இவர்கள் பின்னாடி சோனாலி கார் வந்து நிற்க,, திரும்பி பார்த்தனர் அனைவரும்,, இவளை யாரும் இந்த பூஜைக்கு அழைக்க வில்லை அவளாகத்தான் வந்திருந்தாள்..
இந்திராசேனா பட ஹீரோயின்னை பார்க்க வந்திருந்தாள் சோனாலி..
Advertisement
அவளோ இந்த படத்தின் ஹீரோயின் மாதிரி உடையணிந்து, வந்திருந்தவள்.. ரவியை பார்த்து, “ஹாய் ஹான்சம்” என்று கட்டி அணைத்து அவனோடு கைகோர்த்து படியே பூஜைக்கு வந்தாள்..
ரவி அவளின் கையை எடுத்து விட..
Advertisement
Advertisement
மீண்டும் அவனின் கையை கோர்த்து கொண்டு வந்தவளை முறைத்தபடியே பூஜை நடக்கும் இடத்திற்கு வந்தான்.. அவன் முறைத்தது அவளுக்கு தெரிய வில்லை,, ரவிதேஸ்ஜா கூல்லிங் கிளாஸ் அணிந்து இருக்க,, அவனின் உணர்வை பிரிந்து கொள்ள முடியவில்லை சோனாலியால்..
Advertisement
சிரித்தபடியே வந்த சோனாலியின் முகம்..
சீதாவும், சிவாவும் இணைந்து நின்ற இந்திரா சேனா பட போஸ்டர் போட்டோவை பார்த்தவள். அதிர்ச்சி ஆனாள்.. சீதா?, இது சீதாவா? என்று….
“சீதா!! இந்திரா சேனா படத்தோட ஹீரோயின்னா”? ச்சீ,, என் கார் ஓட்டுன சீதா வா, என்று அதிர்ச்சியாகி நின்றவள்..ரவியின் கையை விட்டு விலகி வந்தாள்..
சீதா இந்திரா சேனா படத்தின் ஹீரோயின்னா? என்னால இத ஏத்துக்க முடியல, என்றவள்.. அவளுக்கு தெரிந்த ஒருவனிடம் போன் போட்டு, “இந்த சீதா எப்படி இந்த படத்துல நடிக்குற, யாரு ரெக்கமெண்ட் பண்ண, ” என்று கேட்க…
“மேம் சீதா டைரக்டரோட பிரண்ட், அவர் ரொம்ப ரிக்வஸ்ட் பண்ணதால தான் சீதா நடிக்குறாங்க,,”..
என்றதும், உடனே அந்த இடத்தை விட்டு கிளம்பி இருந்தாள் சோனாலி..
அவளுக்கு ஆத்திரம் சீதா இந்திர சேனா படத்தில் நடிப்பதை நினைத்து..
சிரஞ்சீவி ரவிதேஜாவை அழைத்துக் கொண்டு பூஜை நடக்கும் இடத்திற்கு வந்தான்.
அனைவரும் ரெடியாக இருக்க ரவி தேஜாவை முதலில் குத்து விளக்கு ஏத்த சொன்னான் சிரஞ்சீவி..
அவன் “நோ நோ டைரக்டர் தான் ஃபர்ஸ்ட், இல்ல லேடீஸ் யாரையாவதை ஏத்த சொல்லுங்க” என்றான்..
சிரஞ்சீவிக்கு சீதாவை அழைக்கும் எண்ணம் தான் ஆனால் ரவிதேஸ்ஜா முன்னாடி சீதாவை அழைக்க தயங்கியவன் காஸ்டியூம் டிசைனரை அழைத்து முதலில் குத்து விளக்கை ஏற்ற சொன்னான்..
இந்திராசேனா படத்தின் காஸ்ட்டூம் டைசைனர் 50 வயது லேடி மிகவும் திறமையானவர்,, அவர் தான் முதலில் வந்து குத்து விளக்கை ஏற்ற…..
அங்கே உள்ளவர் “எங்கே உங்க ஹீரோயின் கண்ணுலயே காட்ட மாட்டேங்குறீங்க, சிரஞ்சீவி,? அவங்களை வந்து குத்துவிளக்கை ஏத்த சொல்லுங்க,” என்று கூற..
இதற்கு மேல் சீதாவை மறைத்து வைக்க முடியாது என்று நினைத்த சிரஞ்சீவி,, சஞ்சய்யை அழைத்து, சீதாவை அழைத்து வர சொன்னான்..
அவன் சொல்லிய சில நொடிகளில் பூஜை நடக்கும் இடத்துக்கு சஞ்சய்யோடு நடந்து வந்தாள் சீதா..
இந்திரா சேனா படத்தில் ஹீரோயின் வர்ராங்க பாருங்க, என்று ஒருவர் சொல்ல,, அங்கே உள்ளவர்கள் அனைவரும் சீதாவை பார்க்க.. சீதாவுக்கு கூச்சமாக தோன்றியது,..
“என்னட இப்படி பாக்குறாங்க” என்று சஞ்சய்யிடம் சீதா கேட்க…
‘ஏன்க்கா இவ்வளவு அழகா இருந்தா, எல்லாரும் பார்க்கத்தான் செய்வாங்க?.. அதுவும் இன்னைக்கு உங்க படபூஜை சொல்லவா வேணும்” என்று சஞ்சய் சீதாவோடு பேசிக்கொண்டே வர..
ரவி தேஸ்ஜா நடந்து வரும் சீதாவைத்தான்,, ஆர்வமாக பார்த்தான்…
புகைப்படத்தில் விட நேரில் இன்னும் அழகாய் இருத்தாள் சீதா, அதுவும் இன்று பூஜைக்காக மாலா வாங்கி கொடுத்த, கரும்பச்சை சில்க் புடவையில், ஒற்றை மடிப்பு விட்டு,, முடியை பின்னி கொஞ்சமாக பூ வைத்து இருந்தாள், காதிற்கு அழகான குடை சிமிக்கி, ஒரு சிறிய தங்க செயின் மட்டுமே, அணிந்து மிக எளிமையாக நடந்து வந்து, யாரையும் பார்க்காமல் சிரஞ்சீவி பக்கத்தில் வந்து நிற்க..
அனைவரும் ‘ஹீரோயின் வந்துட்டாங்க பூஜை ஆரம்பிக்கலாம்’ என்று கூற..
பூஜை ஆரம்பமானது,, சீதா குத்துவிளக்கு ஏற்ற..
அவள் ஏற்றியதும், அவளிடம் இருந்த கேன்டீலை வாங்கிய சிரஞ்சீவி ரவிதேஸ்ஜாவிடம் குடுத்து “நீங்க ஏற்றுங்க”, என்றதும்..
சரி என்று ரவிதேஸ்ஜா அடுத்த குத்து விளக்கை ஏற்ற..
அடுத்து மீயூசிக் டைரக்டர், என்று சிலமுக்கிய மானவர் ஏற்ற..
சிரஞ்சீவி தன் சார்பில் அவனின் அம்மாவை ஏற்ற சொன்னான்,, அவர் ஏற்றியதும், சிவாவும் ஏற்றினான்..
பட பூஜை விழா நன்றாக முடிய.
அனைவருக்கும் சிற்றுண்டி ஏற்பாடு பண்ணியிருக்க அனைவரையும், உண்ண அனுப்பி வைத்தான் சிரஞ்சீவி..
ரவிதேஸ்ஜாவின் பார்வை முழுவதும் சீதாவின் மேல் தான்.
பார்க்க சின்ன பொண்ணா தெரியுறாலே குழல் இசை கேரக்டருல எப்படி நடிப்பாலோ, என்று சீதாவை, சீதாவாக பார்க்க வில்லை ரவி..
அவளை இந்திரா சேனா படத்தின் நடிக்கும் குழல் இசையாகவே பார்த்தான்..
அவனுக்கு அவ்வளவு ஆர்வம்,, திரையில் குழல் இசையின் நடிப்பை பார்க்க..
அந்த சிந்தனையில் தான் சீதாவை பார்த்தான் ரவி…
சிரஞ்சீவிக்கு அவனின் பார்வைபிடிக்காமல் இருக்க,, பூஜை முடிந்தது, நீங்க என்று சிரஞ்சீவி இழுக்க.
“ஒன் மினிட்ஸ் சிரஞ்சீவி” என்றவன்,
தன் பீ ஏ வை போனில் அழைத்து,, “வா” என்று சொல்ல…. அழகிய துலிப் பூங்கொத்துக்களோடு ரவிதேஸ்ஜாவின் பீ. ஏ. நேத்ரன் வந்து சேர்ந்தான்..
அவனிடம் இருந்த பூங்கொத்தை வாங்கி ரவி.. ” உங்க ஹீரோயின்னை கூப்பிடுங்க” என்றான்…
சிரஞ்சீவிக்கு ஆத்திரமாக இருந்தது,, இருக்கும் இடம் அறிந்து அமைதியாக இருந்தவன்,, சீதாவை அழைக்க.
கேமரா மேனை போட்டோ, வீடியோ எடுக்க அழைத்தான் ரவிதேஸ்ஜா..
ஜான் வந்ததும், முதலில் சிரஞ்சீவிக்கு வெள்ளை நிற துலிப் பூங்கொத்தை கொடுத்து “வாழ்த்துக்கள் டைரக்டர் நல்லபடியே படத்தை எடுத்து முடிங்க” என்று வாழ்த்து சொன்னவன்.
பின்பு சிவாவை பார்த்து “வாங்க ஹீரோ சார்” என்று அவனையும் அழைத்து வாழ்த்துக்கள் என்று சொல்லி மஞ்சள் நிற திலிப் பூங்கொத்தை கொடுத்தவன்…
சீதாவை பார்க்க..
சீதாவோ சிரஞ்சீவியின் அருகில் நின்றிருக்க..
” ஹீரோயின் சீதா வாங்க” என்று சீதாவை உரிமையாக அழைத்தான் ரவிதேஸ்ஜா..
சீதா தயங்கி நிற்க.
சிரஞ்சீவி சீதாவை “போ” என்றான்.
சீதா ரவிதேஸ்ஜாவை நிமிந்து பார்க்காமல் அவன் அருகில் வந்து நிற்க..
“வாழ்த்துக்கள் குழல்இசை,” என்றான்..
சீதாவுக்கு அவன் என்ன சொல்லி அழைக்கிறான் என்று புரியவில்லை,, ஆனால் அவன் குடுத்து பூங்கொத்தை ஆசையாக பார்த்தாள் அவ்வளவு அழகாய் இருந்தது அந்த பூங்கொத்து, சிவாவுக்கும், சிரஞ்சீவிக்கு வெள்ளை, மஞ்சள் வண்ணத்தில் துலிப் பூக்கள் இருக்க,, சீதாவுக்கு மட்டும் சிவப்பு வண்ண துலிப் பூக்கள் அடங்கிய பூங்கொத்து பார்க்கவே அவ்வளவு அழகாய் இருந்தது.
ரவிதேஸ்ஜா அவளை ரசித்து பார்க்க.
சீதா அவன் கொடுத்த பூக்களை ரசித்து பார்த்தபடியே நின்றாள்…இந்த பூக்கொத்துக்களை ரவிதேஸ்ஜா காஷ்மீரில் இருந்து வரவைத்திருந்தான்..
அவள் பூக்களை ரசித்து பார்க்க…
தான் குடுத்த பூக்களை ரசித்து பார்த்தவளை, தன் கண்கள் இரண்டிலும் நிறப்பிக்கொண்டு, சென்று விட்டான் ரவிதேஸ்ஜா..
அவனுக்கே ஆச்சரியம் நான் ஏன் இந்த பெண்ணை ரசிக்கிறேன்,, நான் அவளை ரசிக்கிறேனா?, இல்லை குழல் இசை கேரக்டரில் நடிப்பதால் சீதாவை ரசிக்கிறேனா? என்று அவனுக்கே தெரியவில்லை,,..
படபூஜையில் நடந்த விசயத்தை பார்த்த சிரஞ்சீவி இனி சீதைவை ரவி கண்களில் காட்டாவே கூடாது, இனி என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று முடிவு எடுத்திருந்தான்..
சோனாலி காரை புதிதாக ஓட்டிக்கொண்டிருந்தா டிரைவரை திட்டிக்கொண்டே வந்தாள் வேகமாக ஓட்டு என்று அவளால் சீதா இந்திரா சேனா படத்தில் நடிப்பதை தாங்கி கொள்ளவே முடியவில்லை..டிரைவரை திட்டிய படியே வீடு வந்து சேர்ந்த மகளை பார்த்த சின்மய்..
“என்ன ப்பேட்டி இப்போ தானே, ஏதோ பட பூஜைக்கு போனா, இவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்துட்ட”? என்று பேச..
அவள் பேசவே இல்லை பேசாமல் அவர் அழைத்துச் சென்றாள்.
சின்மய் அவள் பின்னாடி போக ..
அவள் ரூமில் இருந்த அனைத்து பொருளையும் தூக்கி போட்டு உடைத்துக் கொண்டு இருந்தாள் சோனாலி.
பயந்து போன சின்மய் “என்னாச்சு ப்பேட்டி என்னாச்சு ஏன் இப்படி பண்ற”? என்று கேட்க..
” ஆ….. ” என்று கத்தியிருந்தாள்..
பயந்து போன சின்மய் மகளை அந்த ரூம்பில் இருந்து வெளியில் அழைத்து கொண்டு வந்து சோபாவில் அமர வைத்து தண்ணீர் கொடுக்க..
சின்மய் கொடுத்த தண்ணீரை தட்டி விட்டவள்.. ‘எனக்கு ஒன்னும் வேண்டாம் ” என்றால்.. அவள் அமர்ந்திருந்த சோபாவில் கைகளால் அடித்தபடியே..
“பேபி என்ன ஆச்சு பேபி? என்ன கோபம் அம்மாகிட்ட சொல்லு” என்றதும்..
” எல்லாம் அந்த சீதா மேல தான்” என்றாள்..
“சீதா எங்கே நீ போற இடத்துக்கு வந்தா “?..
“அம்மா…. சீதா தான் இந்திர சேனாவோட ஹீரோயின் “… என்றதும்
“எப்படி பேபி”?
” மா… அந்த டைரக்டர் தான் சீதாவோட பிரண்டாம், அதனால அந்த படத்தோட ஹீரோயின்னா நடிக்குற.. நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொன்னால பாரு, “..
“அவ என்னவோ பண்ணிட்டு போற பேபி நீ அந்த ஹிந்தி படம் நடிக்கற வேலையை பாரு, போய் நல்லபடியா பண்ணு ,, சீதா எப்படி போனா நமக்கு என்ன”?.
“மாம் அப்படி எல்லாம் விட முடியாது,, இந்திரா சேனா படம் ரொம்ப நல்ல படம்,,, அந்த படத்துல மட்டும் நான் நடிச்சிருந்தேனா? இன்னும் நாலு வருஷத்துக்கு நான் தான் நம்பர் 1 ஹீரோயின்”..
“அவ்வளவு நல்ல படமா சோனாலி” என்றார்…
“சூப்பர் படம் ஹீரோயின்னுக்கு ரொம்ப நல்ல கேரக்டர், இதுல இரண்டு ஹீரோயின் பண்றாங்க,, டபுள் ஆக்டிங் ஒரு ஹீரோயின் பேரு குழல் இசை, இன்னொரு கேரக்டர் பேரு கார்குழலி கதை ரொம்ப நல்லா இருக்கும் ஹீரோயின் பேஸ் கதை”.. என்றவள்..
சின்மய்க்கு இந்திரா சேனா கதையை சொல்ல ஆரம்பித்தாள்..