Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 14 4

அவள்  தள்ளி போகவும் ஆத்திரம் கொண்டவன், “என்ன நான் உன்னை தொட கூடாதா”? என்றவன் வேண்டும் என்றே அவளை தொட வர.

“பக்கத்தில் வராத ரவி கொன்னுடுவேன் உன்னை ” என்றாள்.



Advertisement

 அவனோ நீ என்ன சொல்வது  என்பது போல் அவளை தன்னோடு சேர்த்து இழுத்தவன், ‘”உன் உடம்புல என் கையும், உதடும் படாதா இடம் இருக்க சொல்லு சீதா” என்றதும்.

Advertisement

“சீ…” என்றவள்..

Advertisement

அவளை நினைத்து அவளுக்கே அறுவருப்பாக இருந்தது,..

Advertisement

“இதில்ல நீ சீ…யின்னு  சொல்லுறதுக்கு ஒன்னும் இங்க தப்பா  நடந்துறல, ஓவரா ரியாக்ட் பண்ணாத, உனக்கு என்ன தேவையா கேட்டு வாங்கிட்டு போ,. சும்மா பணம் வேணாம், ஏதுவும் வேணாமுன்னு நடிக்க வேண்டாம், இந்த உலகத்துல பணம், பொருள் வேண்டாமுன்னு சொல்லுற பொண்ணுங்க இருக்காங்கள என்ன ” என்றவன் அவன் மென்று கொண்டிருந்த சிவிங்கத்தை கூப்பை பக்கெட்டில் துப்ப..

இவனுக்கு ஏத்த பதில் சொல்லாமல் போக கூடாது, என்று நினைத்தவள்.

“பணத்துக்காக  என்ன வேணா செய்யுற பல  பெண்கள் இந்த உலகில் இருக்கலாம்

பணத்தை விட , அன்பு,  பாசம்,  அக்கரை குடும்ப கௌரவத்துக்காக வாழ்ற  நிறைய பெண்கள் இந்த உலகில் இருக்காங்க, பொண்ணுங்கள தப்பா பேசாதீங்க, உன்கிட்ட வர்ர பொண்ணுங்க வேனா, பணத்துக்காக வரலாம், ஆனா பணம் பெருசு இல்ல ரவி, ,  உனக்கு சொன்னா புரியாது” என்றவள்..

வேகமாக வெளியே போக..

அவளை போகவிடமால்  தடுத்த ரவி, “நானே கொண்டு வந்து விடுறேன்” என்றவன், அறையை பூட்டி விட்டு அவளை போக விடாமல் தடுத்தவன், கிளம்பி வர…

“என்னை விடு ரவி எனக்கு போக தெரியும்”,,  என்றாள்.

“நான் தானே உன்னை கூட்டிட்டு வந்தேன், நானே கொண்டு போய் விடுறேன்” என்றான்.

ஏனோ அவளை தனியாக விட மனம் வரவில்லை அவனுக்கு,.

அவனை முறைத்தபடியே  நின்றவளை கையை பிடித்து இழுக்கொண்டு ஏர்போர்ட்டிற்க்கு வந்திருந்தான்.

சீதாவுக்கு அவனோடு இருப்பது பிடிக்க வில்லை, நெஞ்செல்லாம் வலிப்பது போல இருந்தது, கால் வலி வேற இருக்க, தன்னை தொட்டு பார்த்தாள், அவளின் உடல் காய்ச்சலில் நெருப்பாக கொதிக்க, நிற்க கூட முடியவில்லை அவளால்,

ஏர்போர்ட்டை சுற்றி, சுற்றி பார்த்தாள் அங்கே ஒரு காபி சாப் இருக்க.. அவர்கள் கிளம்பும் விமானத்திற்கு  இன்னும் ஒரு மணி நேரமிருக்க, ரவி அவள் பக்கத்தில் அமர்ந்திருந்தான், அவனை கண்டு  கொள்ளாதவள், காபி சாப்பில் நுழைந்து ஒரு காபியும்  வாங்கியவள், ஒரு டோலா  மாத்திரை வாயில் போட்டவள் காபியை பருக, அவள் உடல் சூடு அவளுக்கு அனல் அடித்தது,, ரவி சீதா பின்னாடியே வந்தவன் அவளை பார்த்தபடியே நிற்க.

மாத்திரையை அவள் விழுங்கியதும், “என்ன ஆச்சு சீதா”?என்றான்…

அவள் பதில் பேசாமல் அமைதியாக காப்பியை மெதுவாக பருக..

சீதா அருகில் வந்தவன்  அவளை தொட்டு பார்த்து விட்டு,.

“ஏய் சீதா பீவர் ஹய்யா இருக்கு, வா ஹாஸ்பெட்டல் போகலாம்” என்று அவளை அழைக்க.

அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை சீதா.

எப்படியோ சென்னை போனால் போதும் என்றிருந்தாள்.

சீதா ரவி வாங்கி கொடுத்த எந்த பொருளையும் எடுத்த செல்லவில்லை, அவள்  ஐந்து நாள் முன்பு  உடத்தி இருந்த  அதே சுடிதாரோடு தான் கிளம்பி ஏர்போர்ட்  வந்திருந்தாள்.

அவளுக்கு தெரிந்தது ரவி தன்னை தனியே விடமாட்டான், அவனிடம் வாதம் பண்ண எனக்கு தெம்பு இல்லை, சென்னை போய் சேர்ந்தால் போதும் என்றவள்,, அமைதியாக அவனோடு சென்னை பிளைட்டில் ஏறினாள், அவனோடு சேர்ந்து அமர அவளுக்கு விருப்பமில்லை, ஏர்ரோஸ்சரிடம் சீட்டை சேஞ்சு பண்ணி  தர முடியுமா என்று கேட்க, மேம் இது நார்மல் சீட் இல்ல, வி ஐ பி சீட் சோ சேஞ் பண்ண முடியாது என்று சொல்ல…

சீதாவுக்கு வேற விழி இல்லை ரவியோடு தான் அமர வேண்டும் என்ற சூழ்நிலை அமைதியாக அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள், ரவி வி ஐ பி சீட் புக் பண்ணியிருந்தான், அதில் உட்காரலாம், சீட்டை சாய்த்து படுக்கலாம், டி வி,  பார்க்க என்று பல வசதிகள் கொண்டிருந்தது, அது மட்டும் இல்லை தனி, தனி பிரைவசி யோடு யாரும் யாரையும் பார்க்காத வாறு  தடுப்பை அமைத்திருக்க.

சீதாவுக்கு எரிச்சலாக இருந்தது.. இன்னும் ஒன்றறை மணி நேரம் இவனோடு என்றவள்.

மாத்திரை விழுங்கியதால், அவளுக்கு பீவார் விட்டு இருக்க, சீட்டில் சாய்ந்தவள்  அப்படியே தூங்கி இருந்தாள்.

தூங்கும் அவளையே  பார்த்தபடியே இருந்தான் ரவி.

சீதாவிடம் இப்படி  எல்லாம் பேச அவனுக்குமே பிடிக்க வில்லை,..

இருந்தாலும் அவனை பற்றி அவனால் மறைக்கவும் முடியாது, சீதாவின் நல்லா எதிர் காலத்துக்காக அவளிடம் தன்னை பற்றி இப்போது உண்மையை  சொல்லி இருந்தான், அவள் கோபத்தில்  தன்னை அடித்திருந்தாள் கூட பரவாயில்லே அவனை விட்டு விலகி போவதை அவனால ஏற்கமுடியவில்லை.

ஏனோ சீதாவை மற்ற பெண்கள் போல பார்க்க முடியவில்லை அவனால், தன்னிடம் பணத்துக்காக, ஹீரோயின் சான்ஸ்க்காக எத்தனை பெண்கள் தன்னிடம் வந்திருக்கிறார்கள்

 ஆனால் சீதா அப்படி இல்லை என்று மனதில் தோன்ற.

தன்னிடம்  4 லட்சம் செக்கை  நீண்டிய பெண்ணை அவனுக்கு மிகவும் பிடித்தது, பெண்களுக்கு  அவன் தான்  நிறைய செலவு செய்திருக்கிறான்,..

ஆனால் எந்த பெண்ணும் அவனுக்கு செலவு செய்தது இல்லை, சீதா கொடுத்த செக்கை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து பார்த்தான்..

அதில் அவளின் அத்தனை நல்லொழுக்கமும் தெரிந்தது..

நீ எனக்கு வேண்டாம் சீதா,  உனக்கு தகுதியானவன் நான் இல்லை, உனக்கென்று பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது, என்றவன்.

தூங்கும் சீதாவை முத்தமிட.

“ரவி”  என்று சிணுங்கினாள் சீதா..

இந்த ரவி என்ற குரலை நான் இனி எப்போது கேட்பேன் என்றவன்.

அவளின் கையை எடுத்து தன் மார்போடு அணைத்து கொண்டவன்,தூங்கி இருந்தான்.. சென்னை வந்ததும்  இருவரும் கண்விழிக்க.

தன் கை ரவி மார்பில் இருந்ததை உருவிக்கொண்டாள் சீதா….

உடம்பும் மனமும்  வேதனையில் இருக்க.

ஏர்போர்டில் அனைத்து செக்கிங் முடித்து இருவரும் வெளியே வர..

நான் போறேன் என்று ரவியை  ஒரு பார்வை பார்த்தவள், “என் பாஸ்ட் போர்ட்” என்று கேட்க, அவளின் பாஸ் போர்ட்டை  அவளிடம் தந்தவன்,,.

“உன்கிட்ட பேசனும் சீதா  வா” என்று ஏர்போர்ட் வெய்டிங் ஹாலிற்கு அவளை அழைக்க,..

“நான் எங்கேயும் வரல ரவி”, என்றவள்.

ஏர்போர்ட் எஜிஸ்ட் வழியில் செல்ல பார்க்க.

அவளை தன்னை நோக்கி இழுத்தவன்,  ஏர்போர்டில்  உள்ள தனி  வெய்டிங் ரூம்பிற்கு அழைத்து சென்றான்.

அவனை முறைத்தபடியே அவன் இழுப்பிற்கு சென்றாள் சீதா..

“வான்னு சொன்னா வர மாட்டீயா சீதா”,  என்றான்  கோபமாக..

“நான் என்ன உங்க பொண்டாட்டியா சார் உங்க இழுப்புக்கு வர…

என்னை தொடுறது இதுவே கடைசியாக இருக்கனும்”. என்றவள்..

ரவிக்கு அவள் கோபம் புரிந்தது பொண்டாட்டியா என்றவன் சிரிக்க.

அவன் சிரிக்கவும் எரிச்சலானவள்.

 “சொல்லுறத சீக்கிரம் சொல்லுங்க” என்றாள்..

அவனோ அவளிடம் தன் போனை நீட்டி “இந்த  வீடியோவை பாரு” என்று சொல்ல…

ஒரு  வேளை தன்னோடு இருந்தை வீடியோ எடுத்து விட்டானோ , என்று பயந்தவள் நடுக்கும் கரத்தோடு அவன் சொன்ன வீடியோ வை பார்க்க.

அதில் இந்திரா சேனா படம் நான்கு  நாள்களில்  500 கோடி வசூல் என்று வீடியோ இருக்க.

சிரஞ்சீவி டி வி சேனலில் பேசிக்கொண்டு இருந்தான், ரொம்ப நன்றி ரசிகர்களுக்கு என்று,

சிரஞ்சீவி கூட சிவாவும் இருந்தான், ஆனால் அவன் முகத்தில் எந்த ஒரு  சந்தோஷமும் இல்லை…

“என்ன சீதா ஹாப்பியா” என்றான்.

அவளோ மனதில் சந்தோஷ பட்டாலும்.

அவன் போனை அவனிடம் தந்து விட்டு. “முடிஞ்சதா நான் கிளம்பலாமா” என்றாள்..

“இரு” என்று ரவி, இரண்டு பெரிய நடிகர் படங்களுக்கு சீதாவை  ஹீரோயின்னாங்க நடிக்க ஒப்பந்தம் போட்ட அக்கிரமென்ட் காப்பியை அவளிடம் நீட்ட.

அதை வாங்கி  படித்து பார்த்தால் சீதா.. அது ஒரு சூப்பர் ஸ்டார்  நடிகரோட  படம்.

சீதாவுக்கு ஹீரோயின்னா நடிக்க ஒப்பந்தம் போட்டு அவர்கள் எல்லாம் சைன் போட்டு இருக்க,, சீதாவுக்கு பயங்கர கோபம், “யார கேட்டு, அக்ரிமென்ட் போட்டீங்க,”?. என்றாள்.

“யாரை கேட்கனும்”, என்றான்..

“என்னை கேட்கமா எப்படி நீங்க அக்ரிமென்ட் போடலாம்”….

“சீதா இது உனக்காக நானே கேட்டு வாங்கின ஆப்பர், இத பாத்து நீ சந்தோஷபடுவேன்னு பார்த்த, இப்படி கோபப்படுற”?..என்றான்..

எனக்கு இனிமே  நடிக்கறதுக்கு விருப்பம் இல்ல, என்றவள்.

ரவி கொடுத்த அக்ரிமெண்ட் பேப்பரை கிழித்து  எறிய,,

“சரி நடிக்காம என்ன செய்ய போற” என்றான்..

“என்னவேன செய்வேன், உங்களுக்கு என்ன பிரச்சனை” என்றாள்..

“ஏன் சீதா இப்படி கோபப்படுற  ஒரு பிரண்ட்க்கு  நான் இத செய்ய கூடாதா ” என்றான்.

“நாமா பிரண்ட்! இல்ல, நாமா இரண்டு பேரும் பிரண்ட்!.. இல்ல என்று ஆத்திரமாக கத்தியவள்.

“பிரண்ட் கூடதான் இரண்டு நாள் குடும்பம் நடத்திட்டு என்ன வேணுமுன்னு கேட்பாங்களா,,  நீங்க உங்க பிரண்ட் கண்மணி, ஜூலிக்கிட்டயும் ..  இப்படி  நடந்துகிட்டு என்ன வேணுமுன்னு கேட்பீங்களா?  தப்பு, தப்பு நான் பண்ணியது எல்லாம் தப்பு நான் உன் கூட வந்தது தப்பு,” என்று தன் தலையில் அடித்தவள்.

” நான் என் நண்பன்  சீரஞ்சீவி சொல்லுறத நான் கேட்டு இருக்கனும்” என்றதும்

“ஏய்” என்று சீதாவின் கழுத்தை  இறுக்கி பிடித்திருந்தான் ரவி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!