Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 18 1

சீதா கல்யாண வைபோகமே..



Advertisement

அத்தியாயம் -18

Advertisement

Advertisement

  அவார்ட் பங்ஷன் தொடங்கி இரண்டு மணி நேரமானது.

Advertisement

 ஆடல், பாடல், கமெடியென, மேடையில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது..

நிகழ்ச்சி மேடையில் நடக்கும் போது, கீழே அமர்ந்துள்ள நடிகை, நடிகர்களை வீடியோ எடுத்து பின் திரையில் காட்டிக்கொண்டிருக்க.

ரவியின் கண்கள்  சீதாவை தேடியது, அவளோ அவனிடமிருந்து மிகவும் தள்ளி அமர்ந்திருந்தாள்..

கூட்டம் அதிகமாக இருக்க, அவனால் எழுந்து தேடவும்  முடியாது, பின் திரையில் சீதாவை  காண்பிப்பார்களா என்று ஆவளோடு அவன் எதிர் பார்த்திருந்தான்..

அவன் ஆசை  பொய்க்கவில்லை   கேமராக்கள் பல முறை சீதாவை  பின்திரையில் காண்பிக்க,  நண்பர்களோடு பேசிக்கொண்டு நிகழ்ச்சியை பார்த்து கைதட்டிக்கொண்டிருந்தவளை பார்த்து ரசித்தான் ரவி..

 அதுவும் கருப்பு வண்ண சேலையில் தேவதை பெண் போல் இருந்த அழகு தேவதையை பார்க்காமல் ரவியால் இருக்க முடியுமா?.. என்ன?

 அவள் எங்கே அமர்ந்திருக்கிறாள்  என்று தெரிந்து கொண்டவன் சற்று தள்ளிப் பார்க்க, அவளோ மேடையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தாள்..

 ரவியின் பார்வை சீதாவின்  மேல் படுவதை  பார்த்த சிவாவும் சிரஞ்சீவியும் இவன் எதுக்கு இங்கே பார்க்கிறான் என்று அவனைப் பார்த்து முறைத்து அமர்ந்திருந்தனர் …

அவார்ட் கொடுக்க ஆரம்பித்து இருந்தார்,, முதலில் இந்த வருடத்தில் ரிலீஸ்சான சிறந்த பாடல், இசை, பாடகர், பாடகி,, என்று அவர்களை ஒவ்வொருவறாக அழைத்து ஹவார்ட் கொடுக்க..

அதில் இந்திரா  சேனா படத்தின் பாடல் வின் பண்ணியிருந்தது.

அந்த பாடலில் வீரசேனா  குழலிசை எண்ணி பாடும் பாடல்,, ஆண் குரலுக்காக வின் பண்ணியிருந்தார் பாடகர்,, திரையில் அந்த பாடல் ஒலிப்பரப்பானது, அதில் சிவா, சீதாவோடு காட்டில் டூயட் பாடும் பாடல் மிக அழகாய் இருந்தது.

சீதாவுக்கு நீண்ட நாள் கழித்து தன்னை பெரிய ஸ்கிரினில்  பார்க்கும் போது நானா?  இது என்றிருந்தது..

கூடவே ரவியோடு இந்திரா சேனா படம் பார்த்ததும் ஞாபகம் வர..

தன் மனதை கட்டு படுத்தியவள்,, மேடையில்  பக்கம் கவனம்  செலுத்தினாள்.

பின் சிறந்த சண்டை பயிற்சியாளர், பெஸ்ட் ஆர்கிடக், நகைசுவை நடிகர், என அனைத்து கேட்டகிரியிலும் அவார்ட் வழங்கிக்கொண்டிருக்க..

இப்போது மேடையில் உள்ள தொகுப்பாளினி, “இந்த வருடத்தில் பன்னிரெண்டு அவார்ட் வாங்கிய  ஒரே படம்,,  தா ! ஒன் அன்  ஒன்லி!  பிளாக் பாஸ்டர் மூவிஸ் இந்திரா சேனா”…..  என்று கத்த அங்கே உள்ளவர்கள் அனைவரும் கை தட்டினார்கள்..

“இந்த படத்தில் மேக்கிங் வீடியோ பார்க்கலாமா?” என்ற தொகுப்பாளினி,

பின்திரையை காண்பிக்க..

அதில் இந்திர சேனா படம் சூட்டிங் வீடியோ  ஒலிபரப்பாகி கொண்டிருந்தது..

சிரஞ்சீவி  சிவாவுக்கும், சீதாவுக்கும் படத்தின் சீனை நடித்து காண்பிக்க..

சிவாவும்,சீதாவும் நடிப்பது போல காட்சி, பின்பு சண்டை காட்சியில் பிரம்மாண்டமாய் நடப்பதை கழுகு பார்வையில் பார்க்க, பின்பு  குழலிசை இறப்பது  போல காட்சி படமாக்கபட்டது, படத்தில் நடித்த அத்தனை பேருக்கும் சிரஞ்சீவி நடிக்க சொல்லி கொடுப்பது பின்பு ரெடி சாட் ஓகே என்று தீவிரமாக வேலைசெய்யும் காட்சியை பார்த்த ரசிகர்கள் கைதட்ட…

சீதா தன் பக்கத்தில் அமர்ந்திருந்த சிரஞ்சீவியின் கையைபிடித்து தட்டிக்கொடுத்தாள், அவள் கண் கலங்கி இருந்தது, “இந்த படத்தில் ஹீரோவே  நீதான்டா, உன்னால தான் இந்த படமே, இவ்வளவு ஹிட், எல்லாத்திற்க்கும் காரணம் நீ தான்” என்றிருந்தாள்.

சிவாவும் சீதா சொல்வது சரி என்பது போல் சிரஞ்சீவியை  அணைத்துக்கொள்ள..

“ஓகே, ஓகே சூட்டிங்கை பார்த்தோம் இந்த படம் எப்படி உருவானது என்பதை நம்ம டைரக்டர்  சிரஞ்சீவி சார் ஒரு வீடியோவில் சொல்லி இருப்பார், அதை கேட்போமா”  என்ற தொகுப்பாளினி  பின் திரை காண்பிக்க.

அதில் சிரஞ்சீவி பேசி வீடியோ ஒலிபரப்பானது…

“ஹாய் நான் சிரஞ்சீவி, என்னோட முதல்  படம்  இந்திரா சேனா இப்போ தேட்டருல ரொம்ப சக்சஸ் புல்லா ஓடுது, ரொம்ப சந்தோஷம்,,..

நான் காலேஜ் படிக்கும் போதே சினிமால டைரக்டர் ஆகனும் என்பது என் ஆசை, கனவு,,,, காலேஜ் முடிச்சிட்டு ஒரு பெரிய டைரக்டர் கிட்ட ரெண்டு வருசமா , அசிஸ்டன்ட் டைரக்டரா வேலை பார்த்தேன், அப்பறம் ஒரு கதையை ரெடி பண்ணி, படமெடுக்க பல தயாரிப்பாளர்கள் கிட்ட  என் கதையை சொன்னேன்,, எல்லாரும் என்  கதையை கேட்டுட்டு, கதை நல்லா இருக்கு பட் பட்ஜெட்  அதிகமா இருக்குன்னு சொல்லி என்ன படத்தை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க,..

அப்போ எனக்கு கிடைச்ச பிரண்ட் தான் சிவா, சிவாகிட்ட என் கதையை சொல்லி ஹீரோவா நடிக்க கேட்டேன், சிவா சார் உடனே ஓகே சொல்லிட்டாரு,, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து என் படத்துக்காக நல்ல ப்பிரொடிசரை தேடினோம்,  கதை கேட்டவங்க எல்லோரும், பெரிய பட்ஜெட்,  புது டைரக்டரை நம்பி இவ்வளவு கோடியை இன்வஸ் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

நான் ரொம்ப சோர்ந்து போயிட்டேன், என் படம் அவ்வளவு தானா என்று..

அப்போ தான் சிவா என்னை ரவிதேஸ்சா சார் கிட்ட  கூட்டிட்டு போனார்.

ரவி சார் கிட்ட  கதையை  சொன்னவுடனே எப்போ  சூட்டிங் ஆரம்பிக்கிறீங்க, எவ்வளவு பணம் வேணுமோ வாங்கிக்கோங்க. ஆனா நீங்க கத சொன்ன மாதிரியே படம் வரணுமுன்னு சொன்னாரு..

எனக்கு ரொம்ப சந்தோஷம், இப்படி ஒரு ப்பிரோடிசர் கிடைக்க.

 இதுக்கு அப்புறமா நாங்க ஹீரோயினை தேடினோம்..

 பல ஹீரோயின்னுக்கு   மேக்கப் டெஸ்ட்  போட்டோம்,  என் படத்துக்கு ஏத்த மாதிரி ஹீரோயின் கிடைக்கல நிறைய பேருக்கு மேக்கப் டெஸ்ட் பண்ணி பார்த்தோம் எனக்கு அவங்கள பிடிக்கல..

பல மாசமா ஹீரோயின்ன  தேடிக்கிட்டே இருந்தேன்..

 அப்பதான் என் உயிர் தோழி சீதாவை ஒரு பார்க்கில் வைத்து பார்த்தேன்..

.

 ரொம்ப நாளா என் தோழி  சீதாவை நான் தேடிட்டு இருந்தேன்,, நான் அவளை  பார்த்த சந்தோஷத்தில்  நிறைய பேசினேன்..

 சிவா சார் தான் உன் படத்துக்கு ஹீரோயின் கேரக்டருக்கு நடிக்க  சீதா சரியா  இருப்பான்னு சொன்னாரு..

அப்போ தான் சீதாவை ஹீரோயின்னா  என் படத்துல நடிக்க கேட்டோம், என் பிரண்ட் என்னை பார்த்து சிரிச்சு பைத்தியம், போடான்னு சொன்னா..

நான் அவளை விடல, அவளை தொல்லை பண்ணி மிரட்டி, புலம்பி தான் இந்த படத்துல நடிக்க வச்சேன்..

சும்மா சொல்ல கூடாது என் உயிர் தோழி கஷ்டபட்டு நடிச்சா,, நான்  அவளை ரொம்ப கஷ்ட படுத்தி இருக்கேன், அவ பாட்டுக்கு நிம்மதியா கார்ரோட்டிட்டு இருந்தா, அவளை கூட்டிட்டு வந்து,  குதிரை ஓட்ட சொல்லி கொடுக்குறேன்னு சொல்லி, அவ கீழ விழுந்து, காலில்  அடி பட்டு, சண்டை போட சொல்லி கொடுத்து, அவ இந்த படத்துல டபுள் ஆக்டிங் வேற,, என் தோழி ஹீரோயின்னா, நடிக்கலன்னா என்னால இந்த  படத்தை எடுத்திருக்க  முடிஞ்சுருக்காது..

அப்புறம் ப்பிரோடிசர் சார், என்னை  நம்பி 300 கோடி,  படம் எடுக்க கொடுத்தாரு, அத பல மடங்கா நாங்க எல்லாரும்  சேர்ந்து நடிச்சு,  திருப்பி  கொடுத்திருக்கிறோம், என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோஷம், அப்பறம் கேமரா மேன் ஜானை நான் மறக்க மாட்டேன், இந்த படத்தை இவ்வளவு அழகாய் எடுத்து கொடுத்ததுக்கு, தாங்யூ, தாங்யூ சார்” என்று அந்த வீடியோ முடிந்திருந்தது.

மேடையில்  இருந்து தொகுப்பாளினி மைக்கில்.

“கம் ஹான் இன் ஸ்டேஜ் இந்திர சேனா டீம், ப்பிரோடிசர் ரவி சார், டைரக்டர் சிரஞ்சீவி சார், ஹீரோ சிவா சார், ஹீரோயின் கீதா மேடம்,  அப்புறம் கேமரா மேன், என்று ஒவ்வொருரின் பெயரை  சொல்லி மேடைக்கு அழைக்க.

அனைவரும் மேடைக்கு வந்து கொண்டிருந்தனர்..

ரவி எழுந்ததும் தீப்தியும் சேர்ந்து அவனோடு வர..

தீப் இது இந்திர சேனா டீம்,, சோ, யூ சிட் டவ்ன்” என்றவன் எழுந்து தனது கோர்டை சரி பண்ணுவது போல் நின்றவன், சீதா வருவதற்காக காத்திருக்க.

சிவா முதலில் வர அவன் பின்னாடி சீதா அதற்கு பின்னாடி சிரஞ்சீவி என்று மூன்று பேரும் வரிசை யாக வர.

 சீதா தப்பி தவறி கூட ரவி பக்கம் திரும்பவில்லை மேடையை பார்த்து நேராக செல்ல..

 ரவி சீதாவோடு இணைந்து நடப்பது போல் நடந்து வந்தான்.

 சீதாவுக்கு என்ன இவன் என் பக்கத்தில் வருகிறான் என்று முன்னாடி சென்று கொண்டிருந்த சிவாவை பார்க்க..

 அவன்  படிக்கட்டில் ஏறும் போது சீதாவுக்காக  கைநீட்டினான், சீதா சிவாவின் கைபற்றி நடந்தாள்.

ஒரு கைபுடவையை பிடித்திருக்க, இன்னொரு கை சிவாவை பிடித்த படியே மேடையேறியவளுக்கு, சற்று நடையில்  தடுமாற்றம் ஏற்பட..

மெல்ல சரிய போனவளை ரவி பிடிக்க வர.. சிரஞ்சீவி அவனுக்கு முன்பு தோழியின் தோழை தொட்டு  “சீதா” என்று, மெல்ல நடக்க வைத்து மேடையேறினார்கள்.

ரவி சீதா அருகில் நிற்க போக சிவாவும், சிரஞ்சீவியும் விடவில்லை, இருவரும் அவளின் பக்கத்தில் யாரும் நிற்காத வாரு நின்று கொள்ள.

சீதாவிடம் ஜான் வந்து கைகுலுக்கி பேசினார்,, பிறகு இந்திர சேனா படத்தில் நடித்து சக கலைஞர்கள் சீதாவிடம் வந்து நலம் விசாரிக்க மேடையில் இந்திரசேனா  படத்தில் வேலை பார்த்த முக்கியமான ஆட்கள் நின்றிருக்க…

ஒவ்வொருவருக்காக பரிசு வழங்கபட்டது..

அதை ஒரு சூப்பர் ஸ்டார் வந்து கொடுக்க, அவார்டை அனைவரும் வாங்கிக்கொண்டனர்..

அடுத்தது இந்த படத்தின் நடித்த  ஹீரோயின் கீதாவுக்கு, பெஸ்ட் ஆக்டர் இன் திஸ் இயர், என்று கூறி சீதாவுக்கு அவார்ட் தர..

இவ்வளவு நேரம் சும்மா நின்ற ரவி சீதா அவார்ட்  வாங்கியதும் தன்னை மீறி கைகளை தட்டினான்..

சிவாவே ஒரு நிமிடம் ரவியை நிமிர்ந்து பார்த்தான்.

ரவிதேஸ்சா முகத்தில் அத்தனை சந்தோஷம், ஏதோ அவனே அவார்ட் வாங்கியது போல் சீதாவுக்கு அவார்ட் கொடுக்கும் போது கைதட்ட.

அவன் முகத்தில் சீதாவின் மேல் உள்ள நேசத்தின் அளவு தெரிய குழம்பி போனான் சிவா..

அடுத்தது ஹீரோ சிவா சார் என்று சொல்லியதும், சீதாவும், சிரஞ்சீவியும் கைதட்ட.

சிவா அவார்ட் வாங்கிக்கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!