அந்த வெள்ளையாக இருப்பவனிடம் சீதா என்ன கேட்டாலும் அழுது கொண்டிருந்தானே தவிற வேற ஒரு பதிலையும் சரியாக சொல்ல வில்லை, எனக்கு தெரியாது, எனக்கு தெரியாது என்றதை தவிர வேறு எதுவும் சொல்லவில்லை, அந்த கருப்பாக இருப்பவன் வெள்ளையாக இருப்பவனை முறைத்து பார்த்த படியே நின்றிருந்தான்.
Advertisement
சீதாவுக்கு இவர்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று தெரிகிறது ஆனால் கொலை இவர்கள் செய்யவில்லை ஏதோ தொடர்பு இருக்கிறது என்று புரிந்தவள்.
ஷிப்பில் செக்யூரிட்டி போலீஸிடம் அவர்கள் இருவரையும் விசாரிக்க சொல்லி அனுப்பினாள்…
சீதாவிற்கு இதெல்லாம் போதாது ஆதாரம் வேண்டும்,, வீடியோ புட்டேஜ் வேண்டும் என்ன நடந்தது என்று தெரிய வேண்டும், இதை எல்லாம் வைத்து யூகம் போல் எதுவும் கோர்ட்டில் சொல்ல முடியாது..
மீண்டும் மீண்டும் ரவி அறையில் தேடித்தேடி ஓய்ந்து போனாள்,, ரவியின் லேப்டாப்பும்,, போனும் போலீஸ்காரர்கள் எடுத்து சென்று விட, ரூம்பில் ஏதாவது கிடைக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்க.
எதுவும் கிடைப்பது போல் தெரியவில்லை..
ஆனால் இவள் ஷிப்பிற்கு வந்ததுல இருந்து யாரோ இவளை பின்தொடர்வது போல் ஒரு உணர்வு இருந்து கொண்டே இருந்தது.
அதை சோதிக்க வேண்டி, இவள் ஷிப்பின் உள்ளே சுற்றிக்கொண்டே இருக்க,, ஒருவன் செக்யூரிட்டி உடையில் தன்னை சுற்றி சுற்றி வந்ததை பார்த்தாள்.
அவனிடம் என்ன ஏதுவென்று கேட்க “மேம் சார் சொல்லிருக்காரு,,
நீங்கள் இங்கே வந்தால் கண்காணிக்க வேண்டும்” என்று அவன் சொல்ல..
சீதாவால் முடியவில்லை என்ன செய்வது ஏது செய்வது என்று யோசித்தவள் தீப்தி, சோணாலி வீட்டிற்கு செல்லலாம் என்று முடிவு எடுத்தாள்…
பின்பு அவர்களே துக்கத்தில் இருப்பார்கள், தன்னை பார்த்தால் கோபம் தான் வரும்,, என்று நினைத்து அவள் அதை நினைத்து கலங்கி இருக்க….
சிவா, சீதாவுக்கு போன் செய்திருந்தான், சோணாலியின் தாய் ரவி கேஷை மறுவிசாரனை பண்ண கூடாது என்று கோர்ட்டில் ஸ்டே, வாங்க போவதாக சொல்ல..
சீதாவுக்கு வேர்த்து கொட்டியது, இது என்னடா புது கதை, என்றவள்..
கோர்ட்டுக்கு கிளம்ப…
அங்கே தன் சொந்தத்தை அழைத்து தன் மனுவை கொடுத்தார் சின்மய், அதில் ரவி கேஷை மறுவிசாரணை பண்ண கூடாதா, உடனே அவனை தூக்கில் போட வேண்டும் என்று எழுதி இருக்க..
சின்மய்யின் மனுவை பார்த்த ஜட்ஸ்,
“மறுவிசாரணைக்கு ஆர்டர் போட்டாச்சு இனி ஒன்னும் பண்ணமுடியாது”, என்று சின்மயிடம் கோர்டிலிருந்து அவர் மனுவிற்கு தடை கூறி விட.
அனைவரையும் கண்டபடி திட்டிக்கோண்டே வந்தார் சின்மய்..
சரியாக அந்த நேரம் பார்த்து சீதா வந்தாள்.
சின்மய் சீதாவை கோபத்தில் அறைந்திருந்தார் சீதா கீழே விழ போக வெங்கட் மருமகளை பிடித்துக்கொண்டார்.
சின்மயை சீதாவை பார்த்து “உன் புருஷன் ரவிக்கு கண்டிப்பா தூக்கு தண்டனை தான், பாரு அவனை உன்னால காப்பாற்ற முடியாது” என்று திட்ட.
“அவர் தப்பு பண்ணியிருக்க மாட்டார் மேம், அவர் உங்க பொண்ணை கொல பண்ணல, இது யாரு பண்ணாங்கன்னு நான் நிருபிப்பேன்” என்று கூற.
சின்மய் அழுது ஆர்பாட்டம் பண்ண.. பகுதூர் சிங் மனைவியை அழைத்து சென்றார்.
சிரஞ்சு, சீதாவிடம் வந்தவன் “சீதா அந்த செத்து போனா இரண்டு பெண்களை பிரேத பரிசோதனை பண்ண டாக்டர் தப்பா, ரிப்போர்ட் கொடுத்திருக்கான், அந்த பெண்களை பல பேர் சேர்ந்து ஒன்னா பலாத்காரம் பண்ணி கொன்னு இருக்காங்க, ஆன அவனோ பல முறை அவர்களை பலாத்காரம் செய்தது போல, ரிப்போர்ட் கொடுத்திருக்கான்” என்று கூற.
“உனக்கு எப்படி தெரியும்” என்று கூற.
“ஒரு பெண் டாக்டர் தான் சொன்னாங்க, அவ எம்ஸ், ஜோ மருத்துவமனையில் ட்ரெயினிங் டாக்டரா வேலை பாக்குற போல, அவ அந்த பெண்களை பிரேத பரிசோதனை செய்யுறப்போ கூடவே இருந்திருக்க.
அந்த பரிதோசனை செய்யுறப்போ, ஒருவர் இவர்களை கெடுக்கவில்லை பல பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்முறை செய்து இவர்களை சீர்றளித்திருக்கிறார்கள் என்று தான் ரிப்போர்ட் எழுதியிருந்தார்களாம் அங்கே உள்ள டாக்டர்.. பின்பு எப்படி இது மாறியது என்று தெரியவில்லை சீதா, அந்த பெண் டாக்டர் வந்து கோர்டில் இதை சொன்னாள் போதும், ரவியை இந்த கேசிலிருந்து வெளியே எடுத்து விடலாம்”, என்று சிரஞ்சீவி கூற..
“அந்த பெண் டாக்டர் வந்து சொன்னாள் போதுமா,? ரவியை வெளியே விட்டு விடுவார்களோ” என்று சீதா கேட்க.
“ஆமாம் சீதா”, என்றான் சிரஞ்சீவி ,,
“அப்போ அந்த பெண்ணை பார்த்து உடனே பேசலாம்” என்று சீதா கூற.
“அந்த பெண் டாக்டர் கொஞ்சம் பயப்பிடுறாங்க, நாளை நேரில் வந்து கோர்டில் உண்மையை சொல்லுறதுன்னு சொல்லுறாங்க சீதா” என்று கூற…
“சரி சிரஞ்சு” என்றவளுக்கு உயிரே வந்தது போல இருக்க..
இன்னும் மூன்று நாட்கள் அவர்களுக்கு அவகாசம் இருக்க..
நிம்மதியாக உணர்ந்த சீதா, அந்த பெண் வந்து உண்மையை சொன்னாள் ரவியை விட்டு விடுவார்கள், என்று நினைத்து நிம்மதியாக அன்று தூங்கி எழுந்தவள்..
வெங்கட்டுடன் கோர்ட்டுக்கு செல்ல.
அங்கே சிவாவும், சிரஞ்சீவியும் லாயரிடம் அனைத்தையும் பேசி முடித்திருந்தனர்..
“சீதா லாயரிடம் சென்று அந்த பெண் டாக்டர் விசயத்தை சொன்னால் போதுமா” என்று கேட்க.
போதும் சீதா, ரவி அந்த பெண்களை கெடுத்து கொன்றதாகத்தான் கேஷ் ரவி மேல, போட்டு இருக்காங்க.
இதில் பலர் கூட்டு சேர்ந்து செய்திருக்கின்றார்கள் என்று தெரிந்தால்..
ரவியை உடனே ஜாமினில் எடுத்து விடுலாம், அடுத்து இத யார் செஞ்சது என்று போலீஸ் கண்டு பிடிப்பாங்க..
ரவி வெளியே வந்தா, நாமலும் அவர்கிட்ட என்ன நடந்துச்சுன்னு கேட்டு தெரிந்து கொள்ளலாம்” என்று லாயர் நம்பிக்கையாக கூற.
சீதாவுக்கு ரவியை இன்று பார்த்து விடுவோம், என்று நிம்மதியா இருந்தவள்..
வெங்கடை பார்த்து, “உங்க பிள்ளையை இன்று ஜாமினில் எடுத்து விடலாம் மாமா” என்று சந்தோஷமாக கூற.
“அப்படியாமா” , என்ற கேட்ட வெங்கட்டுக்கும் சந்தோஷமாக இருந்தது..
“சிரஞ்சு அந்த பெண் டாக்டர் வந்துட்டாங்களா” என்று சீதா கேட்க..
“வந்துட்டாங்க சீதா, நம்ம கேஷ் வரும் போது வருவாங்க காருல வெய்ட் பண்ணுறாங்க” என்று சிரஞ்சீவி கூற.
“நான் போய் அவங்க கிட்ட பேசலாமா'” என்று கேட்க..
“பேசு சீதா” என்றவன்.
சிவாவை பார்த்த சிரஞ்சீவி “சீதாவை கூட்டிட்டு போ” என்க.
சீதாவை ஒரு காருக்கு அழைத்து சென்றான் சிவா.
சீதா அந்த பெண் டாக்டரை பார்த்து, நன்றி சொல்ல.
“மேம் சார் எந்த தப்பும் பண்ணலா.
இது பெரிய அநியாயம், பலர் இந்த பெண்களை பல நாள் சேர்ந்து கொடுமை படுத்தி கொன்னுயிருக்காங்க..
அந்த பெண்கள் உடம்பில் பல காயங்கள் இருந்தது, மேம், ஒருத்தறால இந்த பெண்களை கொல்ல முடியாது மேம்” என்று அந்த டாக்டர் கூற.
சீதாவிற்க்கு சோணாலியும், தீப்தியும் அனுபவித்த வேதனை நினைத்து கலங்கியவள், “இதை பண்ணவங்களை நான் சும்மா விட மாட்டேன்.
என் கணவர் இந்த கேஷில் இருந்து வெளியே வந்தாலும், இந்த பெண்களை சீர்றலித்த ஆண் மிருகங்களை நான் சும்மா விடமாட்டேன், அந்த பெண்கள் எப்படி துடித்திருப்பார்கள்” என்று நினைத்தவளுக்கு.. தீப்தியை அன்று பார்த்தது ஞாபகம் வந்தது, அவ்வளவு அழகாய் இருந்தாள் இந்த குட்டி பெண் என்று தோன்றியது.
சோணாலியின் பிம்பமும் தோன்ற, அவளும் அப்படி ஒன்றும் கொடுமை காரியில்லையே பின்பு ஏன் இந்த பெண்களுக்கு இப்படி நடக்க வேண்டும்?.
இதை செய்தவர்களை நான் சும்மா விடமாட்டேன், இந்த பெண்களை சிதைத்தவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று சீதா சபதம் எடுக்க.
சிரஞ்சு வந்து கார் கதவை தட்டியவன்..
“அடுத்தது நம்ம கேஷ் தான் வாங்க” என்று அழைக்க.
சிவா, சீதா அந்த பெண் டாக்டர் காரிலிருந்து வெளியே நடந்து வந்தனர்..