Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சுடர்கின்ற காதல் தீயே

சுடர்கின்ற காதல் தீயே. 3

கோயிலில் கடவுளை பார்த்து,” சத்தியமா நான் என்ன பாவம் பண்ணேன்னு எனக்கு தெரியல. எனக்கு எதுக்கு இப்படி ஒரு வாழ்க்கை. அவன உண்மையா லவ் பண்ணது தப்பா? ஒரு அடிக்கு இந்த அளவு கீழ போய், ஒரு பொண்ண பழிவாங்குற அளவுக்கு வெறி இருக்குமா? எப்படி அவனோட காதல்ல நான் விழுந்தேன். எனக்கு இது தேவைதான். சொந்த குடும்பத்தை விட்டு இவனை நம்பி ஒழுங்கா படிக்காமல், வந்ததுக்கு நீ கொடுத்த தண்டனையா இந்த வாழ்க்கையை நான் ஏத்துக்குறேன்.

ஆனா எனக்கு கொடுத்த தண்டனை இன்னையோட முடிஞ்சது. இனிமேல் எதுக்கு என் வாழ்க்கை இப்படின்னு உன்கிட்ட கேட்கவே மாட்டேன். அவன் என் லைஃப்ல எப்பவும் வரக்கூடாது. இந்த குழந்தை அவனோடது இல்லை என்று சொல்லிட்டான். அன்னைக்கு அந்த பார்ட்டி ல என்னவோ நடந்திருக்கு. அந்த நாள்ல இருந்து அவன் என்னை தொடவேயில்லை. அப்ப கண்டிப்பா இது அவனோட குழந்தை இல்ல. ஒரு பொறுக்கியோட குழந்தை இல்லை என பார்த்தா இன்னொரு பொறுக்கியோட குழந்தை. என்னடா தங்கம் அம்மா இப்படி சொல்றான்னு பாக்குறியா? ” என்று வயிற்றில் கை வைத்து,

” ஆமாடா உன்னோட அப்பா ஒரு பொறுக்கி தான். ஒரு பொண்ணோட விருப்பமே இல்லாம அடுத்தவன் பொண்டாட்டிய தொட்டவன் பொறுக்கி தானே.ஆனா உன் அம்மா ரொம்ப நல்லவ. உண்மையா என் காதலுக்கு பொறக்க போற குழந்தைன்னு நினைச்சேன். ஆனா நான் உயிரோட வாழ்க்கை வாழ்வதற்கு கடவுள் கொடுத்த பரிசுன்னு இப்பதான் புரியுது. நீ மட்டும் இல்லாட்டி கண்டிப்பா அவன் என்னை ஏமாத்துறதுக்கு செத்து போயிருப்பேன். அது தப்புன்னு புரியுது இருந்தாலும் காதல் வலி, ஆனா இனி அப்படி கிடையாது. நல்லவேளை நீ அவனோட குழந்தை இல்லை. வேறு யாரோ

 கண்ணுக்கு தெரியாதவங்களோட குழந்தை. அதுவரைக்கும் சந்தோஷம். இனிமேல் உனக்கு அம்மா, அப்பாவா நான் இருக்கேன். இனி நம்ம உலகத்துல வேற யாரும் இல்ல. இனி நம்ம வாழ்க்கையை நம்ம தான் வாழப்போறோம் டா. இனி புது வாழ்க்கையை வாழ்வோம்” என்று கூறிவிட்டு எழுந்து கடவுளைப் பார்த்து,



Advertisement

” எனக்கு ரொம்ப நல்லது பண்ணி இருக்கியா? இதெல்லாம் எதுக்காக நடக்கணும்? உன்னை மட்டுமே நம்பிருந்த எனக்கு இவ்வளவு பெரிய துரோகம் எதுக்கு பண்ண? இந்த காதலை என் மனசுக்குள்ள வர வச்சது என்னோட தப்பு. இனிமேல் என் லைஃப்ல காதலை கொண்டு வராதே. போற பாதைல மட்டும் கூடவா அது போதும். இந்த நம்பிக்கையாவது காப்பாத்து ” என்று கடவுளை திட்டி விட்டு, நேராக தான் தங்கி இருக்கும் வீட்டுக்கு சென்றாள்.

 வீடு ஓரளவுக்கு பெரிதாகத்தான் இருந்தது. ஒரு ஹால், பெட்ரூம்,கிச்சன். அவனும் தங்க வேண்டுமல்லவா ஓரளவுக்கு நன்றாகவே பார்த்திருக்கிறான் என்று புரிந்தது. எல்லாத்துலயும் சுயநலம் என்று நினைக்க அவளுக்கு விரக்தியாக இருந்தது. இப்பொழுது அந்த வீட்டை முழுவதுமாக கண்களால் நிரப்ப, ஹாலில் இரண்டு பிளாஸ்டிக் சார் இருந்தது. கோயிலில் நண்பர்கள் மூலம் எடுத்த ஒரு கல்யாண போட்டோ. அதில் இருவரும் அழகாகத் தான் இருந்தனர். ஒரு பழைய டிவி இருந்தது.

 அப்படியே நகர்ந்து கிச்சனை பார்க்க, நாலஞ்சு பாத்திரங்களும், கேஸ் ஸ்டவ்வும் இருந்தது. அதில் இருக்கும் அனைத்தும் திருமணமான பொழுதில் வாங்கியது. அப்பொழுது வீட்டுக்காக செலவு செய்தது மட்டுமே அடிக்கடி காசு கொடுப்பான் அவ்வளவே. கண்களில் கண்ணீர் ஊற்றியது. திரும்ப பெட்ரூம் வந்து பார்க்க, . கூடவே மிகவும் பழைய மரத்தாலான பீரோ மாதிரி ஒரு பலகை இருந்தது. அதிலும் அவனுடைய துணிகள் நிறைய இருந்தது. அவளுக்கு வீட்டில இருந்து எடுத்து வந்த பத்து சுடிதார், இந்த ஒன்றை வருடங்களில் அவன் எடுத்துக் கொடுத்த மூன்று சுடிதார். அது மட்டுமே அதில் கடந்தது. மிகவும் மோசமாக அங்கங்கு ஓட்டைகளாக இருந்தது. இது வாங்கி வரும் பொழுது,

Advertisement

“நம்ம வாழ்க்கைக்கு காசு வேணும், படிக்கறதுக்கு காசு வேணும், இப்போதைக்கு இது போதும் சம்பாதிச்சு நிறைய வாங்கி தரேன் ” என்று சமாதானப்படுத்தி இருந்தான்.

Advertisement

 அந்த எண்ணங்களில் இருந்து வெளியே வந்து கீழே பார்க்க ஒரு லோக்கல் ஆன பெட் போடப்பட்டு இருந்தது. 2000 கொடுத்து பழைய பெட்டை வாங்கி வந்திருந்தான். கண்ணீரை துடைத்துவிட்டு, “ஆமா மனசுக்கு புடிச்ச பொண்டாட்டியா இருந்தா, கட்டிலோட புது பஞ்சுமெத்தையா இருந்திருக்கும், நீ……” என்று ஒரு வார்த்தையை நினைக்க மனது வலித்தது.

” உன்ன அப்படி நினைச்சு தான் உன் கூட இருந்திருக்கான். வெளியெல்லாம் கூட்டிட்டு போனா செலவு ரொம்ப அதிகமாகும். ஆனா இந்த மாதிரி ஒரு வீட்ல இருந்தா, ஈஸியா, பிரீயா போயிடும். அவனுக்கு பத்துல ஒரு பொண்ணு தான் நீ. இந்த அளவுக்கு இவன் கூட வாழ்ந்தும், ஒரு இடத்துல கூட உனக்கு சந்தேகம் வரலையா? ” என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

” காதல் மட்டுமா கண்ணை மறைச்சது, கட்டிலும் மறைச்சது ” என்று மனசாட்சி கேலி செய்ய உண்மை சுட்டது. இரவில் அடிக்கடி தன் மீது இருக்கும் பொழுது புகழ்ந்து தன்னை அடிமை ஆக்கி இருப்பது புரிந்தது.

Advertisement

” இந்த வீட்டு நல்லா பாரு சுத்தி பாரு அவனுக்கு நீ ஒரு பிச்சைக்காரி. இதுக்குத்தான் ஆசைப்பட்டான். உனக்கு பிச்சைக்காரியா மாத்திட்டான், கூடவே விபச்சாரியாவும் மாத்திட்டான். நான் என்ன தப்பு பண்ண லவ் பண்ண ப்ரொபோஸ் பண்ண வந்தாலும், அவன்கிட்ட பொறுமையா தானே பேசினேன். ஓவரா அசிங்கமா என்னை மிரட்டும் போது தான அவனை அறைஞ்சேன். ஒரு பொண்ணு தைரியமா இருக்கவே கூடாதா?, அப்படி இருந்தா அவங்களுக்கு இது தான் தண்டனையா? ” என்று பலவாறு கேட்டு அழுது கொண்டு இருந்தவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.

 அங்கிருந்து ஒரு பேக்கை எடுத்து, அது துணிமணி அனைத்தையும் எடுத்து வைத்தாள். அவள் வீட்டிலிருந்து கொண்டு வந்த ஆடைகள் மட்டும்.

 அவனுடைய ஆடைகள் அனைத்தையும் மூட்டை கட்டி, குப்பைத்தொட்டியில் போட்டு, அம்மா ஞாபகமாக இருந்த ஒத்த செயினையும் விற்றாள். அதில் இரண்டு லட்சம் வந்தது. தனது பேக், சர்டிபிகேட் மட்டும் அவளிடமிருந்தது. ஆட்களை வர செய்து அந்த வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும், விற்க சொன்னாள். சிலவற்றை குப்பையில் போட சொல்லிவிட்டாள். அந்த காசை அவர்களே வைத்துக்கொள்ள சொல்லிவிட்டாள்.

 இப்பொழுது அந்த வீட்டை பார்க்க, அந்த வீடு முழுவதுமாக சுத்தமாக இருந்தது. அதில் அவர்களது கல்யாண போட்டோவை எடுத்து, ஒரு லெட்டரை எழுதி, இரண்டையும் ஒரு பையில் போட்டு, வீட்டு ஓனரிடம் காலி செய்வதாக சொல்ல, அவரும் பல கேள்விகளைக் கேட்டு, கொடுத்த அட்வான்ஸ் 30,000 த்தில், 10 ஆயிரத்தை பிடித்துக் கொண்டு, மீதியை அவளிடம் கொடுக்க அந்தப் பையில் போட்டாள்.

 வெளியே வந்த இருவருக்கும் காமனாக இருந்த ஒரு நண்பனை வர சொன்னாள். அவன் ஒரு அளவுக்கு நல்லவன். பலமுறை அவனை நம்பாதே என்று கூறியும் அவன் வார்த்தைகளை மீறி திருமணம் செய்தாள்.

 அவளை வந்து பார்த்த மதன் அவள் தோற்றத்தைப் பார்த்து அதிர்ந்து போனான்.

 “என்னாச்சும்மா இப்படி இருக்க? காலேஜ்ல பார்த்த கலையா நீ?” அவனுக்கே அதிர்ச்சியாக இருந்தது. மிகவும் குண்டு என்றெல்லாம் சொல்ல முடியாது கொஞ்சம் பூசினால் போல இருப்பாள். தக்காளி நிற கலர். மற்ற பெண்களை பார்க்கும் பொழுது இவள் கொஞ்சம் குண்டாக தெரிவால் அவ்வளவே. கல்லூரியில் பட்டாம்பூச்சி போல் துள்ளி குதித்த பெண், சற்று கலர் மங்கி, இன்னும் சற்று குண்டாக தனது ஐந்து மாத வயிற்றை சுமந்து கொண்டு, கழுத்தில் தாலி இல்லாமல் பேக் உடன் நிற்பதை பார்க்க அவனுக்கு மனம் பிசைந்தது.

” என்னோட வாழ்க்கை இப்படித்தான் இருக்கணும் கடவுள் முடிவு பண்ணி இருக்காரு மதன். அது யாராலும் மாற்ற முடியாது. நீயும் எவ்வளவோ சொன்ன அதையெல்லாம் நான் கேட்டனா? அப்ப காதல் கண்ணை மறைச்சது. இப்ப அதே காதலால் வாழ்க்கையே மறைச்சு போயிடுச்சு. நான் யார் மேலயும் தப்பு சொல்ல விரும்பல. எனக்கு ஒரு உதவி மட்டும் பண்றியா?”

” என்ன உதவி வேணாலும் கேளுமா, உனக்கு நான் செய்ய கடமைப்பட்டிருக்கேன்”

” இந்தக் கவர் மட்டும் அந்த நாய் கிட்ட கொடுத்திடு. நான் சந்தோஷமா இருக்கேன்னு சொல்லு. அந்த வீட்டோட அட்வான்ஸ் இதுல இருக்கு. இது எல்லாமே அவன் கொடுத்தது தான். அவருடைய எந்த பொருளையும் கொண்டு போக நான் விரும்பல. வீட்ல இருக்க குப்பை எல்லாம் தூக்கி போட்டாச்சு னு சொல்லு. இந்த உதவி மட்டும் பண்ணிடு “

” சரிம்மா நீ எங்க போக போற? உன் வீட்டுக்கு போறியா? இல்ல வேற ஏதாவது உதவி வேண்டுமானாலும் என்கிட்ட கேளு. எந்த தப்பான முடிவு எடுத்துடாத கலை”

” கவலைப்படாத இனிமேல் தான் எனக்கு சந்தோஷமான வாழ்க்கை. இந்த உதவி பண்றியே அதுக்கே ரொம்ப நன்றி. நான் போயிட்டு வரேன் என்னைக்காவது பார்க்கலாம் ” என்று சொல்லிவிட்டு அவள் நடந்து செல்லப் போகும் அவளை பார்த்து கொண்டு இருந்தால் மதன்.

 சிறிது நேரத்தில் சந்தோஷ் முன்னாடி நின்று இருந்தால் மதன். அவனைக் குறுகுறுவென்று பார்க்க, ” இப்ப எதுக்கு இப்படி பாக்குற? என்ன விஷயம்னு சொல்லித் தொலை “

” சூப்பர் ரா அழகான ஒரு பொண்ணு வாழ்க்கையை ரொம்ப சிதைச்சுட்டு , இன்னொரு பொண்ணு கூட சந்தோஷமா இருக்க போலயே “

 அவனுக்கு கடுப்பாக இருந்தது. ” இது சொல்ல தான் என்ன வர சொன்னியா? “

” இல்லடா ஒருத்தவங்க உன்கிட்ட இந்த கவர் கொடுக்க சொன்னாங்க. அவங்க வாழ்க்கை இதோட முடிஞ்சு போயிடலையாம். இனிமேல் தான் சந்தோஷமான வாழ்க்கை என்று சொல்ல சொன்னாங்க. அவங்களுக்கு நீ மிகப் பெரிய நல்லது தான் பண்ணி இருக்கேன்னு சொல்ல சொன்னாங்க ” என்று மதன் நக்கலாக சொல்லவும் யார் என்று புரிந்தது.

” என்னடா அவளுக்கு பரிந்து பேசிட்டு வர அதுக்குள்ள உன்னையும் மயக்கிட்டாளா? “

“ஏய்!” என்று அவன் கோபமாக கத்த,

” லவ் பண்ணும் போதே என்ன கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு சொன்னவன் தானே நீ. அப்பவே எனக்கு துரோகம் பண்ணுவன் இப்ப சொல்லவா வேணும்? “

” உன்கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவாங்களா? ஆமாண்டா நானும் உன்னை மாதிரி பொறுக்கியா தான் இருந்தேன், ஆனா இப்படி ஒரு வருஷம் ஒரு பொண்ணு கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணி ஏமாத்த மாட்டேன். என்கிட்ட விருப்பப்பட்டு வர பொண்ணுங்க கூட தான் இருப்பேன். அதுவும் அந்த காதலோட ஏமாற்றத்தோடு அந்த புள்ள கல்யாணம் உன்ன பண்ணிக்கவும், உண்மையான காதல் கிடைச்சா எப்படி இருக்குன்னு தோணிச்சு. அதனால மொத்தமா எல்லாத்தையும் விட்டுட்டு புது மனுஷனா இருக்கேன். அதனாலதான் அவகிட்ட உன்ன கல்யாணம் பண்ண வேண்டாம், உன்னை நம்ப வேண்டாம் என்று சொன்னேன். அதோட தலைவிதி உன்கிட்ட மாட்டி சீரழியனும்னு இருக்கு யாரால மாத்த முடியும். ஆனா சீக்கிரமே உண்மையை சொல்லிட்ட. இப்ப அந்த புள்ள சுதந்திர பறவை. இனி அதோட வாழ்க்கை சந்தோஷமா இருக்க போகுது பார். ஆனா உன்னோட வாழ்க்கை இன்னிலிருந்து நோட் பண்ணி வச்சுக்கோ என்னாக போகுதுன்னு நீயே பாரு. இது கடைசியா உன்கிட்ட கொடுக்க சொல்லி உதவி கேட்டா, கொண்டு வந்து குடுத்துட்டேன் அவ்வளவுதான் இனிமேல் நீ என் பிரண்டு கூட கிடையாது. நீ என்னைக்குமே என் மூஞ்சில முழிக்காத. ஒரு நாள் நீ பீல் பண்ணி அழுவ, அப்பதான் உறவுகளோட அருமை உனக்கு புரியும் ” என்று பையை அவன் கையில் கொடுத்து விட்டு அவன் சென்று விட,

 இவனோ போடா என்று முறுக்கிக் கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!