அவன் முன்னாடி ஒரு பார்சலை எடுத்து வைத்தவள் “சாப்பிடுங்க” என்று கூற.
Advertisement
” இல்ல நீ முதல்ல சாப்பிடு அப்புறம் நான் சாப்பிடுறேன்” என்றவுடன்.
சீதாவுக்கு கோபம் தலைக்கேற “எல்லாம் உங்க இஷ்டப்படி தான் நடக்கும் அப்படித்தானே” என்றாள்.
Advertisement
Advertisement
“சீதா கோவப்படாத டல்லா இருக்க சாப்பிடு அப்புறமா திட்டு வாங்கிக்கிறேன்”. என்றான்..
“ஓ நாங்க திட்டினால் நீங்க வாங்கிப்பீங்க அப்படித்தானே” என்றவளுக்கு, அவன் ஹாஸ்பெட்டலில் அன்று விட்டு சென்றதை நினைத்து இன்றும் கோபம் வர..
Advertisement
“நீங்க யாரு சார், யாரு நீங்க? உங்கள திட்டுவதற்கு எனக்கு என்ன உரிமை இருக்கும் அம்போன்னு ஹாஸ்பிடல் விட்டுட்டு போனவர் தானே நீங்க.
ஒரு போன் போட்டிங்களா” என்று கேட்டவளுக்கு அழுகை வர விருட்டென்று அவள் உள்ளறைக்கு சென்று விட்டாள்.
ரவி தலையில் கை வைத்துக் கொண்டான் அவள் கோபப் படுவாள் கோபமாக இருக்கிறாள் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும் எப்படி இவளை சமாதான பண்ண என்று நினைத்தவன்..
மகனுக்கு ஒரு சின்ன பௌலில் உணவை வைத்து கொடுத்தவன்.. “இதை சாப்பிடு நானா வர்ரேன்” என்றவன்.
சீதா சென்ற அறைக்கு அவனும் செல்ல..
அங்கே அவன் பார்த்து காட்சி அவனுக்கே அவன் மேல் கோபமாக வந்தது.. ஒரு கையை வயிற்றில் மேல் வைத்திருந்தவள், வயிற்றை பிடித்துக் கொண்டு, தேம்பி, தேம்பி அழுது கொண்டிருந்தவளை பார்த்து.
“நீ ஏன் சீதா அழுகுற?.
அழாத” என்றவன் அவள் முன் மண்டியிட்டு, அமர்ந்து அவளின் கையை பிடிக்க வர..
அவன் கையை தட்டி விட்டவள்,, “வராத போ? அன்னைக்கு என்னை அம்போன்னு விட்டுட்டு போன தானே நீ.. இப்போ ஏன் வந்த போ” என்றாள்.
கண்ணீரை துடைத்தபடியே.
“அழாத மா அழாம பேசு உன் உடம்ப கஷ்டப்படுத்தீக்காத” என்றவன். அவளின் பக்கத்தில் அமர்ந்து அவளின் கண்ணீரை துடைத்து விட.
“ரொம்ப அக்கறை தான்” என்றாள்.
“நான் உன்னை தேடுவேன்னு, உனக்கு தெரியாத ரவி, ஒரு வார்த்தையாவது, நான் கண்முளிச்சதும் சொல்லிட்டு போயிருக்கலாமே,, இப்போ எதுக்கு வந்த, உன்னை நான் கூப்பிட்டேனா” என்றாள்..
“நீ என்ன வேணா பேசு, அடி ஆனா அழாத”?.
“இவ்வளவு அக்கறை பேசுறவரு அன்னைக்கு எதுக்கு விட்டுட்டு போனீங்க” ..
” நான் உங்களை தேடுவேன்னு உங்களுக்கு தெரியாதா”?.
என்றவளுக்கு மீண்டும் கண்ணீர் வர.
அவளை அணைத்துக் கொண்டான் ரவி.. ” அழாதடி கஷ்டமா இருக்கு” என்றான்.
“எதுக்கு என்னை கட்டிப்பிடிக்கிறீங்க அன்னைக்கு விட்டுட்டு போனவர் தானே நீங்க,, நான் உங்களை எவ்வளவு எதிர்பார்த்தேன் தெரியுமா, அப்போ போயிட்டு, இப்போ வந்து கட்டிபிடிக்காரு,, நம்ம சண்டை அப்படியா தான் இருக்கு நீங்க ஒன்னும் என்னை சமாதானம் பண்ண வேணாம் போங்க” என்று ரவியை தள்ளி விட.
அவனோ அவளை மென்மையாக அணைத்தபடியே வைத்திருக்க.
அவள் திட்டியது அவன் காதில் கேட்கவே இல்லை.
மென்மையாக அவள் முதுகை நீவி விட்டவன் அவளின் தலையை கோத…
“இங்க நான் உங்களை திட்டிட்டு இருக்கேன்” என்றாள்.
“திட்டு அடி வாங்கிக்கிறேன்” என்று சிரித்தவன்..
வெளியே சென்று உணவை எடுத்து கொண்டு வந்தவன்,, “சாப்பிட்டு தெம்ப அடி”, என்றவன்.உணவை சீதாவிடம் கொடுக்க..
சீதாவுக்கும் பசி எடுக்க.
ரவி கொடுத்ததை அவள் ஒன்றும் பேசமால் எடுத்துக் கொண்டவள், இன்னொரு பார்சலை அவனிடம் தர. அவனும் ஒன்றும் பேசாமல் வாங்கி கொண்டு, இருவரும் உண்டனர்..
சீதா அமைதியாக உண்டாள்.. கதிர் ஓடி வந்தவன் “நானா பீச்” என்றான், “டேய் மணி 3 தான் ஆகுது. 6 ஓ கிளாக் போகலாம்” என்றான்.
“நானா ஐஸ்கீரிம் வேணும்” என்று கேட்க..
“சீதா உனக்கு ஐஸ்கிரீம் வேணுமா? ” என்றான் ரவி.
அவள் “வேண்டாம்” என்று தலையாட்டியவள்.
பெட்டில் சாய்ந்து நன்றாக காலை நீட்டி அமர…
“நீ வர்ரீயா சீதா வெளியில் போகலாம்” என்றான் ரவி…
“இல்லை” என்றவள் பெட்டில் சாய்ந்து படுக்க.
“சரி நீ தூங்கு நானும் கதிரும் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்ரோம்” என்றவன் கிளம்ப..
“சீதா அம்மா” என்றான் கதிர் “அம்மா தூங்குறேன் நீ நானா கூட போயிட்டு வா” என்றாள் சீதா.
“நீ தூங்கு சீதா, நான் ஒரு 5 மணிக்கு வருகிறேன்” என்றவன் கதிரை அழைத்துக்கொண்டு கிளம்பி விட்டான்…
மகனை அழைத்துக் சென்று முதலில் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தவன், பின்பு அவன் வீடு சென்றான் அவன் உடை மாற்றிவிட்டு,, மாலுக்கு கதிரை அழைத்துக்கொண்டு வந்தவன் அவனுக்கு சில உடைகளையும், விளையாட்டு பொருள்களையும் வாங்கியவன், சீதாவுக்கு சில உடைகளை மாலில் எடுத்தவன் சீதாவின் வீடு வந்து சேர மணி 6 ஆகிவிட்டது..
சீதா இன்னும் எழுந்திருக்கவில்லை இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருந்தால்..
இவர்களின் சத்தம் கேட்டு தான் எழுந்தாள் சீதா.
இருவரும் உடை மாற்றி ரெடியாக இருக்க.
அவர்களைப் பார்த்து சிரித்தவள் “அப்படியே பீச்சுக்கும் போயிட்டு வர வேண்டியதுதானே” என்றாள்.
கதிரோ சீதாவை பார்த்து “பீச்சுக்கு போகணும் சீத்தாம்மா” என்று மீண்டும் அதையே சொல்ல.
“இருடா நான் கிளம்பி வரேன் உன்கிட்ட பீச்சை பத்தி சொல்லியது தப்பா போச்சு” என்று எழுந்த சீத்தாவிடம் ஒரு கவரை நீட்டியிருந்தான் ரவி.
ரவியை முறைத்தபடியே அந்த கவரை வாங்கியவள் என்னவென்று பார்க்க அவள் எப்பொழுதும் உடுத்தும் உடைபோலவே வாங்கி வந்திருந்தான் ரவி..
ஓய்வு அறை சென்று குளித்தவள் ரவி கொடுத்த உடையை மாற்றி சீதா வர.
குடும்பமாய் பீச் சென்றார்கள்..
சீதாவை முன்னாடி ரவி அமர சொல்ல.. “இல்ல கதிர் முன்னாடி அமர்ந்து கொள்ளட்டும்” என்றவள். பின் சீட்டில் சென்று தாராளமாக அமர்ந்து கொண்டாள்.
ரவி ஏக்கமாக அவளை பார்க்க “முன்னாடி எல்லாம் கதிரையும், உங்க பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு உட்கார முடியாது” என்று தன் வயிறை தொட்டு காட்ட…
யாரும் இல்லாத பிரைவேட் பீச்சுக்கு அழைத்து வந்திருந்தான் ரவி.
அவள் அனைவரும் இருக்கும் மெரினா பீச்சுக்கு அழைத்து வருவான் என்று நினைத்திருக்க, பிரைவேட் பீச் ரிசார்ட்டோடு அமைந்திருக்க அதை பார்த்த ரசித்தபடியே நடந்துவந்தாள் சீதா.
நீண்ட மாதங்கள் கழித்து பீச்சை பார்க்கிறாள்.
பீச்சை பார்த்ததும் கதிர் ஓட.. கதிரின் பின்னாடி ரவி ஓடியிருந்தான்..
அப்பாவும் மகனும் நீண்ட நேரம் பீச்சில் விளையாட சீதா பீச்சையும், இவர்களை சேர்ந்து பார்த்து ரசித்தபடி அமர்ந்து கொண்டாள்.
கதிர் சீதாவை பீச்சுக்கு வா என்று அழைக்க “இல்லடா அம்மாவால பீச்சுக்குள்ள வர முடியாது குளிரும்” என்றவள்.
நீண்ட நேரம் கதிர் விளையாடுவதை பார்த்தவள் “போதும் கதிர் வா”.. என்று சொல்ல.
அவள் கூறி சிறிது நேரம் கழித்து வந்த கதிரின் உடை முழுவதும் நனைந்திருக்க.
மகனுக்கு உடல் துடைத்து வேறு உடைமாற்றியவள்..
சாப்பிடுறீயா என்றாள்.
“ஊம்ம் மா” என்றான் கதிர்.
அவள் எடுத்து வந்த ரசம் சாதத்தை ஊட்டியவள். கிளம்பலாம் கதிர் என்று சொல்ல.
இன்னும் கொஞ்ச நேரம் மம்மி என்று கடலில் பக்கத்தில் உள்ள சிப்பிகளை பொருக்கி ஒரு கவரில் போட்டுக் கொண்டிருந்தான் கதிர்..
“ஏன் நான் உன்னை பார்த்துக்க மாட்டேனா சீதா?” என்றான்..
“சாருக்கு ஆயிரம் பிசினஸ் எங்களை எல்லாம் பார்த்துக்க சாருக்கு நேரம் இருக்குமா என்ன?” என்றாள்.
“ஏன் சீதா அப்படி பேசுற உன்னை விட எனக்கு வேலை பிசினஸ் முக்கியமா”? என்றான்.
“எனக்கு ஒரு குழந்தை இல்ல ரெண்டு குழந்தைகள், உங்களால பாத்துக்க முடியுமா “?..
“ரெண்டு குழந்தை என பத்து குழந்தை பிறந்தாலும் நான் என் பிள்ளைகளை நான் பார்த்துப்பேன்” என்றான்…
சீதா பேசாமல் அமைதியாக இருந்தாள்.
“பேசு சீதா” என்றவன் அவளின் கையை எடுத்து தன் கையில் வைத்து அழுத்திக் கொள்ள..
அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் சீதா.
“உனக்கு என்ன மண்டையில ஓடுது அதை சொல்லு சீதா” என்றான் ரவி..
“எனக்கு பயமா இருக்கு ரவி” என்றவள். அவன் தோள் சாய்ந்த கொள்ள.
“என்ன பயம் உனக்கு” என்றான்..
அவளோ அமைதியாக இருக்க.
“சொல்லு சீதா” என்றான்…
“நீ என்னை விட்டு வேறு யாருக்கூடாவவது போயிடுவியா” என்றாள்….
“நான் யார் கூட போக போறேன்” என்றான் ரவி..
“இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு ஒரு அழகான பொண்ண பார்த்து என்னை பிடிக்காமல் போயிடுச்சுன்னா”? என்றாள்..
“என் மேல் நம்பிக்கை இல்லையா சீதா”என்றான்..
“இல்லை” என்று அவள் தலையாட்ட..
“நான் என்ன பண்ணா என்னை நீ நம்புவ”..
” உன்னை நம்பவும் முடியல நம்பாம இருக்க முடியல , உன்னை விடவும் முடியல,, விட்டுட்டு இருக்கவும் முடியல நரக வேதனையா இருக்கு ரவி,.
நீ நல்லவன் என்று என் மனசு சொல்லுது ஆனா மூளையோ என்னை நீ விட்டுட்டு போயிடுவியோன்னு என்னை கேள்வி கேக்குது, என்னால நிம்மதியா தூங்க முடியல ரவி ,, உனக்கு என்னை விட்டுட்டு போற ஐடியா இருந்தா இப்பவே சொல்லிடு, என் மனச தேத்திக்கிறேன் எனக்கு கதிரும் என் பிள்ளைகள் மட்டும் போதும், என்னை நெருங்கி வந்து ஆசை காட்டி என்னை விட்டுட்டு போயிடாத..
என்னால தாங்க முடியாது,, அதை தாங்க நான் இல்லாம கூட போயிடுவேன்” என்று கண்கலங்கியவளை..