Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 16 1

சீதா கல்யாண வைபோகமே..

அத்தியாயம் – 16



Advertisement

  சீதா பெங்களூரு வந்து இரண்டு நாட்கள் ஆனது, அவளின் கன்னட பட சீன்களை டப்பீங் பண்ணி  முடித்திருந்தவள்,, சென்னைக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள்.

Advertisement

ரவியிடமிருந்து  போன் வரவும், இவன் எதுக்கு போன் பண்ணுகிறான், என்று நினைத்தவள், முதலில் போனை எடுக்க வில்லை, ரவி மீண்டும், மீண்டும் அழைக்கவும், போனை எடுத்தாள் சீதா.

Advertisement

ரவி போனில்  சீரஞ்சீவியையும், சிவாவை பற்றி சொன்ன செய்தியை இவளால் நம்ம முடியவில்லே, “நீங்க தப்பா புரிஞ்சு கிட்டீங்க ரவி” என்றுதும்  கத்த ஆரம்பித்து விட்டான் ரவி…

Advertisement

இவளுக்கு ஒன்றும் புரியவில்லை..

 ” எல்லோரும் ப்ளான் போட்டு என்னை கொல்ல பார்க்கிறீர்களா”? என்றான் ரவி.

 “ரவி நீ என்ன சொல்லுற சிரஞ்சீவியும், சிவாவும் அப்படிப்பட்டவங்க இல்ல, அப்படி பண்ணி இருக்க மாட்டாங்க”.. என்றாள் சீதா.

 “மண்ணாங்கட்டி உன்னோட உயிர் நண்பர்கள் என்னை கொல்ல ஆள் செட் பண்ணி அனுப்பி வச்சிருக்காங்க அவங்களை, நான் சும்மா விட மாட்டேன்டி”.. என்று பல்லை கடிக்க.

“ரவி எனக்கு எதுவும் தெரியாது ரவி, நான் பெங்களூரில் இருக்கேன்,  அவங்க அப்படி பண்ணி இருக்க வாய்ப்பு இல்லை”என்று  மீண்டும் அவள், அவள்  நண்பர்களை விட்டு கொடுக்காமல் பேசவும்..

“ஏய் நீ திருந்தவே மாட்டியா ஒரு நிமிஷம் இருடி” என்றவன் லாரி டிரைவர் பேச சொன்னான் …

 அந்த லாரி டிரைவர் சீதாவை வீடியோ காலில் பார்த்து “மேடம் என்கிட்ட சிரஞ்சீவி சாரும், சிவா சாரும் தான் ரவிசாரை லாரி ஏத்தி ஆக்சிடென்ட் பண்ண சொன்னாங்க மேடம்” என்று சொல்ல..

சீதா அதிர்ச்சியானவள் தன் நண்பர்களா, கொலை செய்யும் அளவிற்கா, அவளால் நம்ம முடியவில்லை..

 சீதா அந்த லாரி டிரைவரிடம் “அவங்க எப்ப வந்தாங்க எப்ப உங்களுக்கு காசு கொடுத்தாங்க நீங்க ஏதாவது பொய் சொல்றீங்களா” என்று அவனிடம் கேட்க.

 “மேம்  இதோ பாருங்க நீங்க சொன்ன சிரஞ்சீவி சார்  அனுப்பிய காசை  ஸ்கிரீன்ஷாட்” என்று அவன்  எடுத்து வைத்திருந்த ஸ்கீரின்ஷாட்டை  அவளுக்கு போனில் காட்ட.

 தன் வாய் மீது கை வைத்தால் சீதா,, ஒரு வேலை ரவிக்கு ஆக்சிடென்ட் ஆகி இருந்தால் என்னவாகி  இருக்குமோ!.. சிரஞ்சீவியும் சிவாவும் ஏன் இப்படி செய்தார்கள் ஐயோ என்று இருந்தது அவளுக்கு …

 “ஏண்டி  நான் சொன்னது உறுதி ஆயிடுச்சா இப்ப என்ன சொல்ற உன் பிரண்டா என்ன பண்ணனும், பண்ணலாம், அவங்க ரெண்டு பேரையும் போலீஸ்ல சொல்லி உள்ள தள்ளுறேன்  ஸ்டேஷன்ல இருந்தா தான், அவனுங்களுக்கு அறிவு வரும், ரெண்டு பேரும் வெளியேவே வரக்கூடாது அப்பதான் அவனுக்கு ரவி கிட்ட மோதுனது தப்புன்னு தெரியும்” என்றான்.

 “ரவி, ரவி.ரவி இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க ரவி அவங்க லைப்பே போயிடும்,  நான் என்னன்னு கேட்டு அவங்கள கண்டிக்குறேன் ப்ளீஸ்  ரவி கொஞ்சம் பொறுமையா இருங்க” என்று சீதா கேட்க..

 “என்னடி பொறுமையா இருக்க சொல்லுற, நான் கொஞ்சம் ஏமாந்திருந்தால் அவனுங்க என்னையும் என் பிள்ளையும் சேர்த்து தூக்கி இருப்பானுங்க,,  எனக்கு என்ன ஆனாலும்  பரவால்ல ஆனால் கூட என் பையன் இருக்கான்” என்று அவன் சொன்னது ..

 “பையனா!  உங்களுக்கு பையன் இருக்கானா ரவி” என்று கேட்டதும்..

 “ஆமாம் இருக்கான், உன்ன மாதிரி  நல்ல பொண்ணுன்னு நெனச்சு வாழ்ந்த என் நண்பனுக்கு  கிடைத்து பொக்கிஷம் இவன்,,,   அந்த பொக்கிஷத்தை ஒருத்தி தொலச்சிட்டு, என் நண்பனை விட்டுட்டு  வேற ஒருத்தன் கூட  போயிட்ட இவ அம்மா, அந்த பொக்கிஷத்தை நான் தத்தெடுத்து மகனா வளக்குறேன்  போதுமா” என்றதும் சீதாவுக்கு பாதி புரிந்தது, அப்போ குழந்தை இவருடையது, இல்லை இவர் நண்பர் உடையதா! என்று நினைத்தவளுக்கு, குழந்தை இருக்கும் போதா, ரவியை கொல்ல பார்த்தனர் என்று நினைத்தவள்.

“ரவி குழந்தை எங்கே அவனுக்கு  ஒன்றும் அகலீயே”?.. என்றும்..

“அவன் நல்லா இருக்கான், அவனுக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தது  இந்நேரம் உன்  இரண்டு ஃப்ரெண்ட் உயிரோடு இருந்திருக்க மாட்டாங்க”..

 “ரவி நீங்க பொறுமையா இருங்க ரவி நான் என்னன்னு கேட்டு சொல்றேன்” என்றாள் சீதா.

 “பொறுமையா நானா!  உன்  ரெண்டு ஃப்ரெண்ட்மே உள்ள போறது உறுதி அவங்க வாழ்க்கை பூரா ஜெயில்ல தான் இருக்க போறானுங்க” என்றான்..

 “ரவி ப்ளீஸ் ரவி,,  எனக்காக ரவி கொஞ்சம் பொறுமையா இருங்க ரவி,  அவங்க லைப்பே போயிடும்,   நான் அவனுங்களை  கண்டிக்கிறேன்,  இனிமேல் அவங்க உங்க பக்கமே வர மாட்டாங்க, எனக்காக கொஞ்சம் மனசு வைங்க ரவி, ரவி பிலீஸ்” என்று  சீதா நண்பர்களுக்காக கதற.

 “நீ எதுக்கு இவ்வளவு எமோஷன் ஆகுற,  தப்பு பண்ணது அவனுங்க கண்டிப்பா அவங்களுக்கு தண்டனை கிடைக்கும்,  என்னை தொட நெனச்சவனையே நான் சும்மா விட மாட்டேன், இவனுங்க என்னை கொல்ல பாத்தனுங்க சீதா அவனுங்களை சும்மா விட சொல்லுறீயா, என் அப்பாவுக்கு மட்டும் இந்த விசயம்  தெரிஞ்சது, அவனுங்களை வெட்டி, கொன்னுடுவாறு” என்றதும்..

பயந்து போன சீதா, “ரவி பிலீஸ் ரவி… ரவி வேண்டாம் ரவி, நான் அவனுங்களை, கண்டிக்குறேன் ரவி, எல்லாரும் லைப்பும் வீணா போயிடும் ரவி, என்னால தான் எல்லா பிரச்சனையும், நான் வேணா செத்திற வா ரவி, அப்பறம் எல்லாரும் சீதா இல்லான்னு நிம்மதி இருங்க, என்னால தான் எல்லாமே” என்றவள் கதறி அழவும் கொஞ்சம்  மனம் இறங்கினான் ரவி.

“ஏய் வாயை மூடு,  என்ன உன் பிரண்ட  காப்பாத்த பாக்குறீயா, அவனுங்களை நீ என்ன நினைத்தாலும் என்கிட்ட இருந்து  காப்பாத்த முடியாது, கண்டிப்பா நான் அவங்களை உள்ள தூக்கி போடுறது உறுதி” என்றான்..

“சரி அப்போ என்னையும் சேர்த்து செயில்ல  போடுங்க, நான் தான் முதல் குற்றவாளி, நான்  தானே இதுக்கெல்லாம் காரணம், என்னால தானே இவ்வளவு பிரச்சனையும், நானே போஸிசில் போயி சொல்லுறேன், ரவி சாரை கொல்ல ஆளு அனுப்புனது நானுன்னு”..

“ஏய், ஏய் பைத்தியம் அப்படி பண்ணி தொலச்சுராதடி, உன் லைபே போயிடும் பேர் ரொம்ப முக்கியம் சீதா அப்படி பண்ணாத” என்றான்.

 “ரவி சார்  எனக்காக இந்த ஒரு தடவை என் பிரண்ட்டுங்களை  மன்னிச்சிருங்க ப்ளீஸ் இனிமே அவனுங்க உங்க பக்கமே வர மாட்டாங்க அதுக்கு நான் கேரண்டி ப்ளீஸ் எனக்காக இந்த ஒரு தடவை” என்று சீதா வேதனையோடு பேசியதை கேட்ட ரவிக்கு கொஞ்சம் மனம்  இறங்கியது..

 ” இன்னும் ரெண்டு நாள் தான்  டைம்,  அவங்க ரெண்டு பேர் வந்து என்கிட்ட மன்னிப்பு கேட்கணும்” என்றான் ரவி..

“சரி சார்  கண்டிப்பா அவனுங்க உங்ககிட்ட வந்து மன்னிப்பு  கேட்பானுங்க”, என்றவள், “தாங்யூ சார்” என்று போனை வைத்தவள்..

அடுத்த நிமிசம் சென்னைக்கு கிளம்பி இருந்தாள் சீதா..

சீரஞ்சீவிக்கும், சிவாவுக்கு பயம் வந்து விட்டது, சீதாவுக்காக ரவியை  கொல பண்ண காசை கொடுத்து ஆளை அனுப்பி வைத்து விட்டனர், கொலை செய்ய போனவன் இன்னும் ஒரு போனும் பண்ணாமல் இருக்க..

என்ன ஆச்சோ என்று இருவரும் சீரஞ்சீவின் இல்லத்தில் பேசிக்கொண்டு இருக்கு போதே.

புயலென சீரஞ்சீவி அறைக்கு வந்தாள் சீதா..

சீரஞ்சீவியும், சிவாவும் முளிக்கும் முளியிலே அவர்கள் தப்பு பண்ணி இருக்கிறார்கள் என்று தெரிந்தவள், இருவரையும் அடி வெலுத்து விட்டாள்..

“ஏன்டா  இப்படி பண்ணீங்க” என்று இவள் அடிக்கவும், இருவரும் தெரிந்து விட்டது, ரவி மூலம் விசயம் சீதாவுக்கு தெரிந்து விட்டது என்று, தன் பளு இருக்கும் வரை இருவரையும்  அடித்த சீதா, கதறி அழ.

அவள் அழுவதை பார்க்க முடியாத நண்பர்கள் அவளிடம் வர.

“பக்கத்துல வராதீங்க” என்று கத்தி இருந்தாள்….

“சீதா உன்னை இப்படி பண்ணவனை சும்மா விட சொல்றீயா”?…

“எப்படி பண்ணாரு டா  ரவி, அதை நீ பார்த்த, உனக்கு ஒரு விசயம் தெரியுமா, அந்த ரவியை நான் உயிருக்கு, உயிரா விரும்புறேன்” என்றதும்..

சிவாவும், சீரஞ்சீவியும் அதிர்ச்சியாக பார்க்க,

“ஆனா ரவி  என்ன விரும்பல, போதுமா, இனிமே எனக்கும் ரவிக்குமே எந்த உறவுமே இல்ல நீங்க ஏன்டா, நடுவுல வர்ரீங்க, என் வாழ்க்கையை நான் பாத்துக்கிறேன், நீங்க ரெண்டு பேரும் இதுல வர்றதீங்க,  போதுமடா சாமி, தோழி, தோழியின்னு நீங்க  பண்ணது எல்லாம் போது ஆளவிடுங்க சாமி, நீ அவனா திட்ட, அவன் உன் அடிக்க, இப்போ கொல பண்ணுற அளவுக்கு துணிஞ்சு இருக்கீங்க..

அந்த ரவிக்கு நீங்க அவன்ன கொல பண்ண ஆள அனுப்பி வச்சது தெரிஞ்சு போச்சு, போலீஸ் வந்துட்டே இருக்கு உங்க இரண்டு பேரையும் அரஸ்ட் பண்ண. இப்போ என்ன செய்ய போறீங்க இரண்டு பேரும்” என்றாள் அவர்களை மிரட்டி பயம் காட்ட.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!