அங்கே ரிசப்ஷன் தொடங்கியது, ரிஷியும், அவன் மனைவி ஜோஷிலின்னும் மேடையில் அழகாய் நின்றிருக்கு, அதிக கூட்டம் இல்லை, நண்பர்கள், நெறுங்கிய உறவுகளை மட்டும் அழைத்திருக்க, ரிசப்ஷன் நல்லபடியாக நடந்து கொண்டிருந்தது.
கண்மணியையும் காணாமல் இருக்க, ஜூலியிடம் சென்று, “சீதாவும், கண்மணியும் எங்கே”? என்று கேட்க…
Advertisement
“இருவர் ட்ரெஸ் வாங்குவதற்காக, சென்றிருக்கிறார்கள்,” என்று கூற.
Advertisement
“சரி” என்றவன்.
கதவை பார்த்தபடியே அமர்ந்திருக்க.
Advertisement
கண்மணி மட்டும் வந்தாள் சீதாவை காணவில்லை, ரவிக்கு பயம் வந்து விட்டது இவள் எங்கே போனால் என்று.
கண்மணியின் மகன் அழுகவும், அவளின் கணவன் சுரேஷ்பாபு போன் செய்திருக்க, வேகமாக வந்திருந்தாள் கண்மணி, ரவி கண்மணியின் அருகில் “சீதா எங்கே”? என்று கேட்க..
“புட் கோர்ட்ல இருக்க ரவி, என் பையன் அழுகவும் நான் வந்துட்டேன்’ என்றவள்.
மகனை பார்க்க போக.
ரவி சீதாவை தேடி புட்கோர்ட் வந்திருந்தான்,, சீதாவை தேடி, சீதா அங்கேயும் இல்லை ஒரு வேல ரிசப்ஷன் சென்றிருப்பாளோ என்றவன் மீண்டும் ரிசப்பஷன் வர..
அங்கேயும் இல்லை சீதா, வேற எங்கே சென்றிருப்பாள், என்று ரவி யோசித்தப்படியே அவளை அவன் கண்கள் தேட.
தேடிய தேவதை, குட்டி தேவதையை தூக்கிக்கொண்டு மெல்ல ஹாப்பியிடம் கதை பேசிய படியே வந்தாள்..
ஹாப்பிக்கு பசிக்குது என்று சொல்லவும் புட் கோர்ட் சென்று, சாப்பிட வைத்து, பின்பு சீதா அவர்களின் அறைக்கு சென்று குழுந்தையை ரெஸ்ட் ரூம் அழைத்து சென்று சுத்த படுத்தி, அழைத்து வந்திருந்தாள்.
சீதாவை பார்த்தவுடன் “எங்கே போனா சீதா”?, என்று ரவி கோபமாக கேட்க..
நீண்ட நேரமாக ரவியின் நண்பர்கள், ரவியை பார்த்து படியே இருந்தனர்,,.
அவன் சீதாவை தேடி அழைந்ததை, ரவி இப்படியெல்லாம் யாரையும் தேடியது இல்லை, எந்த பெண்ணை தன்னோடு தங்க வைத்ததும் இல்லை, இந்த ரவி அவர்களுக்கு புதிதாக தெரிந்தான்,,..
தற்போது நண்பனின் பழக்க, வழக்கம் சரியில்லை என்று அவர்களும் தெரியும், அவனுக்கு ஜூலி, கண்மணியை தவிர எந்த பெண் தோழிகளும் இது வரை இல்லை, இப்போது புதியதாக சீதாவை பிரண்ட் என்று அறிமுகம் படுத்தி விட்டு, அவளை தீவிரமாக தேடிக்கொண்டிருந்த, ரவி புதிதாக தெரிந்தான்.
ரவி நண்பர்கள் அனைவரும்..
ரவியை சீதாவை பார்த்த படியே இருக்க.
சீதாவை பார்த்து எங்கே போன, என்று கோபமாக பேசியவனையும் அவர்கள் பார்த்த படியே இருந்தனர்.
சீதா ரவியிடம் குழந்தைக்கு தேவையானதை செய்து அழைத்து வந்ததாக சொல்லியவள்.
“ஹாப்பி ரவி அங்கிளுக்கு ஒரு கிஸ் கொடு” என்றதும்,.
ஹாப்பி ரவியின் கன்னத்தை பாய்ந்து வந்து முத்தம் கொடுக்க..
அந்த முத்ததை அனுப்பவித்தவன்.
ஹாப்பி “கம்” என்று குழந்தையை ரவி தூக்கி கொள்ள,…
சீதா ஹாப்பியை பற்றி ஒவ்வொன்றாக சொல்ல, “அப்படியாக பேபி” என்று ஹாப்பியிடம் கேட்டான்.
குழந்தைக்கு என்ன தெரிந்ததோ, அது ரவியின் கன்னத்தை தொட்டு அடித்து சிரிக்க.. அந்த சிரிப்பில் சீதாவும், ரவியும் சேர்ந்து சிரிக்க.
ரவியின் நண்பர்கள், இவன் சீக்கிரமாக திருமண செய்து இதே போல் குழந்தை, மனைவியோடு சந்தோசமாக வாழ வேண்டும் என்று நினைத்தார்கள்,
சீதா ஹாப்பியிடம் “அங்கிளுக்கு உன் டீத்தை காட்டு” என்று சொல்ல.
“ஈ…. ” என்று தன் பற்களை காட்டி சிரித்த குழந்தையை தூக்கி போட்டு முத்தம் கொடுத்தான், சீதா ரவியின் அருகில் நின்று கையை பிடித்து குழந்தையிடம் பேசுவதையும் பார்க்க..
ஒரு அழகான குடும்பமாக தெரிய,, ரவி கருப்பு சர்வாணி, சீதாவும், ஹாப்பியும் வெள்ளை கலர் உடையணிந்து பார்க்க அழகாய் ஒரு குடும்பம் போல இருக்க..
அந்த அழகான தருணத்தை புகைபிடித்திருந்தனர் நண்பர் பட்டாளம்.
மேடையிலிருந்த ரிஷி “போட்டோ எடுக்க, வா ரவி” என்று அழைக்க.
சீதாவையும், குழந்தையும் அழைத்துக்கொண்டு போட்டோ எடுக்க மேடைக்கு சென்றான்.
போட்டோ எடுப்பவர், ரவியை பார்த்து “உங்க வெய்ப் பக்கத்துல நில்லுங்க, சார்” என்று கூற, அவனோ சீதாவை பார்த்து சிரித்தவன், “அவ என் பிரண்ட் சீதா” , என்று பக்கதில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டான்.
ரிசப்ஷன் முடியவும், நண்பர்கள் அனைவருக்கும் சேர்ந்து ஒரு பெரிய வட்டமான மேசையில் வைத்து உணவு பரிமாற..
சீதா,கண்மணி, ஜூலி, ஜூலியின் பிள்ளைகள் சேர்ந்து அமர்ந்திருக்க ரவி, ரிஷி ரமேஷ் அருகில் அமர்ந்திருந்தான், ஜூலி கணவன் ரமேஷ்க்கு ஜாடை காட்டி பேசு என்பது போல் சொல்ல.
ரவி ரமேஷை பார்த்து சிரித்தானே தவிற, பதில் சொல்லவில்லை.
கண்மணியின் கணவன் சுரேஷ் பாபு கூட ரவியை பார்த்து, “நீங்களும் குடும்பம் குட்டியின் வாழ வேண்டாமா ரவி சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோங்க” என்று கூற.
” எனக்கு கல்யாணம் பண்ணிக்குற ஐடியாவே இல்லை சுரேஷ் பாபு”.என்றான்.
இவ்வளவு நேரம் அமைதியா இருந்தா ஜூலி “அப்போ கல்யாணம் பண்ணிக்காம சன்னியாசம் வாங்க போறியா, சன்னியாசம் வாங்க போறவன் எதுக்குடா இவ்வளவு பிஸ்னஸ் பண்ணி இவ்ளோ சொத்து சேர்த்து வச்சுருக்க? இந்த சிப்ப எதுக்கு வாங்கி சொத்து சேர்த்து வச்சிட்டு இருக்க, அங்க ஊருல உள்ள உங்க அம்மா எனக்கு தினமும் போன் போட்டு அழவுறாங்க, என் பையன் கல்யாணம் பண்ண மாட்டேங்குறாங்கன்னு, நீ அவங்க போனை எடுத்து பேசமாட்டேங்குறன்னு, இப்போ என்னன்னா கல்யாணமே பண்ண மாட்டேன்னு சொல்லுற” என்றாள் கோபமாக…
“இதுக்கு தான் நான் உங்களை பார்க்குறதை அவாய்ட் பண்ணிட்டு இருந்தேன் எப்பா பார்த்தாலும், கல்யாணம், கல்யாணம் பண்ணுன்னு டார்சர் பண்ணுறீங்கன்னு” என்றவன் சாப்பிடாம எழுந்து கொள்ள பார்க்க,,
“ரவி நீ உட்கார், எல்லாரும் பேசாம சாப்பிடுங்க, அப்புறம் பேசலாம்” என்று கண்மணி ரவியை சாப்பிட உட்கார வைத்தவளை..
ஜூலி கண்மணியை பார்த்து முறைத்தாள்..
“ஏன்டி என்ன முறைக்குற, சாப்பிடும் போதுதான் பேசனுமா, அப்பறமா தனியா கூப்பிட்டு கேட்க வேண்டியது தானே, எல்லாரும் முன்னாடி ஏன் ஜூலி கேட்குற” என்றவள்..
“எல்லாரும் சாப்பிடுங்க” என்றாள்.
சீதா ரவியின் முகத்தை பார்த்தாள், அவனின் முகம் கோபத்தால் சிவந்திருந்தது.
ஏன் ரவி சார் கல்யாணம் வேண்டாம் சொல்லுறாரு ஒரு வேல லவ் பெய்லியறா இருக்குமோ, என்று யோசித்துக்கொண்டே சாப்பிட,
ஜூலி சீதாவின் காதருகே மெல்ல வந்தவள், “அப்போ நீயும் ரவியும் லவ்வர்ஸ் இல்லையா” என்று கேட்க.
சீதா ஜூலி கேட்டதும் அதிர்ச்சியானவள், “இல்லை” என்று தலையாட்ட..
“நீ சும்மா இரு ஜூலி, ரவிக்கு தெரிஞ்ச கோபப்படுவான்”, என்றாள் கண்மணி..
“நீ வேற போடி அவன் கோபப்பட்ட என்ன பண்ணிடுவான், இந்த இடத்தை விட்டு போவான் அவ்வளவு தானே, போன போகட்டும் போடி, இங்கெருந்து போகறதுக்குள்ள, நான் அவன் கிட்ட ஏன்டா கல்யாணம் பண்ணாம இருக்குறேன், சண்டை போட்டு, கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கமா விட மாட்டேன் ” என்றாள் ஜூலி.
“நீ உன் அத்தை மகனை என்ன வேனா பண்ணுமா, சண்டை மட்டும் போடதா, நாங்க எல்லாரும் சந்தோசமா இருக்கத்தான் கோவா வந்திருக்கோம், ரிசப்ஷன் முடிஞ்சதும், கோவாவை சுத்தி பார்க்க கிளம்ப போறாம், நீ வர்ரீயா”, என்றாள்..
“எனக்கும் கவலையா தான் இருக்கு, , எனக்கு என்னவோ இந்த சீதா தான் ரவிக்கு ஜோடியின்னு தோணுது, இரண்டு பேரையும் பார்த்தா ஏதோ மறைக்குற மாதிரி தெரியுது”, என்றாள் கண்மணி ஜூலியிடம்.
“ஏய் உன் கண்முன்னாடி தானே சீதா நாங்க லவ் பண்ணலன்னு சொன்னா, “.
“லவ் பண்ணலன்னு தானே சொல்ல, ரவி மேல லவ் வரதுன்னா சொன்னால, நம்ம இங்கே இருந்து போறதுக்குள்ள ஏதாவது பண்ணி சீதாவை, ரவியோட சேர்த்து வைக்கனும்” என்று கண்மணி கூற.
“சூப்பர் ஐடியா” என்று திட்டம் போட்டனர் ரவியின் தோழிகள்..
ரிசப்ஷன் நல்ல படியாக முடிய, சிலர் காலையில் சென்னை கிளம்புவதாக சொல்ல, சிலர் இரண்டு நாள் சிப்பில் இருந்து விட்டு போவதாக இருக்க.
ரவியின் நண்பர்கள் மட்டும் கோவாவை சுத்திபார்க்க கிளம்பினார்கள்,
ஜூலியின் குடும்பமும், கண்மணியின் குடும்பமும்..
ரவியோட கோவாவை சுத்தி பார்க்க சிறிய பேட் எடுத்துக்கொண்டு கோவாவில் உள்ள ரெசார்டில் தங்க சென்றனர்..
சீதாவும் அவர்கள் கூட செர்ந்து கொண்டாள். அவளிற்கு ரவியின் நண்பர்களை பிடித்திருந்தது, அனைவரும் குடும்பமாக தங்க, சீதாவுக்கும் தனக்கும் தங்க ஒரே அறை போட்டான் ரவி,,…
அனைவரும் பயண களைப்பில் தூங்கி விட.
சீதா ரவியின் முகத்தை பார்த்தப்படி இருந்தவளை, “போய் உன் ரூம்புல தூங்கு” என்றான், ஒரே ரூம் என்றாலும் இரண்டு அறைகள் கொண்ட ரூம் அது,,..
சீதா தன்னிடம் ஏதோ கேட்பது போல் தெரிய.
“என்ன கேட்கனும் என்னிடம் கேளு,” என்றான்.
சீதா தயங்கிய படியே, “நீங்க லவ் பெய்லியரா”? என்றாள்.
ரவிக்கு இவ்வளவு நேரம் இருந்த இருக்கம் போயி, சிரித்து விட்டான்.
“ஏன் சிரிக்குற ரவி பதில் சொல்லுங்க” என்றாள்.
“நான் இது வரைக்கும், யாரையும் லவ் பண்ணது இல்ல, லவ் பண்ண போறதும் இல்ல,, போதுமா” என்றான்..
“அப்போ ஏன் கல்யாணம் பண்ண மாட்டேங்குறீங்க”? என்றாள்..
“இப்பவே உனக்கு சொல்லி ஆகனுமா” என்றான்.
இல்லை என்று தலையாட்ட.
“போ, போயி தூங்கு இன்னொரு நாள் சொல்றேன்” என்றான்..
சீதா சரி என்று தலையாட்டி அவள் அறைக்கு சென்று தூங்கிவிட.
ரவிக்கு அவனின் கல்லூரி காலம் கண்ணில் தோன்றி மறைந்தன..
கதிர்ஹாசன் கடைசியில் பேசியது மட்டும் அவன் மனதில் ஆழமாக பதிந்து விட்டுது,.
எந்த பொண்ணையும் நம்பாத எல்லாம் சுயநலம் புடிச்ச பொண்ணுங்க, நம்ம பாசம் புரியுற வர நம்ம கால சுத்தி வருவாங்க, நாம அவங்கா தான் உலகமுன்னு நினைக்குறப்போ, நம்மல கால்ல தூக்கி போட்டு மிதிப்பாங்க காசு தான் அவங்களுக்கு முக்கியம் , பணம் இருந்தா போதும், வேற எதுவும் தேவை இல்ல இந்த பொண்ணுங்களுக்கு” என்று தன் நண்பன் இறக்கும் முன் புலம்பியதே நினைத்தபடியே தூங்கி போனான்..