Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 27 3

வெங்கட் சற்று தல்லி லாயரிடம் ரவியை இன்று ஜாமினில்  எடுத்து விடலாமா என்று பேசிக்கொண்டிருந்தார்..

கோர்டின் உள்ளே செல்ல ஒரு இருபது படிகள் இருந்தது,  அதை ஏற சிரஞ்சீவியின்  கையைபிடித்து  படிகளில் ஏறிக்கொண்டிருந்தாள்  சீதா இவர்கள் படிகளில் ஏறிக்கொண்டிருக்கும் போதே.



Advertisement

கோர்டின் வாசல் முன்  ரெண்டு மாருதி வேனிலிருந்து, முகமூடி அணிந்து இருந்த ஒரு பத்து பேர், கையில் துப்பாக்கியோட இறங்கியவர்கள்,   “ஏய்” என்று கத்த..

படிமேலே ஏறிக்கொண்டிருந்த அனைவரும்  திரும்பி கீழே பார்க்க.. கையில் தூப்பாக்கியோடு அனைவரையும்  பார்த்து மிரட்டியவர்கள்,  அந்த பெண் டாக்டரை மட்டும் டம், டம், டம் என்று பல முறை சுட்டு விட்டு, ஒரு புகை பாம் பை எடுத்து எறிந்தவர்கள், மாருதி வேனில் ஏறி  கிளம்பி  சென்று விட.

Advertisement

Advertisement

 அங்கே ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று தெரிவதற்குள் எல்லாம் நடந்து முடிந்திருந்தது,  ரத்த வெள்ளத்தில் அந்த பெண் டாக்டரை பார்த்த சீதா அதிர்ச்சியாகி நிற்க,..

தற்று முன் தன்னிடம், தன் கணவனுக்காக பேசி பெண்  ரத்த வெள்ளத்தில்  கிடப்பதை பார்த்தவள்.  “ஐயோ ” என்று கதறியபடியே  அவள் அருகில் சென்றவள்.

Advertisement

அவளின் பெண் டாக்டர்  தலையை  தூக்கி தன் மடிமீது வைத்துக்கொள்ள..

சீதா அவளை தன்  மடிமீது வைத்ததும், சீதாவை பார்த்து மூச்சை இழுத்து விட்ட, அந்த டாக்டர் பெண், “சாரி உங்க வீட்டுகாரரை காப்பாத்த முடியல மேம்”, என்றவள் “மை மாம், மை மாம்” என்று ஏதோ சொல்லியவள் தன்  உயிரை விட்டிருக்க….

சீதா அந்த பெண் டாக்டரை கட்டி அணைத்து அழுதாள், “உன் உயிர பரிச்சிட்டாங்களே , என் கணவரை காப்பாத்த வந்த பெண்ணை இப்படி பலி கொடுத்துட்டேனே, இறைவா நீ எங்கே இருக்க, எந்த தப்பும் செய்யாத இந்த சின்ன பிள்ளை உயிர் போச்சே, ஐயோ. ஐயோ,” என்று கதறி அழுதவள்..

” இப்போ அஞ்சு நிமிசம் முன்னாடி தானே என்கிட்ட பேசுனா,,

மேம் சார் எந்த தப்பும் பண்ணலண்ணு சொன்னாளே”., என் கணவரை காப்பாத்த வந்த உன்னை இப்படி விட்டுட்டேன், என்று அந்த பெண் டாக்டரை அணைத்து அழுதவளுக்கு, அப்போது தான் ஞாபகம் வந்தது இவளுக்கு அந்த பெண்ணின் பெயர் கூட தனக்கு, தெரியவில்லை, என்று சிரஞ்சீவியை பார்த்தவள்.

இந்த பொண்ணு பேரு என்ன என்றாள்.

“மஹிமா” என்றான் சிரஞ்சீவி.

ஒரு இஸ்லாமிய பெண் பிள்ளையா.. எங்களுக்காக சாட்சி சொல்ல வந்த பிள்ளையை… இப்படி  கொன்று விட்டார்களே,  அவர்கள் குடும்பம் எவ்வளவு கனவுகளோடு இவளை டாக்டருக்கு படிக்க வைத்திருப்பார்கள்,  அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன், என்று சீதா அழ..

சில  போலீஸ் காரர்கள் வந்து,  சீதாவை மஹிமாவிடம் இருந்து பிரித்தவர்கள்…

அங்கே உள்ளவர்களை கழைந்து போக சொல்லி விட்டு.

மஹிமா உடலை மருத்துவ மனைக்கு எடுத்து சென்றனர்,, ..

இந்த சம்பவம் நடந்ததால், அன்றைக்கு கோர்ட்டில் நடக்கும் அனைத்து விசாரனையும் தள்ளி வைக்க..

சீதா ஏதோ பித்து பிடித்தவள் போல. மஹிமாவை பார்த்த வாரு, என் கண் முன்னே  ஒரு உயிர் போச்சே..

என்று புலம்ப.

அனைவரும் மஹிமாவின் உடலை  எடுத்து சென்ற மருத்துவ மனைக்கு சென்றனர்..

மஹிமாவை ஒரு வெள்ள துணியில் கட்டி வைத்து ஒரு டெக்சரில்  கொண்டு வந்து தர.

சீதா மஹிமா முகத்தையே பார்த்து நின்றாள்.

தூரத்தில், “மஹி, மஹிமா” என்று ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்க..

சீதா நிமிர்ந்து பார்த்தாள், ஒரு பர்தா போட்ட பெண் சீதாவை பார்த்தபடியே “மஹிமா, மஹிமா” என்று கத்திக் அழுது கொண்டே வந்தவர்.

மஹிமாவின் உயிரற்ற உடலை பார்த்து கதறி அழ.

சீதாவால் அதை பார்க்கவே முடியவில்லை, அவளும் சேர்ந்து மஹிமாவின்  அம்மாவை பார்த்து அழுதாள்.

“அல்லா’, என்று மஹிமாவின் தாய் மயங்கி கீழே விழ.

அவரை தாங்கி பிடித்துக்கொண்டார்கள் அங்கே இருந்தவர்கள்.

அவருக்கு  தண்ணீர் கொடுத்து,  விழிப்பு வர செய்ய.சீதா அவரை அணைத்து பிடித்தவள்.. “எங்களை மன்னிச்சிருக்க” என்று அழ.

சீதாவை பார்த்தவர்,..

“நீ சீதா தானே மா,  நீ போரட்டம் பண்ணுறத  டிவியில்  பார்த்துட்டு தான், உன்கிட்ட உண்மையை சொல்ல வந்தா மா, என் பொண்ணு, இப்படி பண்ணிட்டாங்களே என் பொண்ணை, மஹிமா” என்று அவர் மகளை அணைத்து அழ.

சீதா அவரிடம் என்ன சொல்லி தேத்துவது  என்று அவரை பிடித்த படியே  அவருக்கு பக்க பலமா இருந்தாள்..

மஹிமாவை அவர்கள் வீட்டிற்கு எடுத்து சென்று அவளுக்கு செய்யும் சடங்குகளை செய்ய, அனைத்தையும் பார்த்த படியே இருந்தாள் சீதா,  வெங்கட் மஹிமாவுக்கு ஹாஸ்பெட்டலிருந்து, அவள் இறுதி சடங்குவரை நடந்த அனைத்திருக்கும் அவரே பணம் கொடுத்திருந்தார், சிரஞ்சீவியும் சிவாவும், அவர்களுக்கு உதவி செய்ய.

சீதா மறுநாள் கூட மஹிமாவின்  தாயி அருகில் தான்  இருந்தாள்.

மஹிமாவுடன்  கூட பிறந்தவர்கள் யாருமில்லை அவள்  தாயிற்க்கு  அவள் ஒரே பிள்ளை,  அவர்களுடன் அவர் தந்தையும்  இல்லை  தனியே இருந்து மஹிமாவை கஷ்டபட்டு  டாக்டருக்கு படிக்க வைத்து வளர்த்தவர், மஹிமாவின் தாய்.

பெற்ற பிள்ளையை பறிக்கொடுத்து விட்டு அந்த தாய் படும் வேதனை பார்த்த சீதா அவரை விட்டு நகரவே இல்லை அவருடனே இருந்தாள்.

மஹிமாவின் தாய் கூட.

“நீ உன் வீட்டுக்கு போமா” என்று சொல்ல…

“உங்களை விட்டு போக முடியல மா,, உங்க பொண்ணு கடைசியா மை மாம் என்று சொல்லிவிட்டு  தான் அவ உயிரை விட்ட.

இப்போ  தான் தெரியுது, அவ உங்களுக்கு யாரும் இல்லன்னு வருத்தப்பட்டு இருக்கான்னு,,..

கவல படாதீங்க, உங்களுக்கு நான் இருக்கேன், உங்களை நான் விடமாட்டேன், எனக்கு அம்மா இல்ல, உங்களுக்கு பொண்ணு இல்ல,, அது என்னால தான், உங்களுக்கு மகளா கடைசி வரைக்கும் நான் இருப்பேன்” என்று மஹிமாவின் தாயை அணைத்து கொண்டாள் சீதா அழ..

மஹிமாவின் தாயிற்க்கு சீதா பேசியது  கொஞ்சம் ஆறுதலாக இருந்தது,,

இன்னும் இரண்டு நாளில் ரவி  தப்பு பண்ண வில்லை என்று ஆதரத்தோடு நிருபிக்க வேண்டும். என்ற நினைத்த சீதா மஹிமா தாயிடம் இரண்டு நாள் கழித்து வருகிறேன் என்று சொல்லி விட்டு.

போலீஸ் ஸ்டேசனுக்கு வெங்கட்டுடன் வந்தாள்..

சேதுபதி அங்கேயே இருக்க.

“எங்களுக்கு கொல நடந்த அன்றைக்கு உள்ள ஷிப்பின்  வீடியோ புட்டேஜ் வேணும்”  என்று சீதா கூற.

அந்த போலீஸ் காரர்  “வீடியோ புட்டேஜ் எல்லாம்  கோர்ட்டில் சப்மீட் பண்ணியாச்சு,  அங்கே போய் வாங்கிக்கோ” என்று கூற.

சீதா கோர்ட்டுக்கு வந்தால் வீடியோ ஆதாரத்தில் ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்க..

அவளை அங்கே, இங்கே என்று அழையவிட்டு, கடைசியில் தரமுடியாது, என்று கூறி விட.

தன் நிலைமை பார்த்தும் அழையவிட்டவர்களின்  மேல் கோபம் கொண்டவள்..

பிரஸ் மீட்டை அழைத்திருந்தாள் சீதா அவர்களிடம்  “நாளை மறுநாள் என் கணவரை  அவர் எந்த தப்பும் பண்ணவில்லை என்று நிருபித்து,, வெளியே அழைத்து வருவேன்” என்றவள்.

“தீப்தி, சோணாலி, மஹிமா இந்த மூனு பெண்களை கொன்ற உன்னை சும்மா விட மாட்டேன் டா, பெண்களெல்லாம் நீங்க யூஸ் பண்ணி தூக்கி எறியிற டீஸ்சு பேப்பரா, நெருப்புடா, நீ பண்ணதுக்கு நீ அனுபவிச்சே ஆவ”என்றவள்.

தன் கணவரை வெளியில் எடுக்க ஆதாரம் கிடைத்து விட்டது என்று பிரஸ் மீட்டிடம்  சொல்ல.

இதை தொலைகாட்சி பார்த்து கொண்டிருந்த வீர ரத்னாவின் ஆள்.

“சார் சார் அந்த ரவி பொண்டாட்டி ஏதோ ஆதாரம் இருக்குற மாதிரி பேசிக்கிட்டு இருக்கா” என்று சொல்ல.

வீர ரத்னா ஒரு கையில் மதுவை அருந்திக்கொண்டே, மறுகையில் சிக்ரேட் புகையை இழுத்து விட்டவன்..

“ஏ…. ப்பூல்  தடையத்தை விட்டு வந்தவன் தான் பயப்படனும், நீ ஏன்டா பயப்படுற..

அந்த சீதா கிட்ட எந்த ஆதாரமும் இல்ல,,  அவள்  நம்மளுக்கு எதிரா ஆதாரத்தை கண்டு பிடிக்க முடியல,  அதுக்குத்தான்  அவ ஆதாரம் இருக்குன்னு சொல்லுற , நாம ஆதாரத்துக்காக அவளை நெருங்குவோம் நெனச்சிருக்க.

நீ பயப்பிடாதா அந்த சீதா தலைகீழ நின்னாலும், நம்மளுக்கு எதிரா எந்த ஆதாரத்தையும் கண்டு பிடிக்க முடியாது,

அப்படி கண்டு பிடித்து கொடுத்தாலும், கோர்டுல நம்மளுக்கு தெரிந்த ஒருதன் இருக்கான் அவன் பாத்துப்பான்,, ஆதாரத்தை மாத்தி வச்சுடுவான்” என்று கூறி சிரிக்க.

“இருந்தாலும் அந்த நடிக்குற  பெண் பிள்ளைகளை  கொன்னு இருக்க கூடாது சார்”..

“நான் என்னடா பண்ணுறது, ஏற்கனவே ரவி மேல தொழில் போட்டியில இருந்தேன், அவனை எப்படியாவது இந்த ஷிப்பிங் தொழில விட்டு பல முறை  போக  சொன்னேன், அவன் கேட்டானா,  ஷிப்பிங் தொழில விட்டு போடான்னா, பெரிய சொகுசு கப்பல வாங்கிட்டு வந்து நிக்குறான்.. எனக்கு அடுத்த வந்தவன் தான் அவன்,

நான் தான்டா  ரவிக்கு முதல்ல, முதல்ல ஒரு பழய சரக்கு கப்பலை வாங்கி கொடுத்தேன் அவனுக்கு.

ஆனா  எனக்கு எதிரா பல போக்குவரத்து கப்பலை வாங்கியிருக்கான்…

என்ன விட கம்மி விலைக்கு பொருட்களை வெளிநாட்டு இருந்து வாங்கிட்டு வர்ரான்.

என் தொழிலே இவனால போச்சு, தொழில் கத்து கொடுத்தவனுக்கே, எதிரா தொழில் பண்ணா நான் சும்மா விடுவேனா இந்த ரவியை , எப்படி செக் வச்சு உள்ளே தூக்கி போட்டேன் பாரு,, என் மச்சான் சேதுபதி குடுத்த ஐடியா எப்படி, அவனால அசைய முடியாத படி,  செக் வச்சு இருக்கேன்..

ரவி போனா, அவன் கப்பல் முழுவதும் எனக்கு தான், ஐ எம்  ஒன் ஆன்ட் ஒன்லி, என்னை யாரும் தடுக்க முடியாது..

கண்டிப்பா அந்த ரவிக்கு தூக்கு தண்டனை  தான் வரும்” என்று கூறி சிரித்தான் வீர ரத்னா.

சீதா ஆதாரத்தை தேடி,  தேடி அழைந்து ஓய்ந்து போனாள்.

நாளை ரவியின் கேஷ்  விசாரனை என்றிருக்க,,  கையில் ஒரு ஆதாரமும் இல்லை என்றவள்

ஓய்ந்து போயி கோவில் வாசலில் சீதா அமர்ந்திருக்க..

பத்மா  தன் பேரன் கதிரோடு, அவர் மகனை காப்பாற்ற ஆதாரத்தை எடுத்துக்கொண்டு வந்தார் சீதாவிடம்.

உண்மை என்றும் வெல்லும்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!