Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவே

சின்னஞ் சிறு பூவே 36

பூவே 36

         ” ம்மா களையெடுக்க ஆளுக்கு சொன்னியா, இல்லையா? நம்ம மட்டும் தான் வயல்ல இருக்கோம்” என சரசு சுற்றிப்பார்த்துக்கொண்டே கேட்க,

மகளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் , அமைதியாக நின்றார்..

“ம்மா நா கேட்டுட்டே இருக்கேன்.. நீ என்ன அமைதியா இருக்க,” என்று அன்னையின் முகத்தை நிமிர்த்தினாள்..



Advertisement

முகமே வீங்கி இருந்ததை , கண்டு ” என்னம்மாச்சு.. தம்பி எதுன்னா சண்டை போட்டானா” என்றதும்.

“அவன் சட்டை போட்டிருந்தாக்கூட, சந்தோஷமா இருந்திருக்கும்டி.. ஆனா இராத்திரி என்ன வார்த்தை சொல்லிட்டான் தெரியுமாடி” என்று ஏங்கினார் அழுகையை அடக்கியதில்.

“அழாம சொல்லும்மா.. எனக்கு படபடன்னு வருதுன்னு” சொல்லி தோளில் கிடந்த துண்டில் முகம் துடைத்தாள்.

Advertisement

‘ இராத்திரி வெற்றி சொன்ன வார்த்தையை சொல்லிமுடிக்கும்போது.. அப்படியொரு அழுகை அழுதார் காளியம்மா..

Advertisement

“ம்மா அழாதம்மா.. அவன் ஏதோ கோவத்துல அப்படி சொல்லி இருப்பான்” என்று அன்னையை சமாதானம் செய்தாள் சரசு..

“முடியலடி, அன்னைக்கு நீ சொன்னியே! உன்மகன்கிட்ட எதை எழந்து இருக்குன்னு.. இப்ப சொல்லுறேன்டி நா என் மகனையே எழந்துட்டேன்டி” என்று தலையிலே அடித்துக்கொண்டார்..

“அம்மா” என்று சமாதானம் செய்ய பார்த்தவளுக்கும். அழுகை தான் வந்தது..

Advertisement

“ம்மா, அழுகையை நிறுத்து.. உன்புள்ளை இன்னும் உன்கிட்டதான் இருக்கான்.. என்ன கோவமா இருக்கான் அதை சரி பண்ணிடலாம்மா” என்று தண்ணீரை புகட்டினாள்..

புடவை முழுவதும் நினைத்து பாதி நீர் மட்டுமே அவர் வாயிற்க்குள் சென்றது..

மகள் சொன்னதில் சிறு தெம்பு கிடைக்க.. கண்கள் மின்ன “நெசத்ததான் சொல்லுறீயாடி.. என் புள்ளை என்கிட்ட பேசுவானா என் கையால் ஒரு வார் சோறு சாப்பிடுவானாடி” என்று எதிர்ப்பார்ப்போடு கேட்டார்..

“நீ சொன்னது எல்லாம் நடக்குணும்னா.. அவன் பொண்டாட்டி அவனுக்கு திரும்ப கிடைக்கணும்” என்றாள் அன்னையை நேராக பார்த்து.

“அவளா” என்று வாயை பிளந்தார்…

“ம்மா, நீ அவளான்னு இழுத்து அவ உனக்கு ஆகாதவளா தான் தெரிவா.. இதுவே உன் மகனோட சந்தோஷம் அவக்கிட்ட இருக்குன்னு நெனைம்மா.

 அதுமட்டுமில்லை , உன் பையன் வம்சமே அவகிட்ட தான் இருக்கு.. நீ எந்தளவுக்கு மொரண்டு புடிச்சி தள்ளி போறீயோ! அந்தளவு உன் பையன் உனக்கில்லை, இப்பவே அவனுக்கு 32 முடியப்போகுது” என்றாள் சரசு.

‘ மகள் சொன்னது அணைத்தும் அவர் மனதில் ஊர்வலம் போனாலும்.. ‘தேவகியோட பொண்ணா’ என்றதிலே அவர் நினைவு நின்று போனது..

“இங்க பாரும்மா.. நம்மளை விட அவ ஆயிரம் மடங்கு நல்லவ, நீ இப்படியே மொகத்தை சுழிச்சு வச்சிக்கோ! இன்னும் ஆறு வருஷம் போனா உன் பையன் தலை எல்லாம் நறைச்சு நிக்கனும்.. அவளுக்கு இப்பவே மாப்பிள்ளை பாக்குறதா கேள்விப்பட்டேன் அப்புறம் நா சொல்ல ஒன்னுமில்லை” கைகளை காட்டினாள் சரசு..

“அது எப்படி அவளுக்கு மாப்பிள்ளை பாப்பாங்க.. என் பையன் தனி மரமா நிக்கும் போது” என்று எழுந்து நின்றார்..

“உன் பையனுக்கு கலியாணம் பண்ணதை தானே! ரெண்டு பேரும் சேர்ந்து அத்துவிட்டோம்..” என்றாள் இடுப்பில் கை வைத்து..

“நீ என்னடி மாத்தி மாத்தி பேசுற எனக்கு தலையே சுத்துது” என்று மறுபடியும் கீழே அமர்ந்தார்..

” நா உண்மையை சொல்லுறேன்ம்மா.. நீயும் இந்த ஏழு வருஷத்துல எத்தனையே குட்டிக்கரணம் போட்டு பார்த்த , ஒரு பொண்ணையாவது அவனை பாக்க கூட்டிட்டு போக முடிஞ்சுதா உன்னால” என்றாள் அன்னை அருகே அமர்ந்து..

“இல்லை” என்று தலையாட்டினார்..

” எனக்கு என் தம்பி வேணும்னு.. நா எப்பவோ புரிஞ்சிக்கிடடேன்..

உனக்கு உன் மகன் வேணும்னா சீக்கிரம் நல்ல முடிவா எடுக்குற வழியை பாரு” என்றாள்.

எத்தனை நேரம் யோசிச்சாலும் அவருக்கு தெளிவானா முடிவு மட்டும் கிடைக்கவில்லை,

” நீ என்னவோ பண்ணு மானம் காக்க இருட்டுது வா வீட்டுக்கு போகலாம்” என்றதும் இருவரும் கிளம்பினர்..

விழுந்ததில் கால் இன்னும் சரியாகமல் , மகளின் கை பிடித்து நடந்தார்…

அவர்கள் போனதை மறைந்திருந்து பார்த்த பாண்டி, இவர்கள் பேச்சு வழக்கு மொத்தமும் வெற்றிக்கு சொல்லி முடித்தான்..

அந்தப்பக்கம் என்ன சொன்னானோ ‘ சரியென்று’ போனை வைத்தான்..

“ஏட்டி கோடி உம்பேரனுக்கு பொண்ணு என்னாச்சு… கலியாண சேதி ஒன்னும் காணல” என்று இடி கல்லில் கொட்டை பாக்கை குடித்துக்கொண்டே கேட்டார் மயிலம்மா..

“அதை ஏண்டி கேக்குற, எம் மகனுக்கு அக்கா பொண்ணை மராமகளா கொண்டு வர ஆசை , பேரனுக்கு கூட வேலை பாக்குற புள்ளையை புடிச்சிருக்குனு சொல்லிப்புட்டான்.. எம் மகனுக்கு கொள்ள கோவம் பேரன் மேல் , இவன் கட்டுனா அந்த புள்ளையைதான் கட்டுவேன்னு விடாப்புடியா நின்னுட்டானே! பேரனுக்கு 28வயசு ஆச்சேன்னு இப்பதான் மகன் இறங்கி சம்மதம் சொன்னான்..

நாள் பாக்குறாங்க கலிய்ணத்துக்கு” என்று சொல்லிக்கொண்டே வாயிற்குள் வெத்தலையை நுழைத்தார்..

“அதை சொல்லு பரவாயில்லடி உன் மகன் , பையன் தாத்தா ஆகும் போது சொல்லாம இப்பவே சொல்லி புள்ளையை வாழவச்சிட்டான்” என்றார் மயிலம்மாவும்..

“அமாடி மயிலா, நா கூட மாதல்ல நம்மல என் பையன்கிட்ட கேட்டதுக்கு என்ன சொன்னான் தெரியுமா டி,” என்று கன்னத்தில் கை வைத்தார்..

“உம்மவன் சொன்னது எனக்கு எப்படிடி தெரியும்” என்றார் மயிலம்மாவும் நசுக்கிய பாக்கை வாயில் வைத்து..

“பொண்ணை பத்தி நல்லா விசாரச்சானா , தங்கமான பொண்ணுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான்மா சம்மதம் சொன்னேன்.. தப்பான ஒருத்தியை என் மகன் வாழ்க்கையில் வரக்கூடாதும்மா.. அவனுக்கு புடிச்சப்பொண்ணு நல்ல பொண்ணா இருக்கும்போது! வீம்புக்கு நின்னா நா என்ன அப்பா ம்மா.. இனிமே நம்ம சாக் தான் போறோம் வாழப்போறதில்லை, சாகப்போற நம்ம எதுக்கு வாழவேண்டியவங்களை பிரிக்கணும்னு சொன்னான்டி” என்ற வார்த்தை அங்கே வந்த காளியம்மா தலையில் ஓங்கி அடித்தது போல் நடு மண்டையில் இறங்கியது..

           *****

மழை ‘சோ’ எனக்கொட்டிக்கொண்டிருந்தது..

என்றும் இல்லாமல் இன்னைக்கு ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகாமல் வீட்டுலயே விட்டு வந்தது எவ்ளோ பெரிய மடத்தனம் என்று தன்னையே திட்டிக்கொண்டாள்..

வெற்றியும் மழையிலே வந்தவன் பார்வையில். பஸ் ஸ்டாபில் தனியாக நின்றவளை கண்டு கடந்து போக மனமில்லாமல் வண்டியை நிறுத்தி அவள் அருகே வந்தான்..

“எதுக்கு இங்க நிக்குற, உன் வண்டி என்னாச்சு” என்றான்

“இன்னைக்கு வண்டி எடுத்துட்டு வரல , மழை வந்ததால கடைசி பஸ்ஸிம் போயிடிச்சு.. இனி வர வண்டி செஞ்சி பக்கம் தான் போகும். வேற எதாவது வண்டி வருதான்னு பாக்குறேன்” என்றாள் அவனை பார்க்காமல்.

மழை விட்டு சிறு துறலாய் இருந்தது..

“சரி வா கூட்டிட்டு போறேன்” என்றான்..

அவன் சொன்னதை கேட்டு வெடுக்கென திரும்பி பார்த்தவள் ” உங்களை நம்பி எப்படி வர்றது பாதியிலே விட்டா, நா தானே நட்டாத்துல நிக்கணும்” என்றாள் காட்டமாக,

அவளை நேராக பார்த்து.. “என்னை நம்பி வந்தவங்களை கரையேற்றி தான் பழக்கம்.. ஒரு தடவை தவறுனா அதுவே தொடராது..” என்றான் அவனும் அவளை நேராக பார்த்து..

பட்டாஸ் வெடித்தது போல் இடி சத்தம் “அர்ஜூனா” என்று கண்களை மூடிக்கொண்டாள்..

“வானம் மறுபடியும் இருட்டு கட்டுது.. இந்த தடவை நம்பி வா கை விடமாட்டேன்.. அது வழிப்பாதையா இருந்தாலும் சரி வாழ்க்கைப்பாதையா இருந்தாலும் எனக்கு சம்மதம்” என்றான் அவள் பக்கம் கைகளை நீட்டி,

கண்கள் கலங்கியது அவளுக்கு . “இப்போதைக்கு எனக்கு வழிப்பாதைக்கு வாங்க.. வாழ்க்கைப்பாதைக்கு யாரோட வரனுமோ! அவங்களை கூட்டி வந்து கேளுங்க” என்று வண்டியருகே போய் நின்றாள்..

வெளியே வானம் இருட்டி நிற்க அவன் மனதுக்குள் மத்தாப்பூ வெடித்து..

தன் உள்ள மகிழ்ச்சியை அவளுக்கு தெரியாமல் , வண்டி ஸ்டார்ட் செய்ய.. தன் பையுடன் பின்னே அமர்ந்தான்..

 வண்டியின் சத்தம் தாண்டி வேற எந்த சத்தமும் இல்லை அவர்களிடம்…

பேச்சு மறந்த நிலையில் தான் இருவரின் பயணமும் தொடர்ந்தது..

தெரு வாசலிலே வண்டியை நிறுத்தினான் வெற்றி..

மனமே இல்லாமல் தான் இறங்கினாள்.

“உள்ள வாங்க” என்று சொல்லவே திக்கித்திடறினாள்..

“பரவாயில்லை நீ கேட்ட மாறி வரவேண்டியவங்களோட, முறையா வரேன்” என்றான் மெல்ல சிரித்

து..

அவனிடமிருந்து மனமே இல்லாமல் தான் நகர்ந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!