Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 7 2

இன்று தன் தங்கை லீலா உயிரோடு இருப்பதை அறிந்தவர்,  சந்தோஷ மிகுதியில் காட்டில் எல்லா திசை பக்கமும் லீலா, லீலா என்று கதறியவாறே, அவரை தேடி வர..

அவர் தன்னை  தேடி வரும் விசயம் அறிந்த லீலாவதி, மகள்களிடம் தன் அண்ணனை அழைத்து வர உத்தரவிட ,,.. ஆண்வேடத்தில் சென்ற கார்குழலி வீரசேனா ராஜாவிடம் சென்று லீலாவதி இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தாள்…



Advertisement

தன்னை தேடி  தன் வீட்டின் முன்  அண்ணன் குடும்பத்தை பார்த்த லீலாவதி  கண்கலங்கிய வாறே,,

 தன் அண்ணன்,  அண்ணியும் வரவேற்க, பின்னாடி குதிரையில் தன் அண்ணன் மகன் வீராசிம்மாவை  பார்த்த, லீலாவதிக்கு அப்படி ஒரு சந்தோஷம்   “வாங்க ராஜா” என்ற லீலாவதி  தலைவணங்கி வீரசிம்மா ராஜாவிற்க்கு  வணக்கம் சொல்ல..

Advertisement

Advertisement

“அத்தை” என்று அதை தடுத்திருந்தான் வீரசிம்மா…

 “நீங்கள் என் அத்தை எனக்கு தலை வணங்கலாமா?”,,  என்றான்.

Advertisement

 ” நீங்கள் எங்கள் நாட்டின் ராஜா,, எங்களுக்கு கடவுள் போன்றவர்,,  உம்மை வணங்குவது என்ன தவறு அரசே,,  எங்களை காக்கும் அரன் நீங்கள்” என்று சொல்லியவர், அண்ணன் மகனை அணைத்துக்கொண்டார்..

தன் தந்தையை போல  உள்ள தன் அண்ணன் மகனை , உச்சி முகர்ந்தார் லீலாவதி, எத்தனை நாள் கனவிது..

 “எங்களை மன்னித்து விடு லீலா” என்று வீரசேனா  தங்கையிடம் மன்னிப்பு கேட்க.

 “அண்ணா” என்று கண் கலங்கிய  லீலாவதி அண்ணன் கையை பிடித்துக் கொள்ள..

“தம் தந்தை  செய்தது  பெரிய தவறு எங்களை  மன்னித்து விடு லீலா” என்க.

 “அவர்  செய்ததுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள் அண்ணா, பழயதை பேச வேண்டாமே”  என்றார் லீலா….

அனைவருக்கு குடிக்க இளநீர் கொண்டு வந்து கொடுத்தார்,,..

 வேந்தன் இவர்கள் வந்த செய்தி கேள்வி பட்டு வர..

வீரசேனா வேந்தனை கட்டி அணைத்து நன்றி சொன்னார்,, “உங்களால் தான் என் தங்கை எனக்கு கிடைத்திருக்கிறாள் , என் தங்கையை காப்பாற்றியதற்கு நன்றி,, “எங்கே  லீலா உன் பிள்ளைகள்?” என்று வீராசேனாவின் மனைவி  லீலாவதியிடம் கேட்க…

“இதோ உங்களை அழைத்து வந்தாளே இவள் தான் என் மூத்த மகள் என்று கார்குழலியை” காண்ப்பித்தார்…

கார்குழலி தன் முக கவசத்தை கலட்டி அனைவருக்கும்  “வணக்கம்” சொல்லி ஒரு ஆண்மகன் போல  கம்பீரமாக நிற்க..

“எங்கே குழலிசை” என்று லீலா கேட்டதும், தன் தம்பியோடு காட்டிற்க்கு பழங்கள் பரிக்க போயிருந்தவள்,  காட்டில் இருந்து  வர…

“இவள் தான் என் இளய மகள் குழலிசை, என் பையன் வீரவேந்தன்” என்று தன் பிள்ளைகளை அறிமுகம் படுத்தி வைக்க….

குழலிசை என்றதும் இசையை பார்த்த படியே வீரசிம்மா நிற்க….

என்னை காப்பாற்றியது இவளா?  என்று அவளை பார்த்த படியே நின்றான்,, அன்றைக்கு ஆண்மகன் போல் தெரிந்தவள், இன்று தலையில் தாழம்பூவை மடித்து சூடி இருந்தவள், நெத்தில் நீலா போன்ற கருப்பு பொட்டு,, காதில் ஒரு குண்டுபோல ஏதோ விதைகளை அடுக்கி கோர்த்து கம்மல் போல போட்டு இருந்தவள்,, கழுத்தில் ருத்ராச்ச கொட்டையை ஒரு கரும்பு நூலில் கட்டி இருந்தாள்,, இன்று இறுக்கமாக காபி கலர் புடவையை தன்னை சுற்றி இருக்காமாக கட்டி,,இருந்த தேவதை பெண்ணை பார்த்த படியே நின்றான் ராஜா..

எந்த ஒரு ஆபாரணமும் இல்லாமல் காட்டில் உள்ளதை வைத்து,, தன்னை அலகரித்திருந்த குழலிசையை வீரசிம்மாபார்த்த படியே நிற்க..

வீரசேனா தன் தங்கை செல்வங்களை அணைத்துக்கொண்டார்..

“என் தங்கை பிள்ளைகளே,,  என்னை தெரியுதா உங்கள் தாய் மாமன்” என்று கேட்க..

மூன்று பேரும் தலையாட்டியிருந்தனர்..

“லீலா உடனே அரண்மணைக்கு, மாப்பிள்ளை, பிள்ளைகளோடு  கிளம்பு”.. என்றார் வீரசேனா..

“இல்லண்ணா நாங்கள் இங்கேயே இருக்கிறோம், இறந்தவள் இறந்தவளாகவே இருக்கிறேன்”..

“லீலா ஏன்டா இப்படி  பேசிகிறாய், அரண்மனைக்கு வாம்மா” என்று அழைக்க, லீலாவதி முடியாது என்று மறுத்து விட..

வீரசிம்மா குழலிசை அருகில் சென்று “நீதான் என்னை காப்பாற்றினாயா”? என்று கேட்க.

அவளோ “ஆமாம்” என்று தலையாட்ட..

அன்று காப்பாற்றியவரின் கண்களை மட்டும் பார்த்தவன்..

இன்று தன் முன் அழகு பதுமை போல நின்ற பெண்ணை, நன்றி உணர்ச்சியோடு பார்க்க..

வீரசேனாவின் மனைவி முத்தரசி  குழலிசையின் அருகில் வந்து “ரொம்ப  நன்றிமா அன்று காட்டில் என்மகனை காப்பாற்றியதற்கு” என்று நன்றி சொல்லி பேச..

குழலிசை  அது என் கடமை என்பது போல் மெல்ல சிரித்து தலையாட்ட..

“இந்த அத்தையிடம் பேச மாட்டாயா? “

என்றதும்.

“அவளால் பேச முடியாது அண்ணி,..”?..

என்றார் லீலாவதி,,..

“ஏன்?, எப்படி ஆனது,? சிறிய வயதில் இருந்தே இப்படித்தானா”?..

” உனக்கு பழையது ஞாபகம் இல்லையா வீரசிம்மா,, உன் சிறு வயதில் உன் கூட பாடசாலையில் படிக்கும் ஒரு பெண் ,, உனக்கு வழங்கிய பழசாற்றில் விஷம் இருந்தது,, அதை  நீ தெரியாமல் அறுந்த போக.. உன்னை தடுத்து அதில் இருந்த விஷம் கலந்த பாலசாற்றை குடித்து உன்னை காப்பாற்றினாளே, அது வேறும் யாருமில்லை இந்த  குழலிசைதான், அதனால்  தான் அவளுக்கு பேச்சு போயிற்று” என்று கூற.

வீரசிம்மாவிற்க்கு  அந்த சம்பவம் இன்றும்  ஞாபகம் இருக்கிறது.

ஒரு சிறு  பெண் அந்த பழசாற்றை என்னை  அறுந்த வேண்டாம் என்று  தடுக்க,, அவனோ தள்ளி போ என்று சொல்லி பழசாற்றை அறுந்த போக,, அவனிடம் பிடிக்கி அறுந்தியவள், சில நொடிகளில் மயங்கி  இரத்த வாத்தி எடுத்ததை பார்த்தவன் அல்லவா, இன்று அந்த சம்பவம் அவன் கண் மன் வர..

குழலிசையின் அருகில் சென்றவன்..

“நீதான் அன்று பழசாற்றை என்னிடமிருந்த பிடிங்கி குடித்து என்உயிரை காப்பாற்றியவளா”?..என்றதும்.

 “ஆமாம்” என்று குழலிசை கண்மூடி திறந்து தலையாட்ட.

தன்னால் தான் குழலிசைக்கு குரல் போனது என்று தெரிந்த வீரசிம்மா வருத்தபடுவதை பார்த்த குழலிசை..

வீரசிம்மாவின் அருகில் வந்து,, கை ஜாடையில்,,  என் உயிரே ராஜாவுக்கு தான், என் குரல் போன   என்ன? குரல் போனல் போகட்டும், நீங்கள் வருத்தபடவேண்டாம்'” என்று ஜாடையில் பேச..

வீரசிம்மாவிற்கு இன்னும் குற்றவுணர்ச்சியானது. ஒரு முடிவு எடுத்தவனாக லீலாவதியிடம் வந்து நின்று,, “எனக்கு  குழலிசை திருமண முடித்து தருவீர்களா, அவளை என் கண்ணுக்குள் வைத்து பார்த்து கொள்கிறேன்” என்று கேட்க..

 அவன் கேட்டதும்  அதிர்ச்சியான லீலா.. அரசர்  குடும்பத்தில் கல்யாணம் பண்ணும் அளவிற்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லை ராஜா,, நாங்கள் சாதாரணமான குடிசையில் வாழ்பவர்கள்,  என்னுடைய  பெண் பிள்ளைகளை  இந்த நாட்டின் ராஜாவின் உயிரை காப்பாற்றுவதற்காகவே வளர்த்து  வைத்திருக்கிறேன்” என்று கூற..

 வீரசிம்மா   எல்லாரையும் பார்த்து “நான் திருமணம் முடித்தால்  அது குழலிசையை தான்” என்று அனைவரிடம்  சொல்லிவிட்டு கிளம்பி சென்று விட்டான்..

லீலாவிற்க்கு இது ஒத்தவராது என்று தோன்ற,, அண்ணனிடம் சொல்லிவிட்டார்,, இது சரிவராது  ஒரு நாட்டின் இளவரசியை  ராஜாவுக்கு திருமணம் செய்து வைக்க பாருங்கள்,,.. என்றார்..

நாடு வந்து சேர்ந்த வீரசேனா, மகனை கூப்பிட்டு திருமணத்தை பற்றி பேச..

 எனக்கு திருமணம் என்று ஒன்று நடந்தால் அது குழலிசையோட தான் இனிமேல் திருமணத்தைப் பற்றி நீங்கள் பேச வேண்டாம் என்று வீரசிவாவிடம் , வீரசிம்மா சொல்ல”..

 “அதுதான் லீலாவதி சொல்லி விட்டாலே குழலிசையை உனக்கு திருமணம் செய்ய முடியாது” என்று..

 “அத்தை இப்பொழுதுதான் வேண்டாம் சொன்னார்,   இன்னும் கொஞ்சம் காலம் கழித்து அவரும் சரி என்று சொல்வார் நான்  அவரை சரி என்று சொல்ல வைப்பேன். நீங்கள் கொஞ்சம் காத்திருங்கள்” என்று வீரசிம்மா சொல்ல…

வீரசேனா அமைதியாகி போனார்..

இரண்டு வாரம் கழித்து ஒற்றன் வீரசிம்மனை பார்த்து, “உங்க அத்தை மகள்கள்  இருவரும் இன்று இரவு சிவராத்திரிக்கு காட்டு சிவன் கோவில் நடராஜர் முன் நாட்டியம் ஆட உள்ளார்கள், அவர்களை பார்க்க வேண்டும் என்றால் சொல்லலாம் என்று தகவல் சொல்ல.

ஒற்றனுக்கு தகுந்த சன்மானம் கொடுத்த வீரசிம்மா..

சதாரண  ஒரு வாலிபன் போல் வேடமிட்டு   தன் முகத்தை  மூடிக்கொண்டு காட்டு சிவன் கோவிலுக்கு சென்றான்

நாட்டியம் தொடங்கியது,, குழலியையும், கார்குழலியும் ஒன்றாக சேர்த்து ஒரே மாதிரி உடை அணிந்து, ஆடை ஆபரணங்கள் சூட்டி…. அழகாய் அபிநயம் பிடித்து நடனம் ஆட…

வீரசிம்மன்   ஒரு மரத்தின் மேல் சாய்ந்த குழலிசை நடனத்தை ரசித்து பார்த்தான்..

சண்டை மட்டும் இல்லை என் தேவிக்கு நடனம் ஆடவும் தெரிகிறதே, என்று ஆர்வமாக அவளையே பார்த்தபடியே நிற்க..

தன்னை யாரோ உற்று பார்ப்பது போல் உணர்ந்த குழலிசை  சுற்றி பார்க்க..

 மரத்தில் சாய்ந்த நின்ற வீரசிம்மனை கண்டு கொண்டவள்..

அதிர்ச்சி ஆனாள் பின்பு, ராஜாவை ஓரக்கண்னால் பார்த்த படியே குழலிசை நடனமாட..

தன்னை கண்டு கொண்டாள் என்று தெரிந்த  வீரசிம்மா தன் முகமூடியை கலைத்து விட்டு, அவளை பார்க்க..

அவளும் ராஜாவை பார்த்தபடியே நடனமாட.

அழகு என்று ராஜா அவளை பார்த்து பாவனை செய்ய..

வீரசிம்மனை பார்த்து கண்சிமிட்டி சிரித்தாள் மங்கை.

அவள் கண்சிமிட்டியதில் உற்சாகமான ராஜா….

அவளின் அலங்காரத்தை பார்த்து இப்பவே இவளை திருமணம் செய்து  அழைத்து சென்று விடலாமா என்று யோசித்தவன்.

அவளை பார்த்தவாறே ‘தன்னிடம் வா’ என்று கண்களாலே குழலிசையை அழைக்க..

வரமாட்டேன் என்று பாவனை செய்த குழலிசை வெட்கபட்டு சிரிக்க..

அவள் சிரிப்பில் மயங்கியதை போல ராஜா பாவனை செய்ய.. அதற்கும் சிரித்தவள் ராஜாவை பார்த்தபடியே நடனமாட..

கார்குழலிக்கு  தங்கை பாவனைகள், நடன அசைவுகள் தப்புவது போல மனதில்  பட, “சரியாக  ஆடு குழலிசை” என்று ஆடிக்கொண்டே சொல்ல…

குழலிசை கவனம் இங்கே இல்லை என்ற உணர்ந்த கார்குழலி  தங்கை பார்க்கும் திசை பக்கம் பார்க்க.. அங்கே  வீரசிம்மன் குழலிசையுடன் கண்களாலே பேசிக்கொண்டதை பார்த்தவள்,, அமைதியாக நடனம் ஆடினாள்.

வீரசிம்மன் நடனம் முடிந்தவுடன் “வா” என்று அழைக்க.

‘வரமாட்டேன்’ என்று ஜாடைகாட்டி ஆடினாள் குழலிசை..

“நீ என்னோடு வந்து பேசமால் நான் இந்த இடத்தைவிட்டு போக மாட்டேன்  என்று வீரசிம்ம  அவளிடம் கை ஜாடை காட்ட..

“முடியாது” என்று சொல்ல வந்தவளை,..

முத்தமிடுவது போல் ராஜா  பாவனை செய்ய..

 வேறுப்பக்கம்  பார்வை திருப்பி குழலிசைக்கு  வெட்கம்  வந்து பாடாய் படுத்த  ராஜா பக்கம் பார்க்க முடியவில்லை அவளால்…

நடனம் முடிந்தது..

ராஜாவை பார்த்தாள் குழலிசை..

“தன்னிடம் வா”  என்று ராஜா அழைக்க..

மறுக்க முடியாதவள், வருகிறேன் என்று கண்மூடிதிறந்து பதில் அளிக்க…

கார்குழலியின் பின் சென்றவள், சகோதரியிடம் எப்படி சொல்லி ராஜாவை சந்திக்க அனுமதி கேட்பது என்று குழலிசை தயங்கி நிற்க..

குழலிசையை  பின்பக்கம் அழைத்து வந்த கார்குழலி, “சீக்கிரம் ராஜாவை பார்த்து விட்டு வா” என்று சொல்ல..

கார்குழலியை  கட்டியணைத்தவள், சீக்கிரமாக வந்து விடுகிறேன் என்று ஜாடை காட்டி விட்டு, வீரசிம்மனை தேடி சென்றாள்…

சிவன் கோவில் பக்கத்தில்  சற்று  தள்ளி தன் வெள்ளை  குதிரையோடு நின்று இருந்த வீரசிம்மனை பார்த்த குழலிசை,  அந்த இரவில்  வேகமாக நடந்து போக..

குழலிசை கொலுசொலி கேட்டு திரும்பி பார்த்த ராஜா  அவளை பார்த்த படி குதிரையில்  ஏறி அமர,..

குழலிசை வீரசிம்மன் குதிரையில் ஏறி அமரவும்  எதற்கு என்று தயங்கி நிற்க..

“வா” என்று  ராஜா அழைக்க..

குழலிசை தன்னை எங்கோ அழைத்து சென்று பேசபோகிறார் போல என்று நினைத்தவள்..

“நான் வரமாட்டேன்” என்றவள்…

திரும்பி அவள்  வந்த பாதை நோக்கி ஓட..

அவள் எண்ணம் புரிந்த வீரசிம்மன், அவளின் பின்னாடி குதிரையில்  வேகமாக   சென்றவன்..

அவளை தூக்கி தன் குதிரை முன் அமர வைத்தவன்,,  அவளை ஒரு கையில் பிடித்தவாறே  குதிரையை  தன் நந்தவனம் நோக்கி செலுத்தினான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!