Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவே

சின்னஞ் சிறு பூவே 35.2

பூவே 35.2



Advertisement

      தெய்வானைக்கும் அங்கே நின்றவர்களை கண்டு கோவம் ஒரு பக்கம் அழுகை ஒரு பக்கம் என நின்றாள்…

“என்ன சொல்லுறாங்கண்ணா,” இடைநிலை காவலரை கேட்டான்,

Advertisement

அங்க வந்து இன்ஸ்பெக்டர்..

Advertisement

“அது வந்து சார் பொண்ணுக்கு பாதிப்பு அதிகம்… பையனுக்கு கால்ல மட்டும் தான் அடி” என்றார் மெல்லமாக,

Advertisement

ஆனா அவர் என்ன தான் மெல்லமாக சொன்னாலும்.. ஊசி கீழே விழுந்தாலும் சத்தம் கேட்டிருக்கும்.. நிசப்தமாக இருந்த இடத்தில் அவர் வார்த்தை அச்சு பிசகாமல் அனைவர் காதில் விழுந்தது…

“அய்யோ சார் என் புள்ளைங்களை காப்பாத்துங்க” என்று கதறினாள் தெய்வானை..

சிங்காரவேலன் , மனைவியை தாங்கிக்கொண்டு ” என் பசங்களுக்கு என்னாச்சு சார்” என்றான்…

“அது நாங்க சொல்ல முடியாது.. டாக்டர் தான் சொல்லனும்னு” இன்ஸ்பெக்டர் சொல்லி முடிக்க,

ஐ சி யூ கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தார் டாக்டர்…

“இப்படி எப்படி இருக்காங்க டாக்டர்” என்று அனைவரும் சூழ்ந்துக்கொண்டனர்..

“சாரி டாக்டர் அந்த பொண்ணோட நிலை ரொம்ப மோசமாதான் இருக்கு.. நாலு பேரும் அந்த பொண்ணை ரொம்ப சித்திரவதை பண்ணி இருக்காங்க.. அந்த பொண்ணால இனிமே ஒரு குழந்தைக்கு தாயாக வாய்ப்பு இல்லை” என்றதும்…

தலையிலே அடித்துக்கொண்டு அழுதாள் தெய்வானை…

தேவகிக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது.. ஆறுதலுக்கு கிட்டபோனாக்கூட , வார்த்தையாலே வதைப்பாங்களே என்று தள்ளி நின்றாள்…

“அம்மா , வா நம்ம வீட்டுக்கு போகலாம்.. எனக்கு பயமா இருக்கு” என்றாள் வேல்விழி

வேல்விழியை , முதல்முறை சிங்காரவேலனும் , தெய்வானை இருவரும் பார்த்தனர்..

அடுத்தடுத்து விஷயம் கேள்விப்பட்ட வெற்றி குடும்பத்திலிருந்து அனைவரும் வந்தனர்…

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து இருவரும் நேருக்கு நேர் சந்தித்த சிலநொடியில் ஆயிரம் ஜென்மம் கடந்து போனது அவனுக்கு..

அடுத்து அங்கே நின்றவர்கள் தலையில் மொத்தமகா தீ வைத்தது அன்றைய நாள் முடிவு…

“இப்ப உனக்கு சந்தோஷமா தேவகி” என்றார் ஆத்திரமாக, தெய்வானை..

“நா சந்தோஷப்பட இங்க என்ன நடந்திச்சு” என்றாள். மகளை கைக்குள் பிடித்துக்கொண்டு..

“உன் வயித்தெரிச்சல் தாண்டி என் பொண்ணுக்கு இந்த நிலை” என்றாள் அழுகையுடன் தெய்வானை..

“அக்கா கொஞ்ச அமைதியா இரு” என்றான் வெற்றி பெரியவளை பார்த்து..

“நா எதுக்குடா அமைதியா இருக்கணும்.. உனக்கு மாமியார மாறினா நா வாயை அடக்கணுமா” என்று தம்பியிடமும் சீறினாள் தெய்வானை…

“நீ எதுக்கு தேவையில்லாம பேசுற” என்றான் அவனும் அமைதியாக,

“அவ என்னடா தேவையில்லாம பேசுறா, நீ தான் தேவையான வங்களுக்கு மட்டும் பேசுற..” என்ற அன்னைக்கு அவன் பதில் சொல்லாமல்..

“முதல்ல அமைதியா இருங்க.. பசங்களுக்கு என்னாச்சுன்ற கவலையை விட, உங்களுக்கு கோவம் தான் பெருசா இருக்கு” என்றான் அனைவரையும் பார்த்து..

“எதுக்கு அமைதியா இருக்கணும் இவலால தான் என் பேத்திக்கு இந்த நிலமை.. சாமப் விட்டாளே பெரிய பத்தினி மாறி” என்று பல்லைக்கடித்தார் காளியம்மா..

“ஆமா பெரியம்மா நா பத்தினி தான் எங்க இல்லைன்னு சொல்லுங்க பாக்கலாம்.. என் வலியை நீங்க அனுபவிக்ணும்னு நா ஒரு நாளும் நெனைச்சதில்லை, நம்ம பண்ணுற நல்லது கெட்டது நம்ம புள்ளைங்களுக்கும் போகும்னு அப்பத்தா ஒவ்வொரு தடவையும் சொல்லி சொல்லி தான் வளத்தாங்க” என்னை என்று சொல்லும்போதே! குரல் உடைந்தது..

“அம்மா அழாதிங்க , பார்த்திப்பா வாங்க போகலாம்” என்றாள் பயத்தில்..

“நம்ம யாருக்குடி பாவம் பண்ணோம் இங்கிருந்து போக, செஞ்சதை சொல்லிக்காட்டக்கூடாது.

இவங்க எண்ணத்துக்கு சொல்லிக்காட்டலாம் தப்பில்லை” என்று மகளிடம் சொன்னவள் அவர்கள் பக்கம் திரும்பினாள்..

“இதோ! நிக்குறானே இவன் பண்ண பாவம் தான் இன்னைக்கு அந்த குழந்தைகளை படுக்கையில தள்ளியிருக்கு… அது மட்டுமா இவன் தான் போலிஸ்கு பணத்தை கொடுத்து அந்த பாடு படுத்தினது” என்றதும் அனைவரும் அதிர்ச்சியில் அவனை நிமிர்ந்து பார்த்தனர்..

“நீ பொய் சொல்லுற எம்புருஷன் அப்படி பணணிருக்க மாட்டாரு” என்றாள் தெய்வானை..

“இப்ப கூட உனக்கு புத்தி வரலயில்லை, எங்க என் கண்ணை பார்த்து உம்புருஷனை ‘இல்லைன்னு’ சொல்ல சொல்லு மாட்டான்.. அவன் பணம் கொடுத்ததை கண்ணால் கண்ட சாட்சி நானும் என் புருஷனும் இருக்கோம்.. இவன் எனக்கு ஆயிரம் கெட்டது பண்ணினதுல ஒரே ஒரு நல்லது பண்ணி இருக்கான்.. அவன் போலிஸ்ல சொன்னதால் தான் இன்னைக்கு என் பொண்ணு என்கிட்ட இருக்கா” என்றாள் நெஞ்சை நிமிர்த்தி..

அனைவரும் சிங்காரவேலனை நிமிர்ந்து பார்த்தனர்..

அவனோ திருட்டு முழி முழித்துக்கொண்டு நின்றான்..

“அது… அது” என்று தயங்கியதிலே , உண்மை தெரிந்து போனதா அனைவருக்கும்..

“பாவி பாவி உனக்கு என்னடா நாங்க பாவம் பண்ணோம்.. ஒரு பொண்ணை கட்டிக்கொடுத்ததுக்கு.. எங்க தலையில நெருப்பள்ளி கொட்டிட்டியே!” என்று அவரை நெருங்கினார் காளியம்மா…

“அவனுக்கு அந்த தைரியத்தை கொடுத்தது யாரு நீங்க தானே!” என்றாள் தேவகி..

வெற்றி அமைதியாக நின்றானே தவிர எதுவும் பேசவில்லை, ‘மணியரசுக்கு கண்ணை காட்டி ஒதுங்கி நின்றான்..

“பார்த்திப்பா என்னை இங்க இருந்து கூட்டிப்போறீங்களா.. எனக்கு மூச்சு முட்டுது” என்றாள் வேல்விழி..

“நீ வாம்மா.. அப்பா நா கூட்டி போறேன்” என்றவன். மனைவியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்..

போகும் அவர்கள் மீதுதான் வெற்றியின் பார்வை இருந்தது..

‘வேல்விழி பார்வை ஒரு நொடி கூட அவன் மீது படியவில்லை, அங்கிருந்து நகர்ந்தவரை..

காவலர்களும் அவர்கள் கடமையை செய்தனர். தெய்வானையின் மகனுக்கு உடைந்த கால் சரியாக இன்னும் ஒரு வருடம் ஆகும் என்றனர்.

 மருத்துவமனை வழித்தடம் முழுவதும் அழுகையும் அதிர்ச்சியும் மட்டுமே நிறைந்திருந்தது.”…

         ****

காலச்சக்கரம் சூழல அனைவரின் வாழ்க்கையில் சில ஏற்ற இறக்கங்களையும் பார்த்தது…

வேல்விழி அவள் படிப்பு வேலை என்று ஓட, இங்கு வெற்றி நடைபிணமாக நாட்களை கடத்தினான்…

நண்பர்களின் தொல்லையில் மட்டுமே தலைவர் எலக்ஷனுக்கு மனு தாக்கல் பண்ணது..

அதிலும் அவன் வெற்றி பெற்றதில்..

அவனை தவிர மற்றவர்கள் அனைவருக்கும் அது சந்தோஷத்தை கொடுத்தது..

தலைவர் பதவிக்கு வந்ததும்.. ஊருக்குள் அனைத்தையும் சரிசெய்த முயற்சி செய்ததில், படிக்கும் புள்ளைங்களுக்கு தன் சக்திக்கு உட்பட்டு அனைத்தையும் செய்தான்…

பகல் பொழுது வேலையில் கழித்தவன் இரவில் நரகத்தை அனுபவித்தான்..

வேல்விழி முதல்முறை விதைத்த நெல்மணிகள் அவன் அறையில் தொங்கிக்கொண்டிருந்தது…

அவள் இப்போது தான் விதை விதைத்தது போல் இருக்க..

காலம் தன் சக்கரத்தை வேகம்கொண்டு சுத்தி சென்றது..

உண்மையில் வேல்விழி செவிலியராக, வந்தது அவனுக்கு கஷ்டமாக தான் இருந்தது…

டாக்டர் சீட் கிடைச்சும் அதை வேணாம்னு சொல்லி நர்ஸிங் படிச்சவளை தூரத்தில் நின்று பார்த்திருக்கானே தவிர , அவளை நெருங்க நினைச்சது இல்லை…

கடந்த காலத்தின் சூழலில் இருந்தவன் எழுந்து கண்ணாடி முன் நின்றான்…

அப்போ இருந்த வெற்றிக்கும் இப்போ இருக்கும் வெற்றிக்கும் எத்தனை வித்தியாசம்…

கண்ணாடி பார்த்துக்கொண்டே தன் கன்னத்தை தடவியவனுக்கு சிரிப்பு தான் வந்தது…

“மருதாணி என்ன கோவம் வருது இவளுக்கு” என்று தனக்குள்ளே முணங்கினான்..

****

“அக்கா எனக்கு இந்த கணக்கு தெரியல” என்றான் ஆதவன்..

“எங்க காட்டு” என்று கை வேலையை விட்டு அவன் நோட்டை பார்த்து.. அந்த கணக்கு எப்படி போடனும்னு சொல்லிக்கொடுத்தாள்..

“நீ இருக்க இன்னொருத்தன் எங்க ஆளை காணோம்” என்று வீட்டை சுற்றி பார்த்தாள்..

“அவன் அப்பத்தா கூட கோவிலுக்கு போயிருக்கான் க்கா” என்றான்..

“சரி, இந்த கணக்கை இப்ப நீ போடு” என்று அவனுக்கு ஒரு கணக்கை போட்டுக்கொடுத்து.. மறுபடியும் தன் வேலையை பார்த்தாள்..

“பேசுடி” என்று பார்த்திபன் மனைவி காதை கடித்தான்..

“நீங்க பேசுங்களேன்.. தலையில் தூக்கி வச்சு கொஞ்சுவிங்க தானே!” நேரம் பார்த்து கணவனை கடித்தாள் அவளும்..

“என்னை திட்டனும்னா நீ அப்புறம் திட்டுடி..” என்று மனைவியை பார்த்து கண்ணடித்தான்.

“வெக்கம்கெட்ட மனிஷா என் பண்ணுறீங்க.. புள்ளைங்களை எதிர்ல வச்சிக்கிட்டு” என்று கணவனை முறைத்தாள்..

“எவன் போட்ட சட்டம்டி, பொண்டாட்டிய கொஞ்ச கூட நேரம் காலம் பாக்கணும்னு” என்றான் அவளை நெருங்கி விசம சிரிப்போடு,

“ஒழுங்கா ஓடிடுங்க இல்லை கரண்டியாலே மண்டையை ஒடைப்பேன்” என்று குழி கரண்டியை எடுத்தாள்..

“நீ ரொம்ப சூடா இருக்கு.. நா வேண்ணா பசங்களையும் கடைக்கு அனுப்பி வைக்கட்டா” என்று இடுப்பை கிள்ளினான்..

“ஆ” என்ற சத்தம் மனைவி கைக்குள்ளே மறைந்து போனது..

கையை உதறினான் மனைவின் கொலைவெறியில், “ஏண்டி சுடு வச்ச” என்று தண்ணீரில் கை விட்டான்..

“அமைதியா போய் பொண்ணுக்கிட்ட பேச வேண்டியதை பேசுங்க” என்று விரல் நீட்டினாள்..

எக்கி அவள் விரலை கடித்தவன்.. அவள் கன்னத்தில் முத்தமிட்டு வெளியே வந்தான்..

கணவனின் குறும்பில் அவளுக்கு புன்னகையை தந்தது..

“என்ன பண்ணுறாங்க.. இளவரசியும், இளவரசனும்” என்று கேட்டுக்கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்தான்..

“பார்த்தா தெரியலையா பார்த்திப்பா” என்றாள் வேல்விழி..

“இது தப்பு ஆதவா மறுபடியும் போடும் டேபிள்ஸ் தினமும் எனக்கு சொல்லி எழுதிகாட்டு” என்று வேல்விழி அவனுக்கு சொல்லிக்கொண்டிருந்தாள்..

“என்கிட்ட எதாவது சொல்லனுமாப்பா” என்று அவரை நிமிர்ந்து பார்த்தாள்..

“அது” என தயங்கி நிற்க,

” பார்த்திப்பா என்கிட்ட எப்பவும் தயங்கி நிற்க கூடாது.. சொல்லுங்கப்பா உங்க பேச்சுக்கு மறுபேச்சு பேசமாட்டேன்” என்றாள்..

“உனக்கு ஒரு வரன் வந்திருக்கும்மா..” என்றதும்..

திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்..

“அப்படி பாக்காதம்மா, எனக்கும் என் பொண்ணை மணக்கோலம் பாக்க ஆசையா இருக்கும்மா” என்று பாசத்துடன் சொன்னதும்..

அவளுக்கு தான் மூச்சு இழுத்து விட வேண்டிய நிலை,

“உன் விருப்பத்துக்கு எதிரா எதுவும் நடக்காதும்மா.. ஆனா மாட்டேன்னு சொல்லாதம்மா” என்றார் தயவாக,

“பார்த்திப்பா”..

“சொல்லும்மா” என்று அவள் முகத்தை ஆவலுடன் பார்த்தான்..

“இன்னும் கொஞ்சம் நாள் டைம் தாங்காப்பா” என்றாள் உள்ளே போனக்குரலில்..

அவள் கேள்விக்கு கணவன் பதில் சொல்லும் முன்னே “அதெல்லாம் முடியாது… இன்னைக்கே சொல்லனும் அவள் முடிவு என்னென்னு” என்றாள் தேவகி…

தேவகி சொன்னதை கேட்டு வேல்விழி சில நொடிகள் அமைதியாக இருந்தாள்..

“தேவகி…” என்று பார்த்திபன் மெதுவாக அழைத்தான்.

“என்னங்க நீங்க? நல்ல வரன் வந்திருக்கு. இவளும் ஒரு முடிவு சொல்லணும் இல்ல?” என்றாள் தேவகி.

வேல்விழி மெதுவாக மூச்சை இழுத்தாள்.

“பார்த்திப்பா…” என்றாள்.

“சொல்லும்மா.”

“இப்ப எதுவும் கேட்காதீங்கப்பா… கொஞ்சம் நாள் போகட்டும்…” என்றாள்.

“இன்னும் எவ்வளவு நாள் மா?” என்றார் கவலையுடன்.

அந்த கேள்வியில் அவள் கண்கள் ஒரு நொடி கலங்கியது. வெற்றியின் நினைவு மனசை தட்டிவிட்டு சென்றது.

அவள் உடனே முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“தெரியலப்பா…” என்றாள் மெதுவாக.

அவள் குரலில் இருந்த சோர்வை கேட்ட பார்த்திபன் அமைதியாகிவிட்டான்..

தேவகி ஏதோ சொல்ல வர,

“தேவகி, அவளை இப்ப எதுவும் சொல்ல வைக்காத” என்று தடுத்தான்..

வேல்விழி எதுவும் பேசாமல் எழுந்து உள்ளே சென்றாள்..

“என்னங்க நீங்க?” என்று அவள் சலித்துக்கொண்டாள்..

“உன் தம்பிகிட்ட பேசு கலியாணம் பற்றி” என்ற வார்த்தையை கேட்டு நெஞ்சில் கை வைத்தார்..

“என்னங்க” என்று சிறு அதிர்வுடன் தான் கேட்ட மனைவியின் தலையை அசைத்து..

“நம்ம பொண்ணால, வெற்றியை கடந்து வரமுடியாது.

உன் தம்பியும் தான்.. பேசி பாக்கலாம்.. மத்ததை கடவுள் மேல் போட்டு வேலையை பாக்கலாம்” என்றான்..

இங்கு அறைக்குள் வந்த வேல்விழிக்கு கண்ணீர் நிற்கும் வழியை தான் காணோம்…

“ஏன் மாமா அப்படி பண்ண, என்னால முடியல மாமா! நீ கண் முன்னாடி இருந்து விலகி போற வலி உயிர் போகுது மாமா” என்று காற்றிடம் தூது விட்டாள்..

அவளிடமிருந்து காற்று அவனுக்கு தூது சொல்லி சென்றதா , தெரியவில்லை சாதாரண இருமலாக இருந்தது நேரம் செல்ல செல்ல மூச்சு திணறும் நிலையில் நின்றான் வெற்றி..

ராமைய்யா , மகன் முதுகை தடவி கொடுத்தார்..

காளியம்மா தண்ணீரோடு மகன் அருகே வந்தார்..

வாயாருகே கொண்டு வந்த தண்ணீர் மொத்தமும் பூமிக்கு அபிஷேகமானது..

இப்படியொரு செயலை நிச்சயம் காளியம்மா எதிர்பார்க்கவே இல்லை,

இதுவரை இல்லாத ஏதோ ஒன்று அவருக்குள் உடைந்து போனது…

கண்கள் கலங்க மகனை பார்த்தார்..

இருமல் சற்று மட்டுபடவும்…

அன்

னை பக்கம் திரும்பாமலே ” ஏற்கனவே செத்து போனவனுக்கு உங்க கையால் கொடுக்குற தண்ணீ கூட எனக்கு விஷம் தான்..” என்று அங்கிருந்து நகர்ந்து சென்றான் வெற்றி..

மகனின் வார்த்தை கேட்டு , உள்ளுக்குள் ஏதோ உடைந்தது.. கண் கலங்க மகன் போன திசையை பார்த்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!