Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 24 2

 ஹைதராபாத் வராமல் சென்னை கிளம்பியிருந்தான்.. சீதாவை பார்த்தால் எங்கே உடைந்து அழுது அவளை கட்டி அணைத்து விடுமோ என்ற பயம்.



Advertisement

 என் மேல் உரிமை எடுத்துக் கொள்ளாதே என்பவளை,  என்ன செய்ய,

 அவளைப் பார்க்க முடியாமல் சென்னை கிளம்பி இருந்தான்.

Advertisement

Advertisement

 சீதா  நொடிக்கு நொடி ரவியை தேடிக்கொண்டே இருந்தாள்…

 அவன் எப்ப வருவான், அவனை ஒரு நிமிடமாவது  பார்ப்போமா, நன்றாக இருக்கிறானா என்று அவள் அவனை எதிர்பார்த்து காத்திருக்க.

Advertisement

 ஆனால் அவவோ  சென்னைக்கு கிளம்பியிருந்தவன்,, அவன், அவன் வேலையை பார்த்துக் கொண்டிருக்க இரண்டு நாள் பொறுத்தவள் அதற்கு மேல் அவளால் பொறுக்க முடியவில்லை..

 வாசலையே பார்த்துக்கொண்டிருந்த  சீதாவை பார்த்த பத்மாவிற்கு கஷ்டமாக தான்  இருந்தது,,.

 அவளே  அவள் வாய் திறந்து ஏதாவது கூறட்டும் என்று அவரும் அமைதியாக இருக்க..

 சீதா தான் தன் வாய்யை திறந்திருந்தாள் “அத்தை நான் சென்னைக்கு போறேன்” என்று..

 “என்னம்மா எதுக்கு” என்று பத்மாவதி கேட்க..

 “என்னோட  மாத செக்கப் நாள், இன்னும் இரண்டு நாள்ல வருது, ஏழுவது மாதம் முடிந்து எட்டாவது மாதம் செக்கப் போகனும் அத்தை,  என்னோட ஹெல்த் ரிப்போர்ட் எல்லாம் சென்னையில எங்க வீட்ல இருக்கு அதை எடுத்துட்டு வரணும்”. என்றாள்.

 “அதை எடுத்து யாரையாவது அனுப்ப சொல்லு சீதா இந்த நேரத்துல  உன்ன தனியா எல்லாம் அனுப்ப முடியாது டா?  நானும் உன் கூட  வரலாம் ஆனால் அத்தைக்கு உடம்பு சரியில்லையே” என்றார்..

  ஆமாம் இரண்டு நாளாக நாகம்மாளுக்கு  கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருக்க  பத்மாவால்  சீதா கூட வரமுடியாத சூழ்நிலை ,,..

 “உங்க மாமா கிட்ட கேட்டு சொல்றேன், நீ  உங்க மாமா கூட  சென்னைக்கு போயிட்டு வா சீதா” என்று சொல்ல..

 “அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை  நான் வெளிநாட்டுக்கே  தனியா போயிட்டு வந்தவ, இங்கேயிருக்கிற சென்னைக்கு போயிட்டு ரெண்டே நாள்ல வந்துருவேன் நான் போயிட்டு வரேன்” என்று சீதா சொல்ல.

 “தனியா எப்படி போவா சீதா”  என்றார்  பத்மா..

 “நான் தனியா எல்லாம் போகல கதிரை  கூட்டிட்டு தான் போறேன்” என்றாள் சீதா.

 “யாரு கதிர்  உனக்கு துணையா?” என்று சிரித்தார்..

“என் பையன் தானே எனக்கு துணை” என்றாள் சீதா. சீதா சொல்வதை கேட்டு சிரித்த பத்மாவதி “சரி நாளைக்கு போயிட்டு வாங்க” என்றார்..

வெங்கட்டிடம் பத்மாவதி சீதா சென்னை செல்கிறேன் என்று சொன்னதை சொல்ல..

 “நானும் மருமகளோடு சென்னை சென்று வருகிறேன்'” என்றார் வெங்கட்..

   “சீதா  ரவியை பார்க்கத்தான் சென்னை  செல்கிறாள் நீங்க போக வேண்டாம்” என்று தடுத்தார் பத்மா..

 வெங்கட் ஏர்போர்ட் வரைக்கும்  சென்று மருமகளையும், பேரனையும்  பிளைட் ஏத்தி விட்டு வந்தார்.

 பத்மாவதி போன் செய்து மகனிடம் பேச நினைக்க. அவனோ போனை எடுக்கவில்லை. மகனுக்கு வாய்ஸ் மெசேஜ் செய்திருந்தார்,,  சீதா இத்தனை  மணி பிளைட்டில் கிளம்புகிறாள் என்று..

 ரவி ஒரு மீட்டிங்கில் இருந்தவன் ஃபோனை சரியாக கவனிக்கவில்லை..

  சீதா சென்னை வந்து இறங்கியவள் அவளின் வீட்டிற்கு செல்ல ..

 வீடு சுத்தமாக இருந்தது கதிர் சென்னை வந்ததும் “சீத்தாம்மா சென்னை பீச்சுக்கு போகணும் சென்னை பீச்சுக்கு போகணும்” என்று குதிக்க..

 “இப்ப மத்தியானம் கதிர்  ரொம்ப வெயில் அதிகமாக இருக்கும். ஈவ்னிங் போகலாம்” என்று சொல்ல..

 “சரிமா” என்றவன்  “நானாவே பார்க்க போகணும்” என்று சொல்ல..

 “உங்க நானாவுக்கு நம்ம வந்தது எல்லாம் எப்போவோ தெரிஞ்சிருக்கும் தெரிஞ்சும் அவர் நம்மல பார்க்க வரல, ஏன்டா நானா, நானான்னு சொல்லுற, நானே உன்னை  ஈவ்னிங் பீச்சுக்கு கூட்டிட்டு போறேன், இப்ப சொல்லு உனக்கு என்ன வேணும் சாப்பிட அம்மா ஆர்டர் போடுறேன் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டு தூங்கலாம்” என்றாள்.

   கதிரோ முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு “நான் நானா கிட்ட பேசணும், போகனும்” என்று சொல்ல “இந்த என்னோட போன் நீ என்ன வேணா பண்ணிக்கோ” என்றாள் அவனிடம்….

 அவனோ  சீதா போனை  குடுத்ததும் தன் தந்தை நம்பரை அவன் மனதில் பதிந்து வைத்திருக்க, போனை ஆன் பண்ணியவன் ரவியின் நம்பரை அழுத்தி போனை டையல் பண்ண….

மீட்டிங் முடிந்து வந்தவன் தன் போன் வைப்ரேட் ஆனதை பார்த்து  போனை பார்க்க.. சீதாவின் நம்பரை பார்த்த ரவி போனை  ஆன் பண்ணி “சீதா” என்று அழைக்க.

 “நானா” என்றான் கதிர்..

 “கதிர் என்னடா, உங்க சீத்தாம்மா போனுல இருந்து போன் போட்டிருக்க, எப்பையும் அவ்வா போனுல இருந்து தானே கூப்பிடுவ?”என்றான்..

 “நானா எனக்கு பீச்சுக்கு போகணும் நீங்க எப்ப வருவீங்க” என்றான்.

 “டேய் ஹைதராபாத்ல எங்கடா பீச் இருக்கு” என்றான் ரவி.

 “ஐயோ நானா நானும் மம்மியும்  சென்னைல இருக்கோம், எனக்கு சென்னை பீச்சுக்கு போகணும் நீங்க எப்போ வருவீங்க”?.

 “என்னது சென்னையா? நீங்க எப்போ வந்தீங்கடா சென்னைக்கு? யார் கூட வந்தீங்க?” என்று அவன் படபடவென பேச ..

 “நானும் மம்மி மட்டும் தான் வந்தோம் இப்பதான் வந்தோம் மம்மி வீட்டில் தான் இருக்கோம்” என்று சொல்ல..

 “கதிர் சீதா அம்மா கிட்ட போனை குடு” என்றான்…

 “சீதா அம்மா  சோபாவில் படுத்து தூங்கிட்டு இருக்காங்க நானா” என்றான்..

 “சரி இரு நானா  வீடியோ கால் வர்ரேன்” என்றவன் வீடியோ காலில் வந்து அவர்கள் எந்த வீட்டில் எங்கே இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டவன்,, “டாடி இன்னும் பத்து நிமிஷத்தில் வருவேன்” என்றவன்..

தன் போனில் , பத்மா அனுப்பியிருந்த ஆடியோவை  கேட்டவன்,

வேகமாக காரை எடுத்துக்கொண்டு தன் உயிர்களை பார்க்க சென்றான்.

சீதா அசதியில் தூங்கி இருக்க…

 ரவி விரைந்து வந்தவன் சீதா வீட்டின் காலின் பெல்லை அழுத்தினான்.

 காலிங் பெல் சத்தம் கேட்டு கண் விழித்தால் சீதா.

 கதிர் கதவைத் திறக்க முயற்சி பண்ண அவனால் முடியவில்லை.

 “ஏய் இருடா நான் போயி   கதவை திறக்கிறேன்” என்று சீதா கதவை திறக்க…

 சத்தியமாக  ரவியை அவள்  எதிர்பார்க்கவில்லை,,.

 வீட்டில் வேலை  செய்பவர்கள் தான் வந்திருக்கிறார்கள் என்று அவள் நினைத்தாள்.

 ரவியை  பார்த்து ஷாக்காகி நிற்க.

 சீதாவை பார்த்து மலர்ந்து சிரித்திருந்தான் ரவி..

 அவனைப் பார்த்து முகத்தை தூக்கி வைத்துக் கொண்டவள் “வந்துட்டான்”?..

 என்று கதவை திறந்து வைத்து விட்டு உள்ளே செல்ல..

 கதிர் “நானா நானா” என்று குதித்தவன் அவன் மேல் ஏறி தாவிக்கொண்டான்..

 “எப்படா வந்தீங்க” என்று மகனை தூக்கிக்கொண்டே உள்ளே வர..

 அவன்  உடையை பார்த்தே சீதாவிற்கு அவன் ஏதோ மீட்டிங்கில் இருந்து வந்திருக்கிறான் என்று தெரிந்தது..

 “எப்படி இருக்க சீதா”? என்றான்.

 “ரொம்ப சீக்கிரமா கேட்டுட்டீங்க” என்றாள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள்..

 “ஒரு போன் பண்ணி இருக்கலாமே சீதா நானே வந்து கூட்டிட்டு வந்து இருப்பேன்” என்றான்..

 “ஆளையே காணோம் இதுல நாங்க போன் பண்ணி  கூப்பிட்டு சொல்லனுமா” என்றாள்.

 அவள் கோவமாக இருப்பதை பார்த்தவன்  கொஞ்சம் கோபம் தனியட்டும், என்று   அமைதியாக இருந்தவன்  “கதிரிடம் எந்த  பீச்சுக்கு போகணும்” என்றான்..

 ” நானா சென்னை பீச் மெடினா, மெடினா பீச்” என்றான் ..

 “டேய் அது மெடினா இல்லடா மெரினா பீச்” என்றான் ரவி..

 இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே “மேம் ஃபுட்” என்று ஒருவன் வந்து சீதா ஆடர் பண்ணிய ஃபுட்டை  வந்து கொடுக்க…

 சீதா எழ முடியாமல்  எழுந்து கொள்ள பார்க்க,, “நீ இரு சீதா”  என்றவன்..

கதிரை இறக்கிவிட்டு உணவை வாங்கி வந்தவன்.

 அதை சீதாவின் முன்னாடி வைத்து விட்டு கிச்சன் சென்று தண்ணீர் பிடித்து வந்து அவளிம் கொடுத்தான்.

 சீதா அதிகமாக  தான் ஆர்டர் பண்ணி இருந்தாள்.

 கதிருக்கு  எந்த உணவு பிடிக்குமோ பிடிக்காதோ,  அவன் எதை சாப்பிடுவான் என்று தெரியாது என்று டிபன் ஐட்டமும் லஞ்ச் ஐட்டமும் இரண்டு மூன்று வகை ஆர்டர் பண்ணி இருந்தாள்.

“நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க” என்ற ரவி சோபாவில் அமர்ந்து அவனின்  டையை கழட்டியவன்,   கோர்ட்டையையும்  கழட்டி வைத்துக் கொண்டிருக்க.

 “நீங்களும் சாப்பிடலாம் நான் அதிகமாக தான் ஆர்டர் பண்ணி இருக்கேன்” என்றாள்  சீதா.

“பரவால்ல நீங்க ரெண்டு பேருமே சாப்பிடுங்க” என்றான் ரவி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!