Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவே

சின்னஞ் சிறு பூவே 25

பூவே 25

 

 

“இவளுங்களை கல்லால மண்டையை ஒடைக்கணும்டி!” என்று இன்னும் ஏதேதோ வார்த்தைகளால் திட்டிக்கொண்டே வந்தாள் முனிஸ்வரி.



Advertisement

 

“போதும், நிறுத்துடி. எனக்கே காது வலிக்குது,” என்ற வேல்விழியை, திரும்பிப் பார்த்து முறைத்தாள்.

 

Advertisement

“நீ வேணும்னா தியாகியா இரு. என்னால அப்படி இருக்க முடியாதுடி. நம்மளா கேட்டோம் வெறகு எடுக்கப் போகலாம்னு? அவளுங்கதான்டி சொன்னாளுங்க. இப்ப வந்து கதை சொல்லுறாங்க…

Advertisement

 

‘எங்கத்தை வீட்டுக்குப் போறோம், எங்க அக்கா வீட்டுக்குப் போறோம்’ன்னு,” என்று இன்னும் மனம் ஆறாமல் புலம்பினாள் முனிஸ்வரி.

 

Advertisement

“விடுடி… அவளுங்க வராட்டி போறாங்க. நம்ம ரெண்டு பேரும் போய் ஜாலியா இருக்கலாம். இப்ப நான் வீட்டுக்குப் போனா, மறுபடியும் பாட்டி விடமாட்டாங்கடி,” என்று முகத்தைத் தூக்கிக்கொண்டாள்.

 

“சரி, வந்து தொலை,” என்று இருவரும் ஒருவர் பின் ஒருவராக நடந்தனர்.

 

முனிஸ்வரிக்கு கொஞ்ச நேரம்தான் உம்மென்று இருந்தது. அடுத்தடுத்துப் பேச்சைத் தொடங்க, இருவருக்குமே பேச்சு நீண்டுகொண்டே போனது.

 

இருவரும் கோவிலை நெருங்கி, “முனிய்யா… எல்லாரையும் காப்பாத்துய்யா,” என்று ஒருசேர வேண்டிக்கொண்டு தள்ளி வந்தனர்.

 

“வேலு, ரொம்ப வெறகு வேணாம். சும்மா ஒரு நாலரிக்கு மட்டும் எடுத்துட்டு கிளம்பலாம்,” என்றதும்,

 

“சரிடி… உன் முகம் ஏன் போயறஞ்ச மாதிரி இருக்கு?” என்றாள்.

 

“தெரியல வேலு… வரும்போது கால் தடுத்துச்சு. தண்ணி குடிச்சிட்டு வராம வந்துட்டேன். இதுல இவளுங்க வரலையா? அதுவும் ஒரு மாதிரி அபசகுனமா இருக்கு,” என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு முள்ளாக வெட்டி போட்டனர்.

 

“அதை விடுடி… வேற எதுனா பேசு,” என்றதும்,

 

வீட்டில் நடக்கும் கலாட்டா, ஸ்கூல்ல நடக்கும் விஷயம்னு இப்படி மாறி மாறிப் பேசிக்கொண்டிருந்த நேரத்தில்…

 

யாரோ தங்களை ரொம்ப நேரமாகப் பார்ப்பது போலத் தோன்றியது.

 

முதலில் வேல்விழி திரும்பிப் பார்க்க, அடுத்து முனிஸ்வரிக்கும் அதே உணர்வு தோன்ற, அவளும் திரும்பிப் பார்த்தாள்.

 

“வேலு… கெளம்பலாம்டி. எனக்கு ஏதோ சரியாப் படலடி,” என்ற முனிஸ்வரியின் பார்வை கோவிலைச் சுற்றி வலம் வந்தது.

 

ஒரு பக்கம் மரக்கிளையில் அசைவு தெரிந்ததும், இருவருக்கும் கை, காலெல்லாம் சிறு நடுக்கம் வந்தது.

 

“சரிடி வா… வெறகு கூட வேணாம். நம்ம போகலாம்,” என்று வேல்விழியும் பயத்துடன் சொல்ல,

 

இருவரும் ஒரு அடி எடுத்து வைத்த நேரத்தில்…

 

மரத்திலிருந்து கீழே குதித்தான் ராஜன்.

 

அந்தச் சத்தத்தில் இருவரும், “ஆஆஆ…” என்று அலறினர்.

 

அந்த ஒரு நிமிடம், இருவருக்கும் உயிரே போன நிலைதான்.

 

“ஏய் பைத்தியம்! அறிவில்லையா உனக்கு? சின்னப் புள்ளைங்க இருக்குறது உன் நொள்ளக் கண்ணுக்குத் தெரியலையா? இப்படியா வந்து பயமுறுத்துவ?” என்று சமநிலைக்கு வந்ததும் அவனிடம் கத்தினாள் முனிஸ்வரி.

 

பெண்களுக்கும் ராஜனுக்கும் குறைந்தது இருபது அடி தூரம் இருந்தது.

 

அவன் கிட்ட நெருங்க மாட்டான்னு பெண்கள் நினைத்திருக்க,

 

இவர்களின் யோசனைக்கு அப்பாற்பட்டு இருந்தான் அவன்.

 

“எது… நீங்க சின்னப் பிள்ளைங்களா? இப்ப கட்டிக் கொடுத்தா கூட, அடுத்த பத்து மாசத்துல புள்ளையைப் பெத்துடுவீங்க,” என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான்.

 

“ஏய்… கிட்ட வராத! தள்ளியே இரு,” என்று வேல்விழி, முனிஸ்வரி இருக்கும் தைரியத்தில் சொல்ல,

 

“ஹா… ஹா… ஹா…” என்று வெடிச் சிரிப்பு சிரித்தவன்,

 

“பாருய்யா… புள்ளைப் பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்குது,” என்று இருவருக்கும் ஐந்தடி இடைவெளி விட்டு நின்றான்.

 

“ஏய், இப்ப எதுக்கு வந்து தேவை இல்லாம பேசுற?” என்றாள் முனிஸ்வரி, வேல்விழியின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு.

 

“தேவை இல்லாம வரல… ஒரு தேவைக்காகத்தான் வந்தேன்,” என்றான் ராஜன்.

 

அவன் பார்வை முழுவதும் வேல்விழியைத்தான் வட்டமிட்டது.

 

அந்தப் பார்வையே இருவருக்கும் உடம்பில் ஒரு நடுக்கத்தைத் தந்தது.

 

“வழியை விடு. நாங்க வீட்டுக்குப் போகணும்,” என்றாள் வேல்விழி, தைரியமாகப் பேச முயன்று.

 

“அவ்வளவு அவசரமா? கொஞ்ச நேரம் பேசிட்டு போங்க,” என்று சொல்லிக்கொண்டே இன்னும் ஒரு அடி முன்னே வைத்தான்.

 

அதைப் பார்த்த முனிஸ்வரி, வேல்விழியைத் தன் பின்னால் இழுத்து நிறுத்தினாள்.

 

“எங்களுக்கு உன்கிட்ட பேச எதுவும் இல்லை. வழியை விடு,” என்றாள் பல்லைக் கடித்தபடி.

 

“உன்கிட்ட இல்ல… அவகிட்ட இருக்கு,” என்று வேல்விழியையே பார்த்துக்கொண்டே சொன்னான்.

 

அவன் குரலில் இருந்த மாற்றம், இருவரையும் இன்னும் பதற வைத்தது.

 

வேல்விழியின் இதயம் படபடவெனத் துடிக்க ஆரம்பித்தது.

 

‘இவன் ஏதோ தப்பா நினைச்சுட்டு வந்திருக்கான்…’ என்று மனம் எச்சரிக்கை மணி அடித்தது.

 

“என்ன?” என்று இருவரும் ஒரே நேரத்தில் கேட்டனர்.

 

“வேல்விழி… கொஞ்சம் தனியா பேசணும். நீ மட்டும் இங்க நில்,” என்றான்.

 

“ஏய்! அவ எங்கயும் தனியா நிக்க மாட்டா. சொல்ல வேண்டியது இருந்தா, எங்க ரெண்டு பேரு முன்னாடியே சொல்லு,” என்று முனிஸ்வரி ஒரு அடி பின்னே வைத்தாள்.

 

“உன்னை யாருடி நடுவுல வரச் சொன்னது?” என்று முறைத்தான்.

 

“நானாதான் வந்தேன். என்ன பண்ணுவ?” என்று அவளும் சளைக்காமல் பதில் கொடுத்தாள்.

 

ராஜன் ஒரு நொடி அவளை முறைத்துப் பார்த்துவிட்டு,

 

“சரி… ரெண்டு பேரும் கேளுங்க,” என்றான்.

 

அவன் சட்டையின் உள்ளே கையை விட்டான்.

 

அந்த அசைவிலேயே இருவரின் இதயமும் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

 

‘அய்யோ… கத்தி எதுவும் எடுத்துட்டு வந்திருப்பானோ?’ என்று பயத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

 

ஆனால்…

 

அவன் வெளியே எடுத்தது, ஒரு மஞ்சள் நிறத் துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த சிறிய பொட்டலம்.

 

அதை மெதுவாகப் பிரித்தான்.

 

அதற்குள் இருந்த மஞ்சள் கோர்த்த தாலி கயிறை பார்த்ததும்…

 

வேல்விழியின் முகம் வெளிறிப் போனது.

 

முனிஸ்வரிக்கு ஒன்றும் புரியாமல்,

 

“இத எதுக்குடா எங்ககிட்ட காட்டுற?” என்று கேட்டாள்.

 

“கல்யாணம் பண்ணிக்கத்தான்,” என்றான் வித்தியாசமான குரலில்.

 

“வேலை வெட்டி இல்லாத உனக்கு எந்த முட்டாளு பொண்ணை கொடுக்குறான்னு பார்த்துட்டு இரு,” என்று அவனுக்குப் பதில் சொல்லிக்கொண்டே, தப்பிப் போக வழியைத் தேடினாள் முனிஸ்வரி.

 

“முட்டாள் பையனுக்குப் பொண்ணு தருவான். உன் கூட ஒட்டிட்டு இருக்குறாளே… அவ கழுத்துல கட்டுறதுக்குத்தான்,” என்றான்.

 

“என்ன?” என்று இருவரும் கோரஸாகக் கேட்டனர்.

 

“ஏண்டி… நான் என்ன கதையா சொல்லுறேன்? ரெண்டு பேரும் இப்படி கேட்டுட்டே இருக்கீங்க,” என்றான் கடுப்பாக.

 

அவன் நினைத்து வந்தது வேறல்ல.

தாலி கட்டாமல் அவளோடு சேர்ந்து வாழ அல்ல…

வாழ்நாள் முழுக்க அவளை அழ வைக்கத்தான் மஞ்சள் கயிறோடு வந்து நின்றிருந்தான்.

 

அவன் கவனம் சிதறியிருப்பதாக நினைத்து, இருவரும் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர்.

 

ஆனால்…

 

பழி வாங்கும் வெறியோடு வந்தவன், தன் இரையை அவ்வளவு எளிதாக விட்டுவிடத் தயாராக இல்லை.

 

ஒரே எட்டில் பாய்ந்தவன், வேல்விழியின் இரு கைகளையும்.. முனிஸ்வரி ஒருபக்கம் பிடிக்க, மற்றோரு பக்கம் இறுக்கமாகப் பற்றிக்கொண்டான் ராஜன்.

 

“ஏய்… விடு! விடு!” என்று கதறினாள் வேல்விழி.

 

முனிஸ்வரியும் அவன் பிடியிலிருந்து வேல்விழியை இழுத்து விட முயன்றாள்.

 

ஆனால் அவளின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலே முடிந்தது.

 

இருபத்தைந்து வயது வளர்ந்த ஆணின் முரட்டுப் பலத்திற்கு முன்னால்…

 

அந்தச் சிறு மொட்டுக்களின் போராட்டம் எடுபடவே இல்லை.

 

“என்னடி, ரொம்ப துள்ளுறீங்க” என்று வேல்விழியை ஒரே இழு இழுக்க, முனிஸ்வரி கையை விட்டு, இவன் கை வளைவுக்குள் வந்தாள்..

 

“ஈஸ்வரி” என்று கதறி அழ,

 

இவளால் என்ன செய்ய என்று தெரியவில்லை,

 

“ஏய், என்ன திடீர்னு அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுற” என்று மீண்டும் பேச்சு கொடுக்க தொடங்கினாள்..

 

“இவ மாமன்கூட ஒரு வழக்கு இருக்கு..‌அதை முடிக்க தான் இவளை கலியாணம் பண்ண போறேன்னு” தன் கை வளைவில் இருந்தவளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு பதிலளித்தான்..

 

“ஓ! அவனா நீ” என்று ஒரு மாதிரி இழுத்து சொன்னாள் முனிஸ்வரி..

 

“என்னடி அவனா நீ” என்று கோவமாக அவளை நெருங்கிய நேரத்தில்,

 

வேல்விழி அவன் கை தளர்ந்ததில் , தன் பற்களால் அவன் கையை கடித்து. விலகினாள்..

 

“ஆ” என்று கை உதறினான்..

 

“ஏய்’ என்று அவளை நெருங்க,

 

விலகிய நொடியில், கீழே கிடந்த ‘கொடுவா’ அவள் கையில் எடுத்துக்கொண்டாள்..

 

“எங்க,  இப்ப நெருங்கி பாரு!” என்று வேல்விழி சொன்னதும்..

 

அவள் கடித்த இடத்தில் வலி உயிர்  போனது..

 

“பொட்டச்சி உங்களுக்கு இவ்ளோ! தைரியமா?” என்றான்..

 

“பொட்டச்சி தான்.. நீ தைரியமானவனா இருந்த, என் மாமாகூட எதிர்த்து நின்னு சண்டை போட வக்கு இல்லாம தானே! பொட்டச்சி எங்களை பணயம் வைக்க பாக்குற, அப்ப நீ யாரு ___” என்றாள்..

 

அவனுக்கு இதுக்கு முன்பு இருந்த வெறி கூட , இவளின் பேச்சில் அதிகமானது..

 

“வாடி… நம்ம போகலாம்,” என்று முனிஸ்வரி வேல்விழியின் கையைப் பிடித்து இழுத்தாள்.

 

“எங்கடி போறீங்க?” என்று ராஜன் வழியை மறித்தான்.

 

“விலகுடா!” என்று வேல்விழி கொடுவாவை இறுகப் பற்றிக்கொண்டாள்.

 

ஒரு நொடி யாரும் எதிர்பார்க்காதபடி, ராஜன் முனிஸ்வரியை பலமாகத் தள்ளிவிட்டான்.

 

“அம்மா!” என்று தடுமாறி அருகில் இருந்த பாறையில் தலை பலமாக இடிக்க, இரத்தம் வழிய வழிய கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்துக்கு போனாள்…

 

“ஈஸ்வரி!” என்று அலறிய வேல்விழியின் கவனம் அந்த நொடியில் தோழியிடம் திரும்பியது.

 

அவள் கையில் இருந்த கொடுவா சற்றுத் தளர்ந்தது.

 

இவள் தோழியை நோக்கி திரும்ப , அவனின் வேகம் கொண்டு அவள் பின்பக்க சட்டை பிடித்து இழுக்க பின் பகுதி மொத்தமும் அவன் கையோடு வந்தது..

 

 

சட்டை அவன் கையோடு இருக்க, தப்பி போக வழி தெரியாமல்..

 

அவன் முன்னே திரும்பி நிற்க, கண்ணீரோடு தோழியை பார்த்தாள்..

 

அந்த ஒரு கணமே ராஜனுக்குப் போதுமானதாக இருந்தது.

 

வேல்விழியின் கையைப் பிடித்தவன், மஞ்சள் கயிற்றை அவள் கழுத்தை நோக்கி உயர்த்தினான்.

 

அந்தக் காட்சியைப் பார்த்த வேல்விழியின் உடம்பெல்லாம் நடுங்கியது.

 

சற்று முன் இருந்த தைரியம் முழுவதும் காணாமல் போக,

 

“வேணாம்… என்னை விட்டுடு…” என்று கதறினாள்.

 

அவள் கண்களில் பயம் மட்டுமே இருக்க,

 

கோவிலையே அதிர வைக்கும் அளவுக்கு அவளின் அலறல் காற்றில் எதிரொலித்தது.”வேண்டாம்… என்னை விட்டுடு!” என்று கதறினாள் வேல்விழி.

 

அவளின் குரல் அந்தக் காட்டையே அதிர வைத்தது.

 

“வேலு…” என்று கீழே விழுந்த நிலையிலிருந்தே முனிஸ்வரியும் மயக்கம் பாதி நினைவு பாதியாக அலறி

னாள்.

 

ராஜனின் கையில் இருந்த தாலிக் கயிறு  வேல்விழியின் கழுத்தை நோக்கி நகர்ந்தது.

 

பயத்தில் அவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

 

அடுத்த நொடி…

 

அங்கே என்ன நடந்தது என்பதை உணரக்கூட முடியாமல், அவளின் உலகமே தலைகீழாக மாறியது..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!