Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 22 2

சீதாவை எண்ணி மிகவும் வருத்தம் கொண்டார், மகனிடமும் பேசவும் இல்லை, அமைதியாக அழுது கொண்டு இருந்தவரை, சீதா தான் பேசி சரிபண்ணினாள்.

சீதாவை  கட்டி அணைத்தவர், “நீதான் என் பொண்ணு சரியா, எனக்கு பிள்ளைகளே இல்லை,  நீ தான் என்னை பாத்துக்கனும், நான் உன்னை பாத்துக்கிறேன்” என்றார்.



Advertisement

அவர் பிள்ளைகள் மேல் வருத்ததில் உள்ளார் என்று புரிந்து கொண்ட சீதா.

Advertisement

“சரி அத்தை” என்றார்.

Advertisement

நாளை  நல்ல நாளாக  இருப்பதால்  அதிகாலை  4 மணிக்கே குல தெய்வம் கோவிலில்  எழிமைமயாக திருமண நடந்த ஏற்பாடு பண்ணியிருந்தனர், யாரையும் அழைக்க வில்லை, சீதா மேடிட்ட வயிரும் இருக்கும் போது திருமணம் நடந்தால் பல விமர்சனங்கள் வரும், பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்து திருமணத்தை அவர்கள் குல தெய்வ கோவிலில் அதிகாலை நான்கு மணிக்கே செய்ய ஏற்பாடு பண்ணி இருந்தனர்..

Advertisement

பத்மாவின் உயிர் தோழி சாவித்திரி அவர் கணவரோடு வந்திருந்தார்.

சீதாவை ரெடி பண்ணி  அவர் தான் அழைத்து வந்திருந்தார்.

சீதா ஒரு காரிலும், ரவி ஒரு காரிலும் வந்திருந்தனர்.

வெங்கட்டும் மகனிடம் பேசவில்லை, மகன்  தொழிலில் செல்லும்  உயரத்தை பார்த்து புரித்து போயிருந்தவருக்கு , ரவி சீதாவை ஏமாற்றியது பிடிக்க வில்லை, ஜோசியர் மட்டும்  இந்த விசயத்தை சொல்லவில்லை என்றால் யாருக்கும் இந்த விசயம்  தெரியாமல் போகிறுக்குமே,, சீதாவின் நிலமை, என்று யோசித்தவர்  மகனிடம் பேசாமல் வர.

அவனும் நாகம்மாளை தவிற வேற யாரிடமும் பேச வில்லை.

கதிர் தான் என்ன நடக்குது என்று புரியாமல் இருந்தான்..

அதிகாலை என்பதால் காரில் ஏறியதும் தூக்கி விட்டான் கதிர்.

பின்பு திருமணம் முடிந்து வீடு வந்ததும் தான் எழுந்து கொண்டான்.

சீதா பத்மாவோடு அமைதியாக அமர்ந்திருந்தாள், மருமகளை மெல்ல அழைத்து அவர்களில்  குலதெய்வம் பஞ்சமா தேவி கோவிலுக்கு அழைத்து வந்தார்..

 சீதா கர்பமாக இருப்பதால் ஹோமம் பண்ணி திருமண நடக்க வில்லை. ஹோமத்தில் கர்பமாக இருக்கும் பெண்கள் அமர கூடாது என்பதால்…

திருமணத்தை கோவில் சந்திதியில் வைத்து பஞ்சமா தேவியின் பாதத்தில் மாங்கல்யத்தை வைத்து பூஜை செய்து எடுத்து வந்து, ஐயர் கொடுக்க.

ரவி சீதாவை பார்த்த படியே மாங்கல்யத்தை சீதா கழுத்தில் கட்டினான்…

சீதா எந்த ஒரு உணர்வும் இல்லாமல் அமைதியாக பஞ்சமா தேவியை பார்த்தபடியே இருந்தாள்..

பஞ்சமாதேவி அம்பாள், பார்ப்பதற்கு அவ்வளவு அழகாய் இருந்தது, ஐந்து உடன் பிறந்த பெண் பிள்ளைகள் ஒருவறாக மாறி சிலையாக மாறிய அந்த தாயின் முகத்தையே பார்த்தபடியே இருந்தாள்.

அவளுக்கு  தனக்கு திருமணம்  என்ற உணர்வே இல்லை, ஏதோ பொம்மை போல உணர்வில்லா பெண் சிலை போல் நின்றாள்,,  ரவி தாலி கட்டியதும், அவனை நிமிர்ந்து பார்த்தாள், அவனின் முகத்திலும் அத்தனை வேதனை,  இது தேவையா இருவருக்கும்  என்றே மனதில் தோன்றியது,,  பத்மாவுக்கு சீதா நின்றிருக்கும் கோலம் வேதனையை தந்தது,,

தன் மகன் செய்த செயலுக்கு சீதா கல்யாணத்திற்கு  ஒத்து கொண்டதே பெரிய விசயம், அவள் நல்ல படியாக குழந்தை பெத்தெடுக்க வேண்டும் என்று வேண்டுதலை வைத்தவர்..

தன் கணவருக்கும், ரவிக்கும் எந்த ஒரு துன்பமும் நடந்து விட கூடாது என்று  கடவுளை வேண்டியபடியே திருமணத்தை முடித்து விட்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.

கதிரை தூக்கியபடியே ரவி அவன் அறைக்கு செல்ல..

சாவித்திரி  தான் சீதாவை அழைத்து பூஜை அறையில் விளக்கு ஏற்ற சொன்னார்,  பின்பு சீதாவின் சோர்ந்த முகத்தை பார்த்தவர் மருமகளை அழைத்து, அவள் அறைக்கு சென்றவர், அவளை வேற உடையணிய உதவி செய்தவர், படு அத்தை சாப்பிட எதாவது  எடுத்துட்டு வர்ரேன் என்று கூறிவிட்டு வெளியே வர. ரவி அவன் சென்னை கிளம்ப பேக்கோடு வந்தான்..

அதை பார்த்தவர் எதுவும் சொல்ல வில்லை,  போனால் போ, அது உன் இஷ்டம் என்று மகனை கடந்து செல்ல.

“மா”  என்று பத்மாவதியின் கையை பிடித்தவன், “பேசு மா, நீ பேசாதது  எனக்கு  ரொம்ப கஷ்டமா இருக்கு,” என்றான்.

பத்மா பேசாமல் இருக்க, தாயை பின்னாடி இருந்து அணைத்தவன், “சீதாவை பார்த்துக்கோ”  என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.

பத்மா கிச்சனின் நின்று அழுதார்..

ஏன்டா  உன் வாழ்க்கை எப்படி கெடுத்து வச்சு இருக்க,  நீயும் சீதாவும் நல்லா இருக்கனும், நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழுறதை நான் பார்க்கனும்,  காலங்கள் மாறும், சீதாவின் கோபங்கள்  குறையனும், இறைவா என்று  வேண்டிக்கொண்டவர்..

வேகமாக உணவை ரெடிபண்ணி சீதா அறைக்கு வர.

அமைதியாக படுத்திருந்தாள் சீதா.

“சீதா டேய் ” என்று பத்மா  சீதாவை எழுப்பியவர்,  உணவை அவளுக்கு ஊட்ட.

அவர் குடுத்ததை உண்டவளுக்கு கண்ணீர் முட்டி கொண்டிடுக்க.

ஊட்டி முடித்த பத்மா சீதாவின் முகத்தை  பார்த்து பதறி விட்டார்.

“ஏன்டா அழுகுற”..

என்று.

“என்மேல கோபமா அத்தை”? என்று சீதா கேட்க.

“டேய் உன் மேல எதுக்குடா நான் கோபமா இருக்கேன்.. எல்லாம் நான் பெத்த என் மகன் மேலதான்”..

“அப்போ என் மேல் கோபம் இல்லையே என்று  சீதா கேட்க” அவளை அணைத்து முத்தமிட்டவர்..

 “உன் மேல் கோபமெல்லாம் இல்லை  நீ பண்ணதை நான் கூட பண்ணி இருக்க மாட்டேன், நீ என் மகனை கல்யாணம் பண்ணது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா?.

 நீ என் இரண்டு உயிரை காப்பாற்றிக் கொடுத்திருக்க, உன் மேல  நான் கோபப்படுவேன் டா, தூங்கு முகம்  டல்லா இருக்கு பாரு தூங்கி எந்திரி”  என்று கூறி விட்ட பத்மா,

 மாமியாருக்கு உணவு எடுத்துச் செல்ல.. நாகம்மாள் புலம்பி தள்ளி விட்டார் “என்னடி பத்மா இந்த ரவி  இப்படி  கல்யாணமான உடனே சென்னை கிளம்பி போயிட்டான்” என்று  புலம்ப..

 “சும்மா இருங்க அத்தை,  அவனுக்கு  சீதாவை  எதிர்கொள்ள முடியாது அதான் பயந்து ஓடுகிறான்,, எங்கே போவான்  மறுபடியும் இங்கே தான் வருவான் எல்லாம் சரியாகும் அத்தை கும்பாபிஷேக்கு கண்டிப்பா வருவான் நீங்க வேணா பாருங்க”  என்று கூற.

 கணவருக்கு உணவு எடுத்துச் சென்றார் பத்மா..

 வெங்கட் அமைதியாக படுத்திருக்க…

 “நீங்க   ஏன் இப்படி படுத்து இருக்கீங்க சாப்பிட்டு கும்பாபிஷேக வேலை எவ்வளவு கெடக்கும் போய் பாருங்க” என்று பத்மா வெங்கட்டை விரட்ட.

 “நீ  நார்மலா  இருக்கிற மாதிரி காட்டிக்காத  உன் மனசுல எவ்ளோ பெரிய வேதனை எரிமலையாக  வெடிக்க காத்திருக்குன்னு  எனக்கு தெரியும், வா இங்கே” என்று வெங்கட் மனைவியை அணைக்க வெடித்து அழுதார் பத்மா..

 “நான் என்  மகன் கல்யாணம் எப்படியெல்லாம் நடக்கனுமுன்னு ஆசை பட்டேன், எல்லாம் போச்சு, அது கூட பரவாயில்லை  சீதாவை என்னால பார்க்க முடியல,, அவ வெளியில  சொல்ல முடியாம வேதனை படுறா, சீதா நம்மளுக்காக தான்  ரவியை கல்யாணம் பண்ணியிருக்க,  அவ  வேதனை படுறதை என்னால பார்க்க முடியல, அப்பறம் ரவி, அவன் பண்ணது பெரிய பாவம் தான், நான் இல்லையில்லு சொல்லல்ல, சீதா அவனை தவிர்க்குறதை  பார்க்குற சக்தி எனக்கு இல்ல, ரொம்ப கஷ்டமா இருக்க பாவா” என்று அழுத பத்மாவை..

“எல்லாம் சரியாகும் பத்மா, நாம சீதாவை  முதல், முதலில்  நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்தப்போ  நாம என்ன சொன்னோம், சீதா  மாதிரி ஒரு மருமக வந்த நல்லா இருக்குமுன்னு, இப்போ  அந்த சீதாவே உனக்கு மருமகளா  வந்திருக்க அவளை  நல்லா பார்த்துக்கோ, இன்னும் மூனு மாசத்துல  இரண்டு பேர பிள்ளைகள் புதுசா  நம்ம வீட்டுக்கு வர போறோங்க.. அவங்களை பார்க்கவே உனக்கு நேரம் சரியா இருக்கும்..

நீ என்னை கூட பார்க்க நேரம் இருக்காது” என்று கணவர்  சொன்னதும்  குஷியான பத்மா.

“பையன் பிறக்குமா?, பொண்ணு பிறக்கும் பாவா?”,.

“என்ன குழந்தை பிறந்தா என்ன நம்ம மூத்த வாரிசு கதிர் இருக்கான் சீதா மாதிரி பெண் குழந்தை பிறக்கட்டும் பத்மா”, என்று கணவர் கூற…

கணவரிடம் பேசி சிரித்தார் பத்மா.

நாகம்மாளுக்கு  பத்மா சிரிக்கும் சத்தம் கேட்க.

என்னவோ இவளுக்கு  இப்போதான் புதுசா கல்யாணம் ஆன மாதிரி எப்படி  சிரிக்குற பாரு. என்ற நாகம்மாள் “ஏன்டி பத்மா இந்த கோழிகளுக்கு இறை வைக்காம, புருஷன் கிட்ட அப்படியென்ன சிரிப்பு” என்று திண்ணையில் இருந்து நாகம்மாள்  கத்த..

“உங்க அம்மாவுக்கு நான் சிரிச்சா மூக்கு வேர்த்துரும். இத்தனை வருஷத்துக்கு அப்புறம் கூட எனக்கு என் புருஷன் கிட்ட பேசி சிரிக்க முடியல”, என்று புலம்பிய படியா பத்மா வெளியே வர.

நாகம்மாள் பத்மாவை பார்த்து, “என்னடி சிரிப்பு, இப்ப  தான் மகனை நினைத்து புலம்பிட்டு போன. அதுக்குள்ள சிரிக்குற” என்று மருமகளை  நாகம்மாள் வம்பு பண்ண.

“அது அத்தை கும்பாபிஷேகத்துக்கு உங்க பையன் எனக்கு 50 பௌவுன் நகை வாங்கி கொடுத்திருக்காரு அதான் சந்தோசத்துல சிரிச்சேன் போதுமா” என்று நாகம்மாளிடம் வெங்கட்டை போட்டு கொடுத்து விட்டு செல்ல.

“வெங்கட் டேய் மகனே” என்று கத்தியிருந்தார் நாகம்மாள்.. “பெத்த தாயுக்கு  ஒரு பத்து பவுன்  வாங்கி கொடுக்கல,  பொண்டாட்டிக்கும் ஐம்பது பௌவுனா!  அதுவும் இந்த வயசுல டேய் வெங்கட, இங்கே வாட” என்று நாகம்மாள் கத்தினார்”…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!