Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 26 1

சீதா கல்யாண வைபோகமே…

  அத்தியாயம் – 26



Advertisement

Advertisement

    சீதாவுக்கு வளைகாப்பு முடிந்து ஒரு வாரமாகியது. வளைகாப்பு  முடிந்து இரண்டு நாள் சீதாவுடன் இருந்து விட்டு தான் சென்னை சென்றான் ரவி..

Advertisement

 தினமும் ரவி காலை, மாலை  இரவு என்று சீதாவிடம் போனில் பேசிவிடுவான் .

Advertisement

திடீரென்று இரண்டு நாளாக சீதாவிற்க்கு  போன் பேசவில்லை  ரவி.

சீதா கால் பண்ணி பார்க்க ஸ்விட்ச் ஹாப், ஸ்விட்ச் ஹாப் என்று வர..

குழம்பி போனாள் சீதா.

இரண்டு நாளாக ரவி போன் பண்ணவில்லை என்று சீதா புலம்பி கொண்டிருக்க.

சீதாவின் அருகிலே அமர்த்திருந்தார் பத்மா..

சீதா புலம்பும் போது,.

 “அவன் வருவான் சீதா” என்பார்..

ஏனோ சீதாவுக்கு பத்மா முகத்தை பார்த்து  அவ்வளவு நல்ல தாக படவில்லை..

வெங்கட்  இரண்டு நாள் முன்பு எங்கோ கிளம்பி சென்றவர், இன்னும் வீடு திரும்ப வில்லை.

வெங்கட் போன் செய்தால் பத்மா, பயந்து  போய் போனை எடுத்து உள்ளறைக்கு சென்று பேசுவதை பார்த்தவளுக்கு ஏதோ சரியில்லை என்று  மனதில் தோன்ற…

தனது போனை எடுத்தவள், சிரஞ்சீவிக்கு அழைத்து “ரவிக்கு அங்க  ஏதாவது பிரச்சனையா”?, என்று விசாரிக்க.

“ரவிக்கா, அவனுக்கு என்ன சீதா பிரச்சனை வர போகுது,, அவன் நல்லா தான், இருக்கான்”   என்று சிரஞ்சீவி  பேசிக்கொண்டிருக்கும் போதே  சிரஞ்சீவி   அம்மா பின்னாடி  வந்தவர்  “சீதா வா  போனை குடு, ஒரு  இரண்டு வார்த்தை பேசுறேன்” என்றார்.

சிரஞ்சீவி வேண்டாம் என்று கையசைக்க..

மாலா அமைதியானர்,,..

“யாரு பின்னாடி சிரஞ்சு” என்று கேட்க.

‘”ஒன்னும் இல்ல சீதா, உனக்கு டெலிவரி தேட் எப்போ” என்றான்..

“இன்னும் இரண்டு வாரம் இருக்கு’ என்றாள் சீதா.

“சரி உடம்ப பார்த்துக்கோ” என்றான்.

சீதாவுக்கு சிரஞ்சீவி பேசியதில் எந்த சந்தேகமும் இல்லை  அமைதியாக இருந்தாள்.

அழகு மலர்  சீதாவுக்கு மேஜேஸ் பண்ணி இருந்தாள், “நீ எங்கே இருக்க சீதா?  தைரியமா இரு, மனச விட்டுடாத, ரவிக்கு ஒன்னும் ஆகாது” என்று..

மெஜேஜை பார்த்தவளுக்கு மன பட படவென அடித்துக்கொள்ள..

உடனே  அழகு மலருக்கு கால்  செய்திருந்தாள் சீதா..

போனை எடுத்த  அழகு மலர் “சீதா நீ எங்கடி இருக்க, தைரியமா இரு,” என்று அவள் பேச.

“ரவிக்கு  என்ன பிரச்சனை மலர்? “…

என்றாள் சீதா.

“அப்போ உனக்கு எதுவும் தெரியாத,, சாரி சீதா” என்று போனை அனைத்துவிட்டாள்..

ஐயோ  தோழியிடம் சொல்லி விட்டோமோ, சீதாவுக்கு இது தெரியாது போலயே, என்றவள் சீதா மீண்டும், மீண்டும் அழகுமலருக்கு கால் பண்ண.

அழகுமலர் போனை எடுக்கவில்லை.

சீதா நேராக பத்மாவிடம் வந்து “ரவிக்கு என்ன பிரச்சனை அத்தை, வெங்கட் மாமா எங்கே” என்று கேட்க.

“யாருக்கும் ஒன்னுமில்லை சீதா நீ அமைதியா இருடா, நான் சூஸ் கொண்டு வர்றேன், குடிச்சிட்டு தூங்கு” என்றார்.

“அத்தை சொல்லுங்க ரவிக்கு என்னாச்சு, என்ன பிரச்சனை” என்றாள்..

“யாருக்கும் ஒன்னும் இல்லடா” என்றவரின் கண்கலங்க..

“அத்தை, சொல்லுங்க அத்தை ரவிக்கு என்னாச்சு” என்று பேசிக்கொண்டிருக்க. வெளியே விளையாடிக்கொண்டிருந்த கதிர் வேகமாக  ஓடிவந்தவன்..

“சீதாம்மா டாடி டிவியில வர்ராங்களாம் நிஷா சொன்னா” என்றவன் டிவியை போட போக.

பேரனை முறைத்த பத்மா, டி வி யின் ரிமோட்டை பிடுங்கி கொண்டவர்,  “வெளியே போய்  விளையாடு  கதிர்” என்று பேரனிடம் கோபமாக பேச .

சீதாவுக்கு ஏதோ தப்பாக பட.

பத்மா கையில் இருந்த ரிமோர்ட்டை பிடுங்கினாள்.

 “வேண்டாம் சீதா”  என்று பத்மா பதட்டமாக  கூற.

டிவியை ஆன் பண்ணியவள்..

டிவி யில் வேற, வேற நியூஸ் வர.  சீதா வேற நியூஸ் சேனலை மாற்றி  வைத்தாள் அப்படி ஒன்றும் டி வி யில் ரவியை பற்றி வர வில்லை.

உடனே தனது போனை எடுத்து, ப்ரோடியுசர் ரவி லேட்டஸ்ட் அப்டேட் என்று டைப்பண்ண.

அடுத்து, அடுத்து வந்த நியூஸை பார்த்த சீதா தலை சுத்தி கீழே விழ போக.

“சீதா” என்ற பத்மா ஓடி சென்று மருமகளை பிடித்து அமர வைத்தவர்..

மருமகளுக்கு தண்ணீர் கொடுக்க.

சீதாவுக்கு மூச்சு வாங்கியது டி. வியை மறுபடியும்  ஆன் பண்ணியவள்  நியூஸ் சேனலை பார்க்க.

“இரட்டை  பெண்கள் கொலை வழக்கில்  கைது செய்ய பட்ட, ப்ரோடியுசர்  ரவியின் கேஸ் நாளை மறுநாள் விசாரனைக்கு வருகிறது”.

என்று நியூஸ் வர.

கல்போல அமர்ந்திருந்தாள் சீதா.

விரிவான செய்திகள் என்று,”இரண்டு பெண்கள்  கொலை வழக்கு கேசில், மீண்டும் ஒரு திடுக்கிடும் உண்மை கொலை செய்ய பட்ட தீப்தி, சோணலியும் பல முறை கற்பலிக்க

பட்டு இறந்திருக்கிறார்கள் என்று அவர்களின் பிரேத பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது..

இதற்கு காரணமான இயக்குனர் ரவிக்கு தூக்கு தண்டனை வழங்க  வேண்டும், என்று மகளிர்கள் போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள், நிறைய மாதர் சங்கமும் ரவிக்கு எதிராக போராட்ட நடத்தி வருகிறார்கள் உடனே தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் ரவிக்கு என்று  தமிழகம் முழுக்க, பல இடங்களில் போராட்டம் நடக்க..

 பத்மா டிவி ஆப் பண்ணி இருந்தார்..

 சீதா கதிரை பார்த்து “நீ நாகம்மாள்  அவ்வா கிட்ட போய் இரு” என்று சொல்ல..

 “சரி சீதா மா” என்று ஓடினான் கதிர்..

 “என்ன நடக்குது அத்தை,,? என்ன இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்லல” என்றாள்.

 “உன்னால இத  தாங்க முடியாது சீதா போன மாதம் ஹாஸ்பிடல்  செக்கப் போகுறப்போ உனக்கு  கொஞ்சம் பிரஷர் இருக்குன்னு டாக்டர் சொன்னார் இத தெரிஞ்சும்  நான்..

ரவி பற்றி  உன்கிட்ட சொல்லி உனக்கு ஏதாவது ஆச்சுன்னா”..

 “எனக்கு எதுவும் ஆகாத அத்தை, மாமா எங்கே, மாமா எங்கே இருக்கார்” என்றாள் சீதா..

 “மாமா சென்னையில தான் இருக்காரு சீதா, ரவியை ஜாமினில்  வெளியே எடுக்க  முயற்சி பண்ணுறாரு ஆனால் கேஸ் ரொம்ப ஸ்டாங்கா இருக்கும் போல போனதிலிருந்து ரவியை பார்க்கவே இல்லையின்னு பொலம்பிட்டு இருந்தார்” என்று  பத்மா கூற..

 ‘நான் சென்னை கிளம்பறேன் அத்தை” என்றாள்.

 “நீ எப்படி போவ சீதா?,, இன்னும் பத்து நாள்ல உனக்கு டெலிவரி நீ எப்படி போவ”?.. என்றவுடன்..

  “நான் போகவில்லை என்றால் யார் போவா என்னால  ரவிய  அந்த மாதிரி நிலைமையில  விட்டுட்டு இங்க இருக்க முடியாது அத்தை.

 கதிரை நான் தூக்கிட்டு போக முடியாது.. ஏனா  நான் எங்க அலைய வேண்டியது இருக்கும் அதனால நீங்க இங்க பார்த்துக்கோங்க பாட்டியும் இங்க இருக்கட்டும் நான் கிளம்புறேன்” என்றான் ..

 “சீதா நீ  இருடா மாமா  எல்லாம் பார்த்துப்பார்  மாமா ரவியை இதுல இருந்த கொண்டு வருவார் நீ  இங்க இருடா” என்றார் பத்மா.

 “இல்லத்தை நீங்க டிரைவரை  வர சொல்லுங்க நான் இப்பவே ஏர்போர்ட் கிளம்பறேன்” என்று பத்மா பேச்சை கேட்கவே இல்லை, கதிரை பத்மாவிடம் விட்டு சென்னை கிளம்பினாள்.

 சீதாவுக்கு சுத்தமாக  நடக்க முடியவில்லை பேபிகள் வெயிட் அதிகமாக இருக்க தன்  பெரிய வயிறை பிடித்துக் கொண்டு மெல்ல நடந்து வந்தாள்.

 மனதில் ரவி இப்படி செய்திருக்க மாட்டான் அவனை எப்படியாவது இந்த கேசில்  இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்று வைராக்கியம் இருந்தது ..

  சீதா முதலில் அவள் நண்பன் சிரஞ்சீவியை   தான் அழைத்தாள்.

 சிரஞ்சீவி, சிவாவும் வெங்கட்டோடு தான்   இருந்தனர்..

 இவள் சென்னை வந்திருக்கிறேன்  என்று சொல்ல மூன்று பேருமே ஏர்போர்ட் வந்திருந்தனர்.

 மூன்று பேருக்கும் அவள் நடந்து வந்ததை பார்க்க கஷ்டமாக இருந்தது..

 எங்கே ரவியை நினைத்து கலங்கி விடுவாளோ   என்று இவர்கள் வருத்தத்தில் இருக்க,  சீதா அவ்வளவு கலங்கவில்லை பதட்டமாகத் தான் வந்தாள்.

 வெங்கட் மருமகளைய பார்த்து கண் கலங்க,  “மாமா அவர் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, அவரை  நாம வெளியே கொண்டு வந்துவிடலாம், அவர் எந்த தப்பும் செய்திருக்க மாட்டார்” என்று உறுதியாக சொல்ல..

 நண்பர்களை  வெங்கட்டுடன் பார்த்த சீதாவுக்கு நிம்மதியாக இருந்தது,   ரவியின் வீட்டுக்குத் தான்  அவளை   அழைத்து வந்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!