Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 22 1

சீதா கல்யாணம் வைபோகமே..

அத்தியாயம் – 22



Advertisement

Advertisement

  சீதாவுக்கு  ஒரு முடிவை எடுக்க முடியவில்லை..

Advertisement

ஜோசியர் சொல்லியதை அவளும் தான் உள்ளறையில் இருந்து  கேட்டாள்.

Advertisement

அவளே ஜோசியர் சொல்லியதை  கேட்டு பயந்து போனாள், வெங்கட்டுக்கு ஏதாவது நேர்ந்தாள், அது பத்மாவையும்  இந்த குடும்பத்தையும் எவ்வளவு பாதிக்கும்..

இதற்கு தீர்வு இவள் கையில் என்றதும், மனம் பாரமாகி போனது.

ரவியை ஏற்க அவள் தயராக இல்லை, என்னை வேண்டாம் என்று விட்டு சென்றவனை நான் எதற்கு திருமணம் செய்ய வேண்டும், குழந்தைகளுக்காக வா.. அது அவளுக்கு தேவையேயில்லை, அவள் பிள்ளைகளை வளர்க்க அவளால் முடியும்..

தனக்கு யாருமில்லை என்று நேபாளத்தில் இருக்கும் போது தனிமையில்  பல நாள் அழுதிருக்கிறாள்.

பல நாள் அழுது  கொண்டே அப்படியே அமர்ந்துபடியே  தூங்கியும்  இருக்கிறாள்.

ஒரு நாள் அவளை தனிமை அதிகமாக வாட்ட, எல்லா கடவுள்களையும் திட்டி மயக்கமானாள்..

அவள் கண்முளிக்கும் போது. அவள் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டிருந்தாள்…

நேபாள நண்பர்கள் குடும்பம் அவளை அணைத்து முத்தமிட்டு வாழ்த்துக்களை சொல்ல, சீதாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவர்கள் தான் இவளிடம் நீ  கர்பமாக இருக்கிறாய் உனக்கு  இரட்டை பிள்ளைகள் பிறக்க போவதாகவும் சொல்ல..

ஆனந்தத்தில் கண்ணீரே வந்து விட்டது சீதாவிற்கு, தனிமையில் தனக்கு யாருமில்லை என்று தவித்தவளுக்கு  ஒன்றுக்கு, இரண்டாக உறவு கிடைக்க, மகிந்து போனாள்.

அதற்கு காரணமாக இருந்த ரவிக்கு முதலில் நன்றி சொல்லத்தான் தோன்றியது சீதாவிற்கு.

பிறகு அவன் அவளிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டதை  எண்ணி கழங்கி போனவள்,.

இப்போது தனிமை இனிமையாக மாற்றி இருந்தார்கள் அவள் பிள்ளைகள்,  ஒவ்வொரு நாளும் தன் பிள்ளைகளோடு பேசுவது, நன்றாக உண்பது, உறங்குவது, பல இடங்களை ரசித்து பார்ப்பது என்று அவளின் பொழுதுகள், இனிமையாக சென்றன..

சீதாவுக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியவில்லை, அவளால் பத்மா வீட்டை விட்டு செல்லவும் முடியவில்லை, தான் சென்று  விட்டாள் ஏதாவது விபரீதம்  இங்கே நடந்து விட்டாள், அது அவள் உயிர் உள்ள வரைக்கும் அவளை, கொல்லாமல் கொன்று விடும், இதற்கு அவள் இங்கே இருப்பது நல்லது என்று யோசித்தவள், ரவியை அவள் திருமணம் செய்ய அவளுக்கு மனம் வரவில்லை, அவளுக்கு இந்த குடும்ப சந்தோசம் முக்கியமாக பட.

ஜோசியர் சொல்லியது நினைவு வந்தது,  ‘ஆக்க பிறந்தவள் நீ, அழிக்கும் காரியத்தை செய்யாதே’ என்று சொல்லியது ஞாபகம் வர.

அமைதியாக அறையில் படுத்திருந்தாள் சீதா.

ரவி கதவை திறந்து பின்பு பூட்டிய சத்தம் வர.

அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை அவள்..

 அவள் கால் அருகே வந்து அமர்ந்தான் ரவி..

சீதாவின் பாதத்தை தொட்டு மன்னிப்பு கேட்பதும் போல் தன் மடியில் வைத்து கொள்ள.

கோபத்தில் தன் காலை இழுக்க நினைத்தவளில் காலைதன்னோடு இறுக்கமாக பிடித்து கொண்டான் ரவி..

எழுந்து அமர்ந்தவள் அவனை பார்த்து முறைக்க, “சாரி சீதா”.. என்று சொன்ன நொடி..

அடி, அடியென்று  அவனை அடித்து விட்டு கதறி அழுதிருந்தாள்.

அவள் அழுவதை காண பிடிக்காதவன்,,

அவள் அருகில் வர.

“தொடதா, எந்த உரிமையில் என்னை தொடவர நீ,  போ” என்று கத்த..

 “சீதா சாரிடா சாரி” என்று ரவி சொல்ல.

 “சாரி என்ற ஒரு வார்த்தை சொன்னால், நீ பண்ணது எல்லாம் சரியாகிடுமா,  நான் அனுபவிச்ச வேதனை எல்லாம்   உன்னால  உணரமுடியுமா? எனக்கு உன்னை கல்யாணம் பண்ண விருப்பம் இல்லை, நீ போ, என் பக்கத்துல வராத ”  என்றாள்..

ரவி அமைதியாக இருந்தவன் பின்பு

“சீதா” என்றான்..,

“நீ கிளம்பு” என்றாள் சீதா..

“சீதா நீ என்னை கல்யாணம் பண்ண வேண்டாம், ஆனா,  நீ இந்த வீட்டுலே இரு” என்றான்..

“இந்த வீட்டுல இருக்க நீ எனக்கு பர்மிசன் கொடுக்க வேண்டாம்?”..

நான் எது சொன்னாலும் பதிலுக்கு கோபப்படுபவளை எப்படி சமாதானம் பண்ணுவது என்று யோசித்தவன்.

“சீதா உன் பிள்ளைகளுக்கு அப்பாவாக இருக்க எனக்கு உரிமை கொடு அது மட்டும் போதும்”, என்றான்.

“இப்படி பட்ட ஒரு அப்பா அவர்களுக்கு தேவையே இல்லை, தினமும் ஒரு பொண்ணோடு உல்லாசமாக இருக்குற, உங்கள மாதிரி ஒரு அப்பன் என் பிள்ளைகளுக்கு தேவையா?, நான் போதும் என் பிள்ளைகளுக்கு”.

“நான் தினமும் ஒரு பெண்ணோட உல்லாசமாக இருந்ததை நீ பாத்தியாடி, வாய்யிருக்குன்னு பேசாதே, நான்  உன் விசயத்தில் தப்பு பண்ணிட்டேன்னு அதுக்காக அமைதியா இருக்கேன், இதையே சாக்காவச்சு, என் கெரக்டரை அசிங்க படுத்துற நீ”.

“யாரு நானு, உங்க கெரக்டரை, நாங்க அசிங்க படுத்திட்டோம், சார் இந்த பக்கம்தீப்தி, அந்த பக்கம் சோணாலியோடு ஒட்டி ஒரசிகிட்டு அவார்ட்   பங்ஷனுக்கு வந்ததை நாடே பாத்துச்சு, இதுல இவர் கெரக்டரை பத்தி தப்பா பேசிட்டேன் உண்மையே சொன்னா குத்துதோ” என்றாள்.

“வைத்துல பிள்ளையிருக்கேன்னு பார்க்குறேன் இல்லண்ணா அறைஞ்சிடுவேன் சீதா.”.

“வா வந்து  அடி, அது மட்டும் தான் இன்னும் செய்யல நீ அதை பண்ணிடு”, என்றாள்.

“சீதா ஏன்டி இப்படி பேசுற,  என்னால முடியல,” என்றான் அவள் முன் மண்டியிட்டு.

“என்னால   கூட தான்   முடியல, எனக்கு வர போற புருஷன் ராமர் மாதிரி இருக்கனுமுன்னு,  ஆசை பட்டேன், நீ அப்படியா இருக்க”?,..

“சீதா உன்னை தொட்டதுக்கு  பிறகு நான் யாரையும் தொடல டி,  என்னை நம்பு, நான் ராமர் இல்லை தான்,, நான் ஒத்துக்கிறேன், உன்னோடு   வாழ்ந்ததுக்கு பிறகு, வேற யாரையும் என்னால தொட முடியலே சீதா என்னை நம்பு, நீ என் வாழ்வில் வந்து போன பிறகு, என்னால ஒரு பொண்ணையும் நெறுங்க முடியலடி, பிலீஸ் என்னை நம்பு, நான் பண்ணது தப்பு தான் நான் ஒத்துக்கிறேன், நீ என்மேல எவ்வளவு பாசம் வச்சுருக்கன்னு  தெரிஞ்சும், உன்னை பேசுனது தப்பு தான், நான் தெரிஞ்சு தான் அப்படி, பண்ணேன், நீ மத்த பொண்ணுங்க மாதிரி, போயிடுவேன்னு நெனச்சேன்டி, ஆன நீ இப்படி என் பிள்ளைகளை சுமந்து என் முன்னாடி வருவேனு நினைக்கல சீதா.

என்னை மன்னிச்சிடு, நான் பண்ணது தப்பு தான்”என்றான் ரவி..

“நான் உன்னை  மன்னிக்கவும் மாட்டேன், உங்களை  கல்யாணம் பண்ணவும் மாட்டேன்,,” என்றாள் சீதா.

“சீதா புரிஞ்சுக்கோ, உன்னால தனியா  நம்ம பிள்ளைகளை வளர்க்க முடியாது, நான்சொன்னா கேளு,, என்னை தானே உனக்கு பிடிக்கலை, நான் இந்த வீட்டை விட்டு  போயிடுறேன், உனக்கு  தொந்தரவு தர மாட்டேன், பிலீஸ் என்னை கல்யாணம் பண்ணிக்கோ, என்னை என் பிள்ளைகளிடம் இருந்து பிரிச்சிடாதே, எனக்கு என் பிள்ளைகள் வேணும், அவர்கள் வளரல ஒரு நல்லா சூழ்நிலை வேணும், அது உனக்கு இங்கே தான் கிடைக்கும், நீ இங்கே இரு சீதா, என் மனைவி என்ற அங்கிகாரத்தோடு… நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், நீ இங்கேயே இரு சீதா,” என்றான்.

“என்னால முடியல ரவி, நான் போறேன்னு ”  என்று சொன்னவளை.

தடுத்து நிறுத்தியவன்..

“இந்த ஜோசியர் சொல்லியது  மேலயெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல..

நீ இங்கே தான் இருக்கனும்”,

“என்னால உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாது ” என்றாள்.

 “நீ என்னை கல்யாணம் பண்ணா, நான் உன்னை தொந்தரவு தர மாட்டேன்,  நீ என்னை கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொன்னா? உனக்கு குழந்தை  பிறந்தவுடன், ஒரு குழந்தையை நான் தூக்கிட்டு வந்துடுவேன், உன்னிடம் ஒரு குழந்தை, என்னிடம் ஒரு குழந்தையாக தான் தனி தனியா வளருவாங்க,  உனக்கு சம்மதமா, உன்னால ஒரு குழந்தை பிரிந்து வாழ முடியுமா.. கதிரை உன்கண்ணுல காட்ட மாட்டேன், யோசிச்சு  பதில் சொல்லு, என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா”.. என்றான்.

சீதா ரவி இப்படி மிரட்டுவான் என்று நினைக்கவில்லை..

கதிரை விட்டு அவளால் செல்ல முடியாது.. குழந்தைகளின் வாழ்வையும்  அவள் யோசித்தாள்..

ரவியால்  தன் இரண்டு குழந்தையையும் தன்னிடம் இருந்து பிரிக்க முடியும், பத்மாவின் முகமும், நாகம்மாள் முகமும்  தன் முன் வந்து போனது, இவர்கள் தன்னோடு இருந்தாள், தன் பிள்ளைகளை பார்த்துக்கொள்வார், அவர்கள் கவனிப்பில், நெகிழ்ந்து போயிருந்தவள்,,..

பத்மாவின் வீட்டில் இருக்க நினைத்தவள்.

ரவியை  நிமிர்ந்து பார்த்து,, “நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்,  அதற்க்கு பதில் எனக்கு  நீங்க ஒரு வாக்கு கொடுக்கனும் ” என்றாள்.

“நீ என்ன சொன்னாலும் கேட்குறேன்” என்றான் ரவி.

“நீங்க என்னை கல்யாணம் பண்ணுண நாளிலிருந்து,  இந்த வீட்டில் தங்க கூடாது, உங்களை இந்த வீட்டுக்கு   வர வேண்டாம் என்று நான் சொல்லலை,  நீங்க வரலாம் போலாம், பிள்ளைகளை பார்க்கலாம், ஆனால் என் பக்கம் வர கூடாது, பொண்டாட்டி என்ற உரிமையை எடுத்துக்க கூடாது, அப்படி இருந்தா, நான்  உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று கூற..

“சரி சீதா” என்றவன் நாகம்மாளிடம் சென்று  சீதா கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டாள் என்று சொல்ல..

நாகம்மாளுக்கு கண்கலங்கியது, எங்கே சீதா ரவியை திருமணமுடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாள் என்ன  செய்வது என்று தவித்து போய் இருந்தவர், சீதா சம்மதம் சொன்னதும்..

சீதாவை பார்த்து “என் குடும்பத்தை காப்பாத்த வந்து இருக்குற தேவதைடா நீ” என்று அணைத்து கொள்ள.

பத்மாவதி சீதாவிடம் எதுவும் கூற வில்லை, அவரால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை, ரவியிடமிருந்து  இப்படி பட்ட செயலை அவர் எதிர் பார்க்க வில்லை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!