Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 5 2

சிரஞ்சீவி சொன்ன அட்ரஸ்க்கு வந்து சேர..

இவளை வரவேற்பதற்காகவே  வெளியவே நின்று இருந்தான் சிரஞ்சீவி,



Advertisement

இவள்  காரை விட்டு இறங்கவுமே “சீதா இங்கே வா” என்று அழைக்க..

நண்பனை பார்த்து கையசைத்தவாறே வந்தவளை தன் படத்தின் ஹீரோயின்னாக பார்த்து நின்றான் சிரஞ்சீவி..

Advertisement

இன்று சீதா தலைக்கு குளித்து கூந்தலை   ப்பிரி ஹேர் விட்டபடியே

Advertisement

அழகுமலர் எடுத்து கொடுத்த,  விலையுயர்ந்த பிங் வண்ண சுடிதாரில் புதிதாய் பூத்த தாமரை போல   நடந்து வர..

உள்ளே காஸ்டீயும் டிசைனரிடம் பேசிக்கொண்டு இருந்த சிவாவை பார்த்து, “வா சீதா வந்துட்டா” என்று  சிரஞ்சீவி   சிவாவை அழைத்தான்..

சீதா என்றதும் சிவா வேகமாக  உள்ளே இருந்து வெளியே  ஓடி வந்திருந்தான்…

Advertisement

இருவரும் சீதாவை பார்த்தபடியே அசந்து போய்  நிற்க…..

நேற்று இரவு வெளிச்சத்தில், அவளின் அழகு தெரியவில்லை  இன்று தேவதை போல, பிங் சுடி அணிந்து வந்தவளை,  இருவரும் மெய்மறந்து பார்க்க,, சிரஞ்சீவி தன் பட ஹீரோயின் என்ற முறையில் பார்க்க.

சிவாவுக்கு அப்படி இல்லை, அழகிடி,, நீ என்றான் மனதில்,, நேற்று சீதாவை முதலில் பார்த்தது சிவா தான்,,.

“அங்கே ஒரு பெண் பாரு சிரஞ்சீவி ,, ஊஞ்சலில் எவ்வளவு அழகா முடியை விரித்து காய போட்டு மோகினி மாதிரி ஊஞ்சல்ல ஆடிக்கிட்டு இருக்குற பாரு,  அந்த பொண்ண  பார்க்கவே அழகா இருக்குல?” என்றிருந்தான் சிவா..

“யாரு”? என்று சிரஞ்சீவி பார்க்க,, தனக்கு தெரிந்த முகம் மாதிரி இருக்கே என்று தான் இருவரும் சீதாவின்  அருகில் வந்தது,,.

நேற்று ஆண் ஊடையில் சீதாவை ரசித்த சிவா, இன்று பிங் சுடி அணிந்து தேவதை போல இருந்தவளை ரசிக்காமல் இருக்க முடியுமா?…

 இருவரும் தன்னை ஆர்வமாக  பார்ப்பதை  பார்த்தவள்,  “இரண்டு பேரும்  நேத்துல இருந்து என்னை முறைச்சு தான் பாக்குறீங்க,  மேக்கப் டெஸ்ட் போலாமா, இல்ல இப்படியே முறைச்சு பாக்க போறீங்களா “??.

என்று சீதா  கேட்க..

 இரண்டு பேரும் சிரித்து, “எங்க ஹீரோயின்னா ரசிக்க விட மாட்ட போல,,  வா சீதா”.. என்று சிரஞ்சீவி உள்ளே அழைத்து சென்றவன்..

அங்கே காஸ்டீம் டிசைனர், மேக்கப் போடுபவர், போட்டோ எடுப்பவர் என்று 10 பேர் இருக்க,  அனைவரையும் சீதாவுக்கு அறிமுகம் படுத்தி வைத்தான்,,.

 “என்னடா இவ்வளவு பேர் இருக்காங்க”? என்றாள்  சீதா..

 ‘இதுக்கே இப்படியா  இன்னும் சூட்டிங் போனா நிறைய பேர் இருப்பாங்க  சீதா ” என்றவன்..

 அவளை  மேக்கப் டெஸ்ட்டுக்கு அனுப்பி வைத்திருந்தான்,,..

 ஒரு மணி நேரம் கழித்து சீதாவை மேக்கப் போட்டு அழைத்து   வந்திருந்தாள்  அந்த பெண்….

 சீதா வெளி வந்ததும் சிரஞ்சீவி அவளை ஆச்சரியமாக பார்க்க.. சீதாவோ அவனை முறைத்து பார்த்தால்..

 “என்னடா இது  காஸ்ட்டிம்  ஆம்புள பையன்  மாதிரி” என்றவள் அவனை முறைக்க..

 சிவா  ராஜா போல் உடைய அணிந்து வர..

 சீதா போர் வீரனை போல்   கண்கள் மட்டும் தெரியும்மாறு வந்திருந்தாள்..

 இரு  பொம்மை குதிரையை வரச்சொன்னவர்கள் ,, அந்த  குதிரை பார்க்க அசல் ஒரிஜினல் குதிரையை போலவே இருக்க,,..

 சிவாவையும், சீதாவையும் குதிரை பக்கத்தில் நிற்க  வைத்து சில போட்டோக்கள் எடுத்தனர், பின்பு ராஜாவை காப்பாற்று வது போல,, சீதாவை நடிக்க சொல்லிக்கொடுத்தான் சிரஞ்சீவி,, அவன் நடித்து காட்டியதை அப்படியா செய்தாள் சீதா,,. பின்பு வேற காஸ்டூம் அணிந்து வர சொல்ல,,.

சீதா சிரஞ்சீவியை பார்த்து “இதுவும் பையன் உடைதானே”, என்று புலம்பிய படியே போக..

அங்கே மகாராணி அணிவது போல, புது பட்டு சேலையும்,, அந்த காலத்தில் அணிந்தது போல நகைகளும்   இருக்க, அதை அனைத்தையும் போட்டு  வெளியில்  சீதா வர..

மொத்த பேரும் சீதாவை பார்த்தார்கள்,, சிரஞ்சீவி செலக்சன் சூப்பர் என்றே சொல்ல,.. சிரஞ்சீவிக்கு பரமா திருப்தி,..

அவளை பல முகபாவனையோடு நடிக்க சொல்லிக்கொடுத்தவன், அதை வீடியோவாக  கேமரா மேனை எடுக்க சொன்னான்,, பிறகு சிவாவோடு நெறுங்கி  நின்று  காதல் வசனம் பேசுவதுபோல் சில போட்டோவை எடுத்தான்,, சிவாவுக்கும், சீதாவுக்கு அவ்வளவு பொறுத்தமாக இருந்தது காட்சியமைப்பு,,..

சிரஞ்சீவி மீண்டும், மீண்டும் எடுத்து கொண்டே இருக்க,,..

“டேய் போதும்  நிறுத்து,,நான் காலையில் பத்து மணிக்கு வந்தேன், இப்போ மணி நைட்டு பத்து என்னால முடியலட சாமி, மதியம் லன்ச் கூடவாங்கி தரல, மரியாதையா, சாப்பிட  சாப்பாடு வாங்கிட்டு வர சொல்லு, நான் என் மேக்கப்பை கலச்சிட்டு வர்ரேன்” என்று சீதா சொல்ல,,

“சீதா ஒரே ஒரே போட்டோ தான் சீதா” என்று மீண்டும் சில போட்டோக்களை எடுத்த பின்னே அவளை உடை மாற்றி வர சொன்னவன்..

கேமரா மேன் ஜான்னிடம், “இன்னும் ஒன் ஹவருல, போட்டோஸ் விடியோ எல்லாம் எடிட்டிங் பண்ணிஎன் போனுக்கு அனுப்புங்க ஜான்”,, என்றவன்,

சீதா வந்ததும், அவளையும், சிவாவையும்  டின்னருக்கு  பெரிய ஹோட்டலுக்கு  அழைத்து சென்றான்…

மூன்று பேரும் நன்றாக உண்டு விட்டு வெளியில் வர..

ஜான் இன்றைக்கு எடுத்த போட்டோ சூட்டை சிரஞ்சீவிக்கு  வீடியோவாக அனுப்பிவைக்க அதை   பார்த்தவன், சீதாவை தோள் அணைத்துக்கொண்டான்,,.

“என்னாச்சு, சிரஞ்சு நான் எஸ்கேப்பா”?.. என்றாள்

” நோ, மாட்டிக்கிட்ட” என்றவன்.. அந்த வீடியோவை சீதாவிடம் காண்பிக்க,, பாடல்களோடு அந்த வீடியோவை  பார்க்க சீதா..

 “ரொம்ப நல்லா இருக்கு சிரஞ்சு நானா இது”? என்றாள்..

“நீயே தான் சீதா” என்றவனுக்கு

,, “ஏற்கனவே  நாங்க பாடல்கள் எல்லாம்   செலக்ட் பண்ணி பாடி ஆடியோ  எல்லாம் ரெடியாகி இந்திரா சேனா ஹீரோயின்னுக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தோம்,, இப்போ நீ வந்துட்ட” என்றவன் சிவாவிடம் காண்பிக்க..

 அவன் சீதா, தன்னோடு   இருந்த போட்டோ வீடியோவை ரசித்து பார்த்தான் , அதில் பதிவு ஆகியிருந்த ஒவ்வொரு காட்சி போட்டோவும் தன் மனதில் பதிந்து வைத்துக்கொண்டான்…

பார்ப்பதற்கு அவ்வளவு அழகாய் இருந்தது அந்தவீடியோ..

அனைத்தையும்  ரவிதேஸ்ஜாவுக்கு அனுப்பி வைத்திருந்தான் சிரஞ்சீவி..

அவன்  அதை பார்த்ததிற்க்காக ப்ளுடிக் வர..

ரவி போனுக்காக காத்திருந்தான் சிரஞ்சீவி.

அவன் எதிர் பார்த்தது போலவே ரவிதேஸ்ஜா கால் பண்ணி இருந்தான்,, “சூப்பர் சிரஞ்சீவி,  ரொம்ப நல்லா வந்திருக்கு போட்டோ சூட், ஆன்ட் வீடியோ, உங்க ஹீரோயின் ரொம்ப  அழகா இருக்காங்க,, உங்க சாய்ஸ் சரி தான் சிரஞ்சீவி,, நேற்று புதுமுக நடிகையின்னு சொன்னவுடன்,, உங்க கிட்ட கோபப்பட்டேன் சாரி அப்போட்” என்று  வருந்தி கூற..

“நோ சார்,, நீங்க சொன்னது சரி தான் சார்,  புதுமுகம் அப்படியின்னு  சொன்னாலே  பயம் வரத் தானே செய்யும், அவங்க எப்படி நடிப்பாங்கலோன்னு..  பட்   சீதாவை பற்றி எனக்கு ஏற்கனவே தெரியும் அதான் சொன்னேன்”..

“ஓகே சிரஞ்சீவி உங்க ஹீரோயின்ன கூட்டிட்டு நாளைக்கு  என் பீச் ஹௌஸ் வாங்க அவங்களை மீட் பண்ணனும்” என்றான் ரவிதேஸ்ஜா..

“எதுக்கு சார்” என்றான் சற்று குரலை உயர்த்தி..

அவன் குரல் உயர்த்தியதை ரவிதேஸ்ஜா உணரவில்லை, அவன் உணர்ந்திருந்தான் சிரஞ்சீவியை உண்டு,  இல்லை என்று ஆக்கிருப்பான்,, அவனோ சீதாவின் நினைப்பில் மூழ்கி இருந்தானே…

எவ்வளவு அழகாய் இருக்கிறாள் இந்த நடிகை, அந்த கண்ணு பேசுதே என்று அவளின் கண்ணை மட்டும்  ஜும்  செய்து பார்த்தவன், அழகான மோகினி என்று அவளை ரசித்து பார்த்திருந்தான்..

பிறகு அவள் சிவாவோடு  சர்வா அலங்காரத்தில் காதலோடு பார்த்து நிற்பதை பார்த்தவன்,  அவளை நேரில் பார்க்க ஆசை வரவே, சீதாவை பார்க்கனும் என்று கூறி இருந்தான்..

சிரஞ்சீவி எதற்கு நீங்க சீதா பார்க்கனும் என்ற கேட்ட போது,,

“அவங்க கிட்ட டாக்குமென்ட் சைன் வாங்கிட்டு,  இந்த படத்துல நடிக்குறதுக்காக பணம் தர வேண்டாமா”?.. என்றும்..

புரிந்து கொண்ட சிரஞ்சீவி..

இருந்தாலும் இவனிடம் சீதாவை அறிமுகம் படுத்துவதா,, அது முடியாவே, முடியாது…  அவன் ஒரு பொம்பள பொறுக்கி,, அவன் கண்ணீல் சீதாவை காட்ட  வேண்டும்,மாட்டேன் என்று முடிவு எடுத்தவன்…

“சார் சாரி சார்,, ஹீரோயின்ன வீட்டுல ரொம்ப ஸ்டிட் யாரையும் நம்பி அனுப்ப மாட்டாங்க,, நானே ஹீரோயின் பேரன்ட் கிட்ட ரொம்ப ரிக்வெஸ்ட் பண்ணி நடிக்க கூட்டு வந்திருக்கேன் சார்,, ஹீரோயின் சூட்டிங் தவிர எங்கேயும் அனுப்ப கூடாதுன்னு அவங்க பேரன்ட் கண்டிசன் போட்டு இருக்காங்க, அதனால சாரி சார் ஹீரோயின்னை எல்லாம் பார்க்க முடியாது  ரொம்ப  கஷ்டம், நீங்க டாக்குமெண்ட் அனுப்புங்க, நான் சீதா கிட்ட சைன் வாங்கி அனுப்புறேன்” என்று கூற…

ரவிதேஸ்ஜாவுக்கு சம்பென்று ஆகி விட்டது, “ஓகே நான் டாக்குமெண்டை அனுப்புறேன், அப்புறம் உங்க ஹீரோயின்  எவ்வளவு பணம்  எதிர் பாக்குறாங்க”?..

“சார் நார்மலா  புது ஹீரோயின்னுக்கு கொடுக்குறத கொடுக்க சார்,,” என்றான்..

“நார்மல் ஹீரோயின்னு  என் படத்துல வர ஹீரோயின்னு ஒன்னா? ” என்றவன் நாளைக்கு வந்து செக் வாங்கிக்கோங்க சிரஞ்சீவி..

“உங்க ஹீரோயின்னா சூட்டிங்ல ஸ்பார்ட்ல  வந்து பார்க்கலம் தானே” என்று ரவிதேஸ்ஜா  கேட்க..

“வரலாம் சார்” என்ற சொன்னா  சிரஞ்சீவிக்கு உள்ளுக்குள் கொதித்தது,,

நீ எதுக்குடா பார்க்கனும் என் சீதாவை என்று…

“ஓகே சார், நெக்ஸ்ட் வீக் பட பூஜைக்கு ஏற்பாடு பண்ணலாமா சார்,, உங்களுக்கு வர  முடியுமா, ? “..

“நெக்ஸ்ட் வீக் நான் ப்பிரி தான் சிரஞ்சீவி, நீங்க நல்லா நாள் பார்த்து எனக்கு   மெசேஜ்  பண்ணுங்க கண்டிப்பா நான் வர்ரேன்” என்றான்..

“ஓகே” என்று போனை கட் பண்ணவனுக்கு  படத்தில் அடுத்த கட்ட வேலைகள் கண்முன் வர…

சீதாவை நாளை காலை 5 மணிக்கு பீச்சுக்கு வா சீதா  உனக்கு    குதிரையில்  ஏற, இறங்க  பயிற்சி எடுக்க வர சொல்லி இருக்கேன்.. என்று கூற..

அவனை பார்த்து முறைத்தவள்..

 “டேய் நான் ஒரு நாள் தான் லீவு கேட்டு, மேக்கப் டெஸ்ட்டுக்கு வந்திருக்கேன், நாளைக்கு எல்லாம் வர முடியாது, சோனாலி மேம் லீவு தர மாட்டாங்க”..

 “நீ ஏண்டி பழையதையே  பேசிட்டு இருக்க, நீ இப்ப இந்திராசேனா   படத்தோட ஹீரோயின்,,  கார் ஓட்டுற வேலையெல்லாம் தூக்கி போட்டுட்டு  வா, நாளையில இருந்து உனக்கு, ட்ரெயினிங், குதிரையேர கத்தக்கனும்,, உனக்கு சண்டை போட சொல்லி தர ஒரு மாஸ்டர் மார்னிங் வருவாரு,, ஈவ்னிங் நடிப்பு தர சொல்லி ஒருத்தர் வருவாரு,, சூட்டிங் தொடங்குறதுக்குள்ள நீ எல்லாத்தையும் கத்துக்கனும்” என்றான்…

 “சிரஞ்சு நான் சொல்றது புரியுதா இல்லையா? நான் தம்பி படிப்புக்காக பகுதூர் சார் கிட்ட 5 லட்சம் பணம் வாங்கி இருக்கேன், அதை திருப்பி கொடுத்தா தான் நான் அந்த இடத்தைவிட்டு  என்னால வர முடியும்”.. என்றாள்.

 “உனக்கு என்ன இப்போ 5 லட்சம் பணம் தானே, உன் ஜீ பே நம்பர் சொல்லு நான் அனுப்பி வைக்கிறேன்” என்றான்..  அவன் போனை எடுத்து சீதா நம்பரை  எடுத்தவன்,..

“இந்த நம்பருல  ஜீபே இருக்கு தானே இதுல அனுப்பவா,,,”?.

“நீ எதுக்குடா அனுப்புற, நான் படம் நடித்த பிறகு பணம்  குடு” என்றாள்..

“ஏய் நாளைக்கு உன் அக்கவுண்ட்  அம்பது லட்சம் பணம் வரும்டி  அப்போ  திருப்பி கொடு”… என்றான்..

“என்னது அம்பது லட்சமா, டேய் என்னாட சொல்லுற, ஆமாம் டி இந்த படத்துல நடிக்குறதுக்காக உனக்கு அம்பது லட்சம் பணம் ரவிதேஸ்ஜா சார் தர்ராங்க,, படம் முடிந்ததும் மீதி 25 லட்சம் உன் அக்கவுண்ட் வந்து சேரும்”.. என்றதும்..

மயக்கம் போடுவது போல்   சரிய போனவளை பிடித்திருந்தான் சிவா..

“என்னாச்சு சீதா” என்று சிரஞ்சீவி  கேட்க..

“சிவாவோ என்னாச்சு சீதா” என்று தண்ணீர் குடிக்க கொடுக்க..

 “நீங்க பேசறது எல்லாம் சரியா  சிரஞ்சு!, ஐந்து லட்சம்,, அம்பது லட்சமுன்னு சொல்லுற, கேட்குறதுக்கு  எனக்கு பயமா இருக்கு இது எல்லாம் சரியா வருமா? “….

  “சீதா எல்லாம் சரியா வரும் மனச ரிலாக்ஸ்ச  வச்சுக்கோ,, நாளைக்கு காலையில நீ கார் ஓட்டுற வீட்டுல சொல்லிட்டு வந்துரு,, எங்க வீட்டு மாடி மேல ஒரு போசன் இருக்கு இப்போ தங்கிக்கோ,, பிறகு பணம் வரட்டும் வேற பிளாட் மாதிரி பார்த்துக்கலாம்” என்று சிரஞ்சீவி சொல்லியதை கேட்டுக்கொண்டே வீடு வந்த சேர்ந்தாள்..

அந்த செட் வீட்டை விட்டு போக மனம் வரவில்லை சீதாவிற்கு, நான் வீடு இல்லாத போது என்னை ஏற்று கொண்டு பாதுகாப்பு கொடுத்த இடம் அல்லவா,, நீண்ட நேரம் அந்த  கார் செட் வீட்டை பார்த்திருந்தவள்,, தனக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு,, பேக் செய்தவள்..

மறுநாள் விடியலுக்காக காத்திருந்தாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!