செக்குருட்டி அனைவரும் ஒவ்வொரு தளமாக சென்று அனைத்து ரூம்களில் இருந்து சீதா சொன்னா அந்த கப்பல் லோகோ போட்டோவை எடுத்துக்கொண்டு வந்து அவளிடம் கொடுக்க. அதை வாங்கி கொண்ட சீதா.
அதை அனைத்தையும் சிரஞ்சீவி, வெங்கட் உதவி யோடு உடைத்து அனைத்து கேமராவையும் எடுத்தவள்,, ரவியின் ஆபிஸ் அறையை பூட்டி விட்டு.
Advertisement
மீட்டிங் ரூம்பில் இருப்பவர்களை நாளை ரவி கேஷ் தீர்ப்பு வரும் வரை வெளியில் யாரையும் விட கூடாது என்று சொல்லிய சீதா.
Advertisement
கப்பலில் இருந்து கிளம்பியவள், சைபர் கிரிமினல் ஆபிஸ்க்கு வந்து அவளிடம் இருந்த அனைத்து சிறிய வகை கேமராக்களை கொடுக்க.
Advertisement
உடனே அங்கே உள்ள டீம் ஆட்கள் அந்த கேமராவில் பதிவாகி இருந்த, அனைத்தையும் பார்த்து முடிக்க அதி காலை ஆனது.
அந்த சைபர் கிரைம் ஆபிசர் வந்து உண்மையை சொல்ல சீதா பாதியிலே வேண்டாம் என்று மறுத்திருந்தாள்.
அவளால் இதற்கு மேல் அந்த பெண்கள் அனுபவித்த வேதனை கேட்க முடியவில்லை,.
போதும் என்றவள்.
எனக்கு பதிவாகி இருந்த அனைத்து வீடியோ பதிவையும் அனுப்புக்கள், என்றாள்.
வீடியோகள் அவளுக்கு வர.
உடனே அதை சீ எம் போனிற்கு அனுப்பினாள், அவள் யாரையும் நம்ம தயாராக இல்லை, தன் முன்னே கொலை செய்தவர்களுக்கு தன்னிடமிருந்து ஆதாரத்தை எடுக்க எவ்வளவு நேரமாகும் என்று நினைத்தவள்.
அந்த சைபர் கிரைம் ஆபிசருக்கு நன்றி சொல்ல.
சீதா இந்த பெண்கள் கொலைவழக்கு கேசில் பலர் இருக்கிறார்கள், அவர்களை உடனே அரஸ்ட் செய்ய வேண்டும் என்று சொல்ல, உங்க கடமையை செய்யுங்கள் என்று சொன்னவள், சிரஞ்சீவியிடம் எல்லா ஆதாரத்தையும் கொடுத்தவள், ரவி வெளியே வர்ரது உன் பொறுப்பு, ரவியை வெளியே கொண்டு வந்து நாளைக்கு என் கண் முன்னாடி நிருத்துற சிரஞ்சீவி” என்றாள் சீதா..
“நீ எங்கே போற சீதா” என்றான்.
“டேய் எனக்கு டெலிவரி பெய்ன் வந்துருச்சு நான் ஹாஸ்பெட்டல் போறேன்”, என்று நண்பனிடம் கூற..
“ஏய் சீதா பெய்ன் வந்துடுச்சா, அப்பவே சொல்ல வேண்டியது தானே” என்று சிரஞ்சீவி கோபித்து கொள்ள.
“நான் என்னை பாத்துப்பேன், நீ சாக்கிரதை இரு, உன்ன நான் இழக்க முடியாது, நீ இங்கேயே இரு, சரியா கோர்ட் விசாரனை நடக்குறப்போ அங்கே போ” என்றவள்.
வெங்கட்டை அழைத்து கொண்டு ஹாஸ்பிடல் சென்றாள்.
போகும் போதே பத்மாவை ஹாஸ்பெட்டலுக்கு வர சொல்லி இருந்தார்கள்.
சீதாவுக்கு பிரசவ வலி விட்டு, விட்டு வர.
குழந்தைகளுக்கு நீர் சத்து கம்மியாக இருப்பதால் , ஆப்ரேசன் பண்ணி தான், குழந்தையை எடுக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லி விட.
சீதா ஹாஸ்பெட்டலில் அட்மீட் பண்ணிவிட்டு சீதாவுக்கு ஆப்ரேசன் பண்ண வேலைகள் நடக்க.
மறுநாள் ரவி கேஷ் கோர்ட் விசாரனை வந்தது, அனைத்து ஆதாரங்களை பார்த்த ஜட்ஸ்கள், ரவி எந்த தவறும் செய்ய வில்லை என்று முடிவு பண்ணி அவனை வெளியே விட்டனர்.
பின்பு இந்த பெண்கள் கொலை வழக்கு கேஷில் மொத்தம் 11 பேர் சம்பந்த பட்டு இருப்பதால், அனைவரையும் அரஸ்ட் செய்யும் படி கேட்டு கொள்ள படுகிறது என்று கூற.
இதை கேட்ட அனைவருக்கும் சாக்..ஆனார்கள்
என்ன பதினோரு பேரா. என்று.
அனைத்து டி வி யிலும் பத்திரைக்கையிலும் இதுவே, பெரியதாக பேசப்பட.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய.
6 பேர் ரவியின் ஷிப்பில் வேலை செய்பவர்கள், அடுத்தது ஒரு போலீஸ் சேதுபதி. இவரை சேர்த்து மொத்தம் 7 பேரையும் இப்போதே அரஸ்ட் பண்ணி விட்டார்கள்.
இன்னும் நான்கு பேர் மட்டும் தான் பாங்கி.
வீர ரத்னா, பின்பு அவன் கூட இருக்கும் அல்லக்கை ஒருவன்.
பின்பு இந்த சம்பவம் நடக்க காரணமாக இருந்த, இரண்டு வெளிநாட்டு காரர்கள்.
இவர்கள் நான்கு பேர்தான் மெய்ன் குற்றவாளி இவர்களை அரஸ்ட் பண்ண போலீஸ்க்கு கோர்ட் பறிந்துரை செய்யகிறது என்று கோர்ட்டில் தீர்ப்பு கூறி விட.
ரவி கோர்ட்டை விட்டு வெளியே வந்தான்.
அவன் கண்கள் சீதாவை தேடியது.
வெங்கட், சிரஞ்சீவி, சிவாவும் மட்டும் இருக்க..
வெங்கட் மகனை அணைத்துக்கொண்டார்.
சிரஞ்சிவியும் சிவாவும் கூட ரவியின் கையை பிடித்துக் கொள்ள.
சிரஞ்சீவி, சிவாவையும் பார்த்த ரவி “உங்க ரெண்டு பேருக்கும் நன்றி என்று ஒரு வார்த்தையும் சொல்ல முடியாது நீங்க சீதாவுக்கு பக்கபலமா இருந்து அவளை வழிநடத்தி இருக்கீங்க” என்றவன் இருவரையும் கட்டி அணைத்துக் கொண்டான்..
வெங்கட் மகனை அணைத்தவர் “உனக்கு ரெட்டை குழந்தைகள் பிறந்திருக்குடா”.. என்றார்..
ரவிக்கு மகிழ்ச்சியில் கண் கலங்கியது.. “சீதா எப்படிப்பா இருக்கா”? என்றான்.
“மயக்கத்திலே தான் இருக்கா குழந்தைகள் நல்லா இருக்காங்க ஒரு பையன் ஒரு பொண்ணு” என்றார்..
ரவிக்கு அவன் பட்ட துன்பம் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தவன்.
“சீதாவை பாத்துக்கோங்க” என்றவன்.
அவனின் பீ ஏ உடன் கிளம்பா போக.
மகனைத் தடுத்த வெங்கட் “டேய் ஹாஸ்பிடல் வா சீதாவை பாரு” என்று சொல்ல..
“என் சீதாவை இவ்வளவு வேதனை பட வைத்தவன் இன்னும் உயிரோடு தானே இருக்கான்” என்றவன் கிளம்ப பார்க்க..
“அந்த மூனு பொண்ணுங்களை கொன்னவங்களை சும்மா விட சொல்றீங்களா”? என்றான்..
“டேய் ரவி ப்ளீஸ் வாடா சீதாவை பாருடா உன் குழந்தையை பாருடா உன் வாழ்க்கையை பாரு தப்பு பண்ணவனுக்கு தண்டனை கண்டிப்பா கிடைக்கும் நீ வா டா” என்று வெங்கட் மகனிடம் தன்மையாக கூற.
“சீதாவை பார்த்துக்கோங்க” என்றவன் அவன் பீ ஏ வுடன் காரில் கிளம்பி இருந்தான்..
வெங்கட் அவன் போய் விட்டான் காரில் என்று சொல்ல இரண்டு பேருக்கும் சொல்ல முடியாத வேதனையடைந்தனர்..
சிதாவுக்கு ரவி மேல் கட்டுக்கடங்காத கோபம் என்னை ஒருமுறை பார்த்து விட்டு சென்றிருக்கலாமே என்று..
ரவி முதலில் அவன் ஷிப்பிற்கு தான் சென்றிருந்தான். இங்கே இருந்து கொலைக்கு சம்பந்தப்பட்டவர்களை போலீஸ்காரர்கள் ஏற்கனவே அரஸ்ட் பண்ணி அழைத்து சென்றிருக்க.. வீர ரத்னாவை தேடிக் கொண்டிருந்தான்..
வீர ரத்னாவிற்கு இது தெரிந்து நடுக் கடலில் அவன் கப்பலில் இருந்தான்..
ரவி இரண்டு நாட்களில் அவனைத் தேடிப் கண்டு பிடித்து சென்றான்…
தன் முன் தலைகீழாக தொங்கி கொண்டு இருந்த வீர ரத்னாவை பார்த்து நக்கலாக சிரித்த ரவி.. ஒரு கட்டையை வைத்து ஓங்கி அடித்து இருந்தான்..
வீர ரத்னாவின் கத்தல் கடல் எங்கும் எதிர் ஒலித்தது..
“சொல்லு ஏன் அந்த ரெண்டு பொண்ணுங்கள கொன்ன சொல்லுடா” என்றவன் கட்டையால் அடி வெழத்து விட்டிருந்தான்..
“ஒரு பிஸ்னஸ் பேசதான் உன் கப்பலுக்கு இரண்டு பேர பார்க்க போனேன், அவர்களின் ஒருவன் மார்டின் ஆஸ்ரேலியா காரன், இன்னொருவன் வில்லியமஸ் ஆப்பிரிக்கா காரன் கருப்பன், அவங்க இரண்டு பேரும் கிட்டையும் ஒரு பிஸ்னஸ் பேசி முடிச்சேன்,.
அவங்க ரெண்டு பேரும் தீப்தியை, சோணாலியை உன் கப்பலில் வைத்து பார்த்து ஆசைப்பட்டாங்க.
எனக்கு நிறைய ஆர்டர் தருவதாக சொன்னாங்க.
அதனால தான் ஆசைப்பட்டு இப்படி பண்ணிட்டேன்..
ரவிக்கு ஆத்திரம் தீரவில்லை, “பணத்துக்காக இப்படி பண்ணியா, நல்லா தான்டா இருக்கா'”.. என்று மீண்டும் அடித்தவன் மேல சொல்லு என்றான்.
“ரெண்டு நாளா தீப்தியையும், சோணாலியை வாச் பண்ணோம்.. அப்போதான் தீப்தி கூட இரண்டு பையன்கள் சாப்பிடுற எடுத்துல சண்டை போட்டாங்க.
எனக்கு சில பேர் உதவி இல்லாம தீப்தியை, சோணாலியையும் எங்க ஆசைக்கு இணங்க வைக்க முடியாது என்று யோசித்தேன்.
அதனால தீப்தி கூட சண்டை போட்ட பையனுகளுக்கு பல லட்சம் பணம் கொடுத்து ஆசை காட்டி பேசி அவங்கள மறு நாள் தீப்தி, சோணாலி சாப்பிடுற உணவுல மயக்க மருந்த அந்த பொண்ணுகளுக்கு கொடுக்க சொல்லி தீப்தியையும், சோணாலியை மார்ட்டின் அறைக்கு தூக்கிட்டு வர சொன்னோம்.
சிசிடி கேமரா எல்லா அறையிலும் இருக்குறதால சிசிடி ரூம்ல இருக்கிற ரெண்டு மூணு பேருக்கும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கினோம்.
எல்லா எங்க திட்டப்படி தான் நடந்தது..
இந்த ரெண்டு பொண்ணுங்க ரொம்ப முரண்டு பண்ணாங்க அதனால அடிக்க வேண்டியதா போச்சு..
அந்த பொண்ணுங்க இங்க நடந்தத வெளியே சொல்லிடுவாங்கன்னு எனக்கு பயம் வந்துருச்சு என்ன செய்யலாம் யோசிச்சோம், அந்த பொண்ணுகள கொன்னு கடலுல வீசிடலாம் என்று யோசிச்சோம்.
சாகப் போற பொண்ணு தானே. நாங்களும் அனுபவிச்சிக்கிறோம் என்று அந்த சமையல்கார பையனும் அந்த சிசிடி கேமரா செக் பண்ணுற பசங்களும் கேட்டாங்க.
நாங்க எல்லாரும் சேர்ந்து தான் அந்த பொண்ணுங்களை” என்று வீர ரத்னா சொல்லி முடிகிறதுக்குள் அடி வெழுத்து விட்டான் ரவி அவனை.
பாதி உயிர் மட்டும் ஊஞ்சலாடிக் கொண்டு கத்திக் கொண்டிருந்தான் வீர ரத்னா..
“ரவி என்னை விடு, ரவி ஏதோ உன் மேல உள்ள பொறாமையில அப்படி பண்ணிட்டேன் எனக்கு அப்புறம் வந்த பையன் இவ்ளோ பெருசா வளந்துட்டான் என்ற பொறாமையில உன்னை சிக்க வைக்க இப்படி பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிடு ரவி” என்று அவன் கதற..
“என்னை பழி வாங்க உனக்கு எந்த வழி தான் கிடைத்ததா இரண்டு பொண்ணுங்க! ரெண்டு பொண்ணா மூணு பொண்ணை கொன்று இருக்க நீ..” என்று அடித்தே அவன் 90% உயிரை எடுத்திருந்தான் ரவி..