Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 3 2

முதல் நாளே சொல்லி விட்டாள் சீதாவிடம், நீ நல்லா கார் ஓட்டுற, இனி நீதான் எனக்கு டிரைவர் என்று,, சீதாவும் சரி என்று ஒப்புக்கொண்டாள்,, அவர்களிடம் வாங்கிய பணத்தை அடைக்கவேண்டுமே,, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ,  அவர்களிடம் வாங்கிய கடன் பணத்தை அடைத்து விட்டு இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று முடிவு  எடுத்திருந்தாள் சீதா..

சோனாலி  சூட்டிங் போகாமல் இருப்பது சீதாவுக்கு நல்லதாக போனது,, ஒரு நாள் முழுக்க அவளின் காரையோட்டி பணம் சேர்த்தவள்,, அழகுமலரை  பார்க்க  காரில் சென்றாள்..



Advertisement

சரியாக அவள் காலேஜ் முடித்து வரும் பாதையில் சீதா அழகுமலருக்காக காத்திருக்க,,

அழகுமலர் அவளை பார்த்தும் பார்க்காதது போல் செல்ல..

தோழியின் கோபத்தை உணர்ந்தவள்..

Advertisement

அவள் பின்னாடியே  கார் ஹார்னை அடித்து படியே செல்ல,, அவர்கள் இருவர்  எப்போது தேனீர் குடிக்கும் கடை வாசலில் அவளின் ஸ்கூட்டி நிறுத்திய அழகுமலர், அந்த கடைக்குள் செல்ல,, சீதா காரை பார்க் பண்ணிவிட்டு அழகுமலரை நோக்கி  வந்தாள்…

Advertisement

 தன் எதிரில் வந்து அமர்ந்த சீதாவை பார்த்த அழகுமலர் முறைக்க,, சீதா தோழியின் கோபத்தை பார்த்து  சிரித்தாள்….

Advertisement

 அவள் சிரிப்பதை  பார்த்து ஆத்திரம்  கொண்டவள்..”சிரிச்ச  மண்டை உடைத்து  விடுவேன்டி” என்று சீதாவை திட்ட..

 “அப்பாடா  பேசிட்டா!  ஒன்ன பேச வைக்க கஷ்டப்படனுமுன்னு  நினைச்சேன் பேசிட்ட” என்று தோழியை பார்த்த சந்தோஷத்தில் சீதா சிரிக்க..

 அழகுமலர்  சீதாவை பார்த்து அழுகியிருந்தாள் “உன்  பிரண்டா என்னை  நினைச்சிருந்தா உன் அப்பா இறந்ததை  நீ என்கிட்ட சொல்லி இருப்ப இல்ல,,? எல்லாத்தையும் என்கிட்ட  மறைச்சிட்டல நீ, போ பேசாத”  என்று அழுதவளை..

பக்கத்தில் சென்று அவளின் கையை பிடித்துக்கொள்ள..

“அப்படி என்னடி உனக்கு அவசரம்,, நாங்க எல்லாம் இல்லையா, ஒரு வார்த்தை சொல்லி இருந்தா அடுத்த நொடி நான் வந்திருபேனே, அப்பாவை நல்லா படியா அடக்கம் பண்ணி இருக்களாம், அப்போ என்னை உன் பிரண்டா நினைக்கல, அப்படி தானே”… என்றாள் அழகுமலர்…

 “மலர் நான்தான்  எல்லாத்தையும் போன்லயே  உன் கிட்ட சொல்லிட்டேனே.. நாங்க இருக்கிறது கார் செட்டுல, இருக்க ஒரு  வீடு கூட எங்களுக்கு கிடையாது அதுல வச்சு நான் அப்பாக்கு என்ன பண்ணுவேன் சொல்லு,, அது மட்டும் இல்ல  என் கையில காசு கிடையாது அன்னைக்குன்னு  பார்த்து பகதூர் வீட்டுல  பங்க்ஷன்,, என் சூழ்நிலைய புரிந்துகொள் மலரு,,”..

 “அப்போ உன்  தம்பி அவன் எங்கடி போனான் உங்க அப்பா செத்ததுக்கு வரலீயா”?..

 “அவனா அவன் கேரளாவுல நில சரிவு ஏற்ப்பட்டதே, அங்கே போறேன்னு போயிட்டான்,, நான் போன் பண்ணி அப்பாவுக்கு உடம்பு முடியல சென்னைக்கு வாடான்னு கூப்பிட்டத்துக்கு, வரமுடியாதுன்னு சொல்லிட்டான்,, ,, திரும்ப போன் பண்ணா,  போன்  ஆப்பாகி இருந்தது, சூழ்நிலை சரியில்லை மலரே,, என் விதி அதை விடு  மலரே நீ எப்படி இருக்கா”..

“நான் நல்லா தான் இருக்கேன்,, உனக்கு எப்படி விடிவு காலம் வரும்,,”..

“கூடிய சீக்கிரம் வரும் மலரே,, நீ எச்,  சோடி கிட்ட பேசுனீயா?  அவர் என்ன சொன்னார்”, என்றாள்..

 “அவர் முதலில் காட்சி பூச்சுன்னு கத்துனாரு வேலைக்கு வரல?  பி எச் டி முடிச்சு கொடுக்கணுமா? சீதாவை நேர்ல வர சொல்லுன்னு,, நான் தான் அவங்க அப்பா இறந்துட்டாங்கன்னு சொன்னேன் அதனால சரின்னு சொல்லி இருக்காரு”..

“தாங்யூ டி” என்றாள் சீதா..

 “நீ கவலைப்படாத நீ  பி எச் டி முடிக்க,  நான்  ப்பிரசன்டேஷன், தீசஸ் எல்லாம் ரெடிபண்ணி வைக்கிறேன்,, நீ ப்பிரசன்டேசன் பண்ண   வந்தா மட்டும்  போதும், வைவா அட்டென்ட்  பண்ண பிப்பேர் பண்ணிக்கோ இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு” என்றாள் அழகுமலர்..

 தோழியை கட்டி அணைத்துக் கொண்டாள்  சீதா கண்களில் கண்ணீர் வந்தது..

 “உன்ன மாதிரி ஒரு பிரிண்ட் கிடைக்க நான் குடுத்து வச்சுருக்கனும், உன்ன மாதிரி தோழி ஒவ்வொருவருக்கும் கிடைச்சா  கஷ்டப்படறவங்க கூட முன்னேறி வந்துருவாங்க”   என்றாள் சீதா..

“என்ன ரொம்பா ஓட்டாத , பேசாம நீ எங்க வீட்டுக்கே வந்துரு உங்க அப்பா இல்ல தானே” என்றாள் அழகு மலர்..

 “அப்பா இல்லாட்டி என்ன அவர் வாங்கி வைத்த கடன் நாங்க படிப்புக்காக வாங்கி வச்ச கடன் எல்லாம்  இருக்கிறதே மலரே அதை எல்லாம் திருப்பி கொடுக்கணுமே,,” என்றாள் சீதா..

 “சரி சரி எல்லாம் சீக்கிரம் முடிஞ்சுட்டு , வா” என்று இரு தோழிகளும் நன்றாக பேசிய விட்டு விடை பெற்றனர்…

 ஒரு வாரம் கழித்து பிரபு  வருவதாக சீதாவிற்கு தகவல் சொல்ல..

 தம்பி  வரும் நாள் அன்று  சோனாலியிடம்  லீவு கேட்டிருந்தாள் சீதா..

 சோனாலி திட்டிக் கொண்டே ஒரு நாள் லீவு கொடுத்திருந்தாள்..

 சரியாக ஏழு மணிக்கு வந்திருந்தான்  பிரபு,, அவன் மலர்ந்த முகமாக  வீட்டினுள் வர..

 சீதா தந்தையின்  உருவ போட்டோவை  வைத்து அவருக்கு பிடித்தமான உணவை சமைத்து  வைத்திருக்க,,.

 சிரித்துக் கொண்டே வந்தவனுக்கு தந்தையின் போட்டோவை பார்த்து அதிர்ச்சியாகி அப்படியே கையில் இருந்த பேக்கை  போட்டு “அப்பா” என்று கத்தி அழ..

 சீதா அமைதியாக பூஜைக்கு ஏற்பாடு பண்ணி கொண்டு  இருந்தாள்..

 தம்பி அழுததும் அவளுக்கு அழுகை வந்தது அவளும் சேர்ந்து அழுதால் அடுத்த வேலையை பார்க்க முடியாது என்றவள் பூஜைக்கு    தேவையானவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள்..

 அவன் சிறிது நேரம் அழுது முடித்தது அவன் பக்கதில் சென்றவள்,, தம்பியின்   தலையில் கைவைத்து தடவி விட.

  “ஏன்கா என்கிட்ட சொல்லலை”.. என்றான்..

 “நான் சொல்ல வந்தேன்,, நீ  தான் கேரளா  போறேன்னு சொன்னா,  மறுபடியும் நான்  உனக்கு கால் பண்ணேன் . உன் போன் சுவிட்ச் ஆப்புன்னு  வந்துச்சு  என்னை என்ன  பண்ண சொல்ற..

என் கையில் உண்மையில் காசு இல்லை,, நமக்கு அப்பா காரியத்தை செய்ய யாரு இருக்க சொல்லு,, அழுகாத, அப்பா எங்கேயும் போகலா,, நம்ம கூட தான் இருப்பாரு,, உனக்கு பிள்ளையா வந்து பிறப்பாரு, அப்போ அவரை நல்லா பாத்துக்கோ, போ போய் குளிச்சுட்டு வா,, அப்பாவுக்கு காரியம்  எல்லாம் நீதான் செய்யனும்,, பீச்சுக்கு கிளம்பனும் வா என்று சொன்னவள், தம்பிக்கு எடுத்து வைத்திருந்த வேஷ்டி சட்டையை கொடுக்க,  குளித்து வேஷ்டி சட்டையில் வந்தான் பிரபு,, அக்காவும், தம்பியும் கண்ணனை வணங்கி விட்டு,, அவரின் அஸ்தியை கடற்கரைக்கு எடுத்துக்கொண்டு  சென்று, கடலில் அஸ்தியை கரைத்து விட்டு,, ஒரு ஐயரை வைத்து கண்ணனுக்கு செய்ய வேண்டியதை செய்து   விட்டு,, வீடு வந்து சேர்ந்தனர்….

மறுபடியும் வீட்டில் பூஜை பண்ணி வணங்கி விட்டு,,  இருவரும் உண்டு விட்டு  அமர்ந்திருக்க,,.

“நீ என்கூட வந்திடுறீயா கா” என்றான் பிரபு..

 “நான்  உன்கூட அங்க வந்துட்டா உன் படிப்புக்காக  பகதூர் சார் கிட்ட வாங்கின பணத்தை யார் குடுப்பா,,  நீ படிச்சு முடித்து நல்லா டாக்டர் வா,, அக்கா அதுக்குள்ள கடனை அடைச்சிடுவேன்,, அப்போ நம்ம ரெண்டு பேரும் சேர்ந்திருக்களாம்” என்றாள்..

“சரிக்கா” என்றவன் சீதாவுடன் இரண்டு நாட்கள்  இருந்து விட்டு சொல்ல..

நாட்கள்  இரண்டு மாதங்களாக ஆனது,,

“நாளைக்கு  ஒரு  ஆவார்ட் பங்சனுக்கு போகனும் சீதா ஈவ்னிங்  வந்திரு” என்ற சோனாலி சொல்லி விட்டு போக,,

சோனாலி சொன்னா நேரத்திற்கு சீதா சரியாக வந்து காத்திருந்தாள்…    ஆனால் சோனாலிதான் மிகவும் தாமதமாக  ரெடியாகி தான் வந்தாள்,,.

 சோனாலியின் உடையை பார்த்து சீதாவுக்கு சீ,, என்று தோன்றியது,,

இப்படியா  தன் உடல் அழகை அடுத்தவர் பார்க்கும் வண்ணம் வெளியே  காட்ட வேண்டும்,,  தூ என்று மனதில் சோனாலியை மனதில் திட்டியவள் காரை எடுத்திருந்தாள்,,.

 “என்ன சீதா , ஒன்னும்  பேசாம வர்ற இந்த  ட்ரெஸ்ல நான் எப்படி இருக்கேன், “?.. என்றாள்..

“சூப்பரா  இருக்கீங்க மேடம்”  என்றவள் வேற ஒன்னும் சொல்லவில்லை,, ..

 சோனாலி தாமதமாக  வந்ததால். அவார்ட் பங்சன் நடக்கும் இடத்தில்   பயங்கர கூட்டமாக இருக்க   காரை பார்க் பண்ண முடியவில்லை..

 “மேம் ரொம்ப கூட்டமா இருக்கு,, காரை  பார்க் பண்ண  முடியாது நான் பக்கத்தில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் உள்ள  காரை  பார்க்  பண்ணிட்டு வெயிட் பண்றேன்,,   நீங்க வெளியே வந்த உடனே கால் பண்ணுங்க”  என்று சொல்லி விட்டு சொல்ல,,.

 பக்கத்தில் உள்ள பைஸ்டார்  ஹோட்டலுக்கு சென்று காரை பார்க்  பண்ணியவள்,, இந்த ஹோட்டலில் பின் வாசலில்  உள்ள பார்க்கிற்கு  வந்து அமர்ந்திருந்தாள்…

 அவார்டு பங்ஷனுக்கு  வந்த பாதிபேர்  இங்கே  வந்து தான் காரை பார்க் பண்ணி விட்டு சொல்வதை பார்த்தவள், பார்க்கில் உள்ள    ஊஞ்சலில் அமர்ந்து விட்டாள்  சீதா..

 மனம் என்னவோ  சந்தோஷமாக இருந்தது கலர் கலரான உடை உடுத்தி செல்லும்  நடிகர், நடிகைகளை பார்த்திருந்தாள்,, அவர்கள்   அழகான உடைகள் அணிந்து போகும் போது பார்க்க அழகாய் இருந்தது,, ..

 குளித்துவிட்டு அப்படியே தலையை கொண்டை போட்டு  வந்திருந்தாள் சீதா,, அது வேறு தலை வலிக்க முடி  ஈரமாக இருக்க..

 தன் ஜடையை அவிழ்த்து விட்டவள்,, அப்படியே  ஊஞ்சலில் ஆடிக்கொண்டே வெகுநேரம் அமர்ந்திருந்தாள்  இரவு வெகுநேரமாகி விட..

அப்போது தான்  அவார்ட்  பங்ஷன்  முடிந்து  அனைவரும் வேளியே வர….

  தூரத்தில் தன் நண்பன் சிரஞ்சீவி போல தெரிய,, அவன் தானா, இல்லை வேற யாருமா? என்று பார்த்திருந்தாள்  சீதா..

 இரவு வெளிச்சத்தில் சரியாக அவளுக்கு தெரியவில்லை சிரஞ்சீவி மாதிரி இருக்கு அவன் எங்கே இங்கே வந்தான்..

என்று  பார்வையை திருப்பிக் கொண்டு வேடிக்கை பார்க்க..

சரியாக  இவளை நோக்கி வந்தனர் அந்த இரண்டு   இளைஞர்கள்….

 சீதாவுக்கு தன்னை நோக்கி வரும் அந்த இளைஞர்களை  பார்த்த படியே அமர்ந்தவளுக்கு அதில் ஒருவன் தன் பள்ளி கால  நண்பன் என்று தெரிந்துவிட “டேய் சிரஞ்சீவி” என்று கத்தி இருந்தாள்,,..

“சீதா” என்று அவனும் அருகில் வந்திருந்தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!