சீதாவிற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை, அவள் ஜூலி கையில் வைத்திருந்த குழந்தையை தான் பார்த்திருந்தாள்.
Advertisement
அந்த பெண் தன்னை பார்த்து ஏதோ பேசிவிட்டு ரவியை அடித்ததும், அதிர்ச்சியானவள் ரவியை பார்க்க.
Advertisement
அவனோ ஜூலி அடித்தது எந்த ஒரு வருத்தமும் இல்லாமல். கண்மணியை பார்த்து சீதாவை பார்த்துக்கொள் என்று கூறி விட்டு, ஜூலியின் பின்னாடி ஓடினான் ரவி.
ஜூலிக்கு பயங்கர கோபம் எந்தனை வருடங்களுக்கு பிறகு இந்தியா வந்திருந்தாள், தன் நண்பர்கள் அனைவரையும் பார்க்க,, அதுவும் ரவியை பார்க்க ஆவளோடு..
இவள் சிங்கப்பூரில் இருந்து தன் கணவன் தன் இரு பெண் பிள்ளைகளோடு வந்திருக்க..
ரவியோ தன்னை அழைக்க ஏர்போர்டிற்க்கும் வரவில்லை, திருமணத்திற்கும் வர வில்லை, அவள் தன் பெற்றோரை விட, ரவிவையை தான் தேடினாள்..
தன் அத்தை மகனை அவளுக்கு அவ்வளவு பிடிக்கும், ரவியின் நண்பன் ரமேஷ்சை ஜூலி காதலிக்க..
ஜூலியின் வீட்டில் கடும் எதிர்ப்பு, அனைத்து எதிர்ப்புகளையும் மீறி, அவளுக்கும், ரமேஷுக்கு திருமணம் முடித்து சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்ததே ரவி தான்,..
பின்பு ஜூலிக்கு குழந்தையை பிறந்ததும் ஜூலியின் வீட்டில் ஜூலியையும், ரமேஷ்சையும் ஏற்று கொண்டனர்.
இன்று கணவரோடும், பிள்ளைகளோடும், தாய், தந்தை பாசத்தோடு, இருக்கிறாள் என்றாள் அதற்கு முழு காரணம் ரவி தான்,
அவனை பார்க்க ஆசையாக பெங்களூரில் நடக்கும் ரிஷி கல்யாணத்திற்கு குடும்பத்தோடு வந்தாள்,, ரவி கல்யாணத்திற்க்கு வரமால் இருந்து விட்டு, இப்போது சவகாசமாக ரிசப்ஷனுக்கு வந்தவனை பார்த்து கோபப் பட்டவள், பளார் என்று அறைந்து விட்டாள்..
“ஜூலி ஜூலி பேபி மை டார்லிங்” என்று தன் தோழியின் கழுத்தில் கை போட்டு தன்னோடு இழுத்துக்கொண்டு அவன் ஜூலியை சமாதானம் பண்ண.
“மூடிட்டு போயிடு, உன் சமாதானம் எல்லாம் எனக்கு தேவையில்ல, கல்யாணத்துக்கு வராமல் எங்கேடா போனா போடா” என்றவளுக்கு கண்கலங்க..
“டேய் ஜூலி மா, அழதாடா, புரிஞ்சுக்கோடா, என் சிச்சுவேஷன் அப்படி, இல்லன்ன என் டார்லிங்கை பார்க்க வரமா இருந்துருப்பேனா,”? என்று தன் தாய் மாமன் மகளை, சமாதானம் பண்ண.
தன்னோடு நல்ல நண்பனாக இருக்கிறான், சிப்பில் வேலை செய்பவர்களிடம் கண்டிப்போடு நடந்து கொள்கிறான், இப்போது ஒரு பெண் அவனை அடித்தும் அவளை சாமாதானம் பண்ணிக்கொண்டு இருக்கிறான், யாருடா இவன், இவன் கேரக்டரே புரிஞ்சுக்க முடியலையே என்று சீதா கண்ணெடுக்காமல் ரவியை பார்த்தபடியே நிற்க.
கண்மணி சீதாவை பார்த்து.. “நீ ஒன்னும் தப்பா நினைச்சுக்காதம்மா அவங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் அவங்க அப்படித்தான் அடிச்சுப்பாங்க,, நாங்க எல்லாருமே ஒரே காலேஜ் தான், ஆனா வேற வேற டிபார்ட்மெண்ட், இருந்தாலும் ஒன்ன தான் சுற்றுவோம்..
அதுவும் ஜூலி ரவியோட தாய் மாமா பொண்ணு ரவிக்கு ரொம்ப பிடிக்கும்,, நாங்க ஒரு ஆறு பேரு பிரண்ட்ஸ், நான் ஜூலி, ரவி,ரமேஷ்,கதிர்ஹாசன் ரிஷி எல்லாரும் ஒரே கேங்.
நாங்க ரொம்ப ஜாலியா இருப்போம். எங்க செட்டில் எல்லாருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு,, ரவிக்கும், ரிஷிக்கும் தான் கல்யாணம் ஆகல. இப்போ ரிஷிக்கு கல்யாணம் முடிஞ்சது, அவனுக்கு தான் நைட்டு ரிசப்ஷன்.” என்று சீதாவிடம் கண்மணி பேசிக்கொண்டிருந்தாள்..
“ஆமாம் எங்க உன் மூத்த பொண்ணு ஸ்வீட்டியை காணோம்?” என்று ரவி ஜூலியிடம் கேட்க..
“அங்க பாரு”‘ என்று ஜூலி கைகாட்ட.
அங்கு உள்ள சிறிய மேடையில் அவனின் நண்பர்கள் கூட்டம் கீழே அமர்ந்து கொண்டிருக்க மேடையில் ஸ்வீட்டி அழகாக மோனிக்கா…., மோனிக்கா… என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருக்க.
அதற்கு ஏற்றவாறு சிவப்பு வண்ண கவுன் போட்டு, அந்த மோனிக்கா பாடலில் வரும் நடிகை போல் உடை அணிந்து ஜூலியின் மகள் ஸ்வீட்டி மேடையில் மோனிக்கா…., மோனிக்கா…, என்ற பாடலுக்கு அழகாய் ஸ்டெப் போட்டு நடனம் ஆட.
ரவி ஸ்வீட்டியை பார்த்து படியே அவள் அருகில் சென்றவன்.. ஸ்வீட்டியோடு சேர்ந்து, மோனிக்கா பாடலுக்கு அழகாய் நடனம் ஆட.
நீண்ட நாள் கழித்து ரவியின் நடனத்தை பார்த்த அவனின் நண்பர்கள், உற்சாகமாக கைதட்டி குதிக்க, ஸ்வீட்டிக்கு ரவி வந்து ஆடியதும் இன்னும் உற்சாகமாக அவனோடு சேர்ந்து ஆடினாள்..
ஆடி முடித்தும், ஸ்வீட்டியை தூக்கி சுற்றியவன் ஸ்வீட்டியின் கன்னத்தில் முத்தமிட.
“ரவி அங்கிள்” என்றாள் ஸ்வீட்டி.
“பேபி சூப்பரா ஆடுனீங்க செம்மையா இருக்கீங்க, நல்லா ஆடுன டா,” என்று ரவி குழந்தையை தூக்கி கொஞ்ச.
ரமேஷ் நண்பனை பின்னாடி இருந்து அணைத்துக்கொண்டவன்..
“எப்படி இருக்க ரவி “என்று ரமேஷ் கேட்க..
“நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க உன் பொண்டாட்டி ஜூலி எப்படி உன்னை பார்த்துக்கிற, ஏதாவது டார்ச்சர் பண்றாளா சொல்லு” என்று அவன் கேள்வி கேட்க ..
“டேய் ரவி” என்று ஜூலி ரவியின் காதை பிடித்து திருக்கியிருந்தாள்.
“என்னடா நைட் பார்ட்டிக்கு இப்பவே ரெடியாகி வந்துட்ட” என்று ரவியை பார்த்து ரமேஷ் கேட்க.
“ஆமாண்டா ரெடியாகி வந்துட்டேன், உங்களையெல்லாம் பார்த்துட்டு திரும்ப போக முடியாது, அதான் ரெடியாகி வந்துட்டேன்” என்றான்..
“சரிடா வா நம்ம பாய்ஸ் கேங் அங்க இருக்கு நம்ம எல்லாரும் அங்க போகலாம்” என்று ரமேஷ் ரவியை அழைக்க.
ரவி சீதாவை பார்த்து “கண்மணி சீதாவை பார்த்துக்கொள்” என்று சொல்லிவிட்டு சென்றான் ..
“நீ வா சீதா நாம கேள்ஸ் கேங்குங்கு போகலாம்” என்று சொல்லி கண்மணியும், ஜூலியும் சீதாவை அழைத்துக் கொண்டு சென்றனர்..
அங்கே ஒரு பத்து பெண்கள் ரிஷப்சனுக்கு ரெடியாகி கொண்டிருக்க, அவர்களிடம் சீதாவை அறிமுகம் படுத்திவைத்தாள் கண்மணி.
சீதாவை பார்த்த சில பெண்கள், “நீங்க கீதா தானே, இந்திர சேனா பட ஹீரோயின்” என்று கேட்க.
சீதா “ஆமாம்” என்று தலையாட்ட.
அந்த பெண்கள் சீதாவுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டனர்..
ஜூலிக்கும், கண்மணிக்கும் ஆச்சரியம் “என்ன சீதா நடிகையா நடிக்கிறியா”? என்று கேட்க
.
“ஆமாம்” என்று இருந்தால் சீதா..
“என்ன படம்” என்று கேட்க “உங்களுக்கு தெரியாதா இந்த படம் ரொம்ப நல்லா இருக்கு, இன்னைக்கு தான் ரிலீஸ் ஆயிருக்கு படம் பேரு இந்திர சேனா ” என்று கூற.. ..
“அப்படியா”! என்ற ஜூலியும் கண்மணியும் தனது போனை ஆன் பண்ணி சர்ஸ் செய்து இந்திர சேனா படத்தின் ட்டெயிலரை பார்க்க, அசந்து போனவர்கள்,,
“உனக்கும் ரவிக்கும் எப்படி ஃப்ரெண்ட்ஷிப்” என்று கேட்க..
“இந்திர சேனா படத்தை ப்புரொடீஸ் பண்ணது ரவிதேஸ்ஜா சார் தான் நான் அவங்க படத்துல தான் நடிச்சேன், ரவி தேஸ்ஜா சார் சிப்பை சுத்தி பார்க்க என்னை கூட்டிட்டு வந்தாரு” என்று சீதா சொல்ல..
, “அப்படியா” என்று இரு பெண்களும் சீதாவை பார்த்து, “நல்லா அழகா இருக்க” என்று இரு பெண்களுமே சீதாவை பாராட்ட..
சீதா அவர்களை பார்த்து சிரித்தாள்..
ரிசப்ஷனுக்கு பெண்கள் ஒருவர் ஒருவராக ரெடியாக செல்ல, ஸ்வீட்டியையும் ஹாப்பியையும், பார்த்துக்கொண்டாள் சீதா.
ஆமாம் ஜூலியின் இரண்டாவது மகள் ஹாப்பி என்று பெயர் வைத்துள்ளாள் பெயர் என்னவோ தனுஸ்ரீ தான் ஆனால் கூப்பிடுவது ஹாப்பி என்று…
சீதாவுக்கு ஹாப்பியை (happy ) ரொம்ப பிடித்திருந்தது, ஒரு வருடம் நான்கு மாதங்களே ஆன குழந்தை, பார்க்க அவ்வளவு அழகாய் இருந்தாள்.. சீவ்லெஸ் பச்சை கலர் பிராக் அணிந்து , குட்டி பற்கல் தெரிய அழகாய் சிரிக்கும் பட்டு,லட்டு குட்டியை யாருக்குத் தான் பிடிக்காது, அதுவும் பார்க்க குண்டு கன்னத்தோடு, கொழு, கொழுவென இருந்த குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டவள்.
அவளிடம் மழலை மொழியில் பேச.
சீதா தன் மகளை மடிமீது வைத்து கொஞ்சிக் கொண்டிருந்ததை, பார்த்த ஜூலி..
“ஹாப்பி சீதா ஆண்ட்டிக்கு ஹெட் காட்டு” என்றதும்.
ஹாப்பி தன் பிஞ்சு கையை தூக்கி தன் தலை மீது வைத்து, தன் தெத்து பல் தெரிய அழகாய் சிரித்து குழந்தை பார்த்த சீதாவிற்க்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.
சீதா, ஹாப்பியிடம் ” உன் ஹேர் எங்கே” என்று கேட்க..
அழகாய் தன் தலை முடியை தொட்டு காட்டிய பூஞ்சிட்டை தூக்கி சுத்தினாள் சீதா.
ஜூலி சீதாவை பார்த்து, அவ கிட்ட பாடி பாட்ஸ் எல்லாம் கேளு சொல்லுவா என்று கூற.
சீதா ஹாப்பியிடம் “பேபி கண் எங்கே” என்றதும், தன் கையை வைத்து கண்கனை குத்துவது போல் காட்டிய குழந்தை குலுங்கி சிரிக்க.
அந்த சிரிப்பில் தொழைந்து போன சீதா ஹாப்பியோடு, சேர்த்து அவளிடம் பாடி பாட்ஸ்சை ஒவ்வொன்றாக கேட்க அழகாய் தொட்டு காட்டி சிரித்து குழந்தையை பார்த்தவள் உலகம் மறந்து போனாள்.
ஸ்வீட்டியும் சீதாவோடு அமர்ந்து கொண்டு, “ஹாப்பி சோ மீ யுவர் ஹேண்ட்” என்று கேட்க. அழகாய் தன் கையை தூக்கி காட்டி தன் தங்கையை கன்னத்தை பிடித்து கொஞ்சினாள்.
அனைவரும் பார்ட்டிக்கு ரெடியாக இருக்க, சீதாவை பார்த்தனர்.
அவர்கள் பார்ட்டிக்கென்று பெண்கள் அனைவரையும் ஓயிட் கலர் ட்ரெஸ் என்றும், ஆண்களுக்கு பிளாக் கலர் ட்ரெஸ் என்று சொல்லி இருக்க.
ரவிக்கு இது மறந்து போயிருந்தது..
ஜூலி சீதாவை பார்த்து “இந்த ரவி பாரு சீதாவுக்கு ரெட்டு கலர் ட்ரெஸ் போட்டு கூட்டிட்டு வந்திருக்கான், நாமா எல்லோரும் ஓயிட் போட்டு இருக்கும் போது, சீதா மட்டும் ரெட் கலர் போட்டு வந்தா நல்லாவ இருக்கும்”, என்றாள் ஜூலி..
“நீ கவலை படதா, கீழ சாப் இருக்கு, நான் போயி சீதாவுக்கு ஓயிட் கலர் ட்ரெஸ் எடுத்துட்டு வர்ரேன் என்று கூற.
ஜூலி பார்ட்டிக்கு டைம் ஆச்சு என்று கூற..
“நீ போ ஜூலி நான் சீதாவை கூட்டிட்டு போய் ஓயிட் ட்ரெஸ் வாங்கி போட்டு கூட்டிட்டு வர்ரேன்” என்றுகூற.
சீதா “அதெல்லாம் வேண்டாம் கண்மணி, நான் ரெட் கலர் ட்ரெஸ்சுல இருக்கேன்” என்று கூற.
“சீதா எல்லாருமே ஓயிட் தான், நீ மட்டும் ரெட் போட்ட நல்லா இருக்காது” என்றவள்.
சீதாவை வேகமாக அழைத்துக்கொண்டு போக பார்க்க ஹாப்பி சீதாவை விட்டு போகமாட்டேன் என்று சொல்ல, அவளை தூக்கிய படி அவளுக்கு உடை எடுக்க கடைக்கு வந்தனர்,, சீதாவுக்கு சரியான அளவுகொண்ட வெள்ளை நில பேன்லி புடவையை தேர்வு செய்து அதற்கு ஏற்ற வாறு மார்டன் ப்ள்ஸ்சை தேர்வு செய்து, அணிந்து வர கொஞ்சம் நேரமாகியது.