Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 27 1

சீதா கல்யாண வைபோகமே..

அத்தியாயம் -27



Advertisement

Advertisement

Advertisement

  ரவிக்கு சீதாவை பார்த்ததும் தாங்க முடியவில்லை..

Advertisement

 அவளை இந்த நிலைமையில் நான் போராட வைத்து விட்டேனே..

 நான் பாவி நான் பாவி என்று புலம்பி கொண்டு இருந்தான்..

 நிறைமாத கர்பிணியை  இப்படி போராட வைத்து விட்டேனே  என்று புலம்பியவன்.

 “ஐயா எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே” என்றான்  அந்த வயதான கான்ஸ்டேபலிடம்..

 “என்னால முடியாது தம்பி உனக்கு சாப்பாடு கொடுக்குறது தான் என்னோட வேலை” என்றார்..

“ஒரே ஒரு போன் மட்டும் பண்ணிக்கிறேன் சார்” என்றான்.

 “இங்க ஜாம்மர்  இருக்கு தம்பி யாரும் யாருக்கு போன் பேச முடியாது இங்க இருந்து ஒரு கிலோமீட்டர் போனா தான் போன் பேச முடியும்”, என்றார்.

 “அப்ப நான் ஒரு வாய்ஸ் மெசேஜ் மட்டும் பண்ணிக்கிறேன் நீங்க ஒரு நம்பருக்கு மட்டும் அனுப்பி வைக்கிறீங்களா”?  என்றான்..

 “சரி தம்பி,  ஏதோ உன்ன பாத்தா எனக்கு நல்ல பையன் மாதிரி தோணுது அதனால இதை நான் செய்கிறேன்” என்றார்..

 “சரி”  என்ற ரவி சீதாவின் என்னை போனில்  பதிந்து,,  அவன் ஒரு வாய்ஸ்  மெசேஜை சீதாவிற்க்கு அதில் அனுப்பி இருந்தான்..

 சீதாக்கு பலரிடமிருந்து மெசேஜ்கள் வீடியோக்கள் வாய்ஸ் மெசேஜ்கள் என்று நிறைய வந்திருந்தன அவளின் போனிற்க்கு,,  ரவியை பற்றி திட்டியோ அவன் கெட்டவன் என்றோ நிறைய பேர் வீடியோ மெசேஜ் பண்ணி இருக்க…

அவளோ  ரவி அனுப்பிய அந்த வாய்ஸ் மெசேஜ்ஜை அப்படித் தான்  யாரோ அனுப்பி இருப்பார்கள்  என்று பார்க்கவில்லை..

 சீதா இந்த மெசேஜ்ஜை  பார்த்தாள் கண்டிப்பாக தன்னை வெளியே கொண்டு வந்து விடுவாள் உண்மை தெரிந்து விடும் என்று ரவி சந்தோஷமாக இருக்க..

 ரவிக்கு தெரியவில்லை இந்த வாய்ஸ் மெஜேஜை அவள் கடைசி வரை பார்க்கப் போவதில்லை என்று..

 சீதா ஷிப்பில் உள்ள   எல்லா இடத்திலும் ஆராய்ந்து  பார்த்தாள் .. ஷிப்பில் ஒவ்வொரு இடத்திலும் சென்று ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்க சீதாவுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.. ரவியின் அறையில் மீண்டும் மீண்டும் சோதித்துப் பார்த்தால் ஏதாவது கிடைக்கிறதா என்று ஒன்றும் கிடைக்கவில்லை..

 வீடியோ புட்டேஜ் சம்பவம் நடந்திருந்த அன்றும் அதற்கு முன்பும், ஒர வார பதிவு,   எதுவுமே  அவளுக்கு கிடைக்கவில்லை… எனவே ரவி ரூம்பிற்க்கு யாரு வந்தார்கள், போனார்கள் என்று ஒன்றும் புரியவில்லை..

    ரவியை எப்படி இதில் இருந்து காப்பாற்றுவது,   என்று புலம்பிப்படியே இருந்தாள்,, இன்னும்  நான்கு நாட்கள் தான் இருக்கிறது  அதற்குள் ரவி கொலை செய்யவில்லை என்று நிருபிக்க வேண்டும்.. ஷிப்பில்  வேலை செய்பவரிடம்  சென்று, தீப்தி, சோணாலியை பற்றி விசாரிக்க.

 சிலர்  இவர்களை பார்த்தேன் எப்பொழுதும் குடித்துக் கொண்டு ஆண் நண்பர்களோடு  சுற்றிக் கொண்டிருப்பார்கள்  என்று சொல்ல..

 சிலர் தெரியவில்லை என்றிருந்தனர்.

 அந்த ஆண்  நண்பர்கள் யார் என்று அவள் தெரிந்து கொள்ள பார்க்க அய்யோ அவளுக்கு போட்டோ  புட்டேஜ் எதுவும்  கிடைக்க வேண்டுமே ..

 சிசிடி கேமராவில் எந்த வீடியோஸ் பதிவுகள்  இல்லாமல் இருக்க..

 சோணாலியும் தீப்தி  தங்கி இருந்த, பக்கத்து அறையில் இருந்த ஆண்கள்  விவரத்தை தெரிந்து கொண்ட சீதா அவர்களை விசாரிக்க சென்று இருந்தாள்.

 பல பேரை விசாரிக்க, யாரும் தீப்தீயையும், சோணாலியையும் தெரியாது என்று கூற..

  ஒரே ஒருவன் மட்டும் தீப்தியின்  நண்பன் என்று கூற அவனிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள்  சீதா.

 அவனோ சம்பவம் நடத்த இரண்டு   நாள் முன்னாடி நான் ஷிப்பிலிருந்து வந்து விட்டாதாக கூற..

 தீப்தியும், சோணாலியும் எப்படி நடந்து கொண்டார்கள்,, ஷிப்பில்  நல்லபடியாக இருந்தார்களா?  ஏதாவது பிரச்சனை வந்ததா? ” என்று சீதா கேட்க.

 “நாங்க எல்லாரும் சந்தோஷமா தான் இருந்தோம் மேம்.. ஆனா புட் சாப்பிட போற இடத்துல தான் தீப்தி  ஒருவனை  அடிச்சிட்டா ,,..

 அவன் தீப்தியை  பார்த்து சிரிச்சானா  இவ கோவப்பட்டு அவனை அடிச்சுட்டா..

 அப்புறம்  அவனுடைய பிரண்டு வந்து தீப்தி கிட்டையும் சோணாலியிடமும்  சண்டை போட்டான்…

 நாங்க தான் சமாதானம் பண்ணி கூட்டிட்டு வந்தோம்”.. என்றான் தீப்தியின் நண்பன்..

 “அவங்க பார்க்க எப்படி இருப்பாங்க” என்று சீதா கேட்க..

 “தீப்தியை  பார்த்து சிரிச்ச பையன் நல்லா அழகா இருப்பான்.. அவனுக்கு ஆதரவா வந்த ஒருத்தன் கருப்பா வளர்த்தியா இருப்பான் மூஞ்சியில  எல்லாம் புள்ளி, புள்ளியா  இருக்கும்” என்றான்..

 “சரிப்பா ரொம்ப தேங்க்ஸ்” என்று சீதா அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு ஷிப்புக்கு வந்தாள்.

 சிவாவும்,,  சிரஞ்சிவியும் கோர்ட்டில் எப்படி மறு விசாரனைக்கு  தாக்கல் செய்வது,  அடுத்து    என்ன செய்வது, என்று அவர்கள் அங்கு லாயரை பார்த்து  அழைந்து  பேசிக் கொண்டிருக்க..

 வெங்கட் மருமகளோடு இருந்தார்.

 சீதா போராடுவதை பார்த்து அவருக்கும் கஷ்டமாகத் தான் இருந்தது..

 சீதா ஒவ்வொன்றாக  விசாரிக்க  எப்படியோ சீதா தன் மகனை  காப்பாற்றி விடுவாள் என்று நம்பிக்கை வந்திருந்தது..

 சீதா  ரவி அனுப்பிய  வாய்ஸ் மெஜேஜை  பார்த்தாலே ஐந்து நிமிடத்தில் வேலை முடிந்து இருக்கும்..

 பல பேர்  சீதா போனிற்க்கு ஆடியோ, வீடியோ மெசேஜ் அனுப்பிருக்க சீதா தெரியாத நம்பரில் இருந்து  வந்திருந்ததால் அதை கவனிக்கவில்லை..

 ஷிப்பிற்கு வந்த சீதா  அந்த இரண்டு நபர்களை தேடி சென்றவள்,,  அங்கு சமையல் செய்பவர்கள் அனைவரை பார்த்து பேசிவிட்டு அந்த இரண்டு நபர்களை தேடி பார்க்க.. அந்த இரண்டு நபர்கள் அங்கு இருப்பதாகவே தெரியவில்லை..

 அங்கே இருக்கு  அனைத்து நபரின் ஐடி கார்டையும் செக் செய்தால் பின்பு வேலை செய்பவர்களின், மொத்த விவரம் இருக்கும்.

அந்த  பயோடேட்டாவை பார்த்தாள்,, அதில் ஒருவன் மட்டும் கருப்பாக வளர்த்தியாக இருக்க அவன் பெயர் என்னவென்று பார்த்தவள்,  துரை என்றிருக்க.

 சமையல் நடக்கும் இடத்திற்கு வந்தவள் அங்கு  இருந்த ஹெட் குக்கை  பார்த்து “துறை என்பவர் இங்கு இருக்கிறாரா”? என்று கேட்க..

 “இருக்கிறார் மேம் இரண்டு நாளா உடம்பு சரியில்ல அதனால ரூம்ல இருக்காரு” என்று கூற

“அவரை  நான் பார்க்கணும் போய் கூட்டிட்டு வாங்க” என்றாள்..

 நீண்ட நேரம் கழித்து தன் முன்னாடி கருப்பாக முகத்தில் எந்த ஒரு சலனமும்  இல்லாம் நின்றவனை பார்த்தவள்..

 ” நீங்க இங்க கொலை நடந்த  ரெண்டு பொண்ணுங்கிட்ட ஏதாவது நீங்க சண்டை போட்டீங்களா” என்று கேட்க..

 “ஆமாம் மேம் சண்டை போட்டோம்” என்றான்  அவன்..

 “உங்க கூட இருப்பாரே  ஒருத்தர் சிகப்பா அவர் எங்கே” என்று கேட்க..

 “அவன் இங்கேதான் இருக்கான் மேம்” என்றான் துரை..

 “எங்கே” என்று சீதா கேட்க.

அங்கே தூரத்தில் வேலை செய்பவனை   கை ஜாடை காட்ட.

துரை கைகாட்டிய இடத்தில் அந்த பையன் பதட்டமாக வேலை செய்து கொண்டிருந்தான்.

 சீதா அவனை அழைத்து “என்ன பிரச்சனை உனக்கும் தீப்தி, சோணாலிக்கும்”?   என்று கேட்க..

 “மேம் சாரி மேம் எனக்கு ஒன்னும் தெரியாது மேம்” என்றான் அவன்..

 “நடந்ததை மட்டும் சொல்லு  தீப்தியை பார்த்து ஏன் சிரிச்ச” என்றாள் சீதா…

 “நான் தீப்தியை  மேமை  பார்த்து சிரிக்கல நான் சோணாலி மேம்மை பார்த்து  தான் சிரிச்சேன்,,  சோணாலி மேமை எனக்கு தெரியும்.. அவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்க கிட்ட ஒரு  ஆட்டோகிராப் வாங்க  தான் பார்த்து சிரிச்சேன் அதை தீப்தி மேம் தப்பா புரிஞ்சுகிட்டு என்னை அடிச்சுட்டாங்க,,  அதனால தான், என் பிரண்டு துரை அவங்க கிட்ட  சண்டைக்கு வந்தான்.. வேற எதுவும் நடக்கல மேம்,, எனக்கு வேற எதுவும் தெரியாது” என்றான்.

 “உனக்கு தீப்தி, சோணாலியை  பத்தி வேற  ஏதாவது தெரியுமா” என்று சீதா கேட்க.

 “எனக்கு வேற எதுவும் தெரியாது அவங்க சாப்பிட  வர்ரப்போ பாத்துருக்கேன் வேற எதுவும் தெரியாது ” என்றவன், எதுவோ மறைத்த வாரே பேச.

 சீதாவுக்கு கொஞ்சம் இவர்கள் மேல் சந்தேகமாக இருந்தது.

 “என் கணவர் ரூம் தெரியுமா உனக்கு “? என்று கேட்க..

 “யாரு  மேம்  உங்க கணவர் “? என்றான்.

 “ரவி தேஸ்சா சாரை  உனக்கு தெரியாதா?” என்றாள்.

“ஓ.. ஷிப் ஓனர்  சாரா, முதலாலியை  தெரியுமே” என்றான்..

 “அவர் ரூமுக்கு  பக்கம் நீ போயிருக்கியா”? என்றாள்..

 “அவர்  ரூம் எங்க இருக்குன்னு எனக்கு தெரியாது மேம்” என்றான் அந்த வெள்ளையாக இருப்பவன்.

 சீதா எழுந்து வந்தவள் பளார் என்று அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!