Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவே

சின்னஞ் சிறு பூவே 26

பூவே 26



Advertisement

“இவளுக்கு இதே பொழப்பா போச்சு, ஒன்னுக்கு பத்து தடவை நடக்க வைக்குறா என்னை” என்று மகளை திட்டிக்கொண்டே,

Advertisement

Advertisement

கிண்ணத்தில் உருண்டை குழம்பை ஊற்றினார்..

‘இப்ப மறுபடியும் நா அவ்ளோ தூரம் நடந்து போகனும்னு’ மனதோடு புலம்பிக்கொண்டு வெளியே வர,

Advertisement

மருமகள், கூடையும் கையுமாகா மறுபடியும் வெளியே போவதை கண்டு..

“ஏட்டி , எங்க போறவ,” என்று கால்களை நீட்டி அமர்ந்திருந்தவர். தன் சுருக்கு பையிலிருந்த வெற்றிலையை பதம் பார்த்தேக்கொண்டே கேட்க,

“சரசு வூட்டுக்கு அத்தை, அவளுக்கு உருண்டை குழம்பு கேட்டா, அதான் கோண்டு போறேன்னு” சொல்லி தூக்கை சற்று பின்பக்கமாக மறைத்தார்..

மகள் கேட்டது குழம்பு மட்டும் இல்லையே! பணமும் தானே, அதை தான் கொண்டுவந்தார்.. குழம்பு கூடை கையிலிருக்கு இடுப்பு சேலையில் மறைத்து வைத்திருந்தார்..

எங்க காட்டுன்னு பார்த்துடுவாரோ என்று தான் பயந்து மறைக்க பார்த்தது..

“சரி அப்படியே வரும்போது! ஒரு பாக்கெட் சுண்ணாம்பும் ஒரு கௌலி வெத்தலை, கூடவே பொழலை(புழலை) வாங்கிட்டு வா” என்று கையிலேடுத்த வெத்தலைக்கு சுண்ணாம்பு தடவி வாய்க்குள் ஒதுக்கினார்..

மாமியாரையே வச்சு கண்ணு வாங்காம பார்த்து வைக்க,

“என்ன கெளம்பலையா நீ” என்று சத்தம் போட்டதும்..

“இதோ அத்தை” என்று இவர் வாசலை கடக்க,

அவர் எதிரே வெற்றியும், வேலுவும் வந்து நின்றனர்..

நிமிர்ந்து பார்த்தவர் ‘இவ எதுக்கு என் மகன் சட்டை போட்டிருக்கா’ என்று நிமிர்ந்து பார்த்தவர்,

“ஆத்தி” என்று நெஞ்சில் கை வைக்க , கையிலிருந்த கூடை கீழே விழந்து அதிலிருந்து குழம்பும், சிதறி போனது.

“ஏட்டி, கிறுக்கு பைய மவளே ! எதுக்குடி கூடையை கீழே போட்டு கத்துறவ,” என்று சத்தம்  போட்டுக்கொண்டே திரும்பினார்.

“ஐய்யோ! இந்த கொடுமையை நா எங்க போய் சொல்ல,” என்று இவர் கத்திய சத்தம் தெரு ஜனமே வீட்டு வாசலுக்கு ஓடி வந்தது..

‘என்னாச்சு ஏதாச்சு என்று ஒருபக்கம் தெரு ஜனம் வர,’

இன்னோரு பக்கம் , முனிஸ்வரி அம்மா சத்தமும், அதுக்கு அடுத்து ரெண்டு தெரு தள்ளி ராஜன் அம்மா சத்தமும்.. அந்த ஊர் முழுக்க எதிரொலித்தது..

“என்னாடி , மூளைக்கு ஒருத்தரா மூணு பேரும் கத்துனா எங்க போறது” பக்கத்து வீட்டு பெண் கேட்க,

“அக்கா, நீ  இங்க என்ன சங்கதின்னு கேளு.. நா போய் மத்த ரெண்டு வீடும் எதுக்கு அல்லோல படுதுன்னு பாத்துட்டு வரேன்னு” மற்றொருத்தி சொல்லி சென்றாள்..

இங்கு காளியம்மாவோ! மைக்கே இல்லாமல் ஊருக்கே மோளம் அடிக்க தொடங்கினார்..

“என்னடி குடிமூழ்கி போச்சுன்னு ஊர் சனத்தையே வாசலுக்கு கூட்டுறவ, என்று தட்டு தடுமாறி வாசலில் கால் ஊன்றி வர, பேர மக்களை கண்டு..

“வாய்யா, வாத்தா உள்ள வராம  ஏன் வாசல்ல நிக்குறீங்க” என்ற மயிலம்மா பார்வை அவர்கள் முகத்தில் தான் இருந்தது..

அக்கம் பக்கம் ஜனம் வாசலை விட்டு தள்ளி இருந்தாலும், காதை இவர்கள் வீட்டு வாசலில் தான் கழட்டி வைத்தனர்..

காளியம்மாவுக்கு இன்னும் மருமகள் நின்ற நிலை மாறாமல் இருப்பதை கண்டு , அவரை அசைத்தார்..

மாமியாரை திரும்பி  பார்த்தவர் கண்கள் இரண்டும் இரத்த சிவப்பாக மாறியது..

“அன்னைக்கு என்ன சொன்னீங்க , இவ என் தலையில் ஒக்காந்து ஆடுறாளானு கேட்டிங்களே? இப்ப என் கொலசாமியே எடுத்துக்கிட்டா, இப்ப சந்தோஷமா உங்களுக்கு” என்றார்..

“ஏய்யா, இவ என்னையா பைத்தியம் மாறி பேசுறா,” என்று பேரப்பிள்ளைகள் பக்கம் பார்வை திரும்ப, அவர் பார்வை அப்படியே நின்றது..

வேல் விழி கழுத்தில் தொங்கிய மஞ்சள் கயிறை கண்டு..

“ஏத்தா” என்று பேத்தியை பார்க்க,

“பாட்டி”என்று கதறினாள்..

அவள் தலை அலங்கோலமாக இருக்க, காலையில் போட்டிருந்த சட்டையின் கலர் மாறி இருக்க,

அந்த பெரிய மனிஷிக்கு ஒரு நொடி உலகமே சுழன்றது..

‘கண் முன்னே தேவகி நிற்பது போல் இருக்கவும்’ தள்ளாடி  ஒரு அடி பின்னே கால் வைத்தார்..

“பாட்டி”

“அப்பத்தா”

என்று இருவரும் அவரை தாங்கி பிடிக்க,

“எய்யா, பேத்தி பேத்தி” என்று மூச்சு வாங்கியது மயிலம்மாவிற்கு..

“வேலு , என்ன பாக்குற உள்ள போய் தண்ணீ கொண்டா” என்றான் பதட்டமாக,

“இதோ” என்று உள்ளே போக கால் வைத்தவளை, அப்படியே முடியை பிடித்து இழுத்திருந்தார் காளியம்மா..

“ஹா” என்று இவள் தலையை பிடித்து கத்தினாள்..

“ம்மா.. என்ன பண்ணுற அவளை விடு,” என ஒருபக்கம் அப்பத்தாவை தாங்கியபடி வெற்றி சொல்ல..

“இது என் வூடு கண்டவளும் கால் வைக்க நா வுடமாட்டேன்” என்று மகனை பாராமல் சொன்னவர்.. அவரே உள்ளே சென்று தண்ணீ கொண்டு வந்தார்..

அவனும் தண்ணீரை வாங்கி , அப்பத்தாவிற்கு கொடுக்க முதல் வாய் நீரை கீழே துப்பி இருந்தார்.. மீண்டும் பேரன்‌ கொடுத்த நீரை கொஞ்சம் கொஞ்சமாக பருகியவருக்கு, கைகள் நடுங்கியது..

அப்பத்தா கை பிடித்து மெல்ல  திண்ணையில் அமர வைத்தான்…

“ஏத்தா” என்று பேத்தியை கை நீட்டி அழைக்க ஓடிவந்து கட்டிக்கொண்டாள் பாட்டியை,

“என்னத்தா ஆச்சு” என்று தலையை தடவி கேட்க,

“என்ன  அவகிட்ட கதை கேக்குறீங்களா, இங்க வாடி” என்று மீண்டும் முடியை பிடித்து இழுத்து..

கையை ஓங்கி ஒரு அறை கொடுக்க, வேல்விழிக்கு பதில் அந்த அடியை வெற்றி வாங்கிக்கொண்டான்..

“எய்யா” மயிலம்மா கத்த,

“மாமா” என்று அழுதாள் வேல்விழி..

“என்னத்தா, வளர்ந்த புள்ளையை போய் கை நீட்டி அடிக்குற, கட்டிக்க முறை இருக்குறதால தான் தாலி கட்டிட்டான்.. அடுத்து என்னென்னு பாக்குறதை விட்டு.. ஊர் சனம் பாக்க , ஒப்பாரி வைக்குற” என்றார் சரளா..

“உன் வூட்டுல இப்படி நடந்த.. நீ அமைதியா இரு, என்னால் முடியாது.. இவ்ளோ நேரம் வேடிக்கை தானே பார்த்தா” என்று சரளாவிடம் எரிந்து விழுந்தார் காளியம்மா..

வேல்விழி பக்கம் திரும்பி,

“அந்த தாலியை கழட்டி தாடி” என்றார் கைகளை நீட்டி ,

“ம்மா, என்ன செய்ய சொல்லுற அவளை ,” என்றான்.

“நா உங்கட்ட பேசலய்யா, என் தலையில் பாரங்கல்லையே! தூக்கிப்போட்டியே! இவளை என்னால  வூட்டு வச்சுக்க முடியல, நீ காலம் முழுக்க எனக்கு தண்டனை கொடுக்காதைய்யா.. இந்த சிறுக்கியை என்னோட மருமகளா‌ ஏத்துக்கவே முடியாது” என்றார் பெரும் மூச்சு விட்டு..

“முடியாதும்மா” என்று அவனும், அவளை  தன் பின்னே மறைத்து நின்றான்..

“முடியாத, எப்படி முடியாம போகுதுன்னு நானும் பாக்குறேன்..” என்று ஆவேசமாக கத்தி,

அவள் கைகளை பிடித்து இழுத்தவர் கை அடுத்த நொட, அவள் தாலியை கையில் பிடித்தார்..

“இது உன் கழுத்துல ஒரு நிமிஷம் கூட இருக்கக்கூடாது” என்று இழுக்க பார்த்தார்..

“அவ கழுத்திலிருந்து தாலி உன் கைக்கு வந்தா.. ஒரு பொண்ணுக்கு தாலி எப்ப கீழே இறங்குமோ! அது தான் இங்க நடக்கும்” என்றான் கட்டளையாக,

மகன் சொன்ன வார்த்தையை கேட்டு கைகள் நடுங்கியது..

விழிகளில் நீர் முட்ட, மகனிடம் பார்வையை திருப்பினார்…

“என்னை விட அவ உனக்கு முக்கியமா போயிட்டாளாப்பா” என்று சொல்லும் போதே கண்ணீர் வழிந்தது…

“எனக்கு எல்லாருமே முக்கியம்மா.. ஒரு வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டு, ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் இன்னொரு கண்ணுக்கு வெண்ணெயும் வைக்க முடியாதும்மா” என்றான்..

“ஆனா, என் கண்ணுக்கு நீ வச்சது சுண்ணாம்புய்யா,” என்று வீட்டை அப்படியே போட்டு வெளியேற போனவரை தடுத்தான்..

“ம்மா, வீட்டுக்குள்ள வா ம்மா! நா உனக்கு என்ன நடந்ததுன்னு புரியுற மாறி சொல்லுறேன்”என்று அன்னையின் கை பிடித்து தடுத்தான்.

“இல்லைய்யா, உனக்கு வேணும்ன்னா அம்மா முக்கியமில்லாம இருக்கலாம்.. ஆனா எனக்கு நீ முக்கியம்.. அவ இருக்குற இடத்துல என் நிழல் கூட படாதுய்யா” என்று கண்ணீரை துடைத்துக்கொண்டு வெளியேறினார்..

“வேலு ,அப்பத்தா வை பாத்துக்க” என்று அன்னையை பின் தொடர்ந்து ஓடினான்..

அவரோ, மகள் வீட்டுக்கு தான் சென்றார்..

இதற்கு நடுவில் ராமையாவுக்கு விஷயம்  தெரிந்து ஓடி வந்தவர் கண்டது , மனைவியை தொடர்ந்து மகன் போவதை பார்த்து அவரும் இவர்களை பின்தொடருந்தார்..

“எம்மா, எப்ப வரச்சொன்னா இப்ப வர்ற நீ. நானே சீட்டு காசு கொடுத்துட்டேன்னு” எனக்  சொல்லிக்கொண்டே திரும்பி பார்த்தார்..

“சரசு நம்ம மோசம் போயிட்டோம்டி” என்று மகளை அணைத்துக்கொண்டார்..

“என்னம்மா ,என்னாச்சு” என்று அன்னையிடம் கேட்க,

வாசலில் தம்பியை கண்டு “என்னாச்சு  தம்பி  அம்மா ஏன் அழறாங்க” என்றாள்..

வெற்றி அமைதியாக நிற்க,

“அவன் எப்படிடி சொல்லுவான்.. புது மாப்பிள்ளைக்கு பொண்டாட்டி ஞாபகம் தான் இருக்கும்” என்ற அன்னையை, புரியாமல் பார்த்தாள்..

“என்னம்மா சொல்லுற புரியும்படி சொல்லு” என்றாள்

“நா, என்னத்தை சொல்ல , யாருக்கும் செலவு வைக்காம அந்த சிறுக்கியை கலியாணம் பண்ணிட்டு வந்துட்டான்டி” என்றதும்..

அன்னை சொன்னது புரியவே சில நொடிகள் ஆனாது..

அதிர்ச்சியோடு ,தம்பியை பார்த்தாள்..

“அம்மா சொல்லுறது நிசம் தானா வெற்றி” என்றாள்

“ஆமா க்கா” என்றான்..

தம்பி சொன்னதை நம்பவே முடியவில்லை,

“ஏண்டா  இப்படி பண்ண.. அவளை கட்டிக்க ஆசையா இருந்தா அதை எங்ககிட்ட சொல்லவேண்டியது தானே! நாங்க மொரண்டு புடிச்சாலும்.. உன் விருப்பத்துக்கு சம்மதிச்சு கலியாணத்தையும்  பண்ண மட்டோமா” என்றாள்.

ஆதங்கமாக இருந்தது.. அவளுக்கு வேல்விழி புடிக்காது தான்.. அதுக்குன்னு தம்பி விருப்பம் அவ மேல இருந்தா , மாட்டோம்னா சொல்ல போறோம்.. இப்ப யாருமில்லாத அனாதை மாறி பழைய துணியோடு கலியாணம் பண்ணனுமா,

என்று மனதுக்குள் புலம்பினாள..

ராமைய்யா, வெற்றியை விலக்கி உள்ளே வந்தார்..

மனைவியின் தோளில் கை வைக்க,

கணவனை நிமிர்ந்து பார்த்து ஒதுங்கிக்கொண்டார்..

‘அவர் மீண்டும் மனைவியை நெருங்க,’

“என் கிட்ட வராதிங்க.. உங்களுக்கு இப்ப சந்தோஷமா இருக்குமே! தம்பி பேத்தியே! மருமகளா வந்ததுல” என்றார்..

அவர் மனைவிக்கு எந்த பதிலும் சொல்லாமல் நிற்க..

“தயவு செய்து என் கண் முன்னாடி நிக்காதீங்க, ரெண்டு பேரும்” என்று காளியம்மா  கத்தினார்..

மணியரசு , மகள்களோடு உள்ளே வந்தார்..

“வெற்றி.. ஊருக்குள்ள பேசிக்குறது உண்மையா” என்று மணியரசு கேட்க,

“ஆமா மாமா” என்று தலை குனிந்தான்..

“நிமிர்ந்து நில்லுடா” என்று அவனை நெருங்கினார் மணியரசு..

அவனும் தலையை நிமிர்த்த, ” நீ வீட்டுக்கு போ! நா இவங்களை பாத்துக்குறேன்னு” சொன்னதும்..

“மாமா” என்றான்..

“எல்லாருக்கும் எல்லா நேரத்திலையும் நல்லவனா இருக்க முடியாது மச்சான்” என்று தோளில் தட்டினான்..

“மாமா” என்று அணைத்துக்கொண்டான்..

அவன் தோளில் தட்டி , ” வரும்போது! பாண்டியை பார்த்தேன்” என்று அவன் காதில் முணுமுணுத்தான்..

மாமனை விட்டு விலகி நின்று பெற்றவர்களை காண,

ராமைய்யா மகனை பார்த்து ‘போ’ என்று சைகை செய்தார்..

காளியம்மா பார்வை யாரிடமும் இல்லை , நெஞ்சு முழுக்க பாரத்தோடு தரையை பார்த்தே  நின்றிருந்தார்..

வெற்றி மனமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பினான்..

                  ****

“என்னத்தா ஆச்சு ஏன் முகமெல்லாம் வீங்கி கிடக்கு” என்று அவரும் மாறி மாறி கேள்வி கேட்க,

அழுகையை மட்டும் பதிலாக தந்தாள்..

“ஏதுவது, சொல்லுத்தா வூட்டுக்கு ஒரு தேவகி போதும்.. நீ வந்த கோலம் எனக்கு அடி வயித்துல நெருப்பு வச்ச மாறி இருக்குத்தா” என்றார்..

பாட்டி மடியை விட்டு நிமிர்ந்தவள்.. “அவங்களுக்கு என்ன பாட்டி ஆச்சு” என்றாள்..

“என்ன திடீர்னு உன் ஆத்தாளை பற்றி கேக்குற”, என்று பேத்தி முகம் பார்த்தார்..

“என்னை விட்டு அவங்க போனதுலிருந்து.. நா நல்லா தான் அவங்க கூட இருந்திருக்கேன்.. அப்பறம் எப்படி அவங்களை வெறுக்க ஆரம்பிச்சேன்னு எனக்கே தெரியல பாட்டி, அதான் கேக்குறேன்” என்று முகம் பார்த்தாள்..

“நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு இருக்குறதுக்கு.. நான் தான் காரணம்த்தா” என்று பேத்தியின் கைகளை பிடித்துக்கொண்டார்..

“ஏன் பாட்டி அப்படி சொல்லுறீங்க” என்றாள்..

“இன்னைக்கு உனக்கு என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாமல் இருக்கலாம்.. ஆனா கணிப்பு இருக்குத்தா, உன்னை ஏதோ! இக்கட்டிலிருந்து தான் உன் மாமன் காப்பாத்தி கலியணமும் பண்ணியிருக்கான் அது மட்டும் நிசம்த்தா”என்று இடைவெளி விட்டு..

“அன்னைக்கு தேவகியை காப்பாத்த எந்த சாமியும் வரல மனிஷனும் வரலத்தா,

அந்த வலி என்னோடு போகட்டும்… ஆனா என் ஆத்தாளை வருத்தப்பட வைக்காதத்தா” என்று பேத்தியிடம் சத்தியம் கேட்டு கை நீட்டினார்..

“நீங்க எனக்கு என்ன நடந்ததுன்னு சொல்லு பாட்டி.. அப்பறம் நா சத்தியம் பண்ணலாம , வேணாவ சொல்லுறேன் ” என்றாள்..

அந்த பெரியமனிஷி கண்கள் கலங்க, தேவகிக்கு நடந்த அநியாயம் முழுவதும் சொல்லி முடித்தார்..

பாட்டி சொன்னதை கேட்டவளுக்கு, கதறினாள்

“ஏத்தா, அழுகாதத்தா அது எப்பவோ நடந்து முடிஞ்சுது.. இப்ப உங்காத்தா, நல்லா இருக்கா” என்று பேத்தியின் அழுகையை நிறுத்த பார்த்தார்..

அவளுக்கு இன்னும் அழுகையை நிறுத்த முடியாமல், கைகளை தரையில் அடித்துக்கொண்டு அழுதாள்,

மயிலம்மாவிற்கு , என்ன செய்வது என்று புரியாத நிலையில். பேத்தியை சமாதானம் செய்ய எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணானது..

இன்று ராஜன் தன்னை படித்திய, நிலையை விட தன்னை பெற்றவளின் வலி  எண்ணி இன்னும் மருகி போனாள்..

எத்தனை முறை தன்னைத்தேடி ஓடி வந்த அன்னையை, சின்னபாட்டியும் பெரியம்மாவின் பேச்சை கேட்டு விலக்கி வைத்தது இன்னும் வலிக்க செய்திருக்குமே என்று எண்ணி எண்ணி அழுதாள்..

மெல்ல எழுந்து போய் தண்ணீரை கொண்டு வந்து.. பேத்திக்கு சிறுக சிறுக பருகினார்..

தண்ணீர் உள்ளே போனதும் அவளுக்கு அழுகை சற்று மட்டுப்பட்டது..

தன் பாட்டியை அணைத்துக்கொண்டு,

“என்னால அவங்களை ஏத்துக்க முடியுமா தெரியல அப்பத்தா.. ஆனா அவங்களை அழ வைக்க மாட்டேன்” என்று சத்தியம் செய்தாள்…

“ஏன்த்தா, அதான் என் ஆத்தாளை பத்தி தெரிஞ்சும் விலகி நின்னு அவளை வதைக்க போற, அப்படித்தானே!” என்று பேத்தியின் தலையை வருடினார்..

“இல்லை பாட்டி , நா அவங்க வாழ்கையில இடை

ஞ்சலா இருக்கக் கூடாதுன்னு தானே பிரிச்சு வச்சிங்க.. அவங்களோட சேர முடியாட்டியும் தள்ளி நின்று பாக்குறேன்” என்றாள்..

பேத்தியின் தலையை வருடினார்..

தள்ளி நின்று பார்த்துக்கிறேன் என்றவளை தான் காலம் அவள் அன்னையுடனே சேர்த்து வைக்க காத்திருக்கு என்று யார் அவளிடம் சொல்வது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!