Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 6 2

 “என்கிட்ட சொன்னதை  சிவா கிட்ட சொல்லு” என்றான் சிரஞ்சீவி…

 சீதா முளித்தபடியே நிற்க..



Advertisement

 “நீ சொல்லு சிரஞ்சீவி என்ன சொன்னாங்க சீதா என்றான் சிவா..

Advertisement

 “நேத்து 12 மணிக்கு எனக்கு சீதா  போன் போட்டு நான் நடிக்கல என் தம்பி என்னை திட்டுறான்னு சொல்லுற” என்றான்..

Advertisement

 “என்ன” என்று  சிவா அதிர்ச்சியாக..

Advertisement

 “என்ன ஆச்சு சீதா என்ன சொன்னாரு உன் தம்பி” என்றதும்..

 சீதா சிரஞ்சீவி பார்க்க “என்கிட்ட சொன்னதை  அங்கேயும்  சொல்லு” என்றான் சிரஞ்சீவி..

 சீதா சிவாவிடம் சொல்ல ஆரம்பித்தாள்  “என் தம்பிக்கு  நான் நடிக்குறது  பிடிக்கலன்னு  சொல்லிட்டான்,” என்றாள்….

 “ஏன் ஏன் அப்படி சொன்னான்,, நீ அவனுக்கு ,  போன் போட்டு குடு நான் பேசுறேன்”  என்றான் சிவா..

 “நானே காலையில் அவன் கிட்ட பேசிட்டேன்  அவனும்  சம்மதம் சொல்லிட்டான்”.. என்றான் சிரஞ்சீவி..

சிவாவுக்கு அப்பாட என்று இருந்தது..

 சீதாவுக்கு இப்பவும் நடிக்க விருப்பம் இல்லை..சிரஞ்சீவிக்காக தான் நடிக்க ஒத்துக்கொண்டாள்,,..

 சிரஞ்சீவியை  பார்த்தவள் “என்னை இப்படியே விட்டு விடேன்  நான் ஏதாவது காலேஜ்ல போயி லக்சரா வேலை பார்த்து  பொழைச்சுக்குறேன்”.என்றான்..

 “சீதா,,! ஏன் சீதா இப்படி பேசுற”…. என்றான்..

 “எனக்கு பயமா இருக்குடா இந்த சினிமா  ஃபீல்டு  மேல எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை,, என் தம்பி வேற, சினிமா பில்டுல பெண்களுக்கு சேப்டி இல்லா,, உனக்கு வேண்டாமுன்னு சொல்லுறான்,,”.. என்றாள்..

 “சீதா நாங்க ரெண்டு பேர் இருக்கோம்,,  நாங்க ரெண்டு பேரும் உன்ன  நல்லபடியா பார்த்துக்குறோம்,, எங்களை நம்பி வா சீதா”….. என்றான் சிரஞ்சீவி..

 “எல்லாம் சரியா வரும் தானடா”?.. என்று நண்பனை பார்த்து கேட்க..

 “நாங்க இருக்கோம் சீதா,,   பயம் எதற்கு” என்று நம்பிக்கை வரும் படி பேசிவிட்டு,,சிவா அவன் வீடு செல்ல..

சஞ்சய் தண்ணீர் குடிக்க வெளியில் வந்தான்..

தம்பியை பார்த்த  சஞ்சய்,, “டேய் நாளைக்கு காலையில  சீதா வை மெரினா பீச்சுக்கு கூட்டிட்டு போ,, தயாளன்,, சீதாவுக்கு குதிரை ஓட்ட சொல்லித்தருவான்,, கூட இருந்து பார்த்துக்கோ,, அப்பறம் சீதாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு,, நீ காலேஜ் போறப்போ, எங்க ஆபிஸ்சுல  சீதாவை இறக்கி விடு,, அப்பறம் நைட்டு சிவா   கூட்டிட்டு வந்து  நம்ம வீட்டுல விட்டுடுவான்”..என்று சிரஞ்சீவி சொன்னதும் “சரி” என்றான் சஞ்சய்….

சீதாவை பார்த்து “அக்கா காலையில்   6 மணிக்கு ரெடியா இருங்க” என்று அவன் அறைக்கு சொல்ல..

“ஏன் சிரஞ்சீவி சஞ்சய்யை டிஸ்டர்ப் பண்ணுற, படிக்குற பையன்,, நானே பீச் போயிட்டு, உன் ஆபீஸ்சுக்கும் வந்துடுவேன் கார் இருக்குல” என்றாள்..

“இல்லா சீதா, உன் தம்பி பிரபு  ரொம்ப பயப்படுறான்,, அவன் கிட்ட நீ நடிக்க சம்மதம் வாங்குறதுக்குள்ள, எனக்கு உயிர் போயி, உயிர்வந்த மாதிரி ஆகிபோச்சு,, உன் முழு பொறுப்பையும்  நானே பாத்துக்கிறேன்,, உன்னை தனியா எல்லாம் விடமாட்டேன்,,” என்றான்

“நீ எங்கே போற சிரஞ்சீவி ” என்றாள் சீதா..

“நான் எங்கையும் போகல சீதா,, உனக்கு மாரினிங் 6 டு 8 குதிரை பயிர்ச்சி,, 10  டு  1 மணிவரைக்கு கத்தி சண்டை, வாள் சண்டை போட சொல்லி தர ஆள் ஏற்பாடு பண்ணி இருக்கேன், அப்பறம் சாயங்கலாம்  நடிப்பு சொல்லி தர சிவா  வருவான் நல்லா கத்துக்கோ,, நான் சூட்டிங் ஸ்பார்ட் பார்க்க வெளியூர் போறேன்,, உனக்கு எது தேவை இருந்தாலும், அம்மா கிட்ட, சிவாகிட்ட  கேளு” என்றவன்,, தூக்கம் வருது சீதா  நீ தூங்க போ,, என்று  அவனும் தூங்க போனான்..

மறுநாள் சிரஞ்சீவி பட பிடிப்பு எடுக்க சூட்டிங் ஸ்பார்ட் தேடி சென்றிருக்க..

சஞ்சய், சிவா,  இருவரும் சீதாவை நன்றாக பார்த்துக்கொண்டனர்..

சீதா தான் பாவம்,, காலையில் குதிரை பயிர்ச்சி, மதியம் சண்டை பயிர்ச்சி, சாயங்கலாம் நடிப்பு பயிர்ச்சி என்று படு பிசியா இருந்தாள் சீதா..

ஒரு வாரம் கழித்து சூட்டிங் ஸ்பார்ட் தேர்வு செய்யு அனுமதி வாங்கிக்கொண்டு,, சோர்வாக வீடு வந்து சேர்ந்தான் சிரஞ்சீவி..

நண்பனை பார்த்த சீதா பாய்ந்து போயி அவனின் கழுத்தை பிடித்திருந்தாள்..

அவ்விருவரையும் பார்த்த சிவா “ஏன் இந்த கொல வெறி சீதா”  என்றான்..

“நான் பாட்டுக்கு  அம்பது லட்சம்  ரூபாய்  காரை எடுத்து கிட்ட, ஏசி போட்டு, சென்னையை சுத்தி வந்த ஆளு,, இப்போ என்னன்னா, காலையில குதிரை ஓட்ட போக சொல்லுற,  சண்டை  போட  சொல்லுற,,  அதுக்கு மேல நீங்க நடிப்பு சொல்லிக்கொடுக்குறீங்க..

நானெல்லாம் சென்னை சிட்டியை சுத்தி வந்த ஆளு,, என்னை நடிக்க வான்னு கூப்பிட்டு வந்து வச்சு செய்யுறான்,, இவன் ” என்று சிரஞ்சீவியை சீதா முறைக்க…

சிவாவும், சிரஞ்சீவி சிரித்திருந்தனர்

“இந்த உலகத்துல எல்லா வேலையும் கஷ்டம் தான் சீதா”.. என்றான் சிரஞ்சீவி…

“போடா,,,,ங்கோ நான் கார் ஓட்டுறப்போ கூட இவ்வளவு உடல் வலி இல்ல,, இப்போ என்னால முடியல டா” என்றாள் இடுப்பை பிடித்துக்கொண்டு,..

“ரொம்ப முடியலன்னா ஒரு நாள் லீவு போட்டுக்கோ” என்றான்..

“பரவல்ல, லீவு போட்டா அடுத்த நாள் அந்த வேலையை செய்யும் போது இன்னும்  கஷ்டமா இருக்கும்” என்றாள்..

அவனின் சோர்வான முகத்தை பார்த்து “எல்லாம் ஓகே தானே சிரஞ்சு”.. என்றாள்..

“சூட்டிங் ஸ்பார்ட்டுக்காக நிறைய ஔடோர் சுத்த வேண்டியது இருந்தது சீதா, ஒரு நாள்  தூங்கி  ரெஸ்ட் எடுத்தா சரியா போகும் என்றவன்,,

சில டாக்குமெண்ட்டில் சீதாவிடம் கையெழுத்து    வாங்கினான் சிரஞ்சீவி ,, சீதா அந்த டாக்குமெண்ட்டை படிக்காமல் கையெழுத்து போட..

“ஏய் படிச்சிட்டு  கையெழுத்து  போடு டி” என்றான்..

“ஆமாம்  என் கிட்ட பல கோடி சொத்து இருக்கு பாரு, அதை நீ எழுதி வாங்குற”.. என்றாள்..

“கண்டிப்பா இன்னும் கொஞ்சம் நாள்ல உன்கிட்ட பல கோடி இருக்கும் பாரு சீதா”.. என்றான்..

“போடா இந்த ஒரு படமே எனக்கு போதும்,, இது முடிஞ்ச உடனே, உனக்கு பெரிய கும்பிடு போட்டு,, நான் லக்சரர் வேலைக்கு போயிடுவேன்,, என்று சொல்ல..

‘உன்னை யாரு விட போற’ என்று மனதில் சொன்னவன்..

“உன் இஷ்டம் சீதா” என்றான்…

“இன்னும் இரண்டு நாள்ல  நம்ம இந்திரா சேனா பட பூஜை இருக்கு, சீதா, சிவா” என்று கூற…

“சீதா சரி” என்றாள்..

 “நான் அதற்கு தேவையான வேலை பாக்குறேன்”.. என்று சிவா கூற..

சிரஞ்சீவி சீதா கையில் ஒரு செக்கை கொடுக்க,,, என்னவென்று பார்த்தாள் சீதா அதில் அவள் பெயரில்  50.000,00 லட்சத்துக்கு செக் எழுதியிருக்க, அதை பார்த்தவன்,, “எனக்கா சிரஞ்சீவி”?..என்றாள்..

“ஆமாம்” என்று தலையாட்ட,,..

“என்ன பண்ண போற பணத்து வச்சு” என்றான் சிரஞ்சீவி…

“எனக்கு ஒரு ஆசை சிரஞ்சு,, சென்னையில இருக்க இடம் இல்லாம இருந்தோம்,, அதனால ஒரு சின்னதா ஒரு பிளாட் வாங்கி தர ஏற்ப்பாடு பண்ணுறீயா” என்றாள்…..

“சிங்குல் பெட்ரூம் இருந்தாலும் போதும்” என்னு சொல்ல,,..

“பாக்குறேன் சீதா கொஞ்சம் வெய்ட் பண்ணு நல்லா பிளாட்டா பார்க்கலாம்” என்றவன்..

“சீதா அந்த செக்கை சிவா கிட்ட கொடு, அவரை பேங்குல செக்கை  போட சொல்லலாம்” என்றவன் நான் தூங்க போறேன் என்று சொல்ல,,

“டேய் இருடா, நீ எனக்கு குடுத்த 5 லட்சம் என் கவெண்டல தான், இருக்கு” என்றதும்..

“அப்புறம் வாங்கிகிறேன் சீதா” என்றவன் தூங்க போக..

சீதாவுக்கு மனது சந்தோசமாக இருந்தது,, அவள் இவ்வளவு கஷ்டபட்டதிற்கு பலன் கிடைத்திருக்கிறது என்று நினைத்தவள்,, படம் நன்றாக நடித்து கொடுக்க வேண்டும் என்று தீவிர பயிற்சி மேற்க்கொண்டாள்…

பட பூஜை நாளும் அழகாய் விடிந்தது,, சிரஞ்சீவி தனக்கு தெரிந்த முக்கிய, நடிகர், நடிகை, தயாரிப்பாளர்கள், இயக்குனர், இசையமைபாளர் என்று அனைவரையும் அழைத்திருந்தான்,,

சீதாவிடம் நேற்றே சொல்லி இருந்தான்,, யாரிடமும் அதிகம் பேசாதே, கேட்ட கேள்விக்கு பதில்,, அதிக படியாக  படத்தை பற்றி யாராவது கேட்டால்,, டைரக்டர் சார் கிட்ட கேளுங்கன்னு, சொல்லிடு என்றான்..

“அப்புறம் ஒரு விசயம்,, இந்த பட ப்பிரோடியுசர்  ஆளு சரி இல்ல, சரியான பொம்பள பொறுக்கி பய,, அவன் உன் கிட்ட வந்து பேசுனா , ஹாய் மட்டும் சொல்லிட்டு விலகி போயிடு” என்று  சொல்லியிருந்தான்..

“சரிடா நான் பாத்துக்கிறேன்,, தேவையில்லாம யார்கிட்டையும் பேசமாட்டேன் சிரஞ்சு” என்றிருந்தாள் சீதா..

காலையிலே சிரஞ்சீவி வீட்டில் இருந்து  பூஜைக்காக சிரஞ்சீவி ஆபிஸ்சுக்கு கிளம்பி வந்திருந்தனர்,, அழகுமலரும் தோழிக்கு வாழ்த்து சொல்ல வந்திருந்தாள்,, சிரஞ்சீவி விரும்பும் லதாவும் அவனுக்காக டெல்லியில் இருந்து வந்திருந்தாள்,,..

சிரஞ்சீவியை   கட்டி அணைத்து லதா  வாழ்த்து சொல்ல,, இருவருக்கும் தங்கள் காதல் கைகூடும் நாள் விரைவில் வந்துவிட்டுது என்று தோன்ற இருவரின் முகத்திலும் புன்னகை,, சீதா தான் சிரஞ்சீவி ஓட்டு, ஓட்டு என்று ஓட்டியிருந்தாள்…

“இந்தனை நாள் இந்த முகத்தை எங்கேடா வச்சு இருந்தா சிரஞ்சு,,, உன் லவ்வரை பார்த்ததும் முகம் எல்லாம், சிவக்கும், புதுசா ஒரு ஒலி தெரியுது உன் மூஞ்சுல” என்று..கேலி பண்ண…..

“சும்மா இரு சீதா” என்று  வெட்க பட்டவனை, இன்னும் ஓட்டி இருந்தாள்..

மாலாவுக்கும்  மகன் லதாவை விரும்புவது தெரிய, ஏற்கனவே இவர்கள் கல்யாணத்திற்காக   சம்மதம் சொல்லி இருந்தார்,, சீதா,  லதா சிரஞ்சீவி அனைவரும் ஒன்றாக ஒரே பள்ளியில்  படித்தவர்கள் தான்,, அதனால் அவர்களுக்கு  ஒரு அழகான நட்பு இருக்க,, அனைவரும் ஒன்றாக குடும்பமாக பேசிக்கொண்டு இருந்தனர்.

பூஜை தொடங்கும் கொஞ்சம் நேரம்  முன் தன் ‘ரோல்ஸ் ராயல் போட் டையல்’ காரில் வந்திரங்கினான் ரவிதேஸ்ஜா ,, அந்த காரில் விலை யோ 200 கோடிக்கு மேல் இருக்கும், மிக  விலையுயர்ந்த கார் அது,, அந்த இடத்தில் சிங்கம் போல வந்து நின்றது அந்த கருப்பு  ‘ரோல்ஸ் ராயல்  போட் கார்’..

 அனைவரும் அவனுக்காக தான் காத்திருந்தனர்,,..

அந்த காரை திறந்தகொண்டு ஒரு ஹீரோ போல் வங்தவனை, யாராலும் ரசிக்காமல் இருக்க முடியாது,, அவன் இறங்கி தோறனையே அவ்வளவு ஸ்டைலிஸ்சாக இருந்தது, அதுவும் அவனின்  உடை வெண்மை நிற சர்ட், பேண்ட் அணிந்திருந்தான்,, அவனின் பால் வண்ண நிறத்துக்கு இன்னும் கூடுதல் அழகை தர.. அதை விட அவனின் கையில் இருந்த விலைமதிப்பு இல்லால கடிகாரம், கையில் அணிந்திருந்த வெள்ளை தங்க கைஜெயின் அணிந்து.. இடது கையில் அவனின் போன் வைத்து காரை சாத்தி விட்டு பூஜை நடக்கும் இடத்துக்கு வர..

சிரஞ்சீவி  அவனுக்காக தான் இவ்வளவு நேரம்  காத்திருந்தவன் ரவிதேஸ்ஜாவை கட்டி அணைத்து, பூங்கொத்தை கொடுத்து வர வேற்க,, அதே போல தான் சிவாவும் அவனை கட்டி அணைத்து பூங்கொத்தை கொடுத்து வரவேற்றான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!