சிரஞ்சீவியும், சிவாவும் சந்தோஷமாக வீடு வந்து சேர்ந்தார்கள்….
Advertisement
தங்கள் படத்துக்கு ஹீரோயின் கிடைத்த விட்ட சந்தோஷத்தில்..
சிரஞ்சீவிக்கு முதல் படம், முதல் படமே பெரிய பட்செட், பழங்கால நிகழ்வை வைத்து ஒரு அழகான காதல் கதையை ஒரு படமாக ஊருவாக்கி வைத்துள்ளான்,, இந்த கதையில் முதல் பாதி அந்த காலத்தில் நடக்கும் காதல் கதை, இதில் ஹீரோ, ஹீரோயின் சேரமால் இறந்து போக,, இந்த காலகட்டத்தில் அவர்கள் பிறந்து சந்தித்து காதல் செய்து ஒன்றுசேர்வதே கதை சுருக்கம்..
Advertisement
இந்த கதை சில தயாரிப்பாளருக்கு பிடிக்க வில்லை,, பல பிரோடியுசர்களிடம் இந்த கதையை சொல்லி இருக்கிறான்,, சிலருக்கு இந்த கதை பிடித்தும், பெரிய பட்செட் படம் எங்களால் முடியாது என்று மறுத்து விட,, நல்லா பிரோடியுசர், ஹீரோ, ஹீரோயின்னு தேடிக்கொண்டு இருந்தான்,,..
சிவாவிடம் சிரஞ்சீவி கதையை சொன்னவுடன், அவனுக்கு கதை பிடித்து விட,, உடனே ஹீரோவாக நடிக்க சம்மதம் சொல்லி விட்டான்..
பின்பு இருவரும் பேசி, பேசியே நண்பர்களாகி விட்டனர்..
இந்த படத்துக்கு நல்ல பிரோடியுசருக்காக பல கம்பெனி ஏறியிரங்க, சிரஞ்சீவி அவனின் படத்திற்காக செலக்ட் பண்ணி இருந்த கெமரா மேன் ஜான் தெலுங்கு பிரோடியுசர் ரவிதேஸ்ஜாவை பற்றி சொல்ல….
அவனை சந்திக்க, அப்பாய்மென்ட் வாங்கி சென்றனர்,, அவ்வளவு பிசியான ஆள் ரவி தேஸ்ஜா…
பல பிஸ்னல் செய்து கொண்டு இருப்பவன்,, சுகவாசி..
ரவிதேஸ்ஜாவின் அப்பா தெலுங்கான மந்திரி,, ஏகப்பட்ட சொத்து, அவன் படித்தது, ஐ, ஐ டி ஹைதெராபாத், படிப்பிலும்கெட்டி, அனைத்திலும் கெட்டி, சென்னையில் புதிதாக ஐ டி கம்பெனியை உருவாக்கி வெற்றிகரமாக நடத்திவருகிறான்,, அடுத்தது புதிது, புதிதாக பல மால்களை கட்டி வாடகைக்கு விட்டு இருக்கிறான்,, மால்களின் வாடகையை பலகோடி பணம் மாதம் வர,, வரும் பணத்தை பல வழியில் இன்வெஸ் பண்ணி சென்னையை கலக்கி கொண்டு இருக்கிறான் ரவிதேஸ்ஜா,, பணம் எல்லாம் அவனுக்கு ஒரு பெரிய விசயமே இல்லை அவனுக்கு பிடித்தால், என்ன வேண்டும் என்றாலும் செய்வான்,,,..
கல்யாணம் என்றாலே ஓடுபவன்,, பெண்களை அவன் ப்ளு நிற கண்களை வைத்தே மயக்கி விடுவான்,, ஒரு முறை இவனை பார்த்தாலே போதும் பெண்களே இவனிடம் வந்து பேசும் கன்னி ராசிகாரன் இவன்..
பெண்கள் என்றாலே அவனுக்கு ஒர் இரவு மட்டும் தேவை என்ற ரகம்..
சாரி, சாரி ஒர் இரவு கூட தேவை இல்லை,, ஒரு மணி நேரத்தில் அவனின் தேவைகளை முடித்து விட்டு, அந்த பெண்ணுக்கு தேவையானதை அள்ளி கொடுக்கும் ரகம் ரவிதேஸ்ஜா…
காதல், கல்யாணம் என்றாலே அலர்ஜி என்பான்..
அவனின் தாய் தினமும் போன் செய்து இவனிடம் திருமணத்தை பத்தி பேசுவதால், தாயிடம் போன் பேசுவதே நிறுத்தியிருந்தான் இவன்….
ஆனால் தந்தை வெங்கடரவிதேஸ்ஜா என்றால் பயம் அவனுக்கு,,
தந்தை என்ன சொன்னாலும், சரி நானா என்று மறுபேச்சு பேச மாட்டான்,, தந்தையின் மேல் அவ்வளவு மரியாதை வைத்துள்ளான்,, அவன் அண்ணன் மளையாள படத்தில் பெரிய ஹீரோ, ஒரு மளையாள நடிகையை காதல் திருமண முடித்து கெரளாவில் செட்டுலாகி விட்டான்..
இவனோ வாழ்க்கை என்ஜாய் பண்ணி வாழும் ரகம், பல வெளிநாட்டில் பிஸ்னஸ் பண்ணிக்கொண்டு இருப்பவன், வெளிநாட்டில் பல சுற்றுலா சென்று சுற்றி திரிவான்….
சிரஞ்சீவியும், சிவாவும் தான் ரவிதேஸ்ஜாவிடம் கதை சொல்ல சென்றார்கள்,, அவனுக்கு கதை கேட்கவெல்லாம் நேரமில்லை..
கேமரா மேன் ஜான்னை அவனுக்கு தெரியும், அவன் பிஸ்னல் விளம்பரம் வீடியோவை அவனுக்கு பல முறை எடுத்து கொடுத்திருக்கிறான் ஜான்,… அதனால் கதை கேட்க வர சொல்லி இருந்தான்,, அவனுக்கு இருக்கிற பிஸ்னஸ்சயே பார்த்துக்கொள்ளவே நேரம் இல்லை ரவிதேஸ்ஜாவுக்கு, இருந்தும் பல படங்களை பிரோடியுஸ் பண்ணி இருக்கிறான்,, இவன் நேரமோ என்னவோ இவன் இயக்கிய படங்கள் எல்லாம் நன்றாக சென்று பல கோடி லாபம் வந்திருந்தது,,..
நல்லா கதையாக இருந்தால் கண்டிப்பா பிரோடியுஸ் பண்ணுவான்..
வார இறுதியில் சிரஞ்சீவியை கதை சொல்ல அப்பாய்மென்ட் கொடுத்திருந்தான் ரவிதேஸ்ஜா,,,..
சரியாக அவன் சொன்ன நேரத்திற்கு 10 நிமிடம் முன்பாகவே வந்து நின்ற, சிரஞ்சீவியை முதல் சந்திப்பிலே மிகவும் பிடித்து விட்டது ரவிதேஸ்ஜாவிற்க்கு,, சிவாவும் உடன் வந்து இருக்க,,
சிவாவை அவனுக்கு தெரியும் என்பதால், அவனை பார்த்து அணைத்து “கம் இன்சைட்,”என்று அவனின் பீச் ஹௌஸ் ஹாலிற்கு அழைத்து சென்றான்,.
அப்போது தான் ஸ்விமிங் புல்லில் இருந்து குளித்து வந்திருப்பான் போல.. ஒரு சார்ட்சும் டிசர்ட்டும் அணிந்து பாலிவுட் நடிகனை போல இருந்தான் ரவிதேஸ்ஜா,,..
சிரஞ்சீவி “இவர் தான் பிரோடியுசரா? இல்ல ஹீரோவா, ஹீரோமாதிரி இவ்வளவு ஸ்மார்ட்டா இருக்கான்” என்று சிவாவிடம் கேட்க….
“இல்ல இவர் தான் பிரோடியுசர், கதை சொல்லுடா” என்று இருவரும் மெதுவாக பேசியதை ரவிதேஸ்ஜாவிற்கு கேட்டு விட..
“எனக்கு ஹீரோவாக நடிக்க எல்லாம் ஆசை இல்லை, மிஸ்டர் சிரஞ்சீவி,, ஒன்லி பிரோடியுஸ்” என்றவன் சிரிக்க..
அந்த ப்ளுநிற கண்களும் சேர்ந்து சிரித்தது..
ஆண்களே காதல் செய்ய தோணும் அழகன் ரவிதேஸ்ஜா,, அதுவும் அவனின் பால் நிறம் இன்னும் கூடுதல் அழகு அவனுக்கு, அவனின் உயரமா 6 அடிக்கு மேல் இருக்க அதுவும் இன்னொரு பிளஸ் பாய்ன்ட்,,..
“உங்க கண்ணு ரொம்ப அழகா இருக்க சார்” என்றான் சிரஞ்சீவி..இந்த மாதிரி கண்களை அவன் இது வரை பார்த்ததே இல்லை,, அதனால் அவனிடமே நேராக கூற..
“என்னை முதல் முதல்ல பார்க்குறவங்க எல்லாரும் இப்படித்தான் சொல்லுவாங்க,, என்ன சாப்பிடுறீங்க?” என்றவன்..
அவர்களுக்கு குடிக்க கூல்டிரிங்ஸ் கொடுத்து விட்டு, தன் போனை சைலன்ட்டில் போட்டவன் கதை கேட்க ஆரம்பித்தான்,,
3 மணி நேரத்தில் கதை சொல்லி முடித்தான் சிரஞ்சீவி,, கதையை சொல்லி முடித்ததும்..
ரவிதேஸ்ஜாவால் அந்த கதையில் இருந்து இன்னும் வெளியே வர முடியவில்லை.. அப்படியே அமர்ந்திருந்தான்..
சிரஞ்சீவி படத்தில் உள்ள ஒவ்வொரு கதாப்பாத்திரத்தை பற்றி சொல்லிய விதம்,, அவனின் கதை, கதாபாத்திரங்கள், டைலாக் என்று அனைத்தும் அத்தனை தெளிவாக, புதிதாக இருந்தது,, சிரஞ்சீவி கதை சொல்வதை கேட்டவன் இந்திரா சேனா நாட்டிற்கே சென்று வந்திருந்த,, பீல் அவனுக்கு பிடித்திருக்க அப்படியே அமர்ந்திருந்தான்…
அவன் அமைதியை பார்த்த சிரஞ்சீவிக்கு பயம் வந்தது, இவன் கதை பிடிக்க வில்லை என்று சொல்லி விடுவானோ, சென்னையில் உள்ள அனைத்து தயாரிப்பு நிறுவனத்திலும் கேட்டு முடித்திருக்க,, இனி யாரிடம் கேட்பது, எப்படி படம் எடுப்பது என்று வருந்தி அமர்ந்திருக்க,,.
“ஹலோ டைரக்டர் சிரஞ்சீவி ” என்று ரவிதேஸ்ஜா அழைக்க,,..
கனவில் இருந்து மீண்டவன் போல “சொல்லுங்க சார்” என்றான்..
“பியூட்டி புல் ஸ்டோரி லைன், ஐம் இம்பிரஸ்,, சோ லாட், நாமா கண்டிப்பா இந்த படம் பண்ணுறோம்,, பட்செட் எவ்வளவு” என்றான்,
“300 கோடி” என்றான்..
“300 கோடி மேல செலவு ஆனாலும் பரவால, படம் நீங்க சொன்னா மாதிரி நல்லா வரனும், “..
“கண்டிப்பா சார்” என்றான் சிரஞ்சீவி..
அவனை கட்டி அணைத்தவன்..
இருவருக்கு செக் எழுதி தர.
அதை வாங்கி பார்த்தவருக்கு கண்கலங்கி விட்டது இரண்டு பேருக்கும் தள 2 கோடி செக் எழுதி தந்திருந்தான்..
“சார்” என்று இரண்டு பேரும் அவனை பார்க்க,,
இரண்டு நாள்ல எல்லா வேலையும் பாருங்கு நான் சைன் பண்றேன் படத்த நாமா ஸ்டாட் பண்ணுறோம் என்றவன்.
“ஹீரோயின்னு யாரு” என்றான் ரவி தேஸ்ஜா..
“இன்னும் செலக்ட் பண்ணல சார்”.
என்றான்.
“இந்த படத்தில் ஹீரோயின்னு கேரக்டர் ரொம்ப இம்பார்ட்டன்ட் சோ, சரியா சூஸ் பண்ணுங்க” என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே..
“ஹாய் ரவி” என்று ஒரு ஹிந்தி நடிகை ரவிதேஸ்ஜாவின் அருகில் வந்து அமர,,
அவளின் அரை குரை ஆடையை பார்த்தே அவள் எதற்கு ரவி பீச் ஹௌசிற்க்கு வந்திருக்கிறாள் என்று தெரிந்த கொண்ட சிரஞ்சீவி,, நாங்க கிளம்புறேன் சார் என்று கூற.
“ஓகே மீட் டூ, டேஸ் ஆப்டர் ” என்றவன்..
அவர்களை அனுப்பி வைத்தவன்..
திரும்பி அந்த நடிகை பார்த்து மர்மமாக சிரிக்க,, “நோ, நோ ரவி”, என்று ஓடியவளை.. அவளின் பின்னிருந்து தூக்கியவன் அவளின் காதை கடித்த வாறே ஸ்மிங் பூல்லில் இழுத்து சென்று குதித்து இருந்தான்..
அவர்களின் சிரிப்பு சத்தத்தை கேட்ட வாறே, சிரஞ்சீவியும், சிவாவும் ரவிதேஸ்ஜாவின் பீச் ஹௌஸ்சை விட்டு வெளியே வந்திருந்தனர்.
“செம்மா வாழ்க்கையில டா ” என்று சிவா சொல்ல.
“இது! செம்மா வாழ்க்கை போட,,, ஒருத்தனுக்கு, ஒருத்தி என்பது தான் நம்ம பண்பு, அத மாத்த கூடாது டா, நண்பனே,, நாம நம்ம பிளைப்ப பார்ப்போம் வா” என்று அன்றிலிருந்து இன்று வரை படத்திற்க்காக ஓடிக்கொண்டிருக்கிறான் சிரஞ்சீவி..
படத்திற்கான ஆரம்ப வேலையை அனைத்தையும் முடித்தவன் ஹீரோயின்னை தேடி, தேடி நொந்து போனவன்..
இன்று சீதாவை பார்த்தும், அந்த கவலையும் நீங்கி விட….
உடனே ரவிதேஸ்ஜாவிற்கு போன் செய்திருந்தான்..
ரவிதேஸ்ஜாவின் போன் நீண்ட நேரம் எடுக்க படவில்லை, சிரஞ்சீவி மீண்டும், மீண்டும் அவனுக்கு அழைக்க ரவி போனை எடுக்க வில்லை,, அவனுக்கு என்ன வேலையோ? என்றவன்..
ரவி தேஸ்ஜா போனிற்க்கு மெசேஜ் அனுப்பியிருந்தான் “ஹீரோயின் கிடைத்து விட்டாள், நாளை மேக்கப் டெஸ்ட் எடுக்க போறோம் சார்” என்று அனுப்பியவன்,, அமைதியாக இருக்க..
சிறிது நேரத்தில் சிரஞ்சீவியை போனில் அழைத்திருந்தான் ரவிதேஸ்ஜா..
“சொல்லுக்கு சிரஞ்சீவி, மெசேஜ் பார்த்தேன், எந்த ஊரு நடிகை, பேர் என்ன பாலிவுட்டா?, ஹோலிவுட்டா”? என்றான்..
“இல்லா , புதுசு சார் என் பிரண்ட் தான் ஹீரோயின்,,” என்றான்..
“என்ன சொல்லுறீங்க சிரஞ்சீவி? புதுசா வர்றவங்க எப்படி இவ்ளோ பெரிய படம் நடிப்பாங்க,? உங்கள நம்பி தான், நான் 300 கோடி இன்வஸ் பண்ணி இருக்கேன், நீங்க பாட்டுக்கு புது ஹீரோயின்னு, என் பிரண்ட் சொல்லுறீங்க, அவங்க எப்படி நடிப்பாங்க, எதாவது தப்பா போனா, என் முழுபணமும் போயிடும்”..
“சார், சார் கண்டிப்பா என் பிரண்ட் சீதா இந்த கேரக்டருக்கு சூட்டாவா சார், கண்டிப்பா அவ நல்லா நடிப்பா,, 17 வயசுலயே 60 வயசு கிழவி மாதிரி நடிச்சவா, என் பிரண்ட் சீதா.. அவ மேல எனக்கு நம்பிக்கை இருக்கு,, நாளைக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்து போட்டோ அனுப்புறேன், நீங்க ஓகே சொன்னா தான், நான் சூட்டீங்கே போவேன் சார்,, உங்க பணம் டபுளா வர நான் பொறுப்பு” என்றான்..
ரவி அமைதியாக இருக்க..
“ரவி சார்” என்றான்..
“எஸ்” என்றான்..
“கண்டிப்பா என் சீதா நல்லா நடிப்பா சார் படம் நல்ல வரும், என்று நம்பிக்கையோடு பேச..
“ஓகே, சிரஞ்சீவி” என்று அவன் போனை வைக்கும் முன் ரவியோடு இருந்த பெண் “ரவி கம்” என்று அழைக்க..
அது சரியாக சிரஞ்சீவிக்கு கேட்டது,,.
இவனுக்கு எப்போ பார்த்தாலும் பொண்ணுங்க கூட தான் இருப்பான் போல.. நாம தான் நேரம் காலம் தெரியமா கால் பண்ணிட்டோம்,, என்று நினைத்துக்கொண்டான்..
மறுநாள் காலை அழகாய் விடிந்தது..
சீதாவுக்கு மனதில் பெறும் குழப்பம்.. இது சரியா வருமா,, நான் ஹுரோயின்னா, என்று தன்னை தானே கண்ணாடியில் பார்த்துகொண்டாள்..
அழகா தான் இருக்கேன், இருந்தாலும் தனக்கு நடிக்க வருமா,, சினிமா துரை தனக்கு ஒத்து வருமா?..
என்று ஆயிரம் விசயங்கள் மனதில் ஓட…
இதுவரை நம்ம வாழ்க்கையில் நம்ம முடிவு பண்ணிய எல்லாம் நடந்துச்சு,, இனி நடக்க,, சிரஞ்சீவிக்காக இந்த படம் மட்டும் எப்படியாவது கஷ்டப்பட்டு நடிக்கலாம், என்று முடிவு எடுத்தவள். ஐயோ இன்று மேக்கப் டெஸ்ட்டுக்கு போக சோனாலிக்கிட்ட லீவு கேட்கனுமே, என்றவள்..
“ப்பேட்டி மார்னிங் தான் வந்துச்சு தூங்குது, என்ன சொல்லனும் சீதா” என்று சின்மய் கேட்க…
“மேம் ஒரு நாள் லீவு வேணும்” என்றாள்.. சீதா..
அவள் குளித்து சுடிதார் அணிந்திருந்ததை பார்த்த சின்மய் “சரி, சரி இன்னைக்கு ஒரு மட்டும் தான் லீவு, நீ போ நான் சோனாலி கிட்ட சொல்லிக்கிறேன்” என்று லீவு தர..
சின்மய்க்கு நன்றி சொல்லி விட்டு..
தன் காரை எடுத்துக்கொண்டு வடபழனி முருகன் கோவிலுக்கு வந்திருந்தாள் சீதா,, நீண்ட மாதங்கள் ஆகிவிட்டது சீதா கோவில் வந்து..
ராஜா அலங்காரத்தில் இருந்த முருகப்பெருமாளை பார்த்த படியே நின்றிருந்தாள்,,..
எனக்கு அது கொடு, இது கொடு என்று எல்லாம் நான் கேட்க மாட்டேன் முருகா, எனக்கு எது நல்லதோ அத செய்பா, என்றவள் மனமுருகி எல்லாரும் நல்லா இருக்கனும்,, என் தம்பி பெரிய டாக்டர ஆகனும், நிம்மதியான வாழ்க்கையை கொடு முருகா என்று வேண்டிக்கொண்டவள்..