பார்க்கும் இடமெங்கும் பச்சை பசேலென விவசாயம் செழித்து வளர்ந்திருக்க,, மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்..
Advertisement
இந்திரா சேனா நாடு செழிப்பாக இருக்க காரணம் அந்த நாட்டில் ஓடிக்கொண்டு இருந்த ஜீவன் நதி ஆறு,, ஜீவன் ஆறு எப்போது வற்றாத ஆறு.
ஆற்றில் தண்ணீர் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க நாட்டு மக்கள், செழிப்பாக வாழ்ந்தார்கள்..
அந்த நாட்டின் அரசர் ‘சிவவீரபத்திரசேனா’ அந்த நாட்டை திறன் பட ஆச்சி செய்து வந்தார்..
அவரின் மனைவி ஆருத்ரா அரசனுக்கு ஏற்ற ராணி..
சிவவீரபத்திரசேனா ராஜாவுக்கு இரண்டு பிள்ளைகள் முதலில் பிறந்தது ஆண் பையன் வீரசேனா, இரண்டாவது பிறந்தது லீலாவதி..
ராஜா தன் இரண்டு பிள்ளைகளையும் போர் வீரனைப் போல் தான் வளர்த்து வந்தார்.. ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என்று பேதம் ஏதும் இல்லை.. இருவரையும் சரிசமமாக தான் வளர்த்து வந்தார்,, தன் வாரிசில் ஒருவர் போரில் இறந்து போனாலும் இன்னொருவர் தன் நாட்டை காத்து திறன் பட நடத்த வேண்டும் என்பதை அவரின் கனவு..
நன் நாட்டின் மீது அவ்வளவு பாசம் வைத்துள்ளார் சிவவீரபத்திர சேனா..
தன் மகன் வீரசேனாவுக்கு பக்கத்து நாட்டின் இளவரசி முத்தரசியை திருமணம் முடித்து வைத்தார். அவர்களுக்கு அழகான ஒரு பையன் பிறக்க..
பேரனுக்கு வீரசிம்மா என்று பெயர்வைத்தார் ராஜா…..
மகள் லீலாவதி திருமணத்திற்காக பல அரசர்களை பார்க்க..லீலாவதி திருமணம் இப்போதைக்கு வேண்டாம் என்று திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டிருக்க.. அதற்கு காரணம் கண்டுபிடித்து விட்டார் ராஜா..
ஆம் அந்த நாட்டின் போர்க்களைகளை கற்றுக் கொடுக்கும் ஆசான் மகனை தான் லீலாவதி விரும்ப..
ராஜாவுக்கு அந்த விசயம் தெரிந்தது. அந்த ஆசான் மகன் வேந்தனை கூப்பிட்டு ராஜா விசாரித்தார்..
வேந்தன் ராஜாவிடம் முடிவாக சொல்லிவிட்டார் லீலாவதி என்றைக்கும் , எப்போதும் எங்கள் நாட்டு இளவரசி தான்,, நான் எப்பொழுதும் இளவரசியை விரும்ப மாட்டேன்,,.. என்று சொல்லி விட..
ஆசான் மகனை கட்டியணைத்த ராஜா “ரொம்ப நன்றி” என்று சொல்லி அனுப்பி வைத்தார்..
லீலாவதி திருமணத்திற்காக சுயம்பரம் நடத்த ராஜா ஏற்பாடு பண்ணியிருந்தார்…
லீலாவதி எவ்வளவு சொல்லியும் ராஜா கேட்கவில்லை,, சுயம்பரம் கண்டிப்பா நாளை நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
லீலாவதி அரசபைக்கு அரசரை பார்க்க நீதி கேட்டு வந்தாள்…
அரசர் மகளே நீதி கேட்டு வந்ததை அனைவரும் அமைதியாகி வேடிக்கை பார்க்க..
தனக்கு தன் ஆசான் மகன் வேந்தனை தான் பிடித்திருக்கிறது,, அவரைத் தான் நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் எனக்கு சுயம்வரம் வேண்டாம் என்று அனைவரின் முன்பு லீலாவதி அறிவிக்க..
ராஜாவுக்கு தன் மகள் அரசபைக்கு வந்து தன்னை அவமானபடுத்தியதை அவரால் தாங்க முடியவில்லை,.
அவரால் ஒரு சாதாரணமான ஒருவனை தன் மகளுக்கு திருமணம் முடித்து வைக்க முடியாது, எனவே லீலாவதியை ஜீவன் நதி பக்கம் இழுத்து வந்தவர்…
மகளை பார்த்து “ஒன்று நாளை உன் சுயம்பரம் கண்டிப்பா நடக்க வேண்டும், அப்படி சுயம்பரத்துக்கு நீ ஒத்துக்கொள்ள வில்லை என்றாள், ஜீவன் நதிக்கு இறையாக வேண்டும்” என்று ராஜா சொல்லி விட..
“என் வேந்தனை தவிர வேற எந்த ஆண்மகனும் என்னை நெறுங்கமுடியாது” என்று லீலாவதி கூறி விட..
“கடைசியாக கேட்கிறேன் லீலா, திருமணத்துக்கு ஒத்துக்கொள்” என்று ராஜா கூற..
“முடியாது” என்று சொல்லி விட..
துடுப்பு இல்லாத சிறிய படகில் மகளை ஏற சொன்னவர்..
“நீ வேந்தனை திருமணம் முடிப்பதை விட, ஜீவன் நதிக்கு இறையாகி விடு”, என்று.
மகளை நதியில் விட்டு விட..
நதியில் வேகத்தில் அடித்து செல்லபட்டார் லீலாவதி..
ராஜா மகளை மிரட்டி திருமணத்திற்கு சம்மதம் வாங்கவே ஜீவன் நதிக்கு அழைத்து வந்தார்..
மகளின் பிடிவாதம் மாறப்போவது இல்லை என்று உணர்ந்து கொண்டவர்.. மனதை கல்லாக்கி கொண்டு அரண்மனை வந்து சேர்ந்தார்..
லீலாவதியை அரசர் ஜீவன் நதியில் உயிரோடு விட்டு வந்து விட்டார் என்ற செய்தியை கேட்க வேந்தன்..
ஜீவன் நதிக்கு ஓடினார்..
லீலா, லீலா என்று கதறி அழுதவர் ஒரு சிறிய படகை எடுத்துக்கொண்டு லீலாவதியை தேடி சென்றார்….
இரவு முழுவதும் தேடி, தேடி ஓய்ந்து போனர், விடியற்காலையில் ஒரு சிறிய படகு ஒரு பாறை தடுக்கி கவிழ்ந்து இருப்பதை பார்த்த வேந்தன்.
“லீலா, லீலாவதி” என்று கத்திக்கொண்டே அந்த கவிழ்ந்திருந்த படகிற்க்கு அருகில் செல்ல,, லீலாவதி இருப்பதற்கான எந்த அறிகுறியும் அங்கே இல்லை,, தண்ணீரில் மூழ்கி தேடிப்பார்த்தார் வேந்தன், அவரால் லீலாவதியை கண்டு பிடிக்க முடியவில்லை,, மீண்டும் மீண்டும் தண்ணீர் மூழ்கி லீலாவதியை தேட…. லீலாவதி எங்க போனா? லீலா, லீலா என்று வாய்விட்டு கதற…
தூரத்தில் பறவைகள் பறக்கும் சத்தம் கேட்க,, படகை எடுத்துக்கொண்டு அந்த பக்கம் சென்றார் வேந்தன்,, கரையோரம் ஏதோ கிடப்பது போல் தெரிய,,..
கரையோரத்தில் படகை விட்டு, ஓடினார் வேந்தன்.
லீலாவதி மயங்கி கரையோரம் கிடக்க..
கரையோரம் வந்ததும், அங்கே கிடப்பது லீலா என்று தெரிந்து கொண்டவர்,, “லீலாவதி, லீலா” என்று அவரை கட்டி அணைத்து கண்ணீர் விட்டவர்,, தன் மடியில் லீலாவை வைத்து கொண்டு அவளை சுயநினைவுக்கு கொண்டு வர முயற்சி செய்தார்,, சில முதல் உதவி செய்து லீலாவதி கண்முழிக்க வைத்தார்..
கண் திறந்ததும், வேந்தனை பார்த்து சந்தோஷப்பட்ட லீலாவதி..
பின்பு தன்னை யாரும் புரிந்து கொள்ள வில்லையே,, இவரும் தானே தன் மேல் விருப்பம் இல்லை என்று சொன்னது, பெத்த தகப்பனே என்னை ஆற்றுக்கு இறையாக்கி விட்டார், இவர் வந்து காப்பாற்றி தன்னை தன் தந்தை இடம் ஒப்படைத்து விடுவாரே என்று பயந்தவள்..
வேந்தனிடமிருந்து பிரிந்த “என்னை ஏன் காப்பாற்றினீர்கள்,, என் தந்தையிடம் சேர்க்கவா,, நான் போக மாட்டேன், இப்போதே என் உயிர் போகட்டும்” என்று மீண்டும் ஜீவன் நதியில் விழபோனவளை..
தன்னோடு சேர்ந்து அணைத்துக்கொண்டார் வேந்தன்..
“என்னை விடுங்கள் வேந்தரே, உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை எனது தந்தைக்கு நான் வேண்டாதவளாகி விட்டேன், இந்த ஜீவன் நதி என்னை ஏற்று கொள்ளட்டும் என்று வேந்தனிடமிருந்து பிரிய முயல..
உடும்பு போல அவளை தன்னோடு சூருட்டி வைத்துக்கொண்ட வேந்தன், “இளவரசி”.. என்று அழைக்க…
“நான் இளவரசி கிடையாது, வேந்தரே, உங்களை உயிராக விருப்பும் ஒரு பெண்” என்று கதறி அழுத லீலாவதியை,.
” லீலா, லீலா” என்று அவள் முகத்தை தன் முகத்தை பார்க்க வைத்தவர்…
“உன்னை எனக்கு பிடிக்கும் டா,, நான் என் நேசத்தை வெளிபடுத்தினால், இப்படி தான் நடக்கும் என்றே அமைதியாக இருந்தேன்.. எப்போது எனக்காக உயிர விட துனிந்தாயோ. அப்பவே, நான் முடிவு செய்து விட்டேன்,, என் லீலாவை விட போவது இல்லை, என் தங்கத்தை விட மாட்டேன், என் உயிர் டா நீ, யாருக்காவும், இனி நான் விடமாட்டேன், என் உயிரே போனால் சரி, நான் உன்னை விட மாட்டேன்” என்று லீலாவதியை அணைத்துக்கொள்ள..
“வேந்தே” என்று லீலாவும் அணைத்துக்கொண்டாள்..
அவருக்கு தெரிந்தது, இந்திரா சேனா நாடு எங்களை ஏற்று கொள்ள போவதில்லை என்று, அந்த காட்டிலே இருவரும் வாழ ஆரப்பித்தார்கள்,, காட்டு சிவன் கோவிலில் வைத்து இருவரும் திருமணமுடித்து வாழ ஆரம்பித்தார்கள்…
அங்கே அரண்மனையின் ராஜா மகளை தன் சுயகௌரவத்துக்கு நதியில் இறையாக்கி வந்து விட்டேன் என்ற வேதனையில சில மாதங்களில் இறந்த விட,,
ராணிக்கு கணவனே பெத்த பிள்ளையை உயிரோடு நதியில் விட்டதை தெரிந்ததில் இருந்தே ராஜாவிடம் பேசவேயில்லை,, இப்போது கணவனும் இறந்த இட,, படுத்த படக்கையாகி, லீலாவதியை நினைத்தே இறந்து போனார் ராணி…
நாட்கள் வருடங்களாக ஆனாது 25 வருடம் கழித்து..
இந்திரா சேனா நாடு இப்போது வீரசிம்மா ஆச்சியில் மெம்மேலும் வளர்திருந்தது,,.
தாத்தா சிவவீரபத்திரசேனா உருவ அமைப்பை உடையவன் வீரசிம்மா..
தந்தை வீரசேனாவை விட..
பலமடங்கு தைரியசாலி, வாள்வீச்சில் அவனை வெல்ல முடியாது,, தங்கள் நாட்டை அடைய வந்த பல நாட்டவர்களை ஓட, ஓட விரட்டி அடித்து இந்திரசேனா நாட்டை ஆண்டு வந்தான் வீரசிம்மா,,
வீரசேனாவும் சேர்ந்து மகனுக்கு உதவினார்…
இந்திரா சேனா நாடு சிறிய நாடு,, அந்த நாட்டின் உயிரே வற்றாத ஜீவன் நதி தான்,, எதிரிகளின் குறியே இந்த நதி தான்,, எந்த பஞ்சம் வந்த போதும் வற்றாத நதி இருக்கும் இந்த சிறிய நாட்டை அடைவதற்கென்றே, பல நாடுகள் திட்டம் போட்டு வீரசிம்மனை கொல்ல திட்டம் போட.
வீரசிம்மனை காக்க பெறும் படையை உருவாக்கி வைத்திருந்தார் லீலாவதி..
அவரின் படையென்று யாருக்கும் தெரியாது,, தன் அண்ணன் மகன், இந்த நாட்டின் ராஜாவின் உயிரை காப்பதே இவர்களின் வேலை..
அன்றொரு நாள் வீரசிம்மா ராஜா அவர்கள் நாட்டில் தெற்கு பக்கம் இருக்கும் அடர்ந்த காட்டிற்கு வேட்டைக்கு சென்றார்,, ராஜா வேட்டைக்கு வருவதை தெரிந்த, எதிரி நாடு.. காட்டிலே வைத்து அவரை கொன்றுவிட,, பலபேரை ஏற்பாடு பண்ணியிருக்க, ராஜாவுக்கு இது தெரியாது,,
சிறிய ஆட்களோடு காட்டில் சுற்றி வந்தவரை பெரும்படைபோல ஆட்கள் சூழ்ந்து கொள்ள..
ராஜா கையில் சிறிய ஆயுதமே,, அந்த பெரும்படையை சமாளிக்க கடினம் என்று தோன்ற,,, தன்னால் முடிந்தவரை போராடி பார்த்தார் வீரசிம்மாராஜா,, ஒருகட்டத்துக்கு மேல் அவரால் முடியவில்லை, எதிரிகள் அவரை கொல்லவர, பக்கத்தில் கருப்பு குதிரை வந்து ஒருவர் எதிரிகளை அம்பு விட்டு ராஜாவை காப்பாற்ற,, எதிரிகள் அந்த குதிரையில் வந்தவரை தாங்க, ஒருகட்டத்துக்கு மேல் குதிரையில் வந்தவறால் கூட ராஜாவை காப்பாற்ற முடியவில்லை,என்று தெரிந்து கொண்டு அந்த நபர் வித்தியாசமான ஒலியை எழுப்பி சத்தம் கொடுக்க,, தூரத்தில் இருந்து பல அம்புகள் எதிரிகள் மேல் வீழ்ந்து எதிரிகள் மடிந்து விழ,, அந்த குதிரையில் வந்த நபர் ராஜாவை அந்த இடத்தை விட்டு அழைத்த வந்தவர்,, காட்டின் எல்லையில் அவரை விட்டு..
அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து வணக்கம் சொல்ல..
“வீரனே உன் பேர் என்ன,, எம் உயிரை காத்த உனக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும், சொல் வீரனே” என்று வீரசிம்மா சொல்ல.. அந்த நேரத்தில்,
அரண்மனையில் இருந்து காவலர்களுக்கு அரசருக்கு ஆபத்து என்று தெரிந்து பெரிய படையே திரண்டு வர, ராஜா தன் அரண்மனையில் இருந்து வந்த படையை பார்த்து நிற்க,..
ராஜாவை காப்பாற்றிய அந்த நபர், அதை பயன்படத்தி கொண்டு குதிரையில் ஏறி சென்றிருந்தார்..
அவர்களுக்கு இட்ட கட்டளை அப்படி,, எந்த சூழ்நிலையில் தங்களை ராஜாவிடம் காட்டிக்கொள்ள கூடாது,, அரசரை காப்பாற்றவே பிறந்தவர்கள் நீங்கள், என்ற தாய் லீலாவின் குரல் அவள் காதுகளில் கேட்க,, தாங்கள் வசிக்கும் வடக்கு பக்க காட்டிற்கு சென்றாள் குழலிசை…..
தங்கை வரவை தூரத்தில் இருந்த பார்த்த கார்குழலி, தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்த ஒலி எழுப்பா,, ஒலி வந்த திசை நோக்கி சென்றாள் குழலிசை…..
வீரசிம்மாவுக்கு தன் உயிரை காப்பாற்றி வீரனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது,, அவனை கண்டுபிடித்து அழைத்து வரும் மாறு வீரர்களிடம் சொல்ல, ..
ஒரு வாரம் தேடியும் ராஜாவை காப்பாற்றியது யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை,,..
ராஜாவுக்கே ஆச்சரியம் எனக்கு உதவியவரை கண்டு பிடிக்கமுடியவில்லை,, என்றவர் அவர்கள் நாட்டின் ஒற்றனை அழைத்து, விசாரிக்க சொல்ல..
ஒரு வாரம் கழித்து வந்த ஒற்றன் வீரசிம்மனை பார்த்து,, “அரசே உங்களை காப்பாற்றியது வீரன் அல்ல,, ஒரு பெண், ஒரு பெண் மட்டுமே அல்ல இரண்டு பெண்கள்,, அதுவும் உங்கள் அத்தை லீலாவதி அம்மையாரின் புதல்விகள்,,” என்றதும்..
வீரசிம்மா அமர்ந்த இடத்தில் இருந்து எழுந்தவன்,, “என்ன சொல்லுகிறீர்கள் ஒற்றனே, என்னை காப்பாற்றியது ஒரு பெண்ணா”?.
“ஆமாம் அரசே, உங்களை பக்கத்தில் இருந்து காப்பாற்றியது குழலிசை, உங்க அத்தையின் இளய மகள், தூரத்தில் இருந்து காப்பாற்றியது உங்க அத்தையின் முத்த மகள் கார்குழலி”.. என்றதும்.
“என் அத்தை லீலாவதி இறந்த விட்டதாக தாத்தா, சொன்னாரே”..?
“இல்லை அரசே உங்க அத்தை நம்ம நாட்டில் போர்களைகளை கற்று தரும் ஆசான் மகனை விரும்பினார்,, அது உங்க தாத்தா சிவவீரபத்திரசேனா ராஜாவுக்கு பிடிக்கவில்லை,, அவரை ஜீவன் நதியில் உயிரோடு துடுப்பு இல்லா படகில் ஏற்றி உங்க தாத்தா நதிக்கு இறையாக்க நினைத்தார்…
உங்கள் அத்தை விரும்பிய வேந்தன் என்பவர், அவரை காப்பாற்றி திருமணம் செய்து கொண்டு நாட்டின் எல்லை பகுதியில் வாழ்கிறார்கள், அது மட்டும் இல்லை அரசே…
அவர்கள் தம் நாட்டின் எல்லையில் இருந்தாலும், அவர்களை போல வாழ வழியில்லாமல் இருப்பவரை சேர்த்து , பல வீரர்களை உருவாக்கி நம் நாட்டை காத்து வருகிறார்கள்,,..
நம் நாட்டின் எல்லையில் பல வீரர்கள் இரவு பகலாக நம் இந்திரா சேனா நாட்டை எதிரிகளை அண்ட விடாமல் காத்து வருகிறார்கள்..
அது மட்டும் இல்லை உங்க அத்தை பெண்கள் நீங்கள் ராஜாவாக பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை நீங்க அரண்மனையை விட்டு வெளியே எங்கு சென்றாலும் அறன்போல உங்களை காத்து நிற்பது இவர்களே,, பக்கத்தில் இருந்து குழலிசை உங்களை பார்த்துக்கொள்ள,, தூரத்தில் இருந்து உங்களை காப்பது கார்குழலி இவ்விரு பெண்கள் தான் உங்கள் உயிரை காப்பாற்றியது.”.
“என்னால் நம்பமுடியவில்லை ஒற்றனே,, என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெறியாமல் இத்தனை நாள் இருந்து விட்டேனே,, நான் என் அத்தையை பார்க்க வேண்டும் ஏற்ப்பாடு செய்யுங்கள்” என்றதும்.
“அவர்கள் இருக்கும் இடத்திற்கு அவர்கள் அனுமதி இல்லாமல் போக முடியாது மன்னா, நான் முயற்சி செய்கிறேன்” என்றதும்..
வீரசிம்மாவிற்கு உடனே இந்த விசயத்தை தன் தந்தையிடம் கூற வேண்டும் என்று தோன்ற வீரசேனா அறைக்கு சென்று தன் தந்தையிடம் அனைத்தையும் சொல்ல…
உடனே தங்கையை பார்க்க காட்டிற்க்கு சென்றார்,, வீரசேனாவை காத்திருங்கள் தந்தையே அவர்கள் இருக்கும் இடம் தகவல் வரட்டும் அப்போது செல்லலாம் என்று வீரசிம்மா சொல்ல..
தன் உடன் பிறப்பு உயிரோடு இருப்பதை அறிந்த வீரசேனா, அடுத்த நொடி சிறிய ஆட்கள் படையை அழைத்துக்கொண்டு தங்கையை தேடி காட்டிற்க்கு சென்றார்,, ..
வீரசேனாவிற்க்கு தன் தங்கையை இழந்தது பெரிய இழப்பு,, தன் தந்தை ஜீவன் நதியில் தன் உடன்பிறப்பை உயிரோடு கொல்ல நினைத்ததை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,, தந்தை செய்த காரியத்தால் அழுதவர் தந்தையிடம் பேசவேயில்லை அவர் இறக்கும் வரை.