ஆச்சா ஒருமாதம் கடந்திருந்தது வேல்விழிக்கு இன்னும் அந்த நிகழ்வில் இருந்து வெளி வரமுடியாமல், அந்த விட்டத்தையே பார்த்திருந்தாள்..
அவளை நெருங்கிய சிறியவர்கள்.. “அக்கா” என்று அவள் முகத்தை திருப்பி தங்களை பார்க்க வைத்தனர்..
Advertisement
Advertisement
அவளின் பார்வை சில நொடிகள் அந்த குழந்தைகள் மீது தான் இருந்தது…
“சாப்புடுக்கா” என்று ஒருவன் தட்டுடன் நிற்க, இன்னோருவன் தண்ணீ கிளாஸ் வைத்திருந்தான்..
Advertisement
“பசியில்லைடா , நீங்க சாப்பிடுங்க” என்று சொல்லவே கண்கள் கலங்கியது அவளுக்கு..
அங்கே கோவத்துடன் வந்த தேவகி, ” இன்னும் எத்தனை காலத்துக்குடி இப்படி கண்ணீரோடு நிற்க போற , காலம் முழுக்க கண்ணீரோடு இருக்கமுடியாதுடி ” என்று கோவமாக பேச்சை தொடங்கியவருக்கு, முடிவில் குரல் உடைந்து தான் வந்தது..
“தேவகி.. ஏன் புள்ளைகிட்ட அப்படி பேசுற.. எதுக்கும் நேரம் வேணும். புள்ளையை தனியா விடுங்க” என்றான் பார்த்திபன்..
“ஆமாடா, அவ உன் பொண்ணு பாரு” என்று ஏதோ பேச ஆரம்பித்த அம்மாவை பார்வையாலே முறைத்தான் பார்த்திபன்..
“ம்கும்” என கொணட்டி, ” உனக்கு என்னடி ஒரு வயசானவ பசியில் கிடப்பான்னு யாருக்கும் எண்ணமில்லை, குமரியை கவனிக்க கூட்டமா நிக்குறாங்க” என்று சத்தமாக முணுமுணுத்தார்…
“ஏய் கெழவி இப்பதானே ஒரு தட்டு சோறு தின்ன.. மறுபடியும் சோறு கேக்குற நீ” என்றான் இரட்டையில் ஒருத்தன்..
“உன் ஆத்தா கொடுத்த ஒரு கிண்ண சோறு எந்த மூளைக்கு ஆவுறது.. எனக்கு சோறு இருக்கா, இல்லையா பசங்களை பேசவிட்டு வேடிக்கை பாக்குறீங்க” என்றார் மருமகளை முறைத்து..
“அவனுங்க அப்பத்தா உரிமையில் பேசுறாங்க அத்தை நீங்க வாங்க” என்று அவரை அங்கிருந்து அழைத்துச்சென்றார்.
“நீங்களும் அம்மாகூட போங்கடா, இதுதான் கடைசி இனி இப்படி அப்பத்தாவை பேச கூடாது” என்று இருவரிடமும் சொன்னான் பார்த்திபன்..
“சாரிப்பா” என்றனர் இருவரும் சோகமாக,
“போங்க” என்று அனுப்பி வைத்தான்..
இதுவரை நடந்ததை அனைத்தையும் பார்த்தாலே தவிர வாய் திறக்கவில்லை,
அவள் பக்கம் பார்வையை வைத்தவன்..
“உனக்கு என் மேல கோவமா வேல்விழி” என்றான்..
“நா எதுக்கு உங்கமேல கோவப்படனும்… உங்கமேல எனக்கு மதிப்பு தான் இருக்கு.. அவங்களை கலியாணம் பண்ணதுல” என்றாள்..
“அவ உனக்கு அம்மாடா” என்று அவளை நிமிர்ந்து பார்த்தான்..
“அது சட்டுனு வரலை” என்றாள் பாவமாக,
“இப்ப வந்தா பரவாயில்லை, ஆனா போகப்போக சரி பண்ண முயற்சி பண்ணுடா” என்று அவள் தலையை தடவி கொடுத்து நகர்ந்தான்.
போகும் அவரை எப்படி தடுப்பது என்று கைகளை பிசைந்தாள்..
திரும்பி பார்த்தவன் “என்கிட்ட பேசனுமாடா” என்றான்..
“ஆமாம்” என்று தலையை தான் மேலும் கீழும் ஆட்டினாள்..
“என்னடா”
“அது நா பள்ளிக்கொடம் போகனும்” என்றாள் பதட்டமாக,
சின்னதாக சிரித்தவன் ” போகலாம் ரெடியாயிரு இன்னைக்கு போய் பழைய பள்ளிக்கூடத்துல டீசி வாங்கிட்டு வரலாம்” என்றான்..
சரியெனும் விதமாக தலையாட்டினாலே தவிர வாய் திறக்கவில்லை,
அடுத் ஒரு மணிநேரத்தில் அவர்கள் பழைய ஸ்கூலுக்கு வந்திருந்தனர்..
மயிலம்மா பேத்தி வருவதை தெரிந்து பள்ளிகூட வாசலிலே காத்துக்கிடநதார் மகனுடன்..
வண்டியிலிருந்து இறங்கியவள் பார்வை , பாட்டி, தாத்தாவை தொடர்ந்து நாலாபக்கமும் சுற்றி வந்தது.. வெற்றி அவள் விழிகளில் விழவே இல்லை..
“தாயி” என்று பேத்தியை அணைத்துக்கொண்டவருக்கு அழுகை மட்டும் தான் வந்தது..
ராமைய்யாவும் பேத்தியை பார்த்திருந்தார்..
ஒருவழியாக கண்ணீர் காட்சி முடித்து.. பேத்தியின் நலம் விசாரித்து..
பள்ளிக்கூடத்தில் டீசியையும் வாங்கிக்கொண்டு வெளியே வர , ‘ தன் முன்னே யாரோ! நிற்பதை கண்டு நிமிர்ந்து பார்த்தது தான் தாமதம்’ வேல்விழிக்கு இதயமே அறுத்ததுபோல் கத்தி கதறினாள்..
“ஏய் புள்ளை ஏண்டி அழுகுற” என்ற முனிஸ்வரியை,
அவள் இதயமே நிற்காத குறைதான்.. கையிலிருந்த சான்றிதழ் கீழே விழ, அதிர்வுடன் அவள் முகத்தில் விரல் வைத்து பார்த்தால்..
இடது கன்னம் அதன் பழைய தன்மையை இழந்து கொடு விழுந்திருந்தது…
“ஈஸ்வரினு” சொல்லிக்கொண்டே அவள் மீது மயங்கி விழுந்தாள்..
சிறியவளால் எத்தனை அதிர்ச்சியை தான் தாங்க முடியும் அவள் வயதுக்கு மீறிய அதிர்ச்சியும் காலையிலிருந்து சாப்பிடாததும் சேர்ந்து அவளை மயக்கத்திற்கு அழைத்துச்சென்றது…
அனைவரும் பதறி , அவள் முகத்தில் தண்ணீ தெளிக்க பழையை நினைவுக்கு வராமல் இப்படியே இருந்திடக்கூடாதா என்று அவள் மனம் எண்ணியது..
மூடிய விழிகளின் இருட்டை விட வெளிச்சம் தரும் பகல் அவளுக்கு நிறைய அதிர்ச்சியை தர காத்திருந்தது..
அவளால் விழிகளை மூடிக்கொண்டு இருக்கமுடியவில்லை, உறவுகளின் சத்தம் தாண்டி வெற்றியின் குரல் தீனமாய் அவள் செவிக்குள் நுழைந்தது..
மெல்ல இமைகளை திறக்க, அவள் எதிர்ப்பார்த்தவனை தவிர மற்ற அனைவரும் இருந்தனர்..
“தண்ணீயை குடிடி” என்று அவள் வாயில் தண்ணீர் பாட்டிலை வைத்தாள்..
சிறு மிடறு தான் வயிற்றுக்குள் போனது.. ஈஸ்வரியை அணைத்துக்கொண்டு அவள் கதறி சத்தம் அந்த பள்ளிக்கூட வளாகமே எதிரேலித்தது…
“போதும்டி அழுதது” என செல்லமாக மிரட்டினாள் ஈஸ்வரி..
“என்னால் முடியலடி, நீ எப்படிடி தாங்கிட்டு இருக்க… அன்னைக்கு என்னை விட்டு நீ போயிருந்தா, உனக்கு இந்த நிலை வந்திருக்காது இல்லை” என்றாள் அழுகையோடு,
“அப்படி நிச்சயமா சொல்லமுடியாதுடி… எனக்கு இது நடக்கணும்னு எழுதி இருந்தா எப்பவேணும்னாலும் நடந்திருக்கும்.. நீ அழுகையை நிறுத்திட்டு ஒழுங்கா இந்த சோடாவை குடி” என்று செல்லமாக மிரட்டினாள்..
அவளே அந்த சோடாவை குடிக்கவும் செய்தாள்..
“ஏத்தா எம்புட்டு பயம் காட்டிட்ட நீ” என்று பேத்தியின் முகம் தடவி கேட்டார் மயிலம்மா..
பாட்டியை திரும்பி பார்த்தவள்.. ” ஏன் பாட்டி நா பொறந்தப்பவே கள்ளிபாலை ஊத்தி சாகடிச்சிருந்தா , என்னால இவ்ளோ பேருக்கு தொல்லை இருந்திருக்காதே!” என்றாள் அழுகை இல்லை ஒருவிதமான விரக்தியில் தான் சொன்னாள்…
இவள் இங்கு சொன்ன வார்த்தையை கேட்டவன். கார முள்ளை மொத்தமாக தன் கைகளில் உருவி இருந்தான்..
ஏற்கனவே கன்னி போன கைகள் இப்போது இரத்தம் வழிந்த நிலையில் இருந்தது…
“எல்லாரையும் நெனைச்சு தான் பாட்டி சொன்னேன்” என்று கண்களை துடைத்துக்கொண்டு எழுந்து நின்றவள்..
முனிஸ்வரியை அனைத்துக்கொண்டு, ” நா சின்னதா புண்ணியமும் பண்ணி இருக்கேன்டி, நீ எனக்கு கிடைச்சதுல… என்னை மன்னிச்சிடுடி” என்று விட்ட அழுகை மீண்டும் தொடர்ந்தது அவளுக்கு…
“வேலு தொட்டதுக்கெல்லாம் அழுகாதடி, எதுவும் நம்ம கையில இல்லைடி..
டீச்சர் சொன்ன மாதிரி படிப்பு எப்படியாபட்ட கடந்த காலத்தையும் மாத்தும்டி, அது நம்ம கையில இருக்குத்தானே” என்றாள் முனிஸ்வரி..
“ம்” என்றவள் மனமே இல்லாமல் தான் அங்கிருந்து கிளம்பினாள்…
வெற்றியை தேடி வந்த மாறன் கண்டதோ! இரத்தம் வழிய நின்றவனை தான்…
“ஏண்டா இப்படி பண்ணுற நீ” என்றவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்தான்…
*****
நாட்கள் நகர்ந்தாலும் வேல்விழி , வெற்றி வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தான் போனது…
வேல்விழி இப்போது பத்தாவது கடைசி பரிட்சை எழுதிமுடித்து அம்சவள்ளியுடன் சைக்கிளில் வந்துக்கொண்டிருந்தனர்..
“வேலு +1ல என்ன குருப்டி எடுக்க போற” என்றபடி தன் சைக்கிளை ஒரு மிதி மிதித்தாள்..
“மொதல்ல ரிசல்ட் வரட்டும்டி அப்புறம் பாக்கலாம்னு” சொல்லி அந்த ஒத்தயடி பாதையில் சைக்கிளை திருப்பியவர்கள் அப்படியே பிரேக் போட்டு நின்றது..
“வேலு எனக்கு பயமா இருக்குடி” என்று பதறினாள் அம்சவள்ளி..
“எருமை வாடி’ என்று தண்ணீ பாட்டிலை தூக்கிக்கொண்டு முன்னே ஓடினாள்..
“இவ பொதுச்சேவைக்கு ஒரு அளவு இல்லையா,” என்று மனதுக்குள்ளே புலம்பிக்கொண்டு பயத்துடனே அவளை பின்பற்றினாள்..
இரத்த வெள்ளத்தில் ஒரு ஆடவன் மயங்கி கிடந்தான்.. அவன் கால்கள் இருசக்கர வாகனத்தின் அடியில் மாட்டிக்கொண்டிருந்தது..
வேல்விழி தண்ணீரை அவன் முகத்தில் தெளிக்க, மெல்ல விழி திறந்தவன் இருக்கும் நிலை உணர்ந்து..
“யாதுஉஉஉஉ” என்று கத்தினான்..
“அண்ணா கொஞ்சம் பொறுமையா தண்ணீ குடிங்க” என்று அவனுக்கு தண்ணீரை கொடுக்க,
அதை வேகமாக குடித்தவர்..
“என் தங்கச்சிம்மா , யாரோ வந்து வழி மறைச்சி அவளை இழுத்துட்டு போனாங்க அவளுக்கு என்னாச்சின்னு தெரியல” எனக் சொல்லிக்கொண்டே வண்டிக்கு அடியிலிருந்து காலை எடுக்க முயற்சி செய்தான்..
அதுவரை பிரம்மையில் இருந்த அம்மசவள்ளியும் ஓடி வந்து.. அவனுக்கு உதவி செய்ய , வேல்விழியும் ஒருபக்கம் அவன் காலை நகர்த்தி வெளியே எடுத்தாள்..
“அண்ணா” என்று ஒரு பெண்ணின் அலறல் சத்தம் அவர்களை ஒரு நிமிடம் கூட யோசிக்க விடாமல் ஓட வைத்தது..
ஆடவனோ! இரத்தம் வழிய நடக்க பெரும் முயற்சி செய்தான்.. வலி உயிர் போகும் நிலையை கொடுத்தாலும்.. தங்கையை எண்ணி ஓடினான்..
வேல்விழி மூச்சு வாங்க ஓடி வந்தவள் கண்டதோ! இருவர் அந்த பெண்ணின் கைகளை பற்றியிருக்கு, ஒருவன் அவள் மீதிருந்து எழுந்தான் தன் தேவையை முடித்து.. அடுத்தவன் அவள் மேல் சரிந்ததுதான்..
வேல்விழிக்கு எங்கிருந்து அவ்வளவு வேகம் வந்ததோ தெரியவில்லை, பத்தரகாளியின் ரூபம் கொண்டவள் போல் கத்திக்கொண்டு சுற்றி முற்றி தேடினாள்… அருகில் முள் மரங்கள் வெட்டி போட்டிருக்க, அதிலிருந்து ஒரு கட்டையை உருவி எடுத்தாள்..
அவள் அக்ரோஷம் அதுவும் அவர்களை பயம் படுத்தவில்லை, ஆசையை தீர்க்க இன்னொருத்தி கிடைத்ததாக எண்ணி தான் இருவர் அவளை நெருங்கினர்..
அவர்களும் அதே பதிலை சொல்ல, என்ன செய்வது என்று புரியாமல் நகர்ந்தாள்..
அது ஒரு தனியார் மருத்துவமனை.. அவசரத்திற்கு அதுதான் அவர்களுக்கு பக்கமாக இருந்தது..
காலில் அடிப்பட்டவனுக்கு.. கட்டு போட்டிருந்தனர்..
அவனோ மயக்கம் பாதி நினைவு மீதியாக இருந்தான்..
“உலறலாக யாழி யாழி” என்றான்..
“சார் அவங்களுக்கு ட்ரிட்மெண்ட் போயிட்டிருக்கு” என்ற செவிலியர் அவனின் குளுகோஸ் பாட்டிலை மாத்திச்சென்றார்..
நகர பார்த்தவரின் கை பிடித்தான்..
அந்த பெண்ணும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்..
அவன் சட்டை பையிலிருந்து ஒரு கார்ட் எடுத்துக்கொடுத்து.. ” இது தான் எங்கப்பா நம்பர் அவருக்கு நாங்க இங்க இருக்குறதை சொல்லிடுங்க சிஸ்டர்” என்று மயங்கினான்..
அந்த செவிலியரும் ஆஃபிஸ் அறையிலிருந்து போன் செய்து விஷயத்தை சொன்னார்..
அடுத்து அறைமணிநேரத்தில் தேவகி , பார்த்திபனுடன் உள்ளே வந்தவள் கண்டது பயத்துடன் இருந்த மகளைதான்..
“வேலு” என்று ஓடி வந்தார்..
சத்தம் கேட்டு திரும்பியவள் “ம்மாஆ” என்று கத்திக்கொண்டே, அன்னையின் கைகளில் அடைக்கலம் ஆனால்..
சற்று நேரத்திற்கு முன்பு இருந்த வீரம் அவளை விட்டு எங்கே போனது என்று தெரியாத நிலை தான்..
மனம் முழுக்க இதே வலியை தானே அன்று அன்னையும் அனுபவித்தது என்று எண்ணி எண்ணி உள்ளுக்குள் உடைந்து போனாள்.
மகள் தன்னை முதல்முறை ‘அம்மா’ என்ற வார்த்தை கூட அவளுக்கு சந்தோஷத்தை தரவில்லை பயத்தில் துடிக்கும் மகளை எப்படி சமாதானம் செய்ய என்ற எண்ணம் தான்..
மகளின் சோர்ந்த முகம் கண்டு , பக்கத்தில் இருந்த கடைக்கு போய் தண்ணீர் பாட்டிலை வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்தான்..