Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 28 3

 

“ரவி என்னை கொன்னுடு” என்று வீர ரத்னா கத்த..

 

“இந்த கடல்ல இருக்கிற கழுகுக்கும் பறவைகளுக்கும் நீ  இறையாக போறடா, நீ உயிரோடு இருக்குறப்பவே உன்னை அதுங்க கொத்தி,  கொத்திக்  திங்க போகுது அதுதான் உனக்கு நான் கொடுக்கிற தண்டனை” என்ற ரவி.



Advertisement

 

வீர ரத்னாவை நடுக்கடலில் யாரும் இல்லா போட்டில் விட்டு விட்டு சென்று விட்டான்.

வீரரத்னா  கூட்டாளியை  கழுத்தை அறுத்து எப்போதோ  நடு கடலில் வீசி இருந்தான் ரவி..

Advertisement

 

Advertisement

இன்னும் மார்ட்டினும் வில்லியம்ஸ்தான், அவர்கள் இருவரை கண்டுபிடித்து துடிக்க துடிக்க கொல்ல வேண்டும் என்று ரவிக்கு ஆத்திரம் வர..

 

என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான் ரவி.

Advertisement

 

அப்போது  தான் தீப்தியின்  தந்தை போன் பண்ணி இருந்தார் ரவிக்கு ..

 

ரவி அவரிடம் மன்னிப்பு கேட்க.

 

“நீ எதுக்கு மன்னிப்பு கேக்குற, நீ ஒன்னும் செய்யலையே”  என்றார் அவர்.

 

ரவி அனைத்து விசயத்தையும் தீப்தியின்  தந்தையிடம் சொல்ல. கதறி அழுதவர், “அவள் எனக்கு ஒரே பொண்ணு நீண்ட வருஷம் கழித்து பிறந்தவ இந்த விசயத்தை தெரிஞ்சு உடனே  என் பொண்டாட்டி பைத்தியக்காரி மாதிரி ஆயிட்டா  இதை நான் பார்த்துக் கொள்கிறேன், நீ உன் குடும்பத்தை பாரு ரவி” என்று தீப்தியின்  தந்தை கூற.

 

“இல்ல சார்,  தீப்தி  சோணாலி வாழ்க்கையை  அழிச்சவங்களை  நான் விடமாட்டேன் என்றவன்…

 

பல நாள் தீப்தின் தந்தையோடு சேர்ந்து திட்டம் போட்டு, மார்ட்டினையும், வில்லியம்ஸ் இருவரையும் யாருக்கும் தெரியாதவாறு கொன்றுவிட்டு இந்தியா வந்திருந்தனர்….

 

சீதாவுக்கு குழந்தை பிறந்து 30 நாள் ஆகி இருந்தது..

 

சீதாவுக்கு நாளுக்கு நாள் ரவியின் மீதும் கோபம் ஏறிக்கொண்டே இருந்தது..

 

அன்றுதான் அவன் பிள்ளைகளுக்கு தொட்டிலில் போட்டு பெயர் வைக்கும் நாள் அதிகாலையில் 5 மணிக்கே  ஹைதராபாத் வந்திருந்தான் ரவி..

 

வந்தவன் அவன் அறைக்கு சென்று குளித்து விட்டு சீதா இருக்கும் அந்த பெரிய அறைக்கு வர.

அந்த அறை கட்டிலில் தன் இரு பிள்ளைகளும் கையை காலை ஆட்டி படுத்திருக்க.

 

சீதாவை காணவில்லை ஓய்வு அறையில் லைட் எறியா, அங்கே  தான் சீதா இருக்கிறாள் என்று புரிந்து கொண்டவன்..

தன் மழலைச் செல்வங்களை பார்க்க..

 

பெண் பிள்ளை  பார்க்க அச்சு அசல் ரவி போலவே இருந்தாள் ரவியின் மகள்.

 

தன் மகனை  பார்க்க அவன் சீதா ஜாடையிலும் தன் ஜாடையிலும் சேர்த்து  பிறந்திருந்தான்.

 

பிள்ளைகளை தூக்க கை பரபரத்தாலும் கொஞ்சம் பயம் வந்து அவன்  அப்படியே அவர்களை பார்த்தபடி  நிற்க.

 

ஓய்வு வரை கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான் ரவி.

 

அவன் இன்று வருவது சீதாவுக்கு தெரியும்..

 

அவனைப் பார்த்த முறைத்தபடியே கிச்சன் நோக்கி சென்றாள் சீதா..

 

சீதா அடுப்பில் பாலை சூடு பண்ண கிச்சன் சென்றாள்.

 

சீதா, தன் மேல்  கோபமாக இருப்பாள் என்று  தெரிந்து கொண்ட ரவி சீதாவின் பின்னாடியே சென்றவன் அவள்  ஸ்டவ்வை பத்த வைக்கவும்,  அதை ஆப் பண்ணியவன் அப்படியே அவளை அள்ளிக் கொண்டு தன் ரூம் சென்றான்.

 

அவன் தூக்கியதும் கோபம் கொண்டவளுக்கு

மரியாதை எல்லாம் எங்கேயோ போயிவிட்டது.

 

“டேய் ரவி என்னை விடுடா,விடுடா” என்று  சீதா  கத்த.

 

சீதாவின் சத்தம் கேட்டு வெளியில் இருந்து ஓடி  வந்த பத்மா..

 

மகன்  சீதாவை தூக்கிக்கொண்டு செல்வதை பார்த்து  சிரித்தவர் பேரப்பிள்ளைகள் இருக்கும் அறைக்கு சென்றார்.

 

சீதாவுக்கு அவ்வளவு கோபம் அவனை அடித்துக் கொல்லும் வேகத்தில் இருந்தால்.

 

அவனோ அவளை  பின்னிருந்து அணைத்திருந்தவன், முன்னே அவளை  கொண்டு வந்து  “மன்னிச்சிடு சீதா” என்றவன். அவள் முகம் முழுவதும்  முத்தமிட.

 

சீதா அவனிடம் முரண்டு பிடித்தவள்.

 

“போடா!,  போடா ரவி!” என்று அவனை அடித்தாள்.

அவனோ அவள் போட என்றதும் சிரித்துக் கொண்டவன்.

 

” என்னடி மரியாதை எல்லாம் தேயுது” என்றவன் சிரிக்க.

 

“எங்க போன நீ,?  நான் உன்னை தேடுவேன்  என்று உனக்கு தெரியாதா? என்ன விட்டுட்டு போன இல்ல போ , போடா”  என்றவள்.

அவனின்  கழுத்தை  பிடித்து நெறித்தவள்..

 

அவன் மார்பின் மீதே சாய்ந்து அழ.

“சாரிடா சாரி என்னை மன்னித்துவிடு என்றவன்.

 

“நான் உன்கிட்ட  கோர்ட்டில் இருந்து ரிலிஸ்சாகி அப்போ  வந்தாலும் இவ்வளவு சந்தோஷமா இருந்திருக்க மாட்டேன்.

 

என்னை விடு,, அந்தப் மூனு  பெண்களுக்கு நடந்ததற்கு நியாயம் கிடைக்க வேண்டாமா நியாயம் கிடைக்காமல் எப்படி நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கிறது..

 

இப்ப எனக்கு மனசு நிம்மதியா இருக்குடா” என்றவனை..

 

 

“பழசு எல்லாம் பேச வேண்டாம் ரவி” என்றாள்.

 

“சரி என்ன பண்றாங்க நம்ம குட்டி பிள்ளைங்க” என்றான்..

 

“ரெண்டும் சமத்து. என் தங்க குட்டிங்க.. அவங்க அப்பா மாதிரி இம்சை கிடையாது”.. என்றாள்.

 

“சீதா நான் உனக்கு இம்சையா?” என்றவன் அவளின் காதை கடிக்க.

 

“ஹலோ சார் பிள்ளை பெத்து ஒரு மாசம் தான் ஆகுது” என்றாள்.

 

அவளின் வயிறை மெல்ல தடவியவன் “ரொம்ப வலிச்சதாடா” என்றான்..

 

“இல்லப்பா பரவாயில்ல”  என்றாள் சீதா.

 

சீதாவை தன் மேல் போட்டுக் கொண்டவன் நீண்ட நேரம் கதை பேசினான்  மனைவியிடம் அவளை அணைத்தபடியே..

 

குழந்தைகள் அழும் சத்தம் கேட்டு தான் சீதா ரவியை விட்டு பிரிந்தாள்.

 

எழுந்தவுடன் தன் புடவையை பார்த்தாள் சீதா , புடவை கொஞ்சம்  கழைந்திருக்க.

 

“என்ன பண்ண ரவி புடவை எல்லாம் கலைஞ்சுருக்கு” என்றாள்.

 

“புடவை கலயாம இருந்ததான்  தப்பு டி பொண்டாட்டி” என்றவன் அவளில் உதட்டோடு உதட்டை வைத்து ஒட்டி  எடுக்க.

 

“போடா டேய் ரவி”  என்றவள் அவனின் கன்னத்தை லைட்டாக கடித்துவிட்டு ஓடி இருந்தாள்.. .

 

சிரித்துக்கொண்டே  ஓடி வந்து சீதாவை பார்த்தபடி அவள் அறையில் அமர்ந்திருந்தார் பத்மா.

 

மருமகளின்  சிரித்த முகத்தை பார்த்தவர்,, “இந்த குழந்தைகளை பசியாத்து” என்று பிள்ளைகளை அவள் மடியில் கொடுத்து விட்டு அவர் வெளியே வர.

 

 

சிரித்த முகத்தோடு தலையை கோதியப்படியே அவன் அறையில் இருந்து வெளியே   வந்த  மகனை பார்த்த பத்மா,..

“ரவி” என்று மகனை அழைக்க.

 

தன் தாயை ஓடி வந்து  அணைத்துக் கொண்டான் ரவி..

 

“எப்படி மா இருக்கீங்க” என்று கேட்க.

 

“நான் நல்லா இருக்கேன்டா” என்று  மகனை தொட்டு தடவி பார்த்தவர் “நீ இப்படியே சிரிச்சுகிட்டு சந்தோஷமா இருக்கணும் டா, பொண்டாட்டி பிள்ளைகளோடா ” என்றார்.

 

“நீங்க எல்லாம் இருக்கிற வரைக்கும் நான் எப்பவும் சந்தோஷமா தான் இருப்பேன்மா” என்றவன் கதிர் எங்கே என்று கேட்க.

 

“அவன் அப்பா கூட தூங்கிட்டு இருக்கான்” என்றார்.

 

மகனைப் பார்த்து வந்தவன் நாகம்மாள் அருகில்  சென்று அமர்ந்து கொண்டான்.

 

பேரனை  கட்டி அணைத்து  அழுதிருந்தார்  நாகம்மாள்..

 

“அவ்வா எனக்கு ஒன்னும் இல்ல நல்ல தானே இருக்கேன்” என்றிருந்தான்.

 

அன்று காலை பத்து மணிக்கு  பிள்ளைகளுக்கு தொட்டிலில்  போட்டு பெயர் வைக்க ஏற்பாடு பண்ணியிருந்தனர்.

 

சிவா, சிரஞ்சீவி,மாலா, மஹிமாவின் தாய் அனைவரும் வந்திருந்தனர்.

 

ரவி  சீதாவோடு பிள்ளைகள் இருக்கும் அறையில் தான் இருந்தான்.

 

பொண்டாட்டியும் பிள்ளைகளையும்  பார்த்தபடி அவன்  சந்தோஷமாக அமர்ந்திருக்க..

 

“பிள்ளைகளுக்கு பேர் செலக்ட் பண்ணிட்டியா சீதா” என்றான் ..

 

“பாப்பாக்கு நான்  செலக்ட் பண்ணிட்டேன்  ரவி, தம்பிக்கு நீங்க பேரு வச்சிடுறீங்களா” என்றாள் சீதா.

 

“ஏண்டா நீயே வை” என்றான்.

 

“நான் பாப்பாக்கு செலக்ட் பண்ணது உங்களுக்கு ஒன்னும் கோபம் இல்லையே” என்றாள்.

 

“நீ என்ன பேரு செலக்ட் பண்ணி இருப்பாய் என்று எனக்கு தெரியும்” என்றான்.

 

“என்ன?” என்று சீதா  கேட்க

 

“மஹிமா தானே” என்றவன்.

“உன்னை பற்றி எனக்கு தெரியாதா சீதா”. என்றான்.

 

“என்னால மஹிமாவை இன்னும் மறக்க முடியல ரவி, என் கண் முன்னாடியே ” என்று கலங்கியவளை வேகமாக வந்த ரவி அணைத்துக்கொண்டான்.

 

“அந்த பொண்ணோட அம்மாவுக்காக நம்ம வீட்ல ஒரு மஹிமா வளர வேண்டும்” என்றாள் சீதா.

 

“சரிடா எல்லாம் உன் ஆசை படியே நடக்கட்டும்” என்றான் ரவி.

 

“தம்பிக்கு பேரு”  என்று அவள்  கூற.

 

” அது உன் மாமியார் வைப்பாங்க வா” என்றவன், பிள்ளைகளை வெளியில் அழைத்து சென்றான்.

 

இரண்டு பிள்ளைகளுக்கு இரண்டு அழகான தொட்டிலில் அலங்காரம் பண்ணி அவர்களை  தொட்டிலில் படுக்க வைக்க..

 

பெண் பிள்ளைக்கு “மஹிமா மஹிமா” என்று பெயரைச் சொல்லிவிட்டு மஹிமாவின் தாயின் மடியில் கொண்டு போய் பிள்ளையை   கொடுத்தாள் சீதா.

 

மஹிமாவின் தாய்க்கு கண்கலங்கி விட்டது “இது உங்க பேத்தி நான் உங்க பொண்ணு நாங்க எப்பவுமே உங்க உறவு” என்றாள் சீதா..

 

மஹிமாவின் தாய்க்கு தன் மகளே பிறந்து வந்தது போல் என்று உணர்ந்தவர் சீதாவை அணைத்துக் கொண்டார்.

 

 

வெங்கட் “பேரனுக்கு என்ன பெயர்” என்று கேட்க .

 

ஆண் பிள்ளையை தூக்கி சென்ற ரவி  பத்மாவின் மடியில் கொடுத்தவன் “நீங்க வைங்க பேரு உங்க பேரனுக்கு” என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!