்வையை மாற்றிக் கொண்டான்.
Advertisement
“கிளம்பலாமா?”, என்று அவள் கேட்க “போகலாம், இந்தா இந்தப் பூவை வச்சிக்கோ. அம்மா கொடுத்தாங்க”, என்று சொல்லி அவள் கரத்தில் கொடுத்தான்.
Advertisement
அதை வாங்கியவள் “இவ்வளவு வேண்டாமே?”, என்றாள்.
Advertisement
“இன்னைக்கு ஒரு நாள் தான் வச்சிக்கோ”, என்று சொன்னதும் தலையில் சூடிக் கொண்டே “அத்தை கிளம்பிட்டாங்களா?”, என்று கேட்டாள்.
“அம்மா அப்பா முன்னாடி போயிட்டாங்க. நாம தான் பாக்கி”
“நாம லேட்டா போனா திட்ட மாட்டாங்களா?”
“நமக்கு அங்க என்ன வேலை இருக்கு? அம்மா தான் மெதுவா வரச் சொன்னாங்க”
பூவை வைத்து விட்டு வந்தவள் “வாங்க போகலாம்”, என்று சொல்லி முன்னே அடக்க “ஹப்பா”, என்று மூச்சை இழுத்து விட்டான்.
கீழே வந்ததும் “போனை எடுக்கலைங்க”, என்று சொல்வதற்காக அவள் திரும்ப வேகமாக வந்தவனின் மீது மோதி நின்றாள். அவன் கரங்களும் அவளை தாங்கிப் பிடித்துக் கொண்டது.
ஏற்கனவே அவள் அழகில் பிரம்மித்துப் போய் நின்றவன் இந்த அருகாமை கிடைத்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லி அவளை விடாமல் பிடித்திருந்தான். அவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவனது கண்களில் இருந்த உணர்வில் இப்போது அவளுக்கு தான் மூச்சடைக்கும் உணர்வு.
வெளியே இருந்து ரங்கன் ஹாரன் அடிக்கவும் தான் நடப்புக்கே வந்தார்கள் இருவரும். அவன் அவளை விட்டு நகர்ந்து நிற்க அவளும் தலை குனிந்த படி போனை எடுக்கச் சென்றாள். பின் இருவரும் ஏறியதும் ரங்கன் காரை கோவிலை நோக்கிச் செலுத்தினான்.
இவர்கள் கோவிலுக்கு சென்ற போது அனைவரும் அங்கே தான் இருந்தார்கள். பிரியா குடும்பமும் அங்கே இருந்தது. ஜோசியர் சொன்ன படி ஆதவன் அனைத்து சாமிக்கும் மாலையைப் போட சிந்து அந்த இடத்தைப் பார்த்து பயந்து ரங்கநாயகி கையைப் பற்றிய படி நின்றாள்.
ஆதவன் மாலை போடுவது எதற்கு என்று தெரிந்த பிரியாவுக்கு வயிறு எரிந்தது. நாளை சிந்துவும் ஆதவனும் கணவன் மனைவியாக மாறி விடுவார்கள் என்ற உண்மையை அவளால் சகிக்க முடியவில்லை.
என்ன செய்யலாம் என்று அவள் மூளை யோசித்தது. சாமி கும்பிட்டு முடித்ததும் அனைவரும் வந்து அமர்ந்தார்கள். ஊர் ஜனமே அங்கே தான் கூடியிருந்தது. வேண்டும் என்றே சிந்து அருகில் வந்து அமர்ந்தாள் பிரியா.
சிறிது நேரம் கழித்து அவரவர் பேச்சில் மூழ்கி விட ரங்கன் ரத்தினம் அருகில் நின்றான் என்றால் ஆதவன் சக்தியுடன் நின்று கொண்டிருந்தான். அதனால் சிந்து மற்றும் பிரியாவை யாரும் கவனிக்க வில்லை.
“நாளைக்கு முதலிரவு நடக்கும்னு ரொம்ப பூரிச்சு போய் இருக்க போல?”, என்று சிந்துவுக்கு மட்டும் கேட்கும் வகையில் கேட்டாள் பிரியா.
சிந்து அவள் கேள்வியில் அதிர்வாக அவளைத் திரும்பிப் பார்த்தாள். “என்ன பாக்குற? அதுக்காக தானே இந்த மாலை எல்லாம். ஆனா அதெல்லாம் வேஸ்ட் அப்படிங்குற உண்மை நமக்கு மட்டும் தானே தெரியும்? நாளைக்கு நைட் அத்தானுக்கு இன்னொரு கை உடையப் போகுதோ, இல்லை கால் உடையப் போகுதோ?”, என்று கேட்டாள்.
“என்ன உளறுற?”, என்று நடுக்கத்துடன் கேட்டாள் சிந்து.
“உன் கூட வாழக் கூடாதுன்னு அத்தான் வேணுக்குன்னு கையை உடைச்சிட்டாங்களாமே?”, என்று கேட்டாள் பிரியா. அவள் போட்டு வாங்குவது புரியாமல் “உனக்கு எப்படி அது தெரியும்?”, என்று உளறி விட்டாள் சிந்து.
“இது என்ன பிரமாதம்? உனக்கு தெரியாத இன்னொரு விஷயம் சொல்லட்டா? உன் கூட வாழக் கூடாதுன்னு முதல்ல ஜோசியர் கிட்ட ஒரு மாசம் தள்ளி வைக்கச் சொன்னதும் ஆதவன் அத்தான் தான்”, என்றாள்.
“அப்படியும் இருக்குமோ? அன்னைக்கு என் கூட வாழக் கூடாதுன்னு தானே கையை உடைச்சான்? அப்ப இதையும் பண்ணிருப்பான். அப்படின்னா அவனுக்கு என்னைப் பிடிக்கலையோ?”, என்று எண்ணி கலங்கினாள்.
அவள் கலக்கத்தை மேலும் அதிகரிப்பது போல “உன்னை அத்தானுக்கு பிடிக்கவே இல்லை டி. என்னைத் தான் அவருக்கு பிடிக்கும். எங்க ரெண்டு வீட்லயும் எங்க கல்யாணத்தை ஆவலா எதிர் பாத்தாங்க. கல்யாணத்துக்கு போன இடத்துல உன்னை அவர் தலைல கட்டிட்டாங்கன்னு அத்தான் வருத்தத்துல இருக்காங்க. ஒழுங்கு மரியாதையா அவரை விட்டுப் போயிரு. உன்னால கையை உடைக்கிற அளவுக்கு போனவர், உன் கூட வாழ வேண்டிய சூழ்நிலை வந்தா உயிரையே விட்டுருவார். இந்த உண்மை எல்லாம் அத்தை மாமாவுக்கு தெரிஞ்சா அது வேற பிரச்சனை. கொஞ்சம் எங்க அத்தானை நிம்மதியா இருக்க விடு”, என்று பிரியா முடிக்க சிந்து கண்கள் கலங்கி விட்டது. அவள் அப்படிச் சொன்னதும் சிந்துவுக்கு ஆதவன் மனதில் இருந்த அன்பு நினைவே வர வில்லை.
இவர்கள் இருவரையும் முதலில் கண்டது வேணி தான். அவர்கள் இருவரின் முக பாவனையும் சரி இல்லை என்று புரிந்து அவர்கள் அருகில் வந்து “பிரியா அவ கிட்ட உனக்கு என்ன பேச்சு? இந்த பக்கம் வா”, என்று அழைத்தாள்.
“அத்தானுக்கு இவளைப் பிடிக்கவே இல்லைல்ல மா? அதைத் தான் சொல்லிட்டு இருக்கேன். நாளைக்கு அத்தை இவ கூட சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செஞ்சா அத்தான் உயிரையே விட்டுருவாங்க. அதான் இவ கிட்ட எச்சரிக்கை பண்ணிட்டு இருக்கேன். நீ சொல்லு மா. அத்தானுக்கு இவளைப் பிடிக்காம தானே சாந்தி முகூர்த்தத்தை வேணுக்குன்னு தள்ளி வச்சாங்க. கையையும் உடைச்சாங்க? நீயே இவ கிட்ட சொல்லு மா”, என்று சொன்னாள்.
மகள் சொன்னதைக் கேட்டு உள்ளுக்குள் அதிர்ந்த வேணிக்கு மகளின் திட்டம் சரியாகப் புரிந்தது. கூடவே சிந்துவின் மனதையும் கணித்து விட்டாள்.
“பிரியா நீ பண்ணினது பெரிய தப்பு. உனக்கு உண்மை தெரிஞ்சா அதை உன்னோட வச்சிருக்கணும். அதை எதுக்கு இவ கிட்ட வந்து சொல்ற? இந்த விஷயம் மட்டும் என் அண்ணன் அண்ணிக்கு தெரிஞ்சது உயிரையே விட்டுருவாங்க. அதனால தான் ஆதவன் அவங்களுக்கு தெரியாம காயை நகர்த்துறான். நீ இதுல இடைல புகுந்து சொதப்பிறாத. அவன் தானே போய் இவ கிட்ட சிக்கினான். அவனே தன்னால வெளிய வந்துருவான். நீ வா”, என்று பேசி விட்டு மகளை அழைத்துக் கொண்டு சென்றாள்.
அதன் பின் சிந்துவுக்கு ஒரு துளி கூட நிம்மதி இல்லாமல் போனது. நாளைக்கு முதலிரவு என்றால் ஆதவன் கட்டாயம் கையை, இல்லை என்றால் காலை உடைப்பானோ? அவனுக்கு தன்னைப் பிடிக்க வில்லையோ என்று சோர்ந்து போனாள்.
அருகில் இருந்த ஊர் ஜனங்களுக்காக கண்ணீரை அடக்கிக் கொண்டு இருந்தாள். அவள் முகம் ஒரு மாதிரி இருப்பதை வெகு நேரம் கழித்து தான் மங்கை கவனித்தாள். அவள் முகம் ஒரு மாதிரி இருக்கவும் ரங்கனை அழைத்த மங்கை “பொங்கல் வைக்கிறதுனால சிந்துவுக்கு கண்ணு கலங்குது போல டா. அவளை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போ. ஆதவனையும் கூட்டிட்டு போ”, என்று சொன்னாள்.
“சரி மா”, என்று மங்கையிடம் சொன்னவன் சிந்து புறம் திரும்பி “வா மா போகலாம்”, என்றான். அவளுக்கும் அங்கிருந்து போக வேண்டும் போல இருக்க உடனடியாக எழுந்து கொண்டாள்.
அவளைக் காரில் அமரச் சொன்ன ரங்கன் “நீ உக்காந்துரு மா. நான் அண்ணனைக் கூட்டிட்டு வரேன்”, என்றான்.
“இல்லை, அவங்க இங்கயே இருக்கட்டும். நாம வீட்டுக்கு போகலாம். வீட்டுக்கு போனதும் பேகை எடுத்துட்டு நாம சென்னைக்கு போகணும். என்னை என் வீட்ல கொண்டு போய் விட்டுருங்கண்ணா பிளீஸ்”, என்று அவள் சொன்ன பிறகு தான் அவள் கண்ணீரைக் கண்டான். அவனுக்கு திகைப்பாக இருந்தது. வரும் போது ஆதவன் மற்றும் சிந்து முகம் அப்படி மலர்ந்து இருந்தது.
ஆனால் இப்போது அவள் முகம் கலக்கத்துடன் இருக்கவும் அவனுக்கு திக்கென்று இருந்தது. “கடவுளே என்ன ஆச்சுன்னு தெரியலையே?”, என்று எண்ணிக் கொண்டு அடுத்து ஒரு வார்த்தைக் கூட அவளிடம் கேட்காமல் “சரி மா நீ உக்காரு, நாம வீட்டுக்கு போகலாம்”, என்று சொல்லி காரை எடுத்தவன் சிந்துவுக்கு தெரியாமல் ஆதவனுக்கு “அவசரம், உடனே வீட்டுக்கு வரவும். ஐயா அம்மாவுக்கு தெரிய வேண்டாம்”, என்று மெஸ்ஸேஜ் மட்டும் அனுப்பி வைத்தான்.
வீட்டுக்கு சென்றதும் அறைக்குச் சென்ற சிந்து ஒரு பேகை மட்டும் எடுத்து தனக்கு தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
இங்கே ஆதவனோ ரங்கன் அனுப்பிய செய்தியைக் கண்டு திகைத்துப் போனான். சரி சிந்துவையும் அழைத்துச் செல்லலாம் என்று எண்ணி அவளைத் தேட அவள் கோவிலில் இல்லை என்று தெரிந்ததும் அவசரமாக வீட்டை நோக்கி ஓடினான்.
சிந்து பையைத் தூக்கிக் கொண்டு கீழே வரும் போது தான் ஆதவன் சரியாக உள்ளே வந்தான். வெளியே ரங்கன் விஷயத்தை லேசாக சொன்னதால் “என்ன ஆச்சு சிந்து?”, என்று கேட்டான்.
அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் வெளியே வந்து விட்டாள். ஆதவனும் அவள் பின்னே வந்தான். ரங்கன் இருவரையும் திகைப்புடன் பார்த்த படி நின்றான்.
“அண்ணே காரை எடுங்க, கிளம்பனும்”, என்றாள் சிந்து.
“என்ன காரை எடுக்கணும்? எங்க கிளம்ப போற சிந்து? உன் கிட்ட தான் என்ன ஆச்சுன்னு கேட்டுட்டு இருக்கேன்?”, என்று சற்று அதட்டலாக கேட்டான் ஆதவன்.
error: Content is protected !!